Page 317 of 402 FirstFirst ... 217267307315316317318319327367 ... LastLast
Results 3,161 to 3,170 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3161
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Thanks
    John Durai Asir Chelliah

    கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டான் அந்த மாணவன்.

    கொஞ்சம் பெரிய படிப்புதான்.
    எனவே அதற்கு பெரிய தொகை நன்கொடையாக தேவைப்பட்டது.

    1000 ரூபாய் என்பது 1968 ல் பெரிய தொகைதானே !

    யாரிடமும் போய் உதவி கேட்டுப் பழக்கமில்லை. என்ன செய்வது?

    ஒரே ஒருவர் நினைவுதான் அவனுக்கு உடனே வந்தது.

    தயக்கத்துடன் போனான். தடுமாற்றத்துடன் தன் நிலையை எடுத்துச் சொன்னான்.

    அமைதியாக அமர்ந்து அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர் அடுத்த நாள் அவனை வரச் சொன்னார். பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஓரளவு அவனுக்கு வந்தது. நிம்மதியுடன் புறப்பட்டு வீடு சென்றான்.

    மறு நாள்.
    பணத்தை எதிர்பார்த்து சென்ற
    அந்த மாணவன் கையில் ஒரு காகிதத்தை கொடுத்தார் அந்த மனிதர். புரியாமல் அந்த காகிதத்தை புரட்டிப் பார்த்தான்.
    அது ஒரு ரசீது.
    1000 ரூபாயை அந்த கல்லூரியில் தன் பெயரிலேயே செலுத்தி, அதற்கு ரசீது வாங்கி வைத்திருந்தார் அந்த மனிதர்.

    ஆனந்தக் கண்ணீர் ஆறாக பொங்கி வழிய நன்றி சொல்ல வார்த்தை எதுவும் இன்றி தவித்தான் அந்த மாணவன்.

    கல்லூரி வாழ்க்கை தொடங்கியது.

    சரி. அந்த கட்டண ரசீது என்ன ஆனது ? புத்தகங்களுக்கு நடுவே புகுந்து கொண்டதா ?
    அல்லது பூஜை அறை சாமி பக்கத்தில் சயனம் கொண்டதா ?

    இல்லை. அப்படி எல்லாம் அந்த மாணவன் செய்யவில்லை. அந்த ரசீதை அழகாக லாமினேட் செய்து பத்திரமாக தன்னுடனே வைத்துக் கொண்டான் அந்த மாணவன்.

    காலத்தாற் உதவி செய்த அந்த மனிதர், சில ஆண்டுகளுக்குப் பின் காலமாகி விட்டார்.

    அந்த மாணவன் படித்து முடித்து, உத்தியோகத்திலும் அமர்ந்து ஓய்வும் பெற்று விட்டார்.

    ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பணத்தை எடுக்க, பக்கத்திலுள்ள ATM போகிறார். அங்கே மெஷினிலுள்ள பட்டன்களை அழுத்துகிறார்.
    கட கடவென்ற ஓசைக்குப் பின்...
    பணத்தை கொடுப்பது எல்லோரின் கண்களுக்கும் எந்திரமாக தெரிகிறது.
    சம்பந்தப்பட்ட இந்த மனிதருக்கு மட்டும் அது எம்ஜிஆராக தெரிகிறது.

    ஆம். 1967-68 ல் இவர் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டபோது உடனடியாக நிதி உதவி செய்த அந்த மாமனிதர் எம்ஜிஆர்.

    எம்ஜிஆர் தன் பெயரில் பணம் செலுத்தி படிக்க வைத்த அந்த மாணவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மகன் Nallathambi Nsk.

    இதோ, நல்ல தம்பி சொல்லும் அந்த நன்றிக் கதை..

    "1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் Engineering படிக்க சேர்ந்தபோது, மக்கள் திலகம் எனக்காக கட்டிய Capitation Fees Receipt.
    அதை Laminate செய்து வைத்துள்ளேன்.
    கல்லூரியில் சேரும்போது தலைவர் என்னை கூப்பிட்டு "கலைவாணர் பல கோடிகள் சம்பாதித்தார். ஆனால் அதையெல்லம் தர்மம் செய்துவிட்டு அழியாத புகழை விட்டு சென்றுள்ளார்.
    எனவே செல்வம் அழிந்து போகும். ஆனால் நான் உனக்கு கொடுக்கப்போகும் கல்வி அழியாது. நன்றாக படி"என்று ஊக்கமும் கொடுத்தார் எம்ஜிஆர்.

    உண்மை. படித்து வேலை செய்து ஓய்வு பெற்று விட்டேன். இன்றும் ATM சென்று ஓய்வூதியம் பெறும்போது "தலைவர் " எனக்கு கொடுப்பதாக நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்."

    நன்றி நல்லதம்பி அவர்களே !
    நீண்ட கால ஃபேஸ்புக் நண்பராக நீங்கள் என்னுடன் இருப்பதில், ஜான் ஆகிய நான் நிறைவான பெருமிதம் கொள்கிறேன்.

    உங்கள்
    நல்ல மனம் வாழ்க !
    நன்றி மறவாத
    அந்த தெய்வ குணம்
    வாழ்க !

    "நன்றி மறவாத
    நல்ல மனம் போதும்
    என்றும் அதுவே
    என் மூலதனம் ஆகும்"
    எனப் பாடிய அந்த எம்ஜிஆர் புகழ்...
    அது என்றென்றும்
    வாழ்க வாழ்க !

    அண்ணன் நல்லதம்பி கல்லூரியில் சேர்ந்துவிட்டு, ம.கோ.ரா அவர்களை சந்தித்து செய்தி சொல்கிறார். கல்லூரியில் சேர்ந்துவிட்டாய் மாத செலவுக்கு என்ன செய்வாய் என்று கேட்கிறார். அதை எதிர்பார்த்து செல்லாத அண்ணன் நல்லதம்பிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

    ம.கோ.ரா சொன்னார் 'மாதா மாதம் செலவுக்கு இங்கு வந்து பணம் பெற்றுக் கொள்' என்கிறார்.

    அடுத்த மாதம் தோட்டத்திற்கு செல்கிறார். அப்போது ம.கோ.ரா வெளியே புறப்பட்டுக் கொண்டிருகிறார். என்ன செய்வது என்று அண்ணன் எண்ண, இவரை பார்த்த ம.கோ.ரா, சானகி அம்மையாரை காணச் சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுகிறார். சானகி அம்மையாரை சந்தித்தால், அந்த மாத செலவுக்கு பணம் கொடுத்து, ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்ள சொல்கிறார். அண்ணன் நல்லதம்பி தன் கல்லூரி படிப்பு முடியும் வரை அந்த தொகையை பெற்றுக் கொண்டார்.

    John Durai Asir Chelliah.......... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3162
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    படங்களில் தந்த நம்பிக்கை !

    மாலை போடும்போது எடுக்கும் படங்களில் பெரும்பாலும் ஒருவர் முகம் தெளிவாக தெரியும். இன்னொருவர் முகம் மாலை அல்லது கை இடையே வந்து முகம் தெரியாமல்
    மறைத்துவிடும், பல பேர் எடுத்த படங்களிலும் நான் இந்த குறையைக் கண்டிருக்கிறேன். ஆனால், நான் எம்.ஜி.ஆர். யாருக்காவது மாலை அணிவித்தாலோ அல்லது எம்.ஜி.ஆருக்கு யார் மாலை அணிவித்தாலோ இருவரது முகம் மறைக்காமல் தெளிவாகத் தெரியும்படி பார்த்துக்கொள்வார்.

    தனக்கு யாராவது மாலை அணிவித்தால், போட்டோ எடுக்க வசதியாக கழுத்தில் மாலை இருந்தபடியே, போட்டவரது இரு கைகளையும் லாவகமாக எம்.ஜி.ஆர். இறுக்கிப் பிடித்துக் கொள்வார். அதனால் இருவர் முகமும் நன்றாக தெரியும், அருமையான போஸ் கிடைக்கும்”. எம்.ஜி.ஆர். புகைப்பட தொழில் நுட்பம் தெரிந்தவர் என்பதற்கு இந்த வாக்குமூலம் ஒரு சான்று என்கிறார் புகைப்பட நிரூபர் எஸ்.எஸ்.ராமகிருஷ்¬ணன்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஒவ்வொரு விஷயத்திலும், ஒவ்வொரு செயலிலும் கவனம் செலுத்தியவர். ஆனால், எம்.ஜி.ஆருக்கு பின் வந்த சினிமா படங்களின் பெயர்கள் மக்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல இருக்கின்றன. படப்பெயர்களில் வன்முறை, இரட்டை அர்த்தம், ஆங்கிலம் பிறமொழி கலவையில் இருக்கும். இன்னும் சில பெயர்கள் படத்துக்கும், கதைக்கும் துளியும் சம்பந்தமில்லாமல் இருக்கும்.

    ஆனால், புரட்சித் தலைவர் படங்களுக்கு பெயர் வைப்பதிலும் தனிக்கவனம் செலுத்தினார். அவரது திரைப்பட பெயர்கள் எளிமையாக எல்லோரும் படிப்பறிவு குறைந்த பாமரனும் உச்சரிக்கக் கூடியதாக, பொருள் புரியும் படியாக இருக்கும், அது மட்டுமல்ல படப் பெயர்களிலும் ஒரு நல்ல செய்தியிருக்கும், ஒரு தத்துவம் பொதிந்திருக்கும்.

    நல்லவன் வாழ்வான், தாய் சொல்லைத் தட்டாதே, குடும்பத் தலைவன், தர்மம் தலை காக்கும், நீதிக்குப் பின் பாசம், தாலி பாக்கியம், புதிய பூமி, எங்க வீட்டுப்பிள்ளை, குடியிருந்த கோயில், நம் நாடு, எங்கள் தங்கம், ஒரு தாய் மக்கள், அன்னமிட்ட கை, சிரித்து வாழ வேண்டும், நீதிக்குத் தலை வணங்கு, பல்லாண்டு வாழ்க, இன்று போல என்றும் வாழ்க, நாளை நமதே, நினைத்ததை முடிப்பவன், நான் ஏன் பிறந்தேன்?, உரிமைக்குரல், ஊருக்கு உழைப்பவன் இப்படி அவரது படங்களின் பெயர்களில் உள்ள எளிமையும், கருத்தாழமும், அழகும் படிக்காத பாமரர்களும் புரிந்து உச்சரித்து மகிழும் வகையில் இருக்கும்.

    படத்திற்குப் பெயர் வைக்கும்போது அவர் எத்தனை கவனமாக இருந்தார். அதில் கருத்தாக இருந்தார் என்பதற்கு பிரபல பேச்சாளர், தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலை சொன்ன ஒரு நிகழ்ச்சி.

    நல்ல பெயர் சொன்னால் 500 ரூபாய் :

    “பாக்கெட் மார்” என்ற இந்திப் படக்கதையை தமிழில் எடுப்பதற்கென்று நாங்கள் முடிவு செய்து… படத்திற்கு என்ன தலைப்பு வைப்பதென்று சிந்தித்த போது எம்.ஜி.ஆர். சொன்னார்.
    “எவ்வளவு லட்சம் செலவு செய்து படம் எடுக்கிறோம், அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்கவேண்டும்.

    அதேபோல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும், பணம் செலவு செய்து போஸ்டர் ஒட்டுகிறோம், பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம், ஏதாவது நல்ல கருத்தைச் சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கான பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரை படத்திற்கு வைக்க வேண்டும்”, என்று கூறிய எம்.ஜி.ஆர். தொடர்ந்து, “அப்படி யார் இந்த படத்திற்கு நல்ல பெயரைச் சொல்கிறார்களோ அவர்களுக்கு ரூபாய் 500 பரிசு அளிப்பதாகவும்” கூறினார்.

    படத்திற்கு ‘திருடாதே’ என பெயர் வைக்கலாம் என்று மா.லெட்சுமணன் சொன்னதும் அது அவருக்கும் பிடித்துப் போனதும் உடனே ரூபாய் 500 கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆக படத்திற்கான பெயரும் எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்தவர் மக்கள் திலகம்.

    நன்றி : திரு. விஜயபாஸ்கர் - தினமலர்......... Thanks.........

  4. #3163
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாலி சினி*மா*விற்கு பாட்*டெ*ழு*தத் துவங்*கி*ய*தும், எம்.ஜி.ஆருக்*கும் அவ*ருக்*கு*மி*டையே நெருக்*கம் ஏற்*பட்*டது. எம்.ஜி.ஆர்., மக்*க*ளால் ஏற்*றுக்*கொள்*ளப்*பட்ட ஒரு பெரிய நடி*கர். மேலும், தன் படங்*க*ளின் மூல*மாக பல சமூக கருத்*துக்*களை சொல்ல ஆசைப்*பட்*ட*வர் எம்.ஜி.ஆர்.

    வாலி அதற்கு துணை நின்*றார். எம். ஜி. ஆரின் சமூக கோட்*பா*டு*க*ளுக்கு திரைப்*பா*டல் மூல*மாக முத*லில் துணை நின்*ற*வர் பட்*டுக்*கோட்டை கல்*யா*ண* சுந்*த*ரம். அவர் ஆரம்ப காலங்*க*ளில் எம்.ஜி.ஆர்., படங்*க*ளில் தத்*துவ பாடல்*களை எழு*தி*னார்.

    ‘சின்*னப் பயலே சின்*னப் பயலே

    சேதி கேளடா

    நான் சொல்*லப் போகும் – வார்த்*தையை

    நல்லா எண்*ணிப் பாரடா

    வேப்*ப*மர உச்*சி*யில் நின்னு

    பேய் ஒண்ணு ஆடு*துன்னு

    விளை*யா*டப் போகும்*போது

    சொல்லி வைப்*பாங்க

    வேலை*யற்ற வீணர்*க*ளின்

    தேவை*யற்ற வார்த்*தை*களை

    வேடிக்*கை*யா*கக் கூட நீ நம்*பி*வி*டாதே’

    என்ற பாட*லும்

    ‘தூங்*காதே தம்பி தூங்*காதே

    சோம்*பேறி என்ற பெயர் வாங்*காதே.

    என்ற பாடலை ‘நாடோடி மன்*னன்’ படத்*தி*லும் எழு*தி*ய*வர் பட்*டுக்*கோட்டை. அதற்*குப் பிறகு கண்*ண*தா*சன் எம்.ஜி.ஆரின் தர்ம சிந்*தனை குறித்து ‘தர்*மம் தலை*காக்*கும்’ படத்*தில்

    ‘தர்*மம் தலை*காக்*கும் – தக்க

    சம*யத்*தில் உயிர்*காக்*கும் – கூட

    இருந்தே குழி பறித்*தா*லும் – கொடுத்*தது

    காத்து நிற்*கும்’

    போன்ற பாடல்*களை எழு*தி*னார்.

    பிறகு வாலி எம்.ஜி.ஆரோடு இணைந்*தார். அப்*போது எம்.ஜி.ஆர்., திமு*க*வில் இருந்த நேரம். கட்*சி*யும் மூன்*றெ*ழுத்து. எம்.ஜி. ஆரும் மூன்*றெ*ழுத்து. அத*னால்.

    ‘மூன்*றெ*ழுத்*தில் என் மூச்*சி*ருக்*கும்

    அது முடிந்த பின்*னா*லும் பேச்*சி*ருக்*கும்’ என்று ‘தெய்*வத்*தாய்’ படத்*தில் ‘எழு*தி*னார் வாலி’

    நான் ஆணை*யிட்*டால் அது நடந்*து*விட்*டால்

    இங்கு ஏழை*கள் வேதனை பட*மாட்*டார்

    உயிர் உள்*ள*வரை ஒரு துன்*ப*மில்லை

    அவர் கண்*ணீர் கட*லிலே விழ*மாட்*டார்.

    இந்த பாடலை ‘எங்க வீட்*டுப் பிள்ளை’ படத்*தின் வெற்*றிக்கே வழி*வ*குத்*தது. அது எம்.ஜி.ஆரை மக்*கள் மன*தில் ஆழ*மாக கொண்டு போய் உட்*கார வைத்*தது.

    நல்ல நல்ல பிள்*ளை*களை நம்பி – இந்த

    நாடே இருக்*குது தம்பி

    சின்*னஞ்*சிறு கைகளை நம்பி – ஒரு

    சரித்*தி*ரம் இருக்*குது தம்பி’

    இந்த பாடலை ‘பெற்*றால் தான் பிள்*ளையா’ படத்*திற்*காக எழு*தி*னார் வாலி. இந்*தப் பாட*லின் சர*ணத்*தில்

    ‘அறி*வுக்கு இணங்கு வள்*ளு*வ*ரைப் போல்

    அன்*புக்கு வணங்கு வள்*ள*லா*ரைப் போல்

    கவி*தை*கள் வழங்கு பார*தி*யைப் போல்

    மேடை*யில் முழங்கு அறி*ஞர் அண்ணா போல்

    என்று எழு*தி*யி*ருந்*தார். அப்*போது காங்*கி*ரஸ் ஆட்சி. சென்*சார் அறி*ஞர் அண்ணா ‘என்*கிற வார்த்*தை’யை அனு*ம*திக்க மறுத்*து*விட்*டார்*கள். அத*னால் படத்*தில் இந்த வரி*கள், மேடை*யில் முழங்கு திரு விக போல் என்*று*தான் வரும். அதே போல் ‘அன்பே வா’ படத்*தில்

    புதிய வானம், ‘புதிய பூமி

    எங்*கும் பனி*மழை பொழி*கி*றது.

    நான் வரு*கை*யிலே என்னை வர*வேற்க

    வண்*ணப் பூ மழை பொழி*கி*றது

    உத*ய*சூ*ரி*ய*னின் பார்*வை*யிலே

    உல*கம் விழித்*துக் கொண்ட வேளை*யிலே

    என்று எழு*தி*யி*ருந்*தார். ‘அன்பே வா’ படம் 1965ல் வெளி*யா*னது. ‘உத*ய*சூ*ரி*யன்’ என்ற வார்த்*தையை சென்*சார் அனு*ம*திக்*க*வில்லை. அத*னால் படத்*தில் இந்த வரி*கள் ‘புதி*ய*சூ*ரி*ய*னின் பார்*வை*யிலே’ என்*று*தான் வந்*தது.

    அதே போல் `பட*கோட்டி’ படத்*தில் வாலி எழு*திய பாடல்*கள் எல்*லாமே எம்.ஜி.ஆரை மீனவ மக்*கள் மன*தில் கொண்டு போய் நிறுத்*தி*யது. மீன*வர்*க*ளுக்*காக இப்*ப*டி*யொரு பாடல் அமைந்*த*தில்லை என்று சொல்*கிற மாதிரி அரு*மை*யாக வாலி எழு*தி*யி*ருந்*தார்.

    ‘தரை*மேல் பிறக்க வைத்*தான் – எங்*களை

    தண்*ணீ*ரில் பிழைக்க வைத்*தான்

    கரை*மேல் இருக்க வைத்*தான் – பெண்*களை

    கண்*ணீ*ரில் குளிக்க வைத்*தான்’

    இந்த பாட*லில் சர*ணத்*தில்

    ‘ஒரு*நாள் போவார் ஒரு நாள் வரு*வார்

    ஒவ்*வொரு நாளும் துய*ரம்

    ஒரு சாண் வயிறை வளர்ப்*ப*வர் உயிரை

    ஊரார் நினைப்*பது சுல*பம்’

    இந்த வரி*க*ளெல்*லாம் ஒவ்*வொரு மீனவ குடும்*பங்*க*ளி*லும் ‘தேசிய கீதம்’ ஆனது. அவர்*க*ளுக்கு இந்*தப் பாடலை திரை*யில் பாடிய எம்.ஜி.ஆர் ஒரு ‘மீனவ மகா*னா’*கவே தெரிந்*தார். அதே போல் அதே ‘பட*கோட்டி’ படத்*தில்

    ‘கொடுத்*த*தெல்*லாம் கொடுத்*தான் – அவன்

    யாருக்*காக கொடுத்*தான்

    ஒருத்*த*ருக்கா கொடுத்*தான் – இல்லை

    ஊருக்*காக கொடுத்*தான்

    மண்*கு*டிசை வாச*லென்*றால்

    தென்*றல் வர வெறுத்*தி*டுமா

    மாலை நிலா ஏழை*யென்*றால்

    வெளிச்*சம் தர மறுத்*தி*டுமா

    உனக்*காக ஒன்று எனக்*காக ஒன்று

    ஒரு*போ*தும் தெய்*வம் கொடுத்*த*தில்லை’

    என்று எழு*திய இந்த வரி*க*ளி*னால் பல பொது*வு*டைமை சிந்*த*னை*யா*ளர்*கள் கூட எம்.ஜி.ஆரை நேசிக்*கத் தொடங்*கி*னார்*கள். வாலி, எம்.ஜி.ஆருக்*காக எழு*திய வரி*கள், எல்*லாமே ` கவி*ஞன் வாய்க்கு பொய்க்*காது’ என்*ப*தைப் போல பலித்*தது.

    அவர் எழு*திய ஒரு பாடல் மட்*டும் எம்.ஜி.ஆருக்கு பலிக்*க*வில்லை.

    ‘பணம் படைத்*த*வன்’ படத்*தில்

    ‘எனக்*கொரு மகன் பிறப்*பான் – அவன்

    என்*னைப் போலவே இருப்*பான்

    தனக்*கொரு பாதையை வகுக்*கா*மல் என்

    தலை*வன் வழி*யிலே நடப்*பான்’

    என்ற இந்த வரி*கள் மட்*டும் எம்.ஜி.ஆருக்கு பலிக்*க*வில்லை.

    ஒரு முறை எம்.ஜி.ஆர்., முதல்*வர் ஆன பிறகு அவ*ரு*டைய ஆற்*காடு சாலை இல்*லத்*தில் எம்.ஜி.ஆரும் – வாலி*யும் பேசிக்*கொண்*டி*ருந்* தார்*கள். அப்*போது அங்கே வந்த மதுரை முத்து வாலி*யைப் பார்த்து ` நீங்*கள் இவ*ருக்கு எழு*தின எல்*லாப் பாடல்*க*ளுமே பலித்*தது. ஆனால் ‘எனக்*கொரு மகன் பிறப்*பான்’ பாடல் மட்*டும் பலிக்*கலை’ என்*றார். எம்.ஜி.ஆர்., – வாலி இரு*வ*ருக்*குமே தர்*ம*சங்*க*ட*மா*கிப் போனது.

    `அவர் சத்*து*ணவு போட*ற*த*னால, தமிழ்*நாட்டு குழந்*தை*கள் எல்*லாமே அவர் குழந்*தை*கள்* தானே’ என்று சொல்லி சமா*ளித்*தார் வாலி.

    அதே போல் எம்.ஜி.ஆர்., திமு*க*வி*லி*ருந்து வெளியே வந்*தி*ருந்த நேரம். அப்*போது அவர் நடித்த ‘நேற்று இன்று நாளை’ படத்*தில் ஒரு பாட*லில் அப்*போது ஆட்*சி*யில் இருந்த திமு*கவை சாடு*கிற மாதிரி ஒரு பாடல் வேண்*டும் என்று எம்.ஜி.ஆர்., வாலியை கேட்*டுக்*கொண்*டார். அது*வ*ரை*யில் வாலி தானா*க*வே*தான் எம்.ஜி.ஆரின் இமேஜை புரிந்து கொண்டு எழு*தி*னார்.

    முதல் முறை*யாக எம்.ஜி.ஆர் கேட்*டுக் கொண்*ட*தால் அந்த படத்*தில்

    ‘தம்பி நான் படித்*தேன்

    காஞ்*சி*யிலே நேற்று – அதை

    நான் உனக்கு சொல்*லட்*டுமா இன்று’ என்று எழு*தி*னார். இந்த பாட*லின் சர*ணத்*தில்-–

    ‘தெரு தெரு*வாய் கூட்*டு*வது

    பொது*ந*லத் தொண்டு

    ஊரார் தெரிந்து கொள்ள

    படம் பிடித்*தால் சுய*ந*லம் உண்டு’

    என்று திமுக தலை*வர்*களை கிண்*டல் செய்து எழு*தி*னார்.......... Thanks.........

  5. #3164
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நான் பார்த்த MGR...

    MGR அவர்கள் முதல் சட்டமன்ற தேர்தல்
    சேலம் அயோத்தியாப்பட்டினம் வருகிறார்.
    MGR 10-மணிக்கு வருவதாக இருந்தது. ஆனால் மிக தாமதமாக
    விடியற்காலை 3.30-க்கு வந்து சேர்ந்தார்.
    தங்க நிறத்தில் மிக ஜொலிப்பாக MGR
    அசந்துவிட்டேன்.மறுநாள் பள்ளி சென்று நாள் முழுதும் தலைவர் புராணம்தான்.

    பனமரத்துப்பட்டி தொகுதிக்கு உட்பட்டது
    எங்கள் பகுதி.
    என் தந்தை O.K.Ramasamy
    சுப்புராயன் MLA க்கு நெருங்கிய நண்பர்.

    2 வருடங்களிலேயே MLA புற்று நோயால் பாதிக்கப்பட்டார்
    MGR அவர்கள் எவ்வளவோ மருத்துவ உதவி செய்தும் காப்பாற்ற இயலவில்லை.

    MLA மறைந்து சில நாட்கள் கழித்து
    மங்களபுரம் ( சேலம்)
    MGR அவர்கள் ஆறுதல் சொல்ல வந்தார்.
    MGR யை பார்க்க பயங்கர கூட்டம்.
    நாங்கள் தலைவரை பார்த்துவிட்டு அவர் கார் ஏறுவதை பார்க்க முதல் மாடிக்கு சென்றோம்.
    வீட்டிற்கு வெளியில் மனுக்களோடு ஏகப்பட்ட மக்கள்.
    MGR வெளியே வந்தவுடன் சூழ்ந்து கொண்டனர்.
    ஒரு கை ஊனமுற்றோரை கண்டுவிட்ட MGR
    அவரை அருகில் வர சொன்னார்.
    தலைவரிடம் மனு கொடுத்த அவர்
    ஒரு கையால் தலைவர் தோள்பட்டை பிடித்து கொண்டு தன் ஊனமுற்ற பாதி கையால் MGR கழுத்தின் அருகே வைத்து
    பிடித்து இரு கன்னங்களிலிலும் மாறி மாறி முத்தம் கொடுத்தார்.
    இவையெல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடக்க ஆரம்பித்துவிட்டது.
    சுதாரித்த காவலர்கள் அவரை பிடித்து இழுக்க வந்தனர்.
    MGR காவலர்களை சைகையால் தடுத்து
    ஊனமுற்றோரை தட்டி கொடுத்து கவலை வேண்டாம் உதவி செய்கிறேன் என உறுதிகூறினார்.
    நிச்சயமாக சொல்வேன் இதுபோல தொண்டரின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து சிறு முகசுழிப்பு இன்றி ,
    கன்னத்தில் எச்சில் பட்டுவிட்டதே என கருதாமல் கர்ச்சிப் கொண்டு துடைக்ககூட இல்லை.
    இப்படிப்பட்ட மக்களை நேசித்தார் நம் தலைவர்

    (அன்று எனக்கு வயது 13 இன்று 52)

    வாழ்க பொன்மனச் செம்மல் புகழ்!!!........... Thanks...

  6. #3165
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் விளக்கம்!
    ---------------------------------------
    வி.பி.ராமன்!!
    அந்த நாளைய பிரபல வழக்கறிஞர்!!
    தம் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த எம்.ஜி.ஆருக்கே அந்த வீட்டை உடைமை ஆக்க முடிவு செய்து,,எம்.ஜி.ஆர் கொடுத்த வாடகையையே மாதா மாதம் கணக்கில் வரவு வைத்து அந்த வீட்டை அன்புடன் எம்.ஜி.ஆருக்குக் கிரயம் செய்து கொடுக்கிறார்!!
    காலத்தின் கட்டாயத்தில் எம்.ஜி.ஆர் ,,ராமாவரம் தோட்டத்தை பின்னாட்களில் வாங்குகிறார்!1
    அப்போதும்,,வி.பி.ராமனுடனான தொடர்பு நீடித்தது!!
    தன் தோட்டத்து வீட்டின் மைய அறையின் கீழே ஒரு நிலவறையைக் கட்டி அதில் சில பொக்கிஷங்களை பதுக்கி வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்??
    ஒரு முறை வி.பி.ஆர்,,எம்.ஜி.ஆரின் தோட்டத்துக்கு வந்தபோது,,அவருக்கு அந்த நிலவறையைக் காட்ட--
    சுற்றிலும் அலமாரிகளில் பல நூறு அறிவு நூல்கள்!! சொத்தைப் பதுக்கியிருக்கிறார் என்ற எதிரிகளின் பற்கள் சொத்தையாகிப் போனது தான் மிச்சம்??
    இவ்வளவு புத்தகங்களா?? என்று ஆச்சரியத்துடன் கேட்ட வி.பி.ஆரிடம்,,எம்.ஜி.ஆர்--
    உங்களைப் பார்க்க வரும்போதெல்லாம் நீங்களும் புத்தகங்கள் மத்தியில் தானே முகம் பதித்து இருப்பீர்கள்?? ஆனால் அவை சட்ட புத்தகங்கள்!! அடியேன் சேகரித்து வைத்திருப்பது அபூர்வமான காவியம்--தத்துவம்-கவிதைகள்-சிறந்த பல அற நெறிக் கதைகள் கலந்த கதம்பம்!!!
    ஒரு முறை தமிழ் அறிஞரும்,,புத்தகப் பிரியரும் ஆன ம.பொ.சி இந்த நிலவறையைப் பார்த்து பிரமித்து-எம்.ஜி.ஆரிடம் கேட்கிறார்? இவ்வளவு அருமையான நூலகத்தை கீழே ஏன் வைத்திருக்கிறீர்கள்??
    அமைதியாக எம்.ஜி.ஆர் சொன்ன பதில்??
    அறிவு என்பது நீர் போன்று குளுமையானது!! நீர் எப்போதும் தரையில் தான் தேங்கும்??
    ஆணவம் என்பது நெருப்பு போன்றது!! அது மேலே தானே பற்றிக் கொண்டு எரியும்???
    நூலகம் போல் அகம் அறிவு என்னும் அரு மனத்தால்
    வானகம் போன்று விரிந்தாலே--
    தான் அகம் என்னும் கர்வம் விலகாதோ???
    அந்தப் பெரிய அரு நூலகம் சில வருடங்களுக்கு முன் செம்பரம் பாக்கம் ஏரி திறப்பால் சிதறுண்டு போனது மிகக் கொடுமையான விஷயம்!!
    இறுதி வரை எம்.ஜி.ஆரின் அந்தரங்கத் தோழனாகக் குலவியும் நிலவியும் வந்தது அந்த நூலகம் தான்!!!!!......... Thanks...

  7. #3166
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அண்ணா குறிப்பிட்ட 'கவிதை'!

    M.G.R. தமிழர்களைப் பொறுத்த அளவில் தமிழாகி விட்ட ஆங்கில எழுத்துக்கள்.

    ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெறுவதே கடினம். அதிலும் முதலிடம் பெறுவது இன்னும் கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது அதைவிட கடினம். சினிமா, அரசியல் இரண்டு துறைகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், முதலிடம் பெற்று, அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்ட அதிசயமே அசந்து போகும் அதிசயம் எம்.ஜி.ஆர்.

    தமிழர்களை மயக்கும் மந்திரச் சொல்லாக அவர் பெயர் ஆனது ஏதோ மாயா ஜாலத்தால் அல்ல. அதற்கு பின்னணியில் இருக்கும் அவரது திட்டமிட்ட கடும் உழைப்பு. அவருக்கே அமைந்த வசீகரம். இந்த இரண்டும் கூட எல்லா நடிகர்களுக்கும் இருந்து விடலாம். ஆனால், மற்றவர்களுக்கு இல்லாத புகழும் பெருமையும் மக்கள் ஆதரவும் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே ஏன்? இவற்றை எல்லாம் தாண்டிய மனிதாபிமானம் என்பதே பதிலாக இருக்கும். இந்த குணத்தால் மக்களை அவர் நேசித்தார். அதனால்தான் மக்கள் அவரை நேசித்தனர். அதனால்தான், இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்யாத சாதனையாக அடுத்தடுத்து மூன்று முறை ஆட்சியைக் கைப்பற்றினார்.

    1917-ம் ஆண்டு ஜனவரி 17ல் பிறந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கியுள்ளது. இலங்கையில் கண்டியில் பிறந்து, தந்தையை இழந்து, தாய் மற்றும் தமையனுடன் தமிழகம் வந்து நாடகத்தில் சேர்ந்து சினிமாவில் சிறிய வேடங்களில் தலைகாட்டி, கதாநாயகனாக உயர்ந்து, பொதுவாழ்வில் ஈடுபட்டு, கட்சியின் தலைவராகி, அவர் தமிழக முதல்வரானது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

    ஆனால், எம்.ஜி.ஆரின் இந்த நெடிய சாதனை வாழ்வில் ஊடாடி இருக்கும் சினிமா, அரசியல், தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது அருங்குணங்களை, திறமைகளை, சாதுர்யங்களை, மனிதாபிமானத்தை, பண்பு நலன்களை விளக்கும் வகையில், அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். 100 என்ற பெயரில் 100 முத்துக்களை தொகுத்து வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

    ‘‘மரத்திலே பழுத்த கனி தங்கள் மடியிலே விழாதா? என்று பலர் ஆவலாக காத்திருந் தனர். நல்லவேளையாக அது எனது மடியிலேயே வந்து விழுந்தது. அதை எடுத்து எனது இதயத்திலே வைத்துக் கொண்டேன். அந்த இதயக்கனிதான் எம்.ஜி.ஆர்.’’

    எம்.ஜி.ஆரைப் பாராட்டி அறிஞர் அண்ணா கூறியதுதான் இது. அண்ணா எழுதிய ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’நாடகத்தில் நடிப்பதற்காக நடிகர் டி.வி.நாராயணசாமியால் அண்ணாவிடம் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தப்பட்டார். சினிமா வில் துணை வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிக்க முதலில் ஒப்பந்தமான படம் ‘சாயா'. படத்தின் கதாநாயகி டி.வி. குமுதினி. அப்போதே அவர் புகழ் பெற்ற நடிகை. புதுமுக நடிகரான எம்.ஜி.ஆருடன் நடிப்பதற்கு குமுதினியின் கணவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சில காரணங்களால் ‘சாயா' படம் நின்று போனது.

    பின்னர், தீவிர முயற்சிக்குப் பிறகு வாராது வந்த மாமணிபோல, ஜூபிடர் நிறுவனத்தின் ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடிக்க வேண்டி இருந்ததால் நாடகத்தில் நடிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால், அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியாமல் போனது. என்றாலும் அண்ணாவோடு எம்.ஜி.ஆருக்கு பழக்கம் தொடர்ந்தது. அவரது பணத்தோட்டம், சந்திரோதயம் புத்தகங்களைப் படித்து அண்ணாவாலும் அவரது கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

    திமுக கொடியை முதன்முதலாக திரையில் காட்டியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரே தயாரித்து இயக்கி நடித்த ‘நாடோடி மன்னன்' படத்தில் ஆணும் பெண்ணும் இருவண்ணக் கொடியை ஏந்தியபடி திரும்புவது போன்ற எம்.ஜி.ஆர். பிக்சர்ஸின் இலச்சினை (லோகோ) படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் காட்டப் பட்டது. எம்.ஜி.ஆரின் படங்களில் அண்ணாவைப் பற்றியும் திமுக கொள்கைகளைப் பற்றிய வசனங் களும் பாடல்களும் கட்டாயம் இடம்பெற்றன.

    அண்ணா தமிழக முதல்வரானதும் சென்னையில் 1968-ம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்போது, சென்னையில் மையப் பகுதியான அண்ணா சாலையில் (அப்போது மவுண்ட் ரோடு) ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் அலுவலகம் எதிரே கையை உயர்த்தியபடி கம்பீரமாக நிற்கும் அண்ணாவின் சிலையை தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். நிறுவினார். சர்.ஏ.ராமசாமி முதலியார் சிலையை திறந்து வைத்தார்.

    உலகத் தமிழ் மாநாட்டில் கருத்தரங்கு ஒன்றில் எம்.ஜி.ஆர். பேசினார். கவிதையைப் பற்றிய நயமான விளக்கம் அளித்தார். ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை ’ என்று கூறினார். கூடியிருந்த மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

    பின்னர், அண்ணா பேச வந்தார். எம்.ஜி.ஆருக்கே குருவாயிற்றே? கேட்க வேண்டுமா? கவிதை பற்றி அவர் கூறும்போது,

    ‘அறிந்ததனை அறிந்தோர்க்கு

    அறிவிக்கும் போதினிலே

    அறிந்ததுதான் என்றாலும்

    எத்துணை அழகம்மா? என்று

    அறிந்தோரையும் வியக்க வைக்கும்

    அருங்கலையே கவிதையாகும்’

    ... என்று கவிதையாலேயே கவிதைக்கு விளக்கம் அளித்தார் அறிஞர் அண்ணா. மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேர மாயிற்று.

    தொடர்ந்து அண்ணா பேசும்போது, ‘அழகும் உள்ளத்து உணர்ச்சியும் சேர்ந்ததுதான் கவிதை என்று எம்.ஜி.ஆர். கூறினார். நீங்கள் கைதட்டினீர்கள். எதற்கு என்று யோசித்தேன். பிறகுதான் தெரிந்தது. அவர் தன்னைப் பற்றியே சொல்லியிருக்கிறார். ஆம். அழகும் உணர்ச்சியும் சேர்ந்த எம்.ஜி.ஆரே ஒரு கவிதைதானே...’ என்றார் அண்ணா.

    மக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. இதயக்கனியின் ஈர்ப்பு ரகசியம் அறிந்தவர் அண்ணா!........ Thanks...

  8. #3167
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1967. ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.க முதல் முதலாக புரட்சித் தலைவர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது என்பது எல்லோரும் அறிந்தது

    அண்ணா ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களில் முதன்மையான திட்டம் சிறு சேமிப்பு திட்டம்

    இத்திட்டம் கொண்டுவந்தபோது பல்வேறு தலைவர்கள் ஆதரவு தந்தனர் அண்ணாவை புகழ்ந்தனர் அவரவர் கருத்துக்கள் கூறினர்

    புரட்சித்தலைவர் வெளிபுறப்படப்பிடிப்பில் இருந்ததால் அவர் கருத்தை அறிய பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்

    படப்பிடிப்பு முடிந்து விமான நிலையம் வந்த புரட்சித்தலைவரை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்துக்கொண்டு சிறு சேமிப்பு திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன அதன் விளக்கம் என்ன என்று??? கேட்டனர்?

    கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களைப்பார்த்து புரட்சித்தலைவர் கேட்டார்
    உங்களில் யாருக்காவது எதாவது தீய பழக்கம் உண்டா என்று கேட்டார்?

    ஒருபத்திரிக்கையாளர் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு என்றார்
    உடனே புரட்சித்தலைவர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பிர்கள் என்றார்.?
    பத்திரிகையாளர் ....ஒரு பாக்கெட் அல்லது 12 சிகரெட் என்றார்

    அதற்கு புரட்சித் தலைவர் கூறினார் அதிலே பாதி பாக்கெட் பயன்படுத்துங்கள்
    மீதி பாதி பாக்கெட் சிகரெட் பணத்தை சிறுசேமிப்பில் சேர்த்து வையுங்கள்
    இதனால் உங்களுக்கு இரண்டு வகையில் நன்மை

    ஒன்று சிகரெட் பழக்கம் குறையும் சேமிப்பு சேரும்
    மற்றொன்று உடல் ஆரோக்கியம் ஆகும் சேமிப்பு பணம் பிறர்க்கு தருமம் செய்யலாம் நீங்கள் இதைசெய்தால் உங்களை.பார்த்து மற்றவர்கள் பின்பற்றுவார்கள் என்று கேள்வி கேட்ட பத்திரிக்கையார் மூலம் பதிலளித்தார்.

    இதை கேட்டவுடன் சுற்றியிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் கைத்தட்டினர் இதைவிட சிறுசேமிப்புக்கு தெளிவாக விளக்கம் சொல்லமுடியாது என்று கூறி பாரட்டினர்

    இதுவே மறுநாள் பல பத்திரிகையில் சிறுசேமிப்புக்கு எம். ஜி. ஆர் தந்த.விளக்கம்
    என்று தலைப்பு செய்தியாக வந்தது

    சட்டசபையில் இதே விளக்கத்தை அண்ணா கூறி புரட்சித்தலைவரைப்பாரட்டினார்
    எல்லோரும் என்னை புகழ்ந்தார்கள் சிறுசேமிப்பு திட்டத்தை வரவேற்றார்கள் தவிர
    யாரும் அதற்கு தெளிவாக விளக்கம் கூறவில்லை ஆனால் நேற்று எம். ஜி. ஆர் அவர்கள் தந்த விளக்கம் பத்திரிகையாளர்களையே மெய் சிலிக்க. வைத்தது இதை விட தெளிவான விளக்கம் தேவையில்லை என்று கூறி பாரட்டினார்.......... Thanks........
    ..

  9. #3168
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நான் எம்.ஜி.ஆரோடு 22 ஆண்டுகள் தொண்டனாக- தோழனாக- தம்பியாக எல்லாவகையிலும் இணைந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த 22 ஆண்டு காலம் என் நெஞ்சை விட்டு நீங்காத காலம். அதனை பொற்காலம் என்றே சொல்லலாம்.

    நான் உண்மையாக வாழ்ந்த காலம் அந்த 22 ஆண்டுகாலம்தான். அவருடைய உதவியால்தான் தமிழின ஆயுதப்போர் தொடங்கினேன். அவரது உதவியுடன், ஈழப்போராட்ட உதவிக்குக் காரணமாக இருந்தவன் நான். என்னால் ஒரு காசு தமிழீழப் போருக்குத் தர முடியாது. எம்.ஜி.ஆர். பலகோடிகளை வாரிவாரிக் கொடுத்தார். அவர் வழங்கிய கைக்கு உதவியாக என்னுடைய கை பிடித்துக் கொடுக்க வைத்தது.

    எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவர் அல்ல; பத்துகோடிகளில் ஒரு மனிதர். அவரது கலை உலகம், நடிப்புலகம் ஒரே நாளில் உயர்ந்ததல்ல. படிப்படியாக, மெல்ல மெல்ல உயர்ந்து யாரும் எட்ட முடியாத எல்லையைத் தொட்டவர்.

    அரசியலில் நெருக்கடி காரணமாக "உலகம் சுற்று வாலிபன்' படத்தை ரகசியமாக- உலக சினிமா அரங்கில் சுவரொட்டி ஒட்டாமல் வெளியிட்டார். அது மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது என்றால் அதற்குக் காரணம்- அவர் மக்கள் திலகம் என வலம் வந்ததால்தான்.

    அரசியலைப் பொறுத்தவரையில் ஒருகால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து, அண்ணாமீது கொண்ட அளப்பரிய அன்பு காரணமாக தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டவர். தி.மு.க. வளர்ச்சியில் சரிபாதிக்கு மேல் அவருக்கு பங்கு உண்டு.

    அண்ணா மறைந்த பின்னர் கருணாநிதியை முதலமைச்சராக்கியது எம்.ஜி.ஆர்.தான். முதலமைச்சரான கருணாநிதி தி.மு.க.விலிருந்து விலக்கியபின் முறைப்படி தனிக்கட்சி ஆரம்பித்தார். இதற்கு தனி மனித முனைப்பு காரணமாக இருந்தது. ஆனால் கருணாநிதி நினைத்தபடி எம்.ஜி.ஆர். காணாமல் போய்விடவில்லை. கட்சியை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் ஆட்சி அமைத்தவர் எம்.ஜி.ஆர். அவர் உயிருடன் இருக்கும்வரை கருணாநிதி முதலமைச்சராக வர கனவுகூட காணமுடியவில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி.

    எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்ததாலேயே பல நன்மைகள் தமிழகத்துக்கு- தமிழக மக்களுக்கு கிடைத்தது. "தமிழ் தமிழ்' என்று பேசினார்கள் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். ஐந்தாவது உலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் சிறப்பாக நடத்தினார். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்களுடன் இணைந்து அரசியல் கலப்பில்லாமல் நடத்தினார்.

    தஞ்சையில் 1200 ஏக்கரில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமாய் இருந்தவர். அதனுடைய வளர்ச்சிக்கு என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் செய்தார்.

    தந்தை பெரியாருக்கு நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்தினார். பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்களை நடைமுறைக்குக் கொண்டு வந்தார் . பெரியார் நினைவுத்தூண் உருவாக்கினார். ஒலி, ஒளி காட்சியை உருவாக்கினார்.

    அண்ணா அவர்கள் லட்சோப லட்சம் தி.மு.க தொண்டர்களை, தோழர்களை தன் தம்பிமார்களாக ஏற்றுக்கொண்டார். 1967-ல் விருகம்பாக்கம் மாநாட்டில், "அன்புத் தம்பிமார்களே நாம் அத்தனை பேரும் ஒரே வயிற்றில் பிறப்பது சாத்தியம் இல்லை என்பதால் வெவ்வேறு தாய்மார்கள் வயிற்றில் பிறந்தாலும் நாம் அத்தனைபேரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான் என்பதை மறக்கக்கூடாது' என்றார். தி.மு.கழக தோழர்கள் ஒரு குடும்பம் என்றார். அதனால் அண்ணாவின் புகழ் வளர்ந்தது.

    தன்னலம் சார்ந்த மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். பொதுநலம் பேணுகிற மனிதர்கள் தாங்கள் சார்ந்த சமுதாயத்தையும் வாழவைத்து, தாங்கள் மறைந்த பின்னாலும் மறையாமல் வாழ்கிறார்கள்.''

    - புலவர் புலமைப்பித்தன்........... Thanks.........

  10. #3169
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆரின் அரசியல் வரலாறு..

    .அமரர் எம்ஜிஆரைப் பற்றி அவரது ரசிகர்களுக்கும் சரி, பொதுமக்களுக்கும் சரி பல விஷயங்கள் தெரிந்திருந்த போதிலும் கூட, அவரது அரசியல் பிரவேஷம் எப்போது? சினிமாவில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்தவர் எப்படி திடீரென ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உடனடியாக தமிழக முதல்வராகவும் ஆனார்? என்று தடாலடியாக யாராவது கேள்வி கேட்டால், திமுக எம் எல் ஏக்களை சொத்துக் கணக்கு காட்டச் சொல்லி பொதுமேடையில் விமர்சித்ததாலும், கட்சியின் செலவுக் கணக்கைக் கேட்டதாலும் தான் அவர் திமுகவிலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டார் என்றும் அந்த உத்வேகத்தில் அவரது ரசிகர்கள் காட்டிய ஏகோபித்த அன்பிலும், வரவேற்பிலும் முகிழ்த்தது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எனும் கட்சி என்றும் பொத்தாம் பொதுவாக யார் வேண்டுமானாலும் பதில் சொல்லி விடுவார்கள்.

    ஆனால் எம் ஜி ஆரின் அரசியல் வரலாறு அத்தனை எளிதாகச் சொல்லி முடித்து விடக்கூடியது அல்லவே! அவர் 1952 முதலே தம்மை மிகுந்த அரசியல் ஈடுபாடு கொண்டவராகவே காட்டிக் கொண்டிருந்துள்ளார். 1952 ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு திமுக வில் சேர்ந்த எம்ஜிஆர், தனது அரசியல் பிரவேசத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாபெரும் மக்கள் ஈர்ப்பு சக்தியாக விளங்கினார் என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை. அது ஊரறிந்த உண்மை! முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினரகச் சேர்ந்து பிறகு தனது திரைப்படங்களில் வசனங்கள் மற்றும் பாடல்கள் வாயிலாக கட்சியின் பிரச்சார பீரங்கியாகி அப்படியே கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, அதைத் தொடர்ந்து சில வருடங்களில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, சிறுசேமிப்புத் தலைவராகி, திமுகவின் பொருளாளராகி அடேயப்பா... எம் ஜி ஆர், தனிக்கட்சி தொடங்குமுன்னர் திமுகவில் ஆற்றிய பணிகள் தான் எத்தனை, எத்தனை?! அதை வரிசைக் கிரமமாக இந்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்.

    அது மட்டுமல்ல; திமுகவில் இயங்கிய போதும் சரி, திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கி அரசியல் செய்தபோதும் சரி எம்ஜிஆர் என்ற ஆளுமை தேர்தல் களத்தில் தன்னை எதிர்த்து நின்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கிறார். அதை அவர் போட்டியிட்டு ஜெயித்த தொகுதிகளின் பட்டியலைச் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். சரி இனி எம்ஜிஆரின் அரசியல் வரலாற்றைச் சுருக்கமாகவும், விளக்கமாகவும் ஆண்டு வரிசைப்படி தெரிந்து கொள்ளுங்கள்.

    1952 - தி.மு.க. வில் சேர்ந்தார்.
    1957 - முதல் முறையாக தி.மு.க.வை ஆதரித்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். 15 இடங்களில் தி.மு.க. வென்றது.
    1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. முனைந்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 6 நாட்கள் சாதாரண வகுப்பில் இருந்தனர் அவர்கள். பிரமுகர்களுக்கான வசதி, சலுகைகளை எம்.ஜி.ஆர். மறந்துவிட்டார். இந்த உண்மையை எம்.ஜி.ஆர். ஒரு போதும் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை.
    1962 - இரண்டாம் முறையாக தி.மு.க.வை ஆதரித்து எம்.ஜி.ஆர். பிரச்சாரம் செய்தார். 52 இடங்களில் தி.மு.க. வென்றது.
    1962 - சட்டமன்ற மேலவை உறுப்பினராக (M.L..C.) ஆனார்.
    1964 - இந்த ஆண்டில் தி.மு.க.வில் கருணாநிதி ஏற்படுத்திய சர்ச்சைகள் காரணமாக ராஜினாமா செய்தார்."காமராஜர் என் தலைவர் அண்ணா என் வழிகாட்டி" என்று எம்.ஜி.ஆர். சொன்னதால் ஏற்பட்ட சர்ச்சை அது.
    1965-இந்தி எதிர்ப்பு மொழிப் பிரச்சனை போராட்டத்தில் கலந்து கொண்டார்.
    1967 - தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
    1971 - மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலையில் திராவிட முன்னேற்ற கழக பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    1972 - திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.
    1972 - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஓர் அரசியல் கட்சியை ஏற்படுத்தினார்.
    1974 - புதுவையில் அனைத்திந்திய அ.தி.மு.கழகம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
    1977 - புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
    1980 - அ.இ.அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. (பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் காரணமாக)
    1980 - தமிழகத்தில் நடந்த மறு சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.
    1981 - மதுரையில் 5ம் உலகத் தமிழ் மாநாடு இந்திய பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் சிறப்புடன் நடத்தினார்.
    1982 - மாநிலத்திற்கு அரிசி தேவைக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
    1984 - அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சி அமைத்தது.
    1987 - இலங்கைத் தமிழர்கள் அமைதி காக்க இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி - இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் ஏற்பட பாடுபட்டார்.


    எம்ஜிஆர் போட்டியிட்ட இடங்கள் பெற்ற வாக்குகள்



    எம்.ஜி.ஆர். பரங்கிமலை -54106. காங்கிரஸ் -26,432
    எம்.ஜி.ஆர். பரங்கிமலை -65405 காங்கிரஸ் -40777
    எம்.ஜி.ஆர். அருப்புக்கோட்டை -43065 தி.மு.க. -5415
    எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு -57019 தி.மு.க. -35959
    எம்.ஜி.ஆர். ஆண்டிப்பட்டி -60510 தி.மு.க. -28016

    24.12.1987 - முதல்வர் எம்.ஜி.ஆர். அமரரானார்.

    (இந்த பதிவில் ஏதாவது தவறு இருப்பின் கமெண்ட் பண்ணினால் சரி செய்யப்படும்)....... Thanks Bai...

  11. #3170
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இதில் விடுபட்டது ...

    1950 வரை காந்தியக் கொள்கைகள்
    காரைக்குடி பொதுக்கூட்டத்தில் காந்திஜியை சந்தித்து குவெட்டா பூகம்ப நிதி வழங்கினார்.
    1953 பிப்ரவரியில் சென்னை நகர் தமிழருக்கே சொந்தம் என்ற பெரியாரின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்
    1953ஏப்ரலில் லால்குடியில் நடந்த
    தி மு க மாநாட்டில் கலந்து கொண்டார்
    , சட்ட மேலவை உறுப்பினர் 1963 என்று நினைக்கிறேன்
    1967 ஜூலையில் தி மு க பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்....... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •