Page 210 of 402 FirstFirst ... 110160200208209210211212220260310 ... LastLast
Results 2,091 to 2,100 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2091
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை - சென்ட்ரல் சினிமா DTS., 29.11.2019 வெள்ளிகிழமைமுதல் தினசரி.4.காட்சிகளாக வெற்றிப்பவனி வருகின்றார் "ராமன்தேடியசீதை"... புரட்சித்தலைவரின் காவியம் மகத்தான வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்.........நன்றி... மதுரை எஸ்.குமார்......... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2092
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மானுட உலகின் நவரத்தினம்... மக்கள் திலகம் டிசம்பர் மாதத்தில் வரும் நினைவு நாளை முன்னிட்டு கோவை - சண்முகா DTS., தினசரி 4 காட்சிகள் காட்சி தர " மலைகள்ளன்" வருவதாக தகவல்.......... Thanks.........

  4. #2093
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2094
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2095
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Mgr அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்.1963ல் அவர் திமுக வில் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தார்.திமுக என்பது கடவுள் நம்பிக்கையில்லாத கடவுளுக்கு எதிரான ஒரு கட்சியாக வடிவெடுத்திருந்த சமயம் அது.அப்போது mgr ன் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அவர் கட்சியின் கொள்கையை மீறுகிறார் என்று குற்றம் சாட்டி அவரை கட்சியின் தலைமையில் சொல்லி கட்சியை விட்டு அகற்ற பார்த்தனர்.

    அந்த இக்கட்டான சூழ்நிலையில் மற்றவர்களுக்கு பாடம் புகுத்துவது போன்ற ஒரு பாடல் எழுதுமாறு கண்ணதாசனிடம் கேட்டார்.சூழ்நிலைக்கு பாட்டு எழுதுவது என்பது நம் கவிஞருக்கு கைவந்த கலை.அப்படி அவர் எழுதிய பாடல்தான் "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று தொடங்கும் பாடல்.

    இயக்குனர் : சங்கர்
    இசை: விஸ்வநாதன் ,ராமமூர்த்தி
    படம் : பணத்தோட்டம் (1963)

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
    இருட்டில் நீதி மறையட்டுமே
    தன்னாலே வெளிப்படும் மயங்காதே
    ஒரு தலைவனிருக்கிறான் மயங்காதே

    பின்னாலே தெரிவது அரிச்சுவடு
    முன்னாலே இருப்பது அவன்வீடு
    நடுவினிலே நீ விளையாடு
    நல்லதை நினைத்தே போராடு

    உலகத்தில் திருடர்கள் சரிபாதி
    ஊமைகள் குருடர்கள் அதில்பாதி
    கழகத்தில் பிறப்பதுதான் மீதி
    மனம் கலங்காதே மதிமயங்காதே

    இந்தப்பாடலில் தனக்கு எதிராக என்னதான் நடந்தாலும் கடைசியில் நியாயம்தான் ஜெயிக்கும் என்பதுபோல் பாடல் எழுதியிருப்பர். " ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே" என்ற வரிகள் வரும் காட்சியில் பின்னாலே கோபுரங்களை பார்த்து mgr கை காட்டுவது போல் அமைத்திருக்கும் ( அது கடவுளை மறைமுகமாக குறிப்பதாக காட்சியமைதிருப்பார் ) "பின்னாலே தெரிவது அரிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு" போன்ற வரிகள் இரண்டு அர்த்தங்களுடன் எழுதப்பட்டவை. இவ்வாறு mgr ன் பல இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலத்தால் அழியாத பல பாடல்களை தந்தவர் கண்ணதாசன்.அதனால்தான் அவரை mgr தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக்கி அழகுப்பார்த்தார்............ Thanks.........

  7. #2096
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1972 ... ஆண்டில் வந்து சாதனை படைத்த மக்கள் திலகத்தின் காவியங்கள் ...........

    1. சங்கே முழங்கு ...

    2. நல்ல நேரம் ...

    3. ராமன் தேடிய சீதை ...

    4. நான் ஏன் பிறந்தேன்...

    5. அன்னமிட்ட கை ...

    6. இதய வீணை ...

    சங்கே முழங்கு -

    மக்கள் திலகம் முருகன் -கிருபால் சிங் என்ற பாத்திரத்தில் அருமையாக நடித்தார் .
    பொம்பள சிரிச்சா போச்சு என்ற கிண்டல் பாடலில் மக்கள் திலகம் லக்ஷ்மியை கிண்டல் செய்யும்
    பாடல் அட்டகாசம் .பிரமாதமாக நடனமாடி நடித்திருப்பார் . சிலர் குடிப்பது போல் நடிப்பார் என்ற பாடலில் ஹெலனுடன் நடனமாடி அசத்தியிருப்பார் . நாலு பேருக்கு நன்றி என்ற பாடலில் மௌனத்தாலே நடித்திருப்பார் . தமிழில் அது ஒரு ..... மற்றும் இரண்டு கண்கள் ... பாடலில் வித்தியாசமான உடையில் தோன்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் ..கிளைமாக்ஸ் காட்சியில்
    கோர்ட் காட்சிகளில் குறுக்கு விசாரணையில் அசத்தியிருப்பார் . மொத்தத்தில் சங்கே முழங்கு
    முழங்கியதின் மூலம் 1972 தொடர் வெற்றிக்கு வித்திட்ட காவியம் .

    நல்ல நேரம் .
    தேவரின் இமாலய வெற்றி . படம் . மக்கள் திலகம் அறிமுக காட்சியில் யானைகளுடன் கால் பந்து விளையாடும் காட்சி -இளமை - இனிமை - புதுமை .
    இனிய பாடல்கள் - ஜனரஞ்சகமான படம் .
    ஓடி ஓடி உழைக்கணும் பாடல் - இளமை துள்ளும் எம்ஜியாரின் வெற்றி பாடல் .

    ராமன் தேடிய சீதை .

    மக்கள் திலகம் நடித்த இந்த படத்தில் மொத்தம் 45 வித விதமான உடைகளில் தோன்றிய ஒரே படம் .
    திருவளர்செல்வியோ
    என் உள்ளம் உந்தன் ஆராதனை
    நல்லது கண்ணே
    முத்தான மூன்று காதல் கீதங்கள் . என்றென்றும் நம் நினைவில் சுழலும் பாடல்கள் .
    ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்ற படம் .

    நான் ஏன் பிறந்தேன்

    மக்கள் திலகம் நடித்த குடும்ப சித்திரம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . குறிப்பாக

    நான் பாடும் பாடல் .. நலமாக வேண்டும்

    உனது விழியில் எனது பார்வை ..
    இரண்டு பாடகள் போதும் படத்தின் வெற்றிக்கு . மக்கள் திலகத்தின் இனிய நடிப்பில் வந்த
    குடும்ப காவியம் .

    அன்னமிட்ட கை

    மக்கள் திலகத்தின் கடைசி கருப்பு வெள்ளை படம் .

    எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்

    மயங்கி விட்டேன் .. உன்னை கண்டு

    பதினாறு வயதினிலே

    அன்னமிட்ட கை . நம்மை ஆகி விட்ட கை

    47ஆண்டுகளாக ஒலித்து கொண்டிருக்கும் பாடல் .
    மக்கள் திலகத்தின் கோல் சண்டை - விறுவிறுப்பாக இருந்தது .
    தேர்தல் நேரத்தில் ஒலித்த பாடல் . 2021 தேர்தலில் ஒலிக்கபோகும் பாடல் .

    இதயவீணை

    மணியனின் நாவல் . இயற்கை எழில் பொங்கும் காஷ்மீரில் படமாக்கப்பட்ட படம் .
    மக்கள் திலகின் மாறுபட்ட சிகை அலங்காரம் இந்த படத்திற்கு ஸ்பெஷல் .
    ஆரம்ப பாடல் இதுவரை எந்த படத்திலும் வராத புதுமையான ஜாலி பாடல் . மக்கள் திலகம்
    அட்டகாசமாக காஷ்மீர் - காஞ்சிபுரம் பெருமைகளையும் , தன்னுடைய எதிர்கால அரசியல்
    பற்றியும் கூறும் பாடல் .பொருத்தமான பாடல் .1972 அரசியல் வெற்றிக்கு பின் வந்த படம் .

    1972 ஆண்டடில் மட்டும் ஆறு படங்கள் என்று கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்த படைத்த நம் மக்கள் திலகத்தின் சாதனைகள் என்ன வென்று சொல்ல ? காவிய படைப்புகள் .

    1972 அரசியலிலும் அறிமுக வெற்றி - படங்களும் வியாபார ரீதியாக அமோக வெற்றி ........அது மட்டுமல்ல... இந்த காவியங்கள் யாவும் இப்பொழுது வரையிலும் மறு வெளியீடுகள் காணும் சிறப்பான நிலையினை பெற்றுள்ளது குறிப்பிட தகுந்ததாகும்......... Thanks.........

  8. #2097
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன்
    அவர்களுக்கு 29-11-2019 பிறந்தநாள் வாழ்த்துகள்
    எம்.ஜி.ஆர் ., என்.எஸ்.கிருஷ்ணன் எனும் ஆசான்
    M.G.R. அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.

    கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான். ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.

    என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.

    என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார். வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதை கண்டுபிடித்துவிட்டனர். அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

    ஆரம்ப காலத்தில் ‘மாயா மச்சீந்திரா’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக என்.எஸ்.கிருஷ்ணனும் எம்.ஜி.ஆரும் கொல்கத்தா சென்றனர். படப்பிடிப்புக்கு இடையே கொல்கத்தாவை சுற்றிப் பார்க்க படக்குழுவினர் புறப்பட்டனர். அப்போது ஓரிடத்தில் ஓடை ஒன்று குறுக்கிட்டது. படப்பிடிப்பு குழுவினர் ஓடையில் இறங்கி கடக்கும்போது, எம்.ஜி.ஆர். தனக்கே உரிய துடிப்போடு அந்த ஆறடி அகலமுள்ள ஓடையை ஒரே தாண்டாக தாண்டி குதித்து விட்டார். அப்படி தாண்டிக் குதித்ததில் அவரது செருப்பு ஒன்று அறுந்துவிட்டது.

    உடனே, என்.எஸ்.கிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர். ‘‘வாங்கண்ணே, புது செருப்பு வாங்கி வரலாம்’’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ‘‘இன்று நேரமாகிவிட்டது. நாளை செல்லலாம்’’ என்று பதிலளித்தார் கிருஷ்ணன். மறுநாள் காலை எம்.ஜி.ஆர். மீண்டும் வந்து நினைவுபடுத்திய போது, அவரது கையில் ஒரு பார்சலை திணித்தார் கிருஷ்ணன். அதை எம்.ஜி.ஆர். ஆவலோடு பிரித்து பார்த்தார். உள்ளே, அவரது பழைய செருப்பு. ‘‘என்னண்ணே, புது செருப்பு வாங்கலாம்னு கூப்பிட்டா, பழைய செருப்பையே கொடுக்கறீங்க?’’ என்ற எம்.ஜி.ஆரை தீர்க்கமாக பார்த்தபடி பதிலளித்தார் என்.எஸ்.கிருஷ்ணன்.

    ‘‘உன்னையும் உங்க அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியையும் நாடகத்தில் நடிக்க உங்க அம்மா அனுப்பிவெச்சது பணம் சம்பாதிக்கத்தான். பழைய செருப்பு நல்லாத்தான் இருக்கு. அதை நான் தைச்சு வெச்சுட்டேன்’’ என்று சொன்ன கிருஷ்ணனின் அன்பில் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்துபோய்விட்டார். அன்று முதல் எல்லா பொருட்களையும் முழுமையாக பயன்படுத்தவும் எளிமையாக இருக்கவும் முடிவு செய்தார். அப்படி எளிமையாகவும் ஆடம்பரம் இல்லாமலும் இருக்க அவர் கற்றுக் கொண்டதற்கு ஒரு உதாரணம். பத்து ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வீட்டில் கடைசி வரை குடிநீர் குழாய் இணைப்பு கிடையாது. தோட்டத்தில் உள்ள கிணற்று நீர்தான் பயன்படுத்தப்பட்டது. வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத ஒரே முதல்வர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்.

    தனக்கு ஆசான் போல இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், கடைசி காலத்தில் வறுமையால் வாடி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிறைய உதவிகளை எம்.ஜி.ஆர். செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார் கிருஷ்ணன். அதற்காக எம்.ஜி.ஆர். சும்மா இருந்து விடுவாரா? அவரால் கொடுக்காமல் இருக்க முடியாதே? என்.எஸ்.கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் தலையணைக்கு அடியில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு வருவார் எம்.ஜி.ஆர்.

    என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த பின் நாகர்கோயிலில் அவரது வீடு ஏலத்துக்கு வந்தபோது அதை மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கே எம்.ஜி.ஆர். கொடுத்தார். அவரது குடும்பத்தையே எம்.ஜி.ஆர். தத்தெடுத்துக் கொண்டார் என்று சொல்லலாம். என்.எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைத்தார். அவரது மகள் திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.

    ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் போட்டி பாட்டு ஒன்று இருக்கும். அதிலே பல அரிய கருத்துக்கள் கேள்வி பதில் பாணியில் அமைந்திருக்கும்.

    என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..

    ‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’

    பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதை தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்...

    ‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது...”

    உடனே, ‘‘சரிதான் சரிதான்....’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.

    புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.

    நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாக பேசி வந்த காலத்தில், எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு அந்தஸ்தும் கவுரவமும் கிடைத்தது. 1965-ம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் ‘பணத்தோட்டம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு........... Thanks.........

  9. #2098
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ............ Thanks.........

  10. #2099
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திமுக தலைவர் கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டில் 17 அக்டோபர் 1972 அன்று உருவான கட்சி அதிமுக. தொடங்கியபோது, ரசிகர்கள்தான் எம்.ஜி.ஆரின் ஆதாரபலம். அடுத்தது, கலைஞர் எதிர்ப்பாளர்கள். திடீரென வந்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் வெற்றி பெற்றபோது, எம்.ஜி.ஆர் புன்னகைக்கத் தொடங்கியிருக்கவேண்டும்.

    திமுக ஊழல் கட்சி, கலைஞர் ஊழல் தலைவர் என்று முழங்கியபடிதான் மேடையேறினார் எம்ஜிஆர். திமுக அரசு மீதான ஊழல்புகார் பட்டியலையும் மத்திய அரசிடம் கொடுத்தார். அதுதான் பின்னாளில் திமுக அரசைக் கலைக்கவும் சர்க்காரியா விசாரணை கமிஷனை அமைக்கவும் பயன்பட்டது.

    ஒட்டுமொத்த தேசமே இந்திராவின் எமர்ஜென்ஸியை எதிர்த்துக் கொண்டிருந்த சமயத்தில் அதனைத் தீர்மானம் போட்டு வரவேற்ற கட்சி அதிமுக. அதுதான் இந்திரா காங்கிரஸையும் அதிமுகவையும் அரசியல் ரீதியாக இணைத்தது. 1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது அதிமுக. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் இந்திராவை வெறுத்து ஒதுக்கியபோது தமிழ்நாடு மட்டும் இந்திரா காந்திக்கு வெற்றிமாலை சூட்டியது. ஒரே காரணம், எம்ஜிஆர். எதிரியை முதல் ஆட்டத்திலேயே வீழ்த்திவிட்ட பெருமிதத்தோடு 1977 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார் எம்.ஜி.ஆர். இந்திரா காங்கிரஸை விலக்கிவிட்டு மார்க்சிஸ்டுகளைச் சேர்த்துக்கொண்டபோதும், ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.

    ஆட்சி நிர்வாகத்தில் ஊழல், லஞ்சம் இருக்கக்கூடாது என்று சொல்லி அமைச்சர்களைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கே அனுமதி கொடுத்தார் எம்ஜிஆர். கட்சியின் கொள்கைத் திட்டத்தில் அறிவித்த ‘பொருளாதார இட ஒதுக்கீட்டை’ நிறைவேற்ற முயற்சி செய்தார். அதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்களுக்குரிய சலுகைகளைப் பெறவேண்டும் என்றால் அவர்களுடைய ஆண்டு வருமானம் ஒன்பதாயிரம் ரூபாய்க்குக் குறைவாக இருக்கவேண்டும். இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அதன் தாக்கம் அடுத்துவந்த மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தது. 24 இடங்களில் போட்டியிட்ட அதிமுக வென்ற இடங்கள் வெறும் இரண்டு மட்டுமே.

    அதன் தொடர்ச்சியாக அதிமுக அரசு கலைக்கப்பட்டது. அதன் காரணமாக ஏற்பட்ட அனுதாப அலை மீண்டும் எம்.ஜி.ஆரை 1980ல் ஆட்சியில் அமர்த்தியது. மக்கள் ஆதரவு இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை அவர் அனுபவப்பூர்வமாக உணர்ந்த தருணம் அது. அதன் வெளிப்பாடாக வந்ததுதான் சத்துணவுத் திட்டம். ஏழைக்குழந்தைகளின் பசி துடைத்த அந்தத் திட்டம் புரட்சித்தலைவரை மக்கள் திலகமாக்கியது. ஜெயலலிதா அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சமயம் அது. அதிமுக என்ற கட்சி இன்னமும் உயிரோட்டத்துடனும் வெற்றி முகத்துடனும் இருப்பதற்கு இந்த இரு அறிமுகங்களும் ஒரு முக்கியக் காரணம்.

    1983 ஜூலையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை காரணமாக இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்களோடு ஈழப்போராளி இயக்கத்தினரும் வந்தனர். இந்திய அரசு இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்தது. மேலும், போராளி இயக்கங்களுக்கு இந்திய ராணுவம் மற்றும் உளவுத்துறையின் உதவியுடன் ஆயுதப்பயிற்சி கொடுத்தது.
    தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சி யும் ஒவ்வொரு போராளி இயக்கத்தை ஆதரித்தன. யாரை ஆதரிப்பது என்ற கேள்வி எம்.ஜி.ஆருக்கு எழுந்தது. இறுதியில் விடுதலைப் புலிகளை அழைத்துப் பேசினார். முதல் கட்டமாக இரண்டு கோடி ரூபாய் நிதி கொடுத்து உற்சாகப்படுத்தினார். அதைக்கொண்டுதான் விடுதலைப்புலிகள் ஆரம்பகட்ட ஆயுதக்கொள்முதலைச் செய்தனர். ஈழத்தமிழர்கள் பிரச்னையை மிகவும் கரிசனத்தோடு பார்த்த தமிழ்நாட்டுத் தலைவர்களுள் எம்.ஜி.ஆர் முக்கியமானவர்.

    கட்சியும் ஆட்சியும் ஒழுங்காக இயங்கிக்கொண்டு இருக்க, திடீரென எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டுசெல்லப்பட்டார் எம்.ஜி.ஆர். மீண்டும் உயிருடன் திரும்புவாரா என்ற கேள்வி தமிழ்நாட்டு மக்களை ஒருபக்கம் உலுக்கிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பிரதமர் இந்திரா காந்தி டெல்லியில் படுகொலை செய்யப்பட்டார். நோயுற்ற எம்.ஜி.ஆருக்கும் கொல்லப்பட்ட இந்திராவுக்கும் ஆதரவாக மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அனுதாப அலையை தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள இரண்டு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் முனைப்பு காட்டினர். 1984 மக்களவைத் தேர்தலோடு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் தேர்தல். அபாரவெற்றியைப் பெற்று மூன்றாவது முறையாக முதல்வரானார் எம்.ஜி.ஆர்.

    அப்போது ஈழத்தமிழர் விவகாரம் கொதிநிலையின் உச்சத்தில் இருந்தது. புலிகளுக்கு மீண்டும் நான்கு கோடி ரூபாய் கொடுத்தார். இன்றளவும் ஈழத்தமிழர்கள் வீடுகளில் எம்.ஜி.ஆரின் புகைப்படம் இருப்பதற்கு இப்படியான உதவிகளே பிரதான காரணம்.
    இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடக்கும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவுசெய்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுடன் பேசி, ஒப்பந்தம் ஒன்றைத் தயார் செய்தார். ஆனால் அதனை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஏற்கவில்லை. பின்னர் நடந்த அரசியல் காய்நகர்த்தல்கள் காரணமாக, ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அரைமனத்துடன் ஏற்றுக்கொண்டார் பிரபாகரன். இலங்கையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் பாராட்டுவிழா நடத்தினார் எம்.ஜி.ஆர்.

    1987 இறுதியில் உடல்நலம் குன்றிய எம்.ஜி.ஆர், அதன்பிறகு மீளவில்லை. எம்.ஜி.ஆரின் ஆளுமை செலுத்திய தாக்கத்தை சமூகம் அப்போது உணர்ந்துகொண்டது. மூன்று முறை தொடர்ச்சியாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததற்கும் இன்றளவும் மக்கள் மனத்தில் சிம்மாசனம் போட்டு எம்ஜிஆர் அமர்ந்திருப்பதற்கும் பின்னணியில் இருப்பது ஒரே காரணம்தான். மக்களின் நாடித்துடிப்பையும் ஆட்சியாளர்களின் நாடித்துடிப்பையும் துல்லியமாகக் கணிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. குழந்தைகளின் பசியைப் போக்க சத்துணவுத் திட்டம். பெரியவர்களின் வயிற்றையும் பாக்கெட்டையும் பாதிக்காத வகையில் குறைந்த விலையில் அரிசி. தமிழ்நாட்டில் அரிசித் தட்டுப்பாடு நிலவியபோது மத்திய அரசுக்கு எதிராகவே உண்ணாவிரதம் இருக்கும் அளவுக்குச் சென்றவர் எம்.ஜி.ஆர்.
    அரசியல் ரீதியாக, மத்திய அரசுடன் இயன்றவரைக்கும் அனுசரித்துச் செல்லக்கூடியவராக இருந்தார் எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியுடன் நட்பு; மொரார்ஜியுடன் நேசம்; சரண் சிங்குடன் சமரசம்; ராஜீவ் காந்தியுடன் ராசி என்று எவரையும் பகைத்துக்கொள்ளாத, அதேசமயம் தன்னுடைய கௌரவத்தை விட்டுக்கொடுக்காத தலைவராக இருந்தார் எம்.ஜி.ஆர். அதுதான் அவரை அரசியல் ரீதியாக வெற்றிகரமான மனிதராக வைத்திருந்தது. அதுதான் அவர் உயிரோடு இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கட்டிலில் அசையாமல் அமர்ந்திருக்க உதவியது. வரலாறு முக்கியம் தோழரே!........... Thanks.........

  11. #2100
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர்

    சொத்து சேர்க்கவில்லை
    வழக்கில் சிக்கவில்லை
    நீதி மன்றத்தில் படிக்கட்டுகள் ஏறவில்லை
    குற்றவாளி என்ற சொல்லையே கேட்டதில்லை
    எந்த தீர்ப்பையும் பெற்றதில்லை
    சிறைச்சாலைக்குள் நுழைந்ததில்லை
    கண்ணீரை கண்டதில்லை
    கூடா நட்பை அனுமதித்ததில்லை

    சுய நினைவின்றி வாழ்ந்ததில்லை
    மகன்கள் மகள்கள் பேரன்கள்
    பேத்திகள் அக்கா மகன்கள் என்ற
    உறவுகள் கூட்டம் இல்லவே இல்லை

    மக்களை ஏமாற்றியதில்லை
    தொண்டர்களை வெறுத்ததில்லை
    நன்றி மறந்தவரில்லை
    உயிர் பிரியும் வரை உணர்வோடு இருந்தவர் எம்ஜிஆர்

    உலகமெங்கும் வாழும் மக்கள் எம்ஜிஆரை என்றுமே மறக்கவில்லை .
    குற்றவாளி தலைவர்களை மக்கள் என்றுமே நினைப்பதில்லை............. Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •