Page 166 of 402 FirstFirst ... 66116156164165166167168176216266 ... LastLast
Results 1,651 to 1,660 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1651
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (18/10/19)* திண்டுக்கல் என்.வி.ஜி.பி.அரங்கில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகளில் வெளியாகியுள்ளது .
    தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.*

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1652
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (18/10/19) விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராமில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படமான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4காட்சிகளில் திரைக்கு வந்துள்ளது .


    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.*



    தீபாவளி வெளியீடாக மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்து அசத்தலாக இயக்கிய "நாடோடி மன்னன் " திரைக்கு வந்து வசூல் சாதனை புரிய உள்ளது .
    Last edited by puratchi nadigar mgr; 18th October 2019 at 09:02 PM.

  4. #1653
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கோவையில் தீபாவளி வெளியீடாக 2 படங்கள் வெளியாகின்றன .-----------------------------------------------------------------------------------------------------

    சண்முகாவில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் "டிஜிட்டலில் தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது .


    டிலைட்டில்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படமாகிய டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி* 2 காட்சிகளில் வெளியாகிறது .

    தகவல் உதவி : கோவை நண்பர் திரு. கமலக்கண்ணன் .

  5. #1654
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை மலர் -16/10/19

    அ.இ .அ .தி .மு.க.வின் 48ம் ஆண்டு துவக்க விழா - தலைமை கழகத்தில் கோலாகல ஏற்பாடு*
    --------------------------------------------------------------------------------------------------------------------------------
    எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திருஉருவ சிலைகளுக்கு 17ந்தேதி அ.தி.மு.கே. ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர் .

    கழக கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .

    தலைமை கழக அறிவிப்பு .

  6. #1655
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் -16/10/19

    அண்ணா தி.மு.க. 48ம் ஆண்டு துவக்க விழா .

    எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு 17ந்தேதி எடப்பாடி - ஓ.பி.எஸ். மலர்மாலை அணிவித்து மரியாதை .
    கழக கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார்கள் .

    தமிழகம் முழுவதும் இரு தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து*கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டுகோள் .

  7. #1656
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை சுடர் -17/10/19

    அ.தி.மு.க.வின் 48ம் ஆண்டு துவக்க விழா இன்று கொட்டும் மழையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது . முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., தொடர்ந்து வழிநடத்திய ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. 48ம் ஆண்டு விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது .இதையொட்டி தலைமை அலுவலகம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது .முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தலைவர்களின் சிலைகளுக்கு மலர்மாலை அணிவித்தபின் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள் ,மேள தாளங்கள் முழங்க தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள் .

    இடைத்தேர்தல் பிரச்சாரம் காரணமாகவும், மழை காரணமாகவும், மாவட்ட செயலாளர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் ,கட்சி பிரமுகர்கள் குறைந்த அளவிலும் ,தொண்டர்கள் சுமார் 500 பேர்களும் கலந்து கொண்டனர் .

  8. #1657
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் -17/10/19
    அண்ணா தி.மு.க. 48ம்* ஆண்டு* துவக்க விழா .
    ---------------------------------------------------------------------------
    கொட்டும் மழையில்*எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்மாலை அணிவிப்பு*

    எடப்பாடி, ஓ. பன்னீர்செல்வம் கொடி ஏற்றி* தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள் .

    உயர்நீதி மன்ற தடை உத்தரவு காரணமாக பேனர்கள் வைக்கப்படவில்லை .சுவரொட்டிகள் மட்டும் ஏராளமான அளவில் ஒட்டப்பட்டிருந்தன .

    சிலர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர் .கழக தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க , ஆனந்த கூத்தாடி கொண்டாடினார்கள் . கழக அலுவலகம் முழுவதும் கொடிகள் , தோரணங்களால் ,மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது .

  9. #1658
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினகரன் - வெள்ளி மலர் -11/10/18
    -----------------------------------------------------
    எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லி கொடுத்தவர் .
    ----------------------------------------------------------------------
    1931ல் கும்பகோணம் பாய்ஸ் நாடகக் கம்பனியில் 11 வயது குருமூர்த்தி* 14 வயது ராமச்சந்திரனுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் .

    அந்த ராமச்சந்திரன்தான் பின்னாளில் மக்கள் திலகமாக தமிழக திரையுலகை கொடி கட்டி ஆண்ட எம்.ஜி.ராமச்சந்திரன் .
    நேற்றுதான் தன்னுடைய கனகாபிஷேக விழாவை (100 வது பிறந்த நாள் ) சென்னையில் கொண்டாடினார் .**

    மயிலாடுதுறையில் 1920ல் பிறந்த கீழ்வேளூர் சி. குருமூர்த்தி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே* ஓவிய வகுப்பிலும் சேர்ந்து இளநிலை தேர்ச்சி பெற்றார் .*அப்போதே நாடகங்களிலும் நடிக்கத்தொடங்கினார் .* நாடக ஈடுபாட்டால் பள்ளிப் படிப்பு பாதியிலேயே நின்று போனது .
    எம்.ஜி.ஆரோடு இணைந்து "பவளக்கொடி " " கோவலன் " ஆகிய நாடகங்களில்*நடித்திருக்கிறார் .**

  10. #1659
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் இந்து -11/10/18
    அவர் இரு நவ இசை ராஜ்ஜியம் - டெஸ்லா கணேஷ்*
    --------------------------------------------------------------------------------
    படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டில் படமாக்கப்பட்ட தொடக்க கால வண்ணப்படங்களில் ஒன்று என்ற பெருமை "சிவந்த மண் " படத்திற்கு உண்டு .அந்த பெருமையை முந்திக் காட்ட எம்.ஜி.ஆர். " உலகம் சுற்றும் வாலிபன் " படத்தை தொடங்கினார் .* "அன்று சிந்திய ரத்தம் "என்கிற பெயரில் தனக்காக தயாரான திரைக்கதை, தவிர்க்க இயலாத காரணங்களால் "சிவந்த மண்ணாக " மாறிவிட்டது அதில் ஏற்பட்ட ஏமாற்றத்தை "உலகம் சுற்றும் வாலிபனால் " வென்றுவிட தீர்மானித்தார் எம்.ஜி.ஆர்.

    கமர்ஷியல் பிரம்மாண்டங்கள் நிறைந்த படம் . அதற்கு உலக இசை வடிவங்களை துல்லியமாக உள்வாங்கி பிரதிபலிக்கும் வகையிலான இசையை மெல்லிசை மன்னரால் மட்டுமே தர முடியும் என நம்பினார் .

    1970ல்* ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட்சி நடந்தபோது, அதன் பின்னணியில் திரைப்படத்தை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த எம்.ஜி.ஆர்.* மெல்லிசை மன்னருக்கு மிக குறைந்த கால அவகாசமே கொடுத்தார் .* சிவந்த மண்ணில் ஐரோப்பிய, அரேபிய இசையை சிறப்பாக கொடுத்த மெல்லிசை மன்னருக்கு "உலகம் சுற்றும் வாலிபனின் " ஜப்பான், தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய இசை கலந்த பாடல்களையும், பின்னணி இசையையும் தரவேண்டிய சவால் காத்திருந்தது .*

    குறைந்த காலத்தில் மெல்லிசை மன்னர் போட்ட நூற்றுக்கணக்கான சிறந்த மெட்டுக்களை எம்.ஜி.ஆர். நிராகரித்து இன்றைய டிஜிட்டல் காலத்திலும் , உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் வெற்றி பாடல்களை தேர்ந்தெடுத்தார் .
    எம்.எஸ். வி. என்ற மகா இசை கலைஞரின் எல்லையற்ற திறமைக்கு இந்த சான்று ஒன்றே போதும் .

    திரும்பக் கொடுத்த எம்.எஸ்.வி
    ---------------------------------------------------
    உலகம் சுற்றும் வாலிபனுக்காக எம்.ஜி.ஆர். கொடுத்த பிரபலமான பன்னாட்டு இசை ரெக்கார்டுகளை , அவரிடமே திருப்பி கொடுத்த எம்.எஸ்.வி. தனது சொந்த இசை அறிவில் இருந்து , அருவியாக பொழியும் இசையை தந்தார் .ஜப்பானிய இசையின் அடையாளமான "கோட்டொஹார்ப் ", ஷாக்குஹச்சி* ப்ளூட் , "டாய்க்கோ ட்ரம்ஸ் ", ஷாமி சென்பாஞ்சோ "* ஆகிய இசைக்கருவிகளையும்*உள்ளடக்கி பத்துக்கும், மேற்பட்ட பிரம்மாண்ட பாடல்களோடு, புதுமையான தீம் இசை கோவைகளையும் அமைத்தார் .* ஜேசுதாசும், எஸ்.பி.பி.யும்* பாடல்களில் குழைய எம்.ஜி.ஆர். இன்னும் இளமையானார் .

    வெளிநாட்டுக்கு காட்சிகளுக்கு இணையாக சென்னை ஸ்டுடியோக்களில்*கலை இயக்குனர் அங்கமுத்துவின் திறமையால் போடப்பட்ட பிரம்மாண்ட "புத்தர் கோயில் " "ஸ்கெட்டிங் அரங்கம் " போன்ற அரங்கங்களில் படமாக்கப்பட்ட காட்சிகளில் படத்தொகுப்பில் எந்த வேறுபாடும் தெரியாத வகையில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசையும் பின்னி பெடலெடுத்து* திறமையாக பணியாற்றியது*

    1973 திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வெளியிடப்பட்டு*எம்.ஜி.ஆரின் கட்சி தொண்டர்களை உற்சாகத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது .உலகம் சுற்றும் வாலிபனின் மகத்தான கமர்சியல் சாதனைகளில் மெல்லிசை மன்னரின் பங்கு அளவிடற்கரியது .**

    முதல் தேர்தல் வெற்றி தந்த ஊக்கத்தில் முதலமைச்சர் நாற்காலியை நோக்கி*எம்.ஜி.ஆர். பயணிக்க தொடங்கினார் என்றே கூறலாம் .

  11. #1660
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •