Page 272 of 402 FirstFirst ... 172222262270271272273274282322372 ... LastLast
Results 2,711 to 2,720 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2711
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நாளை முதல் (28/02/20, 29/02/20,01/03/20) வெள்ளி /சனி /ஞாயிறு இரவு 8 மணி காட்சியில் மட்டும் திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "முகராசி " திரையிடப்படுகிறது . குறுகிய இடைவெளியில் 6 வது*திரைக்காவியம் .

    தகவல் உதவி ;திருப்பூர் நண்பர் திரு.நடராசன் .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2712
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    உலக எம் ஜி ஆர் பேரவை ! உலக பக்தர்களை ஓரணியில் ஒருங்கிணைப்பது - தலைவர் புகழ் காக்க உலக மாநாடுகள் நடத்துவது - தலைவர் புகழ் போற்ற விழாக்கல் நடத்துவது என்பதோடு நிற்க்காமல் அடுத்த தலைமுறைக்கு மக்கள் திலகம் புகழ் பரவ வேண்டும் என்பதையும் முக்கிய குறிக்கோளாக கொண்டு செயலாற்றுகிறது ! அவ்வகையில் உலக எம் ஜி ஆர் பேரவையின் அங்கமாக திகழும் அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபியில் தலைவரின் மிகப் பெரும் பக்தர் சைலீஸ்பாசு தலமையில் இயங்கும் "அபுதாபி எம் ஜி ஆர் பேரவை " அனுசரணையுடன் நடக்கும் கால் பந்து போட்டி வரும் 28/2/2020 அன்று அபுதாபியில் நடைபெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம் ! மக்கள் திலகத்தின் உலக பக்தர்கள் பெருமையுடன் வாழ்த்தி வரவேற்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ! ( நான்கு ஆண்டுகளாக் போட்டிகள் நடந்தாலும் , இவ்வாண்டுதான் உலக எம் ஜி ஆர் பேரவையில் பதிவு பெற்று நடத்தப்படுகிறது )

  4. #2713
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமணி -கொண்டாட்டம் -23/02/20
    ---------------------------------------------------------

    ரோஜா மலரே - சச்சு*
    ------------------------------------

    அந்த காலத்தில் எங்களுக்கு வேலையே சினிமாவில் நடிப்பது மட்டுமல்ல .* சினிமா பார்ப்பதுதான் .* ஜனக் ஜனக் பாயல் பாஜே என்று ஒரு இந்தி படம் வந்தது .* அந்த படத்தை இயக்கியவர் வி.சாந்தாராம் .* அவர் ஒரு சிறந்த திரைப்பட இயக்குனர் .ஒரு செய்தியை இங்கு முக்கியமாக சொல்ல விரும்புகிறேன் .**


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம் ஒரு நாள் இயக்குனர் வி.சாந்தாராம் சென்னைக்கு வருகை புரிந்தார் .* அப்போது நவரங் படம் எடுத்ததற்காக அவருக்கு பரிசு ஒன்றை அளிக்க விரும்பினார் எம்.ஜி.ஆர். நவ என்றால் 9 என்று அர்த்தம் .* அதனால் அவருக்கு 9 ச்வரனில் தங்க செயினை செய்து பரிசளிக்க விரும்பினார் .*


    அந்த நாளும் வந்தது .மேடையில் பிரதமர் மொரார்ஜி தேசாய் ,முன்னாள் முதல்வர் கருணாநிதியும் கூட அமர்ந்திருந்தனர் .* இந்த சந்தர்ப்பத்தில் தான் கொண்டு வந்த செயினை இயக்குனர் சாந்தாராமிடம் கொடுக்க, அவர் எம்.ஜி.ஆரை பார்த்து, நீங்களே எனக்கு போட்டு விடுங்கள் என்று கூற , எம்.ஜி.ஆர். அவர் கழுத்தில் போட முயற்சிக்க , அது கை தவறி கீழே விழ, உடனே எம்.ஜி.ஆர். குனிந்து அதை எடுக்க முயற்சிக்க , புகைப்படக்காரர்கள் படமெடுக்க, அது சாந்தாராம் காலில் எம்.ஜி.ஆர். விழுந்தது போல் இருந்தது .* அடுத்த நாள் படத்தை பார்த்த எம்.ஜி.ஆர். என்ன சொன்னார் தெரியுமா ?* நான் அவர் காலில் விழுந்தாலும் தவறொன்றுமில்லை . மிக பெரிய இயக்குனர் மட்டும் இல்லை. என்னை விட எல்லாவிதத்திலும் அவர் பெரியவர் என்று கூறினாராம் .**


    1975ல்* எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான படம் இயக்குனர் சாந்தாராம் எடுத்த ஒரு படத்தின் தமிழாக்கம்தான் .* ஆமாம் , சிறை தண்டனை என்பது கைதிகளை நல்வழிப்படுத்தவே* அமைக்கப்பட்டவை என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்கும் ஒரு சிறந்த படத்தை எடுத்துள்ளார் . வி.சாந்தாராம் .* அதுதான் தோ* ஆங்கேன்* பாரா ஹாத் என்ற படம். இந்த படம் இந்திய திரையுலகில் ஒரு மைல் கல் என்று கூறலாம் .* பெர்லின் நகரில் நடந்த ஒரு திரைப்படவிழாவில்* வெள்ளி கரடி விருதையும், அமெரிக்காவிற்கு வெளியே எடுக்கப்பட்ட படங்களில் சிறந்த படம் என்ற விருதையும் பெற்ற படம் இது .* இந்த திரைப்படத்தை தான் எம்.ஜி.ஆர். தனது நடிப்பில் " பல்லாண்டு வாழ்க " என்று தமிழில் நடித்து வெற்றி படமாக்கினார் என்பது வரலாறு .**

  5. #2714
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சென்னை மூலக்கடை- ஐயப்பா DTS., இன்று 28-02-2020 வெள்ளிக்கிழமை முதல் மகத்தான தொடக்கம்... என்றும் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "நேற்று இன்று நாளை" காவியம் தினசரி 3 காட்சிகள் வெற்றி பவனி உலா......... Thanks.........

  6. #2715
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (28/02/20)* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும் திரைக்காவியங்கள்*தமிழகத்தில் வெளியான பட்டியல்*
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    ரகசிய போலீஸ் 115 - மதுரை வெற்றி , தேனீ வெற்றி , பழனி - சந்தான கிருஷ்ணா**-* *இணைந்த 2 வது* வாரம்.* - தினசரி 4 காட்சிகள்*


    நேற்று இன்று நாளை - சென்னை மூலக்கடை ஐயப்பா - தினசரி 3 காட்சிகள்*


    நம் நாடு* * * * * * * * * * - நகரி (ஆந்திர பிரதேசம் ) ஸ்ரீநிவாஸா* அரங்கில்* * தினசரி 2 காட்சிகள் -இணைந்த 6 வது* வாரம் .


    விவசாயி* * * * * * * - கோவை சண்முகா - தினசரி 4 காட்சிகள் .கடந்த டிசம்பர் மாதம்***கோவை டிலைட்டில் தினசரி 2 காட்சிகள் நடைபெற்றது .

    ஆயிரத்தில் ஒருவன் - கீரனூர் லட்சுமி யில்* (திருச்சி மாவட்டம் ) - தினசரி 4 காட்சிகள்*

    முகராசி* * * * * * * * * - திருப்பூர் அனுப்பர்பாளையம் கணேஷ் -வெள்ளி /சனி /ஞாயிறு***தினசரி* இரவு காட்சி மட்டும் .

    ரிக் ஷாக் காரன்* - தஞ்சை விஜயா* ( 21/02/20முதல் ) தினசரி 4 காட்சிகள்* *நடைபெற்றது .
    Last edited by puratchi nadigar mgr; 28th February 2020 at 01:24 PM.

  7. #2716
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர் அவர்களின் வசூல் வேட்டை தொடர்கிறது*
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    மதுரை சென்ட்ரலில் கடந்த வாரம் வெளியான நடிக பேரரசர் எம்.ஜி.ஆரின்*தேடி வந்த மாப்பிள்ளை* ஒரு வார வசூலாக ரூ.1,05,000/- ஈட்டி அபார சாதனை.சிவராத்திரி திருவிழா சமயத்தில் இந்த வசூல் பிரமிக்கத்தக்கது என்று விநியோகஸ்தர் தகவல் அளித்ததாக மதுரை நண்பர் திரு.எஸ். குமார் செய்தி அளித்துள்ளார் .

    திருச்சி பேலஸில் கடந்த வாரம் வெளியான தென்னக ஜேம்ஸ் பாண்டாக நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். நடித்த ரகசிய போலீஸ் 115 -டிஜிட்டல்* ஒரு வார வசூலாக*ரூ.98,000-/-* வசூலாகி சாதனை புரிந்ததாக திருச்சி நண்பர் திரு.கிருஷ்ணன் தகவல் அளித்துள்ளார் . விரைவில் திருச்சி முருகனில் சாதனை தொடரும் .............

  8. #2717
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ் இந்து - 28/02/20
    திரை நூலகம் - ஓர் உதவியாளரின் அனுபவங்கள் - ரசிகா*
    ---------------------------------------------------------------------------------------------


    எம்.ஜி.ஆர். எனும் உச்ச நட்சத்திரத்தின் திரையுலக வாழ்க்கை குறித்து நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் வந்திருக்கின்றன.* ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அவருடைய பொது வாழ்க்கையின் ஆளுமையை அருகிலிருந்து கவனித்து எழுதப்பட்ட புத்தகங்கள் அரிது எனலாம் .* "சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன் " எனும் இந்த நூல் தனது சின்ன சின்ன கட்டுரைகளால் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறது .* 1972 தொடங்கி , அதன்பின்* எம்.ஜி.ஆர். மறையும் வரை அவருடைய நம்பிக்கைக்கு உரிய உதவியாளராக இருந்தவர் கே. மகாலிங்கம் .* அனுபவ சாட்சியம் போல் அமைந்திருக்கும் புத்தகம் இது .* மிக முக்கியமாக எம்.ஜி.ஆர். சந்தித்த கடினமான தருணங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்* மகாலிங்கம் என புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் ஐந்து முன்னுரைகளிலும் சுட்டி காட்டபட்டிருக்கிறார்* அதை 456 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் 110 குறுங்கட்டுரைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .*

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய கார்களின் பதிவெண்ணாக*4777 எப்படி தேர்வானது என்பதில் தொடங்கி, அவர் முன்னின்று நடத்திவைக்கும் திருமணங்களில் அவர் தாலியை எடுத்து கொடுக்கும் பங்கு, அவருடைய கண்டிப்பு, அன்பு, அரவணைப்பு , வள்ளல் தன்மை மணிதநேயம், வறிய மக்கள் மீதான கரிசனம் , அரசியல் சாணக்கியம் என அவருடைய பன்முக ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார் .* எம்.ஜி.ஆரின் ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகளைத் தாண்டி, அவருடைய அரசியல் வாழ்க்கையின் சுவாரசிய பக்கங்களை அறிந்து கொள்ள நினைக்கும் யாருக்கும் இந்த புத்தகம் மற்றுமொரு புதையல் .



    சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன் - கே.மகாலிங்கம் , மூன்றெழுத்து பதிப்பகம், ஆர். ஏ. புரம் , 54/29 , மூன்றாவது பிரதான சாலை, சென்னை -28.தொடர்புக்கு : 9444019079

  9. #2718
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -29/02/20
    ---------------------------------
    காலத்தை வென்றவன் -2
    ------------------------------------------
    மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 103ம் பிறந்த நாள் விழா , சிங்கப்பூரில் சமீபத்தில் நடந்தது .**

    காலத்தை வென்றவன் நீ - பாகம் 2 என்ற அந்த நிகழ்வில், சிங்கப்பூர் , மலேசியா*மற்றும் தமிழக கலைஞர்கள் பலர், ஆடல், பாடல் என்று அசத்தினர் .

    விழாவில், 50* பேருக்கு , பாராட்டு பட்டயங்கள் வழங்கப்பட்டு , கௌரவிக்கப்பட்டனர் .* ஏழு பேருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது .**

    எம்.ஜி.ஆர். , ஈவண்ட் புரோமோட்டர்ஸ்* மற்றும் அன்னை சாரதா மூவிஸ் இணைந்து,இதை நடத்தினர் .* இந்நிகழ்ச்சி, மூன் டிவி.யில் மார்ச் 1 ம்* தேதி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது .**

  10. #2719
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் -29/02/20
    --------------------------------
    மறக்க முடியுமா ?* -- ஆயிரத்தில் ஒருவன்*
    ----------------------------------------------------------------------
    மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா ? "சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும் "* ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இந்த வசனத்தை கேட்கும் போது , ரசிகர்கள் சிலிர்த்துக் கொள்வர். ஆம். ஒரு படத்தின் வெற்றிக்கு , வசனங்களும் முக்கியம்*

    பொருளாதார சிக்கலில் சிக்கிய பி.ஆர். பந்துலுவிற்கு உதவிக்கரம் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.* ஹாலிவுட் படத்திலிருந்து தழுவிய கதை, ஆயிரத்தில் ஒருவன் .**அது எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாக பொருந்தியது.**

    இப்படத்தில் நடிப்பதற்காக, 1 ரூபாய் மட்டுமே, எம்.ஜி.ஆர். முன்பணமாக பெற்றுக் கொண்டார் .* படம் வெளியாகி வெற்றி பெற்றபின் , பி.ஆர். பந்துலு, தானே சென்று,*எம்.ஜி.ஆருக்கு சம்பளம் கொடுத்தார் .* *அதுவரையில் அவர் சம்பளம் கேட்கவில்லை .
    எம்.ஜி.ஆர். ஜெயலலிதா முதன் முதலில் இணைந்து நடித்த படம் என்ற பெருமையும், விஸ்வநாதன் -ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த கடைசி படம் என்கிற சோகமும் உண்டு .* *

    தீவு ஒன்றில், அடிமைகளின் தலைவனாக இருக்கும் எம்.ஜி.ஆர். அங்கிருந்து மீண்டு, கொள்ளையர் கூட்டத்தில் சிக்கி, இறுதியில் அனைவரிடமும் வெற்றி பெற்று , தாய்நாட்டிற்கு எப்படி செல்கிறார் என்பதே கதையின் சுருக்கம் .**

    கண்ணதாசன், வாலி, ஆகியோர் வரிகளில், பருவம் எனது பாடல், ஏன் என்ற கேள்வி, ஓடும் மேகங்களே, உன்னை நான் சந்தித்தேன், நாணமோ* இன்னும் நாணமோ, ஆடாமல் ஆடுகிறேன், அதோ அந்த பறவை போல , என அத்தனை பாடல்களும் தேன்.**

    நம்பியாரும், எம்.ஜி.ஆரும், போடும் கத்தி சண்டையில், அனல்பறக்கும், ஆர்.கே.* சண்முகம் வசனத்தில் பொறி கிளம்பும் .* மொத்தத்தில், வசூலில் சூறாவளியை நிகழ்த்தியது, ஆயிரத்தில் ஒருவன் .

  11. #2720
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தினமலர் - வார மலர் - 23/02/20
    -------------------------------------------------
    சிவகங்கை மாவட்டம் ஜோ. ஜெயக்குமார் என்பவர் சொல்ல கேட்டது*
    --------------------------------------------------------------------------------------------------------------
    ஒரு முறை படப்பிடிப்பிற்கு , தன காரில் சென்று கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.*அப்போது , ஒரு பள்ளி சிறுவன், செருப்பில்லாமல் வெயிலில் நடந்து போவதை*பார்த்தார் .* கார் டிரைவரின் தோளில் தட்டி, உடனே நிறுத்த சொன்னார் .

    அந்த சிறுவனின் வீட்டு முகவரியையும், கால் அளவையும் குறித்து வர சொன்னார் டிரைவரும் வாங்கி வர, தயாரிப்பாளர் ஒருவரிடம், முகவரியை கொடுத்து, உடனே, புதிய தோல் செருப்பை தைத்து கொடுத்து வாருங்கள் .* அதன்பின் தான் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.*

    தயாரிப்பாளரும், சிரமேற்கொண்டு, அதை செய்து, சிறுவனின், தந்தையிடம் இருந்து சாட்சிக்கு கையெழுத்தும் வாங்கி வந்தார் .* அதற்குள் மதியம் ஆகிவிட்டது .மதிய உணவு சாப்பிடாமலேயே*.படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார் எம்.ஜி.ஆர். அந்த சிறுவன்தான் பின்னாளில், பேட்டா என்கிற மிக பெரிய நிறுவனத்தின் தென் மாநில டீலர் ஆனார் . எம்.ஜி.ஆர்.இறக்கும் வரையில், அவருக்கு செருப்பு விநியோகம்* செய்து, அவர் வற்புறுத்தி கொடுத்த தொகையை வாங்கி கொண்டார் .**

    பின்னாளில் அவர், எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுக்க விரும்பினார் .எம்.ஜி.ஆரை அணுகியபோது,ஒரு ஜோடி செருப்பை கொடுத்து, பட வாய்ப்பை பெற்றவன் என்ற இழுக்கு எனக்கு வேண்டாம் என்று சொல்லி அன்பாக மறுத்துவிட்டார் .**
    இன்று அந்த பையன் குடும்பத்தினர் தான், உலக அளவில் "ஷை பப்பீஸ் " என்ற ஷூ கம்பெனி யை நடத்தி வருகின்றனர் .**

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •