Page 3 of 401 FirstFirst 123451353103 ... LastLast
Results 21 to 30 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

  1. #21
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #23
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #24
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #25
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #26
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    283
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #27
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு -41
    ----------------------------------



    வீடு என்பது... சும்மா ஒரு இடமல்ல.

    ஒரு இருப்பிட அடையாளமல்ல.

    நாம் இருந்து, நகர்கிற கூடல்ல.

    வீடு, நமது சிறையல்ல. அது நம் விடுதலை. நிம்மதி. தனித்தும், உறவுகளோடும் நாம் நம் வாழ்வை ருசிக்கும் இடம். நமது இதய சோகங்களை அகற்றி மகிழ்வளிக்கும் திருத்தலம்..
    வீடு.

    எல்லோரையும் போல அப்படிப்பட்ட வீடுகள் தனித்தனியே இருந்தாலும், சிவாஜி ரசிகர்களுக்கென்று சிறப்பான, வசதிகள் நிறைந்த, மன நிம்மதியும், நிறைவும் தந்த, தருகிற பொதுவான ஒரு வீடு உண்டு.

    "வியட்நாம் வீடு".
    *****

    பெரியநாயகியம்மன் கோயில் வாசலில் சிலுசிலுவென்று கரும்புச்சாறு வாங்கி அருந்திய தருணங்களில் கவனித்திருக்கிறேன்.. உறுதியான பற்சக்கரங்களினூடே தன்னைச் சக்கையாக்கிக் கொண்ட கரும்பை.

    கரும்பின் தியாகமே நம் நாவில் இனிப்பாகப் பரவி
    நிலைக்கிறதென்பதை நிஜமாக நான் உணர்ந்து
    கொண்டிருக்கிறேன்.

    தன்னலம் என்பதை கனவில் கூட நினையாத, குடும்பத்திற்காக தன்னை சக்கையாகப் பிழிந்து
    கொண்டு இன்பம் வழங்கிய ஒரு குடும்பத் தலைவனின் தியாக வரலாற்றை "வியட்நாம் வீடு"
    பேசிற்று.

    "நாடகமாயிருந்தது... திரைப்படமாயிற்று" என்று
    மட்டுமே " வியட்நாம் வீடு" பற்றிப் பேசி வருகிறோம். திரைப்படமான பின் எண்ணற்றோருக்கு "திரைப்பாடம் " ஆயிற்று என்பதை அடிக்கடி பேச மறந்தோம்.

    அமர்ந்திருந்த இருக்கைக்கும், திரைக்கும் இடையிலான தொலைவில் ஒரு புனித வாழ்வை
    தரிசித்துக் கொண்டிருந்த எனக்கு அந்தப் பதினாறு வயதில் அந்த வெண்திரை, பாடங்கள்
    எழுதிய கரும்பலகையாகவே காட்சியளித்தது.

    " வியட்நாம் வீடு" சும்மா வெட்டி கௌரவத்தைப் பற்றிப் பேசவில்லை. ஒழுக்கத்தைப் பேசியது.
    எளிமையைப் பேசியது. உழைப்பின் மீது ஆசை வேண்டும் என்று பேசியது. பொறுப்பைப் பேசியது.

    எல்லாவற்றுக்கும் மேலாக அப்பழுக்கில்லாத கணவன் - மனைவி அன்பைப் பேசியது.

    மிகப் புனிதமான கணவன் - மனைவி அன்பின்
    இசை வடிவ விளக்கமாக இந்தப் பாடலைச் சொல்லலாம். இதே படத்தில் வரும், அத்தனை கண்களுக்கும் நீர் சேர்க்கும் " உன் கண்ணில் நீர் வழிந்தால்" பாடலைப் போலவே இந்தப் பாடலும்
    வேறொரு வி்தத்தில் கணவன் - மனைவி அன்பின்
    மகத்துவம் உணர்த்தும்.

    நாயகி, "அப்பாவி ராஜா", "அம்மாஞ்சி ராஜா" கேலிப் பட்டங்களை நாயகனுக்கு அளிக்கிறாள். "அப்பாவி ராணி", "அம்மாமி" பட்டங்கள் அதே கிண்டலோடு நாயகனிடமிருந்து நாயகிக்குப் போகிறது.

    "மன்னவன்.." என்று மிக அழகாய், வித்தியாசமாய்,
    கவர்ச்சியாய் திருவருட்செல்வரில் உதடு சுழிக்கும் போது கிறங்கடித்த, மாதவிப் பொன்மயிலாளாய்
    இருமலர்களில் தோகை விரித்த போது மயங்க வைத்த பத்மினியம்மாவுக்கு ஆட்டத் திறமை காட்டுவதற்குத் தோதான களம் இந்தப் பாடல்.
    என்றாலும் " நாட்டியப் பேரொளி"யை ஒளித்து வைத்து விட்டு, சாவித்திரி மாமியாய் ஜொலிப்பது
    அவருக்குப் பெருமை சேர்க்கிறது.

    வெட்கப்பட்டு ஒளிந்து கொண்டிருக்கும் ஆத்துக்காரரின் அதிகரித்துக் கொண்டே போகும்
    கூச்சம் பார்த்து அவர் சிரிக்கும் 'களுக்' சத்தம்,
    கலையுலகில் எதிரொலிக்கும் சாதனைச் சத்தம்.

    தீவிரமாய் உணர்வுகள் பேசும் ஒரு திரைப்படத்தின் ஊடே திடீரென்று ஆனந்த இடைச்
    செருகலாய் வரும் இந்தப் பாடல், திணிக்கப்பட்ட
    ஆர்ப்பாட்டக் கலை வடிவமாய்ப் போயிருக்கும்..
    நாயகனாய் நடிகர் திலகம் மட்டும் இல்லாதிருந்தால்.

    பின் வரும் நாட்களில் அப்பாவி மனைவி, பொறுப்பற்ற பிள்ளைகள், பாதை தவற முனையும் மகள், ஆடம்பர மருமகள் என்று அத்தனை பேருக்கும் பாடங்கள் நடத்தும் வாத்தியாராகப் போகிறவர், கட்டிய மனைவியிடம் வாழ்வில் முதன்முறையாக அறிமுகமாகும் பின்னிரவில்
    வெட்கி நடுங்கும் சுவாரஸ்யத்தை நடிகர் திலகமன்றி வேறு யாரும் வழங்க முடியாது.

    மிக இளமையாய், அழகாய்த் தோன்றும் ஒரே காட்சியிலும் கோமாளித்தனங்கள் காட்டி நடிக்கிற
    தைரியம், நரைத்து வயசான பின் நடக்கிற அந்தத்
    தத்துப்பித்து நடையை " அவர் படித்த புத்தகத்தில்"
    என்று பாடியபடியே நடக்கும் திறமை, பத்மினியம்மா தொட்டவுடன் வெடிக்கும் அதிபயங்கரக் கூச்சம் கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதை உதாரணப்படுத்த கழுத்து வரை போட்ட சட்டைப் பொத்தானை விடுவித்துக் கொள்ளும் அழகு, என்னதான் அப்பாவியாய் நடித்தாலும் ஒரு தேர்ந்த கலைஞனின் மேதாவிலாசத்தை ஒளித்து வைப்பதென்பது இருட்டுக்குள் நெருப்பை ஒளிப்பது போலாகும் என்பதற்கு உதாரணமாய் " அந்தப் பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்" எனும் போது காட்டும் பாவனை...

    நடிகர் திலகமா அப்பாவி ராஜா? அந்த நடிப்பு ராஜனா அம்மாஞ்சி ராஜா?

    நடிகர் திலகத்திற்கும், பப்பியம்மாவுக்கும் மட்டுமல்ல... அவசியம் ஒரு நாள் எழுத வேண்டும் என்று குறித்து வைத்திருந்த பாடலை எழுதி, எழுதிஆவலைத் தூண்டி அவசரமாக எழுத வைத்த
    அன்பு அப்பா நடராஜன், கவி வேந்தன் கஜேந்திரன் ஆகியோருக்கும் நன்றி சொல்லத்
    தூண்டுகிறது.. இப்பாடல்.
    *****

    முதலிரவுப் பாடல்களென்றாலே அரையிருட்டில்
    அங்கங்கள் காட்டும் தமிழ் சினிமா மரபுடைத்து
    வெள்ளந்தி மனசுகள் காட்டும் இப்பாடலில் கவனியுங்கள்... அகிலத்துக்கே ஒளி பாய்ச்சிய அய்யன் நடிகர் திலகத்தின் வெளிச்ச விழிகள் போல இரண்டு விளக்குகள் பிரகாசமாய் எரிவதை!

  9. #28
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு - 42
    ---------------------------------

    அன்பு...

    பேரன்பு...

    மாசற்ற அன்பு...

    உண்மை அன்பு...

    உன்னதமான அன்பு...

    இவையெல்லாம் இசை வடிவம் கொண்டு நம்மை
    நோக்கி வந்தால் எப்படி இருக்கும்?

    இதோ... இந்தப் பாடல் போல இருக்கும்.
    ----------

    நம் நாட்டின் குடிமக்கள் அனைவரும் அன்றைய தினங்களில், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஏழு முறையாவது பார்த்து மகிழ்ந்த ஒரு திரைப்படம்
    உண்டு. " திரிசூலம்".

    எங்கள் ஊரில் இந்தப் படம் ஓடிய போது, படம் வெளியான திரையரங்க வாசலை நான் நெருங்கவே வாரக் கணக்கிலானது.

    தவிப்பும், பரவசமாய்ப் பார்த்த இப்படத்தின் முதல்
    பாடலே இதுதான் என்பதாலோ என்னவோ.. இந்தப் பாடலின் மீது அநியாயத்துக்கு ஒரு ஈர்ப்பு.
    ----------

    கல்யாணம் செய்து கொண்டு வாழ்வுக் களம் கண்டு விட்ட இரண்டு உயிர்களின் அபார மகிழ்வை இந்தப் பாடல் தன்னுள் அழகாகச் சுருட்டி
    வைத்திருக்கிறது.

    தான் அப்பனாகப் போகிற அளவற்ற சந்தோஷம்
    நாயகனுக்கு என்றால், தனக்கு மற்றுமொரு அம்சமான இசைக் குழந்தை என்கிற சந்தோஷம்
    நம் மெல்லிசை மாமன்னருக்கு.
    --------

    புன்னகை அரசி, நடிகர் திலகத்துடன் இணைந்த
    காவியங்களெல்லாம் ஏன் ஜெயிக்கிறது என்பதற்கு இந்தப் பாடல் தெளிவாக விடை தருகிறது.

    சும்மா " ஈ..ஈ " என்று பல்லைக் காட்டி சிரிப்பதால் புன்னகை அரசி ஆகி விட முடியாது.. யாராலும்.
    அந்த அற்புதமான அள்ளிக் கொண்டு போகிற
    புன்னகை... கொஞ்சல், கெஞ்சல், பெருமிதம், நாணம், பெருமகிழ்வு, மனநிறைவு என்று அத்தனை மனித உணர்வுகளையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டதாய் இருப்பது.. பெரு வியப்பு.

    "கண்ணான மணவாளன் சேயாகிறான்.
    கல்யாண மகராசி தாயாகிறாள்.
    கட்டில் கொண்டால் அங்கு நான் பிள்ளையே..
    தொட்டில் கண்டால் அங்கு என் பிள்ளையே.."

    "என் பாட்டில் ஒரு ராகம் உண்டானது.
    என் வீட்டின் எண்ணிக்கை மூன்றானது."

    "மீன்கள் நாறும் சினிமாச் சந்தையில், விண்மீன்களை விற்ற பைத்தியம்" என்று கவிக்கோவால் வர்ணிக்கப்பட்ட கண்ணதாசர்,
    தான் விதைத்த விண்மீன்களால் சந்தைகள் பரவிய இடங்களையெல்லாம் சாதனை வானமாக்கியதை யாரும் எழுதவில்லை.
    ----------

    தொழில் தொடர்பான கருவிகளுடன் நூறு பேர்
    சூழ்ந்து கொண்டு தன்னையே பார்க்க, இருநூறு
    கண்கள் போதாதென்று காமிராவின் கண்ணும்
    குறுகுறுவென்று பார்க்க, மனைவியாய் உடன் நடிக்கும் நடிகையைக் கொஞ்சிக் குழைந்து கொண்டாடும் கணவனாக, இன்னும் கொஞ்ச நாளில் ஒரு குழந்தைக்குத் தகப்பனாகப் போகிற
    குஷியிலிருக்கிற கணவனாக... பளீரென்று மாறிப் போவது அய்யனால் மட்டுமே முடிகிற அதிரடி அதிசயம்.

    " மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே" என்று பாடும் போது தனக்கே தனக்கானவளை தாயாக்கிய பெருமிதம், நாளைய பிள்ளைக் கொஞ்சலுக்குக்கான ஒத்திகை போல் அந்த துள்ளி விளையாடல்கள்...

    பாடலுக்கு வாயசைத்து நடிப்பது சாதாரண காரியமல்ல. சும்மா காட்சியை அழகாக நிரப்பி வென்று விட நினைக்கிற எண்ணற்ற நடிகர்களின்
    அசட்டுத்தனங்களுக்கு, இந்தப் பாடலில் பாடங்கள்
    இருக்கின்றன.

    பேரன்பும், பரவசமுமாய் இரண்டு உயிர்கள் கலந்து, தமக்கென்று இன்னொரு உயிர் உருவாக்கும் பெருங் கனவு, நாட்கள் தாண்டி, வாரங்கள், மாதங்கள் கடந்து நனவாகும் ஒரு பொன்னாளில் அந்தக் கணவனின் மனோநிலை
    எப்படி இருக்குமென்பதை அப்படியே நடித்துக்
    காட்டியிருக்கிற நடிகர் திலகம்.. கண்களெனும் திரை முழுக்க வியாபிக்கிறார்.

    "தன் கைகள் கொட்டட்டும்" என்று மனைவியைக்
    குழந்தையாய்ப் பாவித்து, தன் கன்னத்தோடு அவள் கைகள் இணைக்கும்போது அய்யனின்
    நடிப்பழகு ஆயிரம் முறை பார்த்தாலும் தீராது.

    இந்தப் பாடல் மீதான என் காதல், கால காலத்துக்கும் மாறாது.

    அப்படியே தன் நாயகியைச் சுழற்றி அரை வட்டமடித்துப் பாடும் போது, பின்னணியில் இன்றைய அய்யனின் வணங்குதலுக்குரிய அந்த தந்தம் வைத்த நினைவுச் சின்னம் அன்று வேறொரு விதமாய் காட்சிப்படுகிறது.

    சட்டென்று கண்கள் பனிக்கிறது.

    அய்யனின் அவதார தினங்களில், அதே இடத்தில்தான் அய்யனை வணங்கி நான் மலர் கொடுத்தேன்.



  10. #29
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு - 43
    --------------------------------



    உணர்ந்திருக்கிறீர்களா?

    நமக்கு மிகவும் இஷ்டமான விஷயமாக இருக்கும். அதில் நம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக்
    கொண்டிருக்கும் போது, ஏதோ ஒரு தவிர்க்க முடியாத சங்கடம் வந்து அந்த இஷ்டமான விஷயத்தின் மீதான நம் ரசிப்பை,
    ஒட்டுதலை அடியோடு தகர்த்து விட்டுப் போகும்.

    உணர்ந்திருக்கிறீர்களா?

    நான் உணர்ந்ததுண்டு.

    வெகுதூர, ஜன்னலோரப் பேருந்துப் பயணம் எனக்குப் பிடிக்கும். அப்படியொரு பயணம் அமைந்து, பேருந்து அருமையாகப்
    போய்க் கொண்டிருக்கும் போது, பேருந்தில் பழுது ஏற்பட்டு, நடுவழியில் நிறுத்தப்பட்டு, இப்போதைக்கு சரியாகாது எனும் நிலையாகி, நிரம்பி வழிந்து செல்லும் மற்றொரு பேருந்துக்குள் மாற்றி விடப்பட்டு,
    இரண்டு பேர்களுக்கிடையில் நசுங்கும் நிலையில் ஒரு இருக்கை கிடைத்து...

    நான் உணர்ந்ததுண்டு.

    ஆனால்...

    நசுங்கிக் கொண்டே பயணப்படும்
    அந்த வேளையில் கூட, சற்றுமுன் ஆனந்தமாய்க் கிடைத்த ஜன்னலோரப் பயணத்தை எண்ணிக் கிடைக்கும் பெருமிதமான ஆறுதலிருக்கிறதே... அது பெரிய விஷயம்.

    இந்த "பூ மணக்கும் பூங்குழலி" பாடல் போல.

    எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்... அப்போது. அப்பா இருந்தார்.

    சிவகங்கையில் "அமுதா" எனும்
    டூரிங் திரையரங்கம் இருந்தது.
    " ரத்த பாசம்" போட்டிருந்தார்கள்.
    போக வாய்ப்பில்லாத பள்ளி நாட்கள்.

    வீட்டில் யாரும் போகிற மாதிரி தெரியவில்லை. அப்பா யாருடனும் கூட்டணி வைத்துப் போக மாட்டார். சுயேச்சை.

    அப்பாவிடம் அனுமதி கேட்டுப் போகப் பயம்.

    ஆபத்பாந்தவனாய் நண்பன் ரகு
    ஒரு நாள் மாலை வந்தான். கையில் பாடப் புத்தகம். அப்பா வேலை முடிந்து வரவில்லை.
    தன் வீட்டில் யாருமில்லை என்றும்,
    என்னை அனுப்பி வைத்தால் இருவரும் அவன் வீட்டில் படிப்போம் என்றும் அம்மாவிடம் அனுமதி கேட்டு அழைத்துப் போனான்.

    தெருமுனை தாண்டினதும் கண்ணடித்தான். புரிந்து கொண்டேன்... அன்றைய படிப்பு
    அமுதா திரையரங்கிலென்றும்,
    பாடம், ரத்த பாசம் என்றும்!

    தெருமுனை திரும்பினதும் வலது
    பக்கம் கொஞ்ச நேரம் போனால்
    அவன் வீடு. அவன் வீட்டு வாசலில்
    புத்தகத்தோடு நின்ற போது, அப்பா வேலை முடிந்து வீட்டுக்குப்
    போய்க் கொண்டிருந்தார்.

    "என்ன இங்கே?" என்பது போல் ஒரு முறைப்பான ஒரு பார்வை.
    வேகமாய் அவர் முன்னே ஓடிப் போய் " ரகுவோட படிக்க" என்றதும், ஒரு மெலிசான தலையாட்டலுடன் போய் விட்டார்.
    நல்லவேளை... இனி பயமில்லை.
    ------------

    வில்லன்களைப் பந்தாடி, ரசிகர்களை உற்சாகமாக்கிய தலைவரின் திருநாமத்தில் துவங்கி தலைப்பெழுத்துகள் ஓடிக் கொண்டிருந்த போது, இருட்டுக்குள் இருக்கை தேடுபவர்கள் வசதிக்காக பின்வரிசையில் ஒளிர்ந்த விளக்கொளியில், பெஞ்ச் டிக்கெட் வரிசையிலிருந்த நான் பார்த்து
    மகா அதிர்ச்சியானேன். முன் வழுக்கை மின்ன காலி இருக்கை
    தேடியவர் சாட்சாத் அப்பாவேதான்.

    பெஞ்சிலிருந்து அப்படியே நண்பனையும் இழுத்துக் கொண்டு சரிந்து தரை டிக்கெட் ஜனங்களோடு கலந்துதான் மிச்சப் படமெல்லாம் பார்த்தேன்...
    ஒரு பய முள் உறுத்த,உறுத்த..
    ரசனை தகர்த்த அந்த நசுங்கல் பேருந்துப் பயணம் போல்.

    ஆனால்... "ரத்தபாசம்" என்று நினைத்தாலே நான் சொன்ன மேற்படி சங்கடங்களையெல்லாம் தகர்ந்து எறிந்து விட்டு முன்னுக்கு
    வருவது.. இந்தப் பாடல். ஒரு நாலரை நிமிஷம் என்னை வேறெதையும் சிந்திக்க விடாத அழகுப் பாடல்.

    பஞ்சகச்சம் போல அணிந்து நடக்க சிரமமான ஒரு ஆடையை
    நடிகர் திலகம் லாவகமாகக் கையாளும் சமயோசிதம், என்
    சின்ன வயசின் பெரிய பிரமிப்பு.

    "சிவந்த மண்" ராஜாவும், ராணியும் காதல் பாடிய அதே அயல்நாட்டு அழகுப் பிரதேசத்தில்
    இந்தப் பாடல்.

    ஸ்ரீப்ரியா மிக அழகாக இருப்பார்.
    மிக அழகாக நடிப்பார். நீலமும், வெள்ளையுமாய் அழகழகாய் வந்து நம்மாள் கைதூக்கிச் செய்கிற அழகிய அழிச்சாட்டியங்களில் அந்த அம்மா ...பாவம் கவனிக்கப்படவே
    மாட்டார்.

    "உயர் காமன் மந்திரம் நீ" - கவியரசர். மரியாதையாய் " உயர்"
    போட்ட கவிச் சக்ரவர்த்தியின் சேட்டை.

    சாதனைக் காடுகளில் தேடியலைந்து நம் ஏக்க வியாதிகளுக்கான இசை மூலிகைகள் கொணர்ந்த மெல்லிசை மாமன்னரின் ராக வேட்டை.

    நடிகர் திலகத்திற்குப் பாடினாலே,
    ஒரு மாமேதைக்குப் பாடுகிறோம்
    எனும் அர்த்தமுள்ள கர்வம் தொனிக்கும் ஒரு குரலால்( இந்தப் பாடலில் அந்த " ஒன்று போலத் தோன்றுதம்மா")
    "பாடும் நிலா "போடும் ராஜபாட்டை.

    எப்போதும் போல் எங்கள், உங்கள், நம் நடிகர் திலகம் எளிதாய்க் கைப்பற்றும் நம் இதயக் கோட்டை.
    ---------

    படம் முடியப் பத்து நிமிஷம் முன்பே தலைதெறிக்க ஓடி வந்து,
    அப்பா வருவதற்கு முன்பே வீட்டில்
    நல்ல பிள்ளையாய் உட்கார்ந்து கொண்ட என்னை அப்பா நம்பி விட்டார் என்பதுவே இன்று வரை
    என் நம்பிக்கை. ஒருவேளை நான்
    படம் பார்த்தது தெரிந்தும், என்னிடம் காட்டிக் கொள்ளாமல் என்னை மன்னித்திருப்பாரேயானால்...
    அது.. "ரத்த பாசம்" தான்.
    ----------

    எண்ணற்ற முறைகள் " பூ முடிக்கும் பூங்குழலி" பார்த்தாயிற்று. அத்தனை தடவையும் அந்தப் பாடல் அள்ளித் தெளித்தவை.. ஆனந்தத் துளிகள்.

    அன்று எனக்குப் பின்னால் இருந்து எனக்குப் பாடங்கள் தந்த என் சொந்தத் தந்தை, எனக்கு முன்னால் திரை வழியே எனக்குப் பாடமெடுத்த என் கலைத் தந்தை இருவருமே இன்றில்லை என்றெண்ணுகிற
    போது முந்துபவை... கண்ணீர்த்
    துளிகள்.

  11. #30
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு- 44
    ---------------------------------



    காற்றோடும், ரசனையோடும்
    மட்டுமல்லாமல் சில பாடல்கள்
    நம் வாழ்வோடும் பொருந்தி
    விடுகின்றன.

    மகிழ்வு மிகுந்த ஒரு பொழுதில்
    ஒரு இளம்பெண் பாடுவதாய்
    வரும் இந்த "அமுதை பொழியும் நிலவே" பாடல், என் வாழ்வோடு பொருந்தி விட்ட பாடல்.

    முப்பத்து நான்கு வருஷங்களுக்கு முன், தனது நாற்பத்தி நான்காம் வயதில் உயிர் நீத்த என் தந்தையாருக்கு மிகப் பிரியமான
    பாடல்... இது!

    மிக இனிமையான குரலில் நம் சுசீலாம்மா "ஓஓ...ஓ" என துவங்குவதிலிருந்து, "டஸ்"
    என்று தாம்பாளம் தரையில்
    விழும் ஓசையும், "கிறீச்" எனும்
    பெண் கூவலுமாய் பாடல்
    நிறைவுறுகிற கடைசி விநாடி
    வரைக்கும் இந்தப் பாடலை
    என் அப்பா வெகுவாய் ரசிப்பதை எண்ணற்ற முறைகள் பார்த்திருக்கிறேன்.

    ஏதொன்றுமறியா அப்பாவியாய்
    ஒரு முகம். அதில் அகல விரிந்து
    மலர்ந்திருக்கும் இரு விழிகள்.
    அவற்றில் சதா ஞானத் தேடல்.
    வெளியுலகம் தெரியாத காட்டுவாசியாய் நம் நடிகர் திலகம்.

    எங்கிருந்தோ ஒலிக்கும் தேன் குரல் பாடல் கேட்டு தெறித்தோடி வருவார்.. தலைவர். செங்குத்தாய்
    நிமிர்ந்த மலையில் அவர் ஒடி வருவதைக் கவனியுங்கள். எந்த
    ஒரு தடுமாற்றமும் இருக்காது. சாவகாசமாய் நின்று போகும் மந்தத் தனம் இருக்காது. தமிழ் திரையுலகம் முதலும், கடைசியுமாய்ப் பார்த்த அசத்தல்
    டார்ஜான்.. நம் நடிகர் திலகம்.

    மிக மெலிதாய், எழிலாய் மூக்கு
    சுளித்துப்,புன்னகைத்துப் பாட்டிசைக்கும், இளம் பெண்கள்
    எல்லாருக்கும் யாசகமாய்த் தந்தாலும் தீராத அழகு கொண்ட இந்தப் பாடலின் கம்பீரக் கதாநாயகி சில மாதங்களுக்கு முன் நெரிசல் மிகுந்த சென்னையின் பேருந்து சிக்னல்
    ஒன்றில், யாசகம் கேட்டு நின்றதாய்ப் படித்த பத்திரிகைச்
    செய்தி அதிர்ச்சியை அள்ளித் தந்தது.

    மலையேறிய தங்கமலையாம்
    அய்யன் இப்போதில்லை.

    அப்பா மடியில் ஆவலோடு
    இருத்தியிருந்த அடர் அரக்கு நிற உறையிட்ட ஃபிலிப்ஸ் டிரான்சிஸ்டர் இப்போதில்லை.

    அவர் பாடல் ரசித்துச் சாய்ந்திருந்த ஈஸி சேர் இப்போதில்லை.

    அவரே இப்போதில்லை.

    "இல்லை"களின் மத்தியில்
    பெரிய ஆறுதலாய்...

    பெரு நம்பிக்கையாய்...

    ஈரம் கசியும் கண்களினூடே அன்பு அப்பாவை காட்சிப்படுத்துவதற்கு
    என்றென்றும் உயிர்ப்போடிருக்கும்..
    இந்தப் பாட்டு !

Page 3 of 401 FirstFirst 123451353103 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •