Page 318 of 402 FirstFirst ... 218268308316317318319320328368 ... LastLast
Results 3,171 to 3,180 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3171
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1973-To-1974,ல் திண்டுக்கல்
    நாடாளுமன்ற தேர்தலில்
    மாயத்தேவர் வெற்றிப்
    பெற்றப்பின்னால்தான்...
    மத்திய,மாநில,அரசு மற்றும்
    தொண்டர்கள் மத்தியில்
    கவனயீர்ப்பு ஏற்ப்பட்டதை
    குறிப்பிட்டிருக்கலாமேத்
    தலைவா.?........ Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3172
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நாடோடிமன்னன் #வந்தபோது
    (07-09-1958) #விகடனில் #வந்த
    #விமர்சனம்.

    நன்றி, விகடன்!

    முனுசாமி : மாணிக்கம்

    மாணி: அண்ணே, உடனே எனக்கு ஒரு பெண் பார்க்கணும் அண்ணே!

    முனு: எதுக்கடா?

    மாணி: கலப்புக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, எல்லாச் செலவையும் சர்க்காரே ஏத்துக்கிறாங்களாம்.

    முனு: அப்படின்னா எனக்கும் ஒண்ணு பாருடா தம்பி! ஆமா, இந்தச் சட்டம் நம்ம ஊர்லே எப்ப வந்தது?

    மாணி: நாடோடி மன்னன் ராஜாங்கத்திலே, நல்ல நல்ல சட்டமெல்லாம் செய்யறாங்க அண்ணே!

    முனு: அடடே! படம் பார்த்துட்டியா? எப்படி இருக்கு?

    மாணி: பாதி படம் கறுப்பிலே எடுத்திருக்காங்க; மீதி கலர்லே எடுத்திருக்காங்க.

    முனு: ரொம்பப் பெரிய படமாமே?

    மாணி: நீளத்திலே மட்டுமில்லே, தரத்திலேயும் அப்படித்தான். நாலு வருசமா எடுத்திருக்காங்க. இரண்டு எம். ஜி. ஆர். வராங்க! அதுக்குத் தகுந்த நீளம் வேண்டாமா? கை தட்டித் தட்டி வலி கண்டு போச்சு அண்ணே!

    முனு: எம்.ஜி.ஆருக்கு ஜோடி யாரு?

    மாணி: எம்.ஜி.ஆர். – பானுமதி; எம்.ஜி.ஆர். – எம்.என். ராஜம்; எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி. அப்புறம், எம்.ஜி.ஆர். – எம்.ஜி.ஆர்.! என்னா த்ரில்லு! என்னா ஸ்டன்ட்டு! ஒரு சீன்லே எம்.ஜி.ஆர். ஒரு பாலத்தையே ஒரு கையாலே இழுத்துப் பிடிச்சு விழாம நிறுத்தறாருன்னா பார்த்துக்க!

    முனு : வில்லன் யாரு ?

    மாணி : ராஜகுருவாக வரும் வீரப்பா...
    நல்லவன் போல நடிக்கும் வில்லன்... தனக்கென்று சிலரை வைத்துக்கொண்டு அட்டூழியம் புரிவார்! கன்னித்தீவுல தன் வளர்ப்புமகளை சிறைப்பூட்டி அந்த மகளையே தாரமாக்கிக் கொள்ள நினைக்கும் கொடூரவில்லனாக நடிச்சிருப்பாரு..
    ... அப்புறம் தளபதியாக நம்பியார்...தன்னோட வேலையை சிறப்பா செஞ்சிருப்பாரு..

    முனு: கத்திச் சண்டை உண்டா?

    மாணி: இது என்ன கேள்வி அண்ணே? கலியாணத்திலே தாலி இல்லாம இருந்தாலும் இருக்கும், கையிலே கத்தி இல்லாம எம்.ஜி.ஆர் படத்துக்கே வர மாட்டாரே! கடற்கரையிலே எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சண்டை போடறாங்க, அந்தக் கடலே கலங்குது. அதுக்கே துட்டு கொடுத்துடலாம். அப்புறம், வீரப்பாவோடயும் ஒரு சண்டை போடறாரு!

    முனு: டிரிக் ஷாட்டெல்லாம் எப்படி?

    மாணி: காமரா வேலை ரொம்ப நல்லாருக்கு. கன்னித் தீவு, கழுகு குகை, நீர்வீழ்ச்சி… அந்த வெள்ளம் ஒண்ணு போதும் அண்ணே. பாக்கிறப்போ கண்ணுக்குள்ளே ஜில் ஜில்லுங்குது! கனவு சீன், காதல் காட்சி, குரூப் டான்ஸ் எல்லாத்திலேயும் கலர் அள்ளிக்கிட்டுப் போகுது.

    முனு: காமிக் இருக்குதா?

    மாணி: எம்ஜியாரும் பானுமதியும் முதல்லே மீட் பண்றதே காமிக்தான். சந்திரபாபு ஒரு கூடை முட்டைகளை உடைச்சுத் தின்னுகிட்டேயிருக்காரு. அப்புறம், அவர் வாயிலேருந்து ஒரு கோழிக்குஞ்சு வருது. நம்ம வாயிலேருந்து சிரிப்பு வருது. டான்ஸ் பண்றாரு பாரு, அற்புதமா இருக்குது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாட்டெல்லாம் நல்லா இருக்குது. ஆனா என்ன… கண்ணுக்கு விருந்து, காதுக்கு விருந்து, கருத்துக்கு மருந்து, காசுக்குத்தான் நஷ்டம்!

    முனு: என்ன தம்பி சொல்றே?

    மாணி: ஆமாண்ணே! ஒரு வாட்டி பார்த்துட்டா மறுபடி மறுபடி பார்க்கச் சொல்லுமே!

    மார்க் : 7.5 / 10 - A Grade

    நன்றி! விகடன்......... Thanks...

  4. #3173
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவருடன் ஏற்பட்ட நடிகர் சிவகுமாரின் அனுபவம் !

    1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் தலைவரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.

    இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, தலைவர் தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

    சிவகுமாரும் தன் தாயார் பற்றி தலைவரிடம் கூறினார்.

    இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-

    "என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.

    ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.

    இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

    இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.

    எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.

    எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.

    அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார்.

    குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.

    அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.

    எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.

    எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.

    7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.

    நன்றி : மாலை மலர்........ Thanks...

  5. #3174
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1973-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோவியத் யூனியனுக்குப் போய்விட்டுத் திரும்பிய புரட்சித்தலைவர்,

    ரஷ்யாப் புரட்சிக்கு வித்திட்ட கம்யூனிசக் கொள்கையைப் பற்றி மிகவும் தீவிரமாய்ச் சிந்தித்தார்.

    'அண்ணாவின் பெயரால் தாம் இயக்கம் தொடங்கியிருப்பது போல கட்சியின் கொள்கைக்கும் ஒரு பெயர் சூட்டவேண்டும்; அதிலும் அண்ணாவின் நாமம் பொதிந்திருக்கவேண்டும்'

    -என்று புரட்சித் தலைவர் எண்ணினார். இரவும் பகலும் அதைப்பற்றிச் சிந்தித்து ஒரு பெயரை உருவாக்கினார்.

    அதுதான் ‘அண்ணாயிஸம்’!

    தம் கட்சிக் கொள்கைக்கு இரத்தின சுருக்கமான #அண்ணாயிஸம் என்னும் பெயரைச் சூட்டிய புரட்சித்தலைவர், அதை நாட்டு மக்களுக்கு அறிவிக்க விரும்பினார்.

    1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று, இரவு, எம்.ஜி.ஆர், யு.என்.ஐ மற்றும் பி.டி.ஐ. என்னும் இரண்டு செய்தி நிறுவனங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு..ஶ்ரீ

    ”ஒரு நிருபரை அனுப்பிவையுங்கள்” என்று கூறினார்.

    அப்பொழுது இரவு 8 மணிக்கு மேல் இருக்கும். என்றாலும் புரட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று செய்தி நிறுவனங்களும் த்ததமது நிருபர்களை அனுப்பிவைத்தன.

    நிருபர்கள் வந்ததும் புரட்சித் தலைவர், "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை ‘அண்ணாயிஸம்’ ஆகும். இதை நாட்டு மக்களுக்குத் தெரிவியுங்கள்" என்றார்.

    'திடீரென்று அழைத்து, ஒரு வரியில் செய்தி சொல்கிறாரே' என்று, அந்த நிருபர்கள் இருவரும் திகைத்தார்கள்.

    அவர்கள் திகைப்பைக் கண்ட புரட்சித் தலைவர்,

    ”ஏன் திகைக்கிறீர்கள்? காந்தியிசம், கம்யூனிசம், மாவோயிசம், மார்க்ஸிசம் என்றெல்லாம் கொள்கைகள் இல்லையா? அவற்றைப் போன்றதுதான் அண்ணாயிஸமும்!” என்றார். .

    மறுநாள் எல்லாப் பத்திரிகைகளிலும் அந்தச் செய்தி இடம் பெற்றது.

    உடனே பத்திரிகையாளர்கள் பலர் புரட்சித் தலைவரின் தியாகராயநகர் அலுவலகத்துக்குப் படையெடுத்துச் சென்றனர்.

    ”அண்ணா தி.மு.க-வின் கொள்கை அண்ணாயிஸம் என்று கூறியிருக்கிறீர்களே, அண்ணாயிஸம் என்றால் என்ன?" என்று கேட்டனர்.

    அதற்கு புரட்சித் தலைவர் அளித்த பதிலும் சுருக்கமானதுதான்.

    ”காந்தியிஸம், கம்யூனிஸம், கேப்பிட்டலிஸம் எனப்படும் முதாலாளித்துவம் ஆகிய மூன்று கொள்கைத் த்த்துவங்களிலும் உள்ள நல்ல அம்சங்களையெல்லாம் திரட்டினால் என்ன கிட்டுமோ அதுதான் அண்ணாயிஸம்!” என்றார் புரட்சித் தலைவர்.......... Thanks.........

  6. #3175
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்.

    ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ‘ஷாட்’டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால், தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தைவிட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட் கார்ந்திருந்தபோது, அந்த ஸ்டுடியோ வில் பணியாற்றிய அப்பன் என்ற பெயர் கொண்ட பணியாளர் ஒருவர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு சென்றார். எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார்த்து, ‘‘அண்ணே, குடிக்க கொஞ்சம் தண்ணி’’ என்று கேட்டார். அதற்கு அப்பன் எரிச்சலுடன், ‘‘இருய்யா, பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டுபோறேன். நீ வேற’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்னரும் எம்.ஜி.ஆருக்கு அவர் தண்ணீர் கொண்டுவரவில்லை.

    சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக உயர்ந்ததோடு, அதே நெப்டியூன் ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி அதற்கு தன் தாயின் பெயரை வைத்தார். எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுக்காமல் அலட்சியப்படுத்திய பணியாளர் அப்பன், அதே ஸ்டுடியோவில்தான் பணியாற்றி வந்தார். அவ ருக்கு இப்போது எம்.ஜி.ஆர். முதலாளி!

    ஸ்டுடியோவில் அப்பனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அவரை அருகில் அழைத்தார். பழைய சம்பவங்கள் மனதில் ஓட, ‘வேலை போச்சு’ என்ற நினைப்புடன் கண்கலங்கியபடியே கும்பிட்ட வாறு எம்.ஜி.ஆரிடம் வந்தார் அப்பன். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரு நூறு ரூபாய்’’ பலவீனமான குரலில் அப்பனிடம் இருந்து பதில் வந்தது.
    ‘‘இந்த மாதம் முதல் உங்களுக்கு நானூறு ரூபாய் சம்பளம்’’ என்று அப்பனின் தோள்களைத் தட்டி புன்முறுவலுடன் கூறிய எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்து அழுதார் அப்பன். அவரைத் தூக்கி அணைத்தபடி தேற்றினார் எம்.ஜி.ஆர்.!......... Thanks.........

  7. #3176
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரால் மழையா??
    --------------------------------------------
    மேற்கண்ட கேள்விக்கு--
    ஆம்! என்று பதில் சொல்வது அடியேனில்லை! திருவள்ளுவன்??
    நல்லார் ஒருவர் உளரேல்-அவர் பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை!!!
    ஆம்!! அது 1977-ல் எம்.ஜி.ஆர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நேரம்!
    லஞ்சம் லாவண்யம் அதிகார துஷ்பிரயோகத்தால்
    இயற்கை--
    வஞ்சம் கொண்டு தன் சினத்தைக் காட்டிய வேளை--
    மக்கள்---
    தஞ்சம் என எம்.ஜி.ஆரைத் தலைவனாக ஏற்ற்தால்
    பஞ்சம் இன்றிக் கொட்டித் தீர்த்த மழையின் மகிழ்வு??
    நீர் நிலைகள் எல்லாக் குளங்களிலும் ஏரிகளிலும் நிரம்பி வழிந்த நிலையில் புழல் ஏரி உடையக் கூடிய அபாயத்தில் நீரை உள் வாங்கியிருக்கிறது??
    அமைச்சர்,,காளிமுத்து,,முதல்வர் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்டு,,நிலைமையை விளக்க--
    அந்த இரவில் சில அதிகாரிகளுடன் புழல் அணைக்கு விரையுமாறு காளிமுத்துவைப் பணிக்கிறார் எம்.ஜி.ஆர்!!
    நள்ளிரவில்,,கொட்டும் மழையில்,,சில அதிகாரிகளுடன் காளிமுத்து அங்கே விரைகிறார்??
    மழையின் தீவிரத்தால்,,தன் செயல்பட்டை நிறுத்திக் கொள்கிறது மின்சாரம்??
    சுற்றிலும் சூழ்ந்து கொண்ட இருளில்--அதிகாரிகளுடன் டார்ச் லைட் சகிதம்,,,அமைச்சர் காளிமுத்து,,நிலைமையை ஆராய்ந்து கொண்டிருக்க--சக்தி வாய்ந்த டார்ச் லைட் சகிதம்,,ஒரு கும்பல் எதிர் திசையிலிருந்து அந்த இடத்துக்கு வருகிறது??
    பொது மக்கள்,,,தங்கள் பணிக்கு இடையூறாக அங்கே கும்பல் சேருகிறார்களே என்ற எரிச்சலில் காளிமுத்து ஏறிட்டு நோக்க--
    அந்த கும்பலின் தலைவனாக முதல்வர் எம்.ஜி.ஆர்???
    உங்களைப் போகச் சொல்லிட்டேனே தவிர,,பிறகு தான் சிந்தித்துப் பார்த்தேன்! உங்கள் குழுவுக்கு,,வெள்ள அபாயத்தால் ஏதேனும் துன்பம் நேரிட்டால் என்ன செய்வது என்ற கவலையில் நான் சில அதிகாரிகளுடன் வந்தேன்???
    முதல்வரே இந்த இருட்டில் இப்படி வருகை புரிந்ததும்,,அதற்கு அவர் சொன்ன விளக்கமும்,,அங்கே இருந்த அதிகாரிகளை நெகிழ்ச்சியுடன் கூடிய இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது!!
    அங்கே நடைபெற வேண்டிய வேலைகளும் தடை இன்றியும் துரிதமாகவும் நடந்தேறுகிறது!!!
    இருள் சூழ்ந்த அந்த இக்கட்டான சூழலில்
    அருள் சூழ்ந்த இந்த முதவனின் செயலைப் போல் வேறு எங்கேனும் நாம் கண்டதுண்டா????... Thanks...

  8. #3177
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "அன்னமிட்டக்கை", படத்தில் வாத்தியார் கூறும் கருத்துக்களுடன் பதிவை தொடர்கிறேன் ...
    1.வெள்ளத்துக்கு அணை போடலாம் ஆனால் உள்ளத்தோடு பாசத்துக்கு அணை போட முடியாது ...

    2 .ஊதுபத்திக்குப் பக்கத்தில் சிகரெட் இருக்க கூடாது. பாத்ரூம் பக்கத்தில் பூஜை அறை இருக்க கூடாது.

    3. நல்லதைச் சொல்றவன்தான் நண்பனாக இருக்க முடியும்.

    4. வீட்டுப் பாதுகாப்புக்கு பூட்டு போடற மாதிரி ஒமுக்கத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கனும்.

    5. அவமானம் படுத்துவது வேறு அறிவுரை கூறுவது வேறு. இரண்டையும் ஒன்றாக நினைக்க கூடாது.

    6. உடையை மட்டும் மாற்றினால் போதாது. உள்ளத்தையும் மாற்றியாகனும். அதற்கு அன்பு காட்டனும் அடுத்தங்களை மதிக்கனும்.

    7..ஆடம்பரமாக அவியலும் பொறியலும் போட வேண்டாம். பாசத்தோடு பழைய சோறு போட்டா போதும் ..

    8. .ஏமாற்ற நினைக்கறவங்கத்தான் அடிக்கடி இடத்தை மாற்றுவாங்க.

    9. மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்றால் அன்பு காட்டனும் அதிகாரம் காட்டக் கூடாது.

    10. வீட்டைக் பாதுக்காத்தான் நாயை வளர்க்கறாங்க அது வெறி பிடித்து அலைந்தா நாயை குறை கூற மாட்டாங்க வளர்த்தவங்கத்தான் குறை சொல்வாங்க.

    11. சமுதாயத்தில் ஜாதி மதம் பார்க்காமல் எல்லோருடையை கையே தொட்டுப் பார்த்து நோயை தீர்ப்பவங்க டாக்டர்தான் ..

    12 இதயத்தை சத்திரமாக வைத்தால் எல்லோரும் தங்குவாங்க அதே நேரத்தில் பத்திரமாகவும் இருக்கனும்.

    13. ரத்த வெறிக்கொண்ட புலிக்கிட்ட தற்புகழ்ச்சி பற்றி பேசினால் அது கேட்காது. அழிவில்தான் நியாயம் என்று பேசினவங்க கிட்ட அன்பைப் பற்றி பேசினால் கேட்க மாட்டாங்க.

    14 ஒரு முறை கேட்டு நியாயம் கிடைக்கலைன்னா மறு முறை வேறு வழியில் முயற்சி பண்ணனும்.

    15 மரத்திலே ஏறி தவறி விழுந்துட்டாங்கன்னா அதற்காக மரத்தை வெட்ட மாட்டாங்க ஏறின விதம் தவறு என்றுத்தான் நினைப்பாங்க.

    16. இன்னார்கிட்ட இன்னார் பற்றித்தான் பேசனும் என்கிற விதிமுறை இருக்கிறது.

    17. டாக்டர் எக்ஸ்ரே எடுத்தா இதயத்தைத்தான் பார்ப்பாங்க அதில் உள்ள எண்ணங்களை பார்க்க முடியாது.

    18. செடிக்கிட்ட மலர் கைமாறு எதிர்ப்பார்க்காது பிள்ளைக்கிட்ட தந்தை கைமாறு எதிர்ப்பார்க்கக்கூடாது.

    19. எதிரியை யாராலும் கண்டுபிடிக்கப் முடியாது. உண்மையே யாராலும் அழிக்கவும் முடியாது.

    20 அனாதைகள் மேல் யாராவது அக்கறைப்பட்டுத்தான் ஆகனும். உண்மையே பலமாக பேசும் போது மிரட்டுகிற மாதிரித்தான் இருக்கும்.

    21.எந்த தாய்மீதும் யாரும் பாசம் காட்டலாம் தவறைக் மன்னிக்கிற ஒரே தெய்வம் பெற்றத்தாய்தான்

    பின்குறிப்பு ..15-09-1972 ஆண்டு அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு வெளியிட.பட்டது. படத்திற்கு வசனம் எழுதியவர் .A .L. நாரயணன்
    அடுத்த பதிவு வள்ளல் புகழ் தொடரும் ......... Thanks.............

  9. #3178
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1987 டிசம்பர் மாதம் தன் மகள் திருமண உதவி கேட்டு கழக தொண்டர் கணபதி என்பவர் தன் மகள் திருமண உதவி கேட்டு தலைவரிடம் அவர் இல்லத்தில் மனு ஒன்றை கொடுக்க.

    தலைவர் அதை படித்து பரிசீலித்து அவரை மீண்டும் அழைத்து உன் மகள் திருமணத்தை 1988 ஜனவரி மாதம் பொங்கல் முடிந்து 18 ஆம் தேதி வைத்துக்கொள்...நானே வந்து நடத்தி வைக்கிறேன் என்று சொல்ல...

    கணபதியின் கெட்ட நேரம் தலைவர் அந்த மாத இறுதியில் நம்மை விட்டு மறைய கணபதி நொறுங்கி போகிறார் மனதளவில். தலைவர் மறைவு ஒரு புறம் தன் மகள் நிலை குறித்து மறுபுறம்.

    அடுத்த சிலநாட்கள் செல்ல முதல்வர் அன்னை ஜானகி எம்ஜியார் அவர்களிடம் இருந்து தொண்டன் கணபதிக்கு அழைப்பு வர.

    அங்கே வீட்டுக்கு போன கணபதிக்கு.....நீங்கள் குறித்த படி உங்கள் மகள் திருமணம் ஜனவரி 18 இல் நடக்கட்டும் நான் அல்லது நம் குடும்பத்தில் ஒருவர் வந்து நடத்தி வைக்கிறோம் என்று சொல்ல.

    தன் மகன் ராஜ ராஜன் உடன் தோட்டத்துக்கு வந்த கணபதிக்கு நடப்பது கனவா அல்லது நிஜமா என்று புரியாமல் அம்மா நீங்கள் எப்படி வர முடியும் தலைவர் இறந்து நாட்கள் ஆக வில்லையே என்று கேட்க...

    அதை பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம் உங்கள் ஏற்பாடுகள் நடக்கட்டும்.....அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் அவர் தன் கைப்பட எழுதிய ப்ரோக்ராம் டைரியில் .

    ஜனவரி 1988....18 அன்று கணபதி வீட்டு திருமணம்....அவருக்கு செய்யவேண்டிய உதவிகள் பணம்..பட்டு புடவை..நகைகள் எல்லாம் பற்றியும் எழுதி வைத்து இருக்கிறார்...அதன் படி உங்கள் மகள் திருமணம் நடக்கும் என்று சொல்ல.

    அதன் படி அவர் மகள் திருமணம் அருமையாக தலைவர் கொடுத்த சீதனங்கள் உடன் நடந்து முடிந்தது.

    அன்னை ஜானகி அம்மா அவர்கள் கலந்து கொள்ள இயலாமல் தலைவர் குடும்பத்தில் ஒருவர் முன் நின்று அந்த திருமணம் நடந்து முடிந்தது.

    இருக்கும் போது தொண்டனுக்கு உதவாத அரசியல்வாதிகள் கொட்டி கிடக்கும் இந்த நாட்டில் இறந்தும் அவருக்கு உதவ உயில் போல எழுதி வைத்து விட்டு சென்ற தலைவரை நினைத்து மகிழ்வதா....அதை மறைக்காமல் மறுக்காமல் அந்த சோக சூழலில் கூட அந்த தொண்டனுக்கு உதவிய அன்னை ஜானகி அவர்களை நினைத்து மகிழ்வதா. முடிவை உங்கள் வசமே விட்டு விடும்....

    வாழ்க எம்ஜியார் புகழ்

    நன்றி...தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி......... Thanks.........

  10. #3179
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'அண்ணா ஒரு தேசியவாதி' - #புரட்சித்தலைவர் பார்வையில் அண்ணா

    "என்னைப் பொறுத்தவரை பேரறிஞர் அமரர் அண்ணா அவர்களை முதன் முதலில் சந்தித்துத் தொடர்பு கொள்ளத் தொடங்கியது..

    நாட்டின் தலை சிறந்த அந்தத் தலைமகனோடு உறவு அரும்பியது..

    என்னுடைய வாழ்க்கைப் பாதையில் தன்னுடைய தீர்க்கமான பிடிப்பை, முத்திரையைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பதிப்பித்தது...

    இவையெல்லாம் 1944-ம் ஆண்டு நடைபெற்றவை.

    அந்த ஆண்டில்தான் நடிகமணி டி.வி.என். அவர்கள் என்னை அழைத்துச் சென்று, பேரறிஞர் அண்ணா அவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

    அந்த வகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் வயது இன்று 75 என்றால், அவருடைய வாழ்வின் சரிபாதி பகுதிக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நான் அண்ணா அவர்களுடன் தொடர்பு கொண்டவன்.

    அதாவது அண்ணா அவர்களோடு பழகியவன், அன்பு செலுத்தியவன், கவரப்பட்டவன், பின்பற்றியவன், அவருடைய இலட்சியப் பாதையில் பயணம் செய்து வருபவன் என்ற வகையில் எனக்கு அண்ணா எனும் நிறுவனத்தோடு 40 ஆண்டு தொடர்பு உண்டு.

    அவரே பலமுறை கூறியதுபோல அண்ணா அவர்களுடைய இதயத்தில் தனியானதோர் இடம் பெறுகிற அளவு நாளுக்கு நாள் தகுதிகளைப் பெற்றிடுவதே வாழ்வின் குறிக்கோள் என்று கருதியவன் என்பதை இந்நேரத்தில் நினைவுகூருவது பெருமிதத்தையும், ஓரளவு கர்வத்தையும் என்னிடம் ஏற்படுத்துகின்றன.

    அண்ணா அமைத்த கழகத்திலிருந்து நான் 1972 அக்டோபரில் தூக்கி எறியப்பட்ட பிறகு, நமது அமைப்பின் பெயரிலும், கொடியிலும், கொள்கையிலும், செயல் திட்டங்களிலும் அண்ணா அவர்களே எங்கும் நீக்கமற நிறைந்திருப்பார் என்பதனை அண்ணாவின் பகைவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

    அதன் காரணமாக நான் மிகக்
    கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டேன். ஆனால் பிற்கால வரலாறு என்னை விமர்சித்தவர்களை எங்கே வைத்தது, என்னை எங்கே அமர்த்தியிருக்கிறது என்பதை இன்று கண்கூடாகக் காணலாம்.

    இந்த அற்புதமான மாற்றத்திற்கு என்ன காரணம்?

    தனிப்பட்ட என் பலம், சாமர்த்தியம், அரசியல் என்று என்பால் அன்பு கொண்டோர் கூறினாலும், நான் அவர்கள் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்வது

    ''என்னை வழிநடத்தும் தெய்வமான அமரர் பேரறிஞர் அண்ணா எனும் சக்தியின் வெற்றியே இந்த மாற்றத்திற்குக் காரணம்" என்பதைத்தான்."........... Thanks.........

  11. #3180
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொன் மனம் அது புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கே உரியதாகும் ��

    வள்ளல் குணம் அது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களிடம் மட்டுமே தான் உண்டு

    கருணை உள்ளம் அது பொன் மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களிடம் மட்டுமே தான் உண்டு

    புரட்சித் தலைவா
    வெற்றி தேவதை
    வீர தேவதை
    கருணை தேவதை
    தர்ம தேவதை
    மொத்தத்தில் அனைத்து தேவதைகளும்
    தங்களின் பக்கம் தான் ��

    எங்களின் அன்புக்குரிய ஒரேத் தலைவரான நீங்கள் என்றுமே எங்கள் பக்கம் தான் ��

    உங்களின் அன்புக்குரிய ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளான நாங்கள் அனைவரும் என்றென்றும் உங்கள் பக்கம் தான் ��

    அன்பு பண்பு பாசம் நேசம் கருணை
    கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவைகள் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற என் உயிர் மூச்சான புரட்சித் தலைவா தங்களை நான் வணங்குகிறேன் இறைவா ��
    என்றும் என்றென்றும் ��

    பொன் மனம் கொண்ட வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நல்லாசி களுடன் ��
    அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்துடன் ��

    இனிதான நல் அழகிய இளம் காலை பொழுது வணக்கம் அன்பர்களே ��
    ��✌️�� நன்றியுடன் ��............ Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •