Page 240 of 402 FirstFirst ... 140190230238239240241242250290340 ... LastLast
Results 2,391 to 2,400 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2391
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆர்
    ----------------

    புரட்சிதலைவர் பொன்மன செம்மல் பிறந்தநாள் 17.1.2020 அன்று வந்து கொண்டுள்ளது இந்த நேரத்தில் இந்த காணொளி அவசியம் பாருங்கள்

    புரட்சிதலைவருக்கு பின்வந்த நடிகர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் தலைவர் போல் இதயம் உண்டா? என்றால் இல்லையென்பதே நிதர்சனம்

    அரசியல் தலைவர்களும் அவ்வாறே இருக்கும் போதும் சரி இறந்த பின்னும் சரி தனக்கென வாழாத நெஞ்சம் தலைவர் ஒருவரே மாற்றானும் போற்ற கூடிய ஒரே தலைவர்

    இறந்தவர்கள்
    மறைந்து விடவில்லை
    இனிய இதயம்
    இருந்ததால்
    இன்னும்
    இருந்து கொண்டுதான்
    இருக்கிறார்கள்....
    உதாரணம் எம். ஜி .ஆர்.,. Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2392
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #"எங்கவீட்டுப்பிள்ளை".........

    1965 ல் வெளி வந்து வெள்ளி விழா கண்ட எவரும் மறக்க முடியா படம் பி.நாகிரெட்டி அவர்கள் தெலுங்கு நிறுவனமான தயாரிப்பை தமிழில் எம்ஜிஆரை வைத்து எடுத்தார்.
    இப்படத்தின் திரை அரங்கின் உரிமைகளை அண்ணன் MG சக்கரபாணி ஏற்றுக்கொண்டார். படம் வெளி வந்து சக்கை போடு போட்டது லாபமோ இரட்டிப்பாக இருந்தது அப்போது அண்ணன் சக்கரபாணி எம்ஜிஆரிடம் கணக்கு காண்பித்தார் கூடுதலாக ஒரு லட்சம் வந்திருக்கு என்றார்.அதை உடனே அண்ணன் நாகீரெட்டி பெயரில் அனுப்பி விடுங்கள் இது அவருக்கு தான் சொந்தம் என்றார் எம்ஜிஆர்.
    அதை வாங்கிய நாகிரெட்டி கடிதம் ஒன்றை எழுதி லாபமாய் வந்த பணம் உதவும் கரமாகிய உங்கள் கைகளுக்கு தான் சொந்தம் என்று ஒரு லட்சத்து ஒன்று ...என திருப்பி அனுப்பி விட்டார்.
    இதில் என்னவென்றால் எம்ஜிஆர் சிரித்து கொண்டே இப்படத்தில் நல்லவனாக நான் நடிக்கவில்லை காசு கொடுக்காமல் ஓட்டலில் சாப்பிடுவதும் பெரிய இடத்தில் ஆள் மாறாட்டம் செய்வதும் எனக்கு பிடிக்க வில்லை இப்படி நடித்தற்கே இவ்வளவு பெரிய லாபமா? என்று தன்னை நொந்து கொண்டாராம்
    சினிமாவாக இருந்தாலும் தன் மனதில் தவறு என்று பட்டால் ஏற்றுக் கொள்ள மாட்டார் எம்ஜிஆர் இயற்கையிலே தங்க குணம் படைத்த வாத்தியாரை வாழ்த்து வதற்கு வயது இங்கு யாருக்கும் இல்லை...

    #எல்லாபுகழும். எம்.ஜி.ஆர்.கே......... Thanks.........

  4. #2393
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    சேலம் அலங்காரில் கடந்த வெள்ளி முதல் (3/1/20) புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை "
    தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

    தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .

  5. #2394
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை சண்முகாவில் வெள்ளி முதல் (03/01/20) புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் " நல்ல நேரம் " தினசரி 4 காட்சிகளில்* 4 நாட்கள்* நடைபெற்றது .

    கோவை சண்முகாவில் 07/01/20 முதல்* நடிக மன்னன் எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி "3 நாட்களுக்கு மட்டும் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

    கோவை சண்முகாவில் வெள்ளி முதல் (10/01/20) ஏழை பங்காளன் எம்.ஜி.ஆரின்*"குமரிக்கோட்டம் " தினசரி 4 காட்சிகளில் (கண்டிப்பாக 4 நாட்கள் மட்டும் ) நடைபெறுகிறது .

    பொங்கல் முதல் , கோவை சண்முகாவில் (14/01/20) வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்.வழங்கும் மீண்டும் டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில் விஜயம்*
    தகவல்கள் உதவி :நெல்லை நண்பர் திரு.ராஜா .

  6. #2395
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் திவ்யா அரங்கில் கடந்த வெள்ளி முதல் (03/01/20)*நிருத்திய* சக்கரவர்த்தி எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது . புதுவையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைவேந்தன் எம்.ஜி.ஆர். படம் வெளியீடு .

    தகவல் உதவி : புதுவை நண்பர் திரு.கலியபெருமாள் .

  7. #2396
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கள்ளக்குறிச்சி மாவட்டம் ...சின்ன சேலம் -
    செங்குந்தர் DTS திரையரங்கில் மக்கள் தலைவரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பு "ரிக்சாக்காரன் " காவிய திரைப்படம் 07.01.2020 முதல் திரையிடப்பட்டுள்ளது. 70948 77415 த.சேரன் சின்ன சேலம்........... Thanks.........

  8. #2397
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  9. #2398
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

    Thanks to Mr Ranjith

  10. #2399
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #2400
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் இரத்தத்தின்
    இரத்தமான அன்பு
    உடன்ப்பிறப்புகளுக்கு
    வணக்கம் ....

    கவிஞர் மருதகாசி அவர்கள்
    பத்தாண்டு இடைவெளிக்கு
    பிறகு தலைவருக்கு
    எழுதிய பாடல்
    கண்ணை நம்பாதே
    உன்னை ஏமாற்றும்
    என்ற பாடல்....

    குள்ளநரி கூட்டம்
    வந்து குறுக்கிடும்
    நல்லவர்க்கு தொல்லை
    தந்து மடக்கிடும்
    என்ற பாடல் வரிகள்
    ரஞ்சனுக்காக எழுதிய
    காரணத்தினால்
    தலைவரை கோபப்படுத்தியது.....

    மருதகாசி பாடல்
    எழுத வாய்ப்பு இல்லாமல்
    போன காரணத்தினால்
    வறுமையில் வாடினார்...

    நினைத்ததை முடிப்பவன்
    பட தயாரிப்பாளர்
    திரு ஜி என் வேலுமணி அவர்கள்
    தலைவரிடம் தெரியப்படுத்தாமல்
    மருதகாசிக்கு வாய்ப்பு
    தருகிறார்.....

    மன்னரின் இசையில்
    பாடல் பதிவு முடிந்து
    தலைவருக்கு பாடலை
    போட்டு காண்பிக்க
    தயாரிப்பாளர் ஜி என் வேலுமணி
    மற்றும் மெல்லிசை மன்னரும்
    தோட்டத்திற்கு செல்கின்றனர்
    தலைவர் பாடலை கேட்டவுடன்
    இந்த பாடலை
    எழுதியது மருதகாசியா என்று
    கேட்டு அசத்திவிட்டார்...

    திகைத்துப்போன தயாரிப்பாளரும்
    மெல்லிசை மன்னரும்
    பாடல் பிடிக்கவில்லை என்றால்
    மாற்றிவிடலாம் என்று கூற
    தலைவர் பாடல்
    படத்தில் இருந்து போகட்டும்
    கூறி மருதகாசியை தன்னை
    வந்து பார்க்குமாறு கூறினார்...

    வித்வான் வே லட்சுமணனனோடு
    தலைவரை பார்க்க வந்த
    மருதகாசி ஒரு ஈர துணிப்பையை
    தலைவருக்கு கொடுத்தார்
    அதை வாங்கி பார்த்த
    தலைவர்
    பக்கத்தில் வைத்துக்கொண்டார்...

    வெளியில் வந்த
    வித்வான் வே லட்சுமணன்
    என்னையா தலைவருக்கு
    கொடுத்தாய் என்று
    கேட்க
    மருதகாசி அவல் பொட்டலத்தை
    கொடுத்தேன் என்றார்....

    மகாபாரதத்தில் குசேலன்
    கண்ணனுக்கு அவல் கொடுத்து
    அடுத்த கணமே
    குபேரனானதை படித்துள்ளோம்..
    ஆனால் நிச வாழ்க்கையில்
    மருதகாசியின் அனைத்து
    கடன்களையும் அடைத்து
    அவரின் வாழ்க்கை தரத்தை
    உயர்த்தியவர்
    புரட்சித்தலைவர்....

    இப்போது பாடலுக்கு
    வருகிறேன்....
    1973 இல் மிகப்பெரிய செட்
    போட்டு எடுத்த பாடல்
    கண்ணை நம்பாதே என்ற
    பாடல்....

    ரோமாபுரி அரசன் அரசி.....
    கிரேக்க அரசன் அரசி.....
    முகலாய அரசர் அரசி.....
    சீன அரசர்...
    இங்கிலாந்து அரசர் அரசி...
    சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையன்...
    கடற்கொள்ளைக்காரன்...
    அரபு நாட்டு சேக்...
    ஜப்பானிய பெண்...
    ஆப்கானியர்...
    அலெக்ஸாண்டர்...
    சாமியார்...
    பிச்சைக்காரன்.....
    மராத்தி
    குஜராத்தி
    ஆந்திரா
    கர்நாடகா
    கேரளா பெண்கள்....
    பிலிப்பைன்ஸ் சிகரெட் விற்கும் பெண்கள்...
    மேற்க்கத்திய தீவு பெண்கள்...
    கோட் சூட் அணிந்த
    இசைக்கலைஞர்கள்
    என
    பல தரப்பட்ட வேடங்களை
    இப்பாடலில் சேர்த்திருப்பது
    தனி சிறப்பு....

    பாடல் முடியும் வரை
    தலைவர் முழு செட்டையும்
    தனது ஆடலில்
    ஓடி ஆடி
    அசத்தியிருப்பது
    கூடுதல் சிறப்பு....

    "பொன் பொருளை கண்டவுடன்
    வந்த வழி மறந்து விட்டு
    கண் முன்னே
    போகிறவர் போகட்டுமே",
    என்ற வரிகளில்
    தலைவர் ஓடி வந்து
    உட்காரும் சோபா
    கறுப்பு சிவப்பு நிறத்தில்
    இருக்கும்..
    தலைவரின் அறிவு சார்ந்த
    அரசியல் கூர்மை இது...

    இறுதியில் நான் கூற வந்தது
    மருதகாசி அவர்கள்
    தலைவருக்கு தந்த
    ஈர துணிப்பையை
    தலைவர் மறக்காமல்
    இப்பாடலில் தனது
    இடுப்பில் கட்டி
    ஆடியிருப்பது
    தலைவரின் மாசு மருவற்ற மாண்பு அது..

    கணினி மூலம் மெருகேற்றுப்பட்ட
    பாடல்......................

    நன்றி...
    பொன்மனம் பேரவை...
    சென்னை............. Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •