Page 302 of 402 FirstFirst ... 202252292300301302303304312352 ... LastLast
Results 3,011 to 3,020 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3011
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆர். எங்கள் அழைப்பின் பேரிலேயே இலங்கை வந்தார். கொழும்பில் அவர் எங்கள் வீட்டில் தங்குவதாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான வெறிகொண்ட ரசிகர்கள் வீட்டை முற்றுகையிட்டதால்தான் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்று அவரை கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு மாற்றினோம்

    தமிழ்திரையுலகிலும், தமிழ்நாட்டு அரசியலிலும் அசைக்க முடியாத சண்டமாருதத் தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர் 1966ல் இலங்கைக்கு வந்தார். ஒரு கலக்கு கலக்கி விட்டே சென்றார். எம்.ஜி.ஆரின் வருகை இன்றளவும் பேசப்படும் விஜயமாகவே உள்ளது. அவர் எங்க வீட்டுப்பிள்ளை கொழும்பில் திரையிடப்படும் சமயத்திலேயே சரோஜா தேவியுடன் வருகைத் தந்தார். அவர் தமது குடும்ப அழைப்பின் பேரிலேயே வந்ததாகவும் தமது வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் அக்காலத்தை சுவையுடன் நினைவு கூருகிறார் பட்டக்கண்ணு நகைமாளிகை அதிபார் எஸ்.ஏ. தியாகராஜா

    தமது எழுபதாவது வயதிலும் இருபது வயது இளைஞர் போல பம்பரமாக சுழன்று பணியாற்றும் அவர் எம்.ஜி.ஆர் என்ற அந்த மந்திரச் சொல்லைக் கேட்டதும், மெய்சிலிர்த்து, புன்னகைத்தவர் பேசத் தொடங்கினார்:

    அது ஒரு காலைவேளை. சென்னையிலிருந்து இரத்மலானை வந்த விமானத்தில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் வந்து இறங்கினார்கள். அவர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்த பெருமை எங்களையே சாரும். இரத்தமலானை விமான நிலையத்திலேயே பெரும் திரளான கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரை பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு கொழும்பு புதிய செட்டித் தெருவில் அமைந்திருக்கும் எமது இல்லத்திற்கு வந்தபோது நேரம் பிற்பகலை நெருங்கி கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் முழுவதும் எங்கள் வீட்டில் தங்கியிருப்பதாகவே
    முடிவு செய்யப்பட்டிருந்தது. அன்று பகல் உணவுக்கு எம்.ஜி.ஆருக்கு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக சமைக்கப்பட்ட'அருக்குளா' (தோரா அல்லது Seer fish) மீன் குழம்பு பரிமாறப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு அருக்குளா மீன் சுவை நன்றாகவே பிடித்துப்போய்விட்டது. நாக்கை சப்புகொட்டி அந்த மீன் கறி அற்புதமாக இருந்தது என்று கூறியது இன்றைக்கும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு காடை, கவுதாரி, பறவை உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் எங்கள் வீட்டு 'அருக்குலா' மீனை சுவைத்து சாப்பிட்டார்.

    எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டுக்கு வந்த செய்தி கொழும்பில் பரவத் தொடங்கியது. அப்போது புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை பகுதிகளில் ஏராளமான தமிழர்கள் வசித்து வந்தனர். நேரம் செல்ல செல்ல எம்.ஜி.ஆர் பட்டக்கண்ணு ஆசாரி வீட்டில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி காட்டுத்தீப்போல பரவத் தொடங்கவே, எங்கள் வீட்டின் முன்னால கூட்டம் கூடத்தொடங்கியது...

    ஆரம்பத்தில் நான் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போதுஒரு சில தலைகளையே கண்டேன். அரை மணி நேரத்தின் பின் பெருந்திரளான கூட்டம் அந்த தெரு முழுவதும் அலைமோதத் தொடங்கியது. ஆண்களும். பெண்களும் சரிசமமாக கூட்டத்தில் தெரிந்தார்கள்.

    வெளியே பூட்டப்பட்டிருந்த பிரதான கேட்டை தட்டிக்கொண்டு கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

    "தலைவா வெளியோ வா... வாத்தியாரே நீ எங்கே இருக்கே...? என்று அவர்கள் போட்ட கூச்சல் அந்த பிரதேசத்தை அதிர வைத்தது. நிலமை மோசமாவதை புரிந்துக்கொண்ட எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு மேல் மாடியில் வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்தார்... தெய்வத்தை நேரில் கண்டதுபோல பேரிரைச்சல் எழுந்தது.

    திரையில் பார்த்த தங்கள் கனவு நாயகன் நிஜமாக எதிரே தோன்றியதால் மெய்சிலிர்த்துப்போன ரசிகர்கள் செய்த ஆர்பரிப்பு அடங்குவதற்கு ரொம்ப நேரம் ஆனது. அதன் பிறகு எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்தார். இது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தினாலும் இந்த சனக்கூட்டம் எம்.ஜி.ஆருக்கு பொருட்டாக இருக்கவில்லை.

    இரவானதும் ரசிகர்கள் போய்விடுவார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. தலைவா, தலைவா, என்று வெளியே அவர்கள் போட்ட சத்தம் விடிய விடிய கேட்டுக்கொண்டிருந்தது. காவலுக்கு பொலிஸார் நிறுத்தப்பட்டனர்.

    அந்த சத்தத்தில் எம்.ஜி.ஆர் எப்படி தூங்கினாரோ தெரியவில்லை
    அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் கேட்டை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் வீட்டிற்குள் வர முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரும் களைத்துப் போனார்கள். எங்கள் வீட்டின் மதில் சுவரை கூட்டம் சேதப்படுத்த ஆரம்பித்தது. ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. எப்போது வேண்டுமானாலும் கேட்டையும் மதிலையும் உடைத்துக் கொண்டு வீடடினுள் வரலாம் என்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்தோம். இதையடுத்து எம்.ஜி.ஆரை கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்க வைப்பதே சரியானது என்று முடிவு செய்து ஹோட்டலுடன் தொடர்பு கொண்டார் என் அண்ணன் சற்குருநாதன்.

    ஆனால் மக்கள் கூட்டம் வீட்டை சுற்றி சூழ்ந்திருக்க எம்.ஜி.ஆரை எப்படி வெளியே அனுப்புவது? என்ற குழப்பம் வேறு. அதைச் சமாளிக்க, எம்.ஜி.ஆர் செல்வது போல ஒரு காரை சூழ்ந்து கொண்டு கூச்சல் போட, பொலிஸார் துணையுடன் அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது. எம்.ஜி.ஆர் சென்று விட்டார் என்று நினைத்து கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று விட, எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் பிறகு எந்த வித பிரச்சினையும் இன்றி கோல்ஃபேஸ் ஹோட்டலுக்கு சென்றார்கள்.

    எம்.ஜி.ஆர் கோல்ஃபேஸ் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என்ற சேதி பரவியதும் அங்கேயும் பெருங்கூட்டம் இரவும் பகலும் தவம் கிடந்தது. அந்த ஹோட்டலில் பணியாற்றிய லிப்ட் ஒபரேட்டர் ஒருவர், தன்னுடைய முப்பத்தைந்து வருட அனுபவத்தில் இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லை என்று என்னிடம் கூறினார்.

    விமானத்தில் வரும்போது எம்.ஜி.ஆர் மக்கள் நலம் பற்றியே எங்களுடன் பேசிக்கொண்ட வந்தார். குறிப்பாக மக்களுக்கு பால் சப்ளை எப்படி நடைபெறுகிறது என்று வினவினார்.

    சென்னையில் வைத்து என்னிடம் அவர் ஒரு சிறு பெட்டியைக்கொடுத்து வைத்திருக்கும்படி சொன்னார். எங்கள் வீட்டுக்கு வந்ததும் பெட்டியை அவரிடம் கொடுத்தேன். பிறகு அந்தப் பெட்டியை எம்.ஜி.ஆர் திறந்தார். என்ன ஆச்சரியம்! அந்த பெட்டி முழுவதும் இந்திய கரன்சிகள் கட்டுக்கட்டாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரத்மலானையில் எம்.ஜி.ஆருக்கு ராஜமரியாதை கொடுத்து அனுப்பியதால் தப்பினோம். அந்தக்காலத்தில் வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவது பெரிய குற்றம்.

    சென்னையில் 'அரசிளங்குமாரி' படப்பிடிப்பால் எம்.ஜி.ஆர் இருந்த போதுதான் முதன்முதலாக எம்.ஜி.ஆரை நானும் என் குடும்பத்தினரும் சந்தித்தோம். 1961ம் ஆண்டில் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. நடிகர் டீ.எஸ். துரைராஜா எம்.ஜி.ஆருக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.ஜி.ஆர் எங்கள் குடும்ப நண்பரானார். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனாக இருந்த அப்புவோடு நான் கிரிக்கெட் விளையாடுவேன். அந்தளவிற்கு அவர்களோடு நெருக்கம். அப்பு எம்.ஜி.ஆரை சேச்சா என்றுதான் அழைப்பார். அதனால் நானும் எம்.ஜி.ஆரை சேச்சா என்றே அழைத்தேன். அவர் என்னை தியாகு என்று அழைப்பார்.

    எம்.ஜி.ஆர் அப்போது மதநம்பிக்கயற்றவராக இருந்தார். ஏனெனில் அவர் அண்ணாதுரையின் சீடர். இருந்தபோதும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையோடு வாழ்ந்தார். கொழும்புக்கு வந்தபோது நாங்கள் கதிர்காம கந்தனுக்காக செய்த வேல் ஒன்றை எம்.ஜி.ஆரிடம் கொடுத்து கதிர்காமத்திற்கு காணிக்கையாக அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். எங்களுக்காக அவர் அதைச் செய்தார்.

    எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டை விட்டுப்புறப்படும்போது "உங்க வீட்டு அருக்குலா மீன் குழம்பு ருசி" என்று சொல்ல மறக்கவில்லை. கோல்ஃபேஸ் ஹோட்டலில் இருந்தபோது அவருக்கான பசும்பால் எங்கள் வீட்டில் இருந்துதான் அனுப்பிக்கொண்டிருந்தோம்.

    எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தபோது அவரைப் பார்க்க நான் சென்றிருந்தேன். அப்போது மட்டக்களப்பு எம்.பி. ராஜதுரை அங்கே இருந்தார். அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்கள். ஆனால் எனக்கு அனுமதி தந்தார்கள். கட்டுப்போட்ட நிலையில் அவரைப்பார்க்க எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது.

    எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின்னர் அவரும் ரொம்பவும் பிஸியாகி விட்டார். என் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வந்து வாழ்த்திவிட்டு சென்றார் என்று எம்.ஜி.ஆர் நினைவுகளில் தியாகராஜா மூழ்கிப்போனார்.
    வாட்ஸ் அப்பில் வந்த பதிவு........ Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3012
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். ஆட்சி சாதனைகள்- I

    # சத்துணவு திட்டம்(01-07-1982 முதல் அமுல்படுத்தப்பட்டது.

    # பெரியார் சீர்திருத்த எழுத்துக்கள அமுலாக்கம்

    # கிராம நிர்வாக அலுவலர்கள் பதவிகள் உருவாக்கம்
    4கிராம தன்னிறைவு திட்டம் தொடக்கம்

    # பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தலைவர்கள் பெயர்கள் சூட்டப்பட்டன.

    # புதிய போக்குவரத்து கழகங்கள் உருவாக்கப்பட்டு 4316 புதிய பேருந்து வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

    # குடிசைகளுக்கு இலவச மின் வசதி அளிக்கப்பட்டது.

    # காவல்துறைகள் பிரிக்கப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

    # பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் அமுல்படுத்தப்பட்டது.

    # பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் காலணிகள் வழங்கபட்டன.

    # கரூர் அருகே புகளூரில் நாட்டிலேயே முதல் முதலாக கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்பட்டது.

    # சிறு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தார்.

    # அரிசியின் விலையை தன் ஆட்சி முழுவதும் கட்டுபாட்டில் வைத்திருந்தார்.

    # அனைத்து பொருள்களின் விலைவாசியும் கட்டுபாட்டில் இருந்தன.

    # பண்டிகை காலங்களில் கூடுதல் அரிசி நியாயவிலைக்கடைகளில வழங்கபட்டன.

    # பாரதி பாரதிதாசன் அண்ணா பெரியார் காமராஜர் பெயர்களில் பல்ககலைகழகங்கள் உருவாக்கப்பட்டன.

    # நாட்டிலேயே முதல் முறையாக அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.

    # முக்கியமாக தன் பெயரில் எவ்வித திட்டத்தையும் ஆரம்பிக்கவில்லை.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைகழகம் தொடங்கப்படுவதற்கு முன்னரே மறைந்து விட்டார்.

    # தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சை மாநகரில் தனி பலகலைகழகம் கண்டார்.

    # மகளிருக்கென அன்னை தெரசா பெயரில் கொடைக்கானலில் தனி பல்ககைழகம் கண்டார்.

    # பொறியியல் கல்வியில் பெரும் புரட்சியாக தமிழ்நாட்டில் சுயநிதி கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கி அதன் மூலம் எண்ணற்ற மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பினை மேற்கொள்ள செய்தார்.இதன் மூலம்ஆசிரியர்கள் பலரும் வேலை வாய்ப்பினை பெற்றனர்.

    # ஏழை மாணவ மாணவியர் பயன் பெறும் வகையில்பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் நுழைவுத் தேர்வினை அறிமுகப்படுத்தினார்.

    # திரையரங்குகளில் compound Tax முறையை அமல்படுத்தி திரை உலகினருக்கு உதவினார்.

    # அரசு அலுவலகங்களில் கோப்புகளில் குறிப்புகளை தமிழில் எழுதப்பணித்தார்.

    # அரசு நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.

    # தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக மாநிலக்கட்சியினைச் சார்ந்த பாராளுமன்ற உறுபபினர்கள்(சத்தியவாணி முத்து,பாலாபழனூர்) மத்திய அமைச்சரவையில் இடம் பெறச்செய்தார்.

    # தமிழகத்தின் பல தொகுதிகளில் புதியவர்களையும் சாதரணமானவர்களையும்,அடிமட்ட தொண்டர்களையும் வேட்பாளர்களாக நிறுத்தி வெற்றிபெறச்செய்து M.L.A. M.P.ஆக்கி அழகு பார்த்தார்.

    # தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து தீர்வுகள் காண முயற்சிகள் எடுத்தார்.

    # தமிழகத்துக்கு கூடுதல் அரிசி மத்திய தொகுப்பிலிருந்து வழங்க வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.

    # தெலுங்கு கங்கை திட்டம் கொண்டுவந்து சென்னை நகரின் தண்ணீர் பஞ்சம் போக்கினார்.

    # நலிந்த பிரிவு மக்களுக்காக 30 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.

    # பத்தாம் வகுப்பு மற்றும் புதுமுக வகுப்பு (பி.யூ.சி) படித்தவர்களுக்காக மாதாந்திர நிவாரணம் அளிக்கும் திட்டத்தை அமுல்படுத்தினார்.

    # வணிகர்களுக்கு"ஒரு முறை வரி விதிப்பு " திட்டத்தை அமுல்படுத்தினார்.

    # கிராம கைவினைக் கலைஞர்களுக்கு இலவச தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தை துவக்கினார்.

    # விபத்து மற்றும் இடர் உதவித்திட்டத்தையும் அமுல்படுத்தினார்.(இப்போதைய 108 ஆம்புலன்ஸ் திட்டத்தின் முன்னோடியே இதுதான்.இந்த தகவல் பல மாதங்களுக்குமுன் ஜூனியர் விகடன் இதழில் வெளியிடப்பட்ட செய்தியாகும்.)

    # நெசவாளர்,தீப்பெட்டி தொழிலாளர்,பனை ஏறும் தொழிலாளர் இவர்களுக்கான விபத்து நிவாரணத்திட்டத்தை அமுல்படுத்தி பின்னர அதனை விரிவு படுத்தினார்.

    # மீனவர்களுக்கும் நெசவாளர்களுக்கும் சிறப்பு வீட்டு வசதி திட்டம் ஏற்படுத்தினார்.

    # கட்டிட தொழிலாளர் கிராமக் கைவினைஞர் கை வண்டி இழுப்போர் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் போன்றவர்களுக்கு ஆயுள் காப்புறுதியும் பணி ஓய்வு பலன்கள் கிட்டவும் திட்டம் துவக்கினார்.

    # காவலர்களுக்கு தனி வீட்டு கழகம் அமைத்து அவர்களுக்கு மலிவு விலையில் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் துவக்கினார்.

    # உலக வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் பயிற்சி வழங்கும் திட்டத்தை துவக்கினார்......... Thanks.........

  4. #3013
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவரைப் பற்றி பேரறிஞர் அண்ணா போற்றுவது...

    M.G.R என்பது தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துகள்...

    ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம்...

    சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்...

    தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு.அவருக்கே அமைந்த வசீகரம்...

    இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம்...

    ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்?

    இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர்...

    அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்...

    ‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந்தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’

    எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது....

    உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார்...

    கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்...

    பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,

    ‘அறிந்ததனை அறிந்தோர்க்கு
    அறிவிக்கும் போதினிலே
    அறிந்ததுதான் என்றாலும்
    எத்துணை அழகம்மா? என்று
    அறிந்தோரையும் வியக்க வைக்கும்
    அருங்கலையே கவிதையாகும்’

    ... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று...

    தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார்...

    ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா...!!!

    மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது...

    இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா...!!!......... Thanks.........

  5. #3014
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'நாடோடி' என்ற படத்தில் ஒரு காட்சியில் பணியாளர்கள் தங்கள் எஜமானர்
    எம்.ஜி.ஆரைக் காண வருவர். சமதர்மம் பேசும் அவரிடம், "நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள்" என்பர். அதற்கு
    எம்.ஜி.ஆர்., "நீங்களெல்லாம் வாழ்த்தப்பட்டவர்கள்" என்பார். அப்படிப்பட்டவர்களின் தலைவர் டாக்டர்
    பி.ஆர்.அம்பேத்கர்.

    அப்படி சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட,
    அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்து விடுவிக்க வந்த ஒரே தலைவர் அம்பேத்கர் மட்டுமே. அவரைப்பின்பற்றி அடித்தட்டு
    மக்களுக்காக பாடுபடுகின்றவர் எவருமில்லை.

    நேற்று அம்பேத்கரின் பிறந்த நாள்.

    Image by Mr Ponvannan

    Ithayakkani S Vijayan........ Thanks...

  6. #3015
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் காட்சி அமைப்புகள்...

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படங்கள் இந்தக் காலத்திலும் மக்களால் ரசிக்கப்படுகின்றன...

    அதற்கு காரணம், அவர் படங்களின் விறுவிறுப்பான கதையமைப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், பாடல்கள் மட்டுமின்றி; படத்தை உருவாக்குவதில் சிறிய விஷயங்களில்கூட அவர் கவனம் செலுத்தியதுதான்...

    காட்சிகளை அவர் படமாக்கியிருக்கும் விதமும் அதன் அழகும் படத்தோடு நம்மை கட்டிப்போடும்...

    ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமே பிரம்மாண்டமான தயாரிப்பாகும்.படம் வெளியானது 1973-ஆம் ஆண்டு...

    தமிழ் திரைப்படங்களில் தாயைப் பற்றிய பாடல் என்றாலே சோகம்தான். ஆனால், தாயை போற்றும் பாடலையும் உற்சாகமாக பாடவைத்தது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ‘அடிமைப் பெண்’ படம்...

    ‘தாயில்லாமல் நானில்லை...’ பாடலை எப்போது கேட்டாலும் தாயின் மீது பரவசம் கலந்த பக்தி ஏற்படும்...

    இந்தப் பாடலில், தாயன்பை விளக்கும் காட்சி ஒன்று ரசிக்க வைக்கும். எந்த உயிரினமாக இருந்தால் என்ன? தாய்ப்பாசம் பொதுதானே? ஒரு பறவை தனது கூட்டில் குஞ்சுகளுக்கு இரையூட்டும்...

    இது ஸ்டாக் ஷாட் போலிருக்கிறது, இடையில் சொருகியிருக்கிறார்கள் என்று நினைத்தால், கேமரா லாங் ஷாட்டில் வரும்போது பறவைக் கூட்டின் அருகே தலையைக் குனிந்து தலைவர் பார்த்துக் கொண்டிருப்பார்...

    காத்திருந்து இந்தக் காட்சியை அவர் படமாக்கியிருக்கிறார் என்பது புரியும்...

    ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில், இடம்பெற்ற ‘அழகெனும் ஓவியம் இங்கே...’ பாடல் தேவகானமாய் ஒலித்து நம்மை சொக்க வைக்கும்...

    பாடலின் ஒரு காட்சியில் கதவை மூடியபடி, நம்மை நோக்கி எம்.ஜி.ஆர். வருவார். பார்த்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென நம்மிடமிருந்து எதிர்திசையில் நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை நோக்கிச் செல்வார். அப்போதுதான் நமக்கு புரியும்; முதலில் எம்.ஜி.ஆர். நம்மை நோக்கி வந்த காட்சி, கண்ணாடி யில் தெரிந்த அவரது பிம்பம் என்று...

    இதில் விசேஷம் என்னவென்றால், காட்சியைப் படமாக்கிய அதே நேரம், அந்தப் பெரிய கண்ணாடியில் கேமரா தெரியாதபடி ஆங்கிளை அமைத்திருப்பார்...

    இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்............ Thanks.........

  7. #3016
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அது 1974.இயக்குநர் ஸ்ரீதர் அவர்கள் பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கி மிக*சிரமத்தில் உழன்ற* வருடம்.
    திரையுலகில் அப்போது அறுத்த கைக்கு யாரும் சுண்ணாம்பு கூட* தரமாட்டார்கள். கையறு நிலையிலிருந்த அவரை நோக்கி ஒரு சிவந்த கை உதவிசெய்ய நீட்டப்பட்டது.அஃது நமது மனிதபுனிதர் எம்ஜிஆர் அவர்களின் வள்ளல் கை!

    கையை இறுகப் பிடித்துக்கொண்ட* ஸ்ரீதர் 'உரிமைகுரல்' படத்தின் முதல் காட்சியை இப்படி ஆரம்பித்திருப்பார்,

    கீழத்தெரு பெண்ணை வில்லன் நம்பியார் ஆள்வைத்து கடத்திவர சொல்லியிருப்பார்.அவரின் அடியாட்களிடமிருந்து அப்பெண்ணை மீட்டு வீட்டில் கொண்டு விடுவதற்காக

    'எந்த ஊர்மா நீ? வாம்மா தங்கச்சி வண்டில ஏறு' என்பார் தலைவர்.

    'சாமி நாங்க* கீழ்ஜாதி,நீங்க மேல்ஜாதி உங்க வண்டில எப்படி நான்' என்று தயங்குவார்.

    அப்ப நம் தலைவர் சொல்லுவார் 'எனக்கு தெரிஞ்ச ஒரே ஜாதி மனித ஜாதி மட்டும் தான்மா நீ வண்டில ஏறுமா!'

    ஏறினார் இயக்குநரும் படத்தின் வெள்ளிவிழா மேடையில்!

    பசுமையான,கண்களுக்கு இதமான,பாசனவசதி பெறும் நெல்வயல்கள் அமையப்பெற்ற கிராமம்.
    அதில் ஒற்றை குதிரை வண்டியில் சவாரி செய்பவர்.சிவப்புச் சட்டை,தங்கச்செயின் அணிந்திருக்கும் கதாநாயகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.
    பிறந்தநாள் கொண்டாடினால் புது பட்டுஜரிகை வேட்டி, சட்டை அணிந்துகொண்டு அண்ணன், அண்ணியிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொள்ளும் அளவு அண்ணன்-தம்பி பாசம்.

    அவரின் உரிமைப்பெண்ணாக லதா!
    முதலில் குறும்புகளாக நகரும் காட்சிகள் அவர்களின் திருமணத்திற்கு பின் பாகப்பிரிவினை,வீட்டை இரண்டாக பிரிப்பது என்று தடம் மாறும்.
    பெண் கதாபாத்திரத்திற்கு சமமான ஸ்கீரின் ஸ்பேஸ் தந்திருப்பார் எம்ஜிஆர் அவர்கள்.'ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா' என்ற பாடலும் பெண்களே நிலத்தை ஏர்மாடு கொண்டு உழவு செய்யவருவதுமே உதாரணங்கள்!

    எம்.எஸ் விஸ்வநாதன் அவர்களின் இன்னிசையில் 'நேத்து பூத்தாலே ரோஜா மொட்டு' 'மாட்டிக்கிட்டாரடி மயில காளை' 'பொண்ணா பொறந்தா ஆம்பிளைகிட்ட*' ஆகியவை இன்றைய பென் டிரைவ் யுகத்திலும் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மண்டபத்தில் வாழ்த்து கீதமாக ஒலித்துகொண்டிருக்கிறது!

    படத்தில் அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட சிறுவிரிசல் முடிந்து, வாங்கிய கடனை அடைத்து, உரிமையான நிலத்தை ஏலத்திலிருந்து மீட்கிறார் தலைவர்.

    நிஜத்தில் இறைவன் அருளால்,மக்களின் அன்பால்,தமிழகத்தின் உரிமைக்காக மூன்றுமுறை முதல்வராக குரல் கொடுத்தவர் தான் நம் தலைவர்.
    இன்றும் அவர் தொடங்கிய இயக்கம் தான் ஆசியுடன் நடக்கிறது என்றால் அப்படிப்பட்டவரின் ஆன்மா இன்றும் நம்மை பிரியவில்லை என்றே அர்த்தம்.

    தலைவர் எம்ஜிஆரின் ஆசிர்வாதமிருந்தால் இன்று ஒரு ஒன்றியப் பகுதிக்கு மட்டும் உரிமைக்குரல் தருபவர்கூட* நாளை ஒரு தொகுதி முழுவதும் அதன் உரிமைக்காக* குரல் தர முடியும்!

    அப்பேற்பட்ட தலைவர் எம்ஜிஆரின் 'உரிமைகுரல்' என்றைக்கும் ஓங்கும்!...ஒலிக்கும்!...... Thanks...

  8. #3017
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆரின் திரைப்படங்கள் மறு வெளியீட்டிலும் மகத்தான சாதனை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும் குறிப்பாக ஒரு சில படங்கள் எப்போது திரையிட்டாலும் வாரக்கணக்கில் ஓடும். அப்படிபட்ட படங்களில் ஒன்றுதான் "படகோட்டி". சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த ஊர்களில் திரையிட்டாலும் மீண்டும் மீண்டும் ஒரு சில வாரங்கள் ஓடும் ஆற்றல் இந்த படத்திற்கு உண்டு. இந்த படத்தை ரீ மாஸ்டர் பண்ணினால் நிச்சயம் இன்னொரு 100 நாள் படமாக அமையும். சென்னையில் மறுவெளியீட்டில் படகோட்டி செய்த சாதனைகளை பாருங்கள்.......... Thanks.........

  9. #3018
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்னை ஜானகி எம்ஜியார் தலைவர் கால நினைவுகள் உங்கள் பார்வைக்கு.

    சர்வாதிகாரி படத்தில் இருவரும் நடித்து கொண்டு இருந்த நேரம் நானும் அவரும் குதிரை வண்டியில் தான் பயணம்..

    படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து செல்ல கார் வரும். பின் படம் சார்ந்த அனைவரும் பயணம் செய்ய குதிரை வண்டியே.

    நாங்கள் ஊர் கடைசியில் இருந்த பிரபாத் திரையரங்கு போக கூட அதிலே பயணம்.

    வழக்கம் போல கோவை விடுதியில் இருந்து நாங்கள் சாப்பிடும் மதீனா உணவகத்துக்கு வண்டியில் வந்து சேர என்னை யாருக்கும் அறிமுகம் செய்ய கூடாது என்று அவர் சொல்ல.

    வெள்ளை கலர் முழு ஜிப்பா இடுப்பில் நான்கு முழ வேட்டியுடன் அவர்.

    மதீனா உணவக முதலாளி எங்களை பார்த்தவுடன் கல்லா பெட்டியில் இருந்து எழுந்து வரவேற்பார்.

    என்ன வேண்டும் என்று முதலாளி கேட்க அவர் இரண்டு புல்ஸ் ஐ என்று சொல்ல. நான் பதறி அதுஎல்லாம் சாப்பிட மாட்டேன் என்று சொல்ல.

    வரும் பார் என்றவுடன் வந்தது இரண்டு முட்டைகள் அரை வேக்காட்டுடன் மஞ்சள் கரு பாதி வெந்து வேகாமல் இருக்க வெள்ளை கரு தோசை போல.

    அந்த ஹோட்டல் இருந்த இடத்தில் இப்போது பெரிய ஜவுளிகடை வந்து விட்டது

    சேலத்தில் ஓரு நாள் இரவு காட்சிக்கு நான் கதாநாயகி ஆக நடித்த படம் பார்க்க இருவரும் போனோம்...அரங்கம் நிறைந்து விட அம்பிகா திரை அரங்க முதலாளி அவர் வந்து

    கேபின் அறையில் இரண்டு நாற்காலிகள் போட்டு அந்த படத்தை நாங்கள் இருவரும் பார்த்தோம்.

    படம் ஒளி செல்லும் ஓட்டை வழியாக ஒரு வழியாக எட்டி எட்டி படத்தை பார்த்து முடித்தோம்.

    மருதநாட்டு இளவரசி படத்தில் அன்னை ஜானகி அம்மாவுக்கு சம்பளம் 5000 ரூபாய், நம் தலைவருக்கு சம்பளம் 4001 ரூபாய்.
    நன்றி.... ......... Thanks fb.,

  10. #3019
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    �������� இதய தெய்வம் புரட்சித்தலைவர் பக்தர்களாக இணைந்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய வணக்கத்துடன், நாளை நமதே இந்த தளத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி புகழும் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்துடன் இத்தளத்தில் என்னை யார் என்று கேட்டீர்கள் நான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாட்டைச் சேர்ந்தவர் தேவராஜ் ராதிகா தற்போது நான் இந்தியாவில் திருச்சியில் இருக்கின்றேன் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பற்றி தெரிந்து கொண்டேன் என்றாள் அவர் இறந்த பிறகு புகைப்படங்களை அவரின் படங்களை பார்த்துதான் அவரைப் பற்றி தெரிந்துகொண்டேன் ஆனாலும் எனக்கு தெரிந்த நாள் முதலாய் அவர் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் இப்போது இந்தியாவில் வந்து தேவராஜ் சாரை மருமணம் செய்துகொண்டேன் என்றாள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தெய்வ வடிவில் வந்து இந்த வாழ்வை எனக்கு அமைத்துக் கொடுத்துள்ளார் என்று நான் உறுதியுடன் கூறுவேன் மேலும் நான் இதய தெய்வம் எம்ஜிஆர் ஆண்டவன் எம்ஜிஆர் நல்ல நேரம் எம்ஜிஆர் ஆசைமுகம் எம்ஜிஆர் தற்போது நாளை நமதே புகழ் வேந்தர் எம்ஜிஆர் இது போன்ற தளங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றி பதிவுகளைப் போட்டுக்கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பெயரால் என்னால் முடிந்த சிறுசிறு உதவிகளை செய்கின்றேன் மேலும் தலைவர் தேடி தேடி ஓடி ஓடி கேட்கும் உங்கள் அன்பின் தேவராஜ் ராதிகா வணக்கம்������........ Thanks...

  11. #3020
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ������������������������

    *��மலரும் நினைவுகள்....*

    *கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார்,*

    “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவு தேவை?’ன்னு கேட்டார்.

    ‘3 ஆயிரம் தேவைப்படுது’ன்னு சொன்னேன். கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்.

    காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க. சாப்பிட்டு காத்திருந்தேன்.

    அரசியல் காரணமா 1967ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார். குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார். வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார்.
    ‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்.

    நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ன்னு கேட்டார். அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ன்னு கேட்டார்.

    ‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ன்னு சொன்னேன்.

    ‘முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?’ன்னு கேட்டார். ‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்.

    ‘ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?’ன்னு கேட்டார்.

    ‘பல கோடி ரூபா இருக்கும்’னு சொன்னேன்.

    ‘இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?’ன்னு கேட்டார்.

    ‘ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னேன்.

    ‘செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்கு றேன். அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்.

    அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன். இப்பவும்
    எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது. "

    *MGR IS GREAT...!!*

    Nallathambi
    (Son Of Kalaivanar)
    அவர்கள் ஆல்பத்திலிருந்து.

    ������������������������..... Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •