மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 24 துவக்கி யிருக்கும் அருமை நண்பர் திரு கலிய பெருமாள் அவர்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் .
.இனிய நண்பர்கள் அனைவரின் ஆதரவுடன் மிக சிறப்பாக திரி பயணித்து வருகிறது . நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து திரியில் மக்கள் திலகத்தின் சாதனைகளை பகிர்ந்து கொள்ளுபடி கேட்டு கொள்கிறேன் .

திரு கலிய பெருமாளின் ஆரம்பே பதிவு மிகவும் அருமை . மக்கள் திலகத்தின் நிழலும் நிஜமும் யதார்த்தமான கட்டுரை . எந்த ஒரு நடிகருக்கும் கிடைத்திராத பெருமை .மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவருக்கே சாத்தியம் . இன்றைய கனவு உலக நடிகர்களின் மனித நேயம் பற்றி கூறவே தேவை இல்லை . மக்கள் சரியான நேரத்தில் சரியான தீர்ப்பை இந்த நடிகர்களுக்கு வழங்குவார்கள் .

மக்கள் திலகத்தின் சினிமா மற்றும் அரசியல் வெற்றிகளை ஏற்று கொள்ளாதவர்கள் , ஏமாந்து போனவர்கள் , ஏக்கத்துடன் வாழ்பவர்கள் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது .அவர்களுக்கு மனசாந்தி கிடைக்க பிராத்திப்போம் .