Page 287 of 337 FirstFirst ... 187237277285286287288289297 ... LastLast
Results 2,861 to 2,870 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2861
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Another Illusion?
    இதுவும் ஒரு மாயைதானே !adiram sir!?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2862
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    To break even Adiram Sir's hallucination.....choo mandhirakkaali....pillisoonyam.....enjoy from NT - Balaiah - Chandrababu combo!! Kaaththavaraayan......

    நெருப்புக்கு அஞ்சாமல் டூப் போடாமல் ரிஸ்க் எடுக்கும் நடிகர்திலகம் கும்பம் தலையிலிருந்து விழாமலே ஆடும் கரகாட்டமும் கனஜோர் !

    Last edited by sivajisenthil; 29th May 2016 at 01:52 PM.

  4. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  5. #2863
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சில நாட்களுக்கு முன் இங்கு இலக்கியம் பேச பட்டது. இது சம்பந்தமாக,என் தங்கை சித்ரா ரமேஷ் சிங்கப்பூர் நாட்டின் பேச படும் ஒரு எழுத்தாளர்.
    பல இலக்கியவாதிகள் அசோகமித்திரன்,நாஞ்சில் நாடன்,ஜெயமோகன் உள்ளிட்ட எழுத்தாளர்களால் பாராட்ட பெற்றவர்.

    சிங்கப்பூரின் கதை(உண்மை சரிதம்),பறவை பூங்கா(சிறுகதை -குறுநாவல் தொகுப்பு),ஆட்டோகிராப் (உண்மை புனைவு ),நிழல் நாடகம் (சினிமா)என்று பல புத்தகங்கள். சிகரம் ஆப்செட்,ஈரோடு பதிப்பித்தவை.
    பல விருதுகளும் வாங்கியுள்ளார்.

    பறவை பூங்கா தொகுப்பில் பறவை பூங்கா,சில மைனா குஞ்சுகளும் ஒரு பூனை குட்டியும்,மனுஷன்,ஒன்பதாவது திசை போன்றவை இன்று எழுத்தாளர் என்று திமிர்த்து நிற்கும் எவர்க்கும் சவால் விடும் குறு நாவல்கள்.ஆட்டோகிராப் ,உலக முழுதும் பல ரசிகர்களை குவித்த அற்புத ரசவாதம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  6. #2864
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எனது முன்னுரையுடன் வெளியான ஆட்டோகிராப் , அதில் எனது உண்மையான முன் சிந்தனைகள். உங்கள் பார்வைக்கு.

    என்னுடன் பயண பட்டவள் ,எங்க ஊரை பற்றி, மனிதர்களை பற்றி, எங்கள் விளையாட்டுகளை பற்றி, பொழுது போக்குகளை பற்றி,விந்தை குணங்களை பற்றி, தலைமுறையின் இயல்புகள் பற்றி, திருவிழாக்கள் பற்றி,புத்தகங்கள் பற்றி ,(என்னுடைய இடியோ சின்க்ரசி உட்பட )எனக்கு தெரிந்த இரண்டே ஊர்களான நெய்வேலி ,திருவிடைமருதூர் பற்றி எல்லாம் கிழித்து நாட்டிய பிறகு ,என்னை எழுத சொன்னால் கூறியது கூறல் என்றாகி விடுமே? என் நட்புகளை,சுற்றத்தை விளக்க சொன்னால் ,இவள் பழகிய பெண் நண்பிகளின் அண்ணன்களே என் ஆண் நண்பர்கள்.

    எனக்கு விட பட்ட சவாலை சமாளிக்க ஒரே ஆயுதம் ,ஆணாக நான் உணர்ந்ததை ஆணின் பார்வையில் விவரிப்பதே. அந்த காலத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருந்த ஒரே வித்யாசம் தினமும் அரைமணி தான். பெண் வீட்டிற்கு 6 மணிக்குள் வர வேண்டுமானால் ஆணிற்கு 6 1/2 மணி அவ்வளவே. வீட்டிற்குள் பெண்களை பூட்டிய சமூகத்தில் ஆண்கள் பிரத்யேக அனுபவம் பெற எங்கே சந்தர்ப்பங்கள்?
    தேடி தேடி எழுத பார்க்கிறேன்.


    படிக்க ஆரம்பிக்கும் போது ஒரு திமிருடன் தொடங்கினேன். நமக்கு தெரியாத எதை எழுதியிருக்க போகிறாள் என்று. ஏனென்றால் ஆண் -பெண் எல்லை கோடுகள் இல்லாத குடும்பத்தில், பொது விவாதமாக சினிமா,இலக்கியம், அரசியல்,தனி மனித வாழ்வு மிக மிக தீவிரமாகவோ,நகைசுவை முலாம் பூசியோ மிக மிக பேச படும். விவாதிக்க இயலாத பிரத்யேக அனுபவங்கள் பிரத்யேகமாக தங்க சாத்திய கூறுகளே இல்லை.என்றுதான் நினைத்து கொண்டிருந்தேன். என் தங்கை இத்தனை அன்னியமானவளா என்று ஆச்சர்யமே எஞ்சியது. திருவிடை மருதூர் அனுபவம் மூன்று வருடங்கள் ,தாத்தா -பாட்டியுடன் 6 வயதிலிருந்து 8 வயது வரை இருந்ததை சிறுமிக்கு என்ன பெரிய அனுபவங்கள் என்று அலட்சிய படுத்தி விட்டேன் பேச்சுக்களில் இவை மையம் கொள்ளவில்லை.அதே போல அவளின் விடலை மன உணர்வுகள். அப்போது விடலை பருவம் ,சிறு வயதின் நீட்சியே என்பதால், பருவ வயதின் பாற் பட்ட அந்நிய உணர்வுகள் தேக்கம் கொண்டு ,பகிர்தலை புறம் தள்ளும்.

    இந்த இரண்டே விஷயங்களை வைத்து ஒரு கால கட்டத்தை,அதன் அழகுணர்வுகளை,பகிர்வுகளை,இழப்புகளை,கிணற்றிலிரு ந்து பருந்து பார்வையாய் பொதுமை படுத்தி,நகைச்சுவையால் வர்ணம் பூசி, உளவியல் ஊசி கொண்டு உலகத்தால் உணர்வு கீறி, கொஞ்சம் படிக்க ஆரம்பித்தவுடன் ,சகோதரியின் எழுத்து,நம்மை பற்றி என்ற எண்ணம் ப்ரக்னை தவறி ,என்னை ஈர்த்து,இழுத்து தள்ளி கொண்டது.

    இது எந்த வகை எழுத்து? பழமை சார்ந்த குழந்தைமைக்கு பயண படும் விழைவா,காலத்தின் கோல மாற்ற விவரணையா, சுருக்க பட்ட தன் கதையா, சிரிப்புடன் சிந்தை பகிரும் கிலேசமா, இழப்புகளை எடை போட்டு மதிப்பீடுகளை பொது மக்களிடம் முறையிடும் மென்சோகமா ,தன்னுடைய வாழ்காலத்தின் பிரத்யேக அடையாள குறிப்புகளா, உறவுகளின் நெருக்கம்-இறுக்கம்-தவிர்ப்பு-வெறுப்பு-துறப்பு சார் எண்ண நீட்சிகளா. இவை எல்லாமேவா?இவ்வளவு விருப்பு-வெறுப்பற்று ஒரு எழுத்து துறவு மனநிலையில் ,எழுத்துடன் வாழ்க்கையை விளையாட விட்டு ,எங்கு அத்து மீறலோ ,அதீத உணர்வுகளோ தலை நீட்டும் போது விசிலடிக்கும் நடுவராக ஒரு எழுத்தாளர் மாறிய அதிசயம் ,ரசவாதம் நிகழ்ந்துள்ளது.

    எழுத்து என்பதே மனதை உறங்க வைத்து ,தன் வேலையை முடித்து கொள்ளையிடும் கள்ளதனமே. ஒரு கள்ளன் தனது கொள்ளைக்காக திட்டமிடும் கச்சிதம் ஒரு எழுத்தாளருக்கும் வேண்டும். அனுபவம்-எழுத்து திறன்-புதுமை இவற்றின் இணைவு சிறந்த எழுத்தை பிரசவிக்க இயலாது.பின்வரும் அதிசயங்களை இந்த தொடரில் கண்டேன்.
    அறிவுக்கும் ,மனதுக்கும் உடன்பாடான பொருட்தேர்வு.
    வாசகர்கள் மேல் கொண்ட நல்லாதிக்கம்.
    பழகிய களம், புதிதான வேறுபட்ட உலக பார்வை.
    உணர்வும் ,எழுத்தும்,சிந்தனையும் ஒருங்கமைதல்.
    கோட்பாடுகளும்,எடுத்துக்காட்டுகளும் சரியான முறையில் இணைக்க படுதல்.
    இவை எல்லாவற்றிலுமே சிறப்பான இணைப்பு புனை கட்டுரைகளாக வந்துள்ளன.

    நானும் ஒரு எழுத்தாளனாகும் விழைவு கொண்டவன் என்பதால் சில விஷயங்களை எடுக்கவே வேண்டியுள்ளது. thesis -anti thesis -synthesis முறை எழுத்துக்களையே அமைப்பு அழகியல் சார்ந்து துய்த்ததால்,புயலிலே ஒரு தோணி போன்று முழுமையற்ற உணர்வு. ஒரு வேளை எழுத்தாளரின் எந்திரன் 2க்கு பிரம்மாண்ட தந்திரமோ என்னவோ.

    இதில் எழுதாத ஒன்றை ஒரு ஆணாக நான் அடைந்த சுதந்திரம் ,சைக்கிளை எடுத்து கொண்டு நண்பர்களுடன் ,தெரு தெருவாக ,சில பெண்களை குறி வைத்து, வெளி வரும் நேரம், குறித்து சைக்கிளை மிதித்து ஒர பார்வை பார்த்து ,நண்பர்களிடம் ஆபாச பகிர்வு செய்தது ஒன்று. எழுத்தாளரின் பெண் நண்பி ஒருத்தியிடம் அத்து மீறி முத்தமிட்டு(சம்மதத்துடன்தான்) ,எழுத்தாளரிடம் பிடிபட்டு கூசிய அனுபவம். இரண்டுமே நான் எழுத விழைவதால் சுயநலத்துடன் சுருக்கி, இந்த தொகுப்பில் நைசாக டீசராக விட்டு வியாபார தந்திரமும் செய்து விட்டேன்.

    என்னதான் சொல்லுங்கள். ஒரு ஆணாதிக்க குறை பார்வை கொண்ட சமூகத்தில் ,ஒரு முழு திறமையான பெண்ணான அம்மாவின் இருப்பு சார்ந்த அன்னியமாதல் , அக்கால துன்பங்களையும் மீறி நூல் நிலையத்தில் எங்களை ஜெயகாந்தன்-ஜானகிராமன்-அசோகமித்திரன் என குறை வயதிலேயே தள்ளி, முறை சார் ஆதிக்க தினசரிகளில் சென்று உழன்ற சகலரிடம் இருந்து தீர்க்க-சமத்துவ-நட்பு பார்வை கொண்ட பெற்றோரால் விளைந்த புண்ணியங்களில் ஒன்று இந்த ஆட்டோ கிராப் .

    என்னை போல தேடலுள்ள அண்ணன் கிடைத்ததில் இவளுக்கு ஐந்து வருடங்கள் மிச்ச பட்டது.(எங்கள் வயது வித்யாசம்)தோளில் மீது ஏறி உலகம் பார்த்த அனுபவ பாத்யதை நற் கூறு .ஆனால் கண்ணை சுழற்றி பார்த்துள்ளார் நன்றாகவே.

    நெய்வேலி ஒரு சோஷலிச விந்தை. அறுபதுகளிலேயே ஒரே பள்ளியில் செல்வந்தரும்,குடிசை கோமான்களும் பயின்று ,ஜாதி-வித்தியாசமின்றி இணையும் சமத்துவ புரம். இது பார்வையை சீராக்கி வெறுப்புணர்வை சமன் படுத்தி சீராக்கும் அதிசயம். ஆனாலும் நிஜ புற உலகு ,பங்குனி உத்தர கருப்பு கண்ணாடியாகி பார்வையை திரையிட்டு விடும். இதனால் ஒரு தலை முறைகள்(சாதி சார்ந்த ,இனம் சார்ந்த ,மரபு சார்ந்த ),கோவேறு கழுதைகள் (புறம் தள்ள பட்டவனின் ஆதங்கம்,வெடிப்பு),மிதவை (குக்கிராமம்-நகர வாழ்வின் வெவ்வேறு விளிம்புகளின் முரண்பாட்டு அழகியல்) எங்களுக்கு கைவருமோ என்னவோ, ஒரு சமத்துவ இணைவு வாழ்வின் ,இழைவு அழகியல், பிற இழிவு அழகியல்களை வெற்றி கொண்ட எழுத்து எங்கள் ஊரின் தகைமைக்கு கிடைத்த வெற்றி. இரண்டுங்கெட்டான் வாழ்வு சமயத்தில் இரண்டையும் வென்ற அதிசயம்.

    எதை எழுதினாலும் ,பெரும்பாலான வாசகர்களை சென்றடைய ,அவர்களுடைய ரசனையுடன் சிறிதே, மதிப்பு கூட்டு அழகுணர்ச்சியுடன் ,அவர்களையும் ,உயர் ரசனை மனங்களுக்கும் இணைப்பு பாலமாய் விளங்க போகும் எழுத்தாக நிச்சயம் இது இருக்கும்.முக்கியமாக தலைப்பு தேர்வுகள். தெரிந்த பாடல்கள். வாசகர்களை சுண்டியிழுத்து உள் வாங்கும். ஆனால் அந்த கவிதையை ,தன எழுத்தின் திறத்தால் புதுமை படுத்தி,வாசக மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தும் அழகு அலாதி.

    சித்ரா ரமேஷ் ,தான் படித்த உயர் இலக்கியங்களை மீறி சாதிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் செயல் படாமல்,தன்னுடைய முழு திறனையும் ஒரே படைப்பில் வெளியிட வேண்டும் என்ற துடிப்பை அடக்கி, தன் ரசனை படி ,சராசரி வாசகர்களுக்கான வாசலையும் திறந்து விட்டு,ஒரு வெகுஜன இணைப்பு இலக்கியம் ரசிக்கும் படி தந்து, தனக்கு தெரிந்த அனைத்தையும் சிதற விடாமல்,கட்டு கோப்பாய் ,திட்டமுடன் செயல் பட்ட விதம் என்னை கவர்ந்தது.

    மித பெண்ணியம் என்பது ,நாங்கள்;நாங்களும் சக மனுஷிகள்,உங்களுடன் நட்பானவர்களே என்று ஆடவரை சிநேகத்துடன் கை கோர்த்து,அவர்களை அந்நிய படுத்தாமல்,பழசுக்கு பழி வாங்கும் உணர்வு கொள்ளாமல், அவர்களின் ஆணாதிக்கத்தை ,நட்பாதிக்கமாக்கும் சாதனை ,இந்த மாதிரி எழுத்துக்களுக்கே சாத்திய படும்.

    எனக்கு மட்டும் சகோதரியாக (என் சகோதரர்களுக்கும்)இருந்தவரை, பலருக்கும் சகோதரியாக மாற்றி விட்ட இந்த எழுத்தை இவ்வளவு சீராட்டும் பக்குவம் எனக்கு வந்து விட்டதா என்ன?

    அது சரி ,உலகத்துலேயே சிறந்த நடிகரின் பெயரை கோடி மட்டும் காட்டியதால்,அவர் உலகத்துலேயே சிறந்த நடிகர்தான் என்று காட்ட நான் ஒரு தொடரே எழுதி விட்டேன்.என்னையும் படைப்பிலக்கியம் எழுத தூண்டுகிறாள். (தூற்றவும் செய்கிறாள்).நிச்சயமாக செய்வேன். ஆனால் ஒரு கூட்டுக்குள் இருந்தவர்கள் என்று தெரிந்தவர்களை தவிர யாரும் யூகிக்க முடியாமல் பலவற்றை தந்து அவள் ஆசையை நிறைவேற்றும் எண்ணம் உண்டு.

    இந்த தொடரை தொடரவும், ஒரு முழு நாவல் எழுதவும் ஆசிரியருக்கு விண்ணப்பித்து ,இந்த புத்தகத்துக்கு முதலாசி கூறுகிறேன்.
    Last edited by Gopal.s; 29th May 2016 at 06:01 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  7. #2865
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....

    Bachelors Reach Beach to Teach....Love ! But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!

    காலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....!


    GG was then an eligible bachelor boy who wanted to become a Casanova type beach lover boy....but mostly ending with love failure making him eat beach 'thengaa maangaa pattaani sundal' eventually!!

    When love fails or love is lost in family...beach is the ultimate solace transforming the youth into philosophers!!
    Part 1 : Sumaithaangi....whence GG had to sacrifice love and to become the torch bearer for his family he goes to the edge of dejection...result...he teaches us the premises of life and the role of man as how to live even without love!!




    காதல் மன்னரின் நோதல் நிலை பொறுக்காத கலைநிலவு ஆறுதலுக்காக நாகேஷின் வழிகாட்டுதலில் விற்கிறார் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் !
    இதுவே பீச் தேசிய கீதம் !!



    இதைப்பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் தனது வழக்கமான ஹாய் ஹாய் பாணியில் கடற்கரை மணலிலே காதலியை ஏற்றிக்கொண்டு பைக்ரவுண்டு கட்டி ஜெமினி ரவியை வெறுப்பேற்றுகிறார் ஜேம்ஸ்பாண்டு ஜெய் !

    Last edited by sivajisenthil; 29th May 2016 at 08:14 PM.

  8. Likes Russellmai liked this post
  9. #2866
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....

    Bachelors Reach Beach to Teach....Love ! But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!

    காலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....!



    பகுதி 2 நடிகர்திலகம் with முத்துராமன் and தேவிகா!!

    தன்னுடைய காதல் பங்களிப்புக்காக முத்துராமனையும் இழுத்துக்கொண்டு கடற்கரை மணலில் நடந்து கடல் அலைகளை ரசித்து காதலியின் நினைவுகளில் திளைக்கிறார் நடிகர்திலகம் முத்துராமனோ எப்படா இவர் ரவியிடம் சுண்டல் வாங்கித் தருவார் என்று ஏங்கித் தவிக்கிறார் .....



    காதலி வந்தவுடன் முத்துராமனுக்கு ரவி ஸ்பெஷல் சுண்டல் வாங்கிக் கொடுத்து அவரைக் கழட்டிவிட்டு தேவிகாவை டாவடிக்கிறார் நடிகர்திலகம் ....சுண்டல் கிடைக்காத ஏமாற்றத்தில் கோபித்துக் கொண்டு வேகமாக நடந்து தப்பிக்க எண்ணும் தேவிகா நடிகர்திலகத்தின் கிண்டலால் தவிக்கிறார் !

    Last edited by sivajisenthil; 29th May 2016 at 08:15 PM.

  10. Thanks Russellmai thanked for this post
    Likes Russellmai liked this post
  11. #2867
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....

    Bachelors Reach Beach to Teach....Love ! But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!

    காலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....!



    பகுதி 3 What would GG and Muthuraman do when NT and Devika desperate them?


    தான் சுமைதாங்கியாக மாறியதும் தன்னைக் கழற்றிவிட்டு நடிகர்திலகத்துடன் அன்னை இல்லம் போக ரெடியாகும் தேவிகாவால் ஊரிலுள்ளவர் எல்லாம் தன்னைப் பார்த்து சிரிப்பதாகவும் குடும்ப உறவுகள் தன்னைப் பார்த்து அழுவதாகவும் மனம் வெதும்பிக் குமையும் ஜெமினி கடற்கரையில் அலைகள் ஆர்பரித்து மோதும் கடற்பாறைகளில் தாறுமாறாக எறி இறங்கி யார் சிரித்தால் என்ன இங்கு யார் அழுதால் என்ன என்று புலம்பித் தீர்க்கிறார் வாழ்க்கை பனித்திரையால் போர்த்தப் பட்டதே என்பதையும் போதிமரத்துப் புத்தராக உணர்ந்து கொள்கிறார் !




    தேவிகாவைக் கண்டதும் சுண்டல் தந்து நடிகர்திலகம் தன்னைத் துரத்திவிட்ட விரக்க்தியில் காஞ்சனாவுக்கு போன்போட்டு கடற்கரைக்கு வரச் சொல்லி அவர் ஆட்டத்தை ரசித்துப் பாடிப் பொழுது போக்குகிறார் மொத்துராமனார் !


    Last edited by sivajisenthil; 29th May 2016 at 10:15 PM.

  12. Likes Russellmai liked this post
  13. #2868
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    கடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா....

    Bachelors Reach Beach to Teach....Love ! But learn only to eat தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!

    காலாற நடப்போமே கடற்கரையிலே.... கட்டுவோமே கலைப்போமே மணல்வீடுகளை....... பொறுக்குவோமே கிளிஞ்சல்களை ...... மறப்போமே மனக்கவலைகளை..... அள்ளிவிடுவோமே தத்(துபித்)துவ முத்துக்களை...... சுத்துவோமே பீச் நடைக்குதிரையேறி .....அப்புறம் ....மெத்துவோமே தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை.....!


    Part 4....enters MT colorfully with Manjulaa in a ricksaw alongside the beach.....VijayaNirmala too sells elanthapazham on the beach to warm up lovers! What does GG in response...is the million dollar question pals!!

    இதுவரை நடந்ததெல்லாம் எதுவுமே தெரியாத மக்கள் திலகமோ கடலோரம் காற்றுவாங்க ரிக்ஷாவில் வருகிறார்....ரிக்ஷாவிலிருந்து மஞ்சுளாவின்கனவுக் கடலில் நுழைந்து நீந்தித் திளைக்கிறார்.....
    விஜயநிர்மலாவோ கடற்கரை மணலில் இலந்தப் பழம் வித்து காதல் சூடேற்றுகிறார்....... இன்னும் வெறுபபாகிறார் ஜெமினி....... பைக்கில் காதலியோடு சுற்றும் தம்பி ஜெய்க்கும் புத்திபுகட்ட தானும் ரிக்ஷாவில் ஏறி சவாரிக்கு ஆளேயில்லாமல் தனியாகவே தத்துவப் பாட்டுப் பாடி புலம்பித்திரிகிறார் !









    THE END OF BEACH SCENES WITH A BONUS FROM JAMES BOND/SEAN CONNERY WITH URSULA ANDRESS IN DrNO!



    Now we understand why our local King of Romance Gemini Ganesan often fails in his love while the Global Emperor of Romance Sean Connery's James Bond OO7 with guns and gadgets always wins the love of girls!!
    Last edited by sivajisenthil; 29th May 2016 at 10:29 PM.

  14. Likes Russellmai, chinnakkannan liked this post
  15. #2869
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    கடற்கரை மணலில் நடப்போமா ...கதைகதையாகப் படிப்போமா.... // அதுக்குள்ள முடிச்சுட்டீங்க சி.செ.. நன்னாயிட்டு இருந்தது..

    சரி..என்பங்குக்குஒரு பழைய இடுகை..

    *

    சுனாமி போலத் தான்
    இருந்ததடா உன் வருகை..

    விமான நிலையத்தில்
    ஓ..ரொம்ப வெயில்லில்லை
    எனச் சொல்லி
    குளிர்கண்ணாடியைக் கழட்டி
    என்னைப் பார்த்த உன் கண்கள்..

    பின் கேட்ட கேள்வி..
    ஏன் இளைச்சுப் போய்ட்ட..
    உன் டாட் வந்திருக்காரா..

    பின் காரில்
    உடமைகளை ஏற்றி
    வீடு செல்லும் வரை
    உன் வேலை முதல்
    உன் குடியிருப்பில் இருக்கும்
    ஓமானியக் கன்னிகை வரை
    வாய் வலிக்க வலிக்கச் சொன்னது...

    அப்பாவிடம்
    ஹாய் டாட் என நமஸ்காரம் பண்ணி
    அம்மாவிடமும் கை குவித்து
    பாவ் சூ பண்ணட்டுமா ஆண்ட்டி..
    எனச் சொல்லிக் கால் தொட
    அம்மா கூச்சப் பட்டது..

    மாடியில் உன்னறை எனக் காட்டிய போது
    ஷ் என்னடா இது கழுத்தில..
    என்னவெனத் தெரியாமல் நான் திகைக்க
    பட்டென அணைத்துக் கொண்டது..

    நான் திமிறி
    ப்ளீஸ் விடுப்பா..
    எனக்கு லீவ் நாள் எனச் சும்மாச் சொல்ல
    ஸாரிடா ஸாரிடா என நீ கொண்ட பதற்றம்..

    பொய் எனச் சொல்லலாமா எனத் தவித்து
    நான் இறங்கி என்னறைக்குச் சென்றது..

    பின் கழிந்த இரு நாட்கள்..
    பேல் பூரின்னா மும்பை தான் டாட்
    ஆண்ட்டி வெங்காய சாம்பார் பிரமாதம்..
    சென்னை வாங்க
    கச்சேரி ரோட்ல ஒரு ஹோட்டல்
    கூட்டிப் போறேன்..
    அப்புறம் நீங்க பாடுவீங்களாமே
    எனக்கு மலய மாருதம் பிடிக்கும்
    கண்ணனே நீவர்க்காத்திருந்தேன்..
    டாட்..நீங்க அந்த ஷேர்ஸ் வாங்குங்க
    கண்டிப்பா கூடும்..
    என
    திறந்துவிட்ட குழாயாய் சளசளவெனப் பேச

    அம்மா என்னிடம்
    என்னடி இது என்னை ஆண்ட்டிங்கறான்
    உங்கப்பாவை டாட்ங்கறான்
    எனத் திகைத்தது..

    பின் மறுபடி ஏர்போர்ட் செல்லும் வரை
    என்னுடன் தனிமையைத் தவிர்த்தது..

    நான் தான் உன்னை வம்படியாகத்
    தனிமையில் இழுத்தேன்..
    ஏய்..என்னது இது..
    போடா..சும்மா சொன்னேன்..
    சும்மாவா சொன்னே சும்மாவா சொன்னே
    .
    பின் வலித்த கன்னம்..

    சென்னைல ரெண்டு நாள் ஆபீஸ்வேலை
    முடிச்சுட்டு ஸ்டெரெயிட் மஸ்கட்..
    எனிவே மூணுமாசம் கழிச்சு வரணும்ல
    கல்யாணத்துக்கு..
    இருக்கவே இருக்குவெப்காமரா..
    காண்டாக்ட் பண்றேன்..
    ச்சீ சீ..என்னது இது..
    பச்சப் புள்ளயாட்டமா..
    டாட் ஆண்ட்டி சொல்லப்படாதா
    எனச் சொல்லிக் காட்டிய டாட்டா..

    சுனாமி தாண்டா நீ..
    போய்விட்டாய்..
    என் நினைவுகளில் தடங்களைப்
    பதித்து விட்டு

    **


  16. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  17. #2870
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Dear Rajesh,

    My heartfelt condolences. May her soul rest in peace.

    Regards

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •