Page 267 of 402 FirstFirst ... 167217257265266267268269277317367 ... LastLast
Results 2,661 to 2,670 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2661
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தென்னக ஜேம்ஸ் பாண்டாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த டிஜிட்டல் "ரகசிய போலீஸ் 115" வெள்ளி முதல் (21/02/20) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை வெற்றி மற்றும் அண்ணாமலை அரங்குகளில் தினசரி 4 காட்சிகளில் வெற்றி விஜயம் .

    தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2662
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    வருகின்ற

    வெள்ளி (21.02.2020)

    சனி (22.02.2020)

    ஞாயிறு (23.02.2020)

    திருப்பூர்

    அனுப்பர்பாளையம்

    கணேஷ் திரையரங்கில்

    மக்கள் திலகத்தின்

    இன்று போல் என்றும் வாழ்க

    இரவு 8 மணிக்காட்சி மட்டும்

  4. #2663
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    *1975 அன்று கர்நாடகா முதல்வர் தேவராஜ் அர்ஸ் நம் வாத்தியாரை சந்திக்க விரும்பி அழைப்பு விடுக்க அதன் பேரில் புரட்சிதலைவர், சித்திரா கிருஷ்ணசாமி, மற்றும் தலைவர் உதவியாளர் மகாலிங்கம் மூவரும் விமானத்தில் பெங்களூரு செல்ல.

    விமானநிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கான், மற்றும் குண்டுராவ் இருவரும் நம் தலைவரை வரவேற்று அசோகா ஹோட்டலில் தங்க வைக்க.

    அதிகாலை விமான பயணம்...தலைவர் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஓய்வு எடுக்க போக மற்றவர் அடுத்த அறைக்கு செல்ல...ஹோட்டல் பணியாளர்கள் அறையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் ஏதோ பொருள்களை அடுக்கிவிட்டு போக.

    களைப்பு தீர்ந்து விழித்த தலைவர் குடிக்க தண்ணீர் வேண்டி குளிர்சாதன பெட்டியை திறக்க அங்கே அடுக்கி வைக்க பட்டு இருந்தன ஒரு புறத்தில் மது பாட்டில்கள்

    வந்தது கோவம் மன்னருக்கு இது யார் வேலை என்று ஹோட்டல் நிர்வாகத்தை அழைத்து கேட்க...மேனேஜர் பதறி அடித்து ஓடி வந்து என்ன இந்த பாட்டில்கள் என்று அவரிடம் தலைவர் கேட்க.

    ஐயா முதல்வர் அர்ஸ் மதிய உணவு உங்களுடன் இந்த அறையில் என்று சொல்லி இருக்கிறார்..

    சரி அதற்கும் இந்த பாட்டில்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க.

    ஹோட்டல் நிர்வாகி ஐயா அவர் மது அருந்தாமல் சாப்பிட மாட்டார் அதனால் தான் இந்த ஏற்பாடு என்று சொல்ல.

    உடனே குண்டுராவை தொடர்பு கொண்ட தலைவர் உங்கள் முதல்வர் இன்று மதிய உணவு முடிந்து வந்து என்னை சந்தித்தால் போதும்.....என் அறையில் இருக்கும் மது பாட்டில்களை உடனே அப்புற படுத்த சொல்லுங்கள்.

    எனக்கு மது அருந்தியவர்கள் உடன் இருந்து சாப்பிட்டு பழக்கம் இல்லை என்று சற்று கடுமையாக சொல்ல.

    அர்ஸ் அவர்கள் ஒப்புதல் உடன் அறையில் இருந்த அந்த வகை பாட்டில்கள் அப்புற படுத்த பட்டன அடுத்த சில நிமிடங்களில்.

    வேறு ஒரு மாநிலம் சென்று அந்த மாநில முதல்வரை சந்தித்து பேச வேண்டி இருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் எவரிடமும் சமரசம் கொள்ளாமல் இருந்தார் வாத்தியார்.

    ஹோட்டல் சிப்பந்திகள் எங்கள் மாநில முதல்வர் வேலை வாத்தியாரிடம் பலிக்க வில்லை என்று மகிழ்ச்சி அடைய.

    குண்டுராவ்,மற்றும் கான் வாய்அடைத்து இந்த நாட்டில் இப்படி ஒரு மனிதரா.... என்று வியக்க.

    அப்படி வாழ்ந்த மனித புனிதர் வாத்தியார் புகழ் என்றும் காப்போம்.

    நன்றி தொடரும் .உங்களில் ஒருவன் நெல்லை மணி...*......... Thanks.........

  5. #2664
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கருர் - லட்சுமிராம் DTS., 21. 02.2020 வெள்ளிமுதல் இந்தியாவின் சீன்கானரி ஜேம்ஸ்பாண்ட் "ரகசியபோலிஸ் 115" காவியம் வெற்றிப்பவனி... தகவல் திருச்சி. மாவட்ட படவெளியிட்டாளர் திரு சுந்தரம் அவர்கள் நன்றி மதுரை எஸ்.குமார் எம்ஜிஆர். மன்றம்......... Thanks.........

  6. #2665
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை 21.02.20 முதல் கூடலூர் (கம்பம்) வேல்முருகன் தியேட்டரில் ஆயிரத்தில் ஒருவன் 4 காட்சிகள்

    தகவல் - திரு எஸ் குமார் - மதுரை

  7. #2666
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை 21.02.2020 முதல் கூடலூர் (கம்பம்)வேல்முருகன் DTS., தியேட்டரில் "ஆயிரத்தில் ஒருவன்" 4 காட்சிகள் ஆக வெற்றிபவனி வருகிறார்......... Thanks.........

  8. #2667
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாழும் போது வருவோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம்!!
    வார்த்தை இன்றி போகும்போது மௌனத்தாலே புரட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி கூறிய கவிஞர் கண்ணதாசன் அவர்களின் இறுதிப்பயணம்.....!!....!!....!!....!!....!!.. .!!
    அது கண்ணதாசன் இறுதி ஊர்வலம்.............!!...!!....!!....!!..!!

    பொது மக்கள் அஞ்சலி செலுத்தி முடித்தார்கள்..!
    அதன் பின் கண்ணதாசனின் உடல் இறுதி ஊர்வலத்திற்கான வாகனத்தில் ஏற்றப்பட்டு விட்டது...!

    அப்போது கூட்டத்தில் சின்ன சலசலப்பு ..!
    கண்ணதாசன் உடல் கிடைமட்டமாக அந்த வாகனத்தில் கிடத்தப்பட்டிருந்ததால் ,
    கீழே நின்ற மக்களுக்கு கண்ணதாசனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை..!
    கடைசியாக கவிஞர் முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் , கண் கலங்கி கதற ஆரம்பித்தனர் சிலர் !

    “ஐயா...கவிஞர் முகம் எங்களுக்கு தெரியலையே ஐயா ..”

    அப்போது அங்கே நின்ற ஒரு மனிதர் , யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் , மின்னல் வேகத்தில் கண்ணதாசன் உடல் இருந்த அந்த வாகனத்தில் தாவி ஏறினார்...!
    கண்ணதாசன் உடலை சற்றே உயர்த்தி , ஒரு சின்ன ஸ்டூல் மீது அவரது தலையை பொருத்தி கட்டி விட்டு அந்த மனிதர் , சுற்றி நின்ற மக்கள் முகத்தைப் பார்த்தாராம்...!
    திரண்டிருந்த மக்கள் முகத்தில் இப்போது திருப்தி தெரிந்தது...!
    ஆம்.. இப்போது கண்ணதாசன் முகம் , கீழே நின்ற அத்தனை பேர்களுக்கும் தெளிவாகத் தெரிந்தது..!

    திருப்தியோடு அந்த இறுதி வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அந்த மனிதர்...
    அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்..!

    அவர் கண் அசைத்தால் அடுத்த நொடியே காரியம் நடந்திருக்கும் ...!
    ஆனால் அந்த ஒரு நொடி தாமதத்தைக் கூட எம்.ஜி.ஆர். விரும்பவில்லை..!
    காரணம்....
    கவிஞர் கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த உயர்ந்த மரியாதை...
    மக்கள் உணர்வுகளுக்கு கொடுத்த உன்னத மதிப்பு...!

    # கண்ணதாசன் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த கண்ணியமான மரியாதையினால்தான் , 1978-ல் ‘அரசவைக் கவிஞர் ’ பட்டத்தை கண்ணதாசனுக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர். ! அந்த விழாவில் பேசிய கண்ணதாசன் உணர்ச்சிவசப்பட்டவராக , ‘‘ நான் இறந்துவிட்டால் எனக்கு அரசு மரியாதை கிடைக்கும்... இந்த சிறப்பை எனக்கு வழங்கிய எம்.ஜி.ஆருக்கு முன்கூட்டியே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ’’ என்று சொன்னாராம்...!

    எப்படித் தெரிந்ததோ கண்ணதாசனுக்கு..?
    1981 இல் உயிரோடு அமெரிக்கா சென்ற கண்ணதாசன் , வெறும் உடலாகத்தான் தமிழகம் திரும்பினார்..!

    இறுதி நேரத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்த அந்த அரசு மரியாதைக்கு நன்றி சொல்ல இயலாத நிலையில் கண்ணதாசன்...!

    ஆம்.... கவிஞன் வாக்கு பலித்தது..!

    # எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய
    “சங்கே முழங்கு” பாடல் வரிகள் :

    “ வாழும் போது வருவோர்க்கெல்லாம்
    வார்த்தையாலே நன்றி சொல்வோம்
    வார்த்தை இன்றி போகும் போது
    மௌனத்தாலே நன்றி சொல்வோம்

    நாலு பேருக்கு நன்றி ”
    இவண்
    ஜெயம் பழனிவேல்MA
    விராலிமலை தொகுதி......... Thanks...

  9. #2668
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    21.02.2020 வெள்ளிமுதல் திண்டுக்கல்- என்.வீ.ஜி.பி dts.,திரையரங்கில் தினசரி.4.காட்சிகளாக வெற்றிப்பவனி வருகின்றார் "புதுமைப்பித்தன்" பொன்மனச்செம்மல் எம்ஜிஆர். தகவல்.திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் படக்கம்பெனி நண்பர் நன்றி மதுரை எஸ்.குமார் எம்ஜிஆர். மன்றம்... Thanks.........

  10. #2669
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திருப்பூரில் நாளை மணீஸ் திரையரங்கம் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த எங்கள் வீட்டுப்பிள்ளை திருப்பூர் சரவணன்

  11. #2670
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M.G.R. தனது படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பாத்திரங்களாக இருப்பதை அனுமதிக்க மாட்டார். அதுபோன்று அவர் நடித்தது இல்லை. எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் புண்படுத்த மாட்டார். அதனால்தான், அவர் சர்வ சமுதாய காவலராக போற்றப்பட்டார்.

    தனது திரைப்படங்களில் திராவிட இயக்கங்களின் கொள்கைகளையும் முற்போக்கு சிந்தனைகளையும் ஜாதிக் கொடுமைகள் குறித்தும் காட்சிகள் வாயிலாக மக்கள் மனங்களில் பதிய வைப்பது எம்.ஜி.ஆரின் உத்தி... ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆரின் அறிமுகக் காட்சி அதற்கு ஒரு சாட்சி..

    வில்லனின் ஆட்கள் ஒரு பெண்ணை தூக்கிச் செல்வார்கள். அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணை எம்.ஜி.ஆர். மீட்பார். பிறகு, அந்தப் பெண்ணைப் பார்த்து தனது குதிரை வண்டியில் ஏறும்படியும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விடுவதாகவும் கூறுவார். அப்போது அந்தப் பெண், ‘‘ஐயா, நான் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவள். உங்கள் வண்டியில் ஏறக் கூடாது’’ என்பார்.

    அதற்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்கும்போது, ‘‘உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி இதெல்லாம் இந்த சமுதாயம் செஞ்சு வெச்ச கொடுமை. என்னைப் பொறுத்தவரை எல்லாரும் ஒரே ஜாதிதான். அது மனித ஜாதி’’ என்பார். இப்படி, படங்களில் பொருத்தமான இடங்களில் ஜாதிக் கொடுமைகளை சாட எம்.ஜி.ஆர். தவறியதில்லை.

    தன்னலம் கருதாது பணியாற்றும் மக்கள் தொண்டர்களை வாய்ப்பு கிடைக்கும்போது உரிய கவுரமும் பெருமையும் அளித்து கவுரவிப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்.தான்!

    1940-களில் கன்னியாஸ்திரி ஒருவர் கொல்கத்தாவில் ஏழைகளுக்கு தொண்டாற்றி வந்தார். தனவந்தர்கள், பெரிய மனம் கொண்டோரிடம் இருந்து நிதி பெற்று அந்தப் பணத்தைக் கொண்டு ஏழை, எளிய, மக்களுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்து வந்தார். ஒரு நாள் ஒரு பணக்காரரிடம் கையேந்தி நிற்கிறார் அந்த கன்னியாஸ்திரி. பணம் இல்லை என்று விரட்டுகிறார் பெரிய மனிதர். விடாமல் அவரை பணிவோடு கேட்கிறார் அந்த அம்மையார். ஆத்திர மடைந்த பெரிய மனிதர் கையேந்தி நின்ற அந்த அன்னையின் கைகளில் காறித் துப்புகிறார்.

    அப்போதும் அந்த அம்மையார் பொறுமையாக, ‘‘ஐயா, எனக்கான காணிக்கையை கொடுத்துவிட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையை தயவு செய்து கொடுங்கள்’’ என்று கேட்டதைப் பார்த்து அந்த பணக்காரரே மனமிறங்கி நன்கொடை அளித்தார். அந்த பொறுமை யின் சிகரம்தான் தன் வாழ்க்கையை நலிந்தோருக்காகவும் நோயாளிகளுக் காகவும் அர்ப்பணித்த அன்னை தெரசா.

    அப்படிப்பட்ட தொண்டு உள்ளம் படைத்த அன்னை தெரசா, ஏழை மாணவர்களுக்கு சத்தான உணவு அளிக்க எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டத்தை பாராட்டாமல் இருப்பாரா?

    1982-ம் ஆண்டு பள்ளி மாணவர் களுக்கு இலவச சத்துணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். சத் துணவுத் திட்டத்தை தெரசா மிகவும் பாராட்டினார். இது தொடர்பாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த விழாவில் தெரசா கலந்து கொண்டு எம்.ஜி.ஆருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பெண்களுக்காக தனி பல்கலைக் கழகத்தை அமைக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். அதன்படி, 1984-ம் ஆண்டு கொடைக்கானலில் பெண்களுக்கான தனிப் பல்கலைக்கழகம் உருவானது. அந்த விழாவில் தெரசா கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் முதல்வராக இருந்த பரூக் அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    தனது தொண்டால் பெண் இனத் துக்கு பெருமை தேடித் தந்த அன்னை தெரசாவின் பெயர், பெண்கள் பல் கலைக்கழகத்துக்கு சூட்டப்படுவதாக விழா மேடையில் பலத்த கரகோஷத்துக் கிடையே எம்.ஜி.ஆர். அறிவித்தார். அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். மேடையில் இருந்த பரூக் அப்துல்லா எழுந்து மகிழ்ச்சியில் எம்.ஜி.ஆரை தழுவிக் கொண்டார்.

    இந்து மதத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்., கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த அன்னை தெரசாவின் பெயரை பல்கலைக்கழகத் துக்கு சூட்டுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பரூக் அப்துல்லா எம்.ஜி.ஆரை தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்து கிறார். மத வேறுபாடுகள் மறைந்து மனித நேயம் உயர்ந்து நிற்கிறது.

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது நாகப்பட்டிணம் சட்டப் பேரவைத் தொகுதியில் மருத்துவ விடுதி ஒன்றின் திறப்பு விழா. அது தொடர்பான விழா நாகூர் தர்கா அருகே நடந்தது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசினார். ‘நான் கைலி கட் டாத முஸ்லிம், சிலுவை அணியாத கிறிஸ் துவன், திருநீறு அணியாத இந்து...’

    மக்களின் கரவொலி இடியொலியாய் முழங்கியது. மேடையில் பேசியது போன்றே வாழ்ந்தும் காட்டியவர் எம்.ஜி.ஆர்.......... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •