Page 302 of 402 FirstFirst ... 202252292300301302303304312352 ... LastLast
Results 3,011 to 3,020 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

  1. #3011
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1967

    RECALL

    திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றியின் எண்ணிக்கை 110ஐக் கடக்கிறபோது பிரபல நாளேட்டின் அதிபர் அண்ணாவால் தாங்க முடியாத ஆளுயர மாலையை அணிவிக்கச் செய்து அவர் காலில் விழுந்தார். அவரும் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அண்ணாவோ அந்த இடத்தைவிட்டுச் சில அடிகள் உடனடியாக ஓடி நகர்ந்துகொண்டார். இப்படிப்பட்ட 'ஆபத்துகளிலிருந்து' இனி மீள முடியாது என அவர் உணர்ந்துகொண்டார்.

    அமைச்சரவை அமைக்கிற கட்டம் வந்தது. அண்ணா அமைச்சரவையை அவர் வீட்டிலிருந்து அமைக்காமல் நண்பர் ஒருவர் வீட்டில் அமர்ந்து பட்டியலைத் தயார் செய்தார். ஒரு தலைவர் 'முக்கிய' இலாகாவை விரும்பினார். அதற்காக இரு தலைவர்கள் அண்ணாவைச் சந்தித்தனர். அவர்க்கு 'அந்த' இலாகா தர வேண்டும் எனத் தந்திகள் குவிந்தன. தந்திகள் ஒரு மூட்டை அளவுக்கு இருந்தது. மூட்டையை அண்ணாவிடம் காண்பித்தனர். 30, 40 தந்திகளை எடுத்துப் பார்த்தார் அண்ணா. அவை ஒரே மாதிரியான வாசகங்களைக்கொண்டிருந்தன. அதைப் பார்த்துப் புன்னகைத்தார். இன்னொரு தலைவருடைய மனைவி தன் கணவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதற்காக அண்ணாவைச் சபித்தார். இப்படி எத்தனையோ காட்சிகள் நிகழ்ந்தன. அமைச்சர் பட்டியல் இறுதியாக்கப்பட்டதற்குப் பிறகு இரா. செழியனிடம் அதனைக் கொடுத்து அனுப்பி எம். ஆர். இராதா சுடப்பட்டதால் மருத்துவமனையில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரிடம் காண்பிக்கச் செய்தார். 9 பேர் கொண்ட கச்சிதமான அமைச்சரவை 1967 மார்ச் 6ஆம் தேதி அண்ணாவின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்டது. 1937இல் நீதிக்கட்சி காங்கிரசால் வீழ்த்தப்பட்டு இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர் ஆனார். 1967இல் திமுக, அதே இராஜாஜியை தனது கூட்டணியில் சேர்த்துக்கொண்டு காங்கிரசை வீழ்த்திக் காட்டியது. ஆம்; அறிஞர் அண்ணா கணக்கை நேர்செய்தார். அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
    Courtesy - kalasuvadugal

  2. Likes ujeetotei liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3012
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களில் நடிகராகவும் , கௌரவ நடிகராகவும் பல படங்களில் நடித்த திருப்பதி சாமி அவர்களின் 35 வது ஆண்டு நினைவு நாள் .

  5. Likes ujeetotei, ainefal liked this post
  6. #3013
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    " மற்றவர்களைப் பற்றியே எப்பவும் நினைக்காமல் , நம்மை நாமே முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்"


    - கலைவாணர்

  7. Likes ujeetotei liked this post
  8. #3014
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    WATCH 2.37 ONWARDS ACTOR S.M. TIRUPPATHI SAMY IN PUTHIYA BOOMI

  9. #3015
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    This month header image of srimgr.com


  10. #3016
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Varadakumar Sundaraman View Post
    மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களில் நடிகராகவும் , கௌரவ நடிகராகவும் பல படங்களில் நடித்த திருப்பதி சாமி அவர்களின் 35 வது ஆண்டு நினைவு நாள் .
    தலைவருடன் இவர் நடித்த படதொகுப்புகளை முழுமையாக சேகரித்து வருகிறேன். விரைவில் பதிவு செய்கிறேன்..

    Last edited by Muthaiyan Ammu; 1st September 2015 at 01:19 PM.

  11. #3017
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like



    NADIGAR THILAGAM DEVOTEES / FANS:

    SOME BOOKS LIKE THE ABOVE ARE FOR SALE. ALSO ORIGINAL MOVIE "PATTU PUTHAGAM" AVAILABLE. PLEASE CONTACT ME, I SHALL GIVE THE CONTACT PERSON DETAILS [ SOMETHING I HAVE TO SAY WHICH I CANNOT POST OVER HERE]!
    Last edited by saileshbasu; 1st September 2015 at 02:28 PM.

  12. #3018
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சந்திரோதயம் என்ற திரைப்படம் 1966இல் வெளிவந்தது. எம்ஜிஆர், எம்.ஆர்.ராதா, ஜெயலலிதா, பாரதி, நம்பியார், அசோகன், நாகேஸ், மனோரமா, பண்டாரிபாய் என பிரபல்யங்கள் நடித்திருந்தார்கள்.

    அது தினத்தந்தி ஆசிரியர் ஆதித்தனாரோடு அறிஞர் அண்ணாவும் திமுகவும் முரண்பட்டிருந்த காலம்.

    ஒரு பத்திரிகை ஆசிரியர் எப்படி இருக்கக் கூடாது, எந்தவித செய்திகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று சொல்ல வந்த திரைப்படம்தான் சந்திரோதயம். அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த எம்.ஆர்.ராதாவின் பாத்திரம் ஆதித்தனாரேயே குறிவைத்து எடுக்கப் பட்டதாக விமர்சனங்கள் இருந்தன. மற்றும் படி எம்.ஜி.ஆருக்கான மசாலாக்களோடு படம் இருந்தது.

    சந்திரோதயம் திரைப்படத்தில் எனக்குப் பிடித்தது அதில் இடம் பெற்ற பாடல்களே. விஸ்வநாதன், ராமமூர்த்தி இரட்டையர்கள் பிரிந்த நேரம். இசையில் விஸ்வநாதன் தனித்து நின்று அதிக ஈடுபாடு காட்டி இருப்பார். பாடல்கள் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. சந்திரோதயம் படத்தில் கதையென்று பெரிதாக எதுவுமே இல்லை. ஆனால் பாடல்கள் மட்டும் அசத்தல். எங்காவது அந்தப் படப் பாடல்கள் ஒலிக்கும் பொழுது, செய்து கொண்டிருக்கும் வேலைகளை அப்படியே விட்டு விட்டு பாடல்களுடன் ஒன்றி விடுகிறது மனது.

    சந்திரோதயம் திரைப்படத்தில் எழுத்தோட்டத்துடன் ஆரம்பிக்கிறது சீர்காழி கோவிந்தராஜன் பாடல். „புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கு சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரல் மேலும் உணர்ச்சியைக் கூட்டி எம்மைக் கட்டிப் போட்டு விடும்.

    „சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ?', „எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள்' என்று ஆளை இழுத்து இருத்தி வைத்துக் கேட்க வைக்கும் பாடல்கள் அந்தப் படத்தில் இருக்கின்றன. ஆனால் நகைச்சுவையோடு சொல்லப் பட்ட இன்னும் ஒரு பாடல் அந்தப் படத்தில் இருக்கிறது. என்னை மிகவும் கவர்ந்த பாடல் அது. „காசிக்குப் போகும் சந்நியாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி' என்ற பாடலே அது. சீர்காழி கோவிந்தராஜனும், ரி.எம் சௌந்தரராஜனும், இணைந்து பாடி இருப்பார்கள். பாடல் வரிகள் கவிஞர் வாலி. மேடைப் பேச்சுக்களிலேயே கவிஞர் வாலியிடம் நக்கலும், நகைச்சுவையும் இருக்கும். இங்கே பாடலிலும் அது இருக்கிறது. வாலியின் நகைச்சுவைப் பாடல்கள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக „அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா..',„வரவு எட்டணா செலவு பத்தணா..', 'சேதி கேட்டோ சேதி கேட்டோ..' என்று பலதைச் சொல்லிக் கொண்டே போகலாம். எம்ஜிஆர் படங்களிலும் நகைச்சுவைப் பாடல்கள் இருந்திருக்கின்றன. அப்படி இடம்பெறும் நகைச்சுவைப் பாடல்களை நகைச்சுவை நடிகர் பாடுவது போன்றே அமைத்து இருப்பார்கள். சந்திரோதயம் திரைப்படத்தில் அது விதிவிலக்கு. இங்கே எம்ஜிஆரும், நாகேசும் இணைந்து நகைச்சுவையாகப் பாடுவதுபோல் அமைத்திருந்தார்கள். கூடவே மனோரமாவும் நடித்திருந்தார். அன்று இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப் பட்ட பாடலாகவும் இது இருந்திருக்கிறது.

    எம்.ஆர்.ராதா நகைச்சுவைக் காட்சியில் நடிக்கும் பொழுது சிலசமயங்களில் இறுக்கமாக, ஆணவமாக நின்று அதிகார தோணையில் கட்டளை இடுவது போல் தனது நகைச்சுவையை வெளிப்படுத்துவார். இன்னொரு சமயம் தனக்கே உரிய சிரிப்பை உதிர்த்து ஏளனமாகப் பேசி குரலை உயர்த்தியும், தாழ்த்தியும் வசனத்தின் உள்ளே பொடி வைத்து நகைச்சுவையைக் காண்பிப்பார்.

    பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஆர்.ராதாவிற்கு பண்ணையார் வேடம். கோவிலில் சாமி கும்பிடுவது போல் ஒரு காட்சி இருக்கும். நிஜ வாழ்க்கையில் எம்.ஆர்.ராதாவோ கடைந்தெடுத்த நாத்திகர். சினிமாவிலும் நடிக்க வேண்டும். தனது கொள்கையில் பிரளவும் கூடாது என்பதற்காக சாமி கும்பிடும் பொழுதே நகைச்சுவையைக் காண்பிப்பார். பொன்னார் மேனியனே என்று தேவாரம் பாடும் பொழுது தேவாரப்பாடலின் இடையில் தனக்கே உரித்தான பாணியில் வசனம் ஒன்றைப் பேசி இருப்பார். „அப்பனே நாளைக்கு புது நெல் போரடிக்கிறோம். பலன் ஒண்ணுக்கு நூறாய் கிடைச்சால் அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைப்பேனோ' என்று தேவாரத்தைப் பாடி முடிப்பார்
    courtesy- ஆழ்வாப்பிள்ளை -net

  13. #3019
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    எத்தனை பேருக்கு பி.எஸ்.வீரப்பாவை நினைவு இருக்கிறதோ தெரியவில்லை. இவர் அதிகமாக ஏற்று நடித்தது என்னவோ வில்லன் பாத்திரங்கள்தான். ஆனால் மிகை நடிப்பானாலும் அது அழுத்தமான நடிப்பின் பதிவு. அன்றைய கால கட்டத்தில் அத்தகைய அவரின் நடிப்புத்தான் திரையில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தது.

    பி.எஸ்.வீரப்பா திரையில் சிரிக்க ஆரம்பித்தால் அரங்கில் இருக்கும் குழந்தைகள் அழ ஆரம்பித்து விடுவார்கள் என்று ஒரு நிலை இருந்தது. எம்ஜிஆரை வைத்து யாராவது அரச படம் தயாரிக்க முனைந்தால் முதலில் கூப்பிடு வீரப்பாவை எனும் நிலையில் அட்டகாசமான வில்லனாக எம்ஜிஆருக்குப் பொருந்தி இருந்தார். எத்தனையோ வில்லன்கள் எம்ஜிஆர் படங்களில் வந்து போனாலும், எம்ஜிஆர், பி.எஸ்.வீரப்பா என்றோரு கூட்டு பலராலும் ரசிக்கப் பட்டிருந்தது. எம்ஜிஆர் , தனது கடைசிப் படமான ´மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்` படத்திலும் பி.எஸ்.வீரப்பாவுக்கு வில்லன் பாத்திரம் கொடுத்திருந்தார் என்பதில் இருந்து அது மேலும் உறுதியாகிறது.

    ´வஞ்சிக்கோட்டை வாலிபன்` என்றொரு திரைப்படம். ஜெமினி வாசன் தயாரித்தது. அன்றைய நாட்டியத் தாரகைகள் பத்மினி, வையந்திமாலா இருவருக்குமான ஒரு போட்டி நடனம் அந்தத் திரைப் படத்தில் இருக்கும். நாட்டியத்தில் சிறந்தது பத்மினியா? வையந்திமாலாவா? என்று ரசிகர்கள் மத்தியில் பட்டி மன்றமே நடந்து கொண்டிருந்த நேரம் அது. இந்த போட்டி நடனத்தால் படத்தின் வியாபாரம் பல மடங்கு உயரும் என்று தயாரிப்பாளர் தரத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதன் நிமித்தம் நடனத்திற்கான பயிற்சிக்கு நடிகைகள் நீண்ட நாட்களை எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். படமும் முடிந்து திரையில் காண்பிக்கப் பட்ட பொழுது ரசிகர்கள் ரசித்தது என்னவோ, போட்டி நடனத்தின் நடுவில் வரும் 'சபாஸ் சரியான போட்டி' என்ற பி.எஸ்.வீரப்பாவின் வசன உச்சரிப்பைத்தான். இந்த 'சபாஸ் சரியான போட்டி' என்ற வார்த்தைகள் நீண்ட காலமாக நிலைத்து நிற்கிறது என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் பி.எஸ்.வீரப்பாதான்.

    மகாதேவி என்றோரு படம். இந்தப் படத்தில் பி.எஸ்.வீரப்பா அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை ' “அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி!”

    இது எவ்வளவு தூரம் இரசிகர்களை ஈர்ந்தது என்று அன்றைய கால கட்டத்தில் காதலர்களாக இருந்த இளைஞர்களைக் கேட்டால் தெரியும். மகாதேவியின் பெயரை எடுத்து விட்டு தங்களது காதலியின் பெயரைச் சொல்லி பலர் பேசித் திரிந்ததை நானும் கேட்டிருக்கிறேன்.

    மகாதேவி திரைப்படத்திற்கான வசனங்களை கவிஞர் கண்ணதாசன் எழுதி இருந்தார். அழகான உச்சரிப்பால் பி.எஸ்.வீரப்பா அந்த வசனங்களுக்கு உயிர் தந்திருப்பார். சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் சாவித்திரியிடம், தன் ஆசைக்கு இணங்கா விட்டால் உன் கணவனைக் கொன்று விடுவேன் என அவர் எச்சரிக்கும் விதமே அழகு.

    மகாதேவி..!
    நாளை உன் மஞ்சள் அழியும்
    மங்கள நாண் அறும்
    உன் மணவாளன் பிணமாவான்
    நீ தனியாவாய்
    எனக்கு கனியாவாய்!

    இப்படிப் பேசி விட்டு ஒரு வில்லன் சிரிப்பு ஒன்று தருவார். அது அவருக்கே உரித்தானது.

    அந்தத் திரைப் படத்தில், “சம்மதம் தந்து விடு இல்லை என்றால் நாளை, ஏணையில் உறங்கும் உன் மகனைக் கொன்று விடுவேன்” என்று காலக் கெடு தந்து வீரப்பா மறுநாள் வருவார். அப்பொழுது இடம் பெற்றுக் கொண்டிருக்கும் பாடல்தான் 'மானம் ஒன்றே பெரிதென கொண்டு வாழ்வது நமது சமுதாயம்...'

    கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி. டி.எஸ்.பகவதி பாடியிருப்பார். இந்தப் பாடலுக்கு சாவித்திரியின் நடிப்பு அருமையாக இருக்கும். திரையின் முழு அளவிலும் சாவித்திரியின் முகமே இடம் பெற்றிருக்கும். தன் மகனை இழக்கப் போகிறோம் என்ற சோகத்தை முகத்தில் காட்டி நிற்கும் அவரின் நடிப்பை இன்று பார்க்கும் பொழுது மனதை ஏதோ ஒன்று அழுத்துகிறது.

    தனது மகனின் வீர மரணத்துக்குப் பாடு என எம்.என்.ராஜத்திடம் மன உறுதியோடு சொல்லி விட்டு பின்னர் நிலை குலைந்து அழுகிறாரே அதுதான் நடிகையர் திலகம்.
    courtesy-net
    ஆழ்வாப்பிள்ளை

  14. #3020
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    சின்ன வயசிலே என்னை அறியாமலே அவர் பால் ஈர்க்கப்பட்டு ரசிகனா இருந்தேன், ஆனா இப்ப அவருடய படங்களை திருப்பி பார்க்கும்போது, அதுக்கு நிஜமாவே நல்ல காரணங்கள் இருந்ததா எனக்குப்படுது! அது எப்படின்னு சொல்லத்தான் இந்த பதிவு, வழக்கம்போல வீடியோ கிளிப்புகளோட! இப்ப சமீபத்திலே இந்த படம் பார்த்தப்ப ஒரு ஸ்ட்ரைக்கு!

    அப்ப எல்லாம் தியோட்டர்கள் படம் பாக்க போன, ஒரு ஆம்பியன்ஸ்(ambience) இருக்கும் பாருங்க, அது என்னமோ இப்ப வீடியோவிலே வீட்டுக்கூடத்திலே பார்க்கிறப்ப கிடைக்காத ஒன்னு, ஏன் மல்டிபிளக்ஸ்ன்னு, பாப்கார்ன்னு, கோக்ன்னு எடுத்துட்டு போய் சீட்டிலே மாட்டிக்கிட்டு என்னமோ சொகுசா படம் பார்த்தாலும் அந்த காலத்துல தியோட்டர்ல படம் பார்த்த சொகுசே தனி தான்! அதாவது ஆறரை மணி ஷோவுக்கு நாலுக்கே போய் க்யூவிலே நின்னு(இந்த க்யூங்கிறது, கதவை திறந்தப்பறம் தான், அதுக்கு முன்னே நீங்க பலசாலியா இருந்து, டிக்கெட்டு சந்துக்குள்ள போகனும், கொஞ்சம் நோஞ்சான்னாலும், நீங்க எம்ஜியார் படம் பார்க்க அட்லீஸ்ட் ஒரு 50 நாளு வெயிட் பண்ணனும், எம்ஜியார் ஸ்டண்ட் மாதிரி தலை மேலே எல்லாம் நடக்க பழகி இருக்கனும்) , அடிதடின்னு கதவை திறந்து டிக்கெட் வாங்க, ஒரு ஆளு போற மாதிரி இருக்கும் சந்துலே போயி, அப்பறம் டிக்கெட் கவுண்டருக்கு வந்து மஞ்சளோ, பச்சையோ, ரோஸ் கலரா ஒரு டிக்கெட்டை கிழிச்சி வாங்கி, தியோட்டர்குள்ள போயி பின்னாடி சீட்டு புடிக்க ஓடி, தூணுகீணு மறைக்காத இடத்திலே உட்கார்ந்து ஆரம்ப நியூஸ் ரீலு, இல்லை இல்லை, அந்த விளம்பர சிலேடுங்கள்லருந்து பார்த்தாதான் திருப்தி, அதுவும் சரியா பேலஸ் தியேட்டர்ல, படம் போடறதுக்கு முன்னே 'திரைப்படம் ஓடும் பொழுது லாகிரிவஸ்துகள் எதுவும் உபயோகிக்க கூடாது'ன்னு ஒரு சிலைடு போட்டப்பறம் தான் படமே, நாங்க அங்க, இங்கே வெளியே நின்னுகிட்டு இருந்தாலும், அந்த சிலைடை பார்த்தோன்ன, டேய் படம் போடப்போறாண்டான்னு அடிச்சு புடிச்சு போய் உட்கார்ந்து பார்த்த காலம் இருக்கே அது பொற்காலம்! ச்சே..இப்பயும் சத்தம் போடமா, அலுங்காம குலுங்காம இந்த மல்டிபிளக்ஸ்ல போயி படம் பார்க்கறதிலே எந்த சுவாரசியமும் இல்லை போங்க! அதே மாதிரி சினிமா கொட்டகையில் விற்கும் கள்ளமிட்டாய், தேங்கா பர்ஃபி, முறுக்கு எல்லாம் நம்ம உட்கார்ந்த இடத்துக்கு கொண்டாந்து வித்து, அதை வாங்கி சாப்பிடும் இன்பமே தனி தான்! இதெல்லாம் இல்லாத ஒர் ஆம்பியன்ஸ்ல பார்த்த எம்ஜியார் படம் படமேயில்லை!

    அப்பறம் படம் ஆரம்பிக்கிறப்ப போடற லோகோ இருக்கே, அதுக்கு பிகிலு தூள் பறக்கும் பாருங்க, எம்ஜியாரே நேரில வந்த மாதிரி! இந்த லோகோவை வச்சு அந்த காலத்திலே கரெக்டா இது இன்னார் கம்பெனின்னு கரெக்டா கண்டுபிடிச்சிடுவோம்! அதாவது எவிஎம், ஜெமினி, சுஜாதா புரெடெக்ஷன்ஸ், அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்!அது மாதிரி எம்ஜியார் பிக்ஸசர்ஸ் லோகோ காலத்தின் கட்டாயத்தினால் ஏற்பட்ட மாற்றங்களை இந்த வீடியோ கிளிப்புல நீங்க பார்க்கலாம், முதல்ல அந்த உதயசூரியன் பேக்ட்ராப்ல வர்றது அப்படியே மாறி இருக்கும்!அதாவது எம்ஜியார் சொந்தமா எடுத்த படங்கள் மொத்தமே மூணு தான், 'நாடோடி மன்னன்', 'அடிமைப்பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்'. ஆனா இந்த மூணுமே வந்தது வெவ்வேற காலகட்டங்கள்ல, அதான் இந்த லோகோவிலே ஒரு ஆணும் பெண்ணும் கொடியை பிடிச்சிக்கிட்டு இருப்பாங்க, முந்தய இரண்டு படங்களையும் திமுக கொடி பறக்கும், மூணாவதா வந்த 'உலகம் சுற்றும் வாலிபன்'ல அதிமுக கொடியிலே அண்ணா படத்தோட பறக்கும்! அதாவது அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தியதை லோகாவிலேயே கண்டுணரலாம்!

    அப்பறம் வழக்கமா சீர்காழி கோவிந்தராஜன் பாட்டோட, 'வெற்றியை நாளை சரித்திரம் வெல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும்'ன்னு டைட்டில் கார்டு ஆரம்பிக்கும் பாருங்க! பாட்டை கேட்கிறப்பவே நமக்கு ஒரு வேகம் பிறக்கும்! அது எம்ஜியாருக்கு மட்டுமே பிரத்தியோகமான ஒன்னு!

    இந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலே அந்த காலத்திலேயே விஞ்ஞானம், மின்னல் சக்தி, ஜப்பான்ல இருக்கிற 'க்யோட்டோ' என்ற இடம் அப்படின்னு போகும்! (இந்த க்யோட்டாங்கிற இடத்தை பத்தின விஷயம் என்னான்னு உங்களுக்கு ஒரு க்விஸ், கரெக்டா பின்னோட்டத்திலே எழுதுங்க பார்க்கலாம்!) அதுவும் நாட்டின் தலைவர்களின் போட்டேவோட, விஞ்ஞானத்தை கையிலே எடுத்து அது அழிவுப் பாதைக்கு உபயோகப் படுத்தக் கூடாது, ஆக்கப் பணிகளுக்கு தான் உபயோகப் படுத்தனும்னு உபதேசத்தோட படம் ஆரம்பமாகும்! அப்பறம் எம்ஜியார் ஒரு விஞ்ஞானி(அவரு மட்டுமில்லை, அசோகன் , அப்பறம் மத்த விஞ்ஞானிங்க எல்லாம் ஒர் ஸ்ட்ரேஞ்சா தாடி வச்சிருப்பாங்க, நம்ம துபாய் ஷேக்குங்க மாதிரி, பார்க்க தமாஷா இருக்கும், விஞ்ஞானிக்கு எவ்வளவு சிம்பளா கெட்டப்பு பாருங்க, இப்ப கெட்டப்ப மாத்திக்கவே ரொம்ப கஷ்டபடறாங்க சில நடிகர்கள்!)

    மின்னலின் சக்தியை ஒரு தோட்டக்குள்ள அடக்கி வச்சி, அந்த சக்தியை எப்படி கட்டுபடுத்திட்டேன்னு சுட்டு காமிச்சு காடுகளை எரிச்சு இருப்பாரு! அப்பறம் சீரியசா இணையத்திலே தேடினா, ஆமா அப்படி ஒரு முயற்சி செஞ்சிருக்காங்கன்னும், அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லைன்னும் தெரியவருது! படத்திலே எம்ஜியார் சொல்லுவாரு ஒரு சின்ன சதவீதத்தை தான் சேமிச்சேன், அதுக்கே என்ன பலம் பாருங்கன்னு, லதாவை வுட்டு சுட்டு காமிப்பாரு! இதோ வீடியோ கிளிப்பு பாருங்க! ஆனா இந்த மின்னல்லிருந்து சேமிக்கும் சக்தி பத்தி படிக்கனும்னா இதோ சுட்டி!

    அப்புறம் அண்ணன் எம்ஜியார் விஞ்ஞானி, தம்பி துப்பறியும் போலீஸ் அதிகாரி, இதுல எம்ஜியாருக்கு மூணு ஜோடி, மஞ்சுளா, லதா, சந்திரகலா! இளமையா எல்லா பாடல்களுக்கும் துள்ளலோட நம்ம எம்எஸ்வி ம்யூசிக் போட்டிருப்பார்! அந்த காலத்திலே முழுக்க முழுக்க வெளி நாடு போய் படம் புடிச்சிட்டு வந்தாங்க!
    courtesy - palakkarai balan
    Last edited by esvee; 1st September 2015 at 06:40 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •