Page 376 of 402 FirstFirst ... 276326366374375376377378386 ... LastLast
Results 3,751 to 3,760 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3751
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?"

    இந்த வரிகளுக்கு அன்றும் இன்றும் என்றும் பதிலாக நிற்கும் காலத்தை வென்றவன்...காவியமானவன்......இவர் ஒருவர்தான்.
    எழுச்சிப் பாடல்.,சோர்ந்து வீழ்ந்து கிடக்கும் மனித இனத்தைத் தட்டி எழுப்பும் பாடல்.புரட்சித் தலைவரே வெளியே கிளம்பும் முன் ஒரு முறைக் கேட்டுச் செல்லும் பாடலாம்.....

    ஒரு எழுச்சிப் பாடலோடு பயணிக்கிறேன்.கவியரசரின் வரிகள்...மெல்லிசை மன்னர்களின் இசை....ஏழிசை வேந்தனின் அற்புதக் குரலில்..

    .மன்னாதி மன்னனின் டைட்டில் பாடல்.சம்பூர்ணமான சங்கராபரணத்தில் சுருதி சுத்தமாக "அச்சம் என்பது மடமையடா....அஞ்சாமை திராவிடர் உரிமையடா"கணீரென்று துவங்கும் இந்தப் பாடலின் துவக்கம்...குதிரைகளின் குளம்பொலி...திரையில் மாமன்னனாக கையில் சாரட்டின் கயிற்றோடு எம்.ஜி யார் அவர்கள், குலதெய்வம் ராஜகோபாலுடன்

    "அச்சம் என்பது மடமையடா...அஞ்சாமை திராவிடர் உரிமையடா....ஆ ஆ ஆ ஆ .......ஆஹா...

    ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பதில் பெருமையடா....தாயகம் காப்பதில் பெருமையடா"....

    பாடலின் துவக்கமே அமர்க்களம்...அஞ்சாமை.....அஞ்சுவது நம் மரபிலே இல்லையென்று சொல்லும் அஞ்சா.....மை.....

    டி.எம்.எஸ்ஸின் முத்திரைப் பாடல் என்றெ சொல்லலாம்...

    "கனக விஜயரின் முடித்தலை எரித்துக் கல்லினில் வடித்தான் சேரமன்னன்....ஆ ஆ.ஆ.ஆ..ஆ.ஆ.ஆஹா ஹா...

    இமயவரம்பிலே மீன் கொடி ஏற்றி இசைப் பட வாழ்ந்தான் பாண்டியனே......"ஒரு சரித்திரம் 2 வரியில்...

    ..பாடல் நடுவில் தென்றலாய் முகம் காட்டும் பப்பிம்மா..மறைந்த அஞ்சலி தேவிம்மா...
    நாட்டிய பேரொளி பத்மினியும்...

    .பாடலின் வரிகள் புரட்சித்தலைவருக்கென்றே தைக்கப் பட்ட சட்டை...கவியரசரின் தீர்கதரிசனம்"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்...மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்"....காலம் உள்ளவரை நிற்பவர் இவரே என்று அன்றே முத்திரைக் குத்தின கவிநயம்..."கருவினில் மலரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை..களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவன் பிள்ளை"இந்த வரிகளை உச்சச்தாயியில் இசை அமைத்திருக்கும் மெல்லிசை மன்னர்களின் இசை நயம்...தன் குரல்வளத்தால் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் நம் மெய்யெல்லாம் சிலிர்த்துப் போகும் டி.எம்.ஸ் அய்யாவின் குரல் வளம்...இவையெல்லாம் சேர்ந்து இந்தப் பாடலை காலத்தை வென்ற பாடலாக, என்றும் உச்சம் தொட்ட பாடல் ..,இன்று உங்களோடு.... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3752
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #ஒருதாய்மக்கள்நாமென்போம்...

    #உன்னையறிந்தால்நீஉன்னையறிந்தால்.

    #ஏமாற்றாதேஏமாற்றாதேஏமாறாதேஏமாறாதே..

    #இன்னொருவர்வேதனைஇவர்களுக்குவேடிக்கை..

    #தொட்டுவிடதொட்டுவிடதொடரும்..

    #தைரியமாகச்சொல்நீமனிதன்தானா..

    #நான்பாடும்பாடல்நலமாகவேண்டும்..

    மேற்கண்ட தலைவரின் பாடல்கள் இப்போதுள்ள கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலைக்கு ஏற்ற பாடல்களாக கருதுகிறேன்,

    நண்பர்களே, உறவினர்களே எவ்வளவு முக்கிய காரணமாக இருந்தாலும் மற்றவர்களை சந்திப்பதை தவிர்த்திடுங்கள்,

    உங்களையும், உங்கள் சந்ததிகளையும் காத்திடுங்கள், அனைவரும் அவரவர் இருப்பிடத்திலேயே இருந்துகொள்ளுங்கள்,

    அலட்சியம் வேண்டாம்...... Thanks...

  4. #3753
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மாமனிதர் எம் .ஜி .ஆர் .

    நூற்றாண்டு கடந்தும் இன்றும் நினைக்கப்படுகிறார்

    நாடே கொண்டாடி மகிழ்கின்றது எம் .ஜி .ஆரை !

    ஏழ்மையில் பிறந்து வளர்ந்த காரணத்தால்

    ஏழ்மை ஒழிக்க முயற்சிகள் செய்தார் !

    கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்கள்

    கண்ணால் கண்ட காட்சிகள் ஆனது !

    தோன்றின் புகழோடு தோன்றுக என்று

    திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் !

    மனிதநேயத்தின் சின்னமாக வாழ்ந்து சிறந்தவர்

    மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவர் !

    நல்லவனாகத் திரைப்படத்தில் நடித்தது மட்டுமன்றி

    நல்லவனாகவே வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர் !

    ஈழத்தமிழரின் விடுதலையை பெரிதும் விரும்பியவர்

    ஈழத்தின் விடுதலைக்கு பெரிதும் உதவியவர் !

    ஏழைப்பங்காளன் காமராசரின் மத்திய உணவுத்திட்டத்தை

    ஏழைமாணவர் அனைவருக்கும் சத்துணவாக விரிவாக்கியவர் !

    வெற்றி மாலைகள் பெற்றுக் குவித்தவர்

    வேதனைகள் நீக்கி மகிழ்வைத் தந்தவர் !

    என்னுடைய முதல்வர் நாற்காலியில் ஒருகால்

    என்பது பட்டுக்கோட்டையின் பாடல்கள் என்றவர் !

    நன்றி மறக்காத உயர்ந்த உள்ளம் பெற்றவர்

    நாடு போற்றும் பொன்மனச் செம்மல் ஆனவர் !

    பொற்காலம் படைத்தது தமிழா வரலாற்றின்

    பொன் எழுத்துக்களில் இடம் பிடித்தவர் !

    விருதுகள் பல பெற்றபோதும் என்றும்

    விவேகமாகச் சிந்தித்து எளிமையாய் வாழ்ந்தவர் !

    ஏழைகளின் கண்ணீர் துடைக்க முதல்வராகி

    எண்ணிலடங்காத திட்டங்களை நிறைவேற்றியவர் !

    திரைப்படத்தில் மிகமிக நன்றாக நடித்தவர்

    தமிழக மக்களிடம் என்றும் நடிக்காதவர் !

    புன்னகை மன்னராக பூவுலகில் வாழ்ந்தவர்

    புரட்சித் தலைவர் எனும் பட்டம் பெற்றவர் !

    இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்வார் எம் .ஜி .ஆர் .

    என்றும் அழிவில்லை எம் .ஜி .ஆர் . புகழுக்கு !

    பொன்மனச் செம்மல் எம் .ஜி .ஆர் ! கவிஞர் இரா .இரவி

    தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்த

    தனிப்பெரும் தலைவர் எம் .ஜி .ஆர்

    ஈழத்திற்கு நிதி உதவி தந்து வளர்த்தவர்

    ஈழத்தமிழரின் நெஞ்சம் நிறைந்தவர்

    சிங்களக் கொடுமை உணர்ந்தவர்

    சிங்களம் வீழ்ந்திட விரும்பியவர்

    மதிய உணவை சத்துணவாக விரிவாக்கியவர்

    மாணவர்கள் பள்ளி வரக் காரணமானவர்

    கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர்

    குடும்பத்திற்குச் சொத்துச் சேர்க்காதவர்

    திரையில் மட்டுமே நடித்தவர்

    நிஜத்தில் என்றுமே நடிக்காதவர்

    விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்தவர்

    விவேகமாகச் சிந்தித்துச் செயல்படுத்தியவர்

    அவரால் வாழ்ந்தவர்கள் கோடி

    அவரால் வீழ்ந்தவர்கள் மிகச் சிலர்

    உலகம் வியக்கும் வண்ணம் மதுரையில்

    உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்

    உயிருள்ளவரை முதல்வராய் இருந்தவர்

    உன்னத ஏழைகளின் இதயத்தில் வாழ்பவர்..... Thanks...

  5. #3754
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஐி.ஆரும், சரோஐாதேவியும் இணைசோ்ந்து சுமாா் 10 ஆண்டுகளில் 26 படங்களில் நடித்திருக்கின்றனா். இந்த இணை நடிப்பில் வெளிவந்த கடைசி சில படங்களில் ஒன்று பத்மினி பிக்சா்ஸ் சாா்பில் இயக்குநா் பந்தலு தயாாித்த 'நாடோடி'.
    இப்படத்தில்தான் நடிகை பாரதி தமிழ்த் திரை உலகிற்கு அறிமுகமானாா். இப் படத்தில் பல பாடல்கள் நம் காதுகளுக்கு இனிமை சோ்த்தன.
    கவிஞா் வாலி இப்படத்திற்காக ஒரு பாடலை இயற்றி மக்கள் திலகத்திடம் வாிகளை வாசித்து காட்டினாா்.
    புரட்சி தலைவா் "இது என்ன சாித்திரப் பாடலைப் போலிருக்கிறது" எனறு சொல்லி பாடலை நிராகாித்தாா். ஆனால் அழகான அா்த்தமுள்ள அவ்வாிகளை வீணாக்காமல் இசையமைப்பாளா் கே.வி.மகாதேவனிடம் பாடி காட்டினாா் கவிஞா் வாலி.
    இசையமைப்பாளருக்கு பிடித்துப் போக, அப்போது அவா் இசையமைத்துக் கொண்டிருந்த எம்.ஐி.சக்கரபாணியின் சொந்த தயாாிப்பான 'அரச கட்டளை' எனும் சாித்திர படத்தில் சோ்த்து கொண்டாா்.
    'நாடோடி' படத்திற்கு எழுதப்பட்டு 'அரச கட்டளை' யில் சோ்த்துக் கொள்ளப் பட்ட அந்தப் பாடல் "புத்தம் புதிய புத்தகமே".......... Thanks...

  6. #3755
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது "ஆண்டவன்MGRகுடும்ப" தளத்தில் பயணிப்பவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்....!
    புரட்சித்தலைவரின் புகழ்காக்க நாள் தோறும் உழைத்துக் கொண்டிருக்கும் விசுவாச ரத்த உறவுகளுக்கு அன்பு வணக்கம்.
    நமதுஆண்டவன் MGR
    குடும்ப தளமானது இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்களை மட்டுமே, முதன்மை படுத்தி... நமது சுய விளம்பரங்களை ஓரங்கட்டி , காழ்புணர்ச்சி யின்றி நல்ல பல தகவல்களை பகீருகின்றவர்களை நாம் வாழ்த்தாமலும், வரவேற்க்காமலும் இல்லை.
    அதே நேரம் தளத்தின் நலன் கருதி சில வேண்டதகாத பதிவுகளை பதிவிடுவோரை பலமுறை எச்சரித்தப் பிறகே, தவிர்க்கமுடியாத சூழலில் பலரை தளத்தை விட்டே வெளியேற்ற வேண்டிய நிலையும் உருவாகிறது. நமது இந்திய நாடு மட்டுமல்ல... அயல் நாடுகளில் வசிக்கின்றவர்களில் கூட , படிப்பறிவே இல்லாத பலரும் அவர்களால் முடிந்தவரை... தெறிந்தவரை நம் தலைவரின் புகைப்படங்கள், ஆடியோ /வீடியோ பதிவுகள், பத்திரிக்கை - தொலைக்காட்சிகளில் இடம்பெற்ற , அரும் பெரும் தகவல்கள், விழா தொகுப்புக்கள், மேடை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் தோற்றத்தில் அசத்தும் கலைஞர்களின்... ஆடல் பாடல் , இசைக் கச்சேரியின் படைப்புகள், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் கவிதை , புகழ் மணக்கும் விரல் பதிவுகளென ஏராளமாக பதிவுகள் செய்து... தங்களால் முடிந்த வரை நம் பொன்மனத் தலைவருக்கு புகழ்மாலை சூட்டிவரும் வேளையில்...
    நமது தளத்தில் பயணிப்பவர்களில்,
    கற்றறிந்த நல்லோர்கள், வல்லோர்கள்... மூத்தோர்கள், சகல திறன் கொண்ட விசுவாசமிக்க பற்றாளர்கள், தொண்டர்கள், பக்தர்கள்... எந்தவொரு பதிவுகளையும் பதிவிட முடியாது போனாலும், அசத்தலான, காணக் கிடைக்காத பல அறிய தகவல்களை நாள் தோறும் பதிவிட்டு , தளத்திற்கு பெருமை சேர்ப்பவர்களை உற்ச்சாகப் படுத்த நம்மாள் முடிந்த ஒரு கமெண்ட் கூட போட முடியாதென்றால்.....?
    மன்னிக்கவும்,
    தளத்தை விட்டு நீக்குவதை தவிர வேறென்ன செய்ய முடியும்.
    குறுகிய நாட்களில் அசூர வளர்ச்சி பெற்று, ஏராளமான பக்தர்களின் வாழ்த்துக்களை நாள்தோறும் நம் இதயங்களில் ஏற்று... "கொடுத்து சிவந்தகரம் " "கொள்கைச்சுடர் " பாரதரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பூரண நல்லாசியுடன்... சாதனைத் தளமாக இயங்கி வரும் நமது "ஆண்டவன்MGRகுடும்ப தளத்தை மேலும் வலுப்படுத்த,
    "உழைக்கும் தோழர்களே ஒன்று சேருங்கள்...ஆண்டவன்.
    MGR குடும்பதளத்தை வலு படுத்துங்கள்....
    பொய்யான தகவல் தந்து மேதாவி பேரெடுக்க, அணைக்கின்ற தளமல்ல நம்ம தளம்.
    நான் என்ற அகந்தையிலே, கொரோனாப் போல் வலம் வந்து.... தற்பெருமை காட்டாது நம், ஆண்டவன்MGRகுடும்ப தளம்.
    என்பதை பணிவோடு கூறி ,
    புரட்சித்தலைவரின் புகழ்பாடுவோம்....
    "ஒரு தாய் மக்கள் நாமென்போம் - ஒன்றே எங்கள் குலமென்போம்... தலைவர் ஒருவர் தாமென்போம் - சமரசம் எங்கள் வாழ்வென்போம்....!
    நன்றியுடன் :
    நமது வழிகாட்டி
    வள்ளல்மகான்
    பொன்மனச்செம்மலின்
    செய்திசேகரிப்பாளன்
    புரட்சிபக்தன்
    அட்மீன்ஆர்.ஜி.சுதர்சன்
    ஆண்டவன்
    "MGR குடும்பம்தளம்
    பெங்களுரு.... Thanks...

  7. #3756
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    .... Thanks...

  8. #3757
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    🙏🙏🙏நன்றிகள்🙏🙏🙏
    ***********************************
    புரட்சித்தலைவரின் விசுவாச ரத்த உறவுகளுக்காகவும் ,
    உலக மக்களின் பொழுது மகிழ்வுடன் புலருவதற்காகவும் நாள்தோறும் மலேசியா நாட்டின் பொன்மனச்செம்மல் இசைக்குழு தலைவர் ஐயா , திரு. மேகநாதன் அவர்கள் வழங்கி வரும்...... நமது மக்கள் அரசர்...மும்முறை தமிழகத்தை சிறப்பான முறையில் ஆண்டு பல நல்ல திட்டங்களை வகுத்து , ஏழை மக்களின் துயர் துடைத்த தூயவர் மகான் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் நடித்து , பட்டி தொட்டியெங்கும் பாமரர்களின் காவல்காரன், தொழிலாளி , விவசாயி , மீனவ நண்பன் , படகோட்டி என வணங்கப்பட்ட , நமது தெய்வத்தின் நடிப்பில் வெளிவந்த , படகோட்டி படத்திலிருந்து " இல்லையென்போர் இருக்கையிலே - இருப்பவர்கள் இல்லையென்பார்...மடி நிறைய பொருளிருக்கும் , மனம் நிறைய இருளிருக்கும்......என்பதை உணர்த்திய கருத்தாழம் நிறைந்த பாடலை கேட்போமே....

    இது ,
    உழைக்கும் குரல் தளத்தின் முயற்ச்சி

    ஆலோசனை :
    திரு. ஆர்.ஜி.சுதர்சன் அவர்கள்.
    (ஆண்டவன் mgr குடும்பத்தள - அட்மீன்&#128591... Thanks...

  9. #3758
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    " துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன் "
    ��**********************************��

    " துஷ்ட நிக்ரஹ் சிஷ்ட பரிபாலன்" என்பது இறைவனுக்கு மட்டுமல்ல; MGR கற்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்தபோதும், முதல்வரான பிறகும், தன்னை வளர்த்து விட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்கு நஷ்டம் என்றாலும், அந்த தகவல் அவரது கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து காக்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாக தெரிகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக் கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி; எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று நம்பியிருந்தார். இது போன்ற நம்பிக்கை பலருக்கு இருந்திருக்கிறது.

    நடிகை என்ற ஓரு காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது; அவர்களை, அந்த கயவர்களின்பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகைகளிடம் கண்ணியத்துடன் நடந்துகொண்டார் என்பதற்கு சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தை காக்கவேண்டிய சந்தர்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.
    நன்றி : யாழ் பதிவு - யாழ் இணையம்...... Thanks...

  10. #3759
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எத்தனையோ ஆண்டுகள் கழிந்தும் எம்.ஜி.ஆர், இன்னமும் புரட்சி தலைவராகவே தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவர் நடிகர் என்பதால் மட்டுமல்ல. அதையும் தாண்டிய அவரின் மக்களோடு மக்களாக வாழ்ந்த இயல்புதான் காரணம் என்பதை பல சம்பவங்கள் மூலமாக நாம் தெரிந்து கொண்டிருக்கலாம். அதை மறுபடியும் நிரூபிக்கும் விதமாக எம்.ஜி,ஆர் பற்றிய ஒரு ஸ்வாரஸ்யா சம்பவத்தை கூறி இருககிறார் எம்.ஜி.ஆரின் "தாய்" பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த கல்யாண் குமார்.


    "தாய் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த வலம்புரி ஜானின் வீட்டுக்குப் போன் செய்திருக்கிறார் அந்த பத்திரிக்கையின் உரிமையாளரான எம்.ஜி.ஆர்.

    ஆனால் அப்போதுதான் வலம்புரி ஜான் , அலுவலகத்திற்குக் கிளம்பி இருக்கிறார். அப்போது அவரது குடும்பம் வெளியூர் போயிருந்தபடியால் வீட்டில் இருந்த பதின்மூன்று வயது வேலைக்காரச் சிறுமிதான் போனை எடுத்துப் பேசியிருக்கிறாள்.

    அவளுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உரையாடல் இப்படி நிகழ்ந்திருக்கிறது:

    ‘’ ஹலோ.. யாருங்க பேசறது?’’ இது வேலைக்காரச் சிறுமி.

    ‘’ நான் எம்.ஜி.ராமச்சந்திரன் பேசுகிறேன். வலம்புரி ஜானிடம் பேசவேண்டும்’’-அவர் எப்போது, யாருடன் பேசினாலும் தன் முழுப்பெயரையும் சொல்லித்தான் பேசுவாராம். அதனால் பேசுவது எம்.ஜி.ஆர் என்பது தெரியாமலே அந்த வேலைக்காரச் சிறுமி பதில் சொல்லியிருக்கிறாள்!

    ‘’அய்யா இப்பதான் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனாங்க’’
    ‘’ நீங்க யார் பேசறது?’’

    ‘’ நா இங்க வேலைபாக்குற பொண்ணு. அம்மா, அக்காவெல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க.’’

    ‘’உங்க பேரு என்ன?’’

    ’’லச்சுமி’’

    ‘’எந்த ஊரு?’’

    ’’தூத்துக்குடி பக்கத்துல வள்ளியூர் ‘’

    ’’இங்க வேலைக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?’’

    ’’மூணு வருஷமா இங்கதான் இருக்கேன்’’

    ‘’அப்படியா? என்ன சம்பளம் கொடுக்குறாங்க?’’

    ‘’அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசாமாசம் ஊருக்கு அப்பாவுக்கு அனுப்பிடுவாங்க. எனக்கு சாப்பாடு போட்டு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்க்கு துணி எடுத்துக் கொடுத்துருவாங்க.’’

    ’’ உன்னை நல்லா வச்சுக்கறாங்களா? சாப்பாடெல்லாம் நல்லா இருக்கா?’’

    ’’ம்ம்ம்... நல்லா இருக்கும்.. அய்யாவுக்கு தினம் கறிச்சோறு செய்வாங்க. எனக்கும் கொடுப்பாங்க’’

    ‘’சினிமாவுக்கெல்லாம் கூட்டிட்டுப் போவாங்களா?’’

    ’’ஆமா. லீவு நாள்ல எல்லாரும் போவாங்க. என்னையும் கூட்டிட்டுப் போவாங்க..’’

    ‘’உனக்கு அய்யாவைப் புடிக்குமா, அம்மாவப் புடிக்குமா?’’

    ’’ரெண்டு பேரையுமே புடிக்கும். அய்யா எதாவது கடைக்கு அனுப்பினா மிச்சக் காசை என்னையே வச்சுக்கச் சொல்லுவாரு. சேர்த்துவைக்கிறேன்.’’

    ’’எப்ப ஊருக்குப் போகப்போற?’’

    ‘’ எங்க அப்பா வந்து கூட்டிட்டுப் போவாரு. இப்பதான் பொங்கலுக்குப் போயிட்டு வந்தேன். இனி தீபாவளிக்குப் போவேன். புதுத்துணியெல்லாம் அம்மா எடுத்துக் கொடுப்பாங்க..’’

    ‘’சரி, அய்யா வந்ததும் நான் பேசுனதாச் சொல்லு’’

    ‘’உங்க பேரு என்ன சொன்னீங்க?’’

    ‘’எம்.ஜி..ராமச்சந்திரன்’’

    ’’மறுபடி சொல்லுங்க....’’

    ‘’எம்.ஜி.ராமச்சந்திரன்’’

    அப்போதும்கூட தான் எம்.ஜி.ஆர் என்பதை அவர் சொல்லிக் கொள்ளவேயில்லை!

    இரவு வீட்டுக்குத் திரும்பிய ஆசிரியரிடம் அந்த வேலைக்காரச் சிறுமி இந்த போன் விபரத்தைச் சொல்லியிருக்கிறாள். அத்தனை நேரம் உன்னிடம் பேசிக் கொண்டிருந்தது, எம்.ஜி.ஆர் என்ற விபரத்தை ஆசிரியர் அவளிடம் சொன்னபோது அதை அவள் முழுசாய் நம்பவில்லை. எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் அவளுக்குத் தெரியாததால், ‘அவரு எம்.ஜி.ஆருன்னு சொல்லவேயில்லையே.. எதோ ராமச்சந்திரன்ன்னுதானே சொன்னார், அய்யா பொய் சொல்கிறார்’ என்றுதான் நினைத்திருக்கிறாள்.

    ஆனால் அடுத்தமுறை வலம்புரி ஜான், எம்.ஜி.ஆரைச் சந்திக்கப் போனபோது அந்தச் சிறுமி பற்றி விசாரித்த எம்.ஜி.ஆர் அவளிடம் சேர்ப்பிக்குமாறு ஒரு கணிசமான தொகையைக் கொடுத்துவிட்டிருக்கிறார்.

    அவ்வளவு பணமும் தனக்குத்தான், அதுவும் எம்.ஜி.ஆரே கொடுத்துவிட்டிருக்கிறார் என்று அறிந்தபோதுதான், சில நாட்களுக்கு முன் தன்னோடு பேசியது சாட்சாத் எம்.ஜி.ஆரேதான் என்பதை அவள் நம்பி இருக்கிறாள்.

    நன்றி: தாய் பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்த கல்யாண் குமார் அவர்கள் !..... Thanks...

  11. #3760
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நமது தெய்வம் எம்ஜிஆர் அவர்கள் எப்பேற்பட்ட ஞானசிற்பி என்பதை நீங்களே பாருங்கள்.
    திரைப்பட வசனங்கள் மூலம் .... உலக மக்களுக்கு நல்வழிகாட்டிய உண்மை கடவுளே எம்ஜிஆர் அவர்கள் தான் என்றால்அவை மிகையல்ல...
    அன்பன் :
    எம்ஜிஆரின் காலடி நிழல்
    க.பழனி.... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •