Page 399 of 402 FirstFirst ... 299349389397398399400401 ... LastLast
Results 3,981 to 3,990 of 4011

Thread: Makkal thilagam mgr- part 25

  1. #3981
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அருமையான படம்.
    தலைவர் இறப்பது போல் படம் என்பதால் நானே ஒரு முறைதான் பார்த்தேன்.
    அதுபோல் ராஜா தேசிங்கு, பாசம் படங்களும் ஒரு முறை தான் பார்த்தேன்.

    சாதாரணமாக தலைவரின் ஒவ்வொரு படத்தையும் பத்து தடவை முதல் எண்ணற்ற முறை பார்ப்பது வழக்கம்.

    பெரும்பாலும் தலைவர் பட டிவிடி அனைத்தும் (கிடைத்தது ) சேர்த்து வைத்துள்ளேன்....... Thanks Hameed Bai...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3982
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "ராணி சம்யுக்தா", பாடல்கள் அருமை படமும் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது... ஆனால் நீங்கள் சொன்னது போல் இறப்பு காட்சிதான் பிடிக்கவில்லை இருந்தாலும் படம் சூப்பர்������.......... Thanks...

  4. #3983
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெற்ற புரூக்ளின் மருத்துவமனையைப் பார்த்த நிகழ்ச்சியை எழுதும் போது, எம்.ஜி.ஆரின் அன்பில் திளைத்த அனுபவங்கள் என் நினைவில் அலை மோதுகின்றன.

    அமெரிக்காவில் ஹட்சன் ஆற்றின் மேல் ஒரு நீளமான பாலம் இருக்கிறது. ரயில்கள் செல்வதற்கான இருப்புப் பாதை. சாலைப் போக்குவரத்திற்காக இரண்டு பாதைகள் என்று மூன்று அடுக்குகளைக் கொண்டது அந்தப் பாலம். ஆனாலும் இதைத் தாங்கி நிற்க பில்லர்கள் கிடையாது. நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்று என் புரோகிராம் ஆபிசர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். அப்படியா? பார்க்கலாமே. அந்தப் பாலத்தின் பெயர் என்ன என்றேன் நான்.

    புரூக்ளின் பாலம் என்று அவர் பதில் சொன்னார். அந்தப் பெயரைக் கேட்டவுடன் ஒரு கணம் என் இருதய ஆழத்தில் சில ரத்தக்குழாய்கள் அதிர்வுற்றன. அப்படியானால் புரூக்ளின் மருத்துவமனை இங்கே தானே இருக்கிறது என்று கேட்டேன் தவிப்போடு.
    ஆம் என்றார் அந்த அதிகாரி. என்னை அளவுக்கு மீறி நேசித்த, என்னால் அளவுக்கு மீறி நேசிக்கப்பட்ட அந்த மகாமனிதனைக் காப்பாற்றி, மறுபடியும் நமது தரிசனத்திற்கு அனுப்பி வைத்தது அந்த இடம் தானே.

    அதைப் பார்க்க வேண்டும் அதற்கு நன்றி வணக்கம் செலுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த அதிகாரியும் அதற்கு உடனே ஏற்பாடு செய்தார்.
    கார் மருத்துவமனையை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. நான் கண்களில் ஈரங்கசிய என் ஞாபக வாசல்களை மெல்லத் திறந்தேன்.
    அல்லி நகரத்தின் அந்ப் பாமரத்தனமான வாழ்க்கை நாட்களில், வெள்ளித் திரை நிழலாய் மட்டுமே அந்த மனிதனைச் சந்தித்திருக்கிறேன். எனது கிராமத்திலிருந்து வீட்டிற்குத் தெரியாமல் வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு நண்பர்க்ளோடு டபுள் பெடல் போட்டபடி, நாற்பத்தியெட்டு மைல்களை தாண்டிப் போய் மதுரை மாநகரில் நாடோடி மன்ன்ன் படம் பாக்க வியர்வை கசகசப்போடு அமர்ந்த நாட்களும் உலக உருண்டை இரண்டாகப் பிளக்க கொடிபிடித்தபடி இரு உருவங்கள் திரும்பும் எம்.ஜிஆர் பிக்சர்ஸ் பட நிறுவன எம்பளம் பார்த்து கைதட்டிய நிமிடமும் அந்த மனிதன் திரையில் தோன்றிய முதல் காட்சியில் ஒலித்த விசில்களில் வியந்த வினாடியும் இப்போதும் என்னுள் காயாத சிமெண்ட் தரையில் பதித்த குழந்தையின் காலடிச் சுவடுகளாய் இருக்கின்றன.

    அந்த மனிதன் தான் என் தனி மனித வாழ்க்கையிலும் நுழைந்து, என் கலைத் திறமைகளுக்குத் தட்டிக் கொடுத்து, என் சோகங்களுக்குக் கண்ணீர் துடைத்து, என் இடறல்களுக்குத் தோள் கொடுத்து, என்னால் என்றுமே மறக்க முடியாத என் இரண்டாவது தாயாகிப் போனார் …
    அலைகள் ஓய்வதில்லை படத்தைப் பார்த்துவிட்டு அந்த மனிதர் என்னைக் கட்டித் தழுவி பாராட்டிய போதும், வேதம் புதிது படத்திற்கு டெல்லி அதிகாரிகள் அனுமதி மறுத்த போது ஆறுதுல் கூறி உடனே அனுமதி வாங்கித் தந்த போதும் என்னுள் ஏற்பட்ட உணர்வுகளை என்னால் வார்த்தைகளின் மீது இறக்கி வைக்க முடியவில்லை.

    அரசியலுக்கெல்லாம் வந்துவிடாதே. நீ ஒரு உண்மையான கலைஞன். உனது கலைக்கு நீ உண்மையாக இரு. அது போதும் … என்று தான் அவர் அடிக்கடி என்னிடம் கூறுவார்.

    ஒரு முறை உடல் நிலை சரியில்லாத சூழலில் ஓய்வெடுப்பதற்காக அவர் ஊட்டிக்கு வந்திருந்தார். ஒரு கைதியின் டைரி படப்பிடிப்பிற்காக நானும் அங்கு சென்றிருந்தேன்.

    அவர் தமிழ்நாடு ஹவுசில் தங்கியிருக்கிறார் என்றுகேள்விப்பட்டதும் அவரைச் சந்திப்பதற்காக அங்கு சென்றேன். என்னைப் பார்த்ததும் என்ன இங்கே? என்று கேட்டார்.
    ஷுட்டிங்கிற்காக வந்தேன். நீங்க வந்திருக்கீங்க என்று சொன்னாங்க அதான் என்றேன் நான். ஷுட்டிங்கிற்கா … நான் வந்து இரண்டு நாளாச்சு யாருமே சொல்லவே இல்லையே சரி இங்கெல்லாம் நிறைய பூக்கள் இருக்கே இங்கேயே ஷுட்டிங் எடுக்கலாமே …
    நீங்க இங்க இருக்கீங்க உள்ளே ஒரு ஆளை விடுவாங்களா என்ன? என்றேன் நான். யார் சொன்னது நீங்க எடுங்க என்று கூறிவிட்டு போன் செய்தார்,
    மறுநாள் காவல்துறையினரின் பாதுகாப்போடு தமிழ்நாடு ஹவுசில் படப்பிடப்பு ஆரம்பமானது. அப்போது ஒரு அதிகாரி வந்து இன்னிக்கு மத்தியானம் லஞ்ச் எங்கேயும் அரேஞ்ச் பண்ணிடாதிங்க. மொத்த யூனிட்டிற்கும் சாரோடதான் சாப்பாடுன்னு உங்க்கிட்டே சொல்லச் சொன்னார் … என்று தெரிவித்து விட்டுச் சென்றார். நான் திகைத்துவிட்டேன்.
    கொஞ்ச நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக ஓரிடத்தில் பார்வையைக் குவித்தனர். திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர் . வந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரை நோக்கி விரைந்தேன். என்னை அழைத்தார். எங்கே டான்ஸ் மாஸ்டர் ? தயங்கிய படியே இல்லை… நான் தான்.. ஓகோ நீங்களே டான்ஸ் மாஸ்டரா ? என்று கூறி குழந்தையாகச் சிரித்தார்
    ஷாட் முடிந்தவுடன் என்னையும் கமலையும் பக்கத்தில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்தபின் என் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவை அழைத்து, அவரிடமிருந்த மிகமிகச் சிறிய ஒரு கேமராவைக் கொடுத்துப் படம் பிடிக்கச் சொன்னார். நான் அவரிடம் பழக்கமான உரிமையுடன் என்னங்க உங்களைப் பத்தி நிறைய மிஸ்டரி இருக்குன்னு சொல்வாங்க கேமராவில் கூட மிஸ்டரி வச்சிருக்கிங்களே என்றேன்.
    அவர் சிரித்துக் கொண்டே கையில் கட்டியிருந்த வாட்சைக் காண்பித்து இங்கே பார் இதுல கூட கேமரா இருக்கு. பேசிட்டிருக்கும் போதே கூட படமெடுக்கலாம் என்று சொல்லி அதை இயக்கிக் காட்டினார். நான் மறுபடியும் திகைத்துப் போனேன்.
    மறுநாள் காலையில் என்னையும் கமலையும் கூப்பிட்டனுப்பியிருந்தார். சென்றோம். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பேனர் படம் எடுத்து ரொம்ப நாளாச்சு. நீ டைரக்ட் பண்ணு கமல் நடிக்கட்டும். இப்ப இல்ல. உனக்கு எத்தனை படம் கமிட் ஆகியிருக்கோ … அத்தனையையும் முடித்து விட்டு அப்புறமாய் பண்ணு… நான் கேக்கறேங்கறதுக்காக அவசரப்படாதே எவ்வளவு செலவழிக்கணுமோ அவ்வளவு செலவழிச்சு பிரம்மாண்டமா எடுத்துடுவோம் என்றார்.
    மதுரை தியேட்டர்களில் எந்த நிறுவனத்தின் எம்பளம் பார்த்துட்டு கை தட்டினேனோ அந்த நிறுவனத்தின் படத்தை நான் டைரக்ட் செய்ய வேண்டுமா … நானும் கமலும் அதிர்ந்து போய்விட்டோம்.
    ஒருமுறை சென்னை மாங்கொல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசி முடித்து விட்டு, நான் என் காரைத் தேடிக் கொண்டிருந்த போது, அவர் என்னைத் தன்னுடைய காரில் ஏறச் சொன்னார். நான் தயங்கினேன்.
    கூட்டம் கூடுது சீங்கிரம் ஏறு என்றார். ஏறிக் கொண்டேன். வீடு எங்கே ஜெமினி காம்ப்ளக்சில் தானே என்று கேட்டு என்னை இறக்கி விட்டார். பின் இந்த வீட்டிலதான் இன்னும் இருக்கியா என்று கேட்டார். இல்ல தி.நகரில் புது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கதான் வந்து கிரகபிரவேசத்திற்குக் குத்து விளக்கேற்றி வைக்கணும் என்றேன். அவசியம் வருகிறேன் என்று சொல்லி விடைபெற்றார்.

    அவர் புரூக்ளின் மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.
    வீட்டிற்குக் குடிபோவதற்கு முதல் நாள் ஒரு மரியாதைக்காக அவரிடம் சொல்லிவிட்டு வருவதற்காகச் சென்றேன். நாளைக்கு எத்தனை மணிக்கு என்றார். காலை ஆறரை மணிக்குங்க என்றேன்.
    மறுநாள் காலை ஆறேகால் மணிக்கு அந்த மாமனிதனின் கால்கள் என் வாசலில் பதிந்தன. நான் நெகிழ்ந்து போனேன். அவர் ஏற்றி வைத்த விளக்கு என் வீட்டில் இன்னும் வெளிச்சம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மனிதன் … அந்த மனிதன் ….
    புரூக்ளின் மருத்துவமனையே … அந்த மாமனிதனின் சுவாசத்தை இரண்டாண்டுகள் தானா உன்னால் நீட்டிக்க முடிந்த்து. இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்க்க் கூடாதா? கண்களில் நீர் தளும்ப நான் அதனோடு மானசீகமாகப் பேசினேன்.
    புரூக்ளின் மருத்துவமனை சலனமில்லாமல் நின்றது.
    ஞாபக நதிக்கரையில் நூலில் இயக்குநர் பாரதிராஜா....... Thanks...

  5. #3984
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒரு முறை எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார் வேனில் ரோட்டின் இரு மறுங்கிளும் மக்கள் திரளாக நின்று கோஷமிட மாலை போடவும் ஆராவாரமாக வந்து கொண்டிருந்தார் ஏழுமலை என்ற கிராமத்தை அடைந்தவுடன் திடீரென வேன் நின்றது ஏன்? என்று பார்க்கையில் ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் வழியை மறைத்து படுத்துக்கொண்டார் உடனே வேனை விட்டு எம்ஜிஆர் இறங்கி விட்டார் குழந்தைகள் மற்றும் வயதான மூதாட்டிகளுக்கு முதலிடம் கொடுப்பார் எல்லோரும் அறிந்ததே!
    என்ன வேண்டும் எழுந்திரியுங்கள் என்றதும் எம்ஜிஆரை முதன் முதலில் அருகில் பார்த்த பாட்டிக்கு கண்ணீர் பொங்குகிறது வாய் வார்த்தை வரவில்லை பின் தளத்த குரலில் நீ நல்லா இருக்கனும் ராசா சரிம்மா என்னனு சொல்லுங்க ஒன்னும் இல்லப்பா என் வயலு ரெண்டு வருசமா விளச்சலே இல்ல ஓ பாதம் பட்டா விளையும் னு சொன்னாங்க... அதா நல்ல மழை பெய்தால் தானா விளையும் அம்மா சரி வாங்க எங்கே? இருக்கு என்றார் தலைவர் அந்தா தெரியுது பாருப்பா என்றதும் கூட்டத்தில் விசில் பறக்குது கூட்டம் பின் தொடர எம்ஜிஆர் யாரும் என் பின்னே வரக்கூடாது வயல் கெட்டு விடும் என்று கட்டளையிட்டவாரே வேஷ்டியை தூக்கி பிடித்து கொண்டு ஐந்து நிமிடத்தில் சென்று தன் செருப்பை கழட்டி விட்டு வயலை தொட்டு வணங்கி விட்டு திரும்பினார் தலைவர்
    பச்சை பசேலான வயலில் வெள்ளை ஜிப்பா வேஷ்டியில் வெள்ளை கலர் தொப்பி கருப்பு கண்ணாடி தங்கமான நிறத்தில் அவர் முகம் நேரடியாக அன்று அவரை பார்த்த கண்கள் தூங்கி இருக்கவே முடியாது

    பின்பு அந்த பாட்டி தயாராக வைத்திருந்த குண்டு சோடாவை கொடுக்க தன் பெருவிரலால் ஒரே அமுக்கு அமுக்கி இரண்டு மடக்கு குடித்து விட்டு பாட்டியை கட்டி பிடித்து விட்டு கை ஆட்டிக் கொண்டே வேனில் ஏறி பறந்தார் எம்ஜிஆர் இது தான் கூட்டத்தில் எல்லோரும் பார்த்தது

    ஆனால் பாட்டியின் முந்தானை கொசவத்தில் பேப்பரில் சுற்றிய பணக்கட்டு யார் கண்ணுக்கும் தெரிய வில்லை அதை கட்டிப்பிடிக்கும் போதே தனது ஜிப்பாவில் இருந்து மாற்றி விட்டார் தலைவர் சென்ற பின் அந்த பாட்டியை கட்டிப்பிடித்த பெண்கள் எத்தனை பேர்? அவ்வளவு சந்தோஷம்
    பின் தன் உதவியாரிடமும் ஓட்டுனரிடமும் என்னை எவ்வளவு தூரம் நம்பி இருக்கும் இந்த மக்கள் எல்லோருக்கும் எப்படி நான் உதவ போகிறேன் என்று தனது கருப்பு கண்ணாடியை கழட்டி கர்சிப்பால் கண்ணை தொடைத்து கொண்டே பயணமானார் #பொன்மனச்செம்மல்

    நீங்க நல்லா இருக்கனும்
    நாடு முன்னேற....
    என்ற பாடல் தூரத்தில் ஒலித்த வண்ணமே இருந்தது

    மீண்டும் வருவேன் நண்பர்களே!

    #எல்லாபுகழும்எம்ஜிஆர்கே....... Thanks... Repost...

  6. #3985
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை செழியன் தயாரித்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா (இரு வேடங்கள்) நடித்த 'குமரிக்கோட்டம்' படத்திற்காக படமாக்கப்பட்ட முதல் காட்சி எது ?

    "நாம் ஒருவரையொருவர் சந்தித்தோமென்று" என்ற வாலி எழுதிய பாடலில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா (கிரீடம் வைத்து) நடிக்க படமானது. நாளிதழ் விளம்பரங்களிலும்
    இதன் புகைப்படம் தான் இடம் பெற்றது.

    Ithayakkani S Vijayan....... Thanks...

  7. #3986
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீMGR வாழ்க

    சித்திரை 14 திங்கள்

    எம்ஜிஆர் பக்தர்களே

    இந்தப்படத்தில் நின்று கொண்டு இருக்கும் மீசைக்கார அமைச்சர்

    ஈரோடு முத்துச்சாமி

    ,அடுத்து அமைச்சர் விஜயசாரதி அவர்கள்

    அடுத்த அமைச்சர் எஸ் என் ராஜேந்திரன் அவர்கள்

    ++++++++++++++++++++++++++++++++++

    இந்த படத்தில் நின்றுகொண்டிருக்கும்

    பெண் அமைச்சரின் பெயர் கோமதி சீனிவாசன்

    வலங்கைமான் சட்டமன்ற தொகுதி

    இவருடைய கணவர் ஒரு வழக்கறிஞர்

    எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மையார் அவர்களை முதலமைச்சர் ஆக்கியவர்களில்

    அமைச்சர் கோமதி சீனிவாசனும் ஓருவர்

    உப்பிட்ட எம்ஜிஆர் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவர்

    உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்காதவர்

    கோமதி சீனிவாசன்...... Thanks...

  8. #3987
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித் தலைவருக்கு டாக்டர் பட்டம் :

    சென்னை பல்கலைக்கழக 125 ஆவது ஆண்டுவிழா 20.09.1983 இல் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மத்திய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட 11 பேருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவது அறிவிக்கும்போது, மனித குலத்திற்கு அவர் ஆற்றிவரும் சேவைக்காகவும் கொடுமைகளை தீர்த்து இடைவிடாமல் அவர் நடத்தும் போராட்டத்திற்காகவும் கலைத்துறை சேவைக்காகவும் வள்ளல் தன்மைக்காகவும் இந்த பட்டம் வழங்கப்படுவதாக துணைவேந்தர் சாந்தப்பா தெரிவித்தார்.

    விழாவிற்கு தமிழக கவர்னர் எஸ்.எல்.குரானா தலைமை தாங்கினார் . ஜனாதிபதி ஜயில்சிங் பல்கலைக்கழக 125 ஆவது ஆண்டு விழாவை தொடங்கி வைத்தார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டத்தை கவர்னர் குரானா வழங்கினார். ஜனாதிபதி ஜயில்சிங் கைகுலுக்கி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி திரையுலகம் சார்பில் சென்னையில் நவம்பர் 20ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி நடிகர்- நடிகைகள் கலந்து கொண்ட பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள காயிதேமில்லத் கல்லூரி அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஊர்வலத்தைப் பார்வையிட்டார்.

    பிறகு டைரக்டர் பாரதிராஜா தலைமையில் விழா நடந்தது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஆளுயர ரோஜா மாலை அணிவித்தார். சத்துணவுத் திட்டத்திற்கு திரையுலகின் முதல் தவணையாக ரூபாய் 10 லட்சத்தை பாரதிராஜா வழங்கினார்.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..... Thanks.........

  9. #3988
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நேரு ஸ்டேடியம்! என் தந்தை துணையோடு டீனேஜ் பாயக நானும் என் நண்பர்களும் கலந்து கொண்டோம்.
    தலைவர் மேடைக்கு வந்து சேரச் சற்று காலதாமதம் ஆனது, அதுவரை மேடையிலிருந்தநடிகர்கள் கார்த்திக், சுரேஷ், மோகன், சிவகுமார், தியாகராஜன், கமல், ரஜினி, பாக்யராஜ், ராதா, அம்பிகா, ரேவதி என பல நடிகர் நடிகைகள் வரிசையாக அமர்ந்திருந்தனர், நானும் எனது நண்பர்களும் அமர்ந்திருக்கும் நடிகர்களில் யார் அழகு என்று பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருந்தோம்!
    அன்றலர்ந்த தாமரை மலராக தேவலோகத்தின் இந்திரன் போல் காரைவிட்டு இறங்கி நம் தலைவர் மேடை ஏறியது தான் தாமதம்! அழகு அழகு என்று நாங்கள் இதுவரை யார் யாரையோ வர்ணித்து இருந்தோம், அவர்கள் அனைவரும் இவரது அழகிற்கும் நிறத்திற்கும் கிட்ட கூட நெருங்க முடியாத நிலையில் இருந்தார்கள்! அங்கு அழகின் மொத்த உருவம், அது என் தலைவர் மட்டுமே தான்!...... Thanks...

  10. #3989
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மனிதாபிமானத்தின் மறுஉருவம் புரட்சி தலைவர்.
    ********************************************

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
    நமது மக்கள் திலகம் முதல்வராக பதவியேற்ற புதிதில் 1977 ல் சென்னை கன்னிமாரா ஓட்டலலில் சில வெளிநாட்டு பிரமுகர்களை கௌரவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் விருந்தும் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து தலைவர் வீட்டுக்கு புறப்பட இரவு 11 மணி ஆகிவிட்டது. காரில் போய்க்கொண்டிருக்கும் போது டிரைவரிடம் " நீ சாப்பிட்டியா " என கேட்க அவரும் சாப்பிட்டேனய்யா என பதில் கூற அவர் சொன்ன பதிலால் சந்தேகம் வரவே என்ன சாப்பிட்ட சொல்லு என கேட்க டிரைவர் சில உணவுகளைச் சொல்ல .இந்த உணவு இன்றைய டின்னரில் பரிமாறவே இல்லையே உண்மையைச் சொல் சாப்பிட்டாயா இல்லையா என சற்று கோபத்துடன் கேட்க இல்லிங்கய்யா சாப்பிடலை எனக் கூற மற்ற டிரைவர்கள் சாப்பிட்டார்களா எனக்கேட்க "யாருமே சாப்பிடலய்யா "ஏன் அதற்கு பாதுகாப்பு அதிகாரி அரசு சார்பில் விழா நடந்தால் டிரைவர்களுக்கு சாப்பாடு கிடையாது எனக்கூற அவ்வளவு தான் முகம் கோபத்தில் ரத்த சிவப்பாகி மறுநாள் காலை தலைமச் செயலகம் வந்து எல்லா அலுவல்களையெல்லாம் ஒத்திப் போட்டு பொதுத்துறை, நிதித்துறை அதிகாரிகளை கூப்பிட்டார். முக்கிய பிரமுகர்கள். அதிகாரிகள். விருத்தினர்களுக்கு மட்டும் தான் வயிறு இருக்கிறதா? டிரைவர்களுக்கு இல்லையா ? அவர்களுக்கு பசிக்காதா? இது என்ன உத்தரவு ? யார் போட்டது? எனக் கேட்க அதிகாரிகள் விளக்க நேற்றைம விருந்தின்படி நபர் 1க்கு ரூ 256 மட்டுமே அனுமதி விருந்துக்கு வந்தவரை தவிர மற்றவர்கள் சாப்பிட முடியாது என தயங்கியபடியே சொல்ல இதை கேட்டும் சமாதானமடையாமல், இனி இதுமாதிரி விழா நடந்தால் டிரைவர்களுக்கும் உணவுக்கு வழி செய்திட வேண்டும் இந்தச் செலவுகளை அரசின் கணக்கில் எழுத முடியாதென்றால் கூறிவிடுங்கள் எனது சொந்த பணத்திலிருந்து கொடுக்கிறேன் இது முடியாதென்றால் என்னை அழைக்காதீர்கள் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார் இந்த சம்பவத்துக்கு பின் அரசாங்க டிரைவர்கள் விருந்துக்கு வந்தால் அவர்கள் தனியே சாப்பிடலாம் எனவும் அவ்வாறு சாப்பிடலைன்னா அந்த உரிய தொகை படியாக வழங்க முடிவு செய்யப்பட்டது. தங்களுக்காக முதல்வரே வாதாடினார் எனக் கேட்ட டிரைவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லேயே இல்லை.

    [நாளை போடப் போறேன் சட்டம் பாரு அது நாடு புகழும் திட்டம்] .

    எவ்வளவு தீர்க்கதரிசி நமது தலைவர்....... Thanks...

  11. #3990
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [தமிழ் திரைப்படத்தில் எத்தனை காதல் சோக கீதங்கள் வந்தாலும் இந்த பாடலை முதன்மையாக இருக்கும் சரவணா பிலிம்ஸ் ஜி என் வேலுமணி அவர்கள் தயாரிப்பில் உருவான திரைப்படம் படகோட்டி மக்கள் திலகம் நடித்து வெற்றி அடைந்த மாபெரும் திரைப்படம் வாலி முதன்முதலாக எம்ஜிஆர் திரைப்படத்திற்கு முழுமையாக பாடல் எழுதிய வெற்றி திரைப்படம் தமிழ் சிம்மக்குரலோன் செந்தமிழ் பாடகர் டி எம் சௌந்தரராஜன் குரலிலும் எத்தனை பெண் குயில் வந்தாலும் எங்கள் பெண் குயில் இசை மிகைப்படுத்த முடியாது என்று பெருமை வாய்ந்த அம்மா பி சுசிலாவின் குரலிலும் எங்கள் புரட்சித் தலைவருக்கு என்றே பிறந்த மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் உருவான மிக அருமையான பாடல்..... Thanks...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •