Page 194 of 402 FirstFirst ... 94144184192193194195196204244294 ... LastLast
Results 1,931 to 1,940 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #1931
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பாராட்டுக்களும்....!
    வாழ்த்துக்களும்....!!
    ****************************
    ஒளிவிளக்கு MGR குடும்பத்தில் நாள்தோறும் நமது தெய்வம், பொன்மனத்திலகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் காலத்தால் அழிக்க முடியாத காவிய வரலாறுகளை குரல்பதிவு மூலமாக பதிவு செய்து...மக்கள் திலகம் அவர்களின் எண்ணற்ற பக்தர்களின் இதயத்தில் தனக்கென்று ஓர் இடம் பிடித்து புரட்சி படைத்துக் கொண்டிருக்கும் பாசத்திற்குறிய இனிய சகோதரர் திரு. சம்பங்கி GSR அவர்கள் தொடர்ந்து நம் கொடைவள்ளலின் புகழ் ஒலிக்க செய்ய பாராட்டுக்களும்... வாழ்த்துக்களும் கூறி கொள்வதோடு , அண்ணாரின் குரல் உழைப்பை போற்றி பாராட்டு தெரிவித்த சகோதரர் திரு. குமார் அவர்களுக்கு , பெங்களூரில் புனித தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் ஏகோபித்த உண்மை விசுவாசிகளின் நல் ஆதரவு பெற்று 27 ஆண்டுகளை கடந்தும் சிறப்புடன் இயங்கி வரும் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " யின் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
    என்றும் ,
    எம்ஜிஆரின் காலடி நிழல் க. பழனி........ Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1932
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ........ Thanks.........

  4. #1933
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கன்னியாகுமரில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைய மூலகாரணம் யார் தெரியுமா? திக-வும் இல்லை; திமுக-வும் இல்லை.

    கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? கருணாநிதிக்கா, வீரமணிக்கா.... இல்லை.

    ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்கான ஏக்நாத் ரானடே என்கிற மகத்தான கர்மயோகிக்குதான்.

    கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் அன்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் ஏக்நாத் ரானடே தலைமையில் இயங்கிய விவேகானந்தா நினைவு மண்டப கமிட்டி மற்றும் விவேகானந்தா கேந்திரத்திடம் ஒப்படைத்திருந்தது தமிழக அரசு.

    சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின் பக்கத்தில் இருந்த மற்றொரு பாறையை 17-7-1977ல் தமிழக அரசாங்கத்திடமே ஒப்படைத்தது விவேகானந்தா கேந்திரம்.

    ஒப்படைத்த து மட்டுமல்லாமல், 15-3-1979ல் தமிழக அரசாங்கத்திற்கு திருப்பி அளிக்கப்பட்ட அந்த பாறையில் சுவாமி திருவள்ளுவருக்கு நினைவாலயம் மற்றும் திருவள்ளுவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்கிற திட்டத்தை அனுப்பியது விவேகானந்தா கேந்திரம். அனுப்ப ஏற்பாடு செய்தவர் ஏக்நாத் ரானடே அவர்கள்.

    அதன் காரணமாக தமிழக அரசாங்கமும் அதை ஏற்றுக் கொண்டு திருவள்ளுவர் நினைவாலயத்திற்கான அடிக்கல்லை அப்போதைய முதல்வராக இருந்த திரு.எம்.ஜி ஆர்.,... அவர்களாலும் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல்லை அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களாலும் 15-04-1979ல் கன்னியாகுமரில் நாட்டப்பட்டது.

    ஆக, கன்னியாகுமரில் திருவள்ளுவருக்கு இன்று கம்பீரமாக சிலை இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழு முதல் காரணம் *ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் ஏக்நாத் ரானடே* அவர்கள்தான். இந்து அமைப்புதான் காரணம்........... Thanks.........

  5. #1934
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like



    கோவை டிலைட்

    திரையரங்கில்

  6. #1935
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    நன்றி - திரு ரஞ்சித்

  7. #1936
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1937
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புர*ட்சித்த*லைவ*ருட*ன் "அடிமைப்பெண்"... திரைப்ப*ட*த்தில் புர*ட்சித்த*லைவி ந*டித்ததைப்ப*ற்றி அவ*ரே விளக்கும் க*ட்டுரை..

    உலகப் பொது மறையான திருக்குறளை நினைவுபடுத்தியது-புரட்சி நடிகர் அன்று என்னிடம் கேட்ட அந்தக் கேள்வி

    அவர் அப்படி என்னதான் கேட்டார் என்கிறீர்களா? ஆரம்பத்திலிருந்தே சொல்லுகிறேன்.

    “அடிமைப் பெண்" வேடத்தில் நடித்த போது எப்போதும் போல, கதாநாயகி வேடம் என்று எண்ணி இருந்தேன். படத்தின் பூர்வாங்க வேலைகள் வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. கதைக்கேற்ப வில்லியாக வேறு ஒருவரை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தார்கள். சொல்லப் போனால் எனக்கு அப்போது இரட்டை வேடம் அதில் கிடையாது.

    பின்னர் மீண்டும் அப்ப*ட*த்தை உருவாக்கும்போது க*தை ச*ற்றே மாற்ற*ப்ப*ட்ட*து. எனக்கு இர*ட்டை வேட*ம் கிடைத்த*து. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி க*தை நீயே இரட்டை வேடம் ஏற்று இதில் நடிக்கிறாயா? என்று கேட்டார் எம்.ஜி.ஆர். சட்டென்று எனக்கு ஒரு திருக்குறள் தான் நினைவுக்கு வந்தது.

    “கொக்கக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்தவிடத்து” என்ற வரிகளை எண்ணிக் கொண்டேன். இதைத்தான் முதலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

    இம்மாதிரியான சந்தர்ப்பம் வாய்க்காதா என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நான் இதை நழுவ விடுவேனா? முழு மனதுடன், மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டேன்.

    கதாநாயகி ஜீவா பாத்திரத்துடன், பட்டத்து ராணி பவளவல்லி (வில்லி) யாகவும் நடிக்கும் பெரும் வாய்ப்பை எம்.ஜி.ஆர் எனக்கு அளித்து விட்டார்.

    வில்லிக்காக ஒரு மானரிசம் (mannerism), அதாவது ஒரு தனிப்பட்ட சேஷ்டையைக் கைக்கொள்ளும்படியும் எம்.ஜி.ஆர் அப்போதே கூறிவிட்டார். அதற்காக வீட்டில் கண்ணாடி முன் நின்று ஒரு விசேஷ சேஷ்டையைப் பயிற்சி செய்தேன். நாலைந்து பாவனைகள் பழக்கத்துக்குக் கொண்டு வந்தேன்.

    அந்த பாவனை பயிற்சிகளை எம்.ஜி.ஆர் முன் நடித்துக் காட்டிய போது, அதில் ஒன்றை, இப்போது படத்தில் வரும் உதட்டை விரலால் வழித்து விடும் பாவனையை எம்ஜிஆர் தேர்ந்தெடுத்தார்.

    “அடிமைப் பெண்” படம் வளரத் தொடங்கியது முதல், அதில் சில தனிச் சிறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. படக் காட்சியில் எல்லா அம்சங்களும் கலந்தாலோசனை செய்யப்பட்ட பிறகே காமிரவுக்குச் சென்றன.

    தயாரிப்பில் பங்கு பெற்ற அனைவரிடமும் ஒரு தனி உற்சாகம் நிறைந்து இருந்ததையும் என்னால் உணர முடிந்தது. என்னைப் பொறுத்தமட்டில், நான் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட படத்தில் நடித்துவிட்டேன். ஆனாலும் ‘அடிமைப்பெண்’ணில் ஒவ்வொரு காட்சியிலும், நானே அனுபவித்து, ரசித்து நடித்தேன். என்னை அறியாமலே ஒரு தனி உற்சாகம் இதில் நடிக்கும் பொழுது ஒட்டிக் கொண்டுவிட்டது.

    “இப்படிச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் போல் தோன்றுகிறதே’ என்று சொன்னால் போதும் அதை உடனே ஏற்றுக் கொண்டுவிடுவார் எம்.ஜி.ஆர் அதற்கு ஒரு சான்றும் கூறுகிறேன்.

    ஜெய்ப்பூர் வெளிப்புறக் காட்சிக்காக சென்று அங்கு முகாம் செய்திருந்தோம். ஜெய்ப்பூர் அரண்மனையில், தர்பார் காட்சி ஒன்று அன்று படமாக்கப்பட்டது.

    பட்டத்து ராணி (வில்லி)யாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். தர்பார் ஆசனத்தை விட்டுப் படி இறங்கி நடந்து வந்து, எதிர்க் கோடியில் கட்டப்பட்டிருக்கும் கதாநாயகனை நான் பார்க்க வேண்டும். படப்பிடிப்பு சமயத்தில் வில்லியாக வருகையில் எனக்கே இயல்பான, வழக்கமாக நான் மற்ற படங்களில் நடந்து வந்ததைப் போன்ற நடையில் நடந்து வந்தேன். காமிரா படமாக்கிக் கொண்டிருந்தது. டைரக்டரும் ஓ.கே சொல்லி, அந்த நடை காட்சியை முடித்து விட்டார்.

    இவ்வளவு முடிந்தும் நான் எம்.ஜி.ஆர் முகத்தை பார்த்தேன். அவர் முகத்திலே அந்தக் காட்சி நினைத்தபடி அமையவில்லை என்பதற்கான அதிருப்தி நிலவியதைக் கண்டு கொண்டேன். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை.

    “டைரக்டர் சார், இன்னொரு டேக் எடுக்கிறீங்களா? என்று நானாகவே கேட்டேன். ஏனெனில், என் மனதுக்குள் வேறொரு “ஸ்டைலில்’ நடந்து காட்ட வேண்டும் என்று ஒரு ஆவல் எழுந்தது.

    மீண்டும் அந்த நடையலங்காரக் காட்சி படமாக்கப்பட்ட போது, முன் நடந்து வந்தது போல் நடக்காமல், என் கற்பனையில் உதித்த வேறொரு வகையில் ஒரு விசேட நடையை என் பாதங்கள் வெளிப்படுத்திற்று. எம்.ஜி.ஆர் முகத்தைப் பார்த்தேன். இப்போது மனநிறைவின் மகிழ்ச்சி அவர் முகத்தில் தோன்றியது. அதுமட்டுமல்ல உடனே அவர் என்னை அழைத்து, “இந்த நடை ரொம்பப் பிரமாதமாக இருக்கிறது. வில்லிக்கேற்ற அலங்கார நடையாக இருக்கிறது. படம் பூராவும், வில்லியாக வரும்போதெல்லாம் இதே நடையிலேயே நடந்து வந்துவிடு, என்று உத்தரவு போட்டு விட்டார். நடையில் மட்டுமல்லாமல், ஜீவாவாக வரும் போதும், பவளவல்லியாக வரும் போதும் என் குரல்களில் கூட சிறிது வித்தியாசம் இருக்கும். படத்திற்கென்று அப்படி மாற்றம் செய்து கொண்டு நடித்திருக்கிறேன்.

    நடிப்பு, குரல் இரண்டையும் பற்றி சொல்லிவிட்டேன். இன்னும் சில குறிப்பிடத்தக்க அம்சங்களும் இதில் உள்ளன. அவற்றிலே முக்கியமாக உடை அலங்காரத்தைப் பற்றிச் சொல்லாமல் இருக்கலாமா? “அடிமைப் பெண்”ணில் வில்லியாக வரும்போது நான் அணிந்து வரும் ஆடைகள் அனைத்தும் புதுமையான பாணியில் தைக்கப்பட்டவை.

    அடுத்தது என்னைப் பாட வைத்த முதல் பெருமையும் இந்தப் படத்துக்குத் தான் சேரும். என்னைப் பாடச் சொன்ன போது முதலில் பயந்து தன்னம்பிக்கை குறைவாக இருந்ததால் நான் வாதாடினேன், பிறகு, எம்.ஜி.ஆர் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தைரியம் கூறிய பிறகே, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் முன்பு தோன்றினேன்.

    இசைக்கு அடுத்ததாக நடனம். “இதில் ஏதேனும் புதுமையைச் செய்ய முடியுமா? என்று புரட்சி நடிகர் என்னிடம் கேட்டார். பலவித நடனங்கள் ஆடிவிட்டேன், பலபடங்களில் ஸ்பானிஷ், எகிப்திய நடன பாணிகளிலும் நடனங்கள் ஆடியிருக்கிறார்கள். இதில் மாற்றம் புதுமையைப் புகுத்துவது எப்படி? இந்தக் கட்டத்தில் நான் பார்த்த பல படங்களை என் மனக் கண்ணுக்குள் கொண்டு வந்து பார்த்தேன். நான் படித்த பல புத்தகக் குறிப்புகளும் நினைவில் பம்பரமாக சுழன்றன . தனிமையில் அமர்ந்து ஓயாமல் சிந்தித்தேன்.

    டிக் டிக் டிக்… என இதயத்துடிப்பு… டிக் டிக் துள்ளி எழுந்தேன். முரசு அதிர்ந்து நடனங்கள் ஆடப்படுவதுண்டு… முரசு அதிர்ந்து போர் பரணியும் புறப்படுவது உண்டு. படங்களில்... இந்தக் கட்டத்தில் முரசுகளையே சலங்கை போல் மேனியில் அணிந்து கொண்டு ஆடினால் என்ன? எப்படி இருக்கும்? “குட் ஐடியா” எனக்கு நானே சபாஷ் போட்டுக் கொண்டேன்.

    மறுபடியும் ஸ்டுடியோவுக்குச் சென்றபோது எம்.ஜி.ஆரிடம்; ”முரசு அணிந்து ஆடினால் புதுமையாக இருக்கும் என்றேன். “அப்படியே செய்ய்லாம்” என்று கூறியதோடு நிற்காமல், நடனப் பயிற்சி வல்லுனரான நடன மாஸ்டர் சோப்ராவையும் வரவழைக்குபடி ஆளை அனுப்பிவிட்டார் புரட்சி நடிகர். கூடவே கே.வி.மகாதேவனும் வரவழைக்கப்பட்டார்.

    ஆட்டம் பிறந்தது. கூடவே தனி விசேஷமானதோர் பின்னணி இசையும் பிறந்தது. மகாதேவன் கிளுகிளுப்பையும் புல்லரிப்பையும் இசையிலே எப்படியோ புகுத்திவிட்டார். அந்த இசை என்னை மேலும் உற்சாகத்துடன் நடனம் ஆட வைத்தது.

    இப்படத்திலே நான் கதாநாயகனுக்கு சண்டை பயிற்சிகளும் சொல்லிக் கொடுத்து இருக்கிறேன். ஆமாம், எம்.ஜி.ஆருக்குத் தான் கத்திச் சண்டை, கோடரியில் சண்டை, ஈட்டிச் சண்டை, ஜூடோ சண்டை இத்தனையும் காமிராவில் பதிவாகும் முன் அவர் எனக்கு சொல்லித் தருவார், காமிரா படமாகும்போதோ, எம்.ஜிஆருக்கு நான் பயிற்சி தருவேன்.

    இது தான் திரை உலக விந்தை! “அடிமைப் பெண்’ படத்தில் என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்து, மகத்தான வாய்ப்புக் கொடுத்ததற்காக புரட்சி நடிகருக்கு என்றென்றும் நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன்.

    இவ்வாறு புர*ட்சித்த*லைவி அடிமைப்பெண் ப*ட*த்தில் புர*ட்சித்த*லைவ*ருட*ன் ந*டித்த அனுப*வ*த்தை நெகிழ்ச்சியுட*ன் குறிப்பிடுகிறார்.

    இனிய காலை வ*ணக்கத்துட*ன்...........
    Thanks.........

  9. #1938
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் வெற்றிக்கு துணை புரிந்த அவர் பெயரின் எண் கணிதம்
    M.G.RAMACHANDRAN
    M 4
    G 3
    R 2
    A 1
    M 4
    A 1
    C 3
    H 5
    A 1
    N 5
    D 4
    H 5
    R 2
    A 1
    N 5
    =46 or 1
    ஒன்று என்ற எண் ஸூர்யனைக் குறிக்கும். அரசியல் ஆட்சி இரண்டுக்கும் உரியது.உயர் தலைமையைக் குறிப்பது.ஸூர்யனின் சின்னத்தை ப்ரபலபடுத்தியவர் மக்கள் திலகமே.மேலும் ஸூர்யனின் ஆதிக்கம் பெற்றவர்கள் கண்ணாடி அணிபவர்களாக இருப்பார்கள்.
    மக்கள் திலகம் கறுப்பு கண்ணாடி உபயோகித்தவர்.
    இவரின் பெயரில் ஸூர்யனின் எண் ஒன்று நான்கு முறை வருகின்றது.
    சந்த்ரனின் எண் இரு முறை வருகின்றது.
    M.G.R.
    குரு பகவானின் எண் 5 நான்கு முறை வருகின்றது.
    எனவே அவர் கருணை வள்ளலாக தர்மத்தில் சிறந்தவராக மிளிர்ந்தார்
    4 3 2 =9
    செவ்வாய்குரிய இந்த எண்ணிலால் M.G.R.மிகவும் ப்ரபலமடைந்தார்.ராஜ தந்த்ரம் கை வரப்பெற்று போராடி மிக உன்னத நிலையைப் பெற்று நம் இதய தெய்வமாக விளங்குகின்றார்
    மேலும் செவ்வாய் பலம் பெற்றவர்கள் மல்யுத்தம் கத்தி வாள் வீச்சு வீரர்கள். எந்த போட்டி விளையாட்டிலும் அனாவசியமாக வெற்றிக்கனியை தட்டிப் பறிப்பர்.
    நம் பொன் மனச்செம்மலுக்கு இது எல்லாமே கை வந்த கலை தானே............ Thanks.........

  10. #1939
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M. G. R. ..N. T. R. தொடர்ச்சி பாகம் 2

    ராமபுரம் தோட்டம் இல்லத்தில் எந்த நேரமும் அனையா விளக்கு போல் அடுப்பு எரியும் எப்போது யார் சென்றாலும் உணவு உண்ணாமல் திரும்புவதில்லை ....
    யாராவது வரும் போது சாப்பிட்டு வந்திருந்தாலும் பால் பாயசம் அல்லது பழம் ஜூஸ் எதாவது ஒன்று சாப்பிட்டுத்தான் வர வேண்டும் ..இதுதான் வாத்தியார் கொள்கை லட்சியம்..ஆகும் ...புரட்சித்தலைவர் காண வந்த N. T. ராமராவ் அவர்கள் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுடன். தானும் அமர்ந்து சாப்பிடுவதாக கூறினார் ..அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் .புரட்சித்தலைவரே.அவர்க்கு உணவு பறிமாறினார். அறுச்சுவை உணவு என்றால் என்ன என்று புரட்சித்தலைவர் வீட்டில் சாப்பிட்டாத்தான் தெரியும் ..வாத்தியார் வீட்டில் சாப்பிட்டவர்கள். வேறு இடத்தில் சாப்பிட்டா அந்த உணவு நன்றாக இல்லை என்றுத்தான் நினைப்பார்கள்.
    அதனால்தான் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் எம். ஜி. ஆர் எத்தனையோ முறை சாப்பிட கூப்பிட்டும் போகவில்லை ..அதற்கு காரணம் ஒரு முறை எம். ஜி. ஆர் வீட்டில் சாப்பிட்டா மீண்டும் மீண்டும் அவர் வீட்டு சாப்பாடு சாப்பிட தோண்றும். என்பதால் நாவின் சுவை அடக்கி வைத்திருந்தார் ..இப்போது அதே நிலைத்தான் புரட்சித்தலைவர் விருந்து உண்டவுடன். விருந்தோம்பல் என்றால் என்ன என்று..
    எம். ஜி. ஆரிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார் .N. T. ராமராவ் அவர்கள் ...

    புரட்சித்தலைவர் ஆசிர்வாதத்துடன் ஆந்திராவின் முதல்வர் ஆனார் ...N. T. ராமராவ் அவர்கள்.
    ஆந்திராவில் முதல் முதலாக சட்டசபையில் அறிவித்த திட்டங்களில் அறிவித்த ஒர் அறிவிப்பு இனி திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் வழங்கப்படும்..என்றார் ...இது எப்படி சாத்தியம் ஆகும் .என்று கேள்வி எமுப்பினார்கள் எதிர் கட்சி காரர்கள் ..அதற்கு N. T. ராமராவ் தந்த விளக்கம் ..

    தமிழகம் முதல்வர் திரு..எம் ஜி. ராமச்சந்திரன் அவர்கள் வீட்டில் எந்த நேரம் சென்றாலும் உணவு கிடைக்கும். எப்போதும் அவர்வீட்டு அடுப்பு எரிந்துக்கொண்டே இருக்கும். தனி ஒரு மனிதர் வீட்டில் இது சாத்தியம் ஆகும் போது..
    ஊர் உலகத்துக்கே படி அளக்கர திருப்பதி திருமலை ஏமுமலையான் ஆலயத்தில் ஏன் சாத்தியம் ஆகாது. என்று விளக்கம் தந்து திட்டத்தை நிறைவேற்றினார்..

    பின் குறிப்பு .....N. T. ராமராவ் அவர்கள் முதல்வர் ஆவதற்கு முன் திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் கிடையாது. விஷேச நாட்கள் திருவிழா நாட்கள் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்து..மற்ற நாட்களில் பிரசாதம் வழங்கப்பட்டது..N. T. ராமராவ் அவர்கள் வந்த பிறகு தான் சாமி தரிசனம் பார்த்து விட்டு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த. சந்திர பாபு நாயுடு அவர்கள் திருப்பதி திருமலைக்கு வரும் அனைவோருக்கும் எப்போதும் உணவு.உண்டு திட்டம் நிறைவேற்றினார் .....
    ஆக திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் உருவாதுக்கு காரணம்

    நமது தெய்வம் பொன்மனச்செம்மல்............ Thanks............

  11. #1940
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 34. .

    எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்கிறதோ அங்கெல்லாம் எதாவது ஒரு ரூபத்தில் வடிவத்தில் அவதாரம் எடுத்து அதர்மத்தை அழிப்பேன். .
    பகவத் கீதையில் கிருஷ்ணபரமாத்மா கூறியது. .
    அதேப்போல் எங்கெல்லாம் துன்ப படுபவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உதவி செய்ய இறைவன் எதோ ரூபத்தில் வடிவத்தில் யாரையாவது அனுப்புவார். அப்படி அனுப்பப்பட்டவர்தான் நமது தெய்வம் பொன்மனச்செம்மல். .

    வாத்தியார் ஒவ்வொருக்கும் உதவும் போதும். அவன் நல்லவனா கெட்டவனா ? எதிரியா நண்பனா? ? சொந்தமா உறவு முறையா? ? என்று பார்ப்பதில்லை. ..தன்னை நாடி வருபவர்களுக்கு உதவிடும் போதும். .தேடிச்சென்று உதவிடும் போதும். அங்கே அவனது கஷ்டமான சூழ்நிலையும். எண்ணி சராசரி மனிதாபிமானத்துடன்தான் உதவிடுவார் தவிர. உதவியால் பலன் உண்டு என்பதினாலோ. பிறர் உதவி எதிர்பார்த்தும் உதவிடுவதில்லை உதவி செய்வது நமது கடமை என்கிற ஒரே கொள்கை தான் அவர்க்கு கொடைவள்ளல் பொன்மனச்செம்மல் என்ற பட்டம் பொருந்தியது வழங்கப்பட்டது. . இது 100/. சதவீதம் உண்மையாகும்...இதற்கு ஆயிரம் ஆதாரம் உண்டு. அதிலே ஒரு ஆதாரம் தான். .இந்த பதிவு. .

    கவியரசு கண்ணதாசன் அவர்கள் வாத்தியார் நடித்த பல படங்களில் மதுரைவீரன். .மகாதேவி .நாடோடி மன்னன். . ராஜாதேசிங்கு மன்னாதி மன்னன்
    திருடாதே. .வசனம் எழுதி தேர்ச்சி,தன்னை ஒரு வசனகர்த்தா என்பதை நிருபித்து. வெற்றியும் வசூலும் குவித்தார். ....அதன் பிறகு அரசியல் சூழ்நிலை காரணமாக வாத்தியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். ..அதன் பின்னர் கண்ணதாசன் தயாரிப்பாளராக இருந்து எடுத்த மாலையிட்ட மங்கை. வானம்பாடி வெற்றி படமாக இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை. நஷ்டம்தான் ஏற்பட்டது, ..மேலும் சிவகங்கை சீமை. ...இரத்ததிலகம். ...கவலையில்லாத மனிதன்
    தாயே உனக்காக கருப்பு பணம் .போன்ற படங்கள் எடுத்து பெரும் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக ஆனார் ..கடனை அடைக்க முடியாமல் தவித்தார். .தனது சகோதரர்களான A L, சீனிவாசன். .A. L , நாராயணன். ..A. L, முத்தையா. .A. L, கண்ணப்பன். .மேலும் தனது சொந்தகாரர்கள் உறவினர்கள், நண்பர்கள் என பல பேர்களிடம். மற்றும் சிவாஜி. சந்திரபாபு பல சினிமா தயாரிப்பாளர்களிடம் .உதவி கேட்டார். எல்லோரும் எதாவது காரணம் பிரச்சினைகள் கூறி. உதவி செய்ய மறுத்து விட்டார்கள். .இன்னும் சொல்லனும் என்றால் தீபாவளி பண்டிகை குடுபத்துடன் கொண்டாட முடியாதளவுக்கு பணம் பிரச்சினை கஷ்டம் ஏற்பட்டது. கண்ணதாசன் சூழ்நிலை கேள்விப்பட்டார் வாத்தியார். . உடனே போனில் தொடர்பு கொண்டு பேசினார். .

    உங்களுக்கு என்ன பிரச்சினை . எவ்வளவு கடன் ..எவ்வளவு பணம் தேவை ..ஏன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா ..நான் போன் செய்து கேட்கறளவுக்கு வைத்துள்ளீர்கள். யார் யாரோரிடம் கேட்டீர்கள் என்னிடம் கேட்கனும் என்று தோன்றவில்லையா, சரி இப்போமுது எவ்வளவு பணம் தேவை என்று வாத்தியார் கேட்டதும். கண்ணதாசனால் பதில் பேச முடியாமல் தவித்தார் மனம் கலங்கினார். .இப்படியும் ஒரு மனிதரா இவரைப் போய் தவறாக எண்ணி தவறனா கருத்துக்கள் தெரிவித்தோமே என எண்ணி மனம் வருந்தியபடி குறிப்பிட்ட தொகையே கேட்டார்..மறுநாள் அதிகாலை நேரத்தில் கண்ணதாசன் வீட்டுக்கு ஒருவர் வந்து வாத்தியார் கொடுத்தார் என்று கூறி மிகபெரிய பொட்டலமும் தீபாவளி பண்டிகை கொண்டாட தேவையான அனைத்து பொருட்கள் பெட்டி நிறைய கொடுத்து விட்டு சென்றார். .அவ்வளவு தான் கண்ணதாசன் ஒன்றும் பேசமுடியவில்லை திக்குமுக்காடிப் போனார். .அப்போது அவருக்கு ஞாபகம் வந்த குறள் இதுதான். .
    இன்னார் செய்தாரே ஒருத்தர் அவர் நாணம்
    நம்மையும் செய்திடுக. ... என்ற குறள் தான்.
    உடனே சின்னப்பர் தேவர்க்கு போன் செய்து நீங்கள், உங்கள் ஆண்டவரை வைத்து அடுத்து எந்த படம் எடுத்தாலும்,அந்த படத்திற்கு நான்தான் முமு பாடல்களும் எழுதுவேன், என்று கூறி போனை வைத்து விட்டார். சின்னப்பர் தேவர் இதைக்கேட்டதும் அதிர்ச்சியில் மகிழ்ச்சி அடைந்தார். .
    வாத்தியார் கொடுத்த தொகையை கண்ணதாசன் பிரித்து பார்த்து மேலும் அதிர்ச்சி ஆகினர். அவர் கேட்ட தொகையை விட ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. ..இன்னும் முடியலங்க வரலாறு தொடரும் தொடரும் தொடரும்....... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •