Page 352 of 402 FirstFirst ... 252302342350351352353354362 ... LastLast
Results 3,511 to 3,520 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3511
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சன் டிவி நேற்று" எங்க வீட்டு பிள்ளை", படத்தின் மூலமாக சன் டிவி மீண்டும் உயிர் பிழைக்க வைத்தது...

    தலைவர் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் அந்த படம்..என் தங்கை.. பாசம் இறுதி காட்சி அந்த நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் புரட்சித் தலைவர் தலைசிறந்த நடிகர் உதாரணம் இந்தி நடிகர் ராஜ்கபூர் எம் ஜி ஆர் போல் நடிக்கவும் தெரியாது... அவர் மாதிரி படம் எடுக்க முடியாது ...அவர் ஒரு இயற்கை நடிப்பில் நான் ரசிகன் ... யாரையும் இப்படி புகழ்ந்தது கிடையாது... ராஜ்கபூர் அவர்கள்.......... Thanks... to BMV.,

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3512
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நான்ராகவேந்திரா மணடபம் கட்டும் போது ஒரு பெரிய புள்ளி இடைஞ்சலாக தொல்லை கொடுக்க நான் எவரை எல்லாமோ பார்த்து டெல்லி வரை சென்றும் ஒருபலனில்லை கடைசியாக எம்ஜிஆரிடம் முறையிட்டேன் எம்ஜிஆர் நீ இப்போது வெளியூர் செல்லுகிறாய் சென்று வா எனகூறி அனுப்பி வைத்தார் பின் ஒருநாள் தோட்டத்திற்க்கு வர சொன்னார்எம்ஜிஆர் நான் சென்ற போது எனக்கு இடைஞ்சல் செய்த பெரும்புள்ளி வாய் பொத்தி கைகட்டி எம்ஜிஆர் முன் இருந்தார் பின் சுகமாக மண்டபம் கட்டி முடித்தேன் அது தான் எம்ஜிஆர்

    எம்ஜிஆர் சிலை திறந்து ரஜினி காந்து உரையில்

    நீ பழைய படங்களில் பீலா விட்டு பஞ்சு வசனம் கூறுவது போல அல்ல அல்ல எம்ஜிஆர்
    ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடாத எம்ஜிஆர் டா

    வாழ்க எம்ஜிஆர்புகழ்....... Thanks...

  4. #3513
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உழைத்து ஈட்டிய பணத்தில் வாழ்ந்தேன்
    உழைத்து ஈட்டிய பணத்தை மற்றவர்க்கு கொடுத்து மகிழ்ந்தேன்
    ஒன்றும் இல்லாமல் வந்தேன்
    மக்கள் அன்பு மட்டும் எனக்கு என்று சேர்த்து வைததேன்்
    அதுவே என் மூலதனம்
    அன்பன் எம்ஜிஆர்

    வாழ்க எம்ஜிஆர் புகழ்..... Thanks...

  5. #3514
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 43 Poster

    1958ஆம் வெளிவந்த எம்ஜியாரின் ஒரே படமான "நாடோடி மன்னன்" பெற்ற மாபெரும் வெற்றியைப் பார்த்தோம்.

    எந்த ஒரு சாதனைக்குப் பிறகும் திருஷ்டி கழிப்பது அவசியம்தானே! சிகரத்தைத் தொட்ட பிறகு அடுத்த அடி இறக்கம்தானே! அதேதான் நிகழ்ந்தது 1959ஆம் ஆண்டு வெளிவந்த ஒரே எம்ஜியார் படமான "தாய் மகளுக்குக் கட்டிய தாலி"க்கு.

    சி.என் அண்ணாதுரையின் கதைக்கு ராம அரங்கண்ணல் வசனம் எழுதி, முதல் மற்றும் இறுதி முறையாக ஜமுனா எம்ஜியாருடன் ஜோடி சேர்ந்து டி.ஆர்.பாப்பா இசையில் ஓரிரு இனிய பாடல்களையும் ('சின்னஞ்சிறு வயது முதல்) கொண்டிருந்த இந்தப்படம் யாருக்கும் பயனின்றி
    பெரிய வெற்றி அடையவில்லை. தமிழ்த்திரை வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ராண்டார் கையின் சொற்களில் சொல்வதானால்: 'இந்தப் படம் இன்றும் எவருக்கேனும் நினைவிருந்தால், அதன் விசித்திரமான தலைப்புக்காகத்தான்!'

    எம்ஜியாரின் படங்கள் பலவற்றிலும் குணசித்திர பாத்திரங்களில் பங்களித்த அவரது மூத்த சகோதரர் எம்ஜி சக்ரபாணி இதில் வில்லன் வேடம் தாங்கி அருமையாக நடித்தாராம்! யாருக்குத் தெரியும்! .சுவாரஸ்யம் இல்லா திரைக்கதை படத்திற்கு சுமார் சறுக்கல் இராம அரங்கலுக்காக சம்பளம் வாங்கமல் நடித்த படம் என்று பேச்சு உறுதியாக தெரியவில்லை

    வசூல் சக்ரவர்த்தியின் திரை வாழ்க்கையிலும் கடந்து போக வேண்டிய, மறந்து போக வேண்டிய படங்கள் இருந்தன; அவற்றுள் இதுவும் ஒன்று!...... Thanks...

  6. #3515
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 44 (1960) Poster

    1958ஆம் வருடம் உச்சத்துக்குச் சென்ற எம்ஜியாரின் திரைப்பயணம் அடுத்த வருடம் வெளியான ஒரே ஒரு படத்தின் மூலம் சறுக்கியது என்பதைப் பார்த்தோம்; அதற்கு அடுத்த வருடமான 1960 எம்ஜியாருக்கு ஆவரேஜாகவே அமைந்தது. அந்த வருடம் மொத்தம் 3 படங்கள் அவருக்கு வெளியாயின; அவற்றுள் முதலாவதாக வந்தது பாக்தாத் திருடன்.
    இதற்கு முந்தைய தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ஜமுனா எம்ஜியாருடன் இணைந்த ஒரே படமாக அமைந்தைப் போல, பாக்தாத் திருடனும் வைஜயந்தி மாலா எம்ஜியாருடன் நடித்த ஒரே படமாக அமைந்தது.
    அலிபாபாவைப் போல அராபியக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் அதைப் போல பெரிய வெற்றி அளவுக்கு இல்லாமல் வெற்றி பெற்றது. பொதுவாக எம்ஜியாரின் படப்பாடல்கள் பெரிதும் பாப்புலராகும்; ஆனால், கோவிந்தராஜுலு இசையமைத்த இந்தப் படப் பாடல்கள் அந்த அளவிற்குச் செல்லவில்லை. பெரும் பொருட்செலவில் அரங்குகள் அமைத்து தயாரிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இப்படம் அதிகபட்சம் முதலுக்கு மோசமில்லை ,லாப நிலை அடைந்தது....... Thanks...

  7. #3516
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 45 (1960) Poster

    1960ஆம் ஆண்டில் வெளிவந்த இரண்டாவது எம்ஜியார் படம் ஆவரேஜாகத்தான் போனது.
    18ஆம் நூற்றாண்டில் செஞ்சிக் கோட்டையை ஆண்டு தேசிங்கு என்று தமிழ் மண்ணில் அமரத்துவம் பெற்று நாட்டுப் பாடல்களிலும் இடம் பெற்ற தேஜ் சிங் என்னும் ராஜபுத்திர அரசன் வரலாற்றைச் சொல்வதாக அமைந்த இப்படத்தில் எம்ஜியாருடன் எஸ்எஸ்ஆர் பானுமதி பத்மினி ஆகியோர் இணைந்து நடித்தனர். தேசிங்கு ராஜாவாகவும், அவர் தகப்பனாருக்கு ஒரு இஸ்லாமியப் பெண்ணுடனான தொடர்பில் பிறந்த மற்றொரு மகனாகவும் இரு வேடங்களில் எம்ஜியார் நடித்தார். ஜி. ராமநாதனின் இசையில் வனமேவும் ராஜகுமாரி (சீர்காழி, ஜிக்கி) சரசராணி கல்யாணி (சிஎஸ் ஜெயராமன்/ பானுமதி) ஆகியவை இன்றும் ஒலிக்கக் கேட்கலாம். எம்ஜியாரின் வெற்றிப்படங்களான மதுரை வீரன், நாடோடி மன்னன், மகாதேவி ஆகியவற்றிற்கு வசனம் எழுதிய கண்ணதாசன்தான் இதிலும் பணியாற்றினார்.
    ஒரு எம்ஜியார் படத்துக்குத் தேவையான படிமங்கள் எல்லாம் இருந்தும், படத்தின் இறுதியில் ஒரு எம்ஜியாரை இன்னொரு எம்ஜியாரே போரில் கொன்றுவிட்டுப் பிறகு அது தனது உடன் பிறந்த சகோதரன் என்று அறிந்து தானும் தன் மீதே வாளைப் பாய்ச்சிக் கொண்டு மடிந்து போகும் கிளைமாக்ஸ் அவரது ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை
    இதில் ஒரு சுவாரசியமான தகவல்: துவக்கத்தில் எம்ஜியாருக்கு ஜோடியாக பத்மினியும், பானுமதி எஸ்எஸ்ஆரின் காதலியாகவும் ஒப்பந்தமாகி, பத்மினிக்கு ஒரு பரதநாட்டியப் பாடல் காட்சியும் எடுக்கப்பட்டு விட்டது. பின்னர் பானுமதியின் பிடிவாதம் காரணமாக அவரை எம்ஜியாரின் ஜோடியாக்கி, பத்மினியை இஸ்லாமியப் பெண்ணாக மாற்றி அவரது நாட்டியக் காட்சியை வெட்டினார்கள். இப்படிக் கதையும் கதாபாத்திரங்களும் பல கட்டங்களில் மாற்றப்பட்டு நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததால், படம் எழுபது நாட்கள் ஓடின......... Thanks...

  8. #3517
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது. அதுபற்றி லதா கூறியதாவது:-

    நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன். இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.

    மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும். எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது. நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார்.

    கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும் என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன். நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும் என்று பாராட்டினார்.

    இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது. இவ்வாறு லதா கூறினார். தமிழில் எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த நேரத்தில், தெலுங்குப் படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணமராஜு, சோபன்பாபு ஆகியோருடன் லதா நடிக்கவே செய்தார். இதில் பல படங்கள் `ஹிட்' படங்கள். சிரித்து வாழவேண்டும் என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த நேரத்தில், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவுடன் சேர்ந்து நடித்தார்.
    (மும்மொழிப் படத்தில் கதாநாயகி)........ Thanks...

  9. #3518
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வீரப்பன் சொல்கிறார்...
    *எம்.ஜி.ஆர்* *முதலமைச்சராக இருந்த பொது,* *ஒருநாள் நான் ராமாவரம்*
    *தோட்டத்திற்கு* *போயிருந்தேன்*. *அப்போது*
    *ஒரு பழைய நாடக நடிகர்* *அங்கு வந்திருந்தார்.*
    *அவரிடம்,* *என்ன* *விஷயமாக வந்திருக்கிறீர்கள* ?' *என்று கேட்டேன்*
    *அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே*
    *பட்டினி..ஒன்றும் முடியவில்லை*. *நான்*
    *சின்னவரோட நாடகத்தில* *நடிச்சிருக்கேன்*ஏதாவது* *உதவி* *கேட்கலாம்னு* *வந்திருக்கேன் என்றார்*
    '*சரி உட்காருங்க* *எம்.ஜி.ஆர் வெளிய*
    வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்.
    சிறிது நேரம் கழித்து எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
    அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
    வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
    " இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும் " என்று சொல்லிவிட்டு,காரில்
    ஏறிச் சென்றுவிட்டார்.
    அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
    தவிப்புடன் நின்றார்.
    " இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
    சொன்னாருல்ல,மதியம் சாப்டுட்டு
    போங்க " என்றேன்.
    "நான் எப்படிச் சாப்பிடுவது..என்
    குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
    என்றார் அவர்.
    'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
    அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்.
    சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
    சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
    எம்.ஜி.ஆர் கோட்டையிலிருந்து வந்து
    விட்டார்.
    அந்த நடிகரிடம்,மதியம் திரும்ப
    எம்.ஜி.ஆர் வெளியே புறப்படும்போது
    அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
    போங்க..என்றேன். சரி..என்றார்.
    வெளியே வந்த எம்.ஜி.ஆர் அவரைப்
    பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
    கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார்.அந்த
    நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
    மீண்டும் நின்றது.எம்.ஜி.ஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
    அவர் காருக்கு அருகில் சென்று சற்று
    தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
    அவரும் காருக்கு மிக அருகில் போய்
    நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
    ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
    எம்.ஜி.ஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.
    அவர் என்னருகே வந்து கவரைப்
    பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
    இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
    விட்டது.அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
    எனக்குத் தான் அதிக சந்தோஷம்.
    மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
    சென்றிருந்த போது எம்.ஜி.ஆரிடம்
    கேட்டேன்..." கஷ்டத்துல வந்த அந்த
    நடிகரை சாப்பிடச் சொன்னீங்க,ஆனா
    அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
    கேட்காம போயிட்டீங்க.திரும்ப மதியம்
    வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க.அந்த
    நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு.
    இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
    வச்சு அனுப்புறீங்க. ஏன் அண்ணே
    அப்படிச் செஞ்சீங்க " என்று கேட்டேன்.
    சில கணங்கள் என்னை அமைதியாகப்
    பார்த்துவிட்டு அவர் சொன்னார்.
    " எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
    அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
    கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
    சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
    படுவார்.அவரா கேட்டா கம்மியாத் தான்
    கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
    கொடுத்திடனும் " என்றார்.
    எனக்குத் தான் இப்ப கண் கலங்குச்சு.
    அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
    அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
    ஈகை இயல்பு பற்றியும் இருவேறு
    கருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.
    *அதனால்* *தான்*அவர் இறந்தும்* *இன்னும்*
    *வாழ்ந்து* *கொண்டிருக்கிறார்*.......... Thanks...

  10. #3519
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வாழவைக்கும் #தெய்வம்

    S.Ve.Shekar commented in Twitter...

    நடிகர் எஸ்வீ.சேகரின் டிவிட்டர் பின்னூட்டம்

    நேற்று இரவு 11.06 க்கு பல வீடுகளில் அலறல் சத்தம். எம்ஜிஆர் நம்பியாரை அடிக்கும் போது வந்த சந்தோஷ அலறல். அன்று திமுகவிலிருந்து அதை ஜெயிக்க வைத்தார். இப்ப சன் டிவியில வந்து டிஆர்பி ஏத்தி திமுக குடும்பத்துக்கு பொழைப்பு குடுக்குரார்.

    #அதான் #MGR #the #Great........ Thanks...

  11. #3520
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சன் டிவியில் பழைய எம்ஜியார் படங்களை பகல் நேரத்தில் தான் போடுவார்கள். வேலைக்கு செல்பவர்கள் பார்க்க முடியாது. முதன் முறையாக இரவு 9.30 மணிக்கு ஒளி பரப்பினர். பெரு வாரியான மக்கள் கண்டி களிக்க டிஆர்பி எகிறியது. இனியாவது மாதம் ஒருமுறை மாலை 7 மணி அல்லது இரவு 9 மணிக்கு எம்ஜியார் படங்களை போடவும். இந்த திரைக்கு வந்து சில மாதங்களே ஆன பப்படங்கள் எல்லாம் வேண்டாம்........ Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •