Page 273 of 402 FirstFirst ... 173223263271272273274275283323373 ... LastLast
Results 2,721 to 2,730 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #2721
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஏழைகளின் இதயம் எம்.ஜி.ஆர்.*
    ----------------------------------------------------
    ஈழத்தில் மற்றுமொரு எம்.ஜி.ஆர். சிலை.
    ----------------------------------------------------------------
    யாழ்ப்பாணம் அருகே, பாசையூர் கடற்கரை பகுதியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு முழு உருவசிலை நிறுவப்பட்டுள்ளது .
    வாட்ஸ் அப் செய்தி*

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2722
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    துக்ளக் வார இதழ் -01/01/1988
    -----------------------------------------------
    திரு.எம்.ஜி.ஆர்.
    --------------------------

    அசாத்தியமான மனோதிடம், பரிபூரணமான தன்னம்பிக்கை, தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவும் தாராள குணம் , - இவை எம்.ஜி.ஆரின் குணாதிசயங்களாக திகழ்ந்தன .**

    என்னை போல் அவருடைய அரசியலை ஏற்காத வர்கள் கூட, அவருடைய இந்த குணங்களை* கண்டு வியக்காமல் இருந்ததில்லை .

    தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சரி, சினிமாத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி, சோதனைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்தபோது , சோர்ந்துபோய்விடாமல், அவற்றைக் கடந்து வரக்கூடிய தன்மை - இந்த குணாதிசயங்களால்தான் அவருக்கு கிட்டியதுஎன்று நினைக்கிறேன் .* அவர் மறைந்துவிட்ட இன்றைய நிலையில்* சில ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆரை பற்றி துக்ளக் இதழில் எழுதிய கட்டுரைகளில் இருந்து சில பகுதிகளை நினைத்துப் பார்க்கிறேன் .*


    எம்.ஜி.ஆர். செய்துள்ள தான தருமங்கள் ஏராளம் என்பது எல்லோருக்கும் தெரியும் .வருமான வரியை குறைப்பதற்காக செய்கிறார் , விளம்பரத்திற்காக செய்கிறார் என்று சிலர் கூறுவதுண்டு .* அப்படியே வைத்துக் கொள்வோம் .* இந்த காரணங்களுக்காக தான தருமங்கள் செய்ய முன்வருபவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நினைத்து பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.* தவிர, எந்தவித விளம்பரமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். செய்துள்ள தான தருமங்கள் உதவிகள் அநேகம் உண்டு .* அவ்வாறு உதவி பெற்றவர்களே என்னிடம் பலர் கூறியிருக்கிறார்கள் .* மிகவும் தேவையான சமயத்தில் செய்யும் உதவி போன்ற நல்லகாரியம் வேறு எதுவுமில்லை .* அவ்வாறு பல நல்ல காரியங்களை எம்.ஜி.ஆர். செய்துள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை .* ஒரு நடிகர் ஒருமுறை என்னிடம் கூறினார் , வீட்டிலே உலை வைத்துவிட்டு , சோறு பொங்குவோம் என்கிற நம்பிக்கையோடு, அரிசிக்காக ஒருத்தர் வீட்டிலே போய் நிற்க முடியும் என்றால் அது எம்.ஜி.ஆர். வீட்டு வாசலிலேதான்.* வேறு யாரும் கிடையாது* *இந்த மாதிரி மனப்பூர்வமான சர்டிபிகேட்* எத்தனை பேருக்கு கிட்டும் என்று நினைத்து பார்க்க வேண்டும் .

    துக்ளக் --13/12/1974.

    ஒருவருடைய அரசியலை விமர்சிக்கிறோம் என்பதற்காக அவரிடம் இருக்கக் கூடிய பல நல்ல விஷயங்கள்* நமக்குத் தெரிந்திருந்தால் , அவற்றை மறுத்துதான் தீரவேண்டும் என்று நினைப்பவர்களில் நான் ஒருவன் அல்ல.*அரசியல் பற்றிய என்னுடைய அபிப்பிராயங்கள் எடுபடவேண்டும் என்பதற்காக*என் கருத்துக்களுக்கு விரோதமாக போகக்கூடிய எனக்கு தெரிந்த உண்மைகளை நான் மறைக்க முற்பட்டதில்லை* *எம்.ஜி.ஆரின் அரசியலைப் பற்றிய என்னுடைய* கடுமையான விமர்சனம்* தொடர்வது வேறு விஷயம் .* ஆனால் தனிப்பட்ட முறையில் அவரிடம் உள்ள பல நல்ல குணாதிசயங்களை எடுத்து சொல்ல நான்* தயங்கவில்லை .**

    துக்ளக் = 01/07/1974


    பலருக்கு மனமுவந்து வந்து உதவி செய்து, அந்த மனிதர் மீண்டும் முழுமையாக தனது உடல்நலத்தை திரும்ப பெற்று* நன்றாக வாழ வேண்டும் என்று ஆயிரக்கணக்கானவர்களுடன் சேர்ந்து நானும் இறைவனை வேண்டுகிறேன் .
    எம்.ஜி.யாருக்கோ, தான் செயல்பட்டு காட்ட வேண்டும் என்கிற துடிப்பு எப்போதுமே அதிகம் . துப்பாக்கி சூட்டுக்கு பிறகு அவரது குரல், பேச்சு மிகவும் பாதிக்கப்பட்டது . இனி அவர் சினிமாவில் நடிக்க முடியாது என்று தான் பலரும் நினைத்தார்கள் .* ஆனால் செயல்பட்டே தீர வேண்டும் என்ற தன்னுடைய உத்வேகத்தின் காரணமாக , எம்.ஜி.ஆர். மிக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார் .* தொடர்ந்து பேசிப் பேசி, தனது பயிற்சியின் மூலமாக இழந்த தனது குரலை பெருமளவு திரும்ப பெற்றார் .சினிமாத்துறையில் தொடர்ந்து நடித்து பல அபார வெற்றிகளை கண்டு சாதித்தார் .* இந்த மாதிரி செய்வதற்கு மிகவும் மனோதிடம் வேண்டும். எம்.ஜி.ஆரிடம் அந்த மனோதிடம் இருந்ததனால்தான் அப்போது அவரால் அவ்வாறு செய்யவும், சாதிக்கவும் முடிந்தது .


    வாழ்க்கையில் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டால் இடிந்து போகிறவர்கள் உண்டு .எப்படியாவது போராடி, அபாயத்தைக் கடந்து, ஜெயித்து காட்ட வேண்டும் என்று முனைபவர்களும் உண்டு . எம்.ஜி.ஆர். அதில் இரண்டாவது ரகம்*


    குண்டடிபட்டபோது எமன் வாயில் இ*ருந்து மீண்டார் .அதுமட்டுமல்ல.
    குரலுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பை* விடா முயற்சியின் பலனாக பெருமளவு வென்று, சினிமாவில் பல வெற்றிகளை , சாதனைகளை தனதாக்கிக் கொண்டார் .* இப்படி தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட சோதனைகளையும், தோல்விகளையும், அவர் கடந்து உறுதியுடன் நின்றிருக்கிறார் .*


    ஆனால் அரசியலை ஒதுக்கிவிட்டு பார்க்கும்போது, அவர் பலருக்கு செய்துள்ள உதவிகளும் , சொந்த வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்து நிமிர்ந்து நிற்க காரணமாக இருக்கும் அவருடைய மன உறுதியும் , என் கண்முன்னே தோன்றுகின்றன .* இவை இப்போதும் அவருக்கு கைகொடுக்கும் என்று நம்புவோமாக
    .
    துக்ளக்* -01/11/1984.

    தன்னை மட்டுமே நம்பி , எம்.ஜி.ஆர். சாதித்த வெற்றிகளை, சாதனைகளை வேறு எந்த தனி மனிதனும், சமீப கால தமிழக சரித்திரத்தில் சாதிக்கவில்லை .
    அவரை இழந்து நிற்கும் அவருடைய மனைவி திருமதி ஜானகி ராமச்சந்திரனுக்கும், அவருடைய மற்ற உறவினர்களுக்கும் , அவரது கட்சியினருக்கும், துக்ளக் பத்திரிகையின் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

  4. #2723
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அப்படியா??
    -----------------------
    ரிக்ஷாக்காரன் படம்!
    சத்யா மூவிஸ் படங்களிலேயே அசுர சாதனை புரிந்த படம்!
    அந்தப் படம் இந்திய அளவில் பாரத் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது சற்று சலசலப்பு எழுந்தது.
    சிவாஜி ரசிகர்கள் ,,தங்கள் நாயகனுக்கு விருது கிடைக்காத வருத்தத்தில் சலசலத்துக் கொண்டிருந்தார்கள்--அப்போது--
    ஒருவரின் தீர்க்கமான கருத்து அமளியை அமைதிக்கு மாற்றியது!
    அவர் அப்படி என்னக் கூறியிருந்தார் என்றால்--
    இந்த விருது,,ரிக்ஷாக்காரன் படத்துக்குக் கிடைக்கலேன்னா தான் நான் வருத்தப் பட்டிருப்பேன். உண்மையிலேயே எம்.ஜி.ஆருக்குக் கிடைக்க வேண்டிய விருது தான் இது.
    எந்தத் தொழிலிலும் கேவலமில்லை என்பதை வலுவாக எடுத்து சொல்லியிருக்கும் படம் இது. இந்தக் கருத்து,,தம் ரசிகர்கள் மனசுல ஆழப் பதியணும்ன்னு எம்.ஜி.ஆர் இந்தப் படத்துலே ரொம்பவும் மெனக்கெட்டிருக்கார்.
    இந்திய விருதுன்னாலே ஹிந்திப் படங்களுக்கும்,,அந்த நடிகர்களுக்கும் தான் என்று எழுதியா வச்சிருக்கு?
    சிவாஜி ரசிகர்களுக்கும் ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன்--
    உங்க சிவாஜிக்கு ஏன் கொடுக்கலேன்னு கேளுங்க,,நியாயம்!! எம்.ஜி.ஆருக்கு ஏன் கொடுத்தாங்கன்னு கேக்கறது சரியில்லே.
    ஒரு தமிழனா,,தமிழ் படத்துக்குக் கிடைச்சதுக்காக நீங்க எம்.ஜி.ஆரைப் பாராட்டணும். அவரை வாழ்த்தணும்!!!
    இப்படி ஒரே போடாகப் போட்டு அன்றைய விவாதத்தை அடக்கியவர்--
    கவிஞர் கண்ணதாசன்!!
    இதில் என்ன செய்தி இருக்கிறது எனக் கேட்கிறீர்களா??
    அந்த சமயம்,,,இதே கண்ணதாசன்,,அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரைக் கடுமையாக தாக்கிக் கொண்டிருந்த நேரம்? இன்னொரு சுவாரஸ்யம்??
    இதே கண்ணதாசன் சிவாஜியுடன் இணைந்திருந்து,,அவரது படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த பீரியட்??
    வேண்டப்பட்டவர் என்பதால் எம்.ஜி.ஆருக்குக் கொடுத்ததாக--
    தூண்டப்பட்டவர்கள் சிலரால் மும்முரமாக--
    தோண்டப்பட்டுக் கொண்டிருந்த பள்ளத்துக்கு கவிஞரின் விளக்கமே சரியான தீர்ப்பு என்பதில் ஐயம் இல்லை தானே அருமைகளே???!!! ......... Thanks.........

  5. #2724
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரு லோகநாதன் அவர்கள், இன்றைய தினமலர் செய்தியில் சில வரிகளை விட்டு விட்டு பதிவு செய்து இருக்கிறீர்... ( கப்பலோட்டிய தமிழன், வீர பாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற தரமான படங்களுக்கு அப்போதைய மக்கள்
    போதிய ஆதரவு தரவில்லை, அதனால் பந்துலு பொருளாதார சிக்கலில் மாட்டி கொண்டார். அதிலிருந்து விடுபட புரட்சி நடிகர் அவர்களை நாடி"ஆயிரத்தில் ஒருவன்" எடுத்து வெளியிட்டு பிரச்சினையிலிருந்து விடுப்பட்டார்) என்ற செய்திகளை எடிட் செய்து உள்ளீரே...

  6. #2725
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (29/02/20) அருப்புக்கோட்டை மகாராணியில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

    தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .

  7. #2726
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் திரு.சுகாராம் அவர்களுக்கு வணக்கம்.*

    தினமலர் செய்தியை இணைய தளத்தில் வேண்டுமென்றே தான் எடிட் செய்து பதிவிட்டேன் . ஏனெனில் இது சம்பந்தமாக பல விவாதங்கள், கருத்து பேதங்கள், சர்ச்சைகள் நடந்து முடிந்துவிட்டன . ஆகவே மீண்டும் புதியதாக பிரச்சனையை*உருவாக்கி வளர்த்துவிட வேண்டாம் என்பதற்காக தான். மற்றபடி, தினமலரில் பிரசுரம் ஆன செய்திகள், கருத்துக்களை பொதுமக்கள் படித்தபின்னர் யார்தான்*எடிட் செய்யமுடியும் . ஆயிரத்தில் ஒருவன் ஓய்வில்லாமல் தமிழகத்தில் ஏதாவது ஒரு அரங்கில் அயராமல் காட்சியளித்து கொண்டுதான் உள்ளார் .* மறைந்த இயக்குனர் /தயாரிப்பாளர் தயாரித்த படங்களிலேயே அதிக நாட்கள் அரங்கினில் ஓடி கொண்டிருக்கும் படம் ஆயிரத்தில் ஒருவன் என்பது அவரது குடும்பத்தினருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தெரியும்.என்று சொன்னால் மிகையாகாது .* எனவே , இணைய தளத்தில் பதிவிட்டு, மீண்டும் நாமே விவாதத்தை தொடங்குவதற்கோ, அல்லது யாருக்கும் பயந்தோ அல்ல. அப்படி ஒருவேளை* செய்திகளை படித்துவிட்டு கே*ள்வி கணை தொடுப்பவர்கள் தினமலர் நாளிதழ் ஆசிரியரை கேட்கட்டும் ,நாம் என்ன செய்ய முடியும் .

  8. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  9. #2727
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

    வாழ்ந்த காலத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்த புகழ் போல் எவருக்கும் கிடைத்ததில்லை
    மறைந்த 32ஆண்டுகள் ஆன பிறகும் தினமும் அவருடைய புகழ் வெளிவந்த வண்ணம் இருப்பதை போல் உலகில் எந்த ஒரு நடிகருக்கோ , அரசியல் தலைவருக்கோ கிடைத்ததில்லை .

    70 ஆண்டுகளாக ஒரு நடிகரின் படம் திரை அரங்கில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சாதனையை படைத்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒருவரே.

    அரசியலிலும் தான் தொடங்கிய கட்சி 47 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பது மூலம் உலக அரசியல் வரலாற்றில் தனி முத்திரையை பதித்து விட்டார் நம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் .

    ஏறத்தாழ 70 ஆன்டுகளாக ரசிகர்களை 
    இன்னமும் தன் வசம் ஈர்த்து ரசிகர்கள் கட்டி காத்து வரும் எம்ஜிஆர் மன்றங்கள் 7 தலை முறைகளாக நிலைக்க செய்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் . இந்திய மண்ணிலும் அந்நிய நாட்டு மண்ணிலும் கோடிக்கணக்கான எல்லா மதத்தினரும் எம்ஜிஆர் ரசிகர்களாக வாழ்ந்து கொண்டு வருவது உலக சாதனை.
    .
    எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்தி [1977] அரசியலில் அதிமுக ஆட்சி அமைத்து தமிழக முதல்வராக 10 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் நீடித்து திரை உலகிலும் , ஆட்சியிலும் , அரசியலிலும் உலக அரங்கில் புகழ் பெற்ற மனித நேய தலைவராக எம்ஜிஆர் அவர்கள் புகழுடன் வாழ்ந்தது இன்னமும் மக்கள் இதயங்களில் நிலையாக இருப்பது கண்டு வியந்து நிற்கிறேன்
    என்ன ஒரு அதிசய மனிதர் எம்.ஜி.ஆர்.,
    நிச்சயம் அவர் ஒரு தனிப்பிறவி......... Thanks.........

  10. #2728
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (01/03/20) சத்தியமங்கலம் வீராஸ் அரங்கில் கலைச்சுடர் /கலைவேந்தன் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

  11. #2729
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி பொற்கால ஆட்சியை தந்த பொன்மனசெம்மலின் அரசியல் சாதனைகளை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

    1. பூரண மது விலக்கு திட்டத்தை தொடக்க காலத்தில் அமல் படுத்தினார்.

    2. ஐக்கிய நாடுகள் சபை போற்றி, உலகமே வியந்து பாராட்டிய சத்துணவு திட்டத்தை 01-07-1982 முதல் அறிமுகபடுத்தினார்.

    3. அழகுத் தமிழில் சீர் திருத்த எழுத்துக்களை, 19-10-1978 அன்று நடைமுறைப்படுத்தினார்.

    4. வழி வழியாக அனுபவிக்கப்பட்ட கிராம முன்சீப் பதவியினை ஒழித்து அதற்கு பதிலாக தகுதி மற்றும் திறமையின்
    அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர்களை, தமிழக அரசு ஊழியர்களாக நியமித்தார்.

    5. தன்னிறைவு திட்டம் தொடங்கினார்.

    6. நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரித்தது மட்டுமல்லாமல், முக்கிய நகரங்களை HEAD QUARTERS CITY ஆக மாற்றினார்..

    7. புதிய போக்கு வரத்து கழfங்களை துவக்கி, இன்றைய தினம் தமிழக மூலை முடுக்கெல்லாம், போக்குவரத்து வசதி ஏற்படுத்தினார்.

    குறிப்பாக, கிராமப்புற மக்களுக்கு போக்குவரத்து வசதி அளிக்க, 4316 பேருந்து வழித்தடங்களையும் ஏற்படுத்தினார்.

    8. அதே போன்று, குக்கிராமங்களுக்கெல்லாம் மின்னொளி வசதி அளித்தார்.

    9. காவல் துறைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரிக்கும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தார். (Under Management Concept - It is known
    as DE- CENTRALIZATION)

    10. வீட்டுக்கொரு விளக்கு என்ற திட்டத்தின் அடிப்படையில் இலவச மின்சாரம் அளித்திட்டார்.

    11. நாட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்த விவசாயிfSக்கு, வானம் பொய்த்த போது, வழங்கப்பட்ட மொத்த கடன் தொகையை பெரும் அளவில்
    (ரூபாய் 325 கோடி) தள்ளுபடி செய்தார். இது ஒரு தொடர் நிகழ்வாக நடந்தது. பாசனத்துக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்த 3.31 லட்சம் பம்பு
    செட்டுகளுக்கு புதிதாக மின் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்தார். 10.5 லட்சம் சிறு விவசாயிகள் இதனால் பயன் பெற்றனர்.

    12. பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் முறையை அமல் படுத்தினார்.

    13. சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்திட்டார்.

    14. பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடையும், காலணியும், வழங்க வகை செய்தார்.

    15. இலவச பல்பொடி வழங்கும் திட்டத்தை கொணர்ந்தார்.

    16. விலைவாசி உயர்வில்லாமால், இறுதி நாட்கள் வரை தனிக்கவனம் செலுத்தினார். அதனை தனது முழுக் கட்டுப்பாட்டில்
    வைத்திருந்தார்.

    17. பண்டிகை காலங்களில், கூடுதல் அரிசி, நியாய விலைக் கடைகளில் வழங்கிட உத்தரவிட்டார்.

    18. முதியோருக்கு, இலவச வேஷ்டி, சேலை, மற்றும் பென்சன் (PENSION) வழங்கி சிறப்பித்தார்.

    19. எழுச்சிக் கவிஞர் பாரதி, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயரில் பல்கலைகழகங்களை
    ஏற்படுத்தினார்.

    20. தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில், பல்கலைகழகம் உருவாக்கினார்.

    21. மகளிருக்காக "அன்னை தெரேசா" பல்கலை கழகம், கொடைக்கானலில், நிறுவினார்.

    22. சுய நிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி, அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை
    மேற் கொள்ளச் செய்தார். ஆசிரியர்கள் பலரும் இதன் மூலம், வேலை வாய்ப்பினை பெற்றனர்.

    23. ஏழை மாணவ - மாணவியர் பயன்பெறத்தக்க வகையில், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு
    முறையை அறிமுகப் படுத்தினார்.

    24. கரும்பு சர்க்கரையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையை நாட்டிலேயே முதன் முதலில் நம் தமிழகத்தில், கரூர்
    நகரத்தில் ஏற்படுத்தினார்.

    25. திரையரங்குகளில் COMPOUND TAX முறையை அமல் படுத்தி, தமிழ் திரை உலகினை அழிவிலிருந்து மீட்டார்.

    26. ஆங்கில படங்கள் திரையிடும் தமிழக அரங்குகளில், கட்டாயம் 3 மாதமாவது தமிழ் திரைப்படங்களை காண்பிக்க வேண்டும்,
    என்று உத்தரவிட்டார்.

    27. அரசு அலுவலகங்களில், கோப்புக்களில், குறிப்புக்களை தமிழில் எழுத பணித்தார்.

    28. அரசு நிர்வாகத்தில், அரசியல் குறுக்கீடு இல்லாமல் பார்த்துகொண்டார்.

    29. மின்சார தேவையை கருத்தில் கொண்டு, "குந்தா" போன்ற அனல் மின் நிலையங்கள் அமைத்தார். காற்றாலைகள் அமைத்திட
    அரசு உதவியினை பெருமளவில் வழங்கினார்.

    30. முதன் முதலில் மாநில கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சரவையில் இடம் பெற வித்திட்டார்.

    31. சாதிக் கட்சிகளை ஊக்குவிக்காமல், மக்கள் ஆதரவுடன், அவைகளை தலை தூக்கிடாமல் செய்தார். (உதாரணமாக -
    இந்துக்களில் குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மையோர் வசிக்கும் அருப்புக்கோட்டையில், தானே நின்று
    மகத்தான வெற்றி பெற்றார். அது போன்று நெல்லையில், கிறிஸ்தவ இனத்தை சார்ந்த ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை
    நிற்கவைத்து வெற்றி பெறச செய்தார். அதே போல், பாளையங்கோட்டையில், நாஞ்சில் மனோகரன் அவர்களை வெற்றி பெறச்
    செய்தார். கவுண்டர் இனம் பெரும்பான்மையாக கொண்ட திருப்பூர் தொகுதியில் மணிமாறன் என்பவரை வேட்பாளராக
    அறிவித்து அவரை அமோக வெற்றி பெறச் செய்தார்.. தமிழகத்தில் பல தொகுதிகளில் இதே போன்று, தொகுதிக்கு
    புதியவர்களையும், மிக மிக சாதாரணமானவர்களையும், பெரும்பான்மை இனத்தை சாராதவர்களையும், அடிமட்ட
    தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிற்க வைத்து வெற்றி பெறச் செய்து, ஒரு புரட்சிகரமான சாதனையை
    ஏற்படுத்தியவர் நமது புரட்சித் தலைவர் மட்டுமே) சாதிக்கலவரம் நேரா வண்ணம் அமைதியுடன் மக்கள் வாழ முடிந்தது.)

    32. தமிழ் ஈழத்தில் நடைபெற்ற "இனபடுகொலையை" கண்டித்து, அரசு சார்பில் பொது 'BANDH' நடத்தி மத்திய அரசின் கவனத்தை
    ஈர்த்து, ஒரு தீர்வு காண விதை விதைத்தார்.

    33. தமிழகத்துக்கு கூடுதல் அரிசியும், உணவும் மத்திய தொகுப்பிலிருந்து வழங்குமாறு மத்திய அரசைக் கேட்டு 09-02-1983
    அன்று உண்ணா விரதம் மேற்கொண்டார்.

    34. தெலுங்கு கங்கை திட்டம் கொண்டு வந்து மாநிலத்தில், தண்ணீர் பஞ்சத்தை போக்கினார்.

    35. அண்டை மாநிலமான கர்நாடக முதல்வர்களுடன் (மறை திரு. தேவராஜ் அர்ஸ் மற்றும் குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே
    போன்றோருடன்) நல்லுறவு பூண்டு, காவிரி நீர் பெற்று, விவசாயத்தொழிலை மேம்படச் செய்தார்.

    36. தமிழக மக்களின் நல் வாழ்விற்காக, மத்தியில் ஆட்சி புரிந்த மாற்றுக் கட்சியினருடனும், சுமூக உறவு கொண்டு, மக்கள் நல
    திட்டங்கள் பல கொண்டு வந்தார்.

    37. நாட்டிலேயே மகளிருக்கான காவல் நிலையங்களை தமிழகத்தில் முதன் முதலில் ஏற்படுத்தி, முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

    38. சந்தேக கேஸ் என்கின்ற பிரிவை குற்றவியலில் இருந்து நீக்கினார்.

    39. சைக்கிளில் இருவர் செல்லலாம் என்று அனுமதித்தார்.

    40. விபச்சார வழக்கில் ஆணுக்கும் தண்டனை என்ற சட்டம் கொண்டு வந்து குற்றம் இரு பாலருக்கும் பொதுவானது என்று
    உணர்த்தினார்.

    41. தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற புதிய சட்ட வடிவம் கொண்டு வந்தார்.

    42. "ஹரிஜன்" என்ற சொல்லை விடுத்து, "ஆதி திராவிடர்" என்று மாற்றி அழைக்கச் செய்தார்.

    43. குக்கிராமங்களில் வாழும் மக்களின் நலனுக்காக, மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்றியமைத்து எளிதான போக்கு
    வரத்துக்கு வழி வகுத்தார்.

    44. சித்த வைத்தியத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அதற்கென்று தனி வாரியம் அமைத்தார்.

    45. நலிந்த பிரிவு மக்களுக்காக 3 ஆண்டுகளில் 30 லட்சம் வீடுகள் கட்டிகொடுக்கும் திட்டத்தை அமல் படுத்தினார்.

    46. பத்தாவது வகுப்பு வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 50 நிவாரனப்பணம்
    அளிக்கும் திட்டத்தையும் அமல் படுத்தினார். புதுமுக வகுப்பு (PUC) படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 75 நிவாரணப்பணம்
    அளிக்கும் திட்டத்தையும், அமல் படுத்தின்னார். இதன் மூலம், ஏறத்தாழ 20 ஆயிரம் இளைஞர்கள் இன்றும் பயன் பெற்றுறுக்
    கொண்டிருக்கின்றனர்.

    47. வணிகர்களுக்கு "ஒரு முறை வரி விதிப்பு" திட்டத்தை அமல்படுத்தி வீண் தொல்லைகளிலிருந்து விடுதலை அளித்தார்.

    48. கிராமக் கைவினைக் கலைஞர்களுக்கு இலவசத் தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.

    49. விபத்து மற்றும் இடர் உதவித் திட்டத்தையும் அமல் படுத்தினார். (தற்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே
    இதுதான் - இந்த உண்மை பற்றி சில மாதங்களுக்கு முன் " ஜூனியர் விகடன்" இதழில் வெளியிடப்பட்ட செய்தி கவனத்தில்
    கொள்ளத்தக்கது).

    50. அரசு ஊழியர்களுக்கு, ஈட்டுறுதியுடன் இணைந்த சிறப்பு ஒய்வூதிய திட்டம் (GRATUITY-CUM-SUPERANNUATION SCHEME)
    அறிமுகப்படுத்தினார்.

    51. தொழிளார்களுக்கு (நெசவாளர், தீபெட்டித் தொழிலாளர், பனை ஏறும் தொழிலார் உட்பட, விபத்து நிவாரண திட்டத்தை அமல்
    படுத்தி பின்னர் அதனை விரிவு படுத்தினார்.

    52. மீனவர்களுக்கும், நெசவாளர்களுக்கும், சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.

    53. கட்டிட தொழிலாளர், கிராமக் கை வினைஞர், கை வண்டி இழுப்போர், சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர், போன்றவர்களுக்கு
    ஆயுள் காப்புறுதியும், பணி ஒய்வு பலன்கள் கிட்ட வழி செய்யும் திட்டம் துவக்கினார்.

    54. காவலர்களுக்கு, தனி வீட்டு வசதி கழகம் அமைத்து, அவர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருள் வழங்கும்
    திட்டத்தையும் அமல் படுத்தினார்.

    55. உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தினை துவக்கினார்.

    56. ஆதரவற்ற பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆகியவற்றுடன், ஆதரவற்ற விதவை
    தாய் மார்களின் பெண்களுக்கு, இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணுக்கும் ருபாய் 1,000 வீதம் வழங்கவும் உத்தரவிட்டார்.

    56. விதவை மறுமணம் செய்து கொண்ட 1,500 தம்பதியருக்கு ருபாய் 5,300/- வரை ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

    57. தாழ்த்தப்பட்டோரை, மாற்று இனத்தவர் மணம் புரிந்தவர்களுக்கும் ருபாய் 4,300 வீதம் வழங்க உத்தரவிட்டார்.

    58. பத்தாயிரம் ஏழைத் தாய்மார்களுக்கு உதவ தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

    59. ஏழை விதவை தாய்மார்களின் குழந்தைகள் 15,126 பேருக்கு 1979 முதல் 1983 வரை இலவசமாக பாடப் புத்தகங்களை வழங்கி
    சிறப்பித்தார்.

    60. மனித சேவையில் ஈடுபடுவோர் மற்றும் பணி புரியும் மகளிர்க்கு தங்கும் விடுதிகள் அமைக்கும் திட்டத்தையும் அமல்
    படுத்தினார்.

    61. உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தெய்வம் என போற்றப்படும் நமது உன்னத தலைவர் சங்கம் வளர்த்த கூடல் மாநகராம் மதுரை
    மண்ணில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தி தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்ததும் அல்லாமல் தமிழறிஞர்களை மிகவும்
    கவுரவப்படுத்தினார்.

    62. தமிழறிஞர்கள், திரைப்பட வல்லுனர்கள் மற்றும் நாடக கலைஞர்களை கவுரவிக்கும் விதத்தில், தமிழக அரசு
    சார்பில் "கலைமாமணி" விருது வழங்கிட்டார். அத்திட்டம், இன்றும் தொடர்கிறது.

    63. நக்சலைட்டுகளை அறவே ஒழித்து, தமிழக மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்து, " தமிழகம் அமைதிப்பூங்கா " என்ற
    நற்பெயரை தொடர்ந்திடச் செய்தார்.

    64. ENCOUNTERS இல்லாமல் தமிழகத்தில் ரௌடிசம் (ROWDISM) முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டினார்.

    65. புதிய தொழிற் கொள்கையை ஏற்படுத்தி அதன் மூலம் அந்நிய முதலீடுகளுக்கு அடிகோலினார்.

    66. போக்குவரத்து நெரிசலை தவிர்த்து -

    a). ஆசியாவிலே பெரிய அங்காடி (மலர் அங்காடி, காய்கறி மற்றும் பழ வகை அங்காடிகள் உள்ளடக்கியது) சென்னை
    கோயம்பேட்டில் நிறுவ திட்டம் தீட்டி, அதனை செயல் படுத்த அடிக்கல் நாட்டினார். 120 ஹெக்டேர் நிலபரப்பில், சுமார்
    3000 கடைகளை கொண்டது இந்த கோயம்பேடு வணிக வளாகம்.
    b) சென்னையிலிருந்து வெளியூருக்கு செல்லும் பேருந்துகளையும் கோயம்பேட்டிளிருந்து இயக்கிட அடிக்கல் நாட்டினார்.
    c) சென்னை பெரு நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், WHOLESALE STEEL MARKET மிகப் பெரிய அளவில், சென்னை
    திருவொற்றியூரை அடுத்துள்ள சாத்தாங்காடு என்ற இடத்தில் நிறுவினார்.
    d) உள்வட்ட சாலையை (INNER RING ROAD) ஏற்படுத்தினார்.

    67. சென்னை புறநகரில் TAMIN என்றழைக்கப்படும் தமிழ்நாடு மினெரல்ஸ் (TAMIL NADU MINERALS) தொழிற்சாலையை நிறுவினார்.

    68. சென்னையில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை நவீன கருவிகளுடன் போதிய வசதிகளுடன், புதிய கட்டிடமாக
    உருப்பெறச் செய்தார்.

    69. தமிழகமெங்கும், கிராம மக்களின் வசதிக்காக, அதிக எண்ணிக்கையில், சுகாதார மையங்களை அமைத்தார். முக்கிய நகர
    மருத்துவமனைகள விரிவாக்கம் செய்தார்.

    70. கடும் மழை காரணமாக, சென்னையில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கினை தடுக்கும் விதத்தில், பெயர்பெற்ற "கூவம்"
    நதியின் கரைகளை உயர்த்தி, அதன் ஆழத்தை அதிகப்படுத்தி, தூர் வார ஏற்பாடு செய்தார். சென்னை கோட்டுர்புரத்தில், அடுக்கு
    மாடி குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்த போது, முழங்கால் அளவு நீரில், அதிகாரிகளுடன் பார்வையிட்டு, மக்களின்
    குறைகளை கேட்டறிந்து, அவர்களை தேற்றினார். பொதுமக்களை நேரடியாக சந்தித்த முதல்வர் என்று இப்போதும்
    போற்றப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    71. சென்னை திருவல்லிக்கேணி யில் அமைந்துள்ள "அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலின்" குளத்தை, பக்தர்களின்
    கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து, நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த தேரோட்டத்தை தொடக்க ஆவன செய்தார்.

    72. முறையான நிர்வாகமில்லாமல், நன்கு பராமரிக்கப்படாமல், பாழடைந்த புராதன கோயில்களை இந்து அறநிலையத்துறையின்
    கீழ் கொண்டுவந்து, அவைகளை சீரமைத்தார்.

    73. எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக பாவிக்காமல், அவர்களின் யோசனைகளையும், கருத்துக்களையும் கேட்டறிந்து, மாற்றுக்
    கட்சியினரையும் மதிக்கும் நற்பண்பாளராக திகழ்ந்து நல்லாட்சி நடத்தினார்.

    74. நாட்டின் முன்னேற்றத்துக்காக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நடைமுறைப்படுத்திய இருபது அம்ச திட்டத்தின்
    ஒரு அம்சமான "கொத்தடிமைத்தனம் ஒழித்தல் " திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினார்.

    75. பேரறிஞர் அண்ணா அவர்களின் பவள விழா, மூதறிஞர் இராஜாஜி மற்றும் எழுச்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின்
    நூற்றாண்டு விழாவினை தமிழக அரசு சார்பில் கொண்டாடி, அவர்களின் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார்.

    76. அரசு விழாக்களில் " ஆடம்பரத்தை " தவிர்த்து, சிக்கனத்தை கடைப்பிடித்தார்.

    77. தமிழக அரசின் சார்பில் முதல்வருக்குரிய வாகன வசதியை தவிர்த்து, சொந்தக் காரிலேயே பயணித்து, அமைச்சர்கள்
    அனைவருக்கும் எளிமையின் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து, அவர்களுக்கும் முன்னோடியாக விளங்கினார்.

    78. தன்னை அதிகமாக எதிர்மறை விமர்சனம் செய்த கண்ணதாசன் அவர்களை, அரசவைக் கவிஞராக 28-03-1978 அன்று நியமனம்
    செய்து, பகைவனுக்கும் அருளும் பண்பாளர் என பெயர் பெற்று, அதிகாரிகளும், அமைச்சர்களும், விருப்பு வெறுப்பு இன்றி செயல்
    பட வேண்டும் என்று அதன் மூலம் உணர்த்தினார்.

    79. குடிசை வாழ் மக்களுக்கு "இலவச தொலைக்காட்சி" வழங்கும் திட்டத்தினை தொடங்கி, அதன் ஒரு பகுதியாக 02-07-1985
    அன்று சென்னை துறைமுகம் பகுதியில், குடிசைவாசிகளுக்கு வழங்கிட்டார்.

    80. தொழிலார் நல அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிலாளர் நல வாரியம் மூலம், தொழிலாளர்கள் குறைகள் அவ்வப்போது
    களையப்பட்டு, தொழிற்சாலைகளில், தொழில் அமைதி நிலவ தனி அக்கறை எடுத்து, கிளர்ச்சி, போராட்டங்கள், வேலை
    நிறுத்தமின்றி, உற்பத்தி திறன் பாதிக்கப்படா வண்ணம், கவனமுடன் செயலாற்றினார்.

    81. 1977ம் ஆண்டு முதல் 1983 வரை, பொன்மனசெம்மலின் பொற்கால ஆட்சிக் காலத்தில் ---

    தமிழகத்தில் அமைக்கப்பட்ட பெரிய மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளின் எண்ணிக்கை 449 ஆகும். இவற்றின் மொத்த
    மூலதனம் அந்த கால கட்டத்தில் 850 கோடியாகும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு
    பெற்றனர்.

    82. 1979ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 5.2 சதவிகிதம். இது 1982,ம் ஆண்டில் 12.1 சதவிகிதமாய் உயர்ந்தது. இது நம்
    தலைவரின் மகத்தான சாதனை.

    83. இது தவிர, மத்திய அரசின் நிதியுதவி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே 3 வது
    இடத்தை பெற்றது.

    84. 1977-78ல் (அவர் ஆட்சி பொறுப்பு ஏற்ற புதிதில்) தமிழகத்தில் 2424 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி 1983-84 ம்
    வருடத்தில் 3344 மெகா வாட்டாக இருந்தது.

    85. 20,000 இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க நிதி உதவி அளிக்கவும் உத்தரவிட்டார் உன்னதமான நம் உத்தமத் தலைவர்.

    86. கடுமையான வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட, ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் அரிசி
    விலையை கிலோ ஒன்றுக்கு ரூ. 1.75 ஆக குறைக்க உத்தரவிட்டார். அதனுடன் மாதம் ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்ப
    அட்டைக்கும் 20 கிலோ அரிசி வழங்க ஏற்பாடு செய்தார்.

    இது தவிர, ஒரு கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

    87. அரசு ;அலுவலர்கள் வருகைப் பதிவேட்டிலும், தமிழில் தான் கையொப்பமிட வேண்டுமென்று ஆணையிட்டார்.

    88. பெயர்ப்பலகை, ,விளம்பரப்பலகை, ஆகியவற்றில் முதல் பெயர் தமிழாகத்தான் இருக்க வேண்டும், அதன் கீழ் வேறு
    மொழிகளில் இடம் பெறலாம் என்று ஆணை பிறப்பித்தார்.

    89. தமிழ் சான்றோர்களின் பிறந்த நாள் விழாக்கள், நூற்றாண்டு விழாக்கள் ஆகியவற்றை அரசே சிறப்பாக கொண்டாட வழி
    வகுத்தார்.

    90. வறுமையில் வாடும் தமிழ் புலவர்கள் வாட்டமுறக்கூடாது என்ற நோக்கத்துடன் தமிழறிஞர் உதவித் தொகை என்ற பெயரில்
    அவர்களுக்கு மாதந்தோறும் உதவிப்பணம் வழங்க ஏற்பாடு .செய்தார்.

    91. திருக்குறள் நெறி பரப்பப்பாடல் வேண்டும் என்ற வகையில் குறள் நெறி பரப்பு மையத்தை உருவாக்கினார். திருக்குறள் பரப்பும்
    தொண்டில் ஈடுபட்ட பெருமக்களில் ஒருவருக்கு திருவள்ளுவர் திருநாளன்று "திருக்குறள் விருது" வழங்க ஏற்பாடு செய்தார்.
    20,000/- ரூபாய் ரொக்கத் தொகை கொண்டது இவ்விருது.

    92. தமிழகத்தின் பழங்கலைகளைக் காப்பதற்காக பழங்கலை இயக்ககம் (DIRECTORATE) ஒன்றை உருவாக்கினார்.

    93. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறந்த கவிஞருக்கு தங்கச் சங்கிலியும், 10,000 ரூபாய் தொகையும்
    கொண்ட பாவேந்தர் விருது வழங்கும் வழக்கத்தை உருவாக்கினார்.

    94. சிறந்த எழுத்தாளருக்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் திரு.வி.க. விருது வழங்க ஏற்பாடு செய்தார்.

    95. மதுரையில் வாழ்ந்த சங்க காலப் புலவர்களை கவுரவிக்கும் பொருட்டு, அவர்களை நினைவு கூறும் வண்ணம், அவர்களது
    பெயர்கள் பொறித்த நினைவுத்தூணையும் மதுரையில் நிறுவினார்.

    96. மேலும், அதே மதுரை மாநகரில் தமிழன்னை சிலையையும், நிறுவினார்.

    97. தமிழகத்தின் இசை, நடனம் ஆகிய கலைகளுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் இசைக் கலைஞர்கள், நடனக்கலைஞர்கள்
    சிலரை அரசவைக்கலைஞர்களாக நியமித்தார்.

    98. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சமூக சீர்திருத்த பணியினை நினைவு கூர்ந்து அவர் பிறந்த
    ஈரோடு மாநகரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நவீன வடிவத்தில் நிறுவி அதை மற்ற மாவட்ட தலைநகர ஆட்சியர்
    அலுவலகங்களுக்கு முன்மாதிரியாக திகழ வைத்தார்.

    99. காவலர்கள் சீருடையில் மாற்றங்கள் கொண்டு வந்தார் .

    100. சென்னை மாதவரத்தில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவ அடித்தளமிட்டதுடன் சென்னை மாநகர மக்களுக்கு பால்,
    பாக்கெட்டுகளில் கிடைக்க வழி செய்தார்.......... Thanks.........

  12. #2730
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று முதல் (01/03/20) மேட்டுப்பாளையம் அபிராமியில் நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஆர்ப்பரித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை ' தினசரி 4காட்சிகள் நடைபெறுகிறது .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •