Page 364 of 402 FirstFirst ... 264314354362363364365366374 ... LastLast
Results 3,631 to 3,640 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3631
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1977-ம் ஆண்டு ஜூன் 30 அன்று, புரட்சித் தலைவர் பிரபுதாஸ் பட்வாரியின் முன்னிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அது அரசியல் சட்ட ரீதியாகவும், சம்பிரதாயப்படியும் ஏற்றுக் கொண்ட பதவி ஏற்பு விழா!

    ஆனால், அது முடிந்ததும் புரட்சித் தலைவர் அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள மேடைக்கு வந்தார். அண்ணா சாலையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகமே தலைநகருக்கு வந்து விட்டது போல, அண்ணா சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பல இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.
    பத்து இலட்சம் என்று ஒரு பத்திரிகையும் 20 இலட்சம் என்று இன்னொரு பத்திரிகையும் எழுதும் அளவுக்கு மக்கள் கூட்டம்கூடி ஆர்ப்பரித்தது. அப்போது புன்னகையோடு மேடை ஏறி, மக்களின் வாழ்த்துக்களைக் கையசைத்து ஏற்றுக்கொண்டார். அந்தச் சரித்திர நாயகன். அந்த மக்கள் கடலுக்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்தார். பின்னர் உரையாற்றினார்.
    அங்கே ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது, அரசாங்கச் சடங்குதான். நமது இதய தெய்வம் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் ஆணையிட்டு, உங்களுக்கு முன்னால் பதிவியேற்பதைத்தான் நாங்கள் பெருமையாக்க் கருதுகிறோம்.
    இங்கே நடப்பது உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் விழாவாகும்.

    உங்கள் முன்னால் அமைச்சர்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் சார்பாகவும், தமிழக மக்களுக்கும், பல நாடுகளில், பல மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக் கொள்கிற அனைத்து மாநிலங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு செய்தியை இங்கே கூற விரும்புகின்றேன்.
    மக்களின் எண்ணங்களையும், மக்களின் விருப்பங்களைச் சட்டமாக்கவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருக்கிறது.
    இதனை எங்கள் மனத்தில் இருத்தி, லஞ்சமற்ற, ஊழலற்ற நீதிமன்றங்களில் தலையீடு அற்ற ஆட்சியை நடத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.

    உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் கொள்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்துவோம்.
    இந்த உயர்ந்த லட்சியத்தை எங்கள் உயிரைக் கொடுதேனும், எங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் இழந்தாலும், யார் தடுத்தாலும் அதை எதிர்த்து நிறைவேற்றுவோம் என்று அண்ணாவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன்!” என்று உறுதியிட்டுக் கூறினார், புரட்சித் தலைவர்.
    அப்பொழுதும், அதற்குப்பபின்னரும் அங்கே ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் வாழ்த்து முழக்கங்களையும் எழுத்தில் வடிக்க எவராலும் இயலாது!
    அந்த விழாவை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் ச்ந்தித்தார், புரட்சித்தலைவர். அவர்களிடமும் அதே கருத்தையே வலியுறுத்தினார்.
    இவ்வாறு கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்களில், அதாவது சுமார் 1,716 நாள்களில் ஆட்சியைப்பிடித்த அற்புத சாதனையைச் சாதித்த சரித்திர நாயகனானார், புரட்சித் தலைவர்! என்றாலும், வெற்றி அவரை மேலும் பணிவுள்ளவராக மாற்றியதே தவிர, வேறு சிலரைப் போல மாற்றாரை மனம் புண்படப் பேசும் ஆணவக்காரராக மாற்றி விடவில்லை.!!!....... Thanks.........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3632
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #பட்டங்களுக்கு #நான் #தகுதியானவனா???

    மக்கள்திலகம், புரட்சிநடிகர் என்று பட்டம் வாங்குவது அற்புதம் அல்லவா?
    என்று ஒரு நிருபர் வார இதழுக்காக 1970ல் எடுத்த பேட்டியின் ஓர் முக்கிய கேள்வி இது.

    இதற்கு வாத்தியாரின் பதில்...

    அது அற்புதமே இல்லையே, என் மேல் அனுதாபம் கொண்டவர்கள், #பாவம் #பிழைத்துப்போகட்டும் என்று அந்த பட்டங்களைக் கட்டிவிட்டார்கள். அப்படிப்பட்ட தகுதி எனக்கு இல்லாவிடினும், முழுத்தன்மை வாய்ந்த ஒருவனாக என்னை ஆக்கிக்கொள்ள முடியாவிட்டலும், கொஞ்சமாவது அவைகளுக்குப் பொருத்தமாக நடந்து கொள்ள வேண்டும் என்று #நிரப்பந்தம் என் மீது சுமத்துப்பட்டு விட்டது என்பது தான் உண்மை...��������

    அதேபோல் வேறு ஒரு பேட்டியில்...

    நமது பாரத நாடு எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற எத்தனை தலைமுறை ஆகும் ? என்ற கேள்விக்கு...

    #நமது #நாடு என்று சொல்லும் #நல்லுணர்வை எந்த தலைமுறை முழுமையாகப் பெறுகிறதோ, அந்த தலைமுறைதான் உங்கள் கேள்விக்கு நல்ல விடை கூறும்...!

    என்ற பதிலே சொல்லும் எவ்வளவு நுட்பமான அரசியல் நோக்காளர் எம்ஜிஆர் என்று...��������
    ---------------------------------------------------------------------------

    ரிக்ஷாகாரன் படத்திலிருந்து தான் வாத்தியார் என்ற பெயர் ஃபெமிலியர் ஆனதோ!!!...... Thanks...

  4. #3633
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #Part2

    #உலகம்_சுற்றும்_வாலிபன்
    #திரைக்கு_பின்_நடந்தது - #நம்_தலைவர் #கூறியது_உங்களுக்காக

    டோக்கியோ விமான நிலையத்தை அடைந்ததும், நாகேஷ் தீடீரென்று மயங்கி விழுந்தார். அங்கு என்னைக் காண வந்திருந்த பத்திரிகையாளர் மணியன், எங்கோ விரைந்து சென்று, சிறிது நேரத்திற்கெல்லாம், ஒரு டாக்டரோடு வந்தார்.

    அந்த டாக்டர் பரிசோதித்து, 'பலவீனம்; ஓய்வு எடுத்தா சரியா போகும்...' என்றார். வேண்டுமாயின், நர்சிங் ஹோமில் சேர்க்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். சிறிது விவாதத்திற்குப் பின், வேண்டாமென்று முடிவு செய்தோம்.
    அதற்குள் நாகேஷுக்கு, கொஞ்சம் சரியானது.

    மெல்ல எழச் செய்து, வேறு ஒரு இடத்தில் இருந்த சோபாவில் உட்கார வைத்து, விவரம் கேட்டேன். அவரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. அங்கிருந்து புறப்பட்டோம்.

    நாகேஷை, அந்த நிலையில் விட்டுவிட்டு, நான் மட்டும் எப்படி டோக்கியோவிற்குள் நுழைவது? நாகேஷ் ஓரளவிற்கு குணமாகும் வரை, காத்திருந்து, பின், ஓட்டலுக்குப் புறப்பட்டோம்.

    அவரும், வேறொரு காரில் வந்தார். அவருக்கு துணையாக அசோகனை தங்க வைக்க, ஏற்பாடு செய்திருந்தேன்.
    விமான நிலையத்தில், ஏர் பிரான்ஸ் கம்பெனி குழுவினர் படம் எடுத்தனர்.
    பாங்க் ஆப் இந்தியாவில், பணிபுரியும் நண்பர் சந்தானம், அவரது மனைவி நிர்மலா மற்றும் கம்பெனி ஒன்றில் பணிபுரியும் ஜெயராமன் ஆகியோர் வந்திருந்தனர்.

    சந்தானத்தின், இரு குழந்தைகளும் ஜப்பானிய உடை அணிந்திருந்தனர். சில ஜப்பானியப் பெண்கள் எனக்கு மாலை அணிவித்து, வரவேற்பு அளித்தனர்.
    விமான நிலைய சடங்குகள் அனைத்தையும் முடித்துக் கொண்ட பின், டோக்கியோவின் மிகப் பெரிய ஓட்டல்களில் ஒன்றான, இம்பீரியல் ஓட்டலை அடைந்தோம்.

    ஓட்டலை அடைந்தோமே தவிர, அறைகள் கிடைக்கவில்லை. எங்களுக்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறை, மறுநாள் காலையிலிருந்து தான், 'புக்' செய்யப்பட்டிருந்தது.
    அதுமட்டுமல்ல, இரவு, 12:00 மணிக்கு முன், அந்த அறைக்குச் சென்றோமானால், ஒரு நாள் வாடகை கொடுத்தாக வேண்டும்.

    அதாவது, பதினோரு மணி, ஐம்பத்தொன்பது நிமிடத்தில், அந்த அறைக்குள் நுழைந்தால் கூட, முதல் நாள் வாடகையைச் செலுத்தியாக வேண்டும். எனக்குத் தரப்பட்டிருக்கும் பணத்தின் அளவோ மிகக் குறைவு. எனவே தான், என்னோடு வந்து, பயணத்தினால் சோர்ந்து போயிருந்த பெண்களைக் கூட, உடனே அறைகளுக்கு அனுப்ப முடியவில்லை.

    அவர்களும் இதை உணர்ந்திருந்த காரணத்தால், எந்தவித மனக்கஷ்டமும் கொள்ளாது, ஒருவருக்கொருவர், சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
    இரவு வெகு நேரமாகி விட்டதால், அவர்களுக்கு ரொட்டி, கேக் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாமென்று எண்ணிக் கேட்டேன்.

    பன்னிரெண்டு மணிக்கு மேல், அறைக்குச் சென்ற பின் தான் கிடைக்கும்; அதுவும் முன்னமேயே குறிப்புக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டுமென்று தெரிவித்தனர். எனக்கு, இவைகௌல்லாம் புரியாத புதிராகவே இருந்தது.

    இதைக் கேட்டு கொண்டிருந்த பெண்கள், தங்களை அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாலும் கேக், ரொட்டி போன்ற பெயர்களைக் கேட்டதும், அதற்கு மேல் தங்களுக்கிருந்த பசியை மறைக்க சக்தியற்று, ஆவலோடு விசாரித்தனர்.

    அங்கு, அந்த வேளையில் ஏதும் கிடைக்காதென்பதை அறிந்தபோது, என் மீதே, எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
    என்னை நம்பி வந்த அந்த இளம் பெண்களுக்கு, முதல் நாளிலேயே பசிக்கு உணவு கொடுக்க இயலாதவனாகி விட்டேனே என்று, வேதனையாக இருந்தது. 'மோராவது கிடைக்குமா?' என்று கேட்டேன்.

    என் உடன் வந்திருந்த சந்தானம், இதையெல்லாம் கவனித்து, 'அரை மணி நேரம் அவகாசம் தருவதாயின், உணவு தயார் செய்து விடுவேன். எல்லாரும் சாப்பிடலாம்...' என்றார்.
    நான் மரியாதைக்கு, 'வீண் சிரமம் வேண்டாம்; ரொட்டி கிடைத்தாலே போதும்...' என்றேன்.

    ஆனால், அவர், 'உங்கள் தகுதிக்குச் ஏற்ற முறையில், உணவு படைக்க எங்களால் இயலாது; ரசம் சாதம், அப்பளம் இவ்வளவுதான் செய்ய முடியும்...' என்று சொல்லியவாறே, எங்களுடைய அனுமதியைப் பெறாமலேயே, தன் மனைவியை வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

    சாப்பாடு கிடைக்கும் என்று தெரிந்ததும், மூன்று பெண்களின் பேச்சும், சிரிப்பும் மீண்டும் தொடர்ந்தன.

    சினிமா உலகத்தில், எத்தனையோ நடிக, நடிகையரை பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட வசதிக் குறைவுகள் நேரிடும் போது, எப்படியெல்லாம் ஆத்திரப்பட்டிருக்கின்றனர், கேவலமாய் பேசியிருக்கின்றனர், தங்களின் தகுதிக்கும் குறைவான செயலில் இறங்கியிருக்கின்றனர் என்பதை, கண்கூடாகக் கண்டறிந்தவன் நான்.

    ஆனால், இந்தப் பெண்கள் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    சந்தானம், ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கவில்லை. அறைகளின் சாவிகளைப் பெறவும், சாமான்களின் எண்ணிக்கையைச் சரி பார்க்கவும், தன் வீட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வதுமாக, 'துருதுரு'வென்று அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

    சிறிது நேரத்திற் கெல்லாம், 'உணவு தயார், போகலாம்...' என்று அழைத்தார். அவரே தன் காரில், எங்களை அழைத்துப் போனார். அவர் வீட்டிற்குப் போனோம். மாடியில் தான், அவரது குடியிருப்பு.
    விசாலமான நடுத்தரமான, ஒரு அறையில், மேசை, நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

    சுவரில், கலையழகு நிரம்பிய படங்கள்; சிலை வடிவங்கள். அவைகளில் பெரும்பாலானவை, சந்தானத்தின் மனைவி நிர்மலா கை வண்ணத்தில் மிளிர்ந்தன.

    குடும்பத்தின் சிறந்த தலைவி, கணவனுக்கு பண்புள்ள மனைவி, விருந்தினருக்குப் பாசமுள்ள உறவினர், குழந்தைகளுக்கு அன்புத் தாய், இப்படிப்பட்ட, ஒருவர் கையால், உணவு பரிமாறப்பட்டு, உண்டோம்.
    வயிறு புடைக்க சாப்பிட்டோம். எங்களின் அதிர்ஷ்டம் அன்று, சந்தானத்தின் தாயார் இந்தியாவிலிருந்து ஜப்பான் வந்திருந்தார். அவர்கள், தின்பண்டங்களைச் செய்து கொண்டு வந்திருந்தார். அவைகளும் எங்களுக்குப் பரிமாறப்பட்டன.

    ஜப்பான் நாட்டிற்குப் புதியவர்களாக அடியெடுத்து வைத்த எங்களுக்கு, இரவு, மிகப் பெரிய விருந்தே நடைபெறுகிறதென்றால், தமிழ்ப் பண்பின் தனித் தன்மைக்கு, நற்சான்று என்றுதானே கொள்ள முடியும்.

    உணவு உண்டு மூச்சு விடக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த போது, சந்தானம் ஒரு சிறிய படம் பிடிக்கும் கருவியையும், படங்கள் ஒட்டப்பட்டிருந்த ஆல்பம் ஒன்றையும் கொண்டு வந்து, எங்களைப் படம் எடுக்க விரும்புவதாய் சொல்லி படமெடுத்தார்.

    அதோடு, அவர் எடுத்த படங்கள் நிறைந்த, அந்த ஆல்பத்தை பிரித்துக் காண்பித்தார்.
    அதில், ஒட்டப்பட்டிருந்த படத்தைப் பார்த்து, ஒரு கணம் திகைத்தேன். அது வேறு யாருடைய படமுமல்ல! இதயதெய்வம் அமரர் அண்ணாதுரையின் உருவம்தான். எங்கு சென்றாலும், என்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும், அந்த அமரரின் உருவத்தை, திரும்பத் திரும்பப் பார்த்தேன்.

    நான், என் வாழ்க்கைப் பாதையில், எங்கெங்கு காலடி எடுத்து வைக்கிறேனோ, வைக்க இருக்கிறேனோ அங்கெல்லாம், அமரர் அண்ணாதுரை முன்சென்று, நான் நடக்கும் பாதைகளை சீர் செய்து, அரசியலிலும், கலைத் துறையிலும் எனக்குத் தேவையான அத்தனையையும் நிறைவேற்றி வைத்திருப்பதை, இன்னமும் நிறைவேற்றி வைப்பதை எண்ணி, என் கைகள், அவர் இருக்கும் திசை நோக்கித் தானாக உயர்ந்தது.

    ஜப்பானில் நாங்கள் சந்தித்த சில மணி நேரத்திற்குள்ளாகவே, எங்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருந்த சந்தானம், இப்போது ஒரு படி உயர்ந்து நின்றார்.
    அவர், அண்ணாதுரை பற்றிச் சொன்ன கருத்து, என்னை மேலும் சிந்திக்க வைத்தது. அது...
    — தொடரும்.

    தொகுப்பு: வைரஜாதன்,
    நன்றி 'பொம்மை'
    விஜயா பப்ளிகேஷன்ஸ்,
    சென்னை.

    -- எம்.ஜி.ஆர்.,........ Thanks...

  5. #3634
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.
    1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
    இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
    அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
    சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் மதுரை மாநகரமே குலுங்கியது........ Thanks...

  6. #3635
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் என்ற மாமனிதர் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களிலும் தன்னை எவ்வாறு தன் ரசிகர்களிடம் கொண்டு சென்றார் என்பதற்கு மிக சிறந்த உதாரணம் எங்க வீட்டு பிள்ளை படம். இந்த படத்தில் நாம் ரசித்து ரசித்து பார்த்த காட்சிகள் எதையுமே இதன் இந்தி பதிப்பான ராம் ஔர் ஷ்யாமில் திலீப்குமாரிடம் பார்க்க முடியாது. ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வரும் மக்கள் திலகம் தான் செய்த தவறுக்கு தன்னையே நொந்து கொள்ளும் காட்சி மக்கள் திலகத்தின் குணத்தை பிரதிபலிக்கும்.இந்த காட்சியே இந்தியில் இருக்காது.மேலும் எ.வீபி.என்றவுடன் நம் நினைவிற்கு வரும் நான் ஆணையிட்டால் பாடலும் இந்தியில் கிடையாது.தெலுங்கிலும் கிடையாது. மக்கள் திலகத்திற்காகவே வைக்கப் பட்ட பாடல் அது.மலையாளத்தில் இந்த பாடல் உண்டு ஆனால் மக்கள் திலகத்தை பார்த்த கண்களுக்கு பிரேம்நசீர் காமெடியாக தெரிவார்.மொத்தத்தில் எல்லா மொழிகளிலும் முன்னணி கலைஞர்கள் நடித்திருந்தாலும் மக்கள் திலகத்தின் அழகும் கம்பீரமும் சுறுசுறுப்பும் வேறு யாரிடமும் பார்க்க முடியாது....... Thanks...

  7. #3636
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR வாழ்க

    சித்திரை 12 சனி

    எம்ஜிஆர் பக்தர்களே

    அருமை தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பக்கத்தில் இருப்பவர் பெயர்

    ப.உ. சண்முகம்

    இவர் திமுக-வின் ஆரம்பகால மூத்த தலைவர்களில் இவரும் ஒருவர

    ++++++++++++++++++++++++++++++++++

    எம்ஜிஆர் பக்தர்களே

    மறைந்த அண்ணா அவர்களுக்கு பவள விழா கொண்டாடினார்கள்

    அப்பொழுது பவளவிழா மலர் என்று ஒரு மிகப்பெரிய. புத்தகம் ஒன்றை வெளியிட்டார்கள்

    அந்த புத்தகத்தில்

    பா உ,சண்முகம்

    அவர்கள் எழுதிய கட்டுரை இது

    ++++++++++++++++++++++++++++++++++

    1959 ஆண்டு நடைபெற்ற திருவண்ணாமலை சட்டசபை இடைத்தேர்தலில் அண்ணா அவர்கள் என்னைதிமுக வேட்பாளராக அறிவித்து விட்டார்

    என்னை எதிர்த்து நின்ற. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மிகப்பெரிய கோடீஸ்வரர்

    ,இதை அனைத்துப் பத்திரிகைகளும் செய்தியாக வெளியிட்டார்கள்

    மிகப் பெரிய கோடீஸ்வரரிடம் ப.உ. சண்முகம் மாட்டிக்கொண்டார் என்று அனைத்து அரசியல் கட்சி தொண்டர்களும் பேசிக்கொண்டார்கள்

    திமுக தலைமையிடமும் பணம் வசதி கிடையாது

    திமுக தலைவர்களிடமும் பணம் வசதி கிடையாது

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பணத்தை நிறைய செலவு செய்கின்றார்கள்

    அதில் நான்கில் ஒரு பகுதி பணம் கூட

    தேர்தல் செலவிற்கு என்னிடம் கிடையாது

    மிகவும் கவலையோடு நான் வீட்டில் அமர்ந்து இருந்தேன்

    என் வீட்டிற்கு முன்பாக ஒரு பியட் கார் வந்து நின்றது

    அந்தக் காரில் இருந்து எம்ஜிஆர் அவர்களின் மேனேஜர்

    R.M.வீரப்பன்

    இறங்கி என் வீட்டுக்குள்வந்தார்

    என் முன்னால் பெரிய பை ஒன்றை வைத்தார்

    இந்தப் பணத்தை எம்ஜிஆர் உங்களிடம் கொடுத்து வரச் சொன்னார்

    உங்களை எதிர்த்து நிற்பவர் மிகப்பெரிய கோடீஸ்வரர்

    ஆகவே இந்தப் பணத்தை தேர்தல் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள்

    தேர்தல் வேலை பார்க்கும் ஏழை தொண்டனுக்கு இந்தபணத்தில் டீ பலகாரம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று உங்களிடம் சொல்லச் சொன்னார் MGR

    என்று கூறிவிட்டு R.M.வீரப்பன் புறப்பட்டார்

    நானும் வீரப்பன் அவர்களோடு வீட்டுக்குள் இருந்து கார் வரைக்கும் வந்தேன்

    காரில் ஏறி அமர்ந்தவீரப்பன்

    காரை விட்டு கீழே இறங்கினார்

    என்னை அழைத்து எம்ஜிஆர் அவர்கள் தேர்தல் வால்போஸ்டர் களை சென்னையில் ஸ்டுடியோவில் தயாரித்து அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்

    ,இந்தப் பணத்தை தாராளமாக செலவழியுங்கள்

    அடுத்த சில நாட்களில் எம்ஜிஆர் மீண்டும் உங்களுக்கு பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று என்னிடம் கூறியுள்ளார்

    என்று வீரப்பன் கூறிவிட்டு சென்னை சென்று விட்டார்

    மீண்டும் எம்ஜிஆரிடம் இருந்து எனக்கு பணம் வந்தது

    தேர்தல் தேர்தலில் நான் வெற்றி அடைந்தேன்

    இவ்வாறு அண்ணா பவள விழா மலரில் பா,உசண்முகம் அவர்கள் கட்டுரை எழுதி உள்ளார்

    ++++++++++++++++++++++++++++++++++

    1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்தார்

    அப்பொழுது பா உ சண்முகம் அவர்கள்

    கருணாநிதியின் மந்திரிசபையில் அமைச்சராக இருந்தார்

    1976. ஆண்டு திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட பிறகு

    பா உ சண்முகம் அண்ணா திமுகவில் சேர்ந்தார்

    திருவண்ணாமலை தொகுதியில் அண்ணா திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்

    எம்ஜிஆர் அமைச்சரவையில் 1984ல் இவர் அமைச்சராக பதவி வகித்தார்

    எம்ஜிஆர் இறந்த பிறகு ஜானகி அம்மையாரை முதலமைச்சர் ஆக்கியவர்களிள்இவரும் ஒருவர்

    உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்

    உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதவர்

    இப்படிப்பட்ட வள்ளல் எம்ஜிஆருக்கும்

    ஒரு சனியன் கூட இருந்தே துரோகம் செய்துள்ளது......... Thanks...

  8. #3637
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'நான் ஆணையிட்டால்' பாடலை இந்தி வடிவத்தில் அதன் நாயகன் திலீப் குமார்
    ஸ்டைல் காட்டுகிறார். அவர் எம்.ஜி.ஆர்.
    போல் நடிக்க முயன்றார். ஆனால்...?

    'ராம் அவுர் ஷ்யாம்' தமிழ் 'எங்க வீட்டுப் பிள்ளை'யின் இந்தி வடிவம். சரோஜாதேவி, ரத்னா வேடங்களில்
    இந்தியில் வஹீதா ரஹ்மான், மும்தாஜ்
    நடித்தனர்.

    Ithayakkani S Vijayan with Plato Rajagopalan..... Thanks...

  9. #3638
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் அவர் ஸ்டைல் யாருக்கும் வராது.....ஏழு ஏழு ஜென்மம் எடுத்தாலும் அவர் ஸ்டைல் யாருக்கும் வராது...தலைவர் அளவுக்கு யாராலும் ஜொலித்து இருக்க முடியாது.... Thanks...

  10. #3639
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் gym body யும் , ஆளுமை மிக்க அதிகார நடிப்பும் இந்தி நடிகர் திலீப் குமாரிடம் Missing .........இயற்கையின் சீதனம் தலைவர்...... Thanks...

  11. #3640
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம் ஜி ஆர், படம் நன்றாக வர வேண்டும், தயாரிப்பாளர், லாபம் அடைய வேண்டும் என்று நடித்தார் ,பிறகு தான் சம்பளம்-ஆனால் மற்றவர்கள் பணம் பெற்றுக் கொண்டு நடிக்கின்றனர் ,படம் ஒடினாலும் ஓடாவிட்டாலும் கவலை இல்லை அது எம்ஜிஆரின் தொழில் பக்தி....... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •