Page 1 of 2 12 LastLast
Results 1 to 10 of 14

Thread: இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்

  1. #1
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்


  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர்.
    அருமை நண்பர்களே,
    இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர் ... ... ... இது நான் மட்டும் எழுதும் தொடரல்ல. எம்.ஜி.ஆர் பற்றிய எனது எண்ணங்களை நம் திரியின் நண்பர்களுடனான பகிர்வு. சில நுணுக்கமான சிந்தனைகளை அசைபோட அனைவரையும் அழைக்கிறேன்.
    இந்தத் தொடரை நாம் அனைவரும் சேர்ந்து தான் நடத்தப் போகிறோம். வரலாற்று அடிப்படையில் பல நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்படாமலே போயிருக்கின்றன. அவற்றை அலசி ஆராயும் ஒரு சிறு முயற்சியே இது. இந்தக் கட்டுரைத் தொடருக்கு நம் நண்பர்கள் பலரும் இத்திரியில் பதிவேற்றிய நம் இதய தெய்வத்தின் புகைப்படங்களை தொடர்புடைய இடங்களில் பொருத்திட யாரும் தடை சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவற்றைப் பொருத்தமாகப் பதிவிட இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

  4. #3
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்.
    அன்னிய மொழி எழுத்துக்கள் தான். ஆனால் அந்த எழுத்துக்கள் அடையாளம் காட்டும் மனிதரோ சிறுதும் அன்னியமின்றி நம் அத்தனை பேரின் இதயங்களிலும் உறவாக ஒட்டிக் கொண்டிருக்கும் நம் நாயகர். கலைத்துறையில் முடிசூடா மன்னர். அரசியல் துறையிலும் தன் வாழ்நாள் முடியுமட்டும் அசைக்க முடியாத முதல்வர். அது மட்டுமல்ல இன்று வரை , அதாவது, தனது நடிப்புலக வாழ்வைத் துறந்து 38 ஆண்டுகள், புவி வாழ்வை விட்டு 28 ஆண்டுகள் கடந்த பின்னும் திரையுலகம், அரசியல் இரண்டிலும் அவர் ஓர் அசைக்க முடியாத சக்தி. இன்னமும் அவர் பெயரைச் சொல்லித்தான் சினிமாவிலும், அரசியலிலும் கைத்தட்டலும் ஓட்டுகளும் வாங்க வேண்டிய நிலை. சிறு குழந்தைகள் முதல் தள்ளாடும் வயோதிகர்கள் வரை எம்.ஜி.ஆர் என்ற பேரைக் கேட்ட மாத்திரத்திலேயே மலர்ச்சி அடையும் அளவுக்கு அவர்கள் நெஞ்சமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் மக்கள் திலகத்தின் மகத்துவத்தை வரும் காலச் சந்ததிக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே இந்தத் தொடர்.

  5. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  6. #4
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம்
    புரட்சி நடிகர்
    மன்னாதி மன்னன்
    நடிகர் பேரரசர்
    பொன்மனச் செம்மல்
    இதய தெய்வம்
    புரட்சித் தலைவர்
    வறுமைக்கு வைத்தியம் செய்த டாக்டர்
    இப்படி எத்தனை எத்தனையோ பட்டங்கள் . ஆனால் அவையாவும் அதிர்ஷ்டதேவதை அள்ளித் தந்த வெகுமதியல்ல. எம்.ஜி.ஆர் அவர்கள் அடிக்கடி சொல்லும் தாரக மந்திரமான உழைப்பவரே உயர்ந்தவர்கள் என்னும் மூலமந்திரத்தின் முதிர்ந்த விளைவு. அவரது வாழ்வு ஒரு பரமபத விளையாட்டை போன்றது. விழுவது போலத் தெரியும். அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து விட்டு வெற்றி வீரராக மீண்டும் எழுந்து வருவார். தன்னம்பிக்கைக்கும், விடா முயற்சிக்கும் , செயல் திறனுக்கும் அவரது வாழ்வு ஒரு பாடம். அவர் மேல் வீசி எறியப்பட்ட அம்புகள் யாவும் முனைமளுங்கிப் போனன. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகும் அவர் மேல் அம்புகள் வீச ஒரு கூட்டம் இருக்கிறது. அவர் வாழ்ந்த போதே பல்வேறு கருத்து முரண்பாடுகளால் பொய்யான பல குற்றச்சாட்டுகள் , கேலி விமர்சனங்கள் அவர் மீது தொடர்ந்து மிகச் சிறுபான்மையான ஒரு கூட்டத்தால் வைக்கப்பட்டன. அலட்சியம் ஒன்றையே அவற்றுக்கு பதிலாக அளித்தார் நம் எம்.ஜி.ஆர். ஏராளமான மக்களுக்கு அவர் தெய்வம். அவரைச் சந்தித்த / சிந்தித்த அத்துணை மனிதர்களிடத்திலும் ஏதாவது ஒரு செய்தியை , நெகிழ்வை விட்டுச் சென்றிருக்கிறார் அந்தக் கோமகன்.
    கம்ப ராமாயணத்திலே ஒரு நிகழ்வு. மிதிலை நகரிலே இளவல் இலக்குவன், விசுவாமித்திரர் புடை சூழ ஜானகி தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வருகிறார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. நகர மாந்தர்கள் அவரை ஆவலுடன் தரிசிப்பதை கம்பன் அழகாக வர்ணிப்பார் அவரது தோளைக் கண்டவர்களின் கண்கள் தோளை விட்டு அகலாது . அவரது பாதத்தைக் கண்ட கண்கள் அந்தத் பாதார விந்தங்களிலேயே சரணாகதியடைந்து விடும். அவரது நீண்ட நெடிய கரங்களைக் கண்டவர்களும் மற்ற அவயவங்களைக் காணும் எண்ணமற்று அதிலேயே மனம் ஒன்றி மற்றவற்றை மறந்து மதிமயங்கி நிற்பதாக கம்பன் கவி காட்டும். அது போல மக்கள் திலகத்தின் மகத்துவத்தின் ஒரு பகுதியை கண்ணுற்ற மாந்தர் அதிலேயே திளைத்து அதிலேயே ஒன்றி மற்றவற்றை மறந்து திளைக்கும் நிலையை பலரிடமும் காண முடிகிறது. அவரிடம் விரோதம் பாராட்டுவோரும் ஏதாவது ஒரு விதத்தில் அவரைப் பாராட்டுவது என்பது மிகச் சாதாரணமாக இருக்கிறது.
    இன்னமும் அவரது பெயரால் புத்தகங்கள், கட்டுரைகள் அவரது புகழ்பாடி வெளிவந்த வண்ணம் உள்ளன. வசைபாடியும் வருகின்றன. அவற்றில் காணப்படக் கூடிய பல முரண்பாடுகளை ஆராய்ந்து புறந்தள்ளுவதும் நமது கடமையாகிறது.அவரது வாழ்வில் அறியப்படாத பல விஷயங்களை அறிந்து கொள்வதும் நமது கடமையாகிறது. இது தொடர்பாக அனைவரும் பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பதிவேற்றுவதன் மூலம் பல அரிய செய்திகள் பகிரப்படும்.

  7. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  8. #5
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    1. என் தம்பி எம்.ஜி.ஆர்.

    1972ஆம் ஆண்டு ராணி வார இதழில் மக்கள் திலகத்தின் தமையனார் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் எழுத இப்படி ஒரு தொடர் வெளிவந்தது. பின்னர் 1984, 1987ஆம் ஆண்டுகளிலும் அது மறுபடியும் பிரசுரமானது. அத்தருணங்களில் அக்கட்டுரையின் முதல் அத்தியாயத்தில் தந்தையின் மடியில் எம்.ஜி.ஆர் என்று குறிப்பிடப்பட்டு ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது. பின்னர் 1988ஆம் ஆண்டு அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் ஆனந்த விகடன் இதழுக்கு மறக்க முடியாத புகைப்படங்கள் என சிலவற்றைத் தேர்வு செய்து கொடுக்கும் போது அதே புகைப்படம் எம்.ஜி.ஆர் வழிபடும் புகைப்படங்களில் ஒன்றாக காட்சியளித்தது.(மடியில் குழந்தையுடன் எம்.ஜி.ஆரின் தந்தை, தாய், மகாத்மா காந்தியடிகள் மற்றும் மக்கள் திலகத்தின் துணைவியார் சதானந்தவதி ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கியது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது-) தந்தையின் மடியில் தான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை எம்.ஜி.ஆர் வழிபட்டாரா என அப்போது சில விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் அது அவரது சகோதரியின் புகைப்படம் என எம்.ஜி.ஆர் பேரன் வலைத்தளம் மூலம் அறிவிக்கப்பட்டது. நமக்குக் கிடைத்த வரையில் மக்கள் திலகத்தின் முதல் புகைப்படம் எது. அவரது தந்தை மற்றும் தாயாருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஏதாவது உண்டா ? என் தம்பி எம்.ஜி.ஆர் தொடரில் வெளியிடப்பட்ட புகைப்படம் எம்.ஜி.ஆருடையதா? அல்லது அவரது சகோதரியுடையதா? தவறுதலாக வெளியிடப்பட்டிருந்தால் பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள் ஏன் அதனை மறுக்கவில்லை. பின்னர் வெளியான மணியன் அவர்களின் காலத்தை வென்றவன் நீ தொடரிலும் அது மக்கள் திலகத்தின் புகைப்படம் என்றே குறிப்பிடப்பட்டது. இது தொடர்பான விபரங்களை அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.

  9. #6
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like

    தந்தையின் மடியில் எம்.ஜி.ஆர் என்ற தலைப்பிட்டு என் தம்பி எம்.ஜி.ஆர் என்ற பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் கட்டுரைத் தொடரில் வெளியான புகைப்படம் இது தான். இந்தப் புகைப்படத்தில் இருப்பது எம்.ஜி.ஆரா இல்லையா? புதிராக உள்ளது. நான் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி இத் தொடர் நம் நண்பர்கள் அத்துணை பேரின் பங்களிப்புடன் தொடர வேண்டிய ஒன்று. இதில் விவரிக்கப்படும் பொருள் பற்றிய விவாதம் தான் ஒரு தெளிவான வரலாற்றுப் பதிவாக இருக்கும். ஏனென்றால் எம்.ஜி.ஆர் தொடர்புடைய பல தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. காரணம் எம்.ஜி.ஆரை ஏற்றுக் கொள்வதில் இருந்த சில சிக்கல்கள். காங்கிரஸ் பேரியக்கத்திற்கு எதிராக புதிதாக முறைத்த திராவிட முன்னேற்றக் கழக்கத்தின் ஆதரவாளர். அன்றைக்கு பெரும்பாலான பத்திரிக்கைகள் காங்கிரஸ் ஆதரவு பத்திரிக்கைகளாக இருந்தன. எம்.ஜி.ஆர் தனது பாதையை (பார்முலாவை ) முடிவு செய்யாத தருணத்தில் மட்டுமல்ல. எம்.ஜி.ஆர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட அற்புதமான நடிப்பாற்றலுடன் வந்த நாடோடி போன்ற படங்களையும் கடுமையாக விமர்சித்ததன் பின்னணி இது தான். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்றாக வந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழன் அல்ல. இப்படி பலப்பல காரணங்களால் எம்.ஜி.ஆரை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். இன்னும் சிலர் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தனது யூகத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு தனது அனுமானமே சத்தியமாய் எண்ணிக்கொண்டு எழுதியவர்கள் உண்டு. இன்னும் சிலர் தான் பத்திரிக்கைகளில் படித்ததை அப்படியே உண்மை என நம்பி அதை தானே அனுபவித்து அறிந்ததாக அறிவிப்பவர்கள் உண்டு. ஆனால் அவர்களையும் அறியாமலே அவர்களது இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக கொலுவீற்றிருந்தார் எம்.ஜி.ஆர் . எம்.ஜி.ஆர் படங்களே பிடிக்காது என்று வெளியே சொல்லிக் கொண்டு எம்.ஜி.ஆரின் படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் ஒரு கூட்டம் உண்டு. நான் எம்.ஜி.ஆர் படம் ஒன்று கூட பார்த்ததில்லை. எனக்கு எம்.ஜி.ஆர் படங்களைப் பிடிக்காது என பார்க்காமலேயே விமர்சிக்கும் கூட்டமும் உண்டு. எத்தனை முரண்பாடுகள். அத்தனைக்கும் விடை கிடைக்கும் நமது விவாதத்தில். தொடரும் ... ... ..

  10. Likes ujeetotei liked this post
  11. #7
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு ஜெய்சங்கர்

    இதயம் நிறைந்த எம்ஜிஆர் - புதிய பகுதி வெற்றி நடை போட என் அன்பான வாழ்த்துக்கள்.
    இது வரை நாம் அலசிடாத புதிய தகவல்களுடன் பல் வேறு செய்திகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம்

  12. Likes ujeetotei liked this post
  13. #8
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Regarding the photo, MGCB Pradeep has told that the photo showing the child is not MGR it is his sister. Who later died of small pox that was different story.

  14. #9
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ஜெய் சங்கர்
    நீங்கள் புதியதாக துவங்கியுள்ள ''இதயம் நிறைந்த எம்ஜிஆர் '' தொடர் ஆரம்பமே அருமையாக உள்ளது . தொடர்ந்து பதிவுகள் வழங்கவும்.வாழ்த்துக்கள் .

  15. #10
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    super jaisankar sir valthukkal

Page 1 of 2 12 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •