Page 150 of 402 FirstFirst ... 50100140148149150151152160200250 ... LastLast
Results 1,491 to 1,500 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1491
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *இன்று கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு தினம்*

    *அக்டோபர் 8 , 1959*

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ( ஏப்ரல் 13 , 1930 - அக்டோபர் 8 , 1959 ) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

    பிரபல கவிஞர், சிந்தனையாளர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram) . அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

     தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப் படுத்தான்காடு (சங்கம்படைத் தான்காடு) என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் (1930) பிறந்தார். தந்தை நாட்டுப் புறக் கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத் தில் 2-ம் வகுப்பு வரை படித்தார்.

     குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 10-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார்.

     சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை வெளியிட்டுவந்தது.

     விவசாய சங்கம், பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய ‘குயில்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவாராம்.

     பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பரப்ப அயராது பாடுபட்டார். ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதியுள்ளார். ‘படித்த பெண்’ திரைப்படத்துக்காக 1955-ல் முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தார்.

     1959 வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்கள் , ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். 180 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால், அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன. இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், பாட்டாளி வர்க்கம் ஆகியவை இவரது பாடல்களின் கருப்பொருளாக இருந்தன.

     இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. ‘சின்னப் பயலே சின்னப் பயலே’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னரே’, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ ஆகியவை குறிப்பிடத்தக்க பாடல்கள்.

     எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தியவர். பாடுவதிலும் வல்லவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இவரது நெருங்கிய நண்பர்.

     மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயதில் (1959) மறைந்தார். குறுகிய காலமே வாழ்ந்த இவர், அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்தவேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார்.

     இவரது பாடல்கள் தொகுப்பு 1965-ல் வெளிவந்தது. இவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் பட்டுக்கோட்டையில் 2000-ல் மணிமண்டபம் அமைக்கப்பட்டது............ Thanks...........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1492
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "மக்கள் கவிஞர்"
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் நினைவு தினம் இன்று:

    (13-04-1930---08-10-1959)

    இவர் திராவிட இயக்கத்திலும்,
    பொதுவுடமை இயக்கத்திலும்
    மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
    இவர் 19 வயதிலேயே கவிதை புனைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பாடல்களில் இவர் உணர்ச்சிகளை காட்டியவர், குறைகளையும்
    ,வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிகாட்டியவர்.
    இவர் நாடக கலையில் மிகுந்த ஆர்வத்துடனும், விவசாய இயக்கத்தில் அசைக்க முடியாத பற்றுடனும் செயல்பட்டார்.

    இவரின் 29 ஆண்டு கால வாழ்வில் விவசாயம், மாடு மேய்தல்,உப்பளத்தொழில்,நாடக நடிகர் என பல்வேறு தொழில்கள் புரிந்தார்.

    இவர் புரட்சி கவிஞர் பாரதிதாசனிடம் உதவியாளராக சேர்ந்து இறுதியில் கவிஞராக உருவெடுத்தார்.

    உழைக்கும் வர்க்கத்தின் இருட்டே கழுவிய சூரியன்.

    மொழி, காதல், வீரம், பக்தி என்றிருந்த பாடல்களின் இடையே புரட்சி, பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு போன்றவைகளை புகுத்தி பாடல்களின் தடத்தை மாற்றியவர்.

    இவர் உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தியவர்.

    காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்...

    இவர் மூடநம்பிக்கைக்கு எதிராக

    வேப்பமரம் உச்சியில் நின்னு பேயோன்னு ஆடுதன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உன் வீரத்தைக் கொழுந்திலேயை கிள்ளி வைப்பாங்க...

    இன்றைய காலத்திற்கு பொருந்தும் வண்ணம் அன்றே உரைத்தான் புரட்சி கவி

    திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

    குறுக்குவழியில் வாழ்வு தேடும் குருட்டு உலகமடா இது கொள்ளையடிப்பதில் வல்லமைகாட்டும் திருட்டு உலகமடா...

    தனிமனித தன்னம்பிக்கையை வளர்க்க

    வறுமை நிலைக்கு பயந்துவிடாதே திறமை இருக்கு மறந்துவிடாதே...

    மக்கள் திலகம் எம்ஜிஆர் என் நாற்காலியின் ஒரு கால் பட்டுக்கோட்டை என்றார்.

    கவிஞர் கண்ணதாசன் பட்டுக்கோட்டை மறைவின் போது பட்டுக்கோட்டை சாய்ந்ததா? இல்லை பட்டுக்கோட்டையே சாய்ந்தம்மா! என்றார்.

    மக்கள்கவியை வணங்குகிறேன். ������.......... Thanks...........

  4. #1493
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று அக்டோபர் 8 - பாமர மக்களின் மொழியில் பொதுவுடைமை கருத்துகளை சொன்ன ஒரே கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களது 60 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று !

    தோற்றம் : 13-4-1930
    மறைவு : 8-10-1959..
    29 வருடங்களே இப்பூமியில் வாழ்ந்தவர் ஆனால் இந்த பூமி உள்ள மட்டும் அழியா பாடல்கள் தந்தவர்.!
    மகாகவி பாரதியாருக்குப் பிறகு, சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்களின் மனதில் வெள்ளமெனப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தனது வறுமையின் பொருட்டு விவசாயம், வியாபாரம், நாடக நடிப்பு, டிரைவிங், உப்பளத்தொழில் என எண்ணற்ற தொழில்களையும் வேலைகளையும் செய்தவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றவர். அவரது குயில் இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார். பொதுவுடமைக் கருத்தியலை தீவிரமாக நம்பியவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரையிசையைப் பயன்படுத்தினார். இளைஞர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களுக்கும் தனது கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்று விரும்பியவர். சினிமாவின் கதை சிச்சுவேஷன்களைப் பயன்படுத்தி, சிறுவர்களுக்காக பல பாடல்களை எழுதினார். அவற்றில் ・சின்னப்பயலே... சின்னப்பயலே சேதி கேளடா・ திருடாதே பாப்பா... திருடாதே・ தூங்காதே தம்பி... தூங்காதே・போன்ற பாடல்கள் மிகப் பிரபலமானவை. பட்டுக்கோட்டையின் பாடல்களை நாட்டுடமையாக்கி, அரசு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இவரையும் இவரது பாடல்களையும் நாம், நம் குழந்தைகளுக்கும் இந்த தலைமுறை இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்துவதின் வாயிலாக பெருமை தேடிக்கொள்வோம். அவரது பாடல்களை கேட்பதின் வாயிலாகவும் நினைவுக்கூறுவதின் வாயிலாகவும் இன்றைய நாளை நீங்கள் மகத்துவமானதாக மாற்றலாம்.( நண்பர் TPJ முகநூல் பதிவு)......... Thanks...

  5. #1494
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    சிவா அய்யா,

    103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.

    அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.

    நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
    தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.

    சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.

    அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.

    எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.

    உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.

    கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.

    அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.

    எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.

  6. #1495
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Bangladesh
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivaa View Post
    Originally Posted by SUNDARA PANDIYAN சிவா அய்யா,

    நான் ஆரம்பிக்கலை. நாடோடி மன்னன் பற்றி நீங்கள் கேட்டதால் நானும் இப்ப கேட்கிறேன்.

    ஆகஸ்ட் 13 க்கு முதல் பேசப்பட்டவிடயம் அதற்கு உங்களிடமிருந்து பதிலில்லை

    அதன்பின் பலமுறை வந்து போனீர்கள் ஒன்றும் கேட்கவில்லை ஆனால் இப்பொழுது கேட்பதாக சொல்கிறீர்கள்

    உங்களுக்கே முன்னுக்கு பின் முரண் தெரியவில்லையா? தற்பொழுது
    வசந்த மாளிகை இணைந்த 100 நாட்கள் கண்டதும் மனம்

    பொறுக்கமுடியாமல் ஓடிவந்து மறுபடி ஆரம்பித்துவிட்டு நீங்கள் ஆரம்பிக்கவில்லை என்கிறீர்கள்.


    இணைந்த என்றால் ஒரே தியேட்டரில் இல்லை என்றாலும் ஒரே ஊரில் தொடர்ந்து வேறு வேறு தியேட்டர்களில் 100 நாள் ஓடினால் இணைந்த என்று போட்டுக் கொள்ளலாம்.

    தமிழகம் முழுவதும் இணைந்த என எழுதப்பட்டுள்ளது கவனித்துப்பாருங்கள்

    ஆனால், ஒரு காட்சி ஓடிய 55 நாள்களுக்குப் பிறகு ஒரு ஊரில் எங்குமே ஓடாத ஒரு படத்தை திடீரென வெளியிட்டு இணைந்த 100வது நாள் என்று போட்டால் அது மோசடி இல்லாமல் வேற என்ன?


    பல இடங்களில் தொடர்ந்து வெளியிப்பட்டு ஊர் தியேட்டர் விபரங்கள் வெளியிடப்பட்டன.


    103 நாள் விளம்பரத்தில் இணைந்த என்று எங்கே போட்டிருக்கிறார்கள்.

    தவறவிடப்பட்டது உங்களுக்கு வசதியாகப் போய்விட்டது

    அதோடு, விளம்பரத்தில் கீழே படம் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் 103வது நாளில் படம் ஓடுவதாக போட்டிருக்கிறார்கள். அதுவும் ஏமாற்றுவேலை. அதற்கு உங்களிடம் பதில் இல்லை.

    அந்த தியேட்டர்களில் ஓடவில்லை என்பதை சென்று பார்த்தீர்களா?


    எங்கள் ஆட்கள் சொல்லித்தான் உங்கள் படத்தை எடுத்தார்கள் என்கிறீர்கள். முக்கி முக்கி ஓட்டிப் பார்த்தும் படம் ஓடாததால் இப்படி ஒரு புரளியா. எங்கள் ஆட்கள் உண்மையில் அப்படி இறங்கியிருந்தால் ஒரு வாரம் கூட உங்கள் படம் ஓடாது. பணம் கட்டி நீங்கள் ஓட்டியதை நாங்கள் தடுக்கவில்லை.
    அதனால்தான் அதிகபச்சமாக 55 நாள் ஒரு காட்சியாக உங்கள் படம் ஓடியது. இதிலிருந்தே நாங்கள் படத்தை எடுக்கச் சொல்லவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


    பணமா பாசமா? படத்தை நெல்லையில் வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தார்கள் 174 நாளுடன் நிறுத்தப்பட்டது .சின்னத்தம்பி படத்தையும் நெல்லை மற்றும் சில ஊர்களில் வெள்ளிவழா ஓடவிடாமல் தடுக்கப்பார்த்தார்கள் உரியவர்கள் மேலிடத்தில் தொடர்பு கொண்டதனால் ஆட்டம் பலிக்கவில்லை. ராஜா மறுவெளியீடு கண்டபொழுது ஆட்டம் போட்டு சிவாஜி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்கள் . சிவந்த மண் படத்தை வெள்ளிவிழா ஓடவிடாமல் தடுத்தது இப்படி பல உண்டு. இப்படி அடாவடித்தனம் செய்து மற்றவர்களின் படங்களை ஓடவிடாமல் தடுத்துத்தான் உங்கள் படங்கள் முன்நிலை என்று காட்டநினைப்பது பிட் அடிச்சு பாஸ் பண்ணுவதற்கு சமன்.




    உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்கிறீர்களே. என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லாதவற்றை சொல்லவா?

    மனோகாரா படம் சென்னயில் ஒரே வாரத்தில் 10 லட்சம் வசூல் என்று நீங்களே உங்கள் திரியில் புத்தகத்தில் வந்ததை போட்டது பற்றி கேட்டதற்கு பதில் இல்லை.

    புத்தகத்தில் வந்தது பற்றி புத்தகத்தை எழுதியவரிடம்தான் கேட்கவேண்டும். அது ஒரு விளம்பரத்தில் வந்தது அதில் உள்ள கமா, புள்ளி என்பனவற்றை தவறான இடத்தில் போட்டுவிட்டாரா என்பதை அவர்தான் சொல்லமுடியும்.


    மறுவெளியீட்டில் எங்கயும் 100 நாள் ஓடாத ராஜபார்ட் ரங்கதுரை நீங்கள் விளம்பரம் செய்து விழா கொண்டாடியபடி தொடர்ந்து 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.

    கேள்வி கேட்டீர்களா? தகவல் மட்டும் எழுதினீர்களா?

    மறுவெளியீட்டில் பல நாட்கள் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட சிவாகாமியின் செல்வன் 100 நாள் ஓடியதாக பொய்யாக விளம்பரம் செய்து விழா கொண்டாடீனீர்கள். உண்மையில் அது 100 நாள் ஓடியதா என்று கேட்டதற்கு பதில் இல்லை.


    கேள்வி கேட்டீர்களா? தகவல் மட்டும் எழுதினீர்களா?


    ஆமாம். மக்கள் திலகம் ரசிகர்கள் மட்டுமே மக்கள் இல்லை. ரசிகர்கள் இல்லாதவர்களையும் சேர்த்துதான் மக்கள்.

    அந்த மக்கள்தான் மக்கள் திலகத்தை 3 முறை தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.

    அதே மக்கள்தான் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருவையாறு தொகுதியில் 10,000க்கும் மேல் ஓட்டு வித்தியாசத்தில் உங்கள் அபிமான துணை நடிகரை தோற்கடிச்சார்கள்.

    நீங்கள் மக்கள் திலகத்தை ஸ்டண்ட் நடிகர் என்பதற்காக நான் உங்கள் அபிமான நடிகரை துணை நடிகர் என்று சொல்லவில்லை. கடைசி காலத்தில் மார்கெட் போயி அப்பா, தாத்தா வேசத்தில் துணை நடிகராக நடிச்சார். தேவர் மகன் படத்தில் நடிச்சதற்காக உங்கள் நடிகருக்கு சிறந்த துணை நடிகர் விருது இந்தியா அரசு வழங்கியது. துணை நடிகர் என்பதற்கு இந்தியா அரசு அங்கீகாரம் அளித்தது. இதுவே அவர் துணை நடிகர் என்பதற்கு ஆதாரம்.

    சிவாஜி கணேசன் அவர்கள் முதல் படத்தில் கதாநாயகனாக நடித்தாலும் கௌரவ நடிகராக வில்லத்தனம்கொண்ட பாத்திரங்களில் நடித்திருக்கிறார் வயதானபின் வயதான வேடத்தில் தந்தை பாதத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவாஜி அவர்கள் நடிப்பென்று வந்துவிட்டால் பாத்திரங்களைப்பற்றி கவலைப்படாதவர் . ஸ்டண்ட் நடிகர்தான் (personality disease ) ஆளுமை வியாதி பிடித்த மனநோயாளி

    உங்கள் துணை நடிகருக்கு கேமராவுக்கு முன்னாள்தான் நடிக்கத் தெரியும். அரசியலில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவர் அரசியல்ல வெற்றி பெறவில்லை என்று சொல்லாதீர்கள்.

    அரசியல்லில் நடிச்சுதான் காமராஜர் முதல் அமைச்சர் ஆனாரா?

    காமராஜர் அரசியலில் நடிக்கத்தெரியாததனால்தானே தோற்கடிக்கப்பட்டார்.

    காமராஜர அவமானப்படுத்தாதீர்கள்.

    நீங்கள் எல்லோரும் சேர்ந்துதானே சிறந்த அரசியல் ஞானியை தோற்கடித்து அவமானப்படுத்திவிட்டீர்கள்



    சிவா அய்யா,

    103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.

    அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.

    நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
    தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.

    சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.

    அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.

    எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.

    உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.

    கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.

    அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.

    எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.

  7. #1496
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் கருணாநிதி பற்றி கவியரசர் #கண்ணதாசன்

    திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்...........

    இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.
    கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.
    திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
    “சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
    செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.
    நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.
    “என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

    மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
    “தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
    “என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.
    “எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
    “இருக்காதே” என்றேன்.
    “இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
    இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
    அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
    கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
    “உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
    “என்ன நினைக்கிறாய்?” என்றார்.
    “கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
    “பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
    ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

    1971 பொதுத் தேர்தலே சான்று.
    அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
    இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.
    திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

    ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.
    இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

    1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
    அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.
    சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
    ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு.

    கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

    எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
    முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.
    அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.
    ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.
    கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.
    அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.
    இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.
    இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.
    சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

    ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.
    அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.
    அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

    அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

    எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.
    அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
    கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.
    எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.
    திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.
    அதனால் எம்.ஜி.ஆருடைய விலகல் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

    மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.
    விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

    “பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”
    - என்றும் அவர் காட்டினார்.

    அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.
    அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

    எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.
    யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

    எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.
    ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
    திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
    சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

    இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.
    ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.
    கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.
    பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.
    கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

    எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
    நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
    ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

    இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.
    ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.

    அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.
    ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.
    இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.
    பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

    ஆதாரம் -
    கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)...........மீள் பதிவு... Thanks.............

  8. #1497
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பேவா அதிசியங்கள் சில உங்களுக்கு தெரிந்தவை பல தெரியாத நிகழ்வுகள்

    சில காட்சிகள் படம் ஆக்குவதற்கு மறுநாள் காலை 5 மணிக்கு புறப்பட்டால் தான் தளத்துக்கு ஒரு 7 அல்லது 8 மணிக்கு துவங்க முடியும் என்றால்

    நாங்க அசந்து தூங்கி கொண்டு இருப்போம். 4 அரை மணிக்கு என் ரூம் கதைவை தட்டும் சத்தம் கேட்டு திறந்து பார்த்தால் அன்று பூத்த ஒரு புது மலர் போல காட்சி கொடுத்து என்ன முதலாளி புறப்படலாமா என்று கேட்பார்...நான் அப்பிடியே அசந்து போவேன் எப்பிடி இப்படி என்று

    பல படங்களை எங்கள் நிறுவனம் தந்து உள்ளது...நிறைய கதாநாயகர்கள் எங்களை காக்க வைப்பார்கள்...ஆனால் எம்ஜியார் போல ஒத்துழைக்கும் ஒரு நடிகர் இனிமேல் இந்த தமிழ் திரை உலகம் பார்க்க வாய்ப்பு இல்லை.

    புதிய சூரியனின் பார்வையிலே அந்த பாடல் வரிக்கு சுமார் 30 அடி உயரத்தில் இரு மலை குன்றுகளுக்கு இடையில் சூரியன் மறையும் வேளை... அங்கு அப்போது சூரியன் உதிப்பது போல படம் பிடிக்க முடிவு.

    காட்சிக்கு எல்லோரும் தயார்...இன்னும் ஒரு சில நிமிடங்களில் சூரியன் அந்த குன்றுகளுக்கு இடையே மறைய வந்து விடும் என்பதை உணர்ந்து சுறு சுறு என்று அந்த மலைப்பகுதியில் ஏறி சூரியன் அங்கு வரவும் சரியான கோணத்தில் ஒரு போஸ் கொடுத்து அந்த ஷாட்டை ஒரே டேக்கில் எடுக்க வைத்ததை இன்று நினைக்கும் போது பிரமிக்க வைக்கும் நினைவுகள் அவை..தொழிலில் அப்படி ஒரு ஈடுபாடு...எல்லாம் தெரிந்தவர் அவர்...ஆனால் வீண் செருக்கு கிடையாது.

    ஒரு நாள் ஓய்வின் போது அருகில் இருந்த ராணுவ மருத்துவ மனைக்கு போவோம் முதலாளி என்கிறார்...ஆஸ்பத்திரியில் என்ன என்று நான் யோசிக்க வாங்க நம்ம நாட்டுக்கு காவலாளி அவர்கள் என்று வற்புறுத்த அங்கு போனால் கண்ணீரை வர வைத்த காட்சிகள் எல்லா பெட் களிலும் அங்கு அங்கு அடி பட்டு கிடக்கும் நம் இந்திய ராணுவ வீரர்கள்.

    தனித்தனியே ஒவ்வொரு வீரரிடம் போய் அவர் அவர்கள் நலம் விசாரித்தார்... ஒரு வட நாட்டு ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட ஒருவருக்கு தலை முதல் கால் வரை காயங்கள்....அவரிடம் சென்று அவரை தடவி கொடுக்க அருகில் இருந்த ஒரு ராணுவ அதிகாரி இவர்தான் எம்ஜியார் மிக பெரிய தென்னிந்திய நடிகர் என்று மொழி பெயர்த்து சொல்ல அந்த வீரரின் கண்களில் இருந்து வழிந்து வந்த கண்ணீரை எம்ஜியார் துடைக்க சுற்றி இருந்த அனைவரும் கண்ணீரில் மூழ்க அந்த நிலையில் கூட அந்த வீரர் இவரை கை எடுத்து வணக்கம் செய்ய முற்பட..

    கொண்டு வந்த அத்துணை பொருட்களையும் அவர்களுக்கு வழங்கி இன்னும் பணம் ஊருக்கு போய் உங்களுக்கு அனுப்புகிறேன் என்று அந்த அதிகாரியிடம் எம்ஜியார் சொல்ல அந்த இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை...என்ன மனிதர் இவர்...வந்தோமா நடிச்சோமா என்று இல்லாமல்...
    அது..அவர் தான் நம் மக்கள் திலகம்.

    அனைவரும் குளிரில் நடுங்கி அத்துணை சுவட்டர், ஜெர்கின் அணிந்து இருப்போம் அவர் மட்டும் அதிகாலையில் வெற்று உடம்போடு பால் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்....குளிர் தெரியவில்லையா என்று கேட்டால் உடற்பயிற்சி செய்யும் போது நம் உடலில் இருந்து வெளியேறும் வெப்பம் இதையும் எதையும் தாங்கும் என்பார்.

    அமெரிக்க சிகிச்சை முடிந்து உடல் நலம் குன்றி முதல்வர் ஆக இருந்த நேரம்...சம்சாரம் அது மின்சாரம் வெற்றி விழாவுக்கு தேதி தந்தார்....186 பேருக்கு மார்பிள் கொண்டு தயாரிக்க பட்ட ஷீல்டு உங்களால் தூக்கி கொடுக்க முடியுமா என்று நான் கேட்க நாளை விழாவில் பாருங்கள்....என்று சொல்லி அத்துணை பேருக்கும் அந்த கணம் ஆன விருதை தன் கைகளால் தூக்கி கொடுத்து இடையில் என் மகனை அழைத்து அப்பாவுக்கு வயது ஆகி விட்டது நீ வந்து ஒன்று ஒன்றாக தூக்கி என் கையில் கொடு என்று மேடையில் என்னை கேலி செய்து அத்துணை பேருக்கும் அதை கொடுத்து அவ்வளவு பேர் களுடனும் தனித்தனியா புகை பட போஸை கொடுத்து ஒரு கட்டத்தில் அந்த ஷீல்டு அவர் கையை கிழித்து ரத்தம் வருவதை மறைத்து விழா முடிந்தவுடன்

    என்ன முதலாளி மகிழ்ச்சியா என்று இந்த நாட்டின் முதல்வர் என்னிடம் கேட்ட போது உறைந்து நின்றேன் நான்

    பல நாட்கள் அதன் பின் நினைப்பேன்...இது போல ஓர் முதல்வர் யாரையும் மதிக்க தெரிந்த ஒரு மனித நேயர் இனி இந்தியாவில் எந்த பகுதியிலும் பிறக்க வாய்ப்பு இல்லை என்று..

    தரம் உயர்ந்தாலும் தன் தரம் குறையாத மக்கள் திலகம் புகழ் என்றும் காப்போம்..

    சொன்னவர் பதிவிட தேவை இல்லை ஏ. வி.எம்...சரவணன் அவர்கள் நினைவுகள்

    நாளை மீண்டும் சந்திப்போம்...இதுவே ஆரம்பம்..இன்னும் இருக்கு ஆயிரம் அற்புதங்கள்... நன்றி.

    இந்த படத்தில் சரோ அப்பவாக

    வி.கே ராமசாமி நடிக்கலாம் என்று தலைவர் சொல்ல...இல்ல அப்பா அவரை ஏற்கெனவே அவரை ஒப்புதல் செய்துவிட்டார் என்று சொல்ல....ஐய்யோ நான் எண்ணியது தவறு....அப்பாவிடம் சொல்லவேண்டாம் அவரே இருக்கட்டும் என்று சொன்னார் நம்ம எம்ஜியார்.. நன்றி............. Thanks...........

  9. #1498
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று 09-10-1970 - 09-10-2019 "எங்கள் தங்கம்" 49 ஆண்டுகள் நிறைவு... 50ம் ஆண்டு தொடக்கம்... அன்று திமுக முக்கிய பிரமுகர்கள் கடனை தீர்த்து வைத்த காவியம்.........

  10. #1499
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    Originally Posted by SUNDARA PANDIYAN சிவா அய்யா,

    103-வது நாளில் சென்னையில் ஓடாத தியேட்டர்களில் எல்லாம் ஓடியதாக வசந்த மாளிகை படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    அது அப்படி ஓடவில்லை என்பது உங்களுக்கும் தெரியும்.

    அதனால்தான் நேரிடையாக பதில் சொல்ல முடியாமல், நீங்கள் போய் பார்த்தீர்களா என்று கேட்கீறீர்கள்.

    நான் சென்னையில் இல்லை. ஆனால், சென்ன நண்பர்கள் மூலம் பேபி ஆல்பட்டை தவிர 103 வது நாளில் வேறு எங்கயும் படம் ஓடவில்லை என்று உறுதியாகத்
    தெரியும். ஆன் லைனிலும் தியேட்டர் புக்கிங்கில் சென்று பார்த்தேன். படம் இல்லை.

    சரி. நீங்கள் கனடாவில் இருக்கிறீர்கள். இங்கு உள்ள உங்கள் சென்ன நண்பர்கள் யாராச்சும் ஆமாம். 103 நாளில் பேபி ஆல்பர்ட்டை தவிர விளம்பரம் செய்த அந்த தியேட்டர்களில் படம் ஓடியது என்று சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்.

    அந்த அளவுக்கு பொய் பேச மாட்டர்கள் என்று நினைக்கிறேன்.



    சொல்லப்பட்டவிடயத்துக்கு பதில் சொல்லாமல் எப்பொழுதும் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
    முடிச்சுப்போடுவது இவர்களுக்கு கை வந்த கலை

    தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவதுபொல் பாவனை செய்பவனை எழுப்பமுடியாது.
    வாதத்திற்கு மருந்து உண்டு பிடிவாதத்திற்கு மருந்து கிடையாது.

    வசந்த மாளிகை 103 வது நாள் சென்னையில் பேபி ஆல்பர்ட்டில் மட்டும்தான் திரையிடப்பட்டது
    பேபி ஆல்பர்ட் தவிர சென்னையில் வேறு தியேட்டர்களில் 103 வது நாள் திரையிடப்படவில்லை
    ஆனால் வேறு சில ஊர்களில் திரையிடப்பட்டிருந்தது விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.
    அதைதான் போய் பார்த்தீர்களா என கேட்டிருந்தேன்




    எங்கள் தலைவர் மனநோயாளி அல்ல.

    உங்கள் துணை நடிகர்தான் கடைசி காலத்தில் சினிமாவில் மார்க்கெட் இழந்து மனநோயாளியாகி அரசியலில் புகுந்து கட்சித் தலைவர் பதவியாச்சும் கிடைக்காதா என்று ஆசைப்பட்டு ஜனதாதளத்தில் எல்லாம் சேர்ந்தார். தலைவர் பதவிக்காக.





    கடைசியில் அந்தக் கட்சியும் காலியாகிவிட்டது. பாவம்.

    அரசியல் ஞானி காமராஜருக்கு துரோகம் செய்து விட்டு ரசிகர்களுக்கு தெரியாமல் எந்த முடிவும் எடுக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு கடைசியில் யாருக்கும் தெரியாமல் டெல்லி போய் மரகதம் சந்திரசேகர் மூலமாக இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணை நடிகர்தான். கள்ளம் கபடம் இல்லாதவர் ஆச்சே. அப்படித்தான் செய்வார்.

    எமர்ஜென்சியால் நொந்துபோன காமராஜருக்கு துரோகம் செய்து அவர் மறைந்தவுடன் ரசிகனுக்கும் தெரியாமல் யாருக்கும் சொல்லாமல் டெல்லி ஓடி இந்திரா காங்கிரசில் சேர்ந்தது உங்கள் துணைநடிகர்தான். நாங்கள் இல்லை.


    நடிகர்திலகம் அன்றுதொட்டு அவர் வாழ்ந்தவரை கொடுத்தகொடைகள் இது நாள்வரை
    பெரிதாக வெளியே தெரியாமல் இருந்தவை தற்பொழுது முழுமையாக தெரியவர ஆரம்பித்துள்ளது.
    ஒப்பீடு செய்தால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைவிடவும் , சினிமா நடிகர்களுக்குள்
    ஏனைய நடிகர்களைவிடவும் பன்மடங்கு கொடுத்தவர் நிஜவள்ளல் கர்ணன் சிவாஜி கணேசன் மடடுமே.
    அப்படி இருக்கையில் ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் ,அவரின் அடிவருடி பத்திரிகைகள்,பணப்பிசாசு எழுத்தாளர்கள்
    முதுகு எலும்பற்ற அரசியல்வாதிகள்,கைகூலிகள் அனைவரும் நடிகர் திலகத்தின் கொடை திறன் தெரிந்தும்
    கஞ்சன் என்றுதானே சொல்கிறார்கள்.

    அதேபோன்று எந்தவித பதவிக்கும் ஆசைப்படாத,நடிகர் திலகத்தை பார்த்து பதவிக்காக கட்சியில் சேர்ந்தார் என்று எழுதுகிறீர்கள்
    எழுதுபவர்களுக்கு கை கூசியிருக்கும் சொல்பவர்களுக்கு நா கூசியிருக்கும்.





    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #1500
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் படைப்பில் வெளியான மகத்தான வெற்றிக் காவியம் , வசூல் புரட்சிக் காவியம் (09.10.1970. - 09.10.2019 ) பொன்விழா தொடக்கம் "எங்கள் தங்கம் " தலைவர் கதாநாயகனாக பவனி வந்த 89 வது காவியம்! கருணாநிதியின் குடும்பத்தை வாழ வைக்கவே தலைவர் முழுப்பொறுப்பையும் ஏற்று முன்னின்று நடித்து கொடுத்து எல்லா ஏரியாவையும் நல்ல விலைக்கு விற்று பல லட்சங்களை லாபமாக கொடுத்தார். தலைவரின் முழு சம்பளமும் இலவசமாகும். அது மட்டுமின்றி தலைவரின் சொந்த பணத்தையும் இப்படத்திற்காக செலவழித்தார். முரசொலி மாறன் தலைவரை கலையுலகின் பாதுகாவலர் எனவும் தங்கள் குடும்பத்தின் தெய்வமாகவும் வழிபட்டார். கருணாநிதியும் தலைவரை புகழ்ந்து கவிதையே பாடினார். இதுவெல்லாம் வரலாறு.... எங்கள் தங்கம் திரைப்படம்... வியட்நாம் வீடு, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம் படங்களின் வசூலை வென்றது. சென்னை பிராட்வே 100, சித்ரா 97, மேகலா 84, நூர்ஜகான் 56 சென்னை நகர வசூல் : 10 லட்சத்தை நெருங்கியது. சேலம் 107, மதுரை 105, திருச்சி 105, வேலூர் 74, நெல்லை 71, தஞ்சை 68, கும்பகோணம் 75, புதுச்சேரி 76, கோவை 78, ஈரோடு 78, மற்றும் திண்டுக்கல், காரைக்குடி, விருதுநகர், பழனி, தர்மபுரி, ஆத்தூர், கரூர், தி.மலை, ப.கோட்டை, புதுக்கோட்டை, விழுப்புரம் தூத்துக்குடி,நாகர் கோவில், திருப்பூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் 50 நாளை கடந்து சாதனை. மற்றும் பல ஊர்களில் வசூலில் மாபெரும் சாதனைகள் பல நிகழ்த்திய காவியம். ஏராளமான சாதனையில் பல வெளியீடுகளை பெற்று இன்றும் வெள்ளித் திரையை அலங்கரிக்கும் பொன்விழா தொடக்க காவியம்...... கலையுலக சக்கரவர்த்தியின் எங்கள் ( தமிழக மக்களின்) தங்கம் ! திரையுலகை 80 ஆண்டுகளாக வாழவைக்கும் ஒரே வசூல்பட மாமன்னர் மக்கள் திலகமே! உரிமைக்குரல் ராஜு............ Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •