Page 134 of 402 FirstFirst ... 3484124132133134135136144184234 ... LastLast
Results 1,331 to 1,340 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1331
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புதிய படம் கையை சுட்டால் ...அதிலிருந்து மீள எம்.ஜி.ஆர் ., படம் போடு- இது 80 வருடமாக நடக்கும் தமிழ்சினிமா அதிசயம்.............. Thanks RK.,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1332
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையில் நேற்று ஞாயிறு (21- 09- 2019) மாலை காட்சியில் மதுரை - சென்ட்ரல் DTS.,திரையரங்கில் மக்கள் திலகத்தின்" நினைத்ததை முடிப்பவன் " திரைப்படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெற்றது ...இந்த திரைப்படம் வெளிவந்து 44 ஆண்டுகள் ஆகிறது இப்போதும் அன்று திரையிடப்பட்ட போது இருந்த உற்சாகம் ஆட்டம் பாட்டம் கொண்டn ட்டம் ரசிகர்களின் ஆரவாரத்தை இப்போதும் பார்க்க முடிந்தது எந்த ஒரு நடிகருக்கும், தலைவருக்கும் இல்லாத ரசிகர்களின் ஆதரவு நமது தலைவருக்கு மட்டுமே இப்போது திரைக்கு வரும் புதிய படங்கள் ஒரு வாரம் கூட ஒடுவது இல்லை வசூலிலும் திரைப்படம் ஓடும் நாட்களிலும் நமது தலைவர் தான் எதிலும் முதலிடம் எப்போதும் முதலிடம் இந்த சாதனையை முறையடிக்க இனி எந்த நடிகரும் கிடையாது எத்தனை யுகங்கள் ஆனாலும் உலகம் உள்ளவரை தலைவரின் புகழ் மங்காது என்றும் ஒளி விளக்காக, வானத்தில் உள்ள சந்திரனாக நமது (எம்.ஜி.ராம) சந்திரன் முழு நிலவாக பிரகாசிப்பார், முழு சூரியன் ஆக பிரகாசிபார்...... ..... மதுரை ராமகிருஷ்ணன்......... Thanks...........

  4. #1333
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சிலம்பு செல்வர் . அய்யா.ம.பொ.சி. அவர்களிடம் இந்த படத்தை காண்பித்து " இந்த நிகழ்வு குறித்து சொல்லுங்கள் அய்யா......? " என்றேன் - இனி அவர் சொன்னது........

    இந்த விழா..... எனக்கு ரொம்பவே மறக்க முடியாத நிகழ்ச்சி..... எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்து அமர்ந்ததில் இருந்து ஏதோ.... கலக்கத்தில் இருப்பது மட்டும் எனக்கு தெரிந்தது...... அவர் கலங்கி போய் இருந்தால்...... அவரது கைக்குட்டை அவரது கண்ணாடிக்கு உள்ளே லாவகமாக போய் வரும்..... அதை என்னாலும் கவிஞர் வாலியாலும் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்...... நான் அருகே சென்று..... என்ன ஆனது......? ஏன் முகம் மாறி உள்ளது என்றேன்...... அதற்கு அவர்.... இந்த வெற்றி கேடயத்தில் உள்ள படம் என் தாயை நினைவு படுத்தி விட்டது...... நாங்கள் சகோதரர்களாக இப்படித்தான் வறுமையின் பிடியில் எங்கள் தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் இருந்து வந்தோம்..... என்று கண்ணீர் விட்டார்......

    ஒட்டு மொத்த தமிழ்நாடும் அவர் விழியசைவிற்கும் விரலசைவிற்க்கும் காத்திருக்கும் போதும் அவர் தனது பழைய நெகிழ்வூட்டும் நிகழ்ச்சிகளை மறக்கவே இல்லை......

    அவரது ஈகை..... உழைப்பு .... என்று ஆயிரம் காரணங்கள் அவரது இமாலய வெற்றிக்கும் புகழுக்கும் காரணமாக எல்லாரும் சொன்னாலும் அவரது தாய்பக்தியும் காரணம் என்பது என் கருத்து............. Thanks.........

  5. #1334
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரை தாக்கி எழுதாத எந்த பத்திரிகையும் இல்லை,ஆசிரியனும் இல்லை! உதாரணம் ஆனந்த விகடன் ,துக்ளக்....Etc...அத்தனை போராட்டத்திலிருந்தும் ஜெயித்தார்,அது மட்டும் அல்லாமல் தாக்கி பேசியவர்கள் அவரைப்புகழ்ந்து பேசும்படி அவர் செயல் இருந்தது.He was a Magnanimous man especially in Humanity.......... Thanks Mr. Devaraj Andrews...

  6. #1335
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணா காலத்திலேயே புரட்சித்தலைவரைதி.மு.கவிலிருந்துநீக்கவேண்டும் என்றும்,தலைவராகவேவெளியேறிவிடுவார் என்றும் பலத்த வதந்திஉலாவியது,காரணம் காமராஜர் விழாவில் தலைவர் கலந்து கொண்டதால்,அப்போது தலைவர்MLCஆக இருந்தார் அந்தச்சூழ்நிலையில்,கல்கண்டுபுத்தகம் ஒருகட்டுரை வெளியிட்டது அதில்,சைக்கிள்படம் போட்டு அமைதி.மு.க என்றும் முன்சக்கரம்தான் அண்ணாஎனவும் பின்சக்கரம் எம்.ஜி.ஆர்என்றும்அச்சிட்டு,முன்சக்கரம்எனும்அண்ணாகட ்சிக்கு வழிகாட்டியாகவும் ஆனால் பின்சக்கரம் எனும்,எம்.ஜி.ஆரோடுதான் பெடல் என்ற தொண்டர்கள் இணைப்பு உள்ளது ஆகவே எம்.ஜி.ஆர் இல்லாத தி.மு.க வைநினைத்துக்கூடபார்க்கமுடியாது என்று ஆசிரியர் தமிழ்வாணன் எழுதியிருந்தார்
    இந்தப்புத்தகம் கிடைக்கவும் யாராவதுமுயற்சி எடுங்கள்.......... Thanks...

  7. #1336
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவர் எம்ஜிஆர்... இந்த ஒரு பெயருக்கு கிடைத்த முக்கியத்துவமும், புகழும், மக்கள் செல்வாக்கும் வேறு எவருக்கும் கிடைத்ததில்லை.. கிடைக்கப் போவதுமில்லை. ஆனால் கனவுத் தொழிற்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் எப்போதும் அடுத்தவர் புகழைப் பார்த்து, தாங்களும் அதே போல வர வேண்டும் என்ற ஆர்வத்தில் காப்பியடிக்க ஆரம்பிக்கிறார்கள்... அடைமொழியைக் கூட அதே மாதிரி சூட்டிக் கொள்ளத் தலைப்படுகிறார்கள்.

    புரட்சித் தலைவர் புரட்சி நடிகராக இருந்த எம்ஜிஆர், பின்னர் மக்கள் திலகமானார். கொஞ்ச நாளில் அந்தப் பட்டங்களுக்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி அமைந்தது எம்ஜிஆருக்குத் தரப்பட்ட புரட்சித் தலைவர் பட்டம். அவர் இந்த மண்ணுலகிலிருந்து மறையும் வரை அதுவே அவரது நிரந்தரப் பெயராயிற்று (நல்லவேளை, நானே சூப்பர் ஸ்டார் என்று இன்றைய நடிகர்கள் போட்டுக் கொள்வதைப் போல, இந்தப் புரட்சித் தலைவரை பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை!

    புரட்சிக் கலைஞர் எண்பதுகளில் சினிமாவில் அடுத்தடுத்த வெற்றிகளைக் கண்ட விஜயகாந்துக்கு எம்ஜிஆரையும் பிடிக்கும், கலைஞர் கருணாநிதியையும் பிடிக்கும். பார்த்தார்... எம்ஜிஆரின் புரட்சியையும், கருணாநிதியின் கலைஞரையும் உருவி புரட்சிக் கலைஞர் ஆனார். கேப்டன் பிரபாகரனில் நடித்ததன் மூலம் கேப்டன் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டார். பின்னாலில் அவரது புரட்சிக் கலைஞர் பட்டம் காணாமல் போய், கேப்டன் பட்டம் நிலைத்துவிட்டது. இப்போது அதையும் எதிர்த்து யாரோ வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்.

    புரட்சி நாயகன் இன்று ஏதோ ஒரு கட்சியின் (அடிக்கடி கட்சிப் பெயரை மாத்திட்டதால நெசமாவே பேர் ஞாபகமில்லீங்க) தலைவராக இருக்கும் கார்த்திக்கை கொஞ்ச நாள் புரட்சி நாயகன் என்று அடைமொழி போட்டு அழைத்து வந்தார்கள். இப்போது அந்த அடைமொழியை அவரும் மறந்துவிட்டார், சினிமாவும் அவரை மறந்துவிட்டது. இடையில் கொஞ்ச காலம் மறைந்த முரளிக்கும் இந்த அடைமொழியைப் பயன்படுத்தினார்கள். நியாயமாக அவரை எவர்கிரீன் மாணவன் என்றுதான் அழைத்திருக்க வேண்டும்

    புரட்சித் தளபதி இந்தப் பட்டத்தை மதுரை ரசிகர்கள் தனக்குக் கொடுத்ததாகச் சொல்லி சில படங்களில் பயன்படுத்தினார் விஷால். ஆனால் அப்படி அவர் போட்டுக் கொண்ட எந்தப் படமும் ஓடவில்லை. பின்னர் ஒரு நாள் சத்தமின்றி புரட்சி, தளபதிகளையெல்லாம் கட் பண்ணிவிட்டு, வெறும் நடிகரானார் விஷால். ஆச்சர்யம்... அடுத்த மூன்று படங்களிலும் நல்ல பெயர் கிடைத்தது அவருக்கு!

    புரட்சித் தமிழன் இது சத்யராஜுக்கான அடைமொழி. தமிழர்களிடையே அவர் என்ன புரட்சி செய்தார், அட இந்த அடைமொழிக்கும் சினிமாவுக்கும்தான் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பதெல்லாம், மேடை கிடைத்தால் சினிமாவையும் முன்னணி நடிகர்களையும் கலாய்க்கும் சத்யராஜே யோசிக்க வேண்டிய சமாச்சாரம்.

    புரட்சி இயக்குநர் இந்த அடைமொழிக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா... நம்ம ஹீரோ விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன். அவர் அப்போல்லாம் தொடர்ந்து 'சட்ட'ப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். சட்டம் ஒரு இருட்டறையில் ஆரம்பித்து ஒரு டஜன் சட்டப் படங்கள் எடுத்து, பார்ப்பவர் கண்விழிகளைப் பிதுங்க வைத்துக் கொண்டிருந்த நேரம் அது. சட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசிவிட்டதாக நினைத்துக் கொண்டோ என்னவோ, புரட்சி இயக்குநர் என்ற அடைமொழியை அவர் எடுத்துக் கொண்டார்.

    புரட்சித் திலகம் இந்த டைட்டிலுக்குதான் இப்போது மல்லுக் கட்டு ஆரம்பித்துள்ளது. இந்த அடைமொழியை முதலில் வைத்துக் கொண்டவர் இயக்குநர் நடிகர கே பாக்யராஜ். அவர் அப்போது எம்ஜிஆர் பெயரில் ஒரு கட்சியும் நடத்தி வந்தார். புரட்சித் தலைவரிலிருந்து பாதியையும், மக்கள் திலகத்திலிருந்து மீதியையும் எடுத்து இந்த அடைமொழியை சூடிக் கொண்டார். என் கலையுலக வாரிசு என எம்ஜிஆரே அறிவித்திருந்ததால், இந்த அடைமொழி பெரிதாக யாரையும் உறுத்தவில்லை. இப்போது அந்த அடைமொழியைத்தான் சரத்குமார் சூடிக் கொண்டிருக்கிறார்.

    புரட்சித் தலைவி... சினிமாவில் இருந்த வரை ஜெயலலிதாவுக்கு திரையுலகம் வழங்கிய பெயர் கலைச்செல்வி. அவர் அரசியலுக்கு வந்து, எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, கட்சி நிர்வாகிகள் கொடுத்த அடைமொழி புரட்சித் தலைவி. சொல்லப் போனால் இவர் புரட்சித் தலைவி -ஆன பிறகுதான் சினிமாவில் 'புரட்சி' என்ற தலைப்பைப் பயன்படுத்துவதற்கே முற்றுப்புள்ளி விழுந்தது. இப்போது அதை மீறி புரட்சித் திலகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.. பார்க்கலாம்!.......... Thanks..........

  8. #1337
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பணத்தோட்டம் !
    __________________
    என்னதான் நடக்கும்
    நடக்கட்டுமே
    இருட்டினில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிவரும்
    தயங்காதே ஒரு தலைவன் இருக்கின்றான் மயங்காதே !

    கவிஞர் கண்ணதாசன் !

    இப்பாடல் பலரது வாழ்க்கைய புரட்டி போட்ட பாடல்
    பலரது தற்கொலைகளை
    தடுக்கப்பட்ட பாடல் !

    தன் இயலாமையால் மனம் வெம்பியவர்களுக்கு மாமருந்தாய் அமைந்த பாடல் !

    எத்துன்பம் நேர்ந்திடுனினும் நல்லதை நினைத்து போராடு உற்சாகத்தை இரத்தத்தில் செலுத்தி
    நெஞ்சை நிமிரவைத்த பாடல் !

    இது போன்ற காட்சிகளில் மக்கள் திலகத்தின் நடிப்பு விமர்சனத்திற்கும் உட்படுமோ ?

    ............ Thanks........

  9. #1338
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஐயா ஒரு பையன் எம்ஜிஆருக்கு மாலை போட்டு அந்த மாலையை அவனுக்கே திருப்பி போட்டார் எம்ஜிஆர்.நீங்கதான் போட்டுக்கணும் என்று அந்த பையன் வற்புறுத்தி மீண்டும் மாலையை அவனுக்கே அணிவித்தான். இந்த மாதிரி காட்சிகளின் போது பொதுமக்கள் கரவொலியும் விசில் ஒலிகளும் எழுந்தன என்று படிக்கும் பொழுது புல்லரித்து போனேன்.காரணம் .மாலை மட்டும் போடவில்லை.அங்கம் முழுவதும் முத்தமிட்டேன். அந்த பையன் தான் பெரும் பாக்கியசாலியும் நித்தம் நித்தம் வாழும் தெய்வம் புரட்சி தலைவரை வணங்கி கொண்டு இருக்கும் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் ஷிவபெருமாள். நான் தான்.இதில் ஒரு மாபெரும் அதிசயம் என்ன வென்றால் 36 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை கோடிட்டு காட்ட ஒரு புகைப்படம் தேவைபடும் பொழுது அதில் சம்மந்தப்பட்ட ஒருவனின் உழைப்பாலும் அவன் சார்ந்த அமைப்பின் பேனரே வருகிறது என்றால் புரட்சி தலைவர் இன்றும் மகா சக்தியாக விளங்குகிறார் என்பதற்க்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டு வேறு இல்லை. இந்த பதிவை போட்ட சகோதரருக்கு ஆயிரம் நன்றி கள்.இதில் ஒரு சம்பவம் என்னவென்றால் தலைவர் உண்ணாவிரதம் உட்கார்ந்த சில நிமிடங்களில் ஒரு அதிகாரி வாக்கிடாக்கியில் புரட்சி தலைவரிடம் ஓடி வந்து மேடம் (அன்னை இந்திரா) உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிவிட்டதாகவும் தாங்கள் உண்ணாவிரதம் இருந்தால் தமிழ் நாடு கொந்தளிக்கும் என்று சொன்னார்கள் என்று அந்த அதிகாரி கூறிய பொழுது தலைவர் உட்கார்ந்து விட்டு உடனே எழுந்தால் நன்றாக இருக்காது என்று கூறிவிட்டு இதை உண்ணாவிரதமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று மேடத்திடம் சொல்லி விடுங்கள் என்று சொல்லியதை நான் அருகே இருந்து கேட்டேன். மாலை போட நான் பட்ட கஷ்டம் தலைவர் என்னிடம் பேசியது எல்லாவற்றையும் போட்டால் நெடிய பதிவாகிவிடும்.இந்த பந்தலில் தலைவருக்கு திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களோட கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அண்ணன் பாஸ்கரன் டேவிட் மற்றும் பலர் அமர்ந்து இருந்ததை பார்த்தேன்.இந்த நிகழ்ச்சி யின் புகைபடத்தை பல வருடங்களாக தேடுகிறேன் கிடைக்கவில்லை.அது ஒன்று தான் என் கவலை.. நன்றி......... Thanks...

  10. #1339
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    நாடு போற்றிய நல்லவர்

  11. #1340
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •