Page 186 of 333 FirstFirst ... 86136176184185186187188196236286 ... LastLast
Results 1,851 to 1,860 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

Hybrid View

  1. #1
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu


    திரை வெளிச்சம்: கோடம்பாக்கத்தின் இன்றைய சூதாட்டம்!




    தமிழ் சினிமா கோடிகள் புழங்கும் துறையாகிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தொகையை முதலீடு செய்வது தயாரிப்பாளர்கள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் எவ்வளவு பணக்காரர்களாக இருக்க வேண்டும். எவ்வளவு வசதியாக இருக்கு வேண்டும்.

    ஆனால் உண்மை நிலவரம் வேறு. இன்று பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வாடகை காரில் செல்ல, நடிகர்கள்தான் விதம்விதமான சொகுசு காரில் வலம் வருகிறார்கள். செல்வம் கொழிக்கும் எந்தத் துறையிலும் முதலாளிகள் அல்லது தயாரிப்பாளர்களின் நிலை இப்படி இல்லை. ஆனால் இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் யதார்த்தம்.

    ஏன் இந்த நிலை?

    தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள். “ஒரு நடிகருக்கு ஒரே ஒரு படம் பிரம்மாண்ட வெற்றியடைந்துவிட்டால், அந்த நடிகர் அடுத்த படத்துக்கான தனது சம்பளத்தில் 3 கோடி வரை உயர்த்திவிடுகிறார். சம்பளம் உயரும்போது படத்தின் தயாரிப்புச் செலவு உயருகிறது.

    அதே நடிகரின் படம் தோல்வியடையும் பட்சத்தில் சம்பளத்தைக் குறைக்கிறாரா என்றால் கண்டிப்பாக இல்லை. சம்பளத்தைக் குறைப்பது என்பது தங்கள் தன்மானத்துக்கு இழுக்கு என நடிகர்கள் கருதுகிறார்கள்” என்று பெயரை வெளியிட விரும்பாத ஒரு தயாரிப்பாளர் கூறுகிறார்.

    இந்த உதாரணத்தைப் பார்த்தால் அவர் சொல்வது எவ்வளவு உண்மை என்பது புரியும். 2015-ம் ஆண்டு ஒரு நடிகரின் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஒரு தயாரிப்பாளர் அவரை வைத்துப் படம் பண்ண அணுகியிருக்கிறார். அந்த நடிகர் கேட்ட சம்பளத்தால், அப்படியே திரும்பிவிட்டார்.

    படத்தின் விநியோக வியாபாரத்திலும் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ‘கரகாட்டக்காரன்' படத்தின் தயாரிப்புச் செலவு 22 லட்சம். படத்தின் மொத்த வசூல் சுமார் 6.5 கோடி என்கிறார்கள். அந்தத் தயாரிப்பாளருக்கு, அதே நடிகர் அடுத்த படம் பண்ணுகிறார். முதல் படம் 6.5 கோடி வசூலானது, இப்படமும் அந்த அளவுக்கு வசூலாகும் என்று கணக்குப் போட்டு 6.5 கோடிக்கு மேல் விற்பனை செய்ய முனையவில்லை. ரூ. 28 லட்சம் ரூபாய் பொருட்செலவில் படத்தைத் தயாரித்து அதில் சில லட்சங்களை மட்டும் லாபம் வைத்து விற்றார்கள்.

    இது இப்போது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னணி நடிகரின் படம் ரூ.14 கோடி செலவில் தயாரானது. அது சுமார் ரூ.18 கோடிக்கு வியாபாரம் ஆனது. சுமார் ரூ.35 கோடி வசூலை அள்ளியது. அந்த நடிகர் உடனே தனது சம்பளத்தைக் கணிசமாக உயர்த்தினார். அதே நடிகரின் அடுத்த படத்தினை ரூ.34 கோடிக்கு ஒரு முன்னணி நிறுவனம் வாங்கி விநியோகம் செய்தது.

    அதில் பெருத்த நஷ்டமே கிடைத்தது. ஆனால் இந்த நஷ்டம் வாங்கியவருக்குத்தான். நடிகருக்கு அல்ல. அவர் ஏற்றிய சம்பளம் ஏற்றியதுதான். அதன் பிறகு அவருக்கு வெற்றிகளும் தோல்விகளும் மாறிமாறி வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் இன்றுவரை அவரது சம்பளம் ஏறுமுகத்தில்தான் உள்ளது.

    தயாரிப்பாளர்களாக மாறும் நடிகர்கள்

    முன்னணி நடிகர்கள் பலரும் தயாரிப்பாளர்களாக மாறிவருகிறார்கள். அதற்குக் காரணம், தயாரிப்பாளர்கள் குறைந்துகொண்டேவருவதுதான். தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ஏ.வி.எம்., சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது படத் தயாரிப்புகளை வெகுவாகக் குறைத்துக்கொண்டன. காரணம், தற்போதைய மாற்றம்தான். பட வியாபாரத்தின் இன்றைய நிலவரத்தின் சூட்சுமம் தெரியாமல் வரும் தயாரிப்பாளர்கள் பலரும் ஒரே படத்தோடு ஓட்டமெடுக்கிறார்கள்.

    தொலைக்காட்சி உரிமத்தில் பிரச்சினை, இசை உரிமை விலைகுறைவது, தொழிலாளர்களின் சம்பள உயர்வு, நடிகர்கள், இயக்குநரின் சம்பளவு உயர்வு, தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பள உயர்வு... இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு படத் தயாரிப்பாளரின் நிலைமை என்பது பெரும் சோகக் கதைதான். இவ்வாறு பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களது தயாரிப்பை நிறுத்திக்கொண்டதால் நடிகர்களே தங்களது படத்தைத் தயாரிக்கிறார்கள்.

    தமிழ்நாடே கொண்டாடும் ஒரு முன்னணி நடிகரின் அடுத்த படத்துக்குத் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. 3 படங்களுக்குப் பிறகு ஒரு தயாரிப்பாளருக்குப் படம் பண்ணித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அந்த தயாரிப்பாளரைத் தற்போது அழைத்து எனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர் நீங்கள்தான் என்று தெரிவித்திருக்கிறார்.

    விளம்பரங்களில் மட்டுமே வெற்றி

    ராமராஜன், மோகன் உள்ளிட்ட பழைய நடிகர்கள் எல்லாம் நடித்துக்கொண்டிருந்த போது தயாரிப்பாளர்கள் லாபமடைந்து தொடர்ச்சியாகப் படம் பண்ணினார்கள். ஆனால், இன்றைய தயாரிப்பாளர்கள் நிலைமை அப்படி அல்ல. தமிழ்த் திரையுலகில் தற்போதைய தயாரிப்பாளர்கள் லாபம் அடைகிறார்களா என்று கேள்வியை முன்வைத்தால் கண்டிப்பாக இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால், ஒரு படம் ஓடுவது அதிகபட்சம் 25 நாட்கள்தான். பல படங்கள் ஒரு வாரம்கூடத் தாக்குப்பிடிப்பதில்லை.

    ஒரு தயாரிப்பாளரிடம் போய், உங்கள் தயாரிப்பு செலவு எவ்வளவு, வசூல் எவ்வளவு என்று கேட்டால் அவர்களால் சரியான தகவல்களைச் சொல்ல முடியாது. ஒவ்வொரு படத்தின் வசூல் கணக்கின் உண்மையான நிலவரம் வருமான வரி சமர்ப்பிக்கும் பேப்பரில்தான் இருக்கும். 100 கோடி வசூல், பிரம்மாண்டமான வசூல், எதிர்பாராத, திகைக்க வைக்கும் ஹிட் எல்லாம் விளம்பரங்களோடு சரி. மிகச் சில படங்களே இதற்கு விதிவிலக்கு.

    பெரிய நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற குரல் அவ்வப்போது தமிழ் திரையுலகில் எழுந்துகொண்டே இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும் என்று பல்வேறு தயாரிப்பாளர்கள் தெரிவித்துவருகிறார்கள். ஒரு படம் ஓடினால் சம்பளத்தை உயர்த்தும் நீங்கள் தொடர்ந்து உங்கள் படங்கள் நஷ்டமடைந்தால் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று நடிகர்களைப் பார்த்துத் தயாரிப்பாளர்களால் கேட்க முடியவில்லை.

    அந்தச் சம்பளத்தைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல முடியவில்லை. காரணம், அதே நடிகரின் அடுத்த படம் நன்றாக ஓடிவிட்டால் தனக்குப் பெரிய லாபம் கிடைக்குமே என்ற எதிர்பார்ப்புதான். இப்போதெல்லாம் ஒரு படம் நன்றாக ஓடினால் தெலுங்கு, இந்தி மொழிகளில் மறுஆக்க உரிமை உள்படப் பல விதங்களில் பெரும் லாபம் கிடைப்பதால் முன்னணி நடிகர் யாரையும் பகைத்துக்கொள்ள முடியாத நிலை. எனவே தொடர்ந்து இந்தச் சூதாட்டம் நடக்கிறது.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    ‘சிரிக்கும்போது சந்தோஷமாக இருக்கிறேன்’ - கல்பனா ரஞ்சனி அஞ்சலி


    தமிழில் ‘சின்ன வீடு’ படம் தொடங்கி ‘சதி லீலாவதி’, ‘டும் டும் டும்’, ‘பம்மல் கே சம்பந்தம்’ வரை மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த கல்பனா, ‘குண்டு கல்பனா’ என்றே இங்கே பொதுவாக அறியப்பட்டிருந்தார். தென்னிந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவரான ஊர்வசியின் அக்காவும் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையுமான கல்பனா ரஞ்சனியின் அகால மரணம் தமிழ் சினிமாவுக்கும் மலையாள சினிமாவுக்கும் உண்மையாகவே இழப்புதான்.

    இன்னும் அவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரங்கள் நிறைய இருந்தன. அவற்றை கல்பனாவைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார் மலையாள நடிகர் முகேஷ்.

    ‘சதி லீலாவதி’ படத்தில் அவர் தனது சேலை முந்தானையை உதறி ஆத்திரமும் அழுகையுமாய் பேசி கமல் ஹாசனுக்கு ஈடாகப் பிய்த்து உதறும் காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களின் ஞாபகத்தில் எப்போதும் இருக்கும். அவர் நடித்த அந்தக் கதாபாத்திரத்தை அதன் இந்தி மறுஆக்கமான ‘பீவி நம்பர் 1’-ல் கரிஷ்மா கபூர் ஏற்றார்.

    1977-ல் குழந்தை நட்சத்திரமாக ‘விதருண்ண மொட்டுகள்’ மலையாளப் படத்தில் தன்னுடைய நடிப்பு வாழ்வைத் தொடங்கிய கல்பனா, நாயகி, குணச்சித்திர வேடம் என தனது மரணம் வரை 300 படங்கள் வரை நடித்து பிஸியாகவே இருந்துள்ளார்.

    தேசிய விருதுக் கலைஞர்

    நகைச்சுவை நடிப்பிற்காகவே கல்பனா உடனடியாக ஞாபகத்திற்கு வந்தாலும் சீரியசான கதாபாத்திரத்திரங்களிலும் சோபித்தவர் அவர். 2012-ல் ‘தனிச்சல்ல ஞான்’ படத்துக்காகச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். மலையாள சினிமாவின் கலைமுகங்களில் ஒருவரான இயக்குநர் ஜி.அரவிந்தனின் ‘போக்குவெயில்’ படம்தான் இவர் நாயகியாக அறிமுகமான படம்.

    சமீபத்தில் மொழி பேதம் கடந்து தென்னிந்தியா முழுவதும் ரசிக்கப்பட்ட ‘பெங்களூர் டேஸ்’ மலையாளப் படத்தில் நாயகன் நிவின் பாலியின் அசமந்தமான, விட்டேற்றியான, பொறுப்பற்ற அம்மாவாக அவர் ஏற்ற கதாபாத்திரம் எல்லாராலும் மிகவும் ரசிக்கப்பட்டது. கணவனாலேயே பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டு எய்ட்ஸ் நோயால் அவதிப்படும் குயின் மேரிஸ் கதாபாத்திரத்தில், அதன் உள்மனப் போராட்டங்களை உணர்ந்து, அவர் நடித்திருந்த ‘சார்லி’ படம் இன்னும் கேரளத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    கலைக் குடும்பம்

    கேரளத்தின் புகழ்பெற்ற நாடக நடிகர்களான வி.பி.நாயர் மற்றும் விஜயலட்சுமி தம்பதியருக்குப் பிறந்த கலாரஞ்சனி, கல்பனா, ஊர்வசி மூன்று சகோதரிகளும் நடிகைகளாகத் தனித்தனியாக அவரவர் வகையில் சாதனை செய்தவர்கள். கல்பனாவுக்குப் பெயர் பெற்றுத்தந்த மலையாளப் படங்கள் என்று ‘பஞ்சவடிப்பாலம்’, ‘பெருவண்ணப்புரத்தே விசேஷங்கள்’, ‘கவுத்துக வார்த்தகள்’, ‘டாக்டர் பசுபதி’, ‘ஊட்டயாள் பட்டாளம்’, ‘காந்தர்வம்’, ‘குடும்பவிசேஷங்கள்’, ‘மாம்பழக்காலம்’, ‘கேரளா கபே’, ‘இந்தியன் ருபீ’ மற்றும் ‘பெங்களூர் டேஸ்’ படங்களை மலையாள விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இவர் உஷா உதூப்புடன் சேர்ந்து செய்த இசை ஆல்பமான ‘பலவட்டம்’ ரசிகர்களால் இன்றும் நினைவுகூரப்படுகிறது. இவர் மலையாளத்தில் எழுதிய சுயசரிதையான ‘ஞான் கல்பனா’, இவரைத் தேர்ந்த எழுத்தாளராகவும் அறிமுகப்படுத்தியது. இவரது திரை அனுபவங்களையும் இவர் ரசித்த படைப்புகளையும் பற்றிய நூல் அது. அந்தப் புத்தகத்தில் அவர், “ நான் என்னைப் பார்த்துச் சிரிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று எழுதியிருப்பார். எத்தனை ஞானமும் சத்தியமும் கொண்ட வார்த்தைகள் இவை. இவரது தங்கை ஊர்வசியும் இவரும் மத்திய வயதை எட்டுகையில் நட்சத்திர அந்தஸ்து எதையும் கருதாமல் சாதாரணமாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களுக்குத் தங்களைத் தகவமைத்துக் கொண்டதற்கு இந்த ஞானமே காரணமாக இருந்திருக்கும்.

    இயக்குநர் சிகரத்தின் பாராட்டு

    கே.பாக்கியராஜின் இயக்கத்தில் ‘சின்ன வீடு’ மற்றும் விசுவின் ‘திருமதி ஒரு வெகுமதி’ படங்களில் கல்பனா முன்னணி நாயகியாகவும் சிறந்த நடிகையாகவும் போற்றப்பட்டார். துயரத்தில் அழுந்திப் போராடும் பெண்களின் மன உணர்வை நன்கு வெளிப்படுத்துவதில் சரிதாவுக்கு இணை கல்பனாதான் என்று கே.பாலச்சந்தரால் பாராட்டப்பட்டவர் அவர்.

    ஒரு இந்திய நடிகையிடம் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படும் கவர்ச்சிகரமான உடலமைப்பைக் கொண்டவர் அல்ல அவர். தனது குண்டு உடலையே தனது மந்திர விளக்காக மாற்றிய கலைஞர் அவர். புற அழகை வென்று அக அழகால் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை வென்ற சில நடிகைகளின் பட்டியலில் அவரும் இருப்பார்.

    மலையாளத்திலும் தமிழிலும் அவர் சாதாரணப் பெண்களின் சாதாரண உணர்வுகளான நிராசை, ஏக்கம், ஏமாற்றம் மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலேயே நடித்தார். அதுவே அவரது சாதனையும்கூட.

    ஆயிரம் முத்தங்கள் கல்பனா சேச்சி!

    துல்கர் சல்மானின் நெகிழ்ச்சியான ட்வீட்:

    கல்பனா சேச்சி பற்றிய செய்தியைக் கேட்டு உடைந்துபோனேன். என்னைக் குழந்தையாகப் பார்த்தவர். எனக்கே தெரியாத எனது குழந்தைப் பருவத்துக் கதைகளை எனக்கு அவர் சொல்வார். சமீபத்தில் நானும் அவரும் ‘சார்லி’ படத்தில் நடித்தோம். அந்தப் படத்தில் சார்லி கதாபாத்திரம் மேரியை முத்தமிடும். நான் கல்பனா சேச்சியின் கன்னத்தில் முத்தமிட்டேன். அப்போது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். குழந்தையாக இருந்தபோது அவர் என்னை முத்தமிடச் சொல்லி வற்புறுத்துவாராம். நான் கொடுக்காமல் ஓடிவிடுவேனாம். அவருக்கு என்னுடைய ஆயிரம் முத்தங்கள்.

  5. Likes Russellmai liked this post
  6. #3
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    சினிமா எடுத்துப் பார் 43: அறையில் அழுது கொண்டு இருந்த ஸ்ரீதேவி!


    எஸ்பி.முத்துராமன்



    வெளிநாட்டில் வித்தியாசமாக எடுக்க திட்டமிடப்பட்ட அந்தப் படத்தை, தமிழில் மட்டும் எடுத்தால் பொருட்செலவு அதிகமாகும்; நிச்சயம் கையைக் கடிக்கும். அதனால் கன்னடத்திலும் சேர்த்து எடுக்கலாம் என்ற ஐடியாவை பஞ்சு அருணாசலம் கூறினார். கன்னடத்தில் எடுக்கத் தயாரிப் பாளர் ராஜண்ணாவும் தயாராக இருந் தார். அந்தப் படம் ‘ப்ரியா’. இந்தப் படத் தைப் பற்றி இந்த வாரம் எழுதும் போது நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். 1978-ம் வருஷ சிங்கப்பூருக்கும் 2016 சிங்கப்பூருக்கும் எவ்வளவு மாற்றங்கள்!

    முன்னாள் பிரதமர் லீ குவான் யூ ஒரு முறை ‘‘சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர் களுக்குப் பங்கு உண்டு. தமிழர்களின் உழைப்பும் வேர்வையும் இந்த மண்ணில் கலந்துள்ளது’’ என்றார். சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பது நமக்குப் பெருமை.

    சிங்கப்பூரில் புக்கிட் பாஞ்சாங்கில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டேன். தமிழர்களோடு, இந்தியர், சீனக்காரர், மலேசியர் என பல நாட்டு இன மக்களும் ஒன்றாகக் கூடி பொங்கல் வைத்தனர். சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தியோ கோ பின் பட்டு வேட்டி, சட்டை, துண்டு அணிந்தும் அவர் மனைவி பட்டுப் புடவை அணிந்தும் கலந்துகொண்டனர். நான் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்துகொண்ட ஒரு மாமன்காரனாக தாய்நாட்டின் வாழ்த்து களை அவர்களுக்குக் கூறினேன். ‘ஒரே உலகம்; ஒரே இனம்’ என்று பார்க்க பூரிப்பாக இருந்தது

    பஞ்சு அருணாசலத்தின் சகோதரர் கேஎன். சுப்புதான் ‘ப்ரியா’ படத் தயாரிப் பாளர். எழுத்தாளர் சுஜாதா எழுதிய ‘ப்ரியா’ நாவலைத்தான் படமாக்கினோம். வெளிநாடுகளில் நடக்கும் கதைக்களம். நானும் ஒளிப்பதிவாளர் பாபுவும் ‘ப்ரியா’ நாவலைப் படித்து கதையை உள்வாங் கிக்கொண்டோம். சுஜாதாவின் கதைகள் பெரும்பாலும் திரைக்கதை வடிவத்தில் இருக்கும். பிரம்மாண்டமான படங்களை எடுக்கும் இயக்குநர் ஷங்கரின் படங் களில் சுஜாதாவின் பங்களிப்பு சிறப்புடன் இருந்தது. சிறந்த கணினி விஞ்ஞானியான அவர், அவ்வளவாக கணினி புழக்கத் துக்கு வராத காலத்திலேயே கமலுக்குக் கணினி கற்றுக்கொடுத்து, திரைப்பட உருவாக்க வேலைகளை அதில் செய்ய வைத்தார். எழுத்தாளர் சுஜாதாவை இந்தக் காலத்தின் ‘திருமூலர்’ என்றே சொல்லலாம். அவருடைய ‘ப்ரியா’ கதைக்கு பஞ்சு அருணாசலம் தன் எழுத் தின் மூலம் மேலும் மெருகேற்றினார்.

    ‘ப்ரியா’ பட நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நாயகி தேவி. கன்னட நடிகர் அம்ரிஷ், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் என நடிகர்கள் தேர் வானார்கள். இளையராஜா புதுமையான பாடல்களை அற்புதமாக இசை அமைத்து, ‘இன்ரிகோ’ (INRECO) ஸ்டீரியோபோனிக் முறையில் ஒலிப் பதிவு செய்துகொடுத்தார். சூப்பர் ஸ்டா ரின் படத்துக்கு சூப்பராகவே பாடல்கள் அமைந்தன.

    ‘ப்ரியா’படத்தை சிங்கப்பூரில் படமாக் கும் வேலைகளைத் தொடங்கினோம். பொதுவாக வெளிநாடுகளில் பாடல் காட்சிகளை மட்டுமே எடுப்பது ஒரு விதம். முழு படத்தையும் எடுப்பது சாதாரணமானது இல்லை. படப்பிடிப் புக்குப் புறப்பட்டபோது, செலவோடு செலவாக மளிகை பொருட்களை எடுத் துக்கொண்டு, உடன் சமையல்காரரை யும் அழைத்துச் சென்றோம். அதிகாலையில் படப்பிடிப்புக்குப் புறப்பட்டால் டிபன் ரெடி ஆகியிருக்காது. புகழ்பெற்ற நடன இயக்குநர் சோப்ரா மாஸ்டர் பிரட்டில் ஜாம் வைத்து காலை உணவை தயார் செய்துகொடுப்பார். பஞ்சாபிக்காரரான சோப்ரா நல்ல மனிதர்.

    படத்துக்குத் தேவையான சில காட்சிகளை சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் படமாக்க நினைத்தோம். ஏர்போர்ட் நிர் வாகத்தை அணுகியபோது, ‘‘பயணிகள் அதிகம் வந்து செல்லும் நேரத்தைத் தவிர்த்து எடுத்துக்கொள்ளலாம்’’ என்று சொல்லி அனுமதி அளித்தனர். அனுமதி கிடைத்த மகிழ்ச்சியோடு ‘‘தொகை எவ் வளவு கட்ட வேண்டும்?’’ என்று கேட் டோம். ‘‘இந்தப் படம் மூலமாக எங்கள் ஏர்போர்ட் பல நாட்டு மக்களுக்கும் தெரியப்போகிறது. இன்னும் பல நாட்டுக்காரர்கள் எங்கள் நாட்டுக்கு சுற்றுலா வருவார்கள். உங்கள் மூலம் எங்களுக்கு விளம்பரம் கிடைக்கும்போது ஏன் பணம் வாங்க வேண்டும்? எதுவும் வேண்டாம்’’ என்றார்கள். சுற்றுலாத் துறைக்கு சிங்கப்பூர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர முடிந்தது.



    படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் ஏர் லைன்ஸ் நிறுவனம் ஒரு விமானத்தை சில மணி நேரங்களுக்கு இலவசமாகக் கொடுத்து உதவியது. சுற்றுலாவுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத் துவத்தை போல நமது இந்தியாவிலும் ‘இங்கே தடை; அங்கே தடை’என்று முட்டுக்கட்டை போடாமல் சுற்றுலாவின் வளர்ச்சிக்குத் திட்டமிட வேண்டும். இந்தியாவில் படப்பிடிப்புக்கு அனுமதி பெறும் கஷ்டம் இங்கு சினிமா எடுப்பவர்களுக்குத்தான் தெரியும்.

    ‘டார்லிங்… டார்லிங்… டார்லிங்’ என்ற இளமை துள்ளும் பாடலை சிங்கப்பூரில் அழகான ஒரு நீச்சல் குளத்தில் படமாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தோம். அந்தப் பாடலுக்கு நடனம் ஆட வேண் டிய நாயகி தேவி உரிய நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவில்லை. விசாரித்துப் பார்த்தால் அவர் அறையில் அழுது கொண்டு இருக்கிறார் என்றார்கள்.

    ஏன்? ஏன்?

  7. Likes Russellmai liked this post
  8. #4
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like

    Bhakthi - kandhan karuNai - thirupparankundrathil.....

    From kandhan karuNai

    thirupparankundrathil nee sirithaal.....

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  9. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #5
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Courtesy: Tamil Hindu

    நினைவுகளின் சிறகுகள்: தாய்மையின் குரல்! - எஸ். வரலட்சுமி



    ‘ஐந்தாவதாகப் பெண் பிறந்தால் அதிர்ஷ்டம்!’ என்றார்கள் மூத்த குடிகள். வரலட்சுமியின் பெற்றோர் தங்களின் கடைசி, ஐந்தாவது மகளைத் தத்துக்கொடுத்துவிட்டார்கள். குழந்தையில்லாத கர்நூல் பெரியம்மாவின் சுவீகாரப் புத்திரி வரலட்சுமியை, பெரியப்பா - ரங்கப்ப நாயுடு கானக் குயிலாக வளர்த்தார்.

    “பெரியப்பா எல்லாத்துலயும் எனக்குச் செல்லம் கொடுப்பாரு. ஆனா சங்கீதப் பயிற்சியில கொஞ்சமும் கருணை காட்ட மாட்டார். காலையில நாலு மணிக்கு எழுந்து பாட்டு பாடலைன்னா காதைப் பிடிச்சித் திருகிடுவாரு. காது மடல் செவந்து கன்னிப்போயிரும். ஒரு பானையில் தண்ணி கொட்டி அதுல ஐஸ் கட்டிகளை மிதக்க விடுவார். குடத்தை அணைச்சபடி நான் பாடணும்.

    பானையோட ஜிலுஜிலுப்பு என் நெஞ்சுல பட்டதும் ஒரு உதறல் வரும். பாடும்போது குரலே புதுசாகிப் பல சங்கதிகள் உருவாகும். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு பயிற்சி பண்ணியிருக்கேன்” என்று எஸ். வரலட்சுமி சொல்லியிருக்கிறார்.

    இரண்டு பாடல்கள்

    கே. சுப்ரமணியத்தின் ‘சேவா சதனம்’ டாக்கியில் பத்து வயதில் எம்.எஸ். சுப்புலட்சுமியுடன் பாடி நடிக்கத் தொடங்கியவர் வரலட்சுமி. நிறைவாக கமல் ஹாஸனின் ‘குணா’வில் மாறுபட்ட அம்மாவாகத் தோன்றி, ‘உன்னை நானறிவேன்... என்னை அன்றி யார் அறிவார்...’ என்று அவர் பாடியது இளையராஜாவின் இசையில் தாய்மையின் குரலாக ஒலித்தது.

    வரலட்சுமி திரையில் பாடி நடித்த இரு தாலாட்டுகள் சென்ற நூற்றாண்டுத் தமிழச்சிகளின் தாய் வீட்டு சீதனங்கள்!

    1.சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே... ( படம் - வீரபாண்டிய கட்டபொம்மன் - கு. மா.பாலசுப்ரமணியம் பாடல் - இசை ஜி.ராமநாதன்)

    2. ‘இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் நான் தொட்டிலைக் கட்டி வைத்தேன்’ (படம் - நீதிக்குத் தலை வணங்கு; புலமைப்பித்தன் பாடல்; இசை எம்.எஸ். விஸ்வநாதன்) .

    கட்டபொம்மனின் போட்டிப் படம் கண்ணதாசனின் ‘சிவகங்கைச் சீமை’. பரபரப்பான சூழலில் இரண்டிலும் ஒரே சமயத்தில் வரலட்சுமி பாடி நாயகியாக நடித்திருக்கிறார். ‘தென்றல் வந்து வீசாதோ... தெம்மாங்கு பாடாதோ...’ என்று ‘சிவகங்கைச் சீமை’யில் வரலட்சுமி பாடிக் கண்ணீரைச் சிந்திய தாலாட்டில், கவிஞரின் மண்ணின் மணமும் நாட்டுப்பற்றும் வேர் பிடித்து நின்றன. கனிவும் கம்பீரமும் தண்டவாளங்களாகத் தாங்கி நிற்க, வரலட்சுமியின் குரலில், நம் செவிகளில் வந்து சேர்ந்த சுக ராக ரயில்கள் ஏராளம்!

    தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட பாடகி- நடிகைகளில் கணீர் கணீரென்று அட்சர சுத்தமாகத் தமிழை உச்சரித்தவர் எஸ். வரலட்சுமி மட்டுமே!

    திரையிசைக்குத் தேசிய விருது

    ‘ஏமாற்றம்தானா என் வாழ்விலே’ என்று வரலட்சுமி சினிமாவுக்காகப் பாடியது சீக்கிரத்திலேயே பலித்தது. வரலட்சுமியின் நட்சத்திரப் பரமபதத்தில் அவர் ஏறிய ஏணிகளை விட, அவரது சங்கீதம் சாகடிக்கப்பட்ட தருணங்களே அதிகம். பாடல் பறிபோனதற்காக எஸ். வரலட்சுமியோடு சேர்ந்து கலைவாணரே வருந்திய நிகழ்வும் உண்டு.

    நடிகர் திலகத்துடன் எஸ். வரலட்சுமி பாடி நடித்தவை, அவரை இருட்டடிப்பு செய்யாமல் பேரும் புகழும் பெற்றுத்தந்தன. 1959ல் தமிழின் முதல் சரித்திரப் படமான ‘வீரபாண்டிய கட்டபொம்ம’னின் ‘பட்டமகிஷி ஜக்கம்மா’வாக நடித்து அவர் பாடிய ‘மனம் கனிந்தருள் வேல் முருகா’ பார்ப்போர், கேட்போர் உள்ளத்தை உருக்கியது.

    1967-ல் தமிழ்த் திரை இசைக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத்தந்த ’கந்தன் கருணை’யில் இந்திராணியாக, கே.வி. மகாதேவனின் இசையில் (‘வெள்ளி மலை மன்னவா’), சிம்மக்குரலோன் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ஒரே வண்ணப் படம் 1969-ன் ‘தங்கச் சுரங்கம்’. அதில் தாயாக (‘பெற்ற மனம் சிறையிலே’) , 1973-ல் முதல் சினிமாஸ்கோப் வண்ணச் சித்திரமான ‘ராஜராஜ சோழ’னில் - பெரிய குந்தவையாக (ஏடு தந்தானடி தில்லையிலே, தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!), 1974ல் சிவாஜி நடித்த கடைசி கருப்பு-வெள்ளை சினிமா ‘தாய்.’

    அதில் நாயகனின் அம்மாவாக (’மங்கலம் காப்பாய் சிவசக்தி என் மாங்கல்யம் காப்பாய் சிவசக்தி’) ஆகிய பாடல்கள் அவரது குரலில் ஆன்மிக இனிமையின் உச்சமாக நேற்றைய வெள்ளிக் கிழமைகளில் விவித பாரதியில் தவறாது ஒலித்தது.

    இரண்டாவது இன்னிங்ஸ்

    1979-ல் சிவாஜி கணேசனின் 201-வது படம் கவரிமான். அதில் நாயகனின் அன்னையாக - பிரபலமான கர்நாடக இசைப் பாடகியாக எஸ். வரலட்சுமி! இளையராஜாவின் இசையில், மகாகவி பாரதியின் ‘சொல்ல வல்லாயோ கிளியே’ கவிதையைப் பாடினார்.

    ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்ற ‘அமர’ தீபங்களில் வரலட்சுமியும் ஒருவர். ‘மாட்டுக்கார வேலன்’, ‘சவாலே சமாளி’, ‘ஆதிபராசக்தி’ ஆகிய வெற்றிப் படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். 1968-ல் ‘மீனாட்சி’ என்கிற ஆணவமிக்க சீமாட்டியாக, வரலட்சுமியின் அட்டகாச நடிப்பில் வெள்ளி விழா கொண்டாடியது கே.எஸ். ஜியின் ‘பணமா பாசமா.’

    வரலட்சுமியின் நடிப்பாற்றலை முதலீடாகக் கொண்டு உடனடியாக, 1969-ல் கே.பாலசந்தரும் ‘பூவா தலையா’ 100 நாள் படம் கண்டார். கே.பி.யின் ‘காவியத்தலைவி’ போன்ற வெள்ளி விழா சினிமாக்களிலும் வரலட்சுமியின் பங்களிப்பு உண்டு. முதல் சுற்றைக் காட்டிலும் இரண்டாம் இன்னிங்ஸில் வரலட்சுமி நன்கு பிரகாசித்தார். ‘பணமா பாசமா’வில் வரலட்சுமியை இரும்பு மனுஷியாகக் காட்டியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

    தனது மிக பிரம்மாண்ட புராணச் சித்திரமான ‘ஆதிபராசக்தி’யில், தயையும் கருணையும் ததும்பும் லோக மாதாவாக வரலட்சுமியைக் கூடு விட்டுக் கூடு பாய வைத்தார். வரலட்சுமியை ‘அம்பாளாக’ ஏற்றுக்கொண்டனர் மக்கள். 1971-ன் தீபாவளி வெளியீடான ‘ஆதிபராசக்தி’ அமோக வசூலோடு வெள்ளிவிழா கொண்டாடியது.

    எம்.கே. தியாகராஜபாகவதர் (சியாமளா), பி.யூ. சின்னப்பா (வனசுந்தரி), டி.ஆர். மகாலிங்கம் (மச்ச ரேகை) ஆகிய முன்னாள் மூன்று சூப்பர் ஸ்டார்களுடனும் இணைந்து நடித்து உடன் பாடிடும் வாய்ப்பையும் பெற்றவர் வரலட்சுமி.

    ‘ஜெமினி’ வெளியீடான ‘சதி முரளி’ டாக்கியில் நடித்தபோது அரும்பியது டி.ஆர். மகாலிங்கம் - வரலட்சுமியின் தோழமை. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வாழ்விலும் இணைந்தார்கள். மகாலிங்கம் மறைந்த பின்னர் கண்ணதாசனின் அண்ணன் - பட அதிபர் ஏ.எல். ஸ்ரீநிவாசனுடன் வாழ்வில் இணைந்தார் வரலட்சுமி. இத்தம்பதிக்கு இரு பிள்ளைகள். தமது 82 வயதில் சென்னையில் மறைந்த வரலட்சுமியின் குரலும் நடிப்பும் மறையவே மறையாது.

  11. Likes Russellmai liked this post
  12. #6
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Where's everybody???

    A nice song in Sivaranjani ragam; featuring Nedumudi Venu & Sumalatha (Actors),
    Bichu Thirumala (Lyricist), Raveendran (Music Director), & K.J. Yesudas...

    தேனும் வயம்பும் நாவில் தூவும் வானம்பாடி
    ராகம் ஸ்ரீ ராகம்
    பாடூ நீ வீண்டும் வீண்டும் வீண்டும் வீண்டும்...


  13. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  14. #7
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    எங்கே எங்கே ? நண்பர்கள் எல்லோரும் எங்கே போய் விட்டீங்க ?
    மீண்டும் மதுர கானம் மலரட்டும்..

    வருக வருக

  15. #8
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    vandhom vandhom

  16. Likes madhu liked this post
  17. #9
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  18. Likes madhu, Russellmai liked this post
  19. #10
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like

  20. Likes madhu, rajeshkrv, Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •