Page 174 of 402 FirstFirst ... 74124164172173174175176184224274 ... LastLast
Results 1,731 to 1,740 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1731
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1732
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  4. #1733
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #1734
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1735
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சார் வணக்கம்
    நம் தலைவரின் வாழ்க்கையில் எத்தனையோ பேரை வீழும் நிலையிலிருந்து
    மீட்டு வாழ்வாங்கு வாழ
    வைத்திருக்கிறார்
    மக்களிடம் அறிமுகம் இல்லாத சிலரை தன்னுடைய படங்களில்
    அறிமுகப் படுத்தி சில
    வருடங்களிலேயே விண்ணை முட்டும் புகழையும் பெரும் செல்வத்தையும் அடையும் படி செய்திருக்கிறார், அப்படி அறிமுகமாகி ஒரே படத்தின் மூலம்
    தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் இடத்தைப்
    பிடித்த ஒரு நாயகியின்
    கதை இது
    அப்போது அந்த நாயகி
    சிறுமியாகவும் இல்லாமல் குமரியாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டான் நிலையில் இருந்த போது ஒரு திரைப் படம் வெளி வந்தது அந்த படத்தில்
    பத்தோடு பதினொன்றாக வந்து
    போகிற மாதிரி ஒரு வேடம் பண்ணியிருப்பார்
    ஆனால் அந்த நேரத்தில் அவர் செய்த
    புண்ணியம் தலைவரின் புதிய படத்தில் நடிக்க ஒரு புது
    முகத்தை தேடிக் கொண்டிருந்த நேரம்
    அந்த நடிகைக்கு அப்போது அதிர்ஷ்ட தேவதையே நேரில் வந்து அவர் வீட்டில்
    அமர்ந்தது போல தலைவரின் கண்ணில்
    பட நேர்ந்தது விளைவு
    தலைவர் அந்த நடிகையை நேரில் வந்து சத்யா ஸ்டுடியோவில் தன்னை
    சந்திக்க வருமாறு சொல்லி அனுப்பினார்
    உடனே அந்த நடிகையும்
    அரக்கப் பரக்க உடை மாற்றிக் கொண்டு சத்யா ஸ்டுடியோவுக்கு
    விரைகிறார், தலைவர் அப்போது வேறு ஒரு படத்தின் படப் பிடிப்பில்
    இருக்கிறார் இந்த நடிகை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தலைவர்
    முன்னால் போய் நிற்கிறார் அந்த நேரத்தில் ஒழுங்காக புடவை கூட கட்டாமல்
    அள்ளி சொருகிக் கொண்ட கோலத்துடன்
    நெஞ்சு பட படக்க தலைவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார்
    இந்த செய்தி நான் சொன்ன செய்தி அல்ல
    பின்னாளில் அந்த நடிகையே சொன்னது
    தலைவர் அவரை நேருக்கு நேர் பார்த்து சொல்கிறார் ஏம்மா உனக்கு ஏன் இந்த நடுக்கம் முதலில் உட்கார் அதன் பிறகு பேசிக் கொள்ளலாம்
    என்று சொல்லி ஆசுவாசப் படுத்துகிறார்
    சிறிது நேரத்துக்குப்பிறகு இப்போது நான் நடிக்கப்
    போகும் புதிய படமொன்று தயாராகப்
    போகிறது அதிலே என்னுடன் கதா நாயகியாக நடிக்க உனக்கு சம்மதமா என்று கேட்கிறார்
    நடிகை கொஞ்சம் கூட
    யோசிக்கவில்லை உடனே சம்மதம் என்று
    தலையாட்டுகிறார்
    காரியங்கள் வேக வேகமாக நடக்கிறது
    முதலில் ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கப் படுகிறது அதன் பிறகுதான் தெரிய வருகிறது அந்த நடிகைக்கு நடனமோ நடிப்போ முறைப்படி
    கற்றவரல்ல என்ற விபரம்
    தலைவருக்கு தாமதமாகத்தான் தெரிய வருகிறது
    தலைவருக்கோ தர்ம சங்கடம் அந்த பெண்ணின் மனதில்
    பெரிய கனவை மூட்டி
    விட்டு விட்டோமே என்று
    சங்கடப் படுகிறார்
    இறுதியாக ஒரு முடிவுக்கு வருகிறார்
    அந்த நடிகைக்கு திரைப்
    படத்திற்கு தேவையான
    நடனம் , நடிப்பு பரிமாணங்கள் முழுமையாக கற்றுக் கொடுக்க ஆட்களை ஏற்பாடு செய்கிறார் தன்
    சொந்த செலவில்
    இப்படி வெறும் கல்லாய்
    இருந்த அந்த நடிகைக்கு
    முழு சிலை வடிவம் கொடுத்து தன்னுடன் நடிக்க வைக்கிறார்
    ஐந்து வருட ஒப்பந்தமும்
    போடுகிறார்
    படம் வெளி வருகிறது
    ஒரே இரவில் விண்ணை முட்டும் புகழில் நடிகை இந்தியா
    முழுவதும் மட்டுமல்ல தமிழ் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உலகம் முழுவதும் தெரிந்த பிரபலமாக மாறுகிறார்
    அடுத்த படம் தலைவருடன் இணைந்து நடித்து வெளி வருகிறது அதுவும் நூறு நாளைக்கு மேல் ஓடி வசூலில் வரலாறு படைக்கிறது , இதற்கிடையில் தலைவருடன் இணைந்து ஒரு பெரிய திரைப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்
    திடீரென்று ஒரு நாள் தலைவர் அவரைக் கூப்பிட்டு சொல்கிறார்
    நீ இன்னும் பல நடிகர்களுடன் நடித்து பெரிய உயரங்களுக்கு
    செல்ல வேண்டும் அதற்கு என் ஒப்பந்தம் ஒரு தடையாய் இருக்க
    வேண்டாம் எனவே நீ தாராளமாக வேறு படங்களில் நடிக்கலாம் என்னுடைய முழு சம்மதத்தை தருகிறேன்
    மற்ற கம்பெனிகளின்
    படங்களில் நடித்து நல்ல
    பெயர் வாங்கு என்று கூறி விடுகிறார்
    நடிகையும் மகிழ்ச்சியோடு அடுத்து அந்த நேரத்தில் பிரபலமாக இருந்த மற்றொரு நடிகரோடு இணைந்து தயாரிப்பாளரும், இயக்குனருமான ஒரு தெலுங்கு இயக்குனர் எடுத்த தமிழ் படத்தில்
    நடிக்க ஆரம்பிக்கிறார்
    அந்த படமும் 100 நாள்(?) ஓடுகிறது, அடுத்தடுத்த படங்களில்
    நடிக்க ஒப்பந்தம் ஆகிறார்,
    இதற்கிடையில் இவர் தலைவருடன் நடித்த பெரிய படம் வெளியாகி
    இந்திய சினிமாவையே
    புரட்டிப் போடுகிறது
    வசூலில் அது வரை இல்லாத மகத்தான சரித்திர சாதனையை
    நிகழ்த்துகிறது அடுத்து
    வெளியான இன்னும் இரண்டு படங்களும்
    125 நாட்களைத் தாண்டி
    வசூலில் வரலாறு படைக்கிறது
    திடீரென்று அந்த நடிகைக்கு ஆண்டவன் சோதனையோ யார் கொடுத்த போதனையோ பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார் அவருக்கு நான் அடிமை இல்லை எந்த ஒப்பந்தமும் என்னை கட்டுப் படுத்தாது
    தலைவர் எந்த ரியாக் ஷனும் காட்ட வில்லை
    நிருபர்கள் கேட்கிறார்கள் அப்போதும் தலைவர்
    சொல்கிறார் நான்தான்
    அவரை மற்ற கம்பெனி
    படங்களில் நடிக்க ஊக்கு வித்தேன் என்று
    சொல்லி பிரச்சினைக்கு
    முற்றுப் புள்ளி வைக்கிறார்
    " இன்னா செய்தாரை ஒறுத்தல்
    அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்னும்
    வள்ளுவரின் வாக்குக்கு
    ஏற்ப தலைவர் பெருந் தன்மையாய் நடந்து கொண்டார் , நம் கிராமங்களில் ஒரு பழ மொழி சொல்வார்களே
    நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்று அது போல் அந்த
    நடிகை தனக்குத் தானே
    அழிவை தேடிக் கொண்டார் இன்னும் ஒரு பிரபலமான நடிகருடன் நடித்து வெளி வந்த அனைத்து
    படங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தோல்வியை தழுவியது
    ஆனால் உத்தமமான மனிதன் மன்னவன் வெற்றி வெற்றி என்று
    அவர்களே சொல்லிக் கொண்டார்கள் , அந்த நடிகையும் நீச்சல் உடையில் படு ஆபாசமாக உருண்டு புரண்டு நடித்துப் பார்த்தார், காம தேனுவும் சோமபான மும் என்றெல்லாம் பாடி
    உச்சகட்ட கவர்ச்சியை
    அள்ளி தெளித்துப் பார்த்தார் ஒன்றும் வேலைக்காகவில்லை
    கடைசியில் இரண்டு மூன்று வருடங்களில்
    குண்டுப் பாப்பா ஆகி
    ஒரு சினிமா நடிகருக்கு
    இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் பட்டு அட்ரஸ் இல்லாமல் ஒடுங்கிப் போனார்
    பின்னாளில் தான் நடந்து கொண்ட விதத்துக்காக ஒரு வேளை வருத்தப் பட்டிருக்கலாம் அவர் கல்யாணம் செய்து கொண்ட நடிகரும் தலைவரின் அன்புக்குப்
    பாத்திரமாக இருந்து பின்னாளில் தலைவரின் முதுகில் குத்தி கடைசியில் தடம்
    தெரியாமல் போனவர்தான்
    தலைவர் 1984 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு அமெரிக்க புரூக்ளின்
    மருத்துவ மனையில்
    இருந்த போது அந்த நடிகை தலைவரை பார்க்கப் போனார்
    தலைவரின் அருகிலே போய் தலைவரிடம் என்னைத் தெரிகிறதா என்று கேட்டு என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார்
    ஜானகி அம்மாவும் தலைவரிடம் அந்த நடிகையின் பெயரைச் சொல்லி நினைவு படுத்திப் பார்த்தார் தலைவருக்கு நோய் பாதிப்பு இருந்ததால் கடைசி வரை அவரை அடையாளம் தெரியவில்லை
    இறுதியில் வேறு வழியின்றி அந்த நடிகை விடை பெற்றுக்
    கொண்டார் அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஒரு சம்பவம் நடை பெற்றது தலைவர்
    தன் கைகளை தலையணைக்கு அடியில் இட்டு அங்கிருந்த டாலர் நோட்டுகளை அள்ளி அந்த நடிகையின் கையில் கொடுத்து போகும் போது டாக்ஸி
    பிடித்துப் போங்கள் என்று தட்டுத் தடுமாறி
    சொல்லவும் நடிகை அப்படியே கதறி அழ ஆரம்பித்து விட்டார்
    காரணம் என்னவென்றால் என்னை யாரென்று தெரியா விட்டாலும் நான் புறப்படும் போது
    நம்மைப் பார்க்க வந்தவர் கஷ்டப் படக் கூடாது என்னும் எண்ணம் மட்டும் அவர் அடி மனதில் இருக்கிறது பாருங்கள்
    அது மட்டுமல்ல கொடை உணர்ச்சி என்பது எந்த அளவுக்கு அவரின் அடி
    மனதில் இருந்தால் இப்படிப் பட்ட ஒரு காரியத்தை செய்வார் என்று கூறி ஒரு மூச்சு அழுது கதறி விட்டுத்தான் வெளியேறினார்
    அது மட்டுமல்லாமல் வெளியில் வந்த பிறகும்
    நிருபர்களிடம் நடந்த சம்பவத்தை சொல்லிச் சொல்லி உணர்ச்சி வசப்பட்டு அழுதார்
    அதன் பிறகு தன் கடைசி காலம் வரையிலும் தலைவர் புகழை சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாடிப் பாடி மகிழ்ந்தார்
    எப்போதும் சொல்வார் நான் இன்று சாப்பிடும் ஒவ்வொரு அரிசியும் அவர் போட்ட பிச்சை என்று
    ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன் கட்டிலில் இருந்து கீழே
    விழுந்ததில் அடிபட்டு
    இறந்து போனார்!

    வணக்கம் சார்!........... Thanks.........

  7. #1736
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்_ஜி_ஆரா….எனக்குத் தெரியாது!

    ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு! செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு MGR, நடுநிசி பன்னிரெண்டு மணிவாக்கில் காரில் வந்து கொண்டிருக்கிறார்.

    கண்விழித்தவாறே MGR வந்து கொண்டிருந்த பொழுது, வழியில் போலீஸ் உடையில் நின்ற ஒருவரைப் பார்க்கிறார்.MGRன் கார் அவரைக் கடந்து செல்கிற போது, MGRன் நெஞ்சில் பொறி தட்டுகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த அர்த்த ராத்திரியில், அந்தப் போலீஸ்காரர் பஸ்ஸூக்காக காத்து நிற்கிறார்; என்பதை புரிந்து கொள்கிறார்.

    உடனே கார் டிரைவரிடம் காரை நிறுத்தச்சொல்கிறார். கார் பின்னோக்கி வருகிறது. போலீஸ்காரர் அருகில் காரை நிறுத்தி கதவைத் திறந்து “ஏறுங்கள், எங்கே போக வேண்டும்” என்கிறார்.
    “பரவாயில்லை. நான் பஸ்ஸிலேயே வந்து விடுகிறேன்” என்கிறார் அந்தப் போலீஸ்காரர்.
    நேரம் ஆகிவிட்டது. இனி இந்த ரூட்டில் பஸ் கிடையாது. ஏறிக்கொள்ளுங்கள்” என்று MGR வலுக்கட்டாயம் செய்ய, போலீஸ்காரர் வேண்டா வெறுப்பாக ஏறுகிறார்.!

    லைட்டைப் போட்டு, “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, சீட்டுக்கு பின்னால் இருந்த பிஸ்கட், பழங்களை எடுத்துக் கொடுக்கிறார்.
    “இப்படி ஓசியில் பயணம் செய்வதே எனக்கு உடன் பாடில்லை. இன்னும் நீங்கள் உண்ணச் சொல்லி வேறு என்னை இழிவு படுத்தாதீர்கள்” என்று போலீஸ்காரர் மறுக்கிறார். பொன்மனச் செம்மல் பூரிக்கிறார். இருப்பவனில் இருந்து, இல்லாதவன் வரை படித்து பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று நம் MGRஇடம், வேண்டியதை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சாதாரண பொறுப்பில் இருக்கும் இந்தப் போலீஸ்காரனின் நேர்மை, செம்மலை சிலிர்க்க வைத்து விட்டது.!

    MGRன் கார் காத தூரத்தில் வந்து கொண்டிருந்தாலும், காரின் நிறத்தையும், ஒலியையும் மணம் கமழும் ஓடிகொலோன் வாசனையையும், வைத்து, இது MGRன் கார் என்றும், கார் சென்ற தடத்தை தொட்டு வணங்குகிற அளவுக்கு, புகழுடன் திகழ்ந்த நேரம் அது!

    அரைமணி நேரம் கார் சென்று கொண்டிருக்கிறது! ஆனால், அது வரை MGRப் பற்றிப் பெரிதாகப் போற்றிப் புகழ்ந்து பேசாமல் அந்த போலீஸ்காரர் பொருட்படுத்தாமல் வந்ததே, புரட்சித்தலைவருக்கு அந்த போலீஸ்காரர் மீது மரியாதையைக் கூடுதலாக்கியது.
    “நான் தான் எம்.ஜி.ஆர்”
    “கேள்விப்பட்டிருக்கிறேன்”
    பொன்மனச் செம்மலின் முகத்தில் கோபம் இல்லை, பதிலுக்கு புன்முறுவல் மலர்கிறது.
    “என் படங்களைப் பார்த்து இருக்கிறீர்களா?”
    “நான் சினிமாவே பார்ப்பதில்லை. புரட்சித்தலைர் இன்னும் பிரம்மிக்கிறார். இப்பொழுது கார் சத்தத்தைத் தவிர ஒரே நிசப்தம்.

    போலீஸ்காரர் தனது வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தச்சொல்லி, “இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்”என்கிறார்.
    “ஏன் நீங்கள் குறிப்பிட்ட அந்த விலாசம் இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கிறதே”
    “சாதாரண போலீஸ் உத்தியோகத்தில் இருக்கும் நான் காரில் வந்து இறங்கினால்: என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொள்வார்கள். இதுவரை இப்படி நான் யார் காரிலும் ஓசியில் வந்த பழக்கமில்லை. நீங்கள் இவ்வளவு தூரம் செய்த உபகாரத்திற்கு நன்றி."
    MGR அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ‘அவர் எந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புகிறார்.

    அடுத்த நாள் செங்கல் பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து” நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்” என்கிறார்.
    இரவு சந்தித்த போலீஸ்காரரைப் பற்றி விசாரிக்கிறார்.

    டி.எஸ்.பி. சொல்கிறார், “நீங்கள் குறிப்பிடும் அவர் இன்று விடுப்பில் இருக்கிறார். அவர் கையூட்டு வாங்காதவர். கடமை தவறாதவர். காவல் துறையின் நேர்மைக்கு இவரே இலக்கணம். வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்தோ, நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களெல்லாம் இவர் அறியாதவர்! கல்யாண வயதில் உள்ள மூன்று பெண்களையும், கரை சேர்க்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்கிற விபரங்கள் டி.எஸ்.பியால் சொல்லப்படுகிறது.

    கேட்டுக்கொண்ட டி.எஸ்.பி, “உங்களோடு போனில் ஆளுக்கொரு வார்த்தைப் பேச ஆசைப்படுகிறார்கள். “போனை அவர்களிடம் கொடுக்கலாமா?" என்கிறார். MGRம் கொடுங்கள்; என்கிறார். பேசுகிறார். அந்தப் போலீஸ் ஸ்டேஷனே புண்ணியம் பெற்றதாக புளகாங்கிதம் அடைந்தனர் அந்த போலீஸ்காரர்கள்.

    மறுநாள் அந்தப் போலீஸ்காரர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் பேப்பரில் மடித்த பெரிய பணக்கட்டை கொடுத்து “இதை வைத்து உங்கள் பெண்களின் கல்யாணத்தை நடத்துங்கள்” என்கிறார் MGR, போலீஸ்காரர் மறுக்கிறார்.

    “நான் ஏதாவது உங்களிடம் காரியமாற்றச் சொல்லி அதற்காக கொடுத்தால், அது தவறு. என்னால் ஆக வேண்டியது உங்களுக்கும், உங்களால் ஆக வேண்டியது எனக்கும், ஏதும் இல்லை. நான் உங்கள், கூடப் பிறந்த ஒரு சகோதரனாக நினைத்துக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னபிறகு, கேட்டும் கூட கிள்ளிக்கொடுக்காத கனவான்கள் வாழும் இந்த உலகில், ரோட்டில் நின்றவனை அழைத்துச் சென்று அள்ளிக் கொடுத்த MGRன் கருணையில், நெகிழ்ந்து போய் பெற்றுக் கொள்கிறார் போலீஸ்காரர்.

    பிறகொரு தேதியில் புரட்சித்தலைவரே சென்று, அந்த போலீஸ்காரரின் மூன்று பெண்களின் திருமணத்தையும் நடத்தி வைத்து, வாழ்த்தி இருக்கிறார்.

    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்
    மாபெரும் வீரர் மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்"............. Thanks.........

  8. #1737
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ........... Thanks.........

  9. #1738
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ......... Thanks...

  10. #1739
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #1740
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •