Page 39 of 400 FirstFirst ... 2937383940414989139 ... LastLast
Results 381 to 390 of 3996

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 21

  1. #381
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Thanks Gururo
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #382
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நன்றி_மறவா_நடிகர்_திலகம்

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலகம் போற்றும் நடிகர் மட்டும் அல்ல. நேரம் தவறாமை, நன்றியுணர்ச்சி, பெருந்தன்மை, விளம்பரமில்லாமல், தன்னலம் கருதாது உதவி செய்தல் போன்ற பல நற்குணங்களும் கொண்ட ஒரு நல்ல மனிதராக வாழ்ந்தார்.
    ...

    யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அவர்கள் நடத்தி வந்த மதுரை ஸ்ரீ பால கான சபாவில் இருந்த சிறுவர்களுக்கு நடிப்பும் தமிழும் கற்று கொடுக்க ஒரு வாத்தியார் இருந்தார். ரொம்ப கண்டிப்பானவர். சிறுவர்கள் சின்ன தவறு செய்தால் கூட பிரம்பால் வெளுத்து விடுவார். இதனால் நாடக சபாவில் இருந்த சிறுவர்களுக்கு அந்த வாத்தியாரை கண்டாலே சிம்ம சொப்பனம் தான்.

    அந்த தமிழ் வாத்தியார் இலக்கண சுத்தமாக, அழகு தமிழில் அற்புதமான பாடல்களை எழுதுவார். ஒரு நாள் சங்கிலியாண்ட புரத்திலிருந்து வந்த அந்த சிறுவன் ஒரு இளம் விதவை கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தான். ஏதோ கவனக் குறைவில், ரவிக்கை அணிந்து நடித்து விட்டான். அந்த காலத்தில் விதவைகள் ரவிக்கை அணிவதை சமுதாயம் ஏற்கவில்லை. சிறுவன் ரவிக்கை அணிந்து நடித்ததைப் பார்த்த அந்த கறார் வாத்தியார், அந்த காட்சி முடிந்ததும் அவனை பிரம்பால் வெளுத்து விட்டார். ‘செய்யற வேலைல எப்படி கவனம் இல்லாம இருக்கலாம்’ என்பது தான் அவருடைய கோபத்துக்கு காரணம்.
    அந்த சிறுவன் யாரென்று நான் சொல்லவும் வேண்டுமா? வேறு யார், நம் சிவாஜி கணேசன் தான். அந்த கண்டிப்பான வாத்தியார் K.D. சந்தானம் அவர்கள்.

    பின்னாளில் பாசமலர் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பணக்காரனானதும் ராஜரத்னம் என்கிற பெரிய மனிதரை சந்திக்கும் காட்சி வரும். அந்த ரத்னம் கதாபாத்திரத்தில் K.D. சந்தானம் நடித்தார். எந்த வாத்தியாரிடம் அடியும் உதையும் வாங்கி தமிழையும் நடிப்பையும் கற்றுக் கொண்டாரோ, அந்த வாத்தியாரை பாசமலர் படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சிவாஜி கணேசனே பரிந்துரைத்தார்.

    அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில், சிவாஜி கணேசன் படப்பிடிப்பு தளத்துக்கு வெளியே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு சிகரெட் பிடித்த படி கதாசிரியர் ஆரூர் தாஸ் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேக் அப் ரூமிலிருந்து அந்த வழியாக படப்பிடிப்பு தளத்துக்கு K.D. சந்தானம் சென்றார். அவரைப் பார்த்ததும் சிவாஜி மரியாதையுடன் எழுந்து நின்று, சிகரெட்டை பின்னால் மறைத்துக் கொண்டார். இதை கவனித்தும் கவனிக்காத மாதிரி தலையை குனிந்தபடி சந்தானம் அவர்கள் கடந்து சென்றார்.

    K.D. சந்தானம் கொஞ்ச தூரம் சென்றதும் சிவாஜி கணேசன் ஆரூர்தாஸிடம் “ஆரூரான்! இந்த சந்தானம் வாத்தி கிட்டே நான் வாங்கின அடி கொஞ்சம் நஞ்சமில்ல தெரியுமா! சின்ன தப்பு செஞ்சா கூட எங்கள பின்னியெடுத்துடுவார். எங்கள துரத்தி துரத்தி அடிச்சிருக்கார். டாய்லெட்டுக்கு போகும் போது கூட பிரம்பும் கையுமா தான் போவாரு! இப்போ என்னவோ சின்ன பொண்ணு மாதிரி தலைய குனிஞ்சுக்கிட்டு போறாரு. அந்த காலத்துல அவர நினைச்சா கூட உடம்பெல்லாம் நடுங்கும்” என்று சொன்னார்.

    “அப்புறம் எதுக்கு அவர இந்த ரோலுக்கு சிபாரிசு செஞ்சீங்க” என்று ஆரூர்தாஸ் தமாஷாக கேட்டார்.

    “உனக்கு தெரியாது. அவர் கையால அன்னிக்கு வாங்கின அடி தான் இன்னிக்கு நான் சிவாஜி கணேசனா, இப்படி வசதியா உக்காந்திருக்க காரணம். ட்ராமா ட்ரூப்ல சேர்ந்தப்போ நான் வெறும் பூஜ்யம். அவர் கிட்டே தான் டயலாக் பேசவும், நடிக்கவும் கத்துக்கிட்டேன். அவர் எவ்வளவு பெரிய கவிஞர் தெரியுமா? நான் நடிச்ச அம்பிகாபதி படத்துல ‘கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே’ அப்படின்னு என்ன அழகான ஒரு பாட்டு எழுதியிருந்தாரு! அவரோட தமிழ் அறிவுக்காக தான் நான் அத்தனை அடியையும் வாங்கினேன். இல்லன்னா என்னிக்கோ ட்ரூப்ப விட்டு வீட்டுக்கு ஓடி போயிருப்பேன்” என்று பதில் சொன்னார் சிவாஜி கணேசன்.

    சிறிது நேரம் கழித்து ஆரூர் தாஸ் அவர்கள் K.D.சந்தானத்தை அணுகி “அண்ணே, சின்ன வயசுல சிவாஜி உங்க கிட்ட செம்மையா அடி வாங்கியிருக்காராமே” என்று கேட்டார்.

    “ஓ! உங்க கிட்டே சொல்லிட்டாரா? அதெல்லாம் அந்த காலம். இப்போ எனக்கு வயசாயிடுச்சு. நீ எழுதினத என்னால ஞாபகம் வெச்சிக்க முடியல. அது மட்டும் இல்ல, தம்பி கணேசன் என் முன்னால நிக்கும் போது, அவர் முகத்த பார்த்து தானே நான் டயலாக் பேசணும்? ஆனா அவர பார்த்தா எனக்கு பதட்டமாயிடுது. அதனால தப்பா எடுத்துக்காம, நீ எழுதினத ஒண்ணுக்கு நாலு தடவையா எனக்கு படிச்சு காட்ட முடியுமா? என்று கேட்டார் K.D.சந்தானம்.

    சிறு வயதில் கடுமையான முறையில் தன்னை செதுக்கிய ஆசிரியரை, பல வருடங்களுகு பிறகும் நன்றியுடன் நினைவு கூர்ந்து அவருக்கு உதவி செய்த அந்த நல்ல உள்ளத்தை என்ன சொல்லி பாராட்டுவது?

    Thanks Raghunadhan Ks (Nadigarthilagam sivaji Visirigal)
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #383
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கர்ம வீரர் காமராஜர் வழி நடந்த அண்ணன் சிவாஜி அவர்கள்

    கல்வி பயிலும் மாணவிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் காட்சி

    Thanks Sadhavenkatraman
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #384
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் 91வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ...24 ஆம் நாளான இன்று ...24 10 2019 (வியாழன்) தொலைக்காட்சியில் காவிய நாயகனின் காவியங்கள்...!
    நண்பகல் 1.30 மணிக்கு ராஜ் தொலைக்காட்சியில்.....
    #தாய்க்குஒருதாலாட்டு,
    மாலை 4 மணிக்கு ஜெ.மூவி தொலைக்காட்சியில்....#வியட்நாம்வீடு,
    இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்.........
    #நல்லதொருகுடும்பம்,
    நள்ளிரவு 11 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில்.......#என்தம்பி,
    காவியங்கள் அனைத்தும் ஏற்கனவே பார்த்தவையாக இருந்தாலும் எங்கள் தலைவனுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்போம்! என்று சொல்பவர்கள் தானே நீங்களும்...
    பாருங்கள்!ரசியுங்கள்!!போற்றுங்கள்!!!

    Thanks Sheik Ali
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #385
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம்.
    23.10.2019 இன்று NEWS 18 செய்தி தொலைக்காட்சியில்
    மக்கள் சபை என்ற நிகழ்ச்சியில். நடிகர்
    திரு.ராஜேஸ், அவர்கள் பேசியதில் சில உங்களுக்க...ு,
    சிவாஜி ஆளுமை நிறைந்தவர் ஆரம்ப காலத்தில் திமுக வளர்ச்சிக்கு பாடுபட்டவர் சிவாஜி அவர்கள் என்றும்.
    ஒரு சமயம் தான் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாட்டின் முதலமைச்சர் மான்புமிகு. காமராஜ் அவர்களை சந்தித்து உசிலம்பட்டி என்ற ஊரிலே கல்லூரி ஒன்று துவங்க வேண்டும்
    என்று மனு ஒன்றை எழுதி எடுத்து சென்றார்.
    கணேசன் தன் சாதிகாரர்கள் அதிமாக வாழும் இடத்தில் கல்லூரி வேண்டும் என்று வந்திருக்காரா என்று காமராஜ் அவர்கள் சொன்னதை கேட்டு, சிவாஜி அவர்கள்
    தன் சாதிக்காக ஒரு கல்லூரி நான் துவங்குவதா என்று சொல்லி வேதனைபட்டுக்கொண்டு அப்படி ஒரு கல்லூரி வேண்டாம் என்று மனு கொடுக்காமலே திரும்பினார்.
    அப்படி ஒரு தூய்மையானவர் சிவாஜி அவர்கள் அவர் அரசியலில் நேர்மையானவர் என்று நடிகர் ராஜேஸ் அவர்கள் பேசினார்.
    உண்மையை உரக்க சொன்ன அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
    ச.அமரன்.வேலூர்.

    Thanks Amaran Amaran
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #386
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    செவாலியே விழாவின் கூட்டத்தின் ஒரு பகுதி!

    சென்னை சேப்பாக்கம்!

    Thanks Palaniappan Subbu

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #387
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like

    Thanks Inbasekaran Natarajan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #388
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
    வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. ( குறள் 953)
    - முகமலர்ச்சி, ஈகை, இனியசொல், பிறரை இகழ்ந்து பேசாமை என்ற நான்கும் தம் குடிவழிப் பிறப்பில் இயல்பாகவே அமையப்பெற்ற எங்கள் தெய்வமகன் நடிகர்திலகத்தின் திருப்பெயரால் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் அமைப்பினர் வாரம் இருமுறையென 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரை நடத்திவரும் 108 (வாராந்திர) தொடர் அன்னதானத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சிக்கான அழைப்பு!
    #வாருங்கள்தோழர்களே!

    Thanks nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #389
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் 108 நாள் தொடர் அன்னதானத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சிக்கான அழைப்பு!
    #வாருங்கள்தோழர்களே!

    Thanks nilaa
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #390
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •