Page 186 of 402 FirstFirst ... 86136176184185186187188196236286 ... LastLast
Results 1,851 to 1,860 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1851
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ........... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1852
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தோழர் சு. பா., அவர்களுக்கு ... நாம் ஒன்றும் சண்டைக்கு or சர்ச்சைக்கு அலையவில்லை... நமது மஹான் நம்மை அப்படி ஒரு நிலைக்கு நம்மை ஆளாக்கவில்லை என்பதை நீர் அறியாதவரில்லை... அந்த முகாமில் திருச்சியை சேர்ந்த ...சிறிதும் புத்தியில்லாத, இங்கிதமறியாத வீணர்கள் பதிவிட்ட சேதி தான் நண்பர் பதிவிட்டது. மற்றபடி அந்த மகானுபாவர்கள் சேதியும் நம்மில் சிலர் அறியாமலிருக்கலாம்... நாமும் சற்று அதிகமாக தாக்குதல் தொடுப்பது ஏன்?! என தெரிய வேண்டுமல்லவா?! ஆகையால் அவர்கள் எழுதிய சொற்றொடர் அப்படியே பதிவிடப்பட்டுள்ளது... என்ன சரியா? நண்பரே...

  4. #1853
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விரைவில்... மதுரை - சென்ட்ரல் dts., திரையரங்கில்... எப்பொழுதும் திரையுலகை ஆளும் அசராத வசூல் சக்கரவர்த்தி மக்கள் நடிகர் வழங்கும் காவியம்..." ராமன் தேடிய சீதை" கலர் புல்... குளு குளு படைப்பு... தகவல் உதவி : திரு. குமார், மதுரை...

  5. #1854
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை சண்முகாவில்* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் திரைப்படம்* வெற்றிகரமாக 2 வது வாரமாக தொடர உள்ளது என்று*நெல்லை நண்பர் திரு.ராஜா தகவல் அளித்துள்ளார் .
    ஆயிரத்தில் ஒருவன் படத்தின் விநியோகஸ்தர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட அவரது மற்றொரு படம்* அதே சண்முகா அரங்கில்**4 நாட்கள்தான் ஓடியது .* *ஆயிரத்தில் ஒருவன் இடைவிடாமல் தமிழகத்தில் உள்ள அரங்குகளில் வலம் வந்த வண்ணம் உள்ளது . அன்றும் , இன்றும், என்றும் தலைவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்றும் குறிப்பிட்டார் .

  6. #1855
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் குரல் -30/10/19

    பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பெருமை சேர்த்தவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சி தலைவி ஜெயலலிதா .- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் .
    -------------------------------------------------------------------------------------------------------------------------------

    இன்று (30/10/19) முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில்* உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் .

    அப்போது பின்வருமாறு பேசினார் :இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 வது* பிறந்த நாள் விழா, 57 வது*குருபூஜை விழா* அரசு சார்பில்**நடைபெறுகிறது .

    ராமநாதாபுரத்தில்* 1937ம் ஆண்டு மாநில தேர்தலில் வெற்றி பெற்றவர் தேவர் திருமகனார் . பின்னர் 1946ம் ஆண்டு சென்னை மாகாண தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .* 1952,1957,1962 சட்டமன்ற தேர்தல்களிலும் மக்களால் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு உரியவர் .**

    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தேவர் திருமகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் , அவருடைய பொதுசேவையை பாராட்டி, ஒவ்வொரு ஆண்டும் இனி தமிழக அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என்று அறிவித்தார் .1979ம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்த அரசு விழா நடைபெற்று வருகிறது .*


    புரட்சி தலைவி ஜெயலலிதா* 1994ம் ஆண்டு சென்னை நந்தனத்தில் மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு முழு வெண்கல சிலை நிறுவி , திறந்து வைத்தார்* 2010ம் ஆண்டு பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவருடைய நினைவிடத்தில் ,அவரின் திருஉருவச்சிலைக்கு தங்க கவசம் அளிக்கப்படும் என்று அறிவித்து 2014ம் ஆண்டு நேரடியாக சென்று 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார் .
    இவ்வாறு இரு தலைவர்களும்* அண்ணா தி.மு.க. ஆட்சியில் தேவர் திருமகனாருக்கு பெருமைகள் சேர்த்துள்ளனர் என்று பேசினார் .

  7. #1856
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரையில் இன்று விடாத மழையிலும் ...... நாடாண்ட மன்னவன் எம்.ஜி.ஆர்., அவர்களின் "நாடோடி மன்னன்", ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை ... கோவை.நண்பர் திரு.அய்யாச்சாமி மாலக்காட்சி மன்னவர் தரிசனம் மகிழ்ச்சியில் ... மதுரை.எஸ் எம்ஜிஆர் குமார்... Thanks.........

  8. #1857
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    துக்ளக் வார இதழ் -23/10/19

    எம்.ஜி.ஆரை சுட்டவர் மகனுக்கு அ. தி.மு.க.வில் சீட்டா -நடிகர் ராதா ரவி .
    ---------------------------------------------------------------------------------------
    எங்க வீட்டு பிள்ளையின் முதல் பாதியில் எம்.ஜி.ஆரை நம்பியார் சவுக்கால்* அடித்தால்தான் ஒத்துக்கொள்வார்கள் .* வேறு நடிகரை போட்டிருந்தால்* ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள் . அப்போதும் கூட, நம்பியார் , எம்.ஜி.ஆரை சவுக்கால் அடிக்கும்போது* இருடி .... இடைவேளை வரட்டும் , உனக்கு இருக்கு ஆப்பு, வேட்டு .*என்று ரசிகனே தரையில் உட்கார்ந்தபடி,* ஸ்க்ரீன் பிளே* எழுதுவான் .**

    ராமன் எத்தனை ராமனடி படத்தில் தன தங்கையை பெண் கேட்டு வந்த வசதியில்லாத சிவாஜியை, நம்பியார் பிரம்பால் அடித்து விரட்டுவார் .* பின்னர் சிவாஜி* பணக்காரனாகி, மீண்டும் பெண் கேட்டு வருவார் .* ஆனால் அப்போது அந்த பெண் இருக்க* மாட்டாள்* உடனே கோபத்தில் சிவாஜி, கையில் ஒரு பிரம்பை* எடுத்து ஆக்ரோஷமாக* அதை வளைத்து , முறித்து விட்டு வந்து விடுவார் .* அப்போது தியேட்டரில் கிளம்பும் டயலாக் என்ன தெரியுமா . இந்நேரம் புரட்சி தலைவராக இருந்தால் நம்பியாரை உண்டு இல்லைன்னு பண்ணி இருப்பார் .இவருக்கு அவ்வளவு தைரியம் போதாதப்பா .* அந்த காலத்தில் ரசிகர்கள் தங்கள் மனங்களை அப்படி செட் செய்து வைத்திருந்தார்கள்**

    ஆனந்த் -கேள்வி : உங்கள் அப்பா எம்.ஜி.ஆரை சுட்டவர் .* பின்னாட்களில் நீங்கள் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது , அது குறித்து உங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏதேனும் இருந்ததா ? எம்.ஜி.ஆர். உங்களை எப்படி எடுத்துக் கொண்டார் .

    ராதாரவி பதில் : குற்ற உணர்ச்சி என்று கூற முடியாவிட்டாலும் , என் அப்பா கோபத்தில் எடுத்த முடிவு, அவர் வாழ்க்கையிலும் சரி, எங்கள் வாழ்க்கையிலும் சரி , ஒரு தடங்கலை ஏற்படுத்தியது உண்மைதான் .* எம்.ஜி.ஆரை நான் சிறுவயதில் பலமுறை சந்தித்திருக்கிறேன் .**

    நல்லவன் வாழ்வான் படத்தில் என் அப்பா வேண்டாம் என்று* சொல்லியும், கிளைமாக்சில் ஒரு வித்தியாசமான சண்டைக்காட்சி வைக்கலாம் என்று என் அப்பாவைக் கட்டாயப்படுத்தி , தண்ணீருக்கு அடியில் ஒரு சண்டைக் காட்சியை எம்.ஜி.ஆர். அமைத்தார் .* ஒரு கண்ணாடி தொட்டியில் தண்ணீரை நிரப்பி,*அதற்குள் நீச்சல் அடித்துக் கொண்டே இருவரும் சண்டை போடும்* காட்சிகள்.**ஒரு வாரம் முழுக்க படமாக்கப்பட்டன*

    முடிவில் என் தந்தை உடலெங்கும்* வீக்கம் கண்டு படுத்த படுக்கையாகிவிட்டார் .என் அப்பா வேண்டாம் என்று சொல்லியும்* ,எம்.ஜி.ஆர். அவரை வற்புறுத்தி நடிக்க வைத்ததால் , எம்.ஜி.ஆருக்கு குற்ற உணர்ச்சி வந்துவிட்டது .* ஒரு வார காலம் அதாவது என் அப்பா நோயில் இருந்து மீண்டு வரும்வரை , தினசரி காலை 9 மணிக்கு எம்.ஜிஆர். எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார் .* என் அப்பாவின் படுக்கை அருகிலேயே அமர்ந்து அவருடன் பேசி கொண்டிருப்பார் .* மதியம் அவருக்கு தோட்டத்திலிருந்து உணவு வரும். இங்கேயே சாப்பிடுவார் .* மாலை 5 மணிக்கு மேல்தான் கிளம்பி தனது வீட்டுக்கு போவார் .* இப்படி என் அப்பா குணமாகும்வரை ஒரு வாரத்திற்கு எம்.ஜி.ஆர். எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார் .அப்போதெல்லாம் அவரை பார்த்து இருக்கிறேன் .

    அந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த பிறகு , நான் முதல்முதலாக சந்தித்தது ஒரு விமானத்தில்தான் .* நடிகர் சத்யராஜ் திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தேன்*கடைசி நேரத்தில், எம்.ஜி.ஆர். , ஜானகி* அம்மாள் , பண்ருட்டி ராமச்சந்திரன்*ஆகிய மூவரும் அதே விமானத்தில் ஏறி முதல் வரிசையில் அமைத்தார்கள் .* அவர்களும் சத்யராஜ் திருமணத்தில் கொள்ள வந்திருந்தார்கள் .அப்போதெல்லாம் கோவை செல்லும் விமானம், பெங்களூரு வழியாகத்தான் செல்லும்.* எனவே, பெங்களூரு விமான நிலையத்தில் அந்த விமானம் சுமார் 30* நிமிடம் நின்றது .* இறங்க வேண்டிய பயணிகள் இறங்கியதும், நான் விறுவிறு என்று முதல்வரிசைக்கு சென்று எம்.ஜி.ஆரிடம் பேச ஆரம்பித்தேன் .* அப்போதுதான் அந்த விமானத்தில் எம்.ஜி.ஆருக்கு பாதுகாப்பாக ஆங்காங்கே எத்தனை பாதுகாவலர்கள் இருந்தார்கள் என்பது தெரிய வந்தது .* அத்தனை பேரும் தடாலடியாக எழுந்து வந்து என்னை பிடித்துக் கொண்டார்கள் .

    ஆனால், நான் அதற்குள், நான் யார் என்று தெரிகிறதா ? நான்தான் எம்.ஆர். ராதாவின் மகன் ராதாரவி* என்று கூறிவிட்டேன் .* உடனே என் கைகளை பிடித்து கொண்டார் .* உடனே, நான் நடிகர் சங்க தலைவராக உள்ளேன். உங்களை சந்திக்க யாரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவது தெரியவில்லை .* உங்களை சந்திக்க அனுமதிப்பீர்களா ? என்று கேட்டு விட்டேன் .* அவர் என் கையை பிடித்துக் கொண்டதும் , பாதுகாவலர்கள்* விலகி கொண்டார்கள் .* அப்போது எம்.ஜி.ஆர். சரளமாக பேச முடியாத நிலையில் இருந்தார் .* எனவே, அவர் பண்ருட்டி ராமச்சந்திரனை திரும்பி பார்த்தார் .* அவர் உடனே, நீங்கள் சென்னைக்கு வாருங்கள் . நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தருகிறேன் என்று சொன்னார் .**பின்னர் விமானம் புறப்பட்டதும், கோவையில் இறங்கியதும், எம்.ஜி.ஆர். முதல் ஆளாக இறங்கி சென்று விட்டார் .* நான் பிற்பாடு பிற பயணிகளுடன் கீழே இறங்கி வந்தேன் .**

    அப்போது ஒரு சப் இன்ஸ்பெக்டர் , ஒரு காவலர் , என்னை தடுத்து நிறுத்தி,*கொஞ்ச நேரம் இங்கேயே நில்லுங்கள் என்று சொன்னார்கள் .* 15 நிமிடங்களுக்கு பிறகு* போலீசார் என்னை வெளியே அழைத்து சென்று பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர் .* அப்போதுதான் புரிந்தது .* அங்கு எம்.ஜி..ஆரை* வரவேற்க*ஏராளமான கட்சி தொண்டர்கள் , காத்திருந்தார்கள் என்பதும், அவர்கள் எம்.ஆர். ராதாவின் மகன் என்று தெரிந்தால் என்னை தாக்க கூடும் என்றும் யூகித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்னை பாதுகாப்பாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தார் என்பது அறிந்தது ம்* , உண்மையில் புல்லரித்துப்**போனேன் .*

    அதன் பின், சத்துணவு திட்டத்திற்காக நடிகர்கள் நிதி திரட்டிக் கொடுத்தபோது*நடிகர்களை பாராட்டி எம்.ஜி.ஆர். ஒரு விழா எடுத்து கலைஞர்களுக்கு தங்க மோதிரம் , சங்கிலி* போன்றவற்றை பரிசளித்தார் .* நான் நடிகர் சங்க தலைவர் என்பதால் , நம்பியார் போன்ற ஓரிரு மூத்த நடிகர்களுக்கு பரிசு அளித்த பின்னர்*என்னை அழைத்து கௌரவப்படுத்தினார் .**

    கோகுல கிருஷ்ணன் கேள்வி : எம்.ஆர். ராதாவின் மகனாக இருந்தும், பிற்பாடு எம்.ஜி.ஆர். துவங்கிய காட்சியிலேயே நீங்கள் சேர முயற்சித்தபோது , உங்களை சேர்ப்பதற்கு அங்கு தயக்கம் ஏதும் இல்லையா ?

    ராதாரவி பதில் :* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில்தான் அ.தி.மு.க. வில் சேர்ந்தேன் .* நான் கட்சியில் சேர்வதால் , உங்களுக்கோ, உங்கள் கட்சிக்கோ ஏதாவது களங்கம் வருமா என்று, அன்றைய முதல்வரிடம் கேட்டபோது , அதெல்லாம் ஒன்றும் வராது .என்று சிரித்தபடி சொன்னவர் ,எனக்கு சைதாப்பேட்டை தொகுதியை ஒதுக்கினார் .* *அப்போது தி.மு.க. தரப்பில் எம்.ஜி.ஆரை சுட்டவருக்கு அ. தி.மு.க. வில். சீட்டா என்று போஸ்டர் ஓட்டப்போவதாக எனக்கு தகவல் கிடைத்தது .* அப்படி ஓட்டினால், எம்.ஜி.ஆரை யார் சுட்டது என்று உண்மையிலேயே , நாள் வெளியே சொல்ல வேண்டியிருக்கும் என்று* ஒரு திரியை கொளுத்தி போட்டேன் .* எங்கே கருணாநிதி பெயரை சொல்லிவிடுவானோ என்று பயந்துவிட்டார்கள். அதன்பிறது போஸ்டர் ஒட்டப்படவே இல்லை .**

  9. #1858
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .......... Thanks...

  10. #1859
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .......... Thanks.........

  11. #1860
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .. .......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •