Page 191 of 402 FirstFirst ... 91141181189190191192193201241291 ... LastLast
Results 1,901 to 1,910 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1901
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1967 நவ 1 தீபாவளி ரிலீஸுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னால் விவசாயி படத்தின் பிரிவ்யூ ஷோ எம்ஜிஆரிடம் போட்டு காண்பிக்க பட்டது. அதைப் பார்த்த எம்ஜிஆர் படத்தின் ஓப்பனிங் சீன் சரியில்லை, ரீ ஷீட் பண்ண வேண்டியிருக்கும் என்று சொல்லி விட்டார். படத்தின் ஓப்பனிங் சீன் விவசாயி பாடல்தான். உடனே வசனகர்த்தாவை வரச்சொல்லி விவசாயியின் பெருமையை பாடலுக்கு முன்னாடி சேர்க்க வேண்டும், அதற்கு தகுந்தவாறு வசனத்தை எழுத வேண்டும் என்றார். பின்னர் அதை உடனே ரீ ஷுட் செய்து படத்தை குறிப்பிட்ட நாளிலேயே வெளியிட்டார்.
    அப்படி அவர் சேர்க்க சொன்ன வசனம்
    எம்ஜிஆருடைய தாயும் தகப்பனும் பேசிக்கொண்டிருக்கும் காட்சியில்
    என்னங்க நம்ம பையனுக்கு பொண்ணு பார்த்திட்டீங்களா என்றவுடன் அப்போது பார்த்து கல்யாண புரோக்கர் எம்ஜிஆரின் தகப்பனாரிடம் கைவசம் ஏகப்பட்ட இடம் இருப்பதாக கூறுவார்.உடனே அவரும் யாரெல்லாம் சொல்லுங்கள் என்பார்.
    புரோக்கரும் பண்ணையார் மகள், ஜமீன்தார் மகள் என்று ஒவ்வொன்றாக சொல்லி கொண்டே போவார். சரி எதையாவது ஒன்றை பேசி முடியும் என்பார்.
    புரோக்கர் உடனே ஜமீன்தார் மகளுக்கு டாக்டர் மாப்பிள்ளை வேணுமாம், பண்ணையார் மகளுக்கு இன்ஜினியர் மாப்பிள்ளை வேணுமாம் என்பார்.
    உடனே கோபமுற்ற எம்ஜிஆரின் தந்தை வெளியே போங்கையா என்பார்.
    எம்ஜிஆரின் தாய் நாள் அன்றைக்கே சொன்னேன் பையனை நல்ல படிப்பு படிக்க வைங்கேன்னு சொன்னேன் நீங்க தான் விவசாயப்படிப்பை படிக்க வைச்சிட்டீங்க இப்ப பாருங்க பொண்ணு கிடைக்க மாட்டேங்குது என்பார். உடனே எம்ஜிஆருடைய அப்பா ஏண்டி இந்த படிப்புக்கு என்னடி அந்த ஜமீன்தார், பண்ணையார்,ஏன் இந்த உலகத்துக்கே சோறு போடறவன் யாரு ,யாரு என்று உரக்க பேசியவுடன் தலைவர் விவசாயி, விவசாயி என பாடும் போது பறக்கும்
    விசில் சத்தம் நடுவே பாட்டு உங்களுக்கு கேட்டதா ஒரு சாதாரண காட்சியை சூப்பர் சீனாக மாற்றியது தலைவருடையை திரைக்கதை அறிவு............. Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1902
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய மாலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

    புர*ட்சித்த*லைவ*ருட*ன் சிலோன் எம்ஜிஆர் என்றழைக்க*ப்ப*ட்ட* விஜ*ய* கும*ர*ணதுங்கே!

    இவ*ர் 114 ப*டங்க*ளில் ந*டித்துள்ளார். பெரும்பாலும் வெற்றிப்ப*ட*ங்க*ளே. பாட*க*ர், அர*சிய*ல் த*லைவ*ர், த*யாரிப்பாள*ர் என ப*ன்முக*த்தன்மை கொண்ட*வ*ர்.

    தன*து அர*சியல் எதிரிக*ளால் 1988 பிப்ர*வ*ரியில் கொடூர*மாக சுட்டுக்கொல்ல*ப்ப*ட்டார். அப்போது இவ*ர் வ*ய*து 43 மட்டுமே. விஜ*ய* கும*ர*ணதுங்கே ம*றைந்த* பிற*கும் இவ*ர் ந*டித்த சில ப*ட*ங்க*ள் வெளியாகி வெற்றி பெற்ற*ன. த*மிழில் ந*ங்கூர*ம் என்ற* ப*ட*த்தில் லட்சுமிக்கு ஜோடியாக* ந*டித்துள்ளார்.

    1984ல் ஸ்ரீல*ங்கா ம*காஜ*ன க*ட்சியை விஜ*ய*குமார*துங்கே துவ*க்கினார். இவ*ர*து மனைவி ச*ந்திரிகா குமார*துங்கே சிலகாலம் இலங்கை அதிப*ராக இருந்துள்ளார்........ Thanks...

  4. #1903
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    “ராம்சந்தருக்கு பால் கொண்டு வாடா..!” எம்.ஜி.ஆருக்கு கிடைத்த முதல் கவுரவம்: நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -

    ராம்சந்தர்

    பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சத்யபாமா உழைக்க ஆரம்பித்தார். உடலை வருத்தி ஒரே நாளில் பல சிறுசிறு வேலைகளைச் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ஆனாலும் வறுமை அந்தக் குடும்பத்தை முழுவதுமாகவிட்டு விலகி ஓடிவிடவில்லை. பள்ளிசேர்க்கும் வயது வந்தபோது கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். பள்ளியில் ராம்சந்தர் படுசுட்டி. ஏதாவது குறும்பு செய்துவிட்டு ஓடி ஒளிந்துகொள்வான். பஞ்சாயத்து, அண்ணன் சக்கரபாணிக்கு போகும். தம்பியைக் கூப்பிட்டுக் கோபப்படுவதுபோல் நடிப்பார். புகார் சொன்னவர்கள் சமாதானம் அடைவர். பிறகு, ''ஏன் ராம்சந்தர்... இப்படிச் செய்றே? அம்மாவிடம் யாராவது இதைச் சொன்னா பிரம்படிதான் கிடைக்கும்” என தம்பி மீது இரக்கப்பட்டுப் பேசுவார் சக்கரபாணி. எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்த நல்ல பழக்கங்கள் பல சத்யபாமாவினால் வந்தவை. பிள்ளைகள் பொய்சொல்வதை, சொந்த சகோதரனாக இருந்தாலும் அனுமதியின்றி ஒருவர் பொருளை இன்னொருவர் எடுப்பதை அவர் அனுமதிக்கமாட்டார்.

    இம்மாதிரி சமயங்களில்தான் சத்யபாமா பிரம்பைத் தூக்குவார்; படிப்பில் குழந்தைகள் சோடைபோனால்கூட மன்னிப்பார்; ஒழுக்கத்தில் குறை கண்டால் பொறுக்கமாட்டார். ஒழுக்கம்தான் பிள்ளைகளை உயர்த்தும் என்பதில் உறுதியான பெண்மணி அவர். சத்யபாமாவின் இந்தக் கண்டிப்புதான் சகோதரர்களை வறுமையிலும் செம்மையாக இருக்கவைத்தது.

    படிப்பு, அப்படி இப்படி என்றாலும் சகோதரர்களுக்கு நடிப்பு நன்றாக வந்தது. பள்ளியில் அந்த வருட விழாவில் அரங்கேற்றப்பட்ட 'லவகுசா' நாடகத்தில் ராம்சந்தருக்கு லவன் வேஷம் அளிக்கப்பட்டது. சிறுவன் பின்னியெடுத்துவிட்டான். அதுமுதல் ராம்சந்தருக்கு தடபுடல் மரியாதைதான் பள்ளியில். நாடக ஆசையில் கொஞ்சநாள் கனவிலும் நனவிலும் தன்னை ராஜா போன்று எண்ணிப் பேசிவந்தான்.

    எம் ஜி.ஆர்

    இப்படித்தான் ஒரு விடுமுறை நாளில் சிறுவன் ராம்சந்தர் வில் அம்பு செய்து தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறுவன் விட்ட அம்பு தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீது பட்டு காலில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. குறிபார்த்து விட 'ராமச்சந்திர'னா என்ன; ராம்சந்தர்தானே! பயந்து வீட்டில்போய் பதுங்கிக்கொண்டான். ஆனாலும் அடிபட்டவர், கோபத்துடன் ராம்சந்தர் வீட்டுக்குள் நுழைந்து, ''கூப்பிடுறா... உன் அப்பா அம்மாவை'' என எகிற... அப்போது, எதேச்சையாக உள்ளே நுழைந்தார் வேலுநாயர். அடிபட்டவரை பார்த்து, ''வாரும்... எப்போ வந்தீர்... ஏன் இவ்வளவு தாமதம்... இது என்ன ரத்தம்” எனக் கேட்டார். ராம்சந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டுக்குள் இருந்துவந்த சத்யபாமாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது. வந்தவர் வேலுநாயரின் உறவினர். நாடகக் கம்பெனி ஒப்பந்ததாரர். பிள்ளைகள் இருவரும் படிப்பில் சற்று மந்தமாக இருந்ததால் சத்யபாமாவிடம் அனுமதி பெற்று அவர்களை நாடகக் கம்பெனியில் சேர்க்கத் திட்டமிட்டு வரச்சொல்லியிருக்கிறார். வந்த இடத்தில்தான் இந்த ரகளை.

    எது எப்படியோ நாராயணன் நாயருக்கு (அடிபட்டவர்) சகோதரர்களைப் பிடித்துவிட்டது. சத்யபாமாவையும் பேசிக் கரைத்துவிட்டார் வேலுநாயர். புகழ்பெற்ற மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. அன்றே சிறுவர்கள் அதில் சேர்த்துவிடப்பட்டனர். கும்பகோணத்தில் கொஞ்சநாள் பயிற்சி. பின்னர் பாண்டிச்சேரியில் நாடகம் போட கம்பெனி நிர்வாகம் முடிவெடுத்தது. முதல்முறையாகத் தாயைப் பிரிந்துசெல்கின்றனர் சகோதரர்கள். இரண்டு தரப்பிலும் கண்ணீர் வெள்ளம். “ எல்லாம் உங்க நன்மைக்குதானப்பா” பிள்ளைகளின் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் சத்யபாமா. பீறிட்டுக் கிளம்பிய ரயிலின் சத்தத்தில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் குறைவாகவே கேட்டது.

    எம்.ஜி.ஆர்நாடகக் கம்பெனியில், ராம்சந்தருக்கு மகாபாரத நாடகத்தில் விகர்ணன் வேஷம் கொடுக்கப்பட்டது. கௌரவர்களில் ஒருவனே இந்த விகர்ணன். கண்பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவன். சிறுவேஷம் என்றாலும் ராம்சந்தருக்கு தன்னை நிரூபிக்க அது போதுமானதாக இருந்தது. நாடக நுணுக்கங்களை ஓரளவு சகோதரர்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கினர். விகர்ணன் வேஷத்தில் நன்றாக நடித்ததால், அடுத்த முறை அதே நாடகத்தில் அபிமன்யு வேஷம் தரப்பட்டது.

    'நாடகத்தில் படையோடு எழுந்திடுவேன்' என அபிமன்யு பாடும் பாடல் ஒன்று உண்டு. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பாடுவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ரிகர்சலிலேயே கொஞ்சம் அப்படி இப்படித்தான் பாடினார். பாடலாசிரியரும் நாடகத்தின் நகைச்சுவை நடிகருமான பக்கிரிசாமி, “பையா நீ இந்தப் பாட்டை நாடகத்தில் நன்றாகப் பாடி முடித்துவிட்டால், உனக்கு என் பரிசு 1 ரூபாய். இல்லையென்றால் நான் தரும் தண்டனையை நீ வாங்கிக்கொள்ள வேண்டும்” எனக் கறாராகச் சொல்லிவிட்டார். 'இதென்னடா வம்பு, பாடினால் பரிசு... பாடாவிட்டால் தண்டனையா...' சரியாக சிக்கிக்கொண்டோமா என்ற குழப்பத்துடனே ரிகர்சலில் ஈடுபட்டான் சிறுவன் ராம்சந்தர்.

    தண்டனைக்காக அல்லாமல் தான் பாடத்தகுதியற்றவன் என்ற ஆசிரியரின் எண்ணத்தை மாற்றியாகவேண்டும் என முடிவெடுத்தான் ராம்சந்தர். பலநாட்கள் கடும் முயற்சியில் ரிகர்சலில் ஈடுபட்டான். நாடகத்தன்று நாடகக் குழுவில் இருந்த ராம்சந்தரின் நண்பர்கள் பதைபதைப்போடு மேடையை வெறித்துகொண்டிருந்தனர்.

    ராம்சந்தர் பாடத் தொடங்கினான். எங்கும் சுருதி விலகவில்லை. வாத்தியாரின் எதிர்பார்ப்பையும் விஞ்சி உச்சஸ்தாயியில் பாடி முடித்தபோது... அரங்கமே அதிரும்படி கைதட்டல் எழுந்தது.


    வாத்தியார் வைத்த பரீட்சையில் தன் தம்பி ஜெயித்துவிட்டதை மகிழ்ச்சியுடன் அரங்கின் ஓரத்தில் நின்று ரசித்துக்கொண்டிருந்தார் சக்கரபாணி . நினைத்ததை முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ராம்சந்தர்.

    அரங்கில் அன்று அவன் காதுகளில் முதன்முறையாக ஒலித்த கைதட்டல், அடுத்த பல பத்து ஆண்டுகளுக்கு தொடரப்போவதை காலம் மட்டுமே அன்று அறிந்திருக்கும்.

    சில நிமிடங்களும் தாமதிக்கவில்லை. பக்கிரிசாமி, ராம்சந்தரை அழைத்து கட்டிப்பிடித்தபடி ஓங்கி குரல் கொடுத்தார். “ஏய் பையா, ராம்சந்தருக்கு பால் கொண்டுவாங்கடா..”- ராம்சந்தருக்கு இன்னும் மகிழ்ச்சி. ஆம் அன்றைய நாளில் பாய்ஸ் கம்பெனியில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, நாடகத்தில் அப்ளாஸ் வாங்கும் அளவு சிறப்பாக நடிப்பவர்களுக்கு கம்பெனி உரிமையாளர் தன் கையால் நாடகம் முடிந்தவுடன் பாராட்டி பால் தருவார். கம்பெனியில் அது ஒரு கெளரவம். அதுவரை அரிதான சிலரே அப்படி கெளரவம் பெற்றிருந்தனர். முதன்முறையாக ராம்சந்தருக்கு அன்று, அந்தக் கெளரவம் கிடைத்தது.

    எம்.ஜி.ஆர்

    கம்பெனியில் நல்ல நடிகன் என பெயர் வாங்கியாகிவிட்டது. இப்போது முறைப்படி ராம்சந்தருக்கு 6 வருட அக்ரிமென்ட்டும், சக்கரபாணிக்கு 3 ஆண்டுகளும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. சகோதரர்கள் தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பாலபார்ட் நடிகனாக ராம்சந்தர் நடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ராஜபார்ட் நடிகராக இருந்தவர் அந்நாளைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான பி.யு.சின்னப்பா. கதாநாயக நடிகர் என்பதால், கம்பெனியில் ஏக மரியாதை அவருக்கு. அதைப் பார்க்கிறபோதெல்லாம் தானும் ஒருநாள் இப்படிப் பலரும் மதிக்கும் பெயரும் புகழும் பெற்ற நடிகனாக வேண்டும் என்ற வெறி சிறுவன் ராம்சந்தரின் மனதில் எழும். ராம்சந்தரின் ஆசை நிறைவேறியதா...?........... Thanks.....

  5. #1904
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் நற்பணி சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம் எஸ் மணியன் அன்பு ரத்ததின் ரத்தமானா உடன்பிறப்புகளுக்கு எனது இளைய மகள் s சந்தியா அவர்களின் திருமணம் 15.11.2019 திருமலையில் நடைபெற உள்ளது. மக்கள் திலகம் எம் ஜி ஆர் அண்ணன் சைதையார் அவர்களின் ஆசியுடன் திருமண வரவேற்பு 18.11.2019 அன்று சென்னை அசோக் நகர் m p k மஹால் லக்ஷ்மன் ஸ்ருதி அருகில் புகாரி ஓட்டல் எதிரில் மாலை 6.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளதால் அனைவரும் இதையே அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு வருகை புரிந்து மணமக்களை வாழ்த்து ம்படி மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் ������.......... Thanks...

  6. #1905
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .......... Thanks...

  7. #1906
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆருக்கு எத்தனை முகம்
    அழகு காட்டும் முகம் ஒன்று
    கருணை காட்டும் முகம் ஒன்று
    வீரம் காட்டும் முகம் ஒன்று
    பாமரனை காக்கும் முகம் ஒன்று
    வள்ளலாகி தரும் முகம் ஒன்று
    வெற்றி காணும் முகம் ஒன்று
    எவராலும் வெல்ல முடியாத முகம் ஒன்று
    எத்தனை முகம் கண்டாலும் அகத்தின் அழகான பொன்மனதின் அழகு தானே முகத்தில் பிரகாசிக்கிறது

    வாழ்க எம். ஜி. ஆர் ., புகழ்.......... Thanks.........

  8. #1907
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடக்காத அதிசயம் என்னவென்றால் திரைபடத்தின் மூலம் ஒரு நடிகராக படிப்படியாக [1936-1947]உயர்ந்து தன்னுடய கொள்கைக்கு ஏற்ற கதைகளில் மட்டுமே நடித்து ஒரு சாதாரண மக்களின் உள்ளங்களில் குடிக்கொண்டு
    திரைப்படம் காண வந்தவரை ஒரு ரசிகனாக மாற்றி ,1954ல் மலைக்கள்ளன் படம் மூலம் புரட்சி நடிகராக உயர்ந்து 1977 வரை திரை உலகில்

    புரட்சி நடிகர்

    மக்கள் திலகம்

    வாத்தியார்

    வசூல் சக்ரவர்த்தி

    கலைவேந்தன்

    கொடைவள்ளல்

    பொன்மனச்செம்மல்

    பாரத்

    புரட்சித்தலைவர்

    என்ற பட்டங்களை மக்கள் மன்றமும் ரசிகர் மன்றமும் வழங்கிய பாராட்டுக்களை பெற்றவர் நம் மக்கள் திலகம் .

    அவர் திரைபடத்தில் ஏற்ற பாத்திரங்களும் ,கதை அமைப்பும் , பாடல்கள் , வசனங்கள் எல்லாமே சமுதாயத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் அன்றாட பிரச்சினைகளை பிரதிபலித்தது .

    1950,1960,1970,1980,1987 ..... கால கட்டங்களில் ஏழை மக்களின் கண்ணீரை துடைக்கும் மக்கள் காவலனாய் , பல நல திட்டங்கள் வகுத்து நாடோடி மன்னனில் சொன்னதை 1977ல் செய்து காட்டி 1987 வரை நல்லாட்சி புரிந்து அவர் மறைந்து 30 ஆண்டுகள் பின்னரும் அவரது ஆட்சி இன்றும் தொடர்கிறது .
    அவரது திரைப்படங்களும் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது .

    மக்கள் திலகத்தின் புகழ் ஒரு அமுத சுரபி போல் ...........

    நீங்கள் சொன்னதை போல் நம் இதய தெய்வம் மக்கள் திலகம் அவரின் படங்களை மக்களும் ரசிகர்களும் எதையெல்லாம் உண்மையோ அதை மட்டும் நம்பினார்கள் .

    ரசிகர்களையும் மக்களையும் என்றுமே யாரும்
    ஏமாற்ற முடியாது ............ Thanks.........

  9. #1908
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ........ Thanks.........

  10. #1909
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கண்களும் நடிக்கும் அவரது புருவமும் நடிக்கும் என்று காலங்காலமாக கதையளக்கும் போலிகளே, இந்தக்காட்சியைப் பாருங்கள் ... தனது ஒரு காலில் காயம் உண்டாகி நடக்க முடியாமல், இருக்கும்போதும் தன்னைக் கொல்ல வரும் எதிரியை சாதுரியமாக தடுத்து அவனையே அடித்து விரட்டும் தலைவரின் சாதுரியத்தைப் பாருங்கள் ...தமிழர்களின் கலையில் இதுவல்லவோ வீரம் ... இது. இவருக்குத் தானே வருது... அப்ப இவர்தானே சூப்பர்நடிகர்... புரட்சித்தலைவரின் வீரத்தில் அனைவருக்கும் இன்றையநாள் நல்லதாக அமையட்டும்..... மதுரை எஸ் குமார்....(தாயின் மடியில் காவியம் காணொளி)...... Thanks.........

  11. #1910
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1979.....திரு K.A. கிருஷ்ணசாமி அவர்கள் தமிழக மந்திரியாக பதவி ஏற்றவுடன் அவரை இருக்கையில் அமரசெய்த காட்சி .

    உடன் இருப்போர் திரு சோமசுந்தரம் மற்றும் திரு நாஞ்சில் மனோகரன் .

    1976ல் புரட்சிதலைவர் அவர்கள் அண்ணா திமுக கொடியினை தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கையில் பச்சை குத்திக்கொள்ள சொல்லியபோது திரு நாஞ்சிலாரும்அண்ணா திமுக கொடியினை தந்து கையில் பச்சை குத்தி .
    கொண்டார் .நாஞ்சிலார் கையில் அதை காணலாம் .......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •