Page 323 of 402 FirstFirst ... 223273313321322323324325333373 ... LastLast
Results 3,221 to 3,230 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3221
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வள்ளல் புகழுக்கு புகழாரம் சூட்டியவர்கள் தொடர் 2, பாகம் 77. பேரரறிஞர் அண்ணா

    பொன்மனச்செம்மல் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த நேரத்தில். அமைச்சரவை அமைத்துக்கொண்டிருந்தார் பேரரறிஞர் அண்ணா அவர்கள். ஒரு நாள் நாவலர் நெடுஞ்செழியன் தம்பி இளவல் திரு இரா செழியன் அவர்கள் அமைச்சரவை பட்டியலுடன் பொன்மனச்செம்மலை . காண சென்றார். பொன்மனச்செம்மல் உடல் நலம் விசாரித்து விட்டு அமைச்சர் பட்டியலை எம்ஜிஆரிடம் காட்டினார். .இந்த குறிப்பில் அமைச்சர்களின் பெயர்களும் அவர்களுக்கு தரப்படும் இலாகாக்கள் பெயர்களும் இருக்கின்றன. என்றார் இர செழியன் அவர்கள். .இதை ஏன் என்னிடம் காட்டுகிறீர்கள் என்று கேட்டார் எம்ஜிஆர், .அண்ணா அவர்கள் இதை உங்களிடம் காண்பிக்க சொன்னார் என்றார். அதற்கு எம்ஜிஆர் கூறிய பதில்? ?

    நான் யார்? அண்ணா அவர்கள் யார்? கழகத்துக்கு நேரடியாக நான் செய்த தியாகம் என்ன? ? அண்ணா அவர்கள் செய்த தியாகம் என்ன. ? என்னுடைய அறிவு
    ஆற்றல் செல்வாக்கு இவை எந்த அளவுடையவை. ? அண்ணா அவர்களின் ஆற்றல் அறிவு செல்வாக்கு இவை எந்த அளவுடையவை? ? அப்பப்பா மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அல்லவா? ? சாதாரண தொண்டனிடம் அண்ணா காட்டும் மரியாதை எண்ணி பார்க்கும் போது பேரன்பு கொண்ட அவருடைய பெரிய மனதை உள்ளத்தை எப்படியாப்பட்ட வார்த்தைகளால் விளக்குவது. போற்றுவது என்று புரியவில்லை. .இப்படி கூறிவிட்டு அந்த பட்டியலில் உள்ள பெயர்களைப்பார்த்தார். .அதிலே ஒருவருடைய பெயர் அமைச்சர் பட்டியலில் குறிப்பிட்டு இருப்பதைப் பார்த்து இரா. செழியனிடம் கூறினார். சமீப காலமாக திமுக கழகத்துக்கும். பேரரறிஞர் அண்ணா அவர்களுக்கும் எதிராககருத்துக்களை பரப்பி கொண்டியிருந்தவருக்கு அமைச்சர் பதவியா. ? இத்தனை நாட்களாக கழகத்துக்காக உழைத்த எத்தனையோ பேர் அனுபவம் கல்வி அறிவு பெற்றவர்கள் இருக்க. கழக தொண்டர்களின் உள்ளத்தில் பெரும் எதிர்பை சம்பாதித்துக்கொண்டியிருப்பவர்க்கு அமைச்சர் பதவியா? ? இது என்ன நியாயம் என்று பதறினார். .லஞ்சம் வாங்குவதற்கு நல்ல வாய்ப்பு உள்ள இலாகா. என்று கேள்விப்பட்டு உள்ளேன். எனவே இதை வேறு யாரிடமும் கொடுக்காமல் நாவலர் நெடுஞ்செழியனுக்கு இந்த இலாகாவை சேர்த்து கொடுக்கலாம். என்று கூறினார்? ?
    அதற்கு இரா செழியன் அவர்கள் சொன்னார். எனது தமையனுக்கு இந்த இலாகாவை கொடுக்க சொல்கிறீர்கள். இதை நானே போய் அண்ணாவிடம் எப்படி கூறுவேன். நான் உங்கள் வாயிலாக இந்த கருத்தை சொல்ல வைத்து விட்டேன் என்று எண்ணினால்?இப்படிப்பட்ட சந்தேகம் என் மீது ஏற்பட்டு விட்டால்? ? இத்தனை நாட்களாக நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு உருவாக்கிய. நல்லெண்ணத்தை நானே அண்ணாவிடம் இழந்து விடுவேனோ? ? . இந்த பட்டியலை குறிப்பிட்டு வேறுயாருக்காவது சொல்லுங்கள். என்றார். . அதற்கு எம்ஜிஆர் கூறிய பதில். ?
    நீங்கள் அண்ணாவுடைய நிழலாக இருப்பவர். அண்ணா ஒரு போதும் உங்களை தவறாக நினைக்க மாட்டார்.நம்மையெல்லாம் சரியாக எடைப்போட்டுவைத்திருப்பார் தைரியமாக செல்லுங்கள் என்றார். ஓரிரு நாட்களில் இரா செழியன் புதிய பட்டியலுடன் பொன்மனச்செம்மலை காண வந்தார் புரட்சித்தலைவரிடம் காண்பித்தார். நாவலர் நெடுஞ்செழியனுக்கு தொழில் இலாகா தரப்பட்டிருந்தது. அந்த நண்பர்க்கு அமைச்சர் பதவி இல்லை வேறு ஒரு பதவி குறிப்பிட்டு இருந்தது. அதற்கான காரணங்கள் அண்ணா குறிப்பிட்டு இருந்தார். அண்ணாவுக்கு எது நியாயம் என்று படுகிறதோ அதை அவர் செய்யலாம். நானும் மனதார ஏற்றுக்கொள்கிறேன். என்றார் புரட்சித்தலைவர்.

    மாபெரும் தலைவரும் மேதையுமான அண்ணா அவர்கள் கருத்துக்கு மாறுப்பட்ட கருத்து எம்ஜிஆர் சொன்னாலும். அவர் மீது வெறுப்போ பழிவாங்குவதோ அலட்சியப்படுத்துவதோ இல்லாமல். சாமானிய தோழனின் கருத்துக்கு மரியாதை அளித்த விந்தையை என்ன என்று சொல்வது. அண்ணாவின் பேச்சுக்கு எம்ஜிஆரும் எம்ஜிஆரின் பேச்சுக்கு அண்ணாவும். ஒரு போதும் எதிர்மறையான கருத்துக்கள் கூறியது இல்லை. என்பதற்கு இது ஒரு சான்றாகும். ....... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3222
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நண்பர்கள்_அனைவருக்கும்
    #பார்_போற்றும்_பாரத_ரத்னா எம்ஜிஆர் #ஆசியோடு_இனிய_காலை_வணக்கம்

    #புரட்சிதலைவரும்_பொம்மை_ரவீந்தரும்

    #ரவீந்தரும்_சத்யராஜும்

    ஆரம்பகாலம் முதற்கொண்டு மக்கள் திலகம் அவர்களுடைய அதிதீவிர ரசிகராக நடிகர் சத்யராஜ் இருந்தார் என்பது பலரும் அறிந்த ஒன்று.

    எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு அவருடைய தங்கையின் திருமணத்திற்கு நேரில் சென்று அழைத்தபோது, அவர் சற்றும் எதிர்பாக்காதவண்ணம் முன்னறிவிப்பு ஏதுமின்றி கோயமுத்தூரில் நடந்த திருமணத்திற்கு ஆஜாராகி அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்து அன்பினால் அவரை திக்குமுக்காடச் செய்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

    அதன் பிறகு, தன் தங்கையின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியதற்கு நன்றி கூற தன் மனைவியுடன் அவரது வீட்டுக்குச் சென்றபோது, “உங்கள் ஞாபகமாக ஏதாவதொரு நினைவுப் பொருளைத் தாருங்கள்” என்று சத்யராஜ் வேண்டுகோள் விடுக்க, எம்.ஜி.ஆர். தினமும் தான் உடற்பயிற்சி செய்துவந்த கர்லா கட்டையை தன் உதவியாளர் மாணிக்கத்தை அனுப்பி மேல்மாடியிலிருந்த அந்த சாதனத்தை வரவழைத்து அவருக்கு பரிசாக அளித்தார். அத்துடன் “தினமும் காலையில் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் உழைக்க முடியும். உழைப்பால் உயர்வதே முக்கியம்” என்று அறிவுரையும் கூறி வாழ்த்தி அனுப்பினார் அந்த பண்பாளர்.

    சத்யராஜ் தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுடைய புகைப்படத்தை வைத்து தினமும் வணங்கி வருகிறார். அந்த அளவுக்கு அவர் எம்.ஜி,ஆரின் முரட்டு பக்தர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

    சத்யராஜ் பள்ளியில் படிக்கிற காலத்திலிருந்தே “பொம்மை” பத்திரிக்கையை தவறாமல் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு ஐந்து தங்கைகள். மாதந்தோறும் 1-ஆம் தேதி வீட்டுக்கு வரும் “பொம்மை” இதழை யார் முதலில் படிப்பது என்பதில் அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்படும். காரணம் அதில் தொடர் கட்டுரையாக வெளிவந்த ரவீந்தர் அவர்களின் கட்டுரையைப் படிக்கத்தான் இத்தனை போட்டா போட்டிகள்.

    “போன மாசத்து ‘பொம்மை’யை நீ படிச்சே இல்லையா? இந்த மாசத்து பொம்மையை இவங்க முதலில் படிக்கட்டும்” என்று சத்யராஜின் தாயார் இவர்களுடைய சண்டையை மத்திசம் செய்து வைப்பார்.

    “சாண்டில்யன் அவர்கள் ‘கடல் புறா’ என்ற நாவலை எழுதினார். அதை படிக்கும்போது அந்தக் கப்பலில் நாம் பயணிப்பதைப் போன்ற உணர்வு இருக்கும். ‘யவனராணி’ என்னும் நாவலில் யவனராணி உடைந்த கப்பல் கரை ஒதுங்கும்போது நாமும் அங்கே கரை ஒதுங்குவதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அதாவது அந்த காலகட்டத்திற்கே அழைத்துப் போய் நிறுத்தும் எழுத்து. – அதுவே அந்த எழுத்தாளரின் சிறப்பு. ரவீந்தர் அவர்களின் “பொன்மனச்செம்மல்” தொடரை படிக்கும்போது எம்.ஜி,ஆர் அவர்களுடன் வாழ்ந்த மாதிரியே ஓர் உணர்வு எனக்குள் ஏற்பட்டது.” என்று ரவீந்தரின் எழுத்தாற்றலுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார் சத்யராஜ்.

    இன்னும் ஒருபடி மேலே சென்று “சினிமாவில் கதாபாத்திரங்களை காட்சியமைப்பு மூலமாக சுலபத்தில் காட்டிட முடியும். ஆனால் எழுத்து மூலமாக கதாபாத்திரங்களை, அவற்றின் சிறப்புகளை வெளிப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல. ‘பொன்மனச்செம்மல்’ தொடரைப் படிக்கும்போது அவர்களுடன் வாழ்ந்த மாதிரியே உணர்வு எனக்குள் ஏற்பட்டது” என்று அவருடைய எழுத்துத்திறமைக்கு மகுடம் சூட்டுகிறார்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எத்தனையோ பேர்கள் எழுதியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தரின் எழுத்துக்களில் மட்டும் அப்படியென்ன ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது என்று கேட்கிறீர்களா…?

    ஆம். வேரு யாருடைய எழுத்துக்களுக்கும் இல்லாத நம்பகத்தன்மை, துல்லியம், சுவையான அனுபவங்கள் ரவீந்தரின் கைவண்ணத்தில் காணப்படுவது தனிச்சிறப்பு . அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல இந்த ஒரு சம்பவமே போதுமானது.

    1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் இயற்கை எய்திய பின்னர் ‘பொம்மை’ இதழை நடத்திவந்த நாகிரெட்டியாருக்கு தனது பத்திரிக்கையில் அவரைப்பற்றிய தொடர் கட்டுரைகள் வெளியிடவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு திருமதி ஜானகி ராமச்சந்திரன் அவர்களைத் தொடர்பு கொள்கிறார்.

    ஜானகியம்மாள் சொன்ன ஒரே ஒரு பதில் எம்.ஜி.ஆருக்கும் வசனகர்த்தா ரவீந்தர் அவர்களுக்கும் இடையே இருந்த நட்பின் இறுக்கத்தை எடுத்துக்காட்ட போதுமானது.

    “மக்கள் திலகம் என்னும் மாமனிதருடன் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகிய எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் திரு கே.ரவீந்தர் அவர்களிடம் தமக்கேற்பட்ட அனுபவங்களை ‘பொம்மை’யில் எழுதச் சொல்லுங்கள். சுவையான நிறைய விஷயங்கள் கிடைக்கும். என் கணவரைப் பற்றி எழுத அவரைவிட தகுதியான நபர் வேறு யாரும் கிடையாது”

    மக்கள் திலகம் மறைந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தேறியது. நாகிரெட்டியாரின் விருப்பத்திற்கு ரவீந்தர் அவர்கள் இசைந்து “நெஞ்சில் நிறைந்த பொன்மனச்செம்மல்” என்ற தலைப்பில் 1992-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை தொடர்ந்து 30 இதழ்களில் தொடராக எழுதியபோது அது வாசகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது. ‘பொம்மை’ இதழின் வருமானமும் எகிறியது.

    “எம்.ஜி.ஆர் என்னும் அந்த மாமனிதரைப் பற்றி மற்றவர்கள் சொல்லக் கேட்டதையும், படித்ததையும் கொண்டு பல நூல்கள், கட்டுரைகள் வெளிவந்தபோதிலும் எம்.ஜி.ஆருடன் பல்லாண்டுகள் உடனிருந்து பழகிய ஒருவர் எழுதுகிறார் என்றால் அதற்குள்ள சிறப்பே தனித்துவமானது. அந்த எழுத்து திரு ரவீந்தருடையது” என்று புகழாரம் சூட்டுகிறார் ‘பொம்மை’ பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர்.

    இந்த தொடர் வெளிவந்த காலத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷமாகவும், பெருத்த கொண்டாட்டமாகவும் இருந்தது. யாரும் அறிந்திராத அத்தனை சுவையான நிகழ்வுகள். இந்த தொடரைப் படித்த பிறகு இன்னமும் கூடுதலாக எம்.ஜி.ஆரின் பித்தனாகிப் போனவர் நடிகர் சத்யராஜ்.

    ஒருநாள் பொம்மை பத்திரிக்கையின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பொறுப்பாசிரியர் வீரபத்திரன் என்பவரிடம் பேசுகிறார்.

    “நெஞ்சில் நிறைந்த பொன்மனச்செம்மல்” என்ற தொடரை எழுதும் திரு.ரவீந்தர் அவர்களை நான் எப்படியாவது சந்திக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்து தர முடியுமா?” என்று கேட்கிறார். சத்யராஜின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வீரபத்திரன் வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறார்.

    சென்னையிலுள்ள ரவீந்தரின் இல்லம் சென்று சத்யராஜ் முதன் முதலாக அவரை சந்தித்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தான் வணங்கும் தலைவனின் அன்புக்கு பாத்திரமானவரை கண்டபோது மக்கள் திலகத்தையே நேரில் பார்த்ததுபோன்று பரவசமடைகிறார். பொன்மனச் செம்மலுடன் ரவீந்தர் பழகுகையில் ஏற்பட்ட அனுபவங்கள் ஒவ்வொன்றும், அந்த தொடர் கட்டுரைகளில் குறிப்பிட்ட ஒவ்வொரு சம்பவங்களும் சத்யராஜ் அவர்களின் மனக்கண்ணில் வந்து நிழலாடுகிறது.

    முகமன் கூறி வரவேற்று உபசரித்த ரவீந்தர் அவர்கள் ஒரு இனிப்பு பொட்டலத்தை சத்யராஜிடம் பரிவுடன் தந்து “புரட்சித் தலைவர் அவர்கள் விரும்பிச் சாப்பிடும் இனிப்பு இது. இதை திருவல்லிக்கேணியில் உள்ள இனிப்பகத்திலிருந்து வாங்கி வந்தேன்” என்று சொல்ல சத்யராஜ் அப்படியே எம்.ஜி.ஆரின் நினைவில் மூழ்கிப் போகிறார்.

    ரவீந்தர் அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பைக் குறித்து பேசும்போது “புரட்சித்தலைவர் அவர்களை பார்க்கும்போது முதலில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்பார். தலைவரைப் போலவே அவரிடம் பணியாற்றியவர்களும் அந்த பண்பை தொடர்ந்தது… எனக்கு ஒரு ஸ்வீட் பாக்கெட் தந்தபோது எனக்கு நிரம்ப மகிழ்ச்சியாக இருந்தது” என்று நினைவு கூர்கிறார் சத்யராஜ்.

    ரவீந்தரிடம் விடைபெற்று சென்ற சத்யராஜுக்கு சினிமா உலகத்தில் இத்தனை காலங்கள் ரவீந்தர் சத்தமின்றி சாதனைகள் புரிந்தும் அது வெளியுலகிற்கு தெரியாமலே போய்விட்டதே என்ற ஆதங்கம் மனதுக்குள் தேங்கி இருந்தது. ரவீந்தரை எப்படியாவது ஒரு பொதுநிகழ்ச்சியில் கெளரவிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்

    சத்யராஜ் கொண்டிருந்த நாட்டத்திற்கேற்ப அதற்கான ஒரு நல்ல வாய்ப்பும் அமைந்தது. 1993-ஆம் ஆண்டு பி.வாசுவின் இயக்கத்தில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த “வால்டர் வெற்றிவேல்” என்ற திரைப்படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடி 200-வது நாள் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

    தொண்ணூறுகளில் வெளியான சத்யராஜ் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் இது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் “எஸ்.பி. பரசுராம்” என தெலுங்கிலும், கோவிந்தாவின் நடிப்பில் “குத்தார்” என இந்தியிலும் மறுஆக்கம் செய்யப்பட்டது.

    வால்டர் வெற்றிவேல் 200-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு ரவீந்தர் அவர்களுக்கு சத்யராஜ் பிரத்யேக அழைப்பு விடுத்திருந்தார். யாரும் எதிர்பாராத வண்ணம் அந்த மேடையிலேயே ரவீந்தர் அவர்களுக்கு புரட்சித்தலைவரின் உருவப்படம் பதித்த மோதிரத்தை வழங்கி கெளரவித்தபோது ரவீந்தர் நெகிழ்ந்துப் போனார்.

    தன்னை கண்ணியப்படுத்திய சத்யராஜ் அவர்களின் சிறந்த பண்பை பாராட்டி அதே ‘பொம்மை’ பத்திரிக்கையில் கட்டுரையாக வரைந்தார்.

    “எம்.ஜி,ஆர். அவர்கள் என் வாழ்க்கையில் எவ்வளவோ செய்திருக்கிறார். ஆனால் மோதிரம் மட்டும் எனக்கு அணிவிக்கவில்லை. அதை சத்யராஜ் நிறைவேற்றிவிட்டார். அதன் மூலமாக எம்.ஜி.ஆர் தமது படத்தில் பாடிய எல்லா பாடல்களையும் ஜெயித்து விட்டார். “நான் ஆணையிட்டால்; அது நடந்து விட்டால்” உட்பட. ஆனால் ஒரேயொரு பாடல் மட்டும் அவரது வாழ்க்கையில் நிறைவேறாமல் இருந்தது. அது “எனக்கொரு மகன் பிறப்பான்; அவன் என்னைப்போலவே இருப்பான்” என்பது. அவரது நிஜவாழ்க்கையில் மகன் இல்லை. ஆனால் இந்த மோதிரத்தை அணிவித்ததன் மூலமாக சத்யராஜ் அவருக்கு மகன் மாதிரி. பெற்றால்தான் பிள்ளையா?” என்று அந்த கட்டுரையை ரவீந்தர் முடித்திருந்தார். சத்யராஜ் இந்த நிகழ்வினை நினைத்துக் கூறும்போது “இதைப்படித்து என் கண்கள் குளமாகின” என்று மனம் நெகிழ்கிறார்.

    முத்தாய்ப்பாக இதோ சத்யராஜ் கூறும் விஷயங்கள் நம் மனதில் ரவீந்தர் மீதிருக்கும் மதிப்பையும் மரியாதையும் மேலும் அதிகப்படுத்துகின்றன.

    “ரவீந்தர் அவர்கள் பொன்மனச்செம்மலைப் பற்றி நிறைய விஷயங்கள் சுவைபடச் சொல்லியிருக்கின்றார். இதையெல்லாம் படிக்கும்போது நான் ரசிகனாக.. தூரத்தில் இருந்து புரட்சித் தலைவரைப் பார்த்தபோது அவரை நடிகராக, அரசியல் கட்சித் தலைவராக, ஏழைகளின் பசியைத் தீர்த்தவராக, சத்துணவு திட்டம் கொண்டு வந்தவராக… இப்படி பெரிய பெரிய விஷயங்கள்தாம் வெளியே தெரியுமே தவிர, நெருக்கமாக நட்பு முறையில் நடந்த நிகழ்ச்சிகள் தெரிய வாய்ப்பில்லை. அவற்றை கூடவே இருந்து தன்னலம் கருதாமல் புரட்சித் தலைவரை நேசித்து பழகியவர்களால் மட்டுமே எழுத முடியும்” என்று புகழாரம் சூட்டுகிறார்...

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு........ Thanks...

  4. #3223
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நண்பர்களுக்கு_இனிய_மாலை
    #வணக்கம்

    #செம்மளுக்கு_வந்த_கடிதமும்
    #செம்மலின்_கொடைகுணமும்
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    பரபரப்பான காலை நேரம்
    முதல்வர் கோட்டைக்கு கிளம்ப
    தயார் ஆகிறார்

    தலைவருக்கு வந்து இருந்த கடிதங்களில்
    ஒன்றை தலைவரின் உதவியாளர் தலைவரிடம் கொடுக்கின்றார்.

    அந்த கடிதத்தின் முகவரியில்
    எம்ஜிஆர்
    சென்னை
    என்று மட்டும் இருந்தது,எழுதியவர் விலாசம் இல்லை.
    கடிதத்தின் உள்ளே:-

    வணக்கம் என் பெயர் கவிதா நான் நான்காம் வகுப்பு படிக்கின்றேன் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து உள்ளேன் எனக்கு வீணை வாசிப்பதில் மிகவும் இஷ்டம் அழகாக வாசிப்பேன்.. குடும்ப சூழ்நிலை காரணமாக என்னிடம் சொந்தமாக வீணை வாங்க முடியவில்லை ஆதலால் எனக்கு ஒரு வீணை வாங்கி கொடுத்து உதவ வேண்டும்.
    இப்படிக்கு
    கவிதா
    என்று எழுதி இருந்தது பொன்மனமும்
    கடிதத்தை படித்து விட்டு உதவியாளரிடம்
    அந்த சிறுமி யார் என்று விசாரித்து வீணையை வாங்கி கொடுங்கள் என்று சொல்லி விட்டார்

    மாதங்கள் உருண்டோடின
    மாநில அளவில் பள்ளிகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
    பரிசு வழங்க முதல்வர் தலைமையில் விழா நடக்க ஏற்பாடு நடக்கின்றது..

    நாளை விழா பற்றிய நிகழ்வுகள் முதல்வரின் பார்வைக்கு வருகின்றது அப்போது மன்னவன் பார்வைக்கு வீணை வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்ற ஒரு பெயரை பார்க்கின்றார் உடனே உதவியாளரிடம் நாம் வீணை வாங்கி கொடுத்த அந்த பெண்தான் முதல் பரிசு பெற்ற விவரத்தை தெரிவித்து ஆனந்த பாடுகின்றார்

    உடனே உதவியாளர் "அண்ணே நாம் அந்த பெண்ணுக்கு வீணை வாங்கி தரவில்லை என்றும் சரியான விலாசம் கிடைக்கவில்லை என்றும் நம் மன்னனிடம் தெரிவிக்கின்றனர்..
    மறுநாள் விழா மேடையில் அனைவருக்கும் மன்னன் தன் கொடுத்து சிவந்த கரங்களால் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்களை வழங்குகிறார்
    அப்போது வீணை வாசிப்பு போட்டியில் கலந்து வெற்றி பெற்ற அந்த பெண்ணும் மன்னவன் கையினால் பரிசு பெற வருகின்றாள்.. பரிசை வாங்கும் போது மன்னவன் கையில் ஒரு துண்டு சீட்டை தருகிறாள்..

    அதில்:-

    வணக்கம் உங்களிடம் உதவி என்று கேட்டால் உடனே கிடைக்கும் என்று கேள்விபட்டேன்,ஆனால் நான் எழுதிய கடிதம் ஒருவேளை உங்கள் கையில் கிடைக்கவில்லை போலும், இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற கூட நான் வீணையை இரவல் வாங்கி கொண்டு தான் வந்து கலந்து கொண்டேன்
    என்று எழுதி இருந்தது...

    தலைவரிடம் பரிசை பெற்று கொண்டு அந்த சிறுமி திரும்பும்போது அவள் தோள்களை கொடுத்து சிவந்த கரங்கள் பற்றியது,சிறுமி திரும்பி பார்க்கும் போது அவளின் தோள்களை மன்னவன் பற்றி கொண்டு உதவியாளரை மன்னவன் பார்க்க தலைவரின் மகிழுந்தில் இருந்து புது வீணையை கொண்டு வந்து சிறுமியின் கரங்களில் கொடுத்து வாழ்த்தினார்
    பொன்மனச்செம்மல்...

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு...... Thanks...

  5. #3224
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சிதலைவர்_ஆசியுடன்
    #நண்பர்கள்_அனைவருக்கும்
    #இனிய_காலை_வணக்கம்....

    #எம்ஜிஆரின்_பிம்பமும்_ரசிகர்
    #மன்றங்களும்
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    என் போன்ற இளம்வயதினர்
    தலைவரை பற்றி அறிந்துகொள்ள அவர் புகழை போற்றிட ஊக்கம் அளித்துவரும்
    #குருநாதர்_வெங்கட்ராமன்_தியாகு,
    #அய்யா_சரவணன்_ராஜகோபால்,
    #அண்ணன்_நெல்லைமணி,
    #அன்பின்_இலக்கணம்_அம்மா
    #புண்ணியக்குமாரி, அவர்களுக்கும்
    மற்றும்
    முகநூல் நண்பர்கள் அனைவருக்கும்
    தலைவரை பற்றிய இந்த சிறு
    கட்டுரை சமர்ப்பணம்...

    எம்ஜிஆர் மறைந்து முப்பத்தி மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. எம்ஜிஆரை யார் என்றே தெரியாத ஒரு தலைமுறையும் தோன்றிவிட்டது. ஆனால் தமிழ் பொது சமூகத்தின் நினைவுகளில் எம்ஜிஆர் இன்றும் வாழ்கிறார்.

    இப்போதும் லட்சக்கணக்கான தமிழர்களுக்கு அவர் கடவுள். அவரது பெயரைச் சொல்லியே இப்போதும் அவர் ஆரம்பித்த கட்சி ஆட்சிக்கு வருகிறது.

    கால் நூற்றாண்டு காலம் கடந்த பின்பும் அவரது நினைவு நாளின் போது வீதிக்கு வீதி அவரது படத்தை வைத்து தேங்காய், பழம், ஊதுவத்தி வைத்து வணங்குகிறார்கள். இப்படி ஒரு நினைவு நாளை நான் அறிந்த வரை தமிழகத்தில் வேறு எவருக்கும் அனுஷ்டித்துப் பார்த்ததில்லை.

    #ஒருநடிகராகவோ #அரசியல்வாதியாகவோஅல்ல; #கிட்டத்தட்ட_நாட்டுப்புற_தெய்வமாகவே #தலைவர்_இங்கு_திகழ்கிறார்

    அவருக்காகப் பலர்
    அலகு குத்திக்கொண்டார்கள்; தீக்குளித்து இறந்தார்கள்;
    அவருடைய 'கட் அவுட்' தாங்கிய தேரின் இரும்புக் கொக்கிகளை ஒருவர் தன் முதுகுச் சதையில் பிணைத்துக்கொண்டு 9 கி.மீ., இழுத்துச் சென்றார்.
    சபரிமலை யாத்திரைக்குப் போவதைப் போல் கடும் விரதமிருந்து பலர் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த சிறிய கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டனர்.

    'தன் காதலியின் அருகில் இருக்கும் போது கூட ஏழைகளைப் பற்றியே எங்கள் தலைவர் சிந்தித்துக் கொண்டிருப்பார், தெரியுமா' என்கிறார் ஒரு ரசிகர். 'எப்படிச் சொல்கிறீர்கள்' என்று கேட்கப்பட்ட போது, ஒரு திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டு, 'அதில் அப்படித்தான் காட்டியிருக்கிறார்கள், பாருங்கள்' என்று பதிலளித்திருக்கிறார்.
    எது நிஜம்?, எது நிழல்? என்று பிரிக்க முடியாத படிக்கு எம்.ஜி.ஆரின் பிம்பம் தமிழக மக்களின் மனதில் குறிப்பாக அவரது ரசிகர்களின் மனதில் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது

    எம்ஜிஆரின் கதாநாயக பிம்பத்தை வலுவாக்குவதில் அவரது வில்லன்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
    எடுத்துக்காட்டாக
    #நம்பியாரின்_கதாபாத்திரத்தை மிக மோசமானதாக படைப்பதன் மூலம் தனது கதாபாத்திரம் மிக நல்லவனாக, மக்கள் மனதில் தங்கும் என்பதை உணர்ந்து தொடர்ந்து அதைச் செய்து வந்தார்.

    அதேபோல், திரைத்துறையில் சக கலைஞர்கள் அவரை மரியாதையாக அழைக்கும் ‘வாத்தியார்’ போன்ற வார்த்தைகளை தேங்காய் சீனிவாசன், நாகேஷ் போன்ற நகைச்சுவை நடிகர்கள் மூலம் திரைப்படத்திலும் பேசவைத்தார். இதன்மூலம் பொதுமக்களிடையே எம்ஜிஆர் என்ற பிம்பம் எந்த மாதிரியாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதை அவர் தனக்குத்தானே வடிவமைத்தார்.

    பேசும் காட்சி மொழியைச் சிறப்பாகப் புரிந்துகொண்டவர்களில் ஒருவராக எம்ஜிஆரைச் சொல்லலாம்.
    ‘கண் போன போக்கிலே’ என்னும் பாடலில் ‘இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்னும் வரி இரண்டாம் முறை பாடப்படும். அதுவரை மிகுதியும் தொலைவுக் காட்சியாகப் பாடலைக் காட்டிவந்த காமிரா இந்த வரி ஒலிக்கும்போது எம்ஜிஆரின் முகத்தின் மீது தன் பார்வையைக் குவிக்கும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்... என்னும் ஒலியுடன் எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் திரையை நிறைக்கும். இந்த வரிகள் அந்த முகத்துடன் பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும்.
    இப்படிப் பல காட்சிகளைக் கூறலாம்.

    ஏழைப்பங்காளன்,
    வெல்ல முடியாதவன்,
    தர்மத்தின் காவலன்,
    பகைவனுக்கும் அருளும் புனிதன், வள்ளல்,
    அன்னையைப் போற்றும் உத்தமன்,
    நாட்டுக்காக உழைக்கும் நல்லவன், பதவியை விரும்பாத எளியவன்,
    சமூகப் போராளி,
    சீர்திருத்தவாதி,
    நல்லவர்களைக் காத்து கெட்டவர்களை ஒடுக்குபவன்,
    பதவி ஆசை அற்ற, ஆனால் தேவைப்பட்டால் பதவியை ஏற்று அதன் மூலம் மக்கள் சேவை ஆற்றக்கூடியவன். இப்படி எத்தனை எத்தனையோ பிம்பங்கள்!

    இந்த பிம்பங்கள் அனைத்துக்கும் பின்னால் ஆயிரக் கணக்கான காட்சிப் படிமங்களும் ஒலித் துணுக்குகளும் நிற்கின்றன.
    #என்னை_நம்பிக்_கெட்டவர்கள் #யாருமில்லை_நம்பாமல்_கெட்டவர்கள் #பலர்உண்டு”, “

    #கரிகாலன்_குறிவைக்கமாட்டான், #வைத்தால்_தவற_மாட்டான்”

    என்பன போன்ற வசனங்கள் மூலம் ஆரம்ப காலத்திலேயே எம்ஜிஆரின் திரைப்படிமம் வெகு ஜனங்களின் மனவார்ப்பில் உருப்பெற ஆரம்பித்துவிட்டது. “இவரையா குறை சொல்ற?” என்று யாராவது ஆற்றாமையுடன் கேட்க, காமிரா எம்.ஜி.ஆரின் முகத்தைத் திரையில் நிறைக்க, குறை சொன்னவர் மன்னிப்புக் கேட்கும் சூழலை இவர் படங்களில் பார்க்கலாம்.

    “அவர் இல்லையேல் நாடு இல்லை, மக்கள் இல்லை” என ஒரு பாத்திரம் ஆவேசமாகப் பேச அடுத்த காட்சித் துணுக்கு,
    அமைதியாக நடந்து செல்லும் எம்.ஜி.ஆரைச் சித்தரிக்கும்.

    எதிரிகளைப் பந்தாடும் எம்ஜிஆர். ஆரம்ப காலப் படங்களில் கடுமையாக சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார்.
    சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார். உன்னைத் தாக்குவது என் நோக்கமல்ல என்று சொல்வது போல் இருக்கும். வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார்.
    அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்ஜிஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.

    “நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற” என்று அவரைச் சுற்றி நின்று பாடுவார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார்.
    சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்ஜிஆர் நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள்.

    “நான் ஆணையிட்டால்” என்று தங்களுக்காக முழங்கிய திரை பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.

    தனது படங்களில் மது குடிக்காதவராக நடித்த எம்.ஜி.ஆர் தந்தை பெரியாரைப் போலவே இறுதிவரை தன் வாழ்வில் அதை கடைப்பிடித்தார். அது, பெண்கள் மத்தியில் அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சராக இருந்தபோது 1984ஆம் ஆண்டு தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவந்து திரையில் கதாநாயகனாகத் தோன்றிய தனது கதாபாத்திரங்களுக்கும் தமக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என நிரூபித்தார்.

    சிறுவயதிலேயே அப்பாவை இழந்து அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த எம்ஜிஆர் இயல்பாகவே தாய்ப்பாசம் மிக்கவராக இருந்தார். தனது திரைப்படங்களிலும் தாய்ப்பாசம் மிக்கவராக தோன்றினார். அது, அவரை தமிழக மக்களின் குடும்பங்களில் ஒருவராக மாற்றியது .

    எம்ஜிஆரிடம் அதிசய, மாந்திரிக சக்திகள் இருப்பதாக நம்பியவர்கள் ஏராளம். 'ஐயா, நான் நிஜமாகவே அவரைச் சாட்டையால் அடிக்கவில்லை; இது பாவனைதான்' என்று பலமுறை நம்பியார் விளக்கமளித்த போதும் ரசிகர்கள் ஏற்கவேயில்லை.

    காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்ஜிஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக
    #நாடோடி_மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும்
    #எங்க_வீட்டுப்_பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம்.

    இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்கு பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம். ஆனால் தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்ஜிஆர் அந்தப் பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார்.

    ‘பெற்றால்தான் பிள்ளையா’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல்காரன், விவசாயி, தொழிலாளி, ரிக் ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கிடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.

    இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறன் வாய்ந்தவராக எம்ஜிஆர் உருவெடுத்தார்.

    #சிவாஜி, ஜெமினி, ssr,பாடல்களில்_நாம் #கண்ணதாசனையோ_வாலியையோ #உணர்வோம்.
    #எம்ஜிஆரின்_பாடல்களில்_எல்லாமே
    #தலைவர்_வார்த்தை_என்பதை_விட
    #வாக்காகவே_மாறியிருக்கும். #குயில்கள்_பாடும்கலைக்கூடம், #கொண்டது_எனது_அரசாங்கம்”
    என்பது கவிஞனின் கனவு.
    அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.

    திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும் எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்ஜிஆரைச் சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது.

    திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்ஜிஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன்படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை.

    தமிழ் திரை ரசிகர்களை பொறுத்தவரை தங்கள் வாழ்வின் யதார்த்தத்தை வெளிப்படுத்திய நடிகனைவிட அந்த யதார்த்தத்தை மறக்கச் செய்யும் 'ஹீரோயிச' போதையை அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆரையே அதிகம் விரும்பினர்.

    அதனால்தான் அவர் பொதுவாழ்வில் நுழைந்த போது அவருக்கு அமோக ஆதரவு அளித்தனர்.

    #இன்றும்_எம்ஜிஆர்_பாணியை #பின்பற்றும்_ரஜினி_விஜய்_போன்ற ஆக் ஷன்
    ஹீரோக்களுக்கு அரசியலில் அதிக வாய்ப்பிருப்பதற்கும்
    #சிவாஜியின்_பாதையில்_செல்லும் #கமல்_போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகமிருந்தும் அரசியலில் 'ஸ்கோப்' இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்

    முதல் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் தமிழ் பிராமணரான கல்யாண சுந்தரம் என்பவரால் 1954-ஆம் வருடம் துவக்கப்பட்டது.

    தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் சினிமா பாடல் புத்தகங்களை திரையரங்குகளுக்கு முன்னால் விற்றுக் கொண்டு, சிறு, சிறு வேலைகளைச் செய்து வந்தவர் எம்ஜிஆர். பின்னர் 136 திரைப்படங்களில் நடித்து உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர்களுள் ஒருவராக ஆனார். அகில உலக எம்ஜிஆர் ரசிகர் மன்றத்திற்கு 10,000 கிளைகள் தமிழகம் முழுவதிலுமாக இருந்து செயல்பட்டன.

    கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், செங்கோட்டையன்,
    அண்ணா நம்பி,
    திருச்சி சௌந்தரராஜன் முதலிய அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் தங்களுக்கென அரசியல் முக்கியத்துவத்தை ரசிகர் மன்றம் மூலமே பெற்றார்கள்.

    எம்.ஜி.ஆரே பொது வெளியில் தோன்றுகையில் “ரசிகர் மன்றங்களும் , கட்சியும் வேறு வேறு அல்ல! என்றார்.

    #இவன்
    என்றும் தலைவரை
    வணங்கும்

    படப்பை
    ஆர்.டி.பாபு........நன்றி...

  6. #3225
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நான்டவுசர்போட்டசிறுவயதில்இரட்டைமாட்டுவண்டியில்கோம் பைராஜ்கமால்தியோட்டரில்எம்ஜிஆர்படங்கள்திரையிடும்நாட ்களில்இருபுறமும்தட்டிகள்வைத்துஊர், ஊராகவிளம்பரம்செய்வார்கள், ஊர்துவக்கத்திலிருந்துஊர்எல்லைமுடிவுவரைபோஸ்டரில்உள் ளதலைவர்படத்தைபார்த்துக்கொண்டேதெருமுழுவதும்பின்தொடர ்ந்துஎம்ஜிஆரின்அழகுமுகத்தில்சொக்கியவன், அறுத்தேழில்எம்ஜிஆர்மன்றம்துவக்கிபணிசெய்தேன், எழுபத்திரண்டில்கிளைக்கழகத்தில்எம்ஜிஆருக்காககொடிஏற் றியவன், எண்பதில்தலைவர்இருக்கும்காலத்தில்போடிசட்டமன்றத்தில் போட்டியிடமனுசெய்தவன், பொன்னையன்தான்நேர்முகத்திற்குவந்தார், தலைவர்சொன்னவாக்காளர்பேரணிஉட்படஅனைத்திலும்பங்கேற்றவ ன், அன்றையபோடிஎம்எல்ஏவைஊருக்குள்நுழையக்கூடாதுஎன்றுமறிய ல்செய்தவன், போடிதொகுதியில்நின்றஅனைத்துவேட்பாளர்களுக்கும்அயராது பணிசெய்துவெற்றிக்குப்பாடுபட்டவன், அன்றிலிருந்துஇன்றுவரைகட்சியேபிரதானம்என்றுபணிசெய்து வருகிறேன், என்போன்றஅயராதுபாடுபட்டதொண்டர்களைகலக்காமல்காசுவாங்க ிக்கொண்டு, நகரச்செயலாளர், கூட்டுறவுதலைவர்பதவிகளைவிற்றுவிட்டார்கள், அவர்கள்திமுகாவில்இருக்கும்போதுஎன்னோடுமோதியவர் கள், இன்றுஅவர்கள்பதவியில், என்னைப்போன்றஅயராதுஉழைத்தவர்கள்சாதாரணகட்சிஉறுப்பினர ்கள், நான்கட்சிப்பணிமட்டும்செய்துவருகிறேன், இன்றுமேற்படிநபர்கள்கட்சிக்காரர்களைமதிப்பதில்ல ை, பணம்சுருட்டுவதிலேஅக்கறையோடுஇருக்கிறார்கள், இவர்களால்வாக்காளர்கள்மிகவும்விரக்தியில்உள்ளார ்கள், இன்றுபணஅரசியல், அன்றுஎன்சொந்தக்காசுசெலவுசெய்துகட்சிவளர்த்தவர்களையா ரும்கண்டுகொள்வதில்லை... Thanks...

  7. #3226
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ������ வரலாற்றில் அழியாத திரு.சைதை துரைசாமியின் துணிச்சலை நினைவு கூறும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உரை... ❤����

    திரு.சைதை துரைசாமி பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அரசு விழாவில் பேசிய பேச்சு... ⬇⬇⬇

    ➡ நாங்கள் அரசியல்வாதிகள் எப்படி இருக்கின்றோம்...?
    நான் இங்கு வந்து மேடையில் நிற்கும் போதே சைதாப்பேட்டை என்றாலே எலுமிச்சம்பழம் தான் எனக்கு ஞாபகம் வரும்... ��������

    ���� நான் ஒரு அரசியல்வாதி...❗����

    ☀☀☀எலுமிச்சம் பழத்தை மாலையாகப் போட்ட துரைசாமியைத் தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகு தான் இந்த நிகழ்ச்சி கூட ஞாபகம் வரும்... ������

    ❤❤ நான் ஒரு அரசியல்வாதி...❗❗❗

    ������ என்னுடைய அரசியல் கட்சியில் இருந்த ஒருவர், அப்போதிருந்த முதலமைச்சருக்கு, இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சம் பழ மாலையைப் போட்டு, அந்த மேடையையே அடித்து தூளாக ஆக்கி, அவரைத் தூக்கிக்கொண்டு போய் சிறைச்சாலையில் போட்ட அனுபவம் தான் என் கண்முன்னே முன்னே நிற்கும்... ������

    ������ ஆனால், அதை நினைத்துக் கொண்டு இங்கே வந்து, அந்த எண்ணத்தைப் பரிந்துரைக்கின்ற வகையில்நான் பேச ஆரம்பித் தேனானால், நான் முதலமைச்சராக இருக்க லாயக்கற்றவன் என்பதை இங்கே தெளிவாகக் கருதுகிறேன்... ��������

    ������ ஓட்டு வாங்குவது வேறு, அதை வாங்கிய பிறகு மக்களுக்குப் பணி செய்யும் நிலைமை வேறு... ������

    ✨⭐�� தன் தொண்டருக்காக எப்படி பட்ட எச்சரிக்கையுடன் புரட்சித் தலைவர் பேசுகிறார் என்பதற்கு இது ஒரு சான்று ....⚡⚡⚡...... Thanks...

  8. #3227
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இதயதெய்வம்
    #புரட்சிதலைவர்_பொற்பாதம்
    #வணங்கி_இனிய_காலை_வணக்கம்

    #விடுதலைப்_புலிகளை_வளர்த்த #பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்.
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    விடுதலைப்புலிகள் தலைமை தாங்கி முன்னெடுத்து வரும் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் நல்கிய உதவி அளப்பரியது.

    எல்லாவற்றையுமே முழுமையாக இங்கு ஆவணப்படுத்த முடியாதபோதும், ஒரு சில முக்கிய சம்பவங்களையாவது பதிவு செய்வது வரலாற்று ரீதியாகப் பயன்படும் எனக் கருதுகிறேன். இப்பொழுது தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்ட விரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது.

    எம்.ஜி.ஆர். அவர்கள் வளர்த்து விட்ட அ.தி.மு.க. கட்சியும், அதன் தலைமையும் இன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி நிற்கின்றன.

    ஆனால் அன்று எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ மக்களின் விடுதலைக்காக மிகவும் துணிச்சலான காரியங்களைப் புரிந்து எமக்கு கை கொடுத்து உதவியிருக்கிறார்.

    ஒரு தடவை சென்னைத் துறைமுகம் ஊடாக ஆயுதங்களை தருவிக்க முயன்றோம். எமக்கான நவீன ஆயுதங்கள் அடங்கிய கொள்கலனுடன் வெளி நாட்டுக் கப்பல் ஒன்று சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. துறைமுகம் ஊடாக ஆயுதக் கொள்கலனை வெளியே எடுக்க நாம் செய்த பகீரத முயற்சிகள் பயனளிக்கவில்லை. சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் உமா மகேஸ்வரன் ஒழுங்கு செய்த ஆயுதக் கப்பல் ஒன்று இந்தியப் புலனாய்வுத் துறையினரால் கைபற்றப்பட்டது. பல கோடி பெருமதியான ஆயுதங்களை புளொட் இயக்கம் இழக்க நேரிட்டது. புலிகளுக்கும் இந்தக் கதி நேரக் கூடாதென விரும்பினோம். ஆயுதங்களை பறி கொடுக்காமல் வெளியே எடுப்பதற்கு எம்.ஜி.ஆரின் உதவியை நாடுவதே ஒரேயொரு வழியாக எனக்குத் தென்பட்டது. பிரபாகரனும் நானும், எம்.ஜி.ஆரிடம் சென்றோம். நிலைமையை எடுத்து விளக்கினோம்.



    “நீங்கள் கொடுத்த பணத்தில் இந்த ஆயுதங்களை வாங்கியிருக்கிறோம். சென்னைத் துறைமுகத்தில் ஒரு கப்பலில், ஒரு கொள்கலனுக்குள் இந்த ஆயுதங்கள் இருக்கின்றன. எப்படியாவது அதனை வெளியே எடுத்துத் தர வேண்டும். நீங்கள் மனம் வைத்தால் முடியும்” என்று கேட்டோம். எதுவித தயக்கமோ, பதட்டமோ அவரிடம் காணப்படவில்லை. “இதுதானா பிரச்சினை? செய்து முடிக்கலாம்” என்று கூறிவிட்டு, துறைமுக சுங்க மேலதிகாரிகளுடன் தொலைபேசியில் கதைத்தார். பின்பு எம்மிடம், ஒரு சுங்க அதிகாரியின் பெயரைக் குறித்துத் தந்து, அவரைச் சந்தித்தால் காரியம் சாத்தியமாகும் என்றார் முதலமைச்சர். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நாம் மகிழ்வுடன் வீடு திரும்பினோம்.



    சென்னைத் துறைமுகத்திலிருந்து ஆயுதக் கொள்கலனை மீட்டு வரும் பொறுப்பை கேணல் சங்கரிடம் கையளித்தார் பிரபாகரன். ஒரு சில தினங்களுக்குப் பின்னர் ஒரு நாள் இரவு தமிழ்நாட்டுக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பாரம் தூக்கி பொருத்திய கனரக வாகனத்தில் எமது ஆயுதக் கொள்கலன் சென்னை நகரம் ஊடாகப் பவனி வந்து நாம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறக்கப்பட்டது. அதில் ஒரு தொகுதி ஆயுதங்கள் திருவான்மியூரில் நாம் வசித்த வீட்டில் குவிக்கப்பட்டன. ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கிகள், ரவைப் பெட்டிகள், கைக்குண்டுகளாக வீடு நிறைந்திருந்தது. அவை வீட்டிலிருந்து அகற்றப்படும் வரை என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.



    எந்தப் பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக ஆயுதங்களாகப் பெற்றுத் தந்ததற்காக எம்.ஜி.ஆருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் பிரபாகரன். அந்தப் பேருதவியின் நினைவுச் சின்னமாக இறக்கப்பட்ட ஆயுதங்களிலிருந்து ஒரு புதிய ஏ.கே.47 ரக தானியங்கித்துப் பாக்கியை எம்.ஜி.ஆரிடம் கையளித்தார் பிரபா. அந்தத் துப்பாக்கியை கழற்றிப் பூட்டி அதன் செயற்பாட்டு இயக்கத்தையும் விளங்கப்படுத்தினார். எம்.ஜி.ஆருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.



    இந்தச் சம்பவம் நிகழ்ந்து நீண்டகால இடைவெளியின் பின்னர் ஒரு தடவை சுகவீனமுற்றிருந்த முதலமைச்சரை நான் சந்திக்கச் சென்றேன். பிரபாகரனை சுகம் விசாரித்தார். தமிழீழத்தில் சௌக்கியமாக இருக்கிறார் என்றேன். அப்பொழுது தனது படுக்கையில் தலையணிகளின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஒரு ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்துக் காண்பித்து, “இது பிரபாகரன் தந்த நினைவுப் பரிசு” என்று பெருமிதத்துடன் சொன்னார்.



    எமக்கு தேவை ஏற்பட்ட வேளைகளில் எம்.ஜி.ஆர். அளித்த நிதி உதவிகளை ஆதாரமாகக் கொண்டே இயக்கம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு தடவை எமக்கு பெருமளவில் நிதி தேவைப்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்கள் என்னை எம்.ஜி.ஆரிடம் தூது அனுப்பினார். நான் எம்.ஜி.ஆரை சந்தித்த பொழுது முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனும் இருந்தார்.



    “இராணுவ - அரசியல் ரீதியாக எமது விடுதலை இயக்கம் பெருமளவில் வளர்ச்சி கண்டுவிட்டது. பல்வேறு வேலைத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டி இருக்கிறது. இம்முறை பெரிய தொகையில் பணம் தேவைப்படுகிறது. தம்பி பிரபாகரன் உங்களைத் தான் நம்பியிருக்கிறார்” என்றேன்.

    “பெரிய தொகையா? எவ்வளவு தேவைப்படுகிறது?” என்றார் முதல்வர்.

    “ஐந்து கோடி வரை தேவைப்படுகிறது” என்றேன்.

    எம்.ஜி.ஆர். அவர்கள் திரு. பண்ருட்டி இராமச்சந்திரனைப் பாhத்து, “மாநில அரசு மூலமாக ஏதாவது செய்யலாமா?” என்று கேட்டார்.

    அமைச்சர் சில வினாடிகள் வரை சிந்தித்து விட்டு, “போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்து மக்களுக்கென தமிழ்நாட்டு அரசால் திரட்டப்பட்ட நிதி இருக்கிறது. நான்கு கோடிக்கு மேல் வரும். அந்த நிதியை இவர்களுக்குக் கொடுக்கலாமே? ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு இந்நிதி வழங்கப்படுவதில் தப்பில்லை அல்லவா?” என்றார்.

    “அப்படியே செய்யுங்கள். இந்த விசயத்தை உங்கள் பொறுப்பில் விடுகிறேன்” என்றார் எம்.ஜி.ஆர்.

    இதனையடுத்து அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களின் இல்லத் திற்கு இரவு பகலாக அலைய வேண்டியிருந்தது. “தமிழ்நாட்டு அரசின் பொறுப்பிலுள்ள நிதி என்பதால், ஒழுங்கான முறையில் செய்ய வேண்டும். உங்களது தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் வாயிலாக அதிகாரபூர்வமான வேலைத் திட்டம் ஒன்று தயாரித்துத் தாருங்கள். இத் திட்டம் நான்கு கோடி ரூபா வரையிலான செலவீனங்களைக் கொண்டிருக்க வேண்டும்” என்றார் அமைச்சர். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு மருத்துவமனை நிர்மாணத்திற்கான வேலைத் திட்டத்தைத் தயாரித்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் அமைச்சரிடம் கையளித்தேன். இறுதியாக ஒரு அரச செயலகத்தில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கான காசோலை எனக்கு கையளிக்கப்பட்டது.

    இந்த நிதி விவகாரத்தில் அரச அதிகாரிகள் பலர் ஈடுபட்டதால், தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு செய்தி கசிந்து விட்டது. மறுநாள் காலை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கிலப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக இவ் விவகாரமும் அம்பலமாகியது. அது ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு அரசு நிதியுதவி செய்வதாகவும், தமிழக முதலமைச்சர் இலங்கையின் இறைமையை மீறுவதாகவும், ஜனாதிபதி ஜெயவர்த்தனா இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் கடுமையாக ஆட்பேசம் தெரிவித்தார். ராஜீவ் காந்தி உடனடியாகவே எம்.ஜி.ஆரிடம் தொடர்பு கொண்டு தமது ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.

    அன்று மாலை தன்னை அவசரமாக சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். எனக்கு அழைப்பு விடுத்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கவலையோடு நான் முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் இருந்தார்.

    ஆத்திரத்துடன் காணப்பட்டார் எம்.ஜி.ஆர். ஜெயவர்த்தனா ராஜீவிற்கு முறையிட்டதையும், ராஜீவ் தனக்கு ஆட்சேபணை தெரிவித்ததையும் விவரமாகச் சொன்னார். சிங்கள வெறியன் என்றும், ஈழத் தமிழர்களுக்கு கொடுமை இழைப்பவன் என்றும் முதலில் ஜெயவர்த்தனாவைத் திட்டித் தீர்த்தார். ராஜீவையும் விட்டு வைக்கவில்லை. துணிவில்லாதவர் என்றும், பயந்த பேர்வழி என்றும் ராஜீவிற்கும் திட்டு விழுந்தது. “ஈழத் தமிழர்களுக்கு திரட்டிய நிதியை அந்த மக்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலை இயக்கத்திற்கு கொடுப்பதில் என்ன தவறு? இதனை பிரதம மந்திரி புரிந்து கொள்ளவில்லையே” என்று ஆதங்கப்பட்டார் முதல்வர்.

    “அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லை அல்லவா?” என்று கேட்டார்.

    “அந்தக் காசோலை என்னிடம் தான் இருக்கிறது” என்றேன். அதனை அமைச்சரிடம் திருப்பிக் கொடுக்கும்படி சொன்னார்.

    “நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள். எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி தருகிறேன்” என்றார். போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் எம்.ஜி.ஆருக்கும், அமைச்சர் பண்ருட்டிக்கும் நன்றி சொல்லி விட்டு புறப்பட்டேன். வீடு திரும்பியதும், நடந்ததை எல்லாம் பிரபாகரனுக்கு எடுத்துச் சொன்னேன். முதல்வரின் பெருந்தன்மையைப் பாராட்டினார் பிரபாகரன். மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் பாதாளப் பண அறையிலிருந்து நான்கு கோடி ரூபாய் புலிகளின் கைக்குக் கிட்டியது.

    விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் மத்தியில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது.

    - இவ்வாறு அன்டன் பாலசிங்கம் எழுதியுள்ளார்.

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு........ Thanks...

  9. #3228
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #MGR-ரின் வெற்றியும் 'வாஷிங்டன் போஸ்ட்' செய்தியும்....

    " 'அன்புக்கு நானடிமை...' என்ற பாடல் இடம்பெற்ற "இன்று போல் என்றும் வாழ்க" என்ற படத்தில் நான் இன்னொரு பாடலையும் எழுதினேன். அந்த பாடல்தான்....

    "இது - நாட்டைக் காக்கும் கை
    உன் - வீட்டைக் காக்கும் கை
    இந்தக் கை நாட்டின் நம்பிக்கை
    இது - எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை"

    "இது- எதிர்காலப் பாரதத்தின் வாழ்க்கை" என்றுதான் முதலின் எழுதினேன். பாரதத்தின் என்ற சொல்லை நீக்கிவிட்டுத் தாயகத்தின் என்று மாற்றியவர் எம்.ஜி.ஆர்.தான்.

    "அன்புக்கை இது ஆக்கும் கை - இது
    அழிக்கும் கையல்ல...
    சின்னக்கை ஏர் தூக்கும்கை - இது
    திருடும் கையல்ல....
    நேர்மை காக்கும்கை - நல்ல
    நெஞ்சை வாழ்த்தும்கை - இது
    ஊழல் நீக்கித் தாழ்வைப் போக்கிப்
    பேரெடுக்கும்கை" இப்படி எல்லா சரணங்களிலும் 'கை' 'கை' என்றுதான் வரும்.

    நான் எம்.ஜி.ஆர் கையைப் பற்றித்தான் எழுதினேன். ஆனால் இன்று வேறொரு கைக்குப் (காங்கிரஸ்) பிரச்சாரப் பாட்டாக ஆகிவிட்டது. என்றாலும், அன்புக்கு நானடிமை, இது நாட்டைக் காக்கும் கை என்ற இரண்டு பாடலையும்தான் எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.

    இப்போது போல அப்போது சி.டி.யோ கேஸட்டோ இல்லாத காலம். எந்தப் பாடலாக இருந்தாலும் அதாவது சினிமாப் பாடலாக இருந்தாலும், கட்சிப் பாடலாக இருந்தாலும், பக்திப் பாடலாக இருந்தாலும் எல்லாம் கல்கத்தாவுக்கு அனுப்பி இசைத்தட்டாக வெளிவரச் செய்த பிறகுதான் பயன்படுத்துவார்கள். அதற்கான வசதி அப்போது சென்னையில் கிடையாது.
    அதனால் கல்கத்தாவிலுள்ள HMV இசைத்தடு கம்பெனிக்கு அனுப்பி ஒரே வாரத்தில் இசைத்தட்டாக வெளிவரச் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.

    வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார். அப்போது அமெரிக்காவிலிருந்து வெளிவந்த 'வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை நான் எழுதிய இந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு என் பெயரையும் குறிப்பிட்டு இதைப் போன்ற கவிஞர்கள் எழுதிய கருத்துள்ள பாடல்களைப் பாடி மக்களைக் கவர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார் என்று எழுதியிருந்தது. டைரக்டர் சங்கர்தான் அந்தப் பத்திரிகையை என்னிடம் காட்டினார்.

    படிப்பதற்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அவர் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு அவர் செய்த நன்மைகள், ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள், மக்களிடம் அவருக்கிருந்த அணுகுமுறை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை இதெல்லாம் சேர்ந்துதான் அவரை ஆட்சிக்குக் கொண்டுவந்ததே தவிர இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அல்ல.

    ஏன்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களில் இதைப்போல் நல்ல பாடல்கள் இல்லையா? எத்தனையோ கவிஞர்கள் இதைவிடச் சிறந்த கருத்துள்ள பாடல்களை சிவாஜி படங்களில் எழுதியிருக்கிறார்களே. நான் கூட சிவாஜி படங்களுக்கு எழுதியிருக்கிறேனே.

    சிவாஜி ஒரு கட்சி கூட ஆரம்பித்தாரே. ஒரு தொகுதியில் கூட அவராலே ஜெயிக்க முடியவில்லையே. அதற்கு என்ன காரணம்?
    சினிமா பிரபலம் என்பது வேறு. அரசியலில் வெற்றி பெறுவது என்பது வேறு.

    எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. கதர்ச்சட்டை அணிந்தவர்கள் எல்லாம் காமராஜர் ஆகிவிட முடியுமா? சினிமா என்பது பிரபலத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுமே தவிர அதை வைத்து எல்லாரும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது.

    சாதாரண நாடக நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தபோது பத்து ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் தர்மத்திற்கு இரண்டு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கிவிடுவாராம்.

    'மந்திரி குமாரி' படத்தில் கதாநாயகனாக நடித்தபோது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாயாம். அந்த ஆயிரம் ரூபாயில் தர்மத்திற்காக நூறு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். அவர் படங்களுக்குப் பாடல் எழுதும்போது எங்களிடம் இதைச் சொல்லி "நீங்களும் இப்படி உதவுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்." என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

    அவரை நாடி யாரேனும் ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார்.

    அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும், பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர்.

    எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!"

    - கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் நினைவுகளிலிருந்து........... Thanks.........

  10. #3229
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆர். அவர்களின் மூத்த சகோதரர் பெரியவர் சக்கரபாணி.

    தம்பியை கலைத் துறைக்குத் தயார் செய்தவர்.

    அ.தி.மு.க. துவங்கிய காலத்தில் அவரும் பல பொதுக் கூட்டங்களுக்குச் சென்றார்.

    அ.தி.மு.க.விற்கு அரசியல் திருப்பு முனை ஏற்படுத்தியது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல்தான். அதன் பிரச்சாரப் பணியிலும் பங்கு பெற்றார்.

    மறைந்த பாலகுருவா ரெட்டியாரும், பரமனும்தான் அவரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

    தற்போது சென்னை லாயிட்ஸ் சாலையில் செயல்படும் அ.தி.மு.கழகத் தலைமைக் கட்டிடம் வி.என். ஜானகிக்குச் சொந்தம். அதனைக் கழகத்திற்காக எம்.ஜி.ஆர். எழுதி வாங்கினார்.

    அந்தக் கட்டிடத்தின் பின் பகுதியில்தான் ஆரம் பத்தில் அண்ணா நாளேட்டின் அலுவலகமும் அச்சகமும் செயல்பட்டன.

    அந்தக் கட்டிடத்திலிருந்து சில கட்டிடங்கள் தள்ளி எம்.ஜி. சக்கரபாணியின் இல்லம்.

    ஒரு நாள் அவருடைய பணியாளர் வந்தார். அய்யா அழைக்கிறார் என்றார். 'அண்ணா’ அலுவலகத்திலிருந்து சென்றோம். தமது அருகிலிருந்தவர்களைப் பெரியவர் போகச் சொன்னார். எதிரே நாற்காலியில் அமரச் சொன்னார்.

    'தம்பியிடம் நீங்கள் பேசவேண்டும்'

    'ஏன்? உங்கள் மீது உங்கள் தம்பி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நீங்களே பேசலாமே?' என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

    'இந்த விஷயத்தை நான் பேச முடியாது. நீங்கள்தான் பேசவேண்டும்' என்றார்.

    'சரி' என்றேன்..

    சுற்றும் முற்றும் பார்த்தார். சற்று குரலை இறக்கி,

    'என்னை கழகப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கச் சொல்லுங்கள்' என்றார்.

    அப்போதைக்கு அவருடைய கோரிக்கை நியாயமானதாகத்தான் தெரிந்தது. தம்பியிடம் அண்ணன் இமாலய வரம் கேட்டு விட்டாரா?

    சரி என கூறிவிட்டு விடைபெற்றேன். அறை வாசல்வரை வந்தார்.

    'சோலை, தம்பி நல்ல மூடில் இருக்கும்போது பார்த்துப் பேசுங்கள்' என்றார். ஒரு வெண்கலச் சிரிப்பு.

    கழகத்தில் அவர் மாநில அளவில் ஒரு பதவி கேட்கவில்லை.

    செயலாளர் பதவி கேட்கவில்லை.

    கழகத்தை மண்டலங்களாகப் பிரிக்கச் சொல்லவில்லை. அதில் தன்னை ஒரு மண்டலத்திற்கு அதிபதியாக நியமிக்கச் சொல்லவில்லை.

    ஐநூறுக்கு மேற்பட்டோர் இடம் பெறும் மாநிலப் பொதுக்குழுவில் தன்னையும் ஒரு உறுப்பினராக நியமிக்கச் சொன்னார்.

    அடுத்த சில தினங்களில் ஆற்காடு சாலை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்தோம். உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். உரையாடலுக்கு நடுவே,

    'பெரியவர் அழைத்தார்' என்றோம்.

    'என்ன?'

    'அவருக்கு ஒரு பெரிய ஆசை'

    'என்ன?'

    சற்றுத் தயங்கினேன். துணிச்சலை வரவழைத்துக்கொண்டு..

    'அவரும் கழகப் பணி செய்ய விரும்புகிறார். அதற்கு அங்கீகாரமாக பொதுக்குழு உறுப்பினர் பதவி மீது அவருக்கு ஆர்வம்' என்றேன்.

    அவரது பொன்மேனியில் நூறு மைல் வேக ரத்த ஓட்டம். முகம் சிவந்தது.

    'இல்லை. அதாவது… வந்து…' என்று இழுத்தேன். அதற்கு மேல் நா அசையவில்லை. சத்தியாக்கிரகம் செய்தது.

    'சும்மா இருக்கமாட்டீர்களா?' -கோபத்தோடு கேட்டார்.

    நமக்கு சப்தநாடியும் தந்தி அடித்து அடங்கிவிட்டது.

    எம்.ஜி.ஆருக்கு இயற்கை அளித்தது கொடுத்துச் சிவந்த கரங்கள். உண்மை.

    ஆனால் உடன்பிறந்த அண்ணனை கழகப் பொதுக்குழுவில் ஒரு உறுப்பினராகக் கூட நியமிக்க மறுத்துவிட்டார்.

    அண்ணனுக்குக் கனவில் பூத்த மலரும் கருகிப் போய்விட்டது.

    'துரைக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கிறேன். கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.' என்றார் எம்ஜிஆர்.

    நான் விடைபெறும்போது எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னார்.

    துரை அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி. எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய விசுவாசி.

    துரையும் நாமும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு பிரிவில் பணி செய்து கொண்டிருந்தோம்.

    அடுத்த நாள் எம்மை துரையே அழைத்தார்.

    "தலைவர் தங்களிடம் தனியாக ஒரு தகவல் சொல்லச் சொன்னார்' என்றார்.

    ஏறிட்டுப் பார்த்தோம்.

    'இனிமேல் பெரியவரை யாரும் பொதுக்கூட்டத்திற்கு அழைத்தால் அவருக்கு உடல்நிலை சரியில்லை' என்று தலைவர் சொல்லச் சொன்னார்.

    'இது தங்களுக்கு மட்டும் தெரிந்த தகவலாக இருக்க வேண்டும் என்றும் தலைவர் சொல்லச் சொன்னார்' என்றார் துரை.

    அடுத்த சில தினங்களில் எம்.ஜி.ஆர். அழைத்தார். நீண்ட கலந்துரையாடல். விடை பெறும்போது அவர் சொன்னார்.

    'சோலை… நான் அரசியலில் இருக்கும்போது அவரும் இருக்க வேண்டுமா? உலகம் என்ன சொல்லும்? அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்று சொல்லமாட்டார்களா?' என்றார்.

    மெய்சிலிர்த்துப் போனோம். அவர் அரசியலில் அடியெடுத்து வைத்த பின்னர் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார்.

    அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒரு காய் நகர்த்தினால் எதிரி எப்படி காய் நகர்த்துவார் என்பதனை அவர் சிந்தித்தே ஒவ்வொரு முடிவையும் எடுத்தார்.

    'அண்ணா விரும்பியிருந்தால் தனது வளர்ப்பு மகனை அரசியலில் அறிமுகம் செய்திருக்க முடியாதா? அந்தப் பையன்கள் உழைத்து முன்னேறுவது வேறு. திணிப்பது வேறு' என்று விளக்கம் தந்தார்.

    அவரது துணைவியார் வி.என்.ஜானகி அரசியலிலிருந்து வெகுதூரம் விலகியே இருந்தார். நிர்வாகத்தில் தலையிட்டார், பரிந்துரை செய்தார் என்ற குற்றச் சாட்டே எழுந்ததில்லை.

    அதே சமயத்தில் மதிக்கத் தெரிந்த இன்னொரு எம்.ஜி.ஆரையும் பார்த்தோம். அவர் முதல்வராகப் பதவியேற்றார். அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து அண்ணன் சக்கரபாணியிடம் ஆசிர்வாதம் வாங்க அனைத்து அமைச்சர்களுடன் வந்தார்!"

    -எழுத்தாளர் சோலை......... Thanks.........

  11. #3230
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சேலம் மாவட்டத்துக்கு அப்போது சில அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்.
    அதில் ஒன்று, சேலம் மாவட்ட பால் பண்ணையில் (பால்வளக் கூட்டுறவு ஒன்றியம்) நடந்த அரசு விழா.

    அதன் தலைவரை ‘பெருந்தலைவர்’ என்று பொறித்து அச்சடிக்கப்பட்டிருந்த அழைப்பிதழை வாங்கிப் பார்த்த எம்.ஜி.ஆர். முகம் சுழித்தார். சற்று நேரத்துக்கு பின் ‘மைக்’ பிடித்தார்.

    “பெருந்தலைவர் என்றால் அது-காமராஜர் மட்டுமே. பெருந்தலைவர் என்ற பெயர் காமராஜருக்கு மட்டுமே சொந்தம்.
    இனிமேல் யாரும் தங்கள் பெயருக்கு முன்னால் பெருந்தலைவர் என்று போட்டுகொள்ளக்கூடாது.
    ஒன்றிய பெருந்தலைவர்கள், பால் வள கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர்கள் இனி தலைவர்கள் என்றே அழைக்கப்படுவார்கள்’’ என்று எம்.ஜி.ஆர். அறிவித்தபோது கர ஒலியால் சேலம் அதிர்ந்தது............. Thanks.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •