Page 217 of 337 FirstFirst ... 117167207215216217218219227267317 ... LastLast
Results 2,161 to 2,170 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2161
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    From GG's Treasure Island with Love!

    அந்தக் கால கட்ட பிரம்மாண்டத்தின் உச்ச கட்டம் மணாளனே மங்கையின் பாக்கியம் !

    இந்திரனின் சாபத்தால் மானுட நங்கையாக பூமிக்கு வந்து ஜெமினியின் பதி விரதையாக சாப விமோசனம் எதிர்நோக்கும் ரம்பையாக அஞ்சலிதேவி தியேட்டர்களில் மங்கையரின் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்க வைத்த வெற்றி சித்திரம் மணாளனே மங்கையின் பாக்கியம் !
    Enjoy GG-Anjali combo's winning strides!!

    இந்திர லோகத்து அப்சரஸ்கள் சந்திர நிலவொளி வெள்ளைக் குதிரை வண்டியில் பூமிக்கு இறங்கி வந்து காதல் மன்னரின் மந்திர பார்வை பட்டபிறகு தப்பிக்க தந்திரமில்லையே!



    இந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் ராட்சஷ குகையில் ராஜசுலோசனா நடன முடிவில் கமண்டல ஷவர்பாத்துக்குப் பிறகு ஜெமினியாக மாறும் காட்சி!
    காதல் மன்னரும் நளினமான நடன அசைவுகளில் பின்னியெடுத்திருப்பார் !


    Last edited by sivajisenthil; 3rd April 2016 at 11:21 AM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2162
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Compliments from the Live and Let Live James Bondian Jai Shankar's Archipelago!

    Gap filler and Monotony breaker!

    Another Bond type flick Ponnu Maappile further anchored Jai as our James Bond!!
    And...this type of comic dance and body language facial interludes established Nakesh as our Jerry Lewis!





    Believe it or not!!

    The young and energetic dance companion of Nagesh is Veerappan who later became the comedy writer for Goundamani movies!!
    Last edited by sivajisenthil; 3rd April 2016 at 11:50 AM.

  5. Likes madhu, Russellmai liked this post
  6. #2163
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    இன்னிக்கு என்னபாட் போடலாம்..ம்ம்

    தாமரைப் பூப்போல் மேனி வளர்ந்து
    தாரகைப் போல் இரு விழிகள் மலர்ந்து
    பூ மழை தூவுது புன்னகை தாவுது
    பொன்னொன்று பெண்ணானது

    ஆடக் காண்பது காவிரி வெள்ளம்
    அசையக் காண்பது கன்னியர் உள்ளம்
    ஒடக் காண்பது பருவத்து காத்து
    ஓஹோ ஓஹோ ஹோ ஹோ ஹோ (

    இந்த வாழ்க்கை வாழ்வதற்கே படம் நான் பார்த்ததில்லை..சி.செ உங்களிடமும் கேட்ட நினைவு எப்படி இருக்கும்..

    எது எப்படியோ.. சுசீலாம்மாவின் குரலும் துள்ளல்.. கவியரசர் கண்ணதாசனின் வரிகளும் துள்ளல் ..சர்ரூவும் துள்ளல் தான் இல்லியோ (என்ன ராஜேஷ் சரியா )



    ஆனாக்க இன்னும் ரெண்டு ஸ்டான்ஸா இருக்கணும் பாட்டுல இல்லியே.. படத்துலயாவது முழுசா இருக்குமா

    இயற்கையின் நாடகம் மேடையிலே
    இனிமை எனும் சிறு சோலையிலே
    எழுதிய ஓவியம் பழுது படாமல்
    எழுந்து நடந்தது மாலையிலே

    இளமை இனிமேல் யாரிடமோ
    இறைவன் திருஉள்ளம் எவ்விடமோ
    கனிமொழி பேசிடும் கன்னியின் எண்ணம்
    யாரோடு போராடுமோ என்று
    பாலோடு தேனாகுமோ (
    Last edited by chinnakkannan; 3rd April 2016 at 09:40 PM.

  7. Likes Russellmai liked this post
  8. #2164
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    No idea SiKa about this film which I have not seen full. But heard of these songs






  9. Thanks Russellmai, chinnakkannan thanked for this post
    Likes Russellmai liked this post
  10. #2165
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாசுஜி/ராகவ்ஜி மற்றும் ஃப்ரெண்ட்ஜீஸ்....

    அன்பளிப்பு படத்தில் இந்தப் பாட்டுக்கு ஆடுவது கீதாஞ்சலிதானே ?


  11. Likes vasudevan31355, Russellmai liked this post
  12. #2166
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    அதேதான் அண்ணா! நம்ம தெலுகு ராமகிருஷ்ணா சம்சாரம். இந்தப் பாட்டைப் பற்றி முன்னம் ஒரு தரம் அலசி எடுத்த நினைவு. ஈஸ்(வெறி) யைப் பற்றி மனதில் 'அடக்க நினைத்தால்' அது 'அதிகம் வளரும்'. ஏதோ அது. ம்...இப்போது கின்னஸ் சுசீலா அம்மா (ஜி) காலம். ம்...ம்...ஆகட்டும்.... பார்க்கலாம்.



    கீதாஞ்சலி என்றாலே நினைவுக்கு வருவது 'அதே கண்களி'ல் குடிகொண்டிருக்கும் 'என்னென்னவோ நான் நினைத்தேன்' பாடல்தான். நம்ம கார்த்திக் சாருக்கு ரொம்பவே பிடிக்கும்.



    அப்புறம் 'பணம் படைத்தவன்' படத்தில் 'கண் போன போக்கிலே' பாடலின் ஆர்ப்பாட்டமான இடையிசையில், நாகேஷ் ஆட்ட சேஷ்ட்டைகளில் பேண்ட்டின் பின்பக்கம் கிழிந்தாட, கூட ஜோடியாய் அழகு கீதாஞ்சலி.



    அப்புறம் இருக்கவே இருக்கு 'நெஞ்சிருக்கும்வரை'. மாலியின் நட்பு கைங்கரியத்தில் விஜயாவுடன் கல்யாணமான முத்து தேவதாஸிற்கு ஆறுதல் தரும் சந்த்ரமுகியாக கீதாஞ்சலி இரண்டு பாடல் ஆட்ட ஆறுதல். ஜானகி, சுசீலா போட்டா போட்டியில். ('கண்ணன் வரும் நேரமிது'....'நினைத்தால் போதும் பாடுவேன்')



    'என் அண்ணன்' படத்தில் கருப்பு சிவப்பு அரைடிராயர் போட்ட பித்துக்குளி 'சோ' ராமசாமிக்கு கலர் தேவதை கீதாஞ்சலி ஜோடி. ம்....கண்ணா! ஏக்கப் பெருமூச்சு இங்கே கேக்குது.

    தெலுங்கில் நிறைய கிளப் சாங்க்ஸ். 'பைட்டர் பகவான்' டப்பிங் படத்தில் படத்தில் சொந்தக் கணவரே 'தோரஹா'. மாணவ வயதில் ஒரு கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கண்ணால் பாரதிராஜா ஹீரோயின் மாதிரி பார்த்து பயந்து ரசித்து மனதிலேயே ஒளித்து வைத்துக் கொண்டது. இப்போதான் 'ராஜா காது கழுத காது' அங்கமுத்து போல மனசு பாரம்லாம் குறைஞ்சிடுத்து.

    ஆரம்பத்தில் 'பாரஸ்மணி' இந்தியிலும் பாதி கலர்க் கொடி நாட்டல். பாதி படம் வண்ணம். மஹிபால் ஹீரோ. அவர்தான் பாரஸ். அம்'மணி'க்கு ஆரம்பத்திலேயே அடித்தது இளவரசி வேட நாயகி யோகம்.



    அது போல அம்மணி அம்மாவுக்கு மிக நெருங்கிய தோழியும் கூட.

    இன்னும் நிறைய நிறைய இருக்கிறது. ஆனால் நேரம் இருக்கிறதா? இல்லியே.

    இது கீதுவின் கணவர் நடிகர் ராமகிருஷ்ணா. 'புண்ணிய பூமி' படத்தில் நடிகர் திலகத்திற்கு அண்ணனாக நடித்திருப்பார். மாடர்ன் தியேட்டர்ஸ் நேரிடையாக தமிழில் தயாரித்த 'வல்லவன் வருகிறான்' படத்தின் ஹீரோ.

    ஒரு அருமையான பாடல் கேட்டிருப்பீர்கள். 'அன்னப் பறவை' படத்தில் லதாவுடன் ராமகிருஷ்ணா பாலா குரலில் பாடும் 'பொன்னென்பதோ பூவென்பதோ' பாடலை மறந்து விட முடியுமா என்ன?



    கீதுவின் கணவர் நடிகர் ராமகிருஷ்ணா.



    இது நம்ம சின்னாவுக்கு. 'பாவ மன்னிப்பு' வழங்குக சின்னா.

    Last edited by vasudevan31355; 4th April 2016 at 08:55 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  13. Likes madhu liked this post
  14. #2167
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    வாவ் வாசுஜி...

    கீதுவைப் பற்றி ஒரு கீதையே சொல்லிட்டீங்க.. ஆனாலும் சிக்காவுக்கான ஸ்பெஷல் படம்தான் சூப்பர்.
    கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம்... ஆங்....

  15. #2168
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மதுண்ணா!

    கீதாஞ்சலிக்கு ஓரளவிற்கு மாலா சின்ஹாவின் முக ஜாடையும் உண்டு என்று உள்மனது சொல்லும். அவ்விடம் எப்படியோ?
    நடிகர் திலகமே தெய்வம்

  16. #2169
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    வாவ் வாசுஜி...
    ஆனாலும் சிக்காவுக்கான ஸ்பெஷல் படம்தான் சூப்பர்.
    .
    நான் ஓடியே போயிட்டேன் சாமி
    நடிகர் திலகமே தெய்வம்

  17. #2170
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    மதுண்ணா!

    கீதாஞ்சலிக்கு ஓரளவிற்கு மாலா சின்ஹாவின் முக ஜாடையும் உண்டு என்று உள்மனது சொல்லும். அவ்விடம் எப்படியோ?
    அதே,,,,,,,,,எனக்கு இந்த மாதிரி குழப்ப ஜாடைகள் நிறைய உண்டு....

    சாவித்திரி - மீனா குமாரி
    தேவிகா - ஆஷா பரேக்
    பிஸ்வஜித் - நம்பியார்

    ஹிஹி.. அடிக்க வராதீங்கோ

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •