Results 1 to 4 of 4

Thread: வேகமா ? விவேகமா?

Threaded View

  1. #2
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Location
    Chennai
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த பட்டன் விரலுக்கு பக்கத்திலே இருக்கிறதாலே, பின் விளைவை நினைக்காமல், கோபத்திலே கண்டபடி எழுதி, பட்டனை தட்டிவிட்டு , "ஐயோ கொட்டிப்போச்சே, அள்ள முடியாதே !" அப்படின்னு அல்லலுறும் எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன் . அதிலே நானும் ஒருத்தன்.


    அவசரப்பட்டு அமுக்கி விட்டு, தானும் வருந்தி, மற்றவரையும் வருத்தி, வம்பில் மாட்டிக் கொள்ளும் வல்லமை உள்ளவருக்கே இந்த கதை..

    மகாத்மா காந்தி சொன்ன கருத்தை 'வாழ்க வளமுடன்' - வேதாத்திரி மகரிஷி தமிழில் சொன்னது

    “எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
    ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.

    சொல்லில் கவனமாய் இருங்கள்;
    ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.

    செயலில் கவனமாய் இருங்கள்;
    ஏனெனில் செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.

    பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
    ஏனெனில் பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.

    ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
    ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!”



    ******
    Last edited by Muralidharan S; 27th January 2016 at 02:31 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •