Page 130 of 390 FirstFirst ... 3080120128129130131132140180230 ... LastLast
Results 1,291 to 1,300 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Hybrid View

  1. #1
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Sekar Parasuram


    நாங்கள் கலந்து கொண்ட விஜய் டிவியின் நீயா நானா மீது கடும் விமர்சனங்களை நம நண்பர்கள் வைத்த வண்ணம் உள்ளனர்,
    நிகழ்ச்சியை பற்றி நண்பர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர்கள் செய்த அவசரப் பதிவு அதுதான் திசை திருப்பி விட்டு விட்டது,
    ஒரு புறம் அவைகள் இருக்கட்டும்
    நிகழ்ச்சியில் இடம் பிடித்த சுவாரஸ்யமான சம்பவங்களில் இருந்து
    எம்ஜிஆர் இன காதல் பாடல்களில் கூட அவரின் கொள்கையை வலியுறுத்துவார் என உயர்த்திப் பேசிய எதிரணியினருக...்கு சரியான பதிலைக் கொடுத்தார் எழுத்தாளர் நாஞ்சில் இன்பா அவர்கள்
    அதாவது காதல் பாடல்களிலும் கூட ஒரு கண்ணியத்தை கடைப் பிடித்தவர் நடிகர் திலகம் உதாரணமாக " நீரோடும் வைகையிலே" பாடல் வரிகளை மேற்கோள் காட்டியதும் கரவொலி பறந்தது,
    தொடர்ந்து எம்ஜிஆர் இன் ரசிகர்கள் பேசுகையில் உரிமைக் குரல் பாடலான " விழியே கதை எழுது" வை உதாரப் படுத்தி இந்த ஒரு பாடலுக்காக மட்டுமே படம் வெள்ளி விழா கண்டது இந்தப் பாடல் அளவிற்கு எந்தப் பாடலுக்கும் செட் அமைக்கவில்லை என்றனர்,
    இதற்கு பதிலளிக்கும் விதமாக நானும் கான் சாரும் ஒரு சேர முயன்றோம் அதாவது பின்னர் வந்த நடிகர் திலகத்தின் அந்தமான் காதலியின் ஜேசுதாஸ் பாடலே அந்தப் பாடலை முறியடித்து சாதனை படைத்தது "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா" இந்தப் பாடல் காட்சி தத்ரூபமாக அமைக்கப் பட்டிருக்கும், நடிகர் திலகம் பாடல்களுக்கு பிரமாண்டமான செட்கள் தேவையே இல்லை, அவரின் நடிப்பு மட்டுமே பிரதானம், மேலும் இன்றைய தலைமுறையினர் கூட நடிகர் திலகம் பாடல்கள் என்றால் வீடியோ விசூவல் மற்றும் ஆடியோவையும் விரும்புகிறார்கள், ஆனால் எம்ஜிஆர் பாடல்களைப் பொறுத்த அளவில் ஆடியோவை மட்டுமே விரும்புகிறார்கள் என்றதும் கோபிநாத்தும் கூட மைக்க வாங்கிச் சொல்லுங்க என்றார்
    எங்களின் இந்த இந்தப் பேச்சை பதிவு செய்ய மைக் எங்கள் கைகளுக்கு வரவே இல்லை, உரக்க சொன்னது பதிவு ஆகாமல் போனது துரதிருஷ்டவசமாகவே போனது,
    மேலும் கூட
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Jayasankar Jai




    உத்தம புத்திரன்.


    1978 ஆம் வருடம் தீபாவளிக்கு நான்
    சென்னையில் இல்லை.ஒரு விஷேச
    குடும்ப நிகழ்ச்சிக்காக உறவினர் கிராமத்திற்க்கு சென்று அங்கேயே
    தீபாவளி கொண்டாடுவது என்று முடிவு...
    செய்து ஊருக்கு வந்தாகி விட்டது.
    எணக்கு தீபாவளிக்கு சிவாஜி படம்
    பார்க்க முடியவில்லையே என்று கோபம்.
    யாருடனும் பேசாமல் தனித்து இருந்தேன்.
    உறவினர் அந்த ஊரில் இருந்த என் வயது
    பையன்களிடம் என்ன அறிமுகப்படுத்தினர்.
    அவர்களும் நான் சென்னையில் இருந்து வந்திருந்ததாலும் என்னுடைய நடை உடை
    பாவனைகளை பார்த்து என்னிடம் தயக்கத்துடனே பழகினர்.அப்போது காற்றில்
    பாடல் ஒலித்தது என்ன என்று கேட்டேன்.
    டூரிங் தியேட்டரில் படம் போடுவதற்க்கு முன்
    பாடல் போடுவார்கள் என்று கூறினர்.
    என்ன படம் என்றேன் உத்தம புத்திரன்
    என்றனர்.உடனே வீட்டில் சொல்லி விட்டு
    கிளம்பி விட்டோம் ஏற்க்கனவே சென்னையில் என் நண்பர்கள் அப்படத்தை
    பார்த்து விட்டு என் மனதில் ஆசையை
    ஏற்படுத்தி இருந்தனர். தீபாவளிக்கு
    சிவாஜி படம் பார்க்க போகிறோம் என்ற
    மகிழ்ச்சியுடன் இரட்டிப்பு சந்தோஷத்துடன்
    படம் பார்த்தேன். ஆஹா என்னபடம்
    என்ன ஸ்டைல் என்ன நடிப்பு இரு வேடங்கள்
    விக்ரமன் பார்த்திபன் என இரு கதாபாத்திரங்கள் வழக்கமான ராஜா ராணி
    கதை ஒருவர் நல்லவனாகவும் மற்றவர்
    தீயவனாகவும் வளரும் சூழ்நிலை.
    விக்கிரமனாக வரும் நடிகர் திலகம்
    ஸ்டைலாக பேசும் வசனங்கள் பெரும்
    கைதட்டல்பெற்றது. யார்டி நீ மோகினி
    பாடலுக்கு டூரிங் தியேட்டரே ஆடியது.
    விக்கிரமா நீ அவனை போல் இருக்கிறாய்
    என்று நம்பியார் சொன்னதும் இல்லை
    இல்லை அவன்தான் என்னை போல்
    இருக்கிறான் என்று ஸ்டைலாக சொல்லி
    கைதட்டலை அள்ளுவார். மாமா என்று
    அவர் நம்பியாரை அழைப்பதும் நளினமே.
    பார்திபன் மேல் பரிதாபம் வருவதும்
    விக்கிரமன் மேல் ஆத்திரம் வந்தாலும்
    அதை மீறி ஆசை வருவதும் சிவாஜியின்
    நடிப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
    அந்த ஊரில் ஒரு வாரம் இருந்த
    வரை நான் தினமும் படம் பார்க்க சென்று
    விடுவேன் அங்கிருந்து நண்பர்களுடன்.
    அதனாலேயே நான் பிரபலமாகி விட்டேன்
    அந்த ஊரில்.அந்த காலங்களும் அதன்
    நினைவுகளும் பசுமையானவை.
    என்றும் இதயத்தை விட்டு நீங்காதவை.
    அன்றும் இன்றும் என்றும் சிவாஜி
    அய்யா நினைவில்.
    See more



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #3
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Sekar Parasuram


    வசந்த் தொலைக்காட்சி யில் 2pm க்கு
    அந்தமான் காதலி




    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #4
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Sundar Rajan









    Sundar Rajan


    மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
    ஒரு ஆங்கில இதழ் 1950 முதல் 1960ல் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் தகுதியுடையவர்களில் தமிழில் நமது நடிகர்திலகம் அவர்கள் டாப்பில் இருந...்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.
    நடிகர்திலகம் இருந்தவரை கலையுலகில் முதல் இடத்தில் இருந்தவர்,
    இப்போதும் இருப்பவர். இனி யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது ,
    நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு அடுத்து தான் எவரும் வரமுடியும் என்பது உலகநியதி.
    ஆனால்,
    அரசியலில் பாருங்கள்,
    கூகுளில் Tamilnadu ChiefeMinister list என search செய்தால்,
    முதலமைச்சர் படங்களின் வரிசையில் எம்ஜிஆர் அவர்களின் படம் எந்த இடத்தில் உள்ளது என பாருங்கள்.
    இன்று வரை கலையுலகில் சிவாஜி அவர்களை மிஞ்ச எவரும் இல்லை, இனி பிறக்கப் போவதும் இல்லை.
    ராஜா திரைப்படத்தில்
    நடிகர்திலகம் அவர்கள் சொல்லும் வார்த்தை ராஜான்னா ராஜா தான்,
    ஆம் சிவாஜின்னா சிவாஜி தான்.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #5
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Murali Srinivas

    1972 ஆகஸ்ட் - நடிகர் திலகம் நினைவலைகள்

    1972 ஆகஸ்ட். இன்றைக்கு சரியாக 45 ஆண்டுகளுக்கு முன்றைய காலம்.தமிழகத்தின் அரசியல் களத்தில் பரபரப்பான காட்சிகள் அரேங்கேறி கொண்டிருந்த நேரம் . மக்கள் மனதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பெருந்தலைவரின் வழிகாட்டுதலை அவர் தலைமையை மீண்டும் தமிழகம் ஏற்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த மாற்றம் வருங்கால தூண்களாகிய இளைஞர் சமுதாயத்திடமிருந்து துவங்கியதுதான்.
    இப்படி சொல்வதற்கு காரணம் என்னவென்றால் அன்றைய நாள் தமிழகத்தில் [1972] செயல்பட்டுக் கொண்டிருந்த 172 கலை அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் 146 கல்லூரிகளில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பு மாணவர்கள் தலைவர் பதவியை கைப்பற்றினார்கள். இவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதோடு அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மற்றும் c. தண்டாயுதபாணி அவர்களின் சீரிய வழிகாட்டலில் பொறுப்பேற்ற நேரம்.
    அண்ணாமலை பல்கலைகழக மாணவர் தலைவர் உதயகுமார் வன்முறையாளர்களால் 1971 ஜூலை மாதம் (23-ந் தேதி என்று நினைவு) உயிரிழந்தார் [அரசியல் பேச வேண்டிவரும் என்பதனால் அதற்கு உள்ளே செல்வதை தவிர்க்கிறேன்]. அவர் மரணம் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருந்தது. 1972 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்த வெள்ளி விழா ஆண்டு. அதை கொண்டாடும் வகையில் 1972 ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. அதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து என்று நினைவு. அந்த விசாரணை கமிஷனின் அறிக்கை சட்டமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போல் யார் மீதும் குற்றமில்லை என்ற வகையில்தான் அறிக்கை அமைந்திருந்தது. ஆனால் அந்த மாணவனின் உயிர் தியாகம் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும். அந்த மாணவர் சக்தி அளவிடப்பட முடியாத சக்தியாக திகழ்ந்தது என்பதும் உண்மை. நேதாஜி, தண்டாயுதபாணி மற்றும் குடந்தை ராமலிங்கம் போன்ற மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணவர் மற்றும் இளைஞர்களை வழி நடத்தி சென்ற முறை பாராட்டுக்குரியது. நேதாஜி போன்ற துணிவு மிக்க மாணவர் தலைவர் இருந்ததனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் அராஜக தாக்குதல்களெல்லாம் வெளி வந்தன. அது இப்போது நாம் பேசும் நிகழ்வு நடந்து முடிந்த பிறகே நடந்தது என்பதால் அதை இப்போது விட்டு விடுவோம்.
    தமிழகமெங்கும் இப்படி எழுச்சி கோலமாக நமது சக்தி ஆர்ப்பரித்து வரும் நேரம் அந்த மாணவர் சக்தியை ஒருமுகப்படுத்தி மேலும் எழுச்சி பெறும் வண்ணம் மாணவர் காங்கிரஸ் மாநாடு சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் 1972 ஆகஸ்ட் 26,27 சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இரண்டாம் நாள் மாலை நடிகர் திலகம் உரையாற்றுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனை ஒரு இமாலய சாதனையாக மாறிக் கொண்டிருந்த நேரம். அதைப் பற்றிதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
    பாபு முதல் பட்டிக்காடா பட்டணமா வரை தொடர்ந்து இமாலய வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்திற்கு கண் பட்டதோ என்று எண்ணும் வண்ணம் ஜூலையில் வெளியான தர்மம் எங்கே எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு தவப்புதல்வன் செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் திரைக்கு கொண்டு வருவதற்கு முக்தா ஸ்ரீநிவாசன் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார் என்பதை பற்றியும் வசந்த மாளிகையை பொறுத்தவரை அது நவம்பர் 4 தீபாவளியன்று வெளிவரும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்மம் எங்கே அது பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனபோது தன்னுடைய படத்தை முன்கூட்டியே வெளியிடுவதற்கு முயற்சி எடுத்த முக்தா. VC சண்முகம் அவர்களிடம் பேசி ஆகஸ்ட் 26 அன்று வெளியிடுவதற்கு சம்மதம் வாங்கி விட்டார்.தர்மம் எங்கே வெளி வந்த ஜூலை 15 தொடங்கி 6 வார இடைவெளியில் தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 அன்று வெளியாவதாக விளம்பரம் வருகிறது.
    படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னால் நடிகர் திலகத்தை ஈன்றெடுத்த அன்னை ராஜாமணி அம்மையார் உடல்நலம் குன்றுகிறார். அவருக்கு அன்னை இல்லத்தில் வைத்தே மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வியாழன் மாலை உடல்நிலை கவலைக்கிடமான சூழலுக்கு செல்கிறது. அன்று மாலைதான் சௌகார் ஜானகி அவர்களின் மகளின் திருமண வரவேற்பு [ஆபட்ஸ்பரி அரங்கம் என்று நினைவு] நடைபெறுகிறது. சௌகார் வீட்டு திருமணம் என்பதனாலயே அதை தவிர்க்க முடியாமல் அங்கே சென்று விட்டு சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று சொல்லும் சௌகாரிடம் மட்டும் உண்மை நிலவரத்தை சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து திரும்பி வருகிறார் நடிகர் திலகம். தாயின் அறையிலேயே அவர் கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்றிரவு ராஜாமணி அம்மையாரின் உயிர் பிரிகிறது. நெஞ்சை பிளக்கும் சோகம் நடிகர் திலகத்தை தாக்குகிறது. இறுதி ஊர்வலத்தின்போது பல முறை அவர் மூர்ச்சை ஆகி போகிறார்,
    தாயார் இறந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை என்பதனால் நடிகர் திலகம் மாநாட்டிற்கு வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அவரிடம் வருகிறீர்களா என்று கேட்க கூட யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் யாரை உயிருக்கு மேலாக மதித்தாரோ யார் பெயரால் தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தாரோ அந்த தாயை விட தான் சார்ந்துள்ள இயக்கம், தான் ஏற்றுக் கொண்ட தன்னலமற்ற தலைவன், தன்னை உயிரென நேசிக்கும் மாணவர் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குதான் பெரிது என்று நினைத்த நடிகர் திலகம் 27-ந் தேதி ஞாயிறு மாலை மாநாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றியதுடன் மட்டுமல்லாமல் மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் இலக்கு என்ன, எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார். வெள்ளமென திரண்டிருந்த வீரர் கூட்டம் அன்றைய துக்க சூழலிலும் தங்களை தேடி வந்த நடிகர் திலகத்தை ஆவேசபூர்வமாக வாழ்த்தி வரவேற்றது. இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் நிகழ்வுகள் அவை. அந்த நிகழ்வுகளின் புகைப்படங்களை இணைத்துள்ளேன்.
    இனி தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகளை அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.
    அன்புடன்


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #6
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Abdul Razack

    நீயா? நானா? பாகம்.3....... இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபராப்பாகும் என்று பல அன்பர்கள் முகநூல் வாட்ஸ்அப் அலைபேசி வாயிலாக கேட்கிறார்கள் நானும் இது சம்பந்தமாக விஜய் TVயில் என்னை அழைத்த நண்பர்க்கு போன் செய்து கேட்டேன் அவர் நம்மை விட மிகதீவிர சிவாஜி ரசிகராக இருப்பார் போலே ! நாமெல்லாம் சிவாஜி படம் பார்ப்போம் அவர் பேசும் வசனங்கள் பேசுவோம் அதன்படி நடக்கமாட்டோம் ஆனால் இவரோ ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் நம்பியாரிடம் பணம் வாங்கும் போது சிவாஜி சொல்லுவார் எனக்கு நாக்கு ஒன்னு வாக்கும் ஒன்னுதான் என்று அதை இவர் அப்படியே பின்பற்றுகிறார் நான் கேட்கும் நேரம் எல்லாம் இரண்டுவாரத்தில் ஒளிபராப்பாகும் என்றுதான் சொல்லுகிறார் வேறு வாக்கு மாறாமல் ...சரி நிகழ்ச்சி காதல் பாடல்கள் என்று சொன்னவுடன் இரண்டு பக்கமும் மகிழ்ச்சியாக இருந்தது இருவரது சிறப்புகளையும் சொல்லுங்கள் என்று கோபிநாத் சொன்னார் அதுவரையிலும் யாரும் யாரையும் குறைவாக சொல்லாமல் நிகழ்ச்சி போய்கொண்டு இருந்தது இந்த இடத்தில் ஒரு ரசிகர்எம் ஜி ஆர் பாடலில் சோதனைமேல் சோதனை என்று பாடி நம்மை பயமுறுத்தமாட்டார் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்பார் அடுத்து எங்கே நிம்மதி என்று புலம்பமாட்டார் உலகம் பிறந்தது எனக்காக என்பார் என்று அப்பட்டமாக சிவாஜி பாடல்களை குறைத்து சொன்னார் இதை கோபிநாத் கண்டிக்கவில்லை அந்த அணியில் உற்சாகம் நம் பக்கம் சிறிது கோபம் ,..அந்த ரசிகர் அடுத்து ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ என்று பாடமாட்டார் எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைபோலவே இருப்பான் என்றதுதான் தாமதம் நம் அணியிலிருந்து ஒரு குரல் புறப்பட்டது எனக்கு மகன் பிறந்தால் அவன் என்னைப்போல்தான் இருப்பான் அதைவிட்டு பக்கத்து வீட்டுக்காரன் எதிர் வீட்டுகாரன் போலா இருப்பான் குடும்பத்தில் பிரச்சனை வராதா? என்று கேட்டவுடன் நம் பக்கம் குபீர் சிரிப்பு எதிரில் அசட்டு சிரிப்பு கோபிநாத்துக்கோ குலுங்கி குலுங்கி சிரிப்பு அவர் போய் நீங்கள் சிவாஜியை குறைத்து மதிப்பிட்டால் அதலா பாதாளத்தில் மாட்டி கொள்வீர்கள் என்று மைக்கை வாங்கி அடுத்தவரிடம் கொடுத்தார் அவர் திறமையாக பேசினார் எம்ஜிஆர் நடிகன் என்பதற்கு முன்னால் ஒரு நல்ல ரசிகர் அவர் ரசிப்பதைதான் ரசிகனுக்கு கொடுப்பார் அதை அவன் ஏற்றுகொள்வான் ஒரு பாடல் ஆசிரியர் இசைஅமைப்பாளர் அவர்களிடம் இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்குவார் என்று எம்ஜிஆரின் ஆளுமை என்று சொன்னார் அது சமயம் என் மனதில் மின்னலாக இரண்டு விடயம் ஞாபகம் வந்ததது எம் ஜி ஆர் ரசிகர்கள் அடிக்கடி இன்றும் சொல்லுவார்கள் தலைவரிடம் ஓருவன் அனுசரனையாக போனால் அவனை வளர்த்து விட்டு அழகு பார்ப்பார் எதிர்த்தால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிவிடுவார் என்று சொல்லுவார் எனது பதிவுகளை எம்ஜிஆரின் ரசிகர்களும் படிக்கிறார்கள்அவர்களுக்கும் தெரியும் எதிர்த்து வளராமல் போன கவிஞர் ஆலங்குடி சோமு ஆம்...... சொர்க்கம் படத்தில் பொன் மகள் வந்தாள் என்றபாடலை எழுதியவர் அவரின் சொந்த ஊர் காரைக்குடியில் இருந்து சிவகங்கை போகும் வழியில் இருக்கும் ஆலங்குடி என்ற கிராமம் என் அத்தா(அப்பா)விற்கும் அது தான் சொந்தஊர் இன்று கூட எங்கள் உறவினர்களில் வயதானவர்கள் என்னையும் என் சகோதரர்களையும் ஆலங்குடியான் மகனாடா என்றுதான் கேட்பார்கள் என் அத்தாவும் ஆலங்குடி சோமுவும் சிறு வயதில் ஒன்றாக படித்த நண்பர்கள் என் சிறு வயதில் சோமு அவர்கள் எழுதிய கடிதம் எல்லாம் எங்களிடம் காட்டி உள்ளார் அந்த ஆலங்குடி சோமு ஒருகால் சற்று விந்தி விந்தி நடப்பவராம் அவர் எம்ஜிஆர் நடித்த புதியபூமியில் நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை என்ற பாடலை எழுதிகொண்டு இருக்கும் போது எம்ஜிஆர் அவரிடம் பாடலில் இந்த வரிகளையும் சேர்த்து கொள்ளுங்கள் என்றாராம் அதற்கு சோமு என் வேலை நான் சரியாக செய்கிறேன் அண்ணே என்றாம் அப்போ நான் சரியாக செய்யவில்லையா என்று எம்ஜிஆர் நினைத்துஅந்த கவிஞரை ஓரம் கட்டிவிட்டாராம் இதை ஆலங்குடி சோமு என் அத்தாவிடம் சொல்லி அதை எங்களிடம் சிறுவயதில் என் அத்தா சொல்லி இருக்கிறார் தவறோ சரியோ அந்த ஆளுமை எம் ஜி ஆரிடம் இருந்தது உண்மைதான் என்று பல சம்பவங்கள் நமக்கு ஞாபகபடுத்தும் இது போன்று நமக்கும் வந்துவிடக்கூடாது என்று கவிஞர்களும் இசைப்பவர்களும் அவரின் வார்த்தைகளை ஏற்றுகொண்டார்கள் இது போன்று எம்ஜிஆரின் சிறப்புகளை வேறு சிலரும் சொன்னபின்பு நம் பக்கம் மைக் வந்ததது முதலிலே நான் பதிவில் சொல்லி இருப்பேன் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது ஒரு பெண்மணி வந்தார்கள் என்று அவர்கள் செட்டிநாட்டு ஆச்சி சிவாஜியின் படங்களையும் ஏற்று நடித்த பாத்திரங்களையும் சொல்லசொல்ல அவ்வளவு அற்புதமாக இருந்தது அவர் சொன்னது சிவாஜி வெளி ஆள் இல்லை நம் குடும்ப உறவுமுறையில் என்னென்ன இருக்கிறது அப்பா,,அண்ணன்,தம்பி ,தாய்மாமன்,சித்தப்பா.பெரியப்பா,மச்சான் நண்பன் தாத்தா என்று பல உறவுமுறைகளே அவர் மூலமாகத்தான் பெருமை அடைந்தது அந்த உறவில் உள்ளவர்கள்கூட நாமும் அப்படி இருக்க வேண்டும் ஏங்கவைத்தது என்று மணிமணியாக வர்னித்தார் அது சமயம் எதிர் அணியினர் தங்களுக்குள்பேசிகொள்ளாமல் அந்த ஆட்சி அவர்களின் பேச்சையே உன்னிப்பாக கேட்டார்கள் இங்குதான் இருக்கிறது சிவாஜியின் வெற்றி அவரை பிடிக்காதவர்கள் கூட சில வினாடிகள் அவரின் படத்தை பார்த்தால் தங்களை மறந்துவிடுவார்கள் எம் ஜி ஆர் தன் ரசிகர்களுக்கு அவர்கள் விரும்பியதை கொடுத்து வெற்றிபெற்றார் ஆனால் சிவாஜி தான் கொடுப்பதை மக்களையும் ரசிகர்களையும் ஏற்றுக்கொள்ளவைத்து வெற்றி பெற்றார் யார் சிறந்தவர் என்பதை உங்கள் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்,,,தொடர்ச்சியை இரவு பதிவிடுகிறேன் என் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரவேண்டும்,,,,.



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #7
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    கலைக்கதிரவன் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்

    123 வது வெற்றிச்சித்திரம்


    எங்க ஊர் ராஜா வெளியான நாள் இன்று




    எங்க ஊர் ராஜா 21 அக்டோபர் 1968

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #8
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    Abdul Razack‎

    நீயா? நானா? 3 ...

    தொடர்ச்சி

    அந்த ஆச்சிஅவர்கள் பேசி முடித்த பின் நண்பர் நாஞ்சில் இன்பா அவர்கள் சிறப்பாக பேசினார்கள் முக்கியமாக என் ஊர் குமரி மாவட்டம் அங்கு எங்கள் ஊரில் சிவாஜியை தவிர வேறு நடிகர்களுக்கு ரசிகர்களேஇல்லை என்று பலத்த கைதட்டலோடு பேசி முடித்தார் உடனே எதிர் அணியில் மைக் சென்று காதல் பாடல்கள் நல்லநல்ல பாடலாக பாடினார்கள் தொட்டால் பூ மலரும் .பச்சைக்கிளி முத்துச்சரம்,சந்திரரோதயம் ஒரு பெண்ணானதோ ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என்று இனிம...ையான பாடல்கள் அந்த மேடைபாடகர்கள் குரலில் இடம் பெற்றன அது சமயம் நம் அணியில் இருந்த மஞ்சள் சேலை சகோதரி நம் குழு ஆண்களை பார்த்து சார் சிவந்த மன் படத்தில் வரும் ஒரு ராஜா ராணியிடம் என்ற பாடலை நான் பாடுகிறேன் என்னோடு சேர்ந்து யாரவது ஆண் குரலில் பாடினால் நல்லா இருக்கும் யாராவது பாடுங்கள் சார் என்று பல முறை கேட்டார் நம்மில் யாரும் சரி என்று சொல்லவில்லை நான் உள்பட அங்கு பாட்டிற்கு விளக்கமும் கொடுத்தார்கள் அதில் ஒரு ரசிகர் ஆர்வகோளாறில் எம்ஜிஆரின் காதல் பாடல்கள் நமக்கு உணர்ச்சியை வரவழைத்து உச்சத்துக்கு கொண்டுபோகும் என்று பெருமை படுத்துவதாக நினைத்து சிறுமை படுத்தினார் அந்த பக்கம் இருந்தபெண்களே முகம் சுழித்தார்கள் அங்கு இருந்த மைக் இந்த பக்கம் வந்ததது இங்கும் அருமையான பாடல்கள் மயக்ம் என்ன இந்த மெளனம் என்ன பூ மாலையில் ஒர் மல்லிகை மதன மாளிகையில் மந்திரமாலைகளா நீரோடும் வைகயிலே நின்றாடும் மீனே பொன்னை விரும்பும் பூமிலே என்னை விரும்பும் ஒர்ருயிரே அமைதியான நதியினிலே ஓடும் .. .ஒரு சகோதரி நாளை இந்த வேளை பார்த்து ஒடிவா நிலா என்று பாடினார்கள் அதை கேட்டுகொண்டிருந்த கோபிநாத் நல்லபாடல்கள் பாடுகீறீர்கள் ஆனால் ராகம் வரவில்லை என்று கூறியவர் ஆண்டவன் கட்டளை அமைதியான நதி பாடலை இழுத்து பாடுங்கள் என்றார் தென்னை இளங்கீற்றினிலேலலலலலலலலலலலலால இவ்வளவு தூரம் யாரும் இழுக்கவில்லை பாடகர் TMS அவர்களே சொல்லுவார் நான் எம்ஜிஆர்க்கு மேலோட்டமாக பாடினால்தான் நல்ல இருக்கும் சிவாஜிக்கு அடி வயிற்றில் இருந்து பாடுவேன் அப்பதான் அவர் உடல்மொழிக்கு சரிவரும் என்று சொல்லி இருக்கிறார் அது புரியாமல் கோபிநாத் நம்மை பாடசொல்கிறாரே என்று மற்றவர்களும் நினைத்தார்கள் இப்படி தெரிந்து இருந்தால் அடுத்த வீட்டு பெண் படத்தில் தங்கவேலுக்கு TR ராமசந்திரன் பின்னால் இருந்து பாடுவார் அதேபோல் நாம் வாய் மட்டும் அசைத்து பின்னாடி யாரையும் பாட சொல்லலாமா என்று நினைத்தேன் நிகழ்ச்சி இப்படி போய் கொண்டு இருக்கும் போது கோபிநாத் இரண்டு பக்கமும் சிறந்த பாடல்கள்தான் வந்து இருக்கின்றன நீங்கள் இரு தரப்பினரும் ஏன் சண்டை போடுவது மாதிரி பேசிகொள்கிறீர்கள் அமைதியாக இருங்கள் நீங்கள் சண்டை போட்டாலும் அவர்கள் இருவரும் அண்ணன் தம்பி என்று ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள் இன்று இருவருமே இறந்துவிட்டார்கள் அவர்கள் இருவரின் பாடலையும் மேடையில் ஒரே பாடகர் தான் பாடுகிறார்கள் என்று பேசிவிட்டு தற்போது பிரேக் உணவு இடைவேளை என்று புறப்பட்டார் நாங்களும் அரங்கில் இருந்து வெளியே வந்தோம்.......தொடரும்,






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #9
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    ‎Ghovi Veer‎





    ஒரு முறை இணை இயக்குனராகப் பல படங்களில் பணியாற்றிவர் என்னிடம் கூறினார். ஒவ்வொரு நடிகருக்கும் கேமரா கேரணம் என்று ஒன்று இருக்கும். அதை மாற்றி படம் எடுத்தால் அவர்கள் முகத்தைத் திரையில் பார்க்க முடியாது. ஆனால் சிவாஜி ஒருவருக்கு மட்டும்தான் எந்தக் கோணத்திலும் காமராவை வைத்து படமெடுக்க முடியும். எந்தக் கோணத்திலும் அவர் முகம் அழகாகவே இருக்கும். திரைப்படங்களுக்காகவே பிறந்த கலைவாணியின் செல்லக் குழந்தை சிவாஜி என்று கூறியதுடன் டைட் குளோஸப் எடுக்கு் போது முகம் மட்டும் காமெராவில் உணர்ச்சிப் பிழம்பாக இருக்கும். வெளியே ரிலாக்ஸ்டாக காலை சர்வசாதாரணமாக ஆட்டிக் கொண்டிருப்பார். அந்தந்த உடல் பாகத்தை மட்டும் தேவைக்கேற்ப நடிக்க வைக்கும் வித்தகர் என்றும் கூறினார். அசுரப் பிறவி.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #10
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    ‎Sekar Parasuram



    தற்போது ஜெயா தொலைக்காட்சியில் ராஜா





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •