Page 381 of 402 FirstFirst ... 281331371379380381382383391 ... LastLast
Results 3,801 to 3,810 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3801
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வணக்கம் அன்பு நெஞ்சங்களே ! தற்போது சன் லைஃப்'ல் , புரட்சி தலைவரின் , *"உரிமைக்குரல் *" காவியம் . . இயக்குனர் ஸ்ரீதருக்கு மறுவாழ்வு தந்த படம். மெல்லிசை மன்னரின் முகப்பிசையே அதிரடி என்றால் பாடல்கள் அனைத்தும் சர வெடி. அதிலும் , *விழியே கதை எழுது , கல்யாண வளையோசை , ஒரு தாய் வயிற்றில்* . . பாடல்கள் இன்னும் நூறாண்டுகள் தாண்டியும் ஓங்கி ஒலிக்கும் . பின்னணி இசையிலும் புரட்சியே செய்திருப்பார் திரு. *எம்.எஸ்.வி* அவர்கள். குறிப்பாக தலைவர் ரேக்ளா வண்டியில் வரும்போதெல்லாம் ஒலிக்கும் அந்த *தீம் மியூசிக்* . . ஆஹா அருமை. ரிக்ஷா காரன் படத்துக்கு பின் மிகவும் சுறுசுறுப்பான , துள்ளலான மக்கள் திலகத்தை இப்படத்தில் நாம் காணலாம் . லதாவுடனான காதல் காட்சிகளில் இளமை துள்ளலான உற்சாகம் , அண்ணன் சஹஸ்ரநாமத்துடன் வரும் சென்டிமென்ட் காட்சிகளில் நெகிழ்ச்சி , நம்பியாருடன் ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் ஆக்ரோஷம் . . தலைவர் பட்டையை கிளப்பியிருப்பார் . அதுவும் , அந்த க்ளைமாக்ஸ் சண்டைக்கு முன்பு வயல்காட்டில் அவர் பேசும் வீர வசனம் . .* இயற்கை நடிப்பில் தலைவரின் *விஸ்வரூபம்* . லதா அவர்களுக்கு அவரது திரை வாழ்வில் ஒரு முக்கியமான படம் இது. மக்கள் திலகத்துக்கு இணையான கதாபாத்திரத்தில் அவருக்கு ஈடு கொடுத்து மிக சிறப்பாக நடித்திருப்பார் . காமெடிக்கு நாகேஷ் இருந்தாலும் பஞ்ச் வசனங்களால் கலக்கியிருப்பவர் , தேங்காய் தான் . விறுவிறுப்பான திரைக்கதை , அழகான கிராமத்து இயற்கை காட்சிகள் , ஜனரஞ்சகமான இயக்கம் , இனிமையான பாடல்கள் & இசை , எல்லாவற்றுக்கும் மேலாக பொன்மனச் செம்மலின் இளமைத் துடிப்பான நடிப்பு . . இவை அனைத்தும் சேர்ந்து இப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை பரவசம் கொள்ள வைக்கின்றது . மொத்தத்தில் *உரிமைக்குரல்* தலைவரின் அன்பு ரசிகர்களுக்கு என்றென்றும் இனிய விருந்து . . ��������...... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3802
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ MGR. வாழ்க

    சித்திரை 13 ஞாயிறு

    எம்ஜிஆர் பக்தர்களே

    படத்தில் அருமை தலைவன் எம்ஜிஆரு க்குஅருகில் இருப்பவர் பெயர்

    சைதை துரை சாமி

    இவர் ராஜ விசுவாசி

    எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலகட்டத்திலேயே எம்ஜிஆர் மன்றம் வைத்தவர்

    1972 ஆண்டு எம்ஜிஆர் அண்ணா திமுகவை ஆரம்பித்தவுடன்

    சென்னை நகரில் அண்ணா திமுகவின் முக்கிய பிரமுகராக வாழ்ந்தவர் இவர்

    அண்ணா திமுகவின் மூத்த தலைவர்களில் முதல் கட்டத்தை சேர்ந்தவர்

    1980/ 1984 ஆண்டுகளில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டவர்

    எம்ஜிஆர் இறந்த பிறகு ஜானகி அம்மையாரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதற்காக முழுமூச்சில் இறங்கி பாடுபட்டவர் இவர்

    ஜானகி அம்மையாருக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர்

    ஜானகி அம்மையார் முதலமைச்சராக பதவியேற்றார்

    எம்ஜிஆர் குடும்பத்திற்கு துரோகம் செய்யாதவர்

    எம்ஜிஆர் அவர்களைப்போல் ஏழை தொண்டர்களுக்கும்

    ஏழை மக்களுக்கும் பண உதவி செய்து கொண்டு வருபவர்

    தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் சைதை துரைசாமி அவர்கள்தான்

    இந்த அற்புதத்தை எம்ஜிஆர் நடத்திக் காட்டுவார்....... Thanks PM

  4. #3803
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மருதநாட்டு இளவரசி
    14.04.1950
    திருச்சி ஜூபிடரில் 133 நாட்கள் ஓடிய வெற்றிபடம்.
    கதாபாத்திரமாக காண்டீபன்
    ஜோடி வி.என்.ஜானகி
    தலைவருக்கும் ஜானகி
    அம்மாளுக்கும் காதல்
    மலர்ந்தது வாழ்வில்.
    இசை வி.எஸ்.ஞானமணி
    வசனம்.கலைஞர்
    இயக்குநர் ஏ.காசிலிங்கம்.
    இரண்டு கைகளிலும்
    கத்தி சண்டை சில
    ஆட்களுடம் இரு கத்தியை சுழற்றும்
    காட்சி காணக்கிடைக்காத காட்சி நம் தலைவர்
    இந்த படத்தில் இருந்து தான்
    வேகம் பிறந்தது....... Thanks...

  5. #3804
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெனோவா 15.06.1953
    ஓடிய நாட்கள் 133.
    கதாபாத்திரமாக சிப்ரேஸா(நாட்டின் மன்னன்)
    இது ஒரு கிறிஸ்துவ படம்.ஜோடி பி.எஸ்.சரோஜா
    இசை முதன்முறையாக
    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தது.இயக்குநர்.எப்.நாகூர்
    வசனம். சுரதா இளங்கோவன் ... Thanks...
    நெடுமாறன்.

  6. #3805
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சபாஷ் மாப்பிள்ளே 31.08.1961
    கதாபாத்திரமாக வாசு
    ஜோடி மாலினி
    இயக்குனராக எஸ்.ராகவன்(மாலினி யின் கணவர்)
    வசனம் ஏ.கோவிந்தன்.
    சிறந்த நகைச்சுவை படம்.படம் பரவாயில்லை, வசூல் நன்றாக செய்தது.
    ராகவன்,மாலினியின் நட்புக்காக நடித்து கொடுத்தார். படத்தில் எம்.ஜி.ஆரும், mr.ராதாவும் போட்டி போட்டுக்கொண்டு நகைச்சுவை காட்சிகளில் மிளிர்ந்தனர்......... Thanks...

  7. #3806
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #உறந்தைஉலகப்பன்...

    எம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து!

    "புதுமைப்பித்தன்' படத்தில் சந்திரபாபு எம்.ஜி.ஆரைப் பற்றி அறிமுகப்படுத்தும்போது இவர் நடிகர்,
    புரட்சி நடிகர் என்று குறிப்பிடுவார். வசனம் கலைஞர்தான். வசனம் மட்டுமன்று அந்தப் பட்டத்தையும் கொடுத்தது கலைஞர்தான்.

    இதனைப் பற்றி மணப்பாறை வசந்த கலா மன்றம் உறந்தை உலகப்பன் கூறுகிறார்: ""கலைஞரை எங்கள் நாடகம் ஒன்றிற்கு தலைமை வகிக்கக் கேட்டதுடன் எம்.ஜி.ஆரையும் முன்னிலை வகித்திட கூட்டிவரக் கோரினேன். கலைஞரும் எம்.ஜி.ஆரும் வருவதாக 3-4-1952-ல் தகவல் கார்டில் வந்தது. 5-4-52ல் திருச்சி தேவர் மன்றத்தில் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில், சினிமா நடிகர் எம்.ஜி.ராமச்சந்திரன் முன்னிலையில் என அச்சிடப்பட்டு வெளியாகியது.

    எம்.ஜி.ஆருக்கு ஒரு பட்டம் அளித்து நோட்டீசில் போடுவோம். நாடக மேடையில் அறிவித்துவிடலாம் என நினைத்து புரட்சி நடிகர் என வழங்கலாம் என்று முடிவுசெய்தேன்.

    எங்களது குழுவிலுள்ள ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.ஜி.ஆர் என்ன புரட்சி பண்ணி விட்டார். சினிமா நடிகர் என்றே போடுவோம் என்று தன் கருத்தைச் சொன்னார்.

    நான் பிடிவாதமாக என் எண்ணப்படியே செய்தேன். ஆயிரக்கணக்கான நோட்டீஸ் அச்சிட்டு விநியோகம் செய்தோம். மேக்கப்பைக் கூட சரியாகக் கலைத்திடாமல், கலைஞருடன் காரிலேயே 5-4-1952 மாலையே திருச்சி வந்து சேர்ந்தார் எம்.ஜி.ஆர்...

    நாடகம் தொடங்கி இடைவேளையில் கலைஞர் அவர்களை, புரட்சி நடிகர் என எம்.ஜி.ஆரை கவுரவித்திட கோரிட, அவரும் தனக்கே உரிய பாணியில் பேசும்போது அன்பு என்பது மூன்றெழுத்து என்று சுமார் 33 மூன்று எழுத்து வார்த்தைகளை வரிசைப்படுத்தி முடிக்கும்போது, "அண்ணா' என்ற மூன்றெழுத்து, "தி.மு.க.' என்ற மூன்றெழுத்து, ‘எம்ஜி.ஆர்.’ என்ற மூன்றெழுத்துக்காரருக்குப் புரட்சி நடிகர் என்ற பட்டத்தினை இந்தத் நாடக நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகம் செய்கிறேன்'' என்றபோது பலத்த கைத்தட்டலுக்கு இடையே எழுந்து நின்றார் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்...

    💐 வளர்க புரட்சித்தலைவர் புகழ் 💐

    #இதயதெய்வம்........ Thanks fb

  8. #3807
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    MGR Filmography Film 51 (1961) Poster
    "தாய் சொல்லை தட்டாதே"
    ரகசிய போலிஸ் வேடத்தில் எம்ஜியார் நடிக்க, விருவிருப்பான சண்டைக் காட்சிகள், தாய்ப்பாசம், காதல் காட்சிகள், இனிய பாடல்கள், என்று ஒரு முழு எம்ஜியார் ஃபார்முலாவுடன் அமைந்த படம் வெற்றி பெற்றதில் வியப்பேதுமில்லை. ஏறத்தாழ, எம்ஜியாரின் எல்லா படங்களிலும் வெற்றி கதாநாயகியாக தோன்றிவந்த சரோஜாதேவி, எம்ஆர் ராதா, அசோகன் ஆகியோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்க, ஆரூர்தாசின் கதை வசனம் எழுத, இயக்கம் வேறு யார், எம்ஏ திருமுகம்தான்.
    கண்ணதாசனின் பாடல்களுக்கு தேவர் ஃபிலிம்சின் ஆஸ்தான ம்யூசிக் டைரக்டரான கேவி மகாதேவன் இசையமைத்தார். மொத்தம் எட்டு பாடல்கள்; அனைத்துமே பிரபலமாயின. அவற்றில் சிரித்துச் சிரித்து எனும் டிஎம்எஸ் சுசீலா டூயட் இன்றளவும் எவர்க்ரீனாகத் திகழ்கிறது. எம்ஜியார் சரோஜாதேவி ஜோடியை மேலும் பல படங்களில் தொடரும்படிச் செய்த பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு. கண்ணாம்பாவின் ஆவேச நடிப்பும் படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணிகளில் ஒன்று........ Thanks...

  9. #3808
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தலைவர் முதல்வரான அன்று...

    1977-ம் ஆண்டு ஜூன் 30 அன்று,
    இதயதெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள் அன்றைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரியின் முன்னிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    அது அரசியல் சட்ட ரீதியாகவும், சம்பிரதாயப்படியும் ஏற்றுக் கொண்ட
    பதவி ஏற்பு விழா!

    ஆனால், சம்பிரதாய பதவி ஏற்பு முடிந்ததும் புரட்சித்தலைவர் அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகில் உள்ள மேடைக்கு வந்தார்.

    சென்னை அண்ணா சாலையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகமே தலைநகருக்கு வந்து விட்டது போல, அண்ணா சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பல இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.

    பத்து இலட்சம் என்று ஒரு பத்திரிகையும்
    20 இலட்சம் என்று இன்னொரு பத்திரிகையும் எழுதும் அளவுக்கு மக்கள் கூட்டம் கூடி வங்கக்கடலாய் ஆர்ப்பரித்தது. அப்போது புன்னகையோடு மேடை ஏறி, மக்களின் வாழ்த்துக்களைக் கையசைத்து ஏற்றுக்கொண்டார் அந்த சரித்திர நாயகன் இதயதெய்வம் புரட்சித்தலைவர்.

    அந்த மக்கள் கடலுக்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்தார் தலைவர். பின்னர் உரையாற்றினார்.

    அங்கே ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது, அரசாங்கச் சடங்குதான். நமது இதய தெய்வம் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் ஆணையிட்டு, உங்களுக்கு முன்னால் பதிவியேற்பதைத்தான் நாங்கள் பெருமையாக்க் கருதுகிறோம்.
    இங்கே நடப்பது உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் விழாவாகும்.

    உங்கள் முன்னால் அமைச்சர்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் சார்பாகவும், தமிழக மக்களுக்கும், பல நாடுகளில், பல மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக் கொள்கிற அனைத்து மாநிலங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு செய்தியை இங்கே கூற விரும்புகின்றேன்.

    மக்களின் எண்ணங்களையும், மக்களின் விருப்பங்களைச் சட்டமாக்கவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருக்கிறது.

    இதனை எங்கள் மனத்தில் இருத்தி, லஞ்சமற்ற, ஊழலற்ற, நீதிமன்றங்களில் தலையீடு அற்ற ஆட்சியை நடத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.

    உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் கொள்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்துவோம்.
    இந்த உயர்ந்த லட்சியத்தை எங்கள் உயிரைக் கொடுத்தேனும், எங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் இழந்தாலும், யார் தடுத்தாலும் அதை எதிர்த்து நிறைவேற்றுவோம் என்று அண்ணாவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன்!” என்று உறுதியிட்டுக் கூறினார், புரட்சித் தலைவர்.

    அப்பொழுதும், அதற்குப் பின்னரும் அங்கே ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் வாழ்த்து முழக்கங்களையும் எழுத்தில் வடிக்க எவராலும் இயலாது!

    அந்த விழாவை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் ச்ந்தித்தார், புரட்சித்தலைவர். அவர்களிடமும் அதே கருத்தையே வலியுறுத்தினார்.
    இவ்வாறு கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்களில், அதாவது சுமார் 1,716 நாள்களில் ஆட்சியைப்பிடித்த அற்புத சாதனையைச் சாதித்த சரித்திர நாயகனானார், புரட்சித் தலைவர்! என்றாலும், வெற்றி அவரை மேலும் பணிவுள்ளவராக மாற்றியதே தவிர, வேறு சிலரைப் போல மாற்றாரை மனம் புண்படப் பேசும் ஆணவக்காரராக மாற்றி விடவில்லை.!!!

    இதயதெய்வம் புரட்சித்தலைவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதே நமக்கு பெருமை. தலைவரை முகமுகமாய் தரிசித்த நம் போன்ற தலைவர் பக்தர்களும் பிறவிப்பயனை அடைந்தவர்களே...!!!

    💐 புரட்சித்தலைவர் புகழ் வளர்க 💐

    #இதயதெய்வம்....... Thanks...

  10. #3809
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [தலைவர் தான் ஒரு நாட்டின் “முதல்மந்திரி” என்ற தற்பெருமை இல்லாமல் எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்தினார். அதிகாரிகளுக்கு மதிப்பு கொடுப்பார். அவர்களிடம் நாம் மக்களுடைய சேவகர்கள் என்று அடிக்கடி சொல்வார். மற்ற மந்திரிகளிடமும், 1960-ல் சினிமாவில் பிரபலமான மக்கள் திலகம் அவர்கள் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் கைவண்டி இழுத்து செல்லும் தொழிலாளிகளுக்கு செருப்புகள் வாங்கி கொடுத்தார். இது சென்னை நகரம் மட்டும் அல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும் நகரங்களில் உள்ள கைவண்டி தொழிலாளர்களுக்கும் காலில் செருப்பு இல்லாதவர்களுக்கும் செருப்பு வாங்கி கொடுக்க வேண்டும் என்று அங்கு உள்ள எம்.ஜி.ஆர். மன்றங்கள் வழியாக, தன்னுடைய சொந்த செலவிலேயே ஏற்பாடு செய்தார்.
    இதே போல் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுபவர்களுக்கும் மழை பெய்யும் காலங்களில் அவர்களுக்கு மழை கோட்டு வாங்கி கொடுத்தார். அந்த காலத்தில் மனிதனை வண்டியில் உட்கார வைத்து மனிதன் இழுத்துச் செல்வார்கள். அதற்கு கை ரிக் ஷா என்று பெயர். இப்படி மனிதன் மனிதனை உட்கார வைத்து இழுத்து செல்லக்கூடாது இந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் இவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஷா வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று அப்போது, உள்ள அரசாங்கத்தாரிடம் கேட்டு கொண்டார். அதன்பிறகு அந்த கைரிக்ஷா கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இப்படி இதுமாதிரியான எவ்வளவோ விஷயங்கள் உண்டு. இவைகள் எல்லாம் அரசியல் ரீதியாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் இது அவருடைய வரலாற்றில் வரவேண்டிய விஷயங்கள்..... Thanks...

  11. #3810
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கண்கணட தெய்வமாக எம்ஜிஆரை கொண்டாடும் மக்கள்
    பாமர மக்கள் நல்வழி காட்ட திரையை ஆயுதம் ஆக்கி வென்றதால்
    மது போதை நாடாமல் வாழவைத்தற்க்கு
    ஒரு கடையில் ஒரு வீட்டில் எம்ஜிஆர் படம் பூஜிக்க படுகிறது என்றால் அங்கு மனிதநேயம் நிறைந்த இடம் என்று பொருள் இப்படி வாழவைத்ததால் வணங்கினர் எம்ஜிஆரை தெய்வமாக மக்கள்

    வாழ்க எம்ஜிஆர் புகழ்..... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •