Page 164 of 402 FirstFirst ... 64114154162163164165166174214264 ... LastLast
Results 1,631 to 1,640 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1631
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *அஇஅதிமுக 48ம் ஆண்டுவிழா தொடக்கும் இந்த நேரத்தில் சில நினைவுகள்...*
    *திமுகழகத்தில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள்* *கூறியபடியே, மறுநாளே பொது மக்களின் கருத்தை அறிய தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார்.*
    *முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.*
    *ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம்,* *குரோம்பேட்டை,* *மீனம்பாக்கம்,* *தாம்பரம்,* *காஞ்சீபுரம்,* *ஆரணி,* *அரக்கோணம் ஆகியவை ஆகும்.* *அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம்,* *ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து,* *எம்.எம். காதர் முதலியோர் சென்றனர்.*
    *அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.*
    *பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார்.* *மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்* *”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள்,* *உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”.* *என்று முழங்கினார்கள்.*
    *அதற்குப் பின்னர்,* *தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று,* *உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப்பட்டார்.* *பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார் மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி,* *இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.* *அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காகக் கண்விழித்துக் காத்திருந்தது.*

    *நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன.* *வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின.* *திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது* *தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர்.*
    *அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார்.* *ஆனால்,* *மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது.* *அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது என்று எம்ஜிஆர் திகைத்து நின்றார்.*
    *அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர்.* *அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்.*
    *பின்பு அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று,* *மேடையில் அமரச் செய்தனர்.*

    *மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்.* *பின்பு அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை பற்றி உணர்ச்சி உரையாற்றினார்.* *பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால்,* *அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சமமாகும்.* *நீங்கள் அளிக்கும் பதில் என்ன?* *நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?* *என்று கேட்டார்* *புரட்சிதலைவர்.*
    *உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில் ”அங்கீகரிக்கிறோம்"* *"அங்கீகரிக்கிறோம்”* *என்று முழங்கினார்கள்.* *காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது.* *தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கிறார்கள் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.*

    *காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர் ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார்.* *பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார்.* *முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம் எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.*
    *காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்ஜிஆர் ஆரணியிலும்,* *அரக்கோணத்திலும் கேட்டார்.* *மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.*
    *இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேள்வியும் ஒன்றே,* *மக்கள் அளித்த பதிலும் ஒன்றே* *எம்ஜிஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.*

    *ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும்.* *அதேபோல, ஓர் அரசியல்வாதி,* *புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயம்தான்.*
    *மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள் அதுதான் வாடிக்கையாகும்.* *இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்…*
    *அவருக்கு பின்பு புரட்சித்தலைவி அம்மா,* *அண்ணன் ஓபிஎஸ்,* *அண்ணன் ஈபிஎஸ்* *ஆகியோர்களின் வழியில் உண்மையான தொண்டனாக என் பயணம் தொடர்கிறது...* *தொடரும்...* *சி.ரங்கநாதன்*
    *நட்சத்திர பேச்சாளர்,* *நடிகர், இயக்குநர்*��✌������............ Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1632
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்றும் இன்றும் என்றும் மக்கள் செல்வாக்கில் முதலிடம் பெற்று திகழும் ஒரே தலைவர் தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தநாள்...(17 அக்டோபர் புரட்சி - அண்ணாதிமுக தொடங்கப்பட்டநாள்)......... Thanks...

  4. #1633
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கட்சி தொடங்கப்பட்ட
    48 ஆண்டுகளில் , ஆளுங்கட்சியாகவே 34 ஆண்டுகள் அஇஅதிமுக ;

    ஒவ்வொரு தொண்டனும் பெருமிதம் கொள்வோம் !......... Thanks.........

  5. #1634
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் 48 ஆம் ஆண்டு துவக்க நாள்........ இன்று ,தமிழகத்திலேயே 29 ஆண்டுளாக ஆட்சி செய்யும் ஒரே இயக்கம்......... அண்ணா திமுக , இது வரை ஸ்தாபன காங்கிரஸ் 20 ஆண்டுகளும் , திமுக 19 ஆண்டுகளும் ஆட்சி செய்துள்ளன,100 நாட்கள் ஒடுமா ? இந்த கட்சி என்று கேலி பேசிய தலைவர்கள் மத்தியில் சிங்கமென, யானையாக... நிமிர்ந்து நிற்கின்றது... பரம்பரை ஆட்சி குடும்பம் ஆட்சி நடந்தும் கட்சிகளைப் போலின்றி, எளிய தொண்டனும் தலைமைப்பொறுப்புற்கு வரமுடியும் என நிரூபிக்கும் ஒரே மக்கள் இயக்கம் ...அண்ணா திமுக ... எந்த கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது...வாழ்த்துக்களுடன்........தோழர்கள்.. . Thanks...........

  6. #1635
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர்,முதல்வர் ஆகும்போது60வயது என்று யார் சொன்னது,தலைவர் தன்வயதையோ,பிறந்தநாளையோ,சொன்னது உண்டா,தலைவர் முதல்வர் ஆன பிறகு சட்டமன்றத்தில் பேசும்போது ஒரு முறை தான், சிறுவனாக பாய்ஸ் நாடகக்கம்பெனியில் இருந்த சமயம் சென்னைக்கு எம்டன் என்ற கப்பல் வந்தது அதைப்பார்க்கலாம் என்று போனோம் பார்க்க முடியவில்லை என்று பேசினார் இது சட்டமன்றக் குறிப்பேட்டில் இருக்கும் ,அந்தக்கப்பல் வந்தது1914ஆம் ஆண்டு அதைத் தன் நினைவில் வைத்து சொல்கிறார. என்றால் அப்போது தலைவருக்கு என்ன வயது இருந்திருக்கும், ஆனால் இப்போது சொல்கிறார்கள் தலைவர் 1917ல் பிறந்தார் என்று இது எப்படிச் சாத்தியம்?!!!... Thanks... MK.Raja...

  7. #1636
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது தேவையில்லாத சர்ச்சை... தலைவர் என்றும் இளைஞர் ...அவர் வயதைப் பற்றி அவரே நினைத்து பார்க்காத போது நமக்கு ஏன் இப்போது இந்தச் சர்ச்சை இதை விடுத்து அவர் புகழ்பாடும் புனிதப் பணியைச் செய்வோமே...... Thanks...

  8. #1637
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .......... Thanks...

  9. #1638
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வரலாற்று ஏடுகள்
    வாழ்ந்த வரலாறை
    தன்னுள் ஆழமாய்
    பதித்துக்கொண்ட
    நாள்..

    இந்திய
    துணைகண்டமே
    மூக்குமேல் விரல்வைத்து
    ஆச்சர்யத்தில்
    * ஆ* வென
    வாய் பிளந்துப்போனது.

    காலமே முன்னின்று
    புரட்சித்தலைவரை
    தன்னுள் அழியாது
    உளிகொண்டு
    செதுக்கிக்கொண்டது..

    சிறு அத்தியாயமாகத்தான்
    தொடங்கியது
    இந்த
    வரலாற்று தினத்தின் முதல் பக்கம்...

    பின்னாளில்
    பல அத்தியாயத்
    தொகுப்பாய்
    தொடர்ந்துப்போனது..

    எத்தனையோ நிகழ்வுகளை ஆவணப்படுத்திய காலம்
    இந்த நன்னாளை
    மட்டும் கொண்டாடிக்கழிக்கிறது
    அரை நூற்றாண்டான
    போதும்..

    நம் புரட்சித்தலைவரை
    வரலாற்றுக்கும்
    பிடித்திருக்கும் போல..

    விளைவுதான்
    இன்னும் தலைவரை
    தினமும் தலைமுறை
    கடந்தும் கடத்திக்கொண்டிருக்கிறது
    அடுத்தடுத்த தலைமுறைக்கு..

    கருணையற்ற நிறைய
    நிதியுள்ள
    வஞ்சனின் சூழ்ச்சி
    வெளியேற்ற
    தாங்கப்பிடித்தன
    தமிழ் மக்கள் கரங்கள்

    தன்
    இதயத்தில் பதித்த
    அண்ணாவை
    இயக்க கொடியிலும்
    கண்டார் தலைவர்.

    விரல் நீட்டினார்
    * அண்ணா *
    கருப்பு சிவப்புக்கு
    நடுவே
    தூய வெள்ளையில்..

    தமிழக பட்டித்தொட்டியெங்கும்
    கழக கொடிமரங்களில்
    மறைந்தும்
    உயிர்த்திருந்தார்..

    தூக்கியெறிந்தவனுக்கு
    நன்றி..

    வருடக்கணக்கில்
    அண்ணா கண்ட
    கழகத்தில்
    நிரந்தரமாயிருந்தால்
    அங்கீகாரம் கிடைத்திருக்குமா
    தலைவருக்கு..

    வெளியேற்றிய
    ^க.....தி* செயலுக்கு
    பாரட்டு ..

    நீ
    நினைத்திருப்பாய்
    தமிழகத்தையே
    அடித்து
    உன் வீட்டு
    உலையில் போடலாமென்று...

    விடுவாரா
    பிறர்பொருளை
    அபகரிக்க நினைக்கா
    எம் தலைவன்.

    நாசமாகி வனவாசம்
    போனாய்
    பதினாலு ஆண்டுகள்..

    வள்ளல்
    இருக்கும் வரை
    ஆட்டி ஆட்டி
    சிறு அசைவைக்கூட
    ஏற்படுத்த முடியாத
    நீயெல்லாம்
    அரசியல் சாணக்கியனாம்..

    எவனோ உன்னை
    புகழ்ந்து பாடி
    பொறுக்கித்திண்ண
    முயன்ற
    திண்ணைத்தூங்கி
    பயலாக்கத்தான்
    இருக்க வேண்டும்
    அவன்..

    விடமாட்டோம்
    மரணித்து விட்டாலும்..

    எம் தலைவனுக்கு
    நீ
    செய்த துரோகங்களை
    பட்டியலிட்டு சுட்டிக்காட்டிக் கொண்டுதான் இருப்போம்..

    தகரமாய் நினைத்தாய்
    72 ல்
    அது தங்கமாகி
    இன்னும் ஜொலித்தபடி..

    கெடுவான் கேடு நினைப்பான்
    இது
    உனக்கே உனக்கான
    பழமொழி
    க........நிதி

    கால பெருவெளியில்
    அண்ணாவை
    போற்ற
    ஒரு இயக்கம்

    கண்டது
    அண்ணாவின்
    * இதயக்கனி*

    யுகங்கள் கடந்தாலும்
    தலைவன் தந்த
    இயக்கம்
    தன் சுழற்சியை
    நிறுத்துவதில்வை
    நிறுத்தப்போவதுமில்லை..

    அ.இ.அ.தி.மு .க
    தொடக்க தினம்

    நன்றி
    ஆக்கமும் எழுத்தும்
    ** இரா.குமார்.**
    ����������������.......... Thanks.........

  10. #1639
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *பொன்மனச்செம்மல் , வரலாற்று தலைவர்*

    மக்களின் முதல்வர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் ,

    நாற்பது ஆண்டு்கால நண்பர் என்றாவது சொல்லி அரியணையை பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டார் கருணாநிதி ,

    அந்த கனவின் கணக்கே கருணாநிதியின் கழுத்தை நெருக்கும் கதையானதை நாடு நன்கறியும்......
    மூன்றாம் முறையும் முகராசி தலைவன் முதல்வராக தேரந்தெடுக்கப்பட்டார் ,

    கருணாநிதியின் கெஞ்சல் பேச்சு மட்டுமல்ல , கொஞ்சல் பேச்சும் காற்றோடு கலந்ததை நாடு நன்கறியும் ,

    அமெரிக்காவில் படுத்த படுக்கையாக காண்டீப சக்தியோடு ஆண்டிப்பட்டியில் நின்றார் !

    தேர்தல் பட்டியலில் இடம் பெற்றார் !! தேர்தலில் வென்றார் ! வெற்றி தேரில் நின்றார் !!

    வலது கால் , வலது கையிக்கு வாழ்க்கையில்லை என்று சொன்ன வஞ்சகர் கருணாநிதிக்கு ,

    இரண்டு கால்களால் நின்று , வலது கையை ஆட்டி .....
    இருவிரலை நீட்டி !! உலகை மைப்பூட்டி ! தொண்டனுக்கெல்லாம் தெம்பூட்டி !!

    உலகே ஆச்சரியம்படும் அளவிற்கு சென்னை கிண்டி ராணுவ திடலில் பிபரவரி 4 , 1985 அன்று டாடா காண்பித்த பொன்மனச்செம்மல் , புரட்சிதலைவர் , மக்கள் முதல்வரை பார்த்து..

    கருணாநிதி சொன்ன வார்த்தை :-

    "பேச்சற்றவர் , சிந்திக்கும் நினைவற்றவர் , அரியணையை சந்திக்கும் திறன் அற்றவர்" ,

    எம்ஜிஆர் - ராஜிவ் காந்தி இருவரையும் இப்போது இருக்கும் பேராசிரியர் அன்பகழகன் கருணாநிதியை மேடையில் வைத்துகொண்டு..

    "வாயில்லா பிள்ளைக்கு (எம்ஜிஆர்) ஒரு ஒட்டு
    "தாயில்லா பிள்ளைக்கு (ராஜீவ்) ஒரு ஒட்டு" போடுவது வெட்ககேடானது என்று பேசியவர் தான் இன்றைய அன்பழகன்..

    --கடைசி காலத்தில் எம்ஜிஆர் அதிகம் பேச இயலாவிட்டாலும்.. அது கடைசி கூட்டம் நெய்வேலியில் ராஜீவ் காந்தி கூட்டம் (1987) திக்கி பேசினார் எம்ஜிஆர்.

    பொதுமக்களும், தொண்டர்களும்..."தலைவரே.. பேசாதீங்க/./.. நீங்க நின்னாவே போதும்" என்று கதறி அழுதார்கள் .குறிப்பாக தாய்மார்கள் இந்த காட்சி....

    ஆனால் பேசி பேசியே திறமை காட்டி வாழ்ந்த கருணாநிதி கடைசி காலத்தில் வாய் இருந்தும் ஊமையாகவே இருந்து மறைந்தார்.

    --படத்தில் அந்த காலகட்டத்தில் கருணாநிதி எப்படி அமர்ந்திருக்கிறார் என்பதும், எம்ஜிஆர் எப்படி அமர்ந்துள்ளார் என்பதும் யாரிடம் அடக்கம் இருந்தது என்பதை படமே சாட்சி��........(புகைப்படத்தில் மறைந்த திரு மு.கருணாநிதி பந்தாவாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, மக்கள் திலகம் எப்பொழுதும் போல் அடக்கமாக சாதாரணமாக அமர்ந்திருந்த காட்சி)...... Thanks...

  11. #1640
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •