Page 226 of 402 FirstFirst ... 126176216224225226227228236276326 ... LastLast
Results 2,251 to 2,260 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2251
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்களின் பிரமாண்டமான லட்சிய தயாரிப்பாம்... "உலகம் சுற்றும் வாலிபன்" atmos 4k டிஜிட்டல் வடிவம் 2020ம் ஆண்டு " பொங்கல்" திருநாள் நேரத்தில் சுவரொட்டிகள் எங்கும் ஒட்டப்பட்டு... Trailor வெளியிடப்பட்டு பின்பு திரைக்கு கொண்டு வர சிறப்பான ஏற்பாடுகள் துவங்க பட்டு வருகிறது என்ற மகிழ்ச்சியான தகவல்கள் மேற்கண்ட காவியத்தின் ஒட்டு மொத்த விநியோகஸ்தர்கள் திரு நாகராஜன், திண்டுக்கல்... அவர்கள் கூறியுள்ளதை இங்கே அனைவரிடமும் பகிர்வதில் மெத்த மகிழ்ச்சி...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2252
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடைசியாக கிடைத்த தகவலின்படி , கோவை சண்முகாவில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "பறக்கும் பாவை " பக்தர்களின் அமோக வரவேற்பு காரணமாக மேலும் 3 நாட்கள் நீடித்து ஒரு வாரம் ஓடும் என கோவை நண்பர்கள் தகவல் அளித்துள்ளனர் . எனவே , ஏற்கனவே 24/12/19 முதல் வெளியாகவிருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின்* 'தாய் சொல்லை தட்டாதே " திரைப்படம் வெளியாவது தள்ளிவைப்பு .

  4. #2253
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (24/12/19) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 32 வது* நினைவு தினத்தை முன்னிட்டு, அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் /சங்கங்கள்*சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து*மௌன ஊர்வலம் காலை 11 மணியளவில் துவங்கி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சதுக்கத்தை அடைகிறது.**

  5. #2254
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் இன்று ஒளிபரப்பாக உள்ள மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் பட்டியல்*
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------
    ஜெயா டிவி* - மதியம் 1.30 மணி* *- ஆயிரத்தில் ஒருவன்*
    * * * ** * * * * * * * * * * * *இரவு 11 மணி* * * - ஊருக்கு உழைப்பவன்*

    கேப்டன் டிவி* - மதியம்* 2 மணி* - காலத்தை வென்றவன்*

    மெகா டிவி* - இரவு 8 மணி* - குடியிருந்த கோயில்*

    வசந்த் டிவி* -* மதியம் 1.30* - நான் ஏன் பிறந்தேன்*

    * * * * * * * * * * * * * *இரவு 7.30* மணி - ராமன் தேடிய சீதை*
    Last edited by puratchi nadigar mgr; 24th December 2019 at 09:20 AM.

  6. #2255
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *விவசாயிகள் தினம்-புரட்சித் தலைவர் நினைவு நாள்*
    *உழவர் திருநாள்- பொன்மனச்செம்மல் அவதரித்த திருநாள்*

    இன்று நாடு முழுவதும் விவசாயிகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது. அதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் இந்த வாரம் அகஸ்தியாவில் பொன்மனச்செம்மலின் *"விவசாயி"* திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    மக்கள் திலகம் *பல்லாண்டு வாழ்க* படத்தில் சொல்வார், *"நாம் நல்லதை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் அது நம்மை நோக்கி பத்தடி எடுத்து வைக்கும்"*. அதுபோல் உலகின் அனைத்து நல்ல விஷயங்களும் கடலில் சங்கமிக்கின்ற நதிகளைப் போல் புரட்சித்தலைவரிடம் தஞ்சமடைந்தன என்பது வரலாறு. நல்லவைகளின் ஒட்டு மொத்த உருவமாக தலைவர் திகழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் எதையும் தேடிப் போனதாக சரித்திரம் கிடையாது.

    ஏன் இப்படி குறிப்பிடுகிறேனெனில், ஒருவரது பிறப்பும், இறப்பும் ஆண்டவன் கையில் என்று கூறுவார்கள்.
    விவசாயிகள் தினத்துக்கு அடுத்த நாள், அதாவது நாளை *தலைவரின் நினைவுநாள்* . அதே போல் உழவர் திருநாளன்று தான் *தலைவரின் பிறந்தநாள்* கொண்டாடப்படுகிறது. இதெல்லாம் ஒருவருக்கு தானாக அமைய வேண்டும்.

    வேளாண்மைக்கும் அவருக்கும் இருந்த பிணைப்பும், தமிழக விவசாயிகள் பால் அவர் வைத்திருந்த பாசம், பற்று மற்றும் அக்கறையையும் பறை சாற்ற இதைவிட வேறு சான்று தேவையா? இன்று அவரது அபிமானிகளால் கடவுளாக போற்றப்படும் தானைத்தலைவர், உழவுத்தொழில் மட்டுமின்றி அத்துறை சார்ந்த இன்னபிற தொழில்களான மீன்பிடித்தொழில், கைத்தறி நெசவு மற்றும் பல எண்ணற்ற குறு மற்றும் சிறு தொழில்கள் மேம்படவும், அத்தொழிலில் ஈடுபட்டிருந்த இலட்சக்கணக்கான தமிழக மக்களின் வாழ்வு வளம் பெற்று அவர்களின் இன்னல்கள் களையப்பட்டு சமுதாயத்தில் சாதி மத வேறுபாடின்றி அவர்கள் உயர்நிலை அடையவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். தான் நடித்த படங்களின் காட்சிகள், வசனங்கள் மற்றும் பாடல்கள் மூலம் பல நல்ல நல்ல கருத்துக்களை புகுத்தி புரட்சியை ஏற்படுத்தியதால் *புரட்சித்தலைவர்*. பாமரர்களுக்கு திரைக்கொட்டகைகளையே பள்ளக்கூடங்களாக்கி திரைப்படங்கள் மூலம் அறிவூட்டிய *வாத்தியார்*. அது மட்டுமல்லாமல் அவர்கள் துயர் துடைக்க தன்னால் இயன்ற உதவிகளை (பணம், பொருள்) உடனுக்குடன் செய்து *எட்டாவது வள்ளல்* என்ற பெயரை எட்டினார்.

    படங்களில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் அதிகம் வலம் வந்தவர் மக்கள் திலகம் தான். அதே போல் வேளாண்மை சார்ந்த அதிகப் படங்களில் நடித்து தனது பாடல்கள் மூலம் உழவுத்தொழிலின் உன்னதத்தை எடுத்துரைத்ததோடு நில்லாமல் விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் முதலான பாட்டாளி வர்க்கத்தினர் சந்தித்து வரும் துன்பங்கள், அவர்களது கஷ்டநஷ்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் விளக்கி, நிலத்தில் வாழ்கின்ற திமிங்கிலங்களான அதிகார வர்க்கத்தினர் மற்றும் வசதி படைத்த கல்நெஞ்சம் கொண்ட முதலாளிகளிடமிருந்து அப்பாவி ஏழை மக்களை காக்கும் காவல் தெய்வமாகவே தான் நடித்த அனைத்து படங்களிலும் வேடம் தரித்து வெற்றிக்கொடி நாட்டினார். அன்றாடங்காய்ச்சிகள் படும் துயரங்களுக்கான தீர்வையும் தனது படங்கள் மூலம் அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் அவ்வப்போது அரசாங்கத்துக்கு உணர்த்தியவர் நமது பொன்மனச்செம்மல். படத்தில் தான் கூறிய கருத்துக்களின் படியே வாழ்ந்து காட்டிய *மஹான்* .

    பணம் ஒன்றே குறி என்ற பேராசைக்காரனாக இல்லாமல் அடித்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது இலட்சியம் என்ற கொள்கையுடன் அல்லும் பகலும் அயராது உழைத்து அதன் மூலம் ஈட்டிய செல்வங்களையும் இம்மக்களுக்காகவே அர்ப்பணித்தார். தன் சுக துக்கங்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்காக தியாகம் செய்து இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற மக்கள் தலைவராக இன்றும் விளங்குபவர் தலைவர் ஒருவரே. உலகமே வியந்து போற்றும் சத்துணவு வழங்கிய *சரித்திர நாயகன்* . பதவிகள் அவரைத் தேடி வந்து புகலிடம் அடைந்து பெருமை பெற்றன. தமிழ்நாட்டின் முதலமைச்சர் நாற்காலி அவர் அமர்ந்ததால் புணிதமடைந்தது. உலகில் யாருமே அடைய முடியாத உச்சத்தை அடைந்த பின்னும் துளிக்கூட தலைக்கனமின்றி
    படங்களில் தான் நடித்த கதாபாத்திரம் போலவே தனது கடைசி மூச்சு வரை வாழ்ந்தவர். படத்தில் கூறிய கொள்கைகளையெல்லாம் சட்டமாக்க அரும்பாடு பட்டார். கருணையே வடிவாக உருவெடுத்த கலைத்தாயின் தலைமகனின் உயிரை காலன் பறிக்காமல் விட்டிருந்தால் இன்று தமிழ்நாட்டில் ஏழைகளே இருந்திருக்க மாட்டார்கள், ஏழ்மை ஒழிந்து அனைத்து தரப்பினரும் இன்புற்றிருந்திருப்பார்கள், தனி ஈழம் அமையப்பெற்று நம் தொப்புள் கொடி உறவுகள் தன்மானத்துடன் வாழ வகை கண்டிருப்பார். உலகெங்கும் வாழும் தமிழ்ச்சமூகம்
    எல்லையில்லா மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருந்திருக்கும்.

    எனவே, பொன்மனச்செம்மலின் விட்டுப் போன, நிறைவேறாத, தமிழக மக்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் நலம் சார்ந்த கனவுகள் அனைத்தையும் நல்லமுறையில் நிறைவேற்றுவது தான் அவரது ஆன்மாவுக்கு அவரது பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் ஆற்றுகின்ற தலையாய கடமையாகும். மேலும், அதிகார வர்க்கத்தின் பல இன்னல்களை எதிர்கொண்டு இரத்தத்தின் இரத்தங்கள் அரும்பாடுபட்டு வளர்த்த கட்சி எந்த நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டதோ அந்த இலட்சியங்களை அடையும் வண்ணம் புரட்சித் தலைவரின் வழி வந்தவர்கள் செயல்பட்டு தலைவர் கட்டிக்காத்து வந்த மாண்பினை கடைபிடித்தால் *"என்றும் ஆளும் எங்களாட்சி இந்த மண்ணிலே"* என்று பாடிய அந்த தீர்க்கதரிசியின் எண்ணம் என்றும் நிலைத்திருக்கும். ஏனெனில், அதிமுக வின் வெற்றியானது மற்ற கட்சிகள் பெறுகின்றது போன்ற சாதாரண வெற்றி கிடையாது. தலைவர் கூறியது போல் அக்கட்சித் தொண்டர்களின் "தியாகத்தின் வெற்றி" என்றே இன்றுவரை கருதப்படுகின்றது

    நமது நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் *நினைத்ததை முடிப்பவனின்* நினைவை போற்றும் வண்ணம் நாளை பகல் 11.30 மணி அளவில் வருடாவருடம் நடைபெற்று வருவது போலவே அமைதிப்பேரணி நடக்கவுள்ளது. பேரணி மவுண்ட்ரோடில் அமைந்துள்ள தலைவரின் ஆசான், அறிஞர் அண்ணா சிலையிலிருந்து தொடங்கி வாலாஜா சாலை வழியாகச் தலைவர் நினைவகத்தை சென்றடையும். நாளை நடைபெறவிருக்கும் இப்பேரணியில் வழக்கம் போல் சென்னையைச் சேர்ந்த அனைத்து தலைவர் அமைப்புகளின் தொண்டர்கள், பக்தர்கள் மற்றும் வெளியூரைச் சார்ந்த தலைவர் அபிமானிகள் அனைவரும் பெருந்திரளாக பங்கு கொண்டு உலகில் உனக்கு நிகர் எவருமில்லை என்பதை இவ்வுலகிற்கு மீண்டுமொருமுறை உணர்த்தி பெருமை கொள்வோம்.

    வாழ்க புரட்சித் தலைவர் நாமம் ������

    வளர்க பொன்மனச்செம்மல் புகழ் ✌��✌��✌��✌��

    க. சந்திரசேகர், தலைவர் பக்தன்,
    இணைச்செயலாளர், அனைத்துலக எம்ஜிஆர் பொதுநலச்சங்கம், சென்னை.......... Thanks.........

  7. #2256
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவா ! புகழின் புதல்வா !!


    எத்தனையோ நடிகர்கள் இவ்வுலகில் தோன்றி வாழ்ந்து மறைந்த காட்சியை , பார்த்திருக்கிறோம் , சரித்திரங்கள் படித்திருக்கிறோம் ,

    மும்முறை ஆண்ட முதல்வரே ,

    உங்களுக்கு தானே முப்பிறவி தோன்றியது

    மூன்று பிறவி இணைந்து ஒரு பிறவியான தலைவனை நாடு கண்டதில்லை !

    உங்கள் அன்பின் குளிரில் ஊட்டியின் குளிர் காற்றும் வென்றதில்லை !!

    இல்லை என்ற வார்த்தை உங்கள் வாயிலிருந்து வந்ததில்லை !

    அந்த வாயில் உங்களை நம்பிய
    ( நாங்கள்) தொண்டர்கள் கெடும் வகையில் பீடியோ ,

    சிகரேட்டோ தூக்கிபோட்டு போட்டு
    பிடித்ததில்லை !

    மது அருந்தியதில்லை ,
    " கள் " உண்டு போதைவரும் காரியத்தை செய்ததில்லை !!

    உங்கள் அன்பான தும்பலும் என்னால் வந்ததே என்று மார்தட்டிக் கூறிய நல் உள்ளங்கள் தான் எத்தனை !எத்தனை !!

    அத்தனையும் இல்லை என்று சொல்ல முடியாதே !

    புத்துணர்வு போர்வையில் சத்துணவு தந்த சரித்திர நாயகனே இனிவருவாயா !

    மக்கள் கூட்டத்தை ஆர்பரிக்க செய்த மக்கள் திலகமே இனிவருவாயா !!

    பசி என்று கதரியவருக்கு புசியென்று வாரிவழங்கிய வள்ளலே இனிவருவாயா !

    ஆட்சி காலமெல்லாம் அண்ணா நாமம் பாடிய
    அன்னமிட்டகையே இனிவருவாயா !!

    என்று ஏங்கினாலும் ,
    பூஜ்ஜியமாக கட்சியை ஆரம்பித்து ,
    32 ஆண்டு காலம் ஒரு ராஜ்ஜியத்தையே உண்டாக்கி ,

    மக்கள் கனவுகளை நனவாக்கி , உள்ளத்தை குளிராக்கி ,

    வழி தெரியாத ஏழை மக்களுக்கு கலங்கரை விளக்காக ,

    எங்கள் உள்ளங்களில் குடி கொண்ட எங்கள் வீட்டு பிள்ளையாக ,

    எங்கள் நாடி நரம்புகளில் உதிரமாக
    ஓடுகின்ற ஆயிரத்தில் ஒருவனாக ,

    தங்கமே கானாத மக்களுக்கு எங்கள் தங்கமாக விளங்கிய

    புன்னகை மன்னனே !
    32 ம் ஆண்டிலும் உங்கள் ஆட்சியே !!

    தொடரும் 2021 ம் ஆண்டும் !

    புகழ் பாடும் வானம்பாடி

    சேவல் அனல்
    M. அமரநாதன் B.Sc,
    தலைமை கழக பேச்சாளர்,
    அ இ அண்ணா தி மு கழகம் குடியாத்தம், வேலூர் மாவட்டம்........... Thanks.........

  8. #2257
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மானுடம் போற்றும்
    மனித இனத்தின்
    மாபெரும் தலைவரே!
    ஏழைகளின் ஏந்தலே! ஆண்டு
    முப்பத்திரண்டு? நீ
    மரணமெய்தியது!
    உன்இழப்பு
    தமிழகத்திற்கு
    பேரிழப்பு!!
    கருணைஎன்ற
    பெயரே உன்னாலே
    உருவானதோ?
    மற்றவர், ஏன்?
    மாற்றாரின்
    தேவையையே
    பூர்த்தி செய்த
    பூபாலன் நீ?
    கோமகனே!
    அள்ள, அள்ள குறையாத
    அட்சய பாத்திரம் நீ
    கொடுத்து சிவந்தது உன்கரம்
    உன்மனமோ
    பொன்மனம்.
    இருக்கும்வரை
    எல்லோருக்கும்
    ஈந்துவிட்டு
    இறந்த பின்னும்
    இன்னும் வாழுகிறாய்
    கலைகடலே!
    அரசியல் ஞானியே!
    உன்விதைதான்
    இன்று,
    ஆலவிருட்சம்
    போல், அகன்று விரிந்து, தமிழகத்தின்
    மூலை
    முடுக்குகளில்
    உன் திருநாமம்
    மட்டுமேகாதினில்
    தேனாக
    தீந்தமிழாக
    ஒலிக்கிறது.
    புரட்சி த்தலைவரே
    உன் ஆட்சியின்காட்சி
    மக்கள் திலகமே
    நீ தந்த
    முவர்ணகொடி
    மக்கள்
    கனவிலும் மறவாத
    நீ தந்த
    இரட்டை இலை
    இன்னும் எத்தனை
    நூற்றாண்டாலும்
    இதயத்தை விட்டு
    நீங்காது.ஆம்
    மன்னாதிமன்னன்
    புன்னகை மன்னன்
    மக்கள் தலைவன்
    உன் நினைவு நாள்
    இன்று ஒரு நாளல்ல,எங்கள்
    உயிர் மூச்சு உள்ளவரை! உன்
    நினைவை,உன்
    கனவை, உன்
    லட்சியத்தை
    ஏந்திப் பிடிப்போம்.

    என்றும் உன் நினைவில்,
    எஸ்.எம்.பாட்சா
    பாட்சா தியேட்டர்
    ஜார்ஜ் டவுன்
    சென்னை........... Thanks.........

  9. #2258
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நான் மிகவும் நேசித்த ரசித்த
    புரட்சித் தலைவருக்கு
    32 ம் ஆண்டு புகழஞ்சலி

    ������❤️������❤️❤️❤️������

    MGR ஒரு சகாப்தம்

    இது எப்படி சாத்தியமானது

    இறந்து 32
    ஆண்டுகள் ஆகியும்
    இறவா புகழோடு இன்றும் வாழ்கிறார்
    மறைந்தாலும் மக்கள் மனதில்
    மறையாமல் இன்றும் வாழ்கிறார்
    நான்கு தலைமுறைகள்
    நான்கு திசைகளிலும்
    தமிழ் கூறும் நல்லுலகில்
    MGR எனும் மந்திரச்சொல்
    உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது
    கிராமத்து மக்களுக்கும் பெண்களுக்கும்
    இன்றும் அவர் தான் ஆதர்ச நாயகன்
    இறந்த பிறகு அவரை நேரில் பார்த்திராத
    இன்றைய தலைமுறைக்கும்
    அவர் தான் சூப்பர் ஹீரோ

    தாத்தா பாட்டி
    அப்பா. அம்மா
    மகன்.. மகள்
    பேரன்.. பேத்தி. என
    எல்லோரையும் ஒரு மனிதன்
    எப்படி கட்டி போட முடியும்
    அதுதான் MGR எனும் தாரகமந்திரம் செய்யும் சித்து வேலை
    அதனால் தான் அவர் யுக புருசர்

    இதெல்லாம் எப்படி சாத்தியம்
    எல்லோரும் கேட்கும்
    ஆச்சரியமான கேள்வி

    ஆனால் ஒன்று உண்மை
    ஒரு மனிதன் வாழும் போது
    நல்லவனாக
    நேர்மையாக
    கண்ணியமாக
    தன்னை சுற்றி உள்ள அனைவரின்
    கஷ்டத்துக்கு உதவி செய்து
    தான் சம்பாதித்த பணத்தை
    ஏழை எளிய மக்களுக்கு
    எல்லா நேரங்களிலும் வாரி வழங்கி
    திரையில் மட்டுமல்ல
    நிஜத்திலும் நல்ல பழக்க வழக்கங்களோடு வாழ்ந்து
    மனிதநேயத்தோடு
    மக்களோடு மக்களாய் கலந்து

    சாமான்யன் தனக்கு
    கஷ்டம் என்றால்
    கடவுளை வேண்டுவான்
    நிஜத்தில் தன்னை நாடி வரும்
    மக்களின் கஷ்டத்தை நீக்கி
    எல்லோர்க்கும் அவர்
    நிஜ கடவுளாகினார்

    தன்னை பார்த்திராத
    தன்னை சந்திக்காத மக்களை கூட
    இந்த மந்திரம் கட்டி போட்டு உள்ளது

    காலத்தை வென்றவன் நீ
    காவியமானவன் நீ
    வேதனை தீர்ப்பவன்
    விழிகளில் நிறைபவன்
    வெற்றி திருமகன் நீ

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
    அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊரிருக்கும்
    அந்த ஊருக்குள்
    எனக்கொரு பேர் இருக்கும்

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்று
    ஊர் சொல்ல வேண்டும்

    இதெல்லாம் வெற்று வரிகளில்லை
    நேரில் நாம் காணும் நிஜம்

    உன் போல் ஒருவர் இனி வரபோவதில்லை
    உலகம் உள்ளவரை
    உங்கள் புகழ் மறைய போவதில்லை

    தலைவா உங்களுக்கு இந்த
    எளியவனின் புகழஞ்சலி
    புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி ��....... Thanks.........

  10. #2259
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று தலைவரின்
    நினைவுதினம்......
    படத்திற்குப் பூ வைத்து
    தலைவருக்கு அஞ்சலி
    செலுத்தி விட்டேன்.......
    என்றும் அவர் வழியில்
    நடப்பேன்........

    இன்று "நவரத்தினம் "......
    படம்.......காவியம்.........
    நடிகர்கள் 1.எம்.ஜி.ஆர்.,
    2.லதா
    3.சுபா
    4.ஸ்ரீபிரியா
    5.ஜெயசித்ரா
    6.ஜரினாவகாப்
    7.பி.ஆர்வரலட்சுமி
    8.ஜெயா
    9.குமாரிபத்மினி
    10.Y.விஜயா
    11.தேங்காய் சீனிவாசன்
    12.நம்பியார்
    13.அச்சச்சோ சித்ரா
    14.எஸ்.வரலட்சுமி
    15.பி.எஸ்.வீரப்பா
    16.கே.கண்ணன்
    17.ஒருவிரல் கிருஷ்ணாராவ்
    18.ஏவி.எம்.ராஜன்.
    19.ஐசரிவேலன்
    20.நமது குரூப்பில்
    இருக்கும் ரஜினி நிவேதிதா
    21.எஸ்.என்.லட்சுமி........... Thanks.........

  11. #2260
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வெளியான தேதி 05.03.1977...
    கதாபாத்திரமாக தங்கம்...
    நிறுவனம் சி.கே.சி.பிலிம்ஸ்
    வசனம் ஏ.பி.என்.
    பாடல்கள் ...
    1.உங்களிடத்தில் அண்ணாவைப் பார்க்கிறேன்.
    எஸ்.பி.பாலசுப்ரமணியன்
    வாணிஜெயராம் பாடியது.
    2.பாலமுரளிகிருஷ்னா
    அவர்கள் 2 பாடல்கள்
    பாடியிருப்பார்.
    குருவிக்காரன் பொன்ஜாதி நான்.
    3.ஏத்தா உனதா மில கண்ட தீ
    சீதா கவுரி
    கர்நாட்டிக் ராகம்
    4.ஹிந்தி கலந்த
    லடுக்கீஸி மிலி லடக்கா
    கோயி மந்தோகோகி
    தீவனுகியாபெகுரா கேஸி தத் தத்
    5.பிரியாததை புரிய
    வைக்கும் புது இபம்
    பி.சுசீலா பாடியது.
    மேலும் ஒரு பாடல்
    ஆடியோ மட்டும்.
    மானும் ஓடி வரலாம்
    யேசுதாஸ் பாடியது.
    இப்படத்திற்கு
    குன்னக்குடி வைத்தியநாதன் இசை
    இயக்குனராக ஏ.பி.நாகராஜன்... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •