Page 365 of 402 FirstFirst ... 265315355363364365366367375 ... LastLast
Results 3,641 to 3,650 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3641
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தெலுங்கில் என் டி ராமாராவ் அவர்கள் ஆனால் நம் புரட்சி தலைவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்கள் போல் அந்த ஸ்டைல் இல்லை....... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3642
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த படம் தெலுங்கில் எடுத்து கொண்டு இருக்கும் போது ராம்லு பீமலு சில காட்சிகள் தலைவர் பார்க்க விரும்புகிறேன் என்று சொல்லி விட்டு திரும்பி பார்க்க போது திரு.சாணக்கிய இப்போது பார்க்கலாம் என்றார் நாகிரெட்டி என்டிஆர் நடிகை ரத்னா தலைவர் உடனே நான் ரெடி என்று கூறி விட்டார் ரெட்டியார் கலரில் எடுக்க வேண்டும் என்றார் தலைவர்க்கு நல்ல மகிழ்ச்சியாக நடித்துள்ளனர் தெலுங்கு கருப்பு வெள்ளை படம் தெலுங்கில் அக்கா கணவர் வீட்டைவிட்டு வெளியே போய் விடுவார்கள் ஆனால்.. நம்பியார் திருத்திக் கொள்ள இருவரும்க்கு திருமண . எல்லாம் மறப்போம் மன்னிப்போம் அண்ணா வின் கொள்கை விளக்கக் முடிவுகள் தான் படம் சுபம் .. தெலுங்கு.. மலையாள.இந்தி.மூன்று மொழி களில் நான் படத்தை தியேட்டரில் படம் கோயம்புத்தூரில் பார்த்து தேன்........ Thanks to BMV

  4. #3643
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திலீப் குமாரும் சரி என்டி ராமாராவும் சரி,
    இருவருமே ஒப்புக்கொண்டார்கள் அண்ணனை போல் எங்களால் நடிக்க முடியாது என்று!.
    அது மட்டுமல்ல வேறு எவராலுமே அந்த இரண்டு கதாப்பாத்திரங்களையுமே எவராலுமே நடிக்க முடியாதாம்......உண்மையிலேயே முடியாதுதான்....... Thanks Manavalan Sir....

  5. #3644
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கைகளை எப்படி அசைத்தாலும் அதிலே... கம்பீரம் கலந்த அழகு.. எழுச்சிமிகு ஏற்றம் என்பதெல்லாம்... எம்ஜிஆர் என்கிற ஒருவருக்கு மட்டுமே பொருந்தி வரக்கூடிய ஒன்று.. அப்படி ஒருவர் அவருக்கு முன்னும் இல்லை.. பின்னும் இல்லை.. எம்ஜிஆர் ஒரு அவதாரம்........ Thanks Suruli subbu...

  6. #3645
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காரை நிறுத்தச்சொல்லி நடைபாதை கடையை நோக்கி வேகமாக சொன்ற புரட்சித்தலைவர்... திகைத்துப் போன கடைக்கார்..
    ஒரு நாள் காலை பொழுது..
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, கோட்டைக்கு கிளம்ப ஆயுத்தமாகிறார்.
    அப்பொழுது தலைவருக்கு அறிமுகமான ஒருவர் தன்னுடன் முருகேசன் (பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவரையும் அழைத்துகொண்டு தலைவரை காண வருகிறார்.
    அவர்களை பார்த்த மக்கள் திலகம், "முதலில் சாப்பிடுங்கள். பின்னர் எதுவானாலும் பேசிக்கொள்ளலாம்" என்கிறார்.
    அவர்கள் உணவருந்தி முடித்தபின் "சரி இப்ப சொல்லுங்கள். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தீர்கள். என்னால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமா?" என வினவுகிறார்.
    வந்தவர் "அண்ணே இவர் பெயர் முருகேசன். தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை வச்சிருக்காரு. அதில் ஒரு சிக்கல், கடை சற்று நடை பாதையை ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது.
    இதை காரணமாக வைத்துக்கொண்டு, இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது. வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன்" என்கிறார் தயங்கியபடி.
    தலைவர் சில நொடி யோசித்துவிட்டு புன்னகையுடன் "என்னால் முடிந்ததை செய்கிறேன்" என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார். இந்த பதிலை கேட்டு வந்தவர்களின் முகம் வாடிப்போகிறது.
    அதன் பின் மூன்று நாட்கள் கோட்டையில் இருந்து வீட்டிற்கும், வீட்டிலிருந்து கோட்டைக்கும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார். போகும் போழுதும், வரும் போதும் அந்த பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார்.
    ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம், முதல்வராக இருந்து கொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தவர்தானே அவர்.
    அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார்.
    பீடா கடை அருகே வந்ததும், பத்து மீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார்.
    அதிகாரிகளுக்கோ குழப்பம். திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு, பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .
    தலைவர் நம்ம கடையை நோக்கி வருகிறாரே என்று முருகேசனுக்கு பதற்றம், குழப்பம், பயம். செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
    பீடா கடையை அடைந்த தலைவர், "என்ன முருகேசா இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணோம். தொழில் எப்படி போகுது?" என்று ரொம்ப நாள் பழகிய நண்பர் போல் முருகேசனுடன் உரையாடுகிறார். முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திருத்திருவென முழிக்கிறார்.
    "சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா" என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
    அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது.
    "முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா?"
    "அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா?"
    "சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம்"
    என்று ஆளாளுக்கு தாங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
    தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது. வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன், பின்னாளில் அவர் கிட்டேயே சிபாரிசுக்கு வந்த கதையெல்லாம் நடந்தது.
    ‪புரட்சித்தலைவர்‬ நினைத்திருந்தால் தொல்லை கொடுத்தவர்களை போனில் அழைத்து சொல்லியிருக்கலாம், அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ, தலைவருக்கோ தகுதியான குணமல்ல.
    வேறு யாராக இருந்திருந்தால், இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள். இல்லையெனில் போனில் மிரட்டியிருப்பார்கள்.
    அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை இவரை தவிர யாருக்கு வரும்.
    இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்... என்பதில் சிறிதும் அய்யமில்லை.
    புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்களின் புத்தி கூர்மையை பறைசாட்டும் சிறிய நிகழ்வு தான் இது. ஆனால் இதுதான் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

    #ஏழைகளின்தலைவர் எம் ஜி ஆர்...... Thanks...

  7. #3646
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [#பொழைக்கத்தெரியாத #எம்ஜிஆர்

    லாயிட்ஸ் ரோடு தாய்வீட்டில் ஒரு நாள் எம்ஜிஆரை, பெரியவர் ஒருவர் காணவந்தார். எம்ஜிஆர் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்... அப்பெரியவர் எம்ஜிஆருடன் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்து பிறகு கிளம்பிவிட்டார்...

    அப்பெரியவர் தான் "#ஜெனோவா" திரைப்பட இயக்குனர் திரு.நாகூர்...

    அன்றிரவு எம்ஜி.சக்ரபாணி, எம்ஜிஆரிடம் "ராமச்சந்திரா, நாகூர் உன்ன வந்து பாத்துட்டுப்போனாரா? எதுக்காக..? அவரு நேத்து என்னே பாத்தபோது 'ஜெனோவா' படத்துக்கு அவரு கேட்ட கால்ஷீட்டுக்கு மேலே ஒண்ணரை பங்கு கொடுத்தாச்சு. இப்ப இருக்கிற உன் மார்க்கெட் சம்பளத்தையும் கொடுக்க ஒத்துக்கிட்டார்...அதன் பிறகும் ஏன் உன்னை வந்து பார்த்தார்...? இப்படி கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினார்.

    அதற்கு எம்ஜிஆரின் நெகிழ்ச்சியான பதில் :

    அண்ணா...! அவங்களுக்குப் படம் எடுக்கத் தெரியும், பிஸினஸ் தெரியாது. வித்த விலையைவிட செலவு ஜாஸ்தி ஆயிடுச்சு...டெக்னீஷியன்ஸ் எல்லாம் பிஸினஸ்மேன் ஆகிடமுடியாது...போதாகுறைக்கு அவர் மகள் இறந்ததுல மனசு உடைஞ்சு போயிட்டார். பாவம் அந்தப் பெரியவர் அழுதுட்டாரரு, என்னால தாங்கமுடியல..."

    அதற்கு சக்ரபாணி, "அப்ப அவர் கொடுக்குற பணத்தை வாங்கினாப் போதும்னு முடிவு பண்ணிட்ட, அப்படித்தானே ???? "

    "இல்லண்ணா...#அவர் #கொடுக்கவேண்டிய #இருபதாயிரத்தையும் #வேண்டாம்னுட்டேன்...#படத்தை #முடிச்சுத்தரேன் கவலைப்படாதீங்கன்னுட்டேன்" என்றார் எம்ஜிஆர் கூலாக...

    அதற்கு சக்ரபாணி, "நீ சொல்றது சரிதான், இருந்தாலும் சம்பாதிக்கிற நேரத்துல தானப்பா சம்பாதிக்க முடியும்...? இப்படியே போனா நம்ம குடும்ப நிலைமை என்னாவது? நம்ம குடும்பநிலை உனக்குத் தெரியாதா? "

    அதற்கு எம்ஜிஆர்,
    "போவுது அண்ணா, பணத்தை விட மனுஷங்க பெரிசு. அவங்க நம்ம மேல வெச்சுருக்கிற அன்புக்கும், மதிப்புக்கும், நா செஞ்சது ஒண்ணும் பெரிசில்ல...

    மேலும் "நாளைங்கிறது நம்பளோடது கிடையாது...அது கடவுளோடது...விடுங்கண்ணா " ன்னு சொன்னார்.

    என்ன செய்ய #பெரியவருக்கு #வீட்டுக்கவலை...#சின்னவருக்கு #ஊர்க்கவலை...
    ]...... Thanks...

  8. #3647
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [கோவை செழியன் இரண்டாவது படம் தயாரிப்பு கேசி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான உழைக்கும் கரங்கள் டைரக்ஷன் கே சங்கர் இசை மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் வசனம் நாஞ்சில் மனோகரன் பாடல்கள் கவிஞர் வாலி கவியரசு கண்ணதாசன் மக்கள் திலகம் முதல்முதலாக ஆந்திராவின் பாணியில் வேட்டி கட்டிய படம் உரிமைக்குரல் இரண்டாவது படம் உழைக்கும் கரங்கள் இந்த திரைப்படத்தில் நமது தலைவர் நடக்கும் நடை பார்க்கும் பார்வை அனைத்தும் புதுமையாக இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மான் கொம்பு சண்டை இன்றுவரை பேசப்படக்கூடிய சண்டையாக இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது தலைவருக்கு 55 வயது வயது எத்தனை வேகம் எத்தனை வேகம் எத்தனை சுழற்சி அப்பப்பா பார்க்க கண்களுக்குள் சந்தோஷம் பிறக்கும் இந்த திரைப்படம் வெளிவந்த பிறகு எத்தனையோ நடிகைகள் முயற்சி செய்து பார்த்தார்கள் ஆனால் முன்னிலை அடைய முடியவில்லைபொதுவாக கே சங்கர் அவர்கள் மீது எந்த ஒரு திரைப்படம் இயக்கினாலும் அந்த திரைப்படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பு மிக அருமையாக இருக்கும் ரொம்ப வேகமாகவும் விறுவிறுப்பாக இருக்கும் அதற்கு முதல் சான்று குடியிருந்த கோயில் கே சங்கர் அவர்கள் பின்னாளில் நமது புரட்சித்தலைவரின் சம்பந்தனார் காரணம் சக்கரபாணி அவருடைய மகளைசங்கர் அவர்கள் தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார் இந்த திரைப்படம் இப்போது வெளியிட்டாலும் அல்லது தொலைக்காட்சி பார்த்தாலும் அந்த எட்டு நிமிடங்கள் வேறு எந்த சிந்தனையும் தோன்றாது அவ்வளவு அருமையான ஒளிப்பதிவு..... Thanks...

  9. #3648
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கம் நண்பர்களே!!

    "எம்ஜிஆர் சண்டை "என தமிழகத்தில் பிரபலமான வார்த்தை உண்டு... வெறும் பாடல்கள் அதை ஒட்டிய சிறு கதை என தமிழ்சினிமா சற்று போரடித்துக்கொண்டிருந்த காலத்தில் தன் சண்டைக்காட்சிகள் மூலம் வேறொரு ட்ரென்டை உருவாக்கிய பெருமை எம்ஜிஆர் அவர்களுக்கு உண்டு.... அதற்கெல்லாம் வித்திட்டது " மருதநாட்டு இளவரசி"

    அதில் வரும் ஒரு அற்புதமான சண்டைக்காட்சி உங்கள் பார்வைக்கு...

    இன்று வரை தொழில்நுட்பம் பல வளர்ந்தாலும் இந்த சண்டைக்காட்சியின் எதார்த்தத்தை வேறெதுவும் முறியடிக்க வில்லை.... கடைசியில் தலைவர் தடுக்கி விழுவார் அவ்வளவு இயல்பாக இருக்கும்...
    (குறிப்பு:இதில் வரும் காட்சிகள் பாஸ்ட் பார்வர்டு இல்லை... ஆனால் பாருங்கள் எவ்வளவு வேகம் என...).... Thanks...

  10. #3649
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் அசாத்திய துணிச்சல் மிக்கவர். தவறு எங்கே நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பார். ஒரு காரியத்தில் இறங்க வேண்டுமென்றால் அது ஆபத்தானதாக இருந்தாலும் பொருட்படுத்த மாட்டார். அதற்கு எவ்வளவோ உதாரணங்கள்.
    1977-ம் ஆண்டு சட்டப் பேர வைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், மதுரை மேம்பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்தார். சிலையின் பீடமே 10 அடி உயரம் இருக்கும். அதற்கு மேலே சுமார் 8 அடி உயரத்தில் அண்ணா சிலை கம்பீரமாக நிற்கும்.
    இப்போது இருப்பது போல சிலைக்கு மாலை அணிவிக்க படி வசதி எல்லாம் அப்போது கிடையாது. எம்.ஜி.ஆர். வரப்போகிறார் என்பதை அறிந்ததும் அந்தப் பகுதியே ஜன சமுத்திரமாக காட்சியளித்தது. மாலை அணிவிப்பதற்காக வந்த எம்.ஜி.ஆர்., காரை விட்டு இறங்கியதும் சில தொண்டர்கள் எங்கிருந்தோ மர ஏணி ஒன்றைக் கொண்டு வந்தனர். தொண்டர்கள் சிலர் ‘‘நீங்கள் ஏணியில் ஏறி சிரமப்பட வேண்டாம். மாலையை தொட்டுக் கொடுங்கள். நாங்கள் சிலைக்கு அணிவிக்கிறோம்’’ என்று எம்.ஜி.ஆரிடம் கூறினர்.
    அதை எல்லாம் எம்.ஜி.ஆர். கவனிக் காமல், சிலையையும் ஏணியையும் ஒரு பார்வை பார்த்தார். ‘எப்படி ஏறலாம்? எப்படி மாலையை தனது அண்ணனுக்கு அணிவிக்கலாம்? ’ என்று அவரது மனம் கணக்கு போட்டது. இதெல்லாம் சில விநாடிகள்தான். உடனே, வேகமாக ஏணியில் ஏறி சிலையின் குறுகலான பீடத்துக்கு சென்று பிடிமானத்துக்காக சிலையை கைகளால் தொட்டபடி நின்று கொண்டார். கொஞ்சம் தவறினாலும் கீழே விழும் அபாயம் உண்டு. என் றாலும் துணிச்சலாக எம்.ஜி.ஆர். ஏறிவிட்டார்.
    சிலைக்கு பின்னால் இருந்து ஒருவர் பெரிய மாலையை கொடுக்க அதை லாவகமாக தூக்கி அண்ணா சிலை யின் கழுத்தில் சரியாக விழும்படி எம்.ஜி.ஆர். அணிவித்தபோது, தொண் டர்களின் ஆரவாரத்தால் மதுரை மாநகரமே குலுங்கியது..... Thanks...

  11. #3650
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி நடிகர் MGR இரு வேடங்களில் நடிக்கும் - உத்தமபுத்திரன்,,,
    தயாரிப்பு ; MGR PICTURES
    காலை நேரம் தினதந்தியில் விளம்பரம்.
    ஆனால் தமிழக திரையுலகம்
    அதிர காரணம்
    அதே நாளிதழில்
    நடிகர்திலகம் சிவாஜிகணேஷன் இரு வேடங்களில் நடிக்கும் உத்தமபுத்திரன்
    தயாரிப்பு: வீனஸ் பிக்சர்ஸ்( ஸ்ரீதர்)
    விளம்பரம் தான்.
    The man in the iron mask ஆங்கில
    பட தழுவல் தான்
    1940 ல் மாடர்ன் தியேட்டர்ஸ்
    வெற்றிபடம் உத்தமபுத்திரன்.
    MGR - அவர்களோ The man in the iron mask ஆங்கில படத்தை தன் பாணிக்கு ஏற்ப தழுவி எடுக்கலாம்
    டைரக்டர்; K.ராம்நாத்
    என முடிவு செய்தார்.
    K.ராம்நாத் யை சந்தித்த ஸ்ரீதர்
    இதை அறிந்து
    உத்தமபுத்திரன் ரைட்ஸை மாடர்ன் தியேட்டரிடம் பெற்று சிவாஜியை வைத்து தயாரிக்க முடிவு செய்தார்.
    இப் பிரச்சனை என்னாகுமோ என திரையுலகமே தவித்தது.
    இச்சமயம்
    N.S கிருஷ்ணன் MGR யை சந்தித்து ராமச்சந்திரா அவர்கள்
    மாடர்ன் தியேட்டரிடம்
    ரைட்ஸ் வாங்கி வைத்துள்ளார்கள்.
    நீ வேறு கதையை தயார்
    செய்து எடு என்றார்.
    N.S கிருஷ்ணன் மீது மிகவும் மதிப்பு வைத்திருப்பவர் MGR. அவர் சொல்லை மதித்து அந்த படத்தை கைவிட்ட MGR,
    இரு வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற
    ஆசையை மட்டும் விடவேயில்லை.
    அப்படி அவர் ஆசைபட்டு மிகுந்த பொருட் செலவில் ,தன் வாழ்கையையே பயணம் வைத்து, டைரக்ட் செய்து
    இமாலய சாதனை
    படைத்த வெள்ளி விழா படம் தான்
    "" நாடோடி மன்னன் "
    - சித்ரா லட்சுமணன் பேட்டியிலிருந்து,,
    பின் குறிப்பு:
    நடிகர் திலகம்
    சிவாஜியின் உத்தம புத்திரன் 7.2 1958 வெளியாகி 100 நாட்கள் ஓடியது.
    ********
    அதே ஆண்டு 22.8.1958
    புரட்சி தலைவர் MGR நடித்த
    நாடோடி மன்னன் வெளியாகி தமிழக முழுதும் " வெள்ளி விழா"- 175 நாள் கண்டது.
    பல திரையரங்கில் 200- 250 நாட்கள் ஓடியது.
    தயாரிப்பு செலவு : Rs 12, 50, 000
    ( 1.8 million) ரூ 12 .50 லட்சம்
    Box office collection; Rs 76, 36, 000
    ( 11 million) கலெக்சன் ரு 76.36 லட்சம்
    ஆதாரம் Google.com விக்கிபீடியா.
    தொகுப்பு : OKR.ரமேஷ்
    இதுதான் நம் தலைவரின் சாதனை..... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •