Page 135 of 401 FirstFirst ... 3585125133134135136137145185235 ... LastLast
Results 1,341 to 1,350 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1341
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1342
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    பாவ மன்னிப்பு.

    புது வீடு குடி
    போவோம்.

    அங்கே நாம் காண்பது,
    சதுரமாய்,செவ்வகமாய் சில
    வெற்றிடங்கள்.. அறைகளென்ற
    பெயரில்.

    ஒரு சதுரத்தையோ,
    செவ்வகத்தையோ தேர்ந்து..
    அதை பூஜையறையென்று
    வரிப்போம்.

    மற்ற சதுர,செவ்வகங்களில்
    நாம் காணாத ஒரு நிம்மதி
    இங்கிருக்கும்.

    அந்த இடம் என்பது,
    வணங்குதலுக்குரியதாகும்.
    ------------
    தெய்வீக உருவங்களால்
    ஒரு இடம் மரியாதைக்குரிய
    இடமாய் மாறும்.

    நான் "பாவ மன்னிப்பு" பார்க்கப்
    போன "சென்ட்ரல்" திரையரங்கம்,எனக்கு அப்படித்தான் மாறிற்று
    நேற்று.
    ----------
    முகம் மறைக்கும் அந்த தோல்
    வாத்தியம் மெல்லக் கீழிறங்க,
    மேகம் விலகின பிற்பாடு
    ஒளிர்ந்து அசத்தும் நிலவு போல
    முகம் காட்டி, "எல்லோரும்
    கொண்டாடுவோம்" பாடும்
    நம் இனியவரைப் பார்த்து..
    என்னைப் போலவே, சாய்தல்
    விடுத்து இருக்கையில்
    நிமிர்ந்து உட்கார்ந்த ஒரு
    பெரியவரை, ஓரக் கண்ணால்
    பார்த்தேன்.

    அய்யா..இன்னும் களத்தில்
    இருக்கிறார்.

    என்றும் இருப்பார்.
    ---------
    படம் ஓடும் மொத்தப் பொழுதில் முக்கால்வாசியை
    தன் புன்னகை கொண்டே
    நிரப்புகிற சாதுர்யம்..

    என்னவோ..தொட்டிலில்
    உறங்கும் குழந்தையின் அருகே
    அமர்ந்திருப்பவர் போல,
    வார்த்தைகளின் மென்மை மீது
    அவர் காட்டியிருக்கிற கவனம்..

    கோபமாய்ப் பெண்களைச்
    சாடுபவர்களைக் கடிந்து
    கொள்கிற போது கூட
    காட்டுகிற கண்ணியம்..

    பேட்டைவாசிகளின் ஆட்டம்,
    பாட்டத்தை வேடிக்கை
    பார்க்கையில்,அருகில்
    நெருங்கும் தேவிகாவைப்
    பார்த்துப் புரியும் வெட்கம்
    ஒளிந்த குறுஞ்சிரிப்பு..

    "தப்பு" என்கிற வாத்தியத்தில்
    "சரி"யாக வாசிக்கும் அவரது
    விரல்கள்..

    நடிப்புக்காக திராவகம் வீசிய
    நடிகவேள் மீது நிஜமாகவே
    கோபம் கொள்ளச் செய்கிற,
    அந்த வலி காட்டும் துடிப்பு..

    இந்தப் புனிதவதிதான் தன் தாய்
    என்று புரிந்து கொள்ளும்
    போதுகாட்டுகிற முகபாவங்களில்
    நாம் படிக்கிற..கவியரசோடு
    போட்டி போடுகிற கவிதைகள்..

    இவற்றையெல்லாம்
    பார்க்காதவர்களுக்கு,
    கிடைக்கப் போவதில்லை..

    இந்தப் படத்தின் தலைப்பு.
    ------------
    பெருமையான படம் பார்த்த
    பின், பெருமிதமாய் வெளியே
    வந்தேன்.

    சீனப் பெருஞ்சுவர் போல
    சிவாஜிப் பெருஞ்சுவராகியி
    ருந்த திரையரங்கின் உட்சுவர்
    முழுதும் ஒட்டப்பட்டிருந்த
    சுவரொட்டியில்,அய்யாவின்
    உருவத்தை ஒருவர்
    கைபேசியில் படம் பிடித்தார்.
    நானதைக் கண்களால் படம்
    பிடித்தேன்.
    -----------
    சட்டைப் பையிலிருந்து
    லேசாய் தலை நீட்டியபடி
    ரோஸ் நிற சினிமா டிக்கெட்.
    சிறிய துண்டுக் காகிதம்தான்.
    ஆனாலும்.. சட்டைப் பையில் அது கனக்கிறது..

    முதன் முதலில், உழைத்து
    வாங்கிய சம்பளப் பணம் போல..

    பெருமையாய்.

  4. Thanks ifohadroziza thanked for this post
  5. #1343
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    நெஞ்சத் திரையில் நடிகர் திலகம்- 6

    "சாந்தி" திரைப்படத்தில் வரும்
    இந்தக் காட்சிக்காகவே,
    தினமும் திரையரங்கத்தை
    நோக்கிப் படையெடுத்திருக்
    கிறேன்.
    -----------
    கனவு-
    எல்லோருக்கும்தான்
    வருகிறது.

    அபிமான நடிகரோ,நடிகையோ
    அருகில் வந்து சிரித்துப் பேசுவார்கள்.

    மிக விரும்பும் விளையாட்டு
    வீரர்கள் தோளில் கை போட்டுக்
    கொள்வார்கள்.

    கைப்பிரம்பைமுறித்துப் போட்டு விட்டு,ஆசிரியர் அன்பு
    பாராட்டுவார்.

    மிகப் பெரிய பள்ளத்தில் சினிமா
    பாணியில் ஸ்லோ மோஷனில்
    விழுவோம்.

    எருமை மாடு விரட்டும்.

    பக்கத்தில் போய் நின்றாலே
    முறைக்கிற பேருந்துப் பெண்,
    என்றைக்குமில்லாத அதிசயமாய் தன் பக்கத்திலேயே அமரச் சொல்வாள்.

    -99% நம் கனவுகளெல்லாம்
    இப்படித்தான் போகும்.
    ----------
    "சாந்தி" கதையின்
    நாயகனுக்கும் ஒரு கனவு
    வருகிறது,பாருங்கள்..
    வண்ண வண்ணமாய்ப் புகை
    சூழ, காதலியோடு ஆடிப்
    பாடுகிற கனவல்ல இது.

    தனது பரிசுத்தமான மனதுக்கும் தன் வடிவத்தையே தந்து, யாருமற்ற தனிமையில்
    தன்னுடன் தானே உரையாடும்
    கனவு.

    உறக்கத்தில் காணும் கனவல்ல.

    விழிப்புக்கு ஏங்கும் கனவு.

    தனது நண்பனின் மனைவிக்குத்
    தானே கணவனாக நடிக்க
    வேண்டிய கொடுமையின்
    வெம்மையில் வெடிக்கும்
    கனவு.

    நட்பின் புனிதத்தைப் போற்றி
    மதிக்கும் நாயகன், தன்னைக்
    கணவனென்று கருதி அந்தப்
    பெண் அருகில் வரும்
    போதெல்லாம் கூசிக் குறுகும் ஒழுக்கத்தின் உயர்வுத்தன்மை காட்டும் கனவு.
    ----------
    இந்தக் காட்சி மட்டும் கனவல்ல.

    யாருமற்ற இருட்டு
    மண்டபத்தினுள் " வருகிறேன்"
    என்று சொல்லியபடியே
    இறங்கி..

    மொத்தக் கதையின்
    விளக்கத்தையே மூன்று
    நிமிஷத்தில் காட்டி..

    வாய் பேசும் வாசனைத்
    தமிழில் ஏற்ற இறக்கங்கள் கூட்டி..

    கலைந்த தலை விட்டுப் பிரிந்த
    ஒற்றைக் கொத்து முடியையும்
    தனது நடிப்பிசைக்குப் பக்க
    வாத்தியமாக்கி..

    ரசனைக் குளத்தில் நம்மை
    மகிழ்வோடு நீந்தச் செய்து..

    சிந்தை பதியச் சிரித்து..

    விழி சிவக்க வைத்து அழுது..

    -இந்த கனவுக் காட்சியில்
    காவியம் படைக்குமெங்கள்
    நடிகர் திலகத்தை மிஞ்ச ஒரு
    நடிகர் வருவாரென யாரேனும்
    நினைத்தால்...

    அதுவும்-

    கனவு.


  6. #1344
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Belgium
    Posts
    0
    Post Thanks / Like
    DEAR BASKAR SIR
    we are unlucky. that is why we have to hear the words of useless fellows
    Last edited by vcs2107; 4th September 2015 at 09:15 PM.

  7. Thanks Russellbzy thanked for this post
  8. #1345
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Snapshots from the Tribute Programme for Mellisai Mannar MSV by our NTFANS.



    The Portrait of Mellisai Mannar placed for floral tribute.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes Russellmai liked this post
  10. #1346
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Shri Ramkumar Ganesan and Shri MSV Gopi seen here. Behind Shri Gurumoorthy and Dr. Premeela Gurumoorthy.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes Russellmai liked this post
  12. #1347
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Shri MSV Gopi lighting the lamp
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes Russellmai liked this post
  14. #1348
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    A poster placed at the venue
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  15. Likes Russellmai liked this post
  16. #1349
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Shri Ramkumar Presenting a Memento - A photo of Nadigar Thilagam and Mellisai Mannar to Shri MSV Gopi.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Likes Russellmai liked this post
  18. #1350
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    Shri Ramkumar showing the Photo to the audience as Shri T. Murali Srinivas (blue shsirt) looks on.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •