Page 166 of 401 FirstFirst ... 66116156164165166167168176216266 ... LastLast
Results 1,651 to 1,660 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1651
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அன்பு நண்பர் பாஸ்கர்
    தங்களுடைய பதிவிற்கு நன்றி.
    எனக்கு என்றுமே உண்மை பேசிப் பழக்கமில்லை.
    நடிகர் திலகத்துடன் நான் பழகியதும் அவர் என்னிடம் சொன்னதாக நான்
    சொன்ன விஷயங்களும் பொய்யே.
    நடிகர் திலகத்தை தவறாக அட்வைஸ் செய்து அவரைத் தேர்தலில் தோல்வியடையச் செய்து விட்டேன்.
    என்னைப் பொறுத்த மட்டில் அன்னை இல்ல்த்திற்கு விசுவாசமாக இருப்பதால் இங்கே பதிவிடும் தகுதியை இழந்து விட்டேன். அது மட்டுமல்ல, விக்ரம் பிரபுவின் பேரப்பிள்ளைகள் நடிக்க வந்தாலும் அவர்களுக்கும் நான் காவடி தூக்குவேன்.
    மாற்றுத்திரி நண்பர்களோடு நட்புணர்வு தான் எனக்கு முக்கியம். சிவாஜி முக்கியமில்லை.

    சிவாஜிக்கு யாரைப் பிடிக்குமோ அவரை எனக்கும் பிடிக்கும்.

    இங்கே சிவாஜி ரசிகனாக தொடர வேண்டுமென்றால் முதல் தகுதி நடிகர் திலகத்தின் அரசியலையும் அவருடைய குடும்பத்தையும் விமர்சிக்க வேண்டும். அவருடைய சினிமாவை மட்டுமே பாராட்ட வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கப்புறம் அவர் நடித்த படங்களைப் பற்றிப் பேசினால் அவ்வளவு தான், அவர்களுடைய ஏழேழு ஜென்மங்களுக்கும் சாபம் கிடைக்கும். யார் யாரெல்லாம் அவருடைய நடிப்பை ஓவர் ஆக்டிங் என்று விமர்சித்தாலும் அவர்களுக்கு பெருந்தன்மையுடன் இங்கு இடம் தரவேண்டும். அதே போல ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் அவர் நல்லவர் என்று சொல்ல வேண்டும். அதற்கப்புறம் அவர் ஒரு சந்தர்ப்பவாதி, பச்சோந்தி என்று நினைக்க வேண்டும்.
    இப்படிப் பல்வேறு தகுதிகளை ஒவ்வொன்றாக நான் பெறுவதற்கு எனக்கு இந்த ஜென்மம் போதாது.
    இங்கே சிவாஜி ரசிகனாகப் பதிவிடுவதற்குத் தேவையான தகுதிகளையெல்லாம் நான் அடைந்த பின் தான் முழுமையாக பங்கு கொள்ள முடியும். அது எப்போது என்னால் பெற முடியும் என்பது தெரியவில்லை. எனக்கு தெரிந்த்தெல்லாம் கண்மூடித்தனமான சிவாஜி ஆதரவு. அதற்கு இங்கே அவசியமில்லை.
    எனவே என்னுடைய ஆதரவு தங்களுக்கு இல்லாமல் இருந்தாலே அது தங்களைப் போன்ற தீவிர சிவாஜி ரசிகர்களுக்கு பெருமை, என நான் நினைக்கிறேன்.
    ஏதோ ராமருக்கு அணில் மாதிரி என்னால் முடிந்த சின்னச் சின்ன பதிவுகளை மட்டும் பகிர்ந்து கொண்டு அவ்வப்போது வந்து போகிறேன்.
    தங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் வயதில் மூத்தவன் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றபடி தங்களுக்கெல்லாம் அறிவுரை கூறும் தகுதி எனக்கிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1652
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத்திலகம் பம்மலார் அவர்களிடம் கூட இருக்குமா தெரியவில்லை. ஸ்ரீதரின் திரும்பிப்பார்க்கிறேன் பக்கங்கள் அன்பு நண்பர் ராமஜெயம் அவர்களிடம் இருக்கின்றன. ராமஜெயம் சார், கூடிய விரைவில் தாங்களும் இங்கே பங்கு கொண்டு அபூர்வமான ஆணித்தரமான ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டு பம்மலார் இல்லாத குறையைப் போக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1653
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by raghavendra View Post
    ஆவணத்திலகம் பம்மலார் அவர்களிடம் கூட இருக்குமா தெரியவில்லை. ஸ்ரீதரின் திரும்பிப்பார்க்கிறேன் பக்கங்கள் அன்பு நண்பர் ராமஜெயம் அவர்களிடம் இருக்கின்றன. ராமஜெயம் சார், கூடிய விரைவில் தாங்களும் இங்கே பங்கு கொண்டு அபூர்வமான ஆணித்தரமான ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டு பம்மலார் இல்லாத குறையைப் போக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    திரு பம்மளார் அவர்களிடம் உண்டு ராகவேந்திர சார்

    அவரிடம் நமது ரசிகர் ஒருவர் கேட்டபோது ஒரு xerox copy கேட்டும் அதை தரமுடியாது என்று கூறிவிட்டதாக தகவல் !

    Rks

  5. #1654
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    வெகு விரைவில்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1655
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    தொடர்ந்து 4வது வாரம் நாஞ்சில் நகரில்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #1656
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் பாஸ்கர் அவகளுக்கு ஒரு விண்ணப்பம்

    இதே புத்தகத்தில் திரு ஸ்ரீதர் அவர்கள் உரிமைக்குரல் மூலம் மக்கள் திலகம் அவருக்கு செய்த உதவியினை பற்றிய பத்திகள் இருப்பின் அதனை தாங்கள் பதிவிட்டு உதவ வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

    Rks

  8. #1657
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    இங்கே தொடர வேண்டுமென்றால் முதல் தகுதி நடிகர் திலகத்தின் அரசியலையும் அவருடைய குடும்பத்தையும் விமர்சிக்க வேண்டும். அவருடைய சினிமாவை மட்டுமே பாராட்ட வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கப்புறம் அவர் நடித்த படங்களைப் பற்றிப் பேசினால் அவ்வளவு தான், அவர்களுடைய ஏழேழு ஜென்மங்களுக்கும் சாபம் கிடைக்கும். யார் யாரெல்லாம் அவருடைய நடிப்பை ஓவர் ஆக்டிங் என்று விமர்சித்தாலும் அவர்களுக்கு பெருந்தன்மையுடன் இங்கு இடம் தரவேண்டும். அதே போல ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான் அவர் நல்லவர் என்று சொல்ல வேண்டும். அதற்கப்புறம் அவர் ஒரு சந்தர்ப்பவாதி, பச்சோந்தி என்று நினைக்க வேண்டும்.
    இப்படிப் பல்வேறு தகுதிகளை ஒவ்வொன்றாக நான் பெறுவதற்கு எனக்கு இந்த ஜென்மம் போதாது.
    இந்த வரிகள் 'மாற்றுத்திரி'... ஸாரி, 'மாண்புமிகு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் திரி' நண்பர்களுக்கு சொல்லப்பட்டது போல தெரிகிறது.

    ஏனென்றால் நீங்கள் சொன்ன பெரும்பாலானவற்றை சொல்லி வருபவர்கள் அவர்கள்தான்.

  9. Likes Russellbzy liked this post
  10. #1658
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த வாரம் தனியார் தொலைகாட்சியில் தமிழ் சினிமாவில் குடியும் புகையும் தவிர்க்க இயலாதா என்ற கருத்தை வலியுறுத்தி ஒரு கருத்தோட்டம் நடைபெற்றது.

    அதில் தயாரிப்பாளர், சிலரும் நடிகர் மயில்சாமி போன்றோர் பங்கேற்றனர்.

    திரு மயில் சாமி அவர்கள் பேசுகையில் கதாநாயகர்கள் கதைகேர்ப்ப அதனை செய்வதில் தவறு இல்லை எனவும் காட்சிகள் திநிக்கப்படாதவரையில் கதைக்காக சரியே என்றும் கூறினார்.

    அவர் மேலும் கூறுகையில் ஒரு திரைப்படத்தில் தங்களுடைய கதாநாயகன் செய்வதை பார்த்துதான் பொது மக்கள் influence ஆகிறார்கள் என்பதை முழுமையாக ஏற்றுகொள்ள முடியாது என்றும் கூறினார்.

    அதற்க்கு உதாரணம் குறிப்பிடுகையில் சிவாஜி அப்பா அவரது படத்தில் கதைக்காக கதாபாத்திரத்தின் தன்மைக்காக குடிப்பதுபோல, பல படங்களில் நடித்துள்ளார் ....

    ஆனால் தமக்கு தெரிந்த வரையில் சிவாஜி அப்பாவின் ரசிகர்கள் 75% குடிக்காதவர்கள் என்று பெருமையுடன் கூறினார் !



    ஆகையால் ஒரு நடிகன் சமுதாயத்தை வெகுவாக influence செய்கிறார் என்று கூறுவது முழுமையாக ஏற்றுகொள்ள கூடியது அல்ல என்று கூறினார் !

    Rks
    Last edited by RavikiranSurya; 13th September 2015 at 09:48 PM.

  11. Likes Russellbzy liked this post
  12. #1659
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    சிவந்த மண் பட 100-வது நாள் தினத்தந்தி முழுப்பக்க விளம்பரத்தில் அப்படம் 100 நாட்களைக்கடந்த ஒன்பது தியேட்டர் பெயர்களும் குறிப்பிடப் பட்டுள்ளது.

    ஆனால் நம்நாடு பட 100-வது நாள் தினத்தந்தி விளம்பரத்தில் ஊர் பெயர்களோ தியேட்டர் பெயர்களோ இல்லை.

    ஏன்?.

    பிற்காலத்தில் சிவந்தமண்ணை விட நம்நாடு அதிக அரங்குகளில் 100 நாள் ஓடியதாக இஷடத்துக்கு கதையளந்துகொள்ள வசதியாகவா?.

    (இரண்டு விளம்பரங்களும் இதே இரண்டு திரிகளிலும் ஏற்கனவே பதிவிடப்படுள்ளன)

    கும்பகோணம் விஜயலட்சுமியிலெல்லாம் 100 நாள் ஓடியதாக அள்ளிவிடப்படுகிறது.

  13. Thanks Russellbzy thanked for this post
    Likes Russellbzy liked this post
  14. #1660
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சத்யராஜ் சிவாஜியுடன் இணைந்து நடித்த ஜல்லிக்கட்டு

    சிவாஜிகணேசன் நடித்த "ஜல்லிக்கட்டு" படத்தில் இன்னொரு ஹீரோவாக சத்யராஜ் நடித்தார். இந்தப்படமும் வெற்றி பெற்றது.

    சிவாஜியுடன் "ஜல்லிக்கட்டு" படத்தில் நடித்த சத்யராஜுக்கு, படத்தில் முக்கியமான கேரக்டர்.

    நீதிபதி ஒருவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை ஒரு அதிரடி இளைஞன் மூலம் சரி செய்து கொள்ளும் கதை. இதில் பாதிக்கப்பட்ட நீதிபதியாக சிவாஜியும், அவருக்கு உதவும் இளைஞராக சத்யராஜும் நடித்தார்கள். வித்தியாசமான கதைக்கருவைக் கொண்ட இந்தப்படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    இந்தப் படத்தின் வெற்றி விழாவில், அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டு சிவாஜி உள்ளிட்ட கலைஞர்களை வாழ்த்தினார்.

    எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட கடைசி சினிமா விழா இதுதான்.

    சிவாஜியுடன் நடித்த "ஜல்லிக்கட்டு" அனுபவம் குறித்து சத்யராஜ் கூறியதாவது:-

    "ஜல்லிக்கட்டு படத்தை நண்பர் மணிவண்ணன்தான் இயக்கினார். சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.

    கதையைக் கேட்கும்போதே இது நன்றாக ஓடும் என்று தோன்றியது.

    சில கதைகளை கேட்டதுமே, அது வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியும். ஜல்லிக்கட்டு அப்படியொரு கதை.

    அப்போதெல்லாம் நானும் மணிவண்ணனும் செட்டிலே ஒருவரை ஒருவர் 'தலைவா!' என்று கூப்பிட்டுக் கொள்வோம். இந்த 'தலைவா' பழக்கம் செட்டில் இருந்த மற்ற டெக்னீஷியன்களையும் தொற்றிக் கொண்டது.

    இது எதில் போய் முடிந்தது தெரியுமா? செட்டில் சிவாஜி சாரிடம் போன டான்ஸ் மாஸ்டர் பாபு அவரிடம், "தலைவா! ஷாட் ரெடி" என்று சொல்லப்போக, பதிலுக்கு சிவாஜி சார் அவரை கேலி செய்யும் அளவுக்குப் போய்விட்டது. "ஏண்டா! உங்க 'தலைவா' என் வரைக்கும் வந்தாச்சா?" என்று கேட்க, மாஸ்டர் அவசரமாய் 'எஸ்கேப்' ஆகியிருக்கிறார்.

    நானும் பிரபுவும் 'தலைவரே' என்று அழைத்துக் கொள்வதும் சிவாஜிசாருக்கு தெரிந்திருக்கிறது. இப்போது அவரே செட்டில் "தலைவா" என்று அழைக்கப்பட்டு விட்டதால், அன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போனவர், பிரபு வரும் வரை காத்திருந்திருக்கிறார். பிரபு வீட்டுக்குப் போனதும் "வாங்க தலைவரே!" என்று அழைத்து அவரை வெலவெலக்க வைத்திருக்கிறார்.

    மறுநாள் இதுபற்றி பிரபு என்னிடம் சொன்னபோது, எங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு.

    நேரத்துக்கு மதிப்பு கொடுப்பதில் சிவாஜி சாருக்கு நிகர் அவரேதான். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் நான் 7 மணிக்கு செட்டில் இருப்பேன். ஆனால் அதற்கு முன்பே சிவாஜி சார் செட்டில் இருப்பார். ஒருநாளாவது அவரை முந்திவிடவேண்டும் என்று இன்னும் சீக்கிரம் வரத்தொடங்கினேன். அப்போதும் சிவாஜி சார் எனக்கு முந்தி வந்திருந்தார். நடிப்பில் மட்டுமின்றி, 'பங்ச்சுவாலிட்டி'யிலும் சிவாஜி சாருக்கு இணையாக யாருமில்லை என்பதை நானும் இந்த நாட்களில் கண்கூடாக உணர்ந்தேன்.

    "ஜல்லிக்கட்டு" படப்பிடிப்புக்காக பெங்களூரில் இருந்து மங்களூருக்கு விமானத்தில் போனோம். நான், மணிவண்ணன், கேமராமேன் சபாபதி, சித்ரா லட்சுமணன் எல்லோரும் ஒரே ரூமில் தங்கினோம். சிவாஜி சார் பக்கத்து ரூமில் தங்கினார்.

    படப்பிடிப்பு முடிந்து ஊருக்கு கிளம்ப வேண்டிய நாள். காலை 6 மணிக்கு விமானம் ஏறவேண்டும். சிவாஜி சார் அதிகாலை 4 மணிக்கு விழித்தவர் எங்கள் அறைக்கு வந்திருக்கிறார். நாங்கள் முந்தின நாள் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கியிருக்கிறோம். அதிகாலையில் எங்களை வந்து பார்த்தவர், நாங்கள் படுத்திருந்த இடத்துக்கு அருகில் சிக்கன் எலும்புகள் கிடந்ததை பார்த்திருக்கிறார். அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் போனவர், நாங்கள் புறப்பட்டு தயாராகி வந்தபோது பிடித்துக்கொண்டார். "ஏண்டா! காலையிலேயே எழுப்பலாம்னு வந்தால் செத்துப்போன கோழியோட ஒண்ணா படுத்திருக்கீங்களே" என்று கிண்டல் செய்தார். அந்த கிண்டலில் ஒரு தந்தைக்கே உரிய அக்கறை இருந்தது.

    விமான நிலையத்துக்கு புறப்பட சிவாஜி சார் அவசரப்படுத்தின தால், ஆளாளுக்கு சீக்கிரமே கிளம்பி விட்டோம். கமலா அம்மாளும் சிவாஜி சாருடன் வந்திருந்தார்கள். "மாமா இப்படித்தான் அவசரப்படுத்துவாங்க. நாமபோறப்போ விமான நிலைய கேட்டை திறந்திருக்க மாட்டாங்க" என்றார்.

    கமலா அம்மாள் சொன்னதுபோலவே ஆயிற்று. நாங்கள் போய்ச் சேர்ந்த பிறகுதான் விமான நிலைய பயணிகள் கேட்டையே திறந்தார்கள்! அப்போது மங்களூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் ஒரு விமானம்தான். எனவே விமானத்தை தவறவிட்டால் தேவையில்லாமல் ஒருநாள் காத்திருக்க வேண்டியிருக்கும். இந்த வகையில் சிவாஜி சாரின் 'அவசரம்' நியாயமானதுதான்.

    பார்த்ததுமே "வாங்க கவுண்டரே!" என்பார். படப்பிடிப்பின்போது கிடைக்கிற இடைவெளி நேரத்தில் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவார். எங்கள் சித்தப்பா அவரது நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பம் பற்றி ஆர்வமாய் விசாரிப்பார். என் சிறுவயதிலேயே விவசாய நிலங்கள் விற்கப்பட்டதை தெரிந்து கொண்டவர், "நீ சம்பாதிச்சு சொந்த ஊர்லயே நிறைய தென்னந்தோப்பு வாங்கணும்" என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே பொள்ளாச்சி பகுதியில் வாழவாடி ஊரில் 95 ஏக்கர் தென்னந்தோப்பு வாங்கியிருக்கிறேன்.

    "ஜல்லிக்கட்டு" படம் எதிர்பார்த்த மாதிரியே நன்றாக ஓடி, வெற்றி பெற்றது.

    இந்தப் படத்துக்குப் பிறகே பாரதிராஜாவுடன் "வேதம் புதிது" படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது."

    இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

  15. Likes J.Radhakrishnan, Russellbzy liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •