Page 178 of 210 FirstFirst ... 78128168176177178179180188 ... LastLast
Results 1,771 to 1,780 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1771
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மனிதநேயர் அரசு எம்.ஜி.ஆர் அரசு.
    ஆனால் இன்று ?
    இன்றைய நிலவரம் என்னவென்று பக்தர்கள் அறிவார்களா .மேற்கொண்டு படியுங்கள்.
    நாகை தருமன் என்று ஒரு மூத்த பத்திரிகையாளர்.தலைவர் எம்.ஜி.அரின் மனம் கவர்ந்தவர்.இவர் தலைவரின் புகழ் பாடி பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.அவற்றில் சில இத்துடன் பதிவு செய்துள்ளேன்.இவர் பொம்மை இதழில் தலைவர் புகழ்பாடி "பாரதரத்னா எம்.ஜி.ஆர் "எனும் தொடரை எழுதியவர்.புரட்சிதலைவரால் அண்ணா இதழுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்.அவர் சென்னை பீட்டர்ஸ் காலனியில் குடியிருந்துவந்தார்.ஆனால் வயது மூப்பு காரணமாக படுக்கையில் தான் வாழ்நாளை கழித்து வருகிறார்.புனரமைப்பு என்ற போர்வையில் பீட்டர்ஸ் காலனி இடிக்கப்படுகிறது.அதனால் மாற்று இடம் அளிக்காமல் நாகை தருமன் வெளியேற்றப்பட்டார்.வேறு வீடு சென்று வசிக்க அவரது வயது மூப்பு இடம் தரவில்லை.என் செய்வது.
    தலைவர் புகழ் பரப்பும் பணியில் இவரை வெல்ல முடியாது.அத்துணை பாசம் தலைவர் மீது வைத்திருந்தார்.தலைவரும் இவர் மீது பாசம் வைத்திருந்தார்.அதனால் பீட்டர்ஸ் காலனியில் இவருக்கு வீடு கொடுத்தார் தலைவர்.மனித நேயம் இந்த அரசில் கிடைக்குமா ? எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை நடத்தி இரட்டை இலை சின்னத்துடன் வலம் வரும் இந்த அரசு எம்.ஜி.அரின் கொள்கையான மனிதநேயத்தை கடைப்பிடிக்குமா ?.........vrh

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1772
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    குடியரசு’ இதழில், தந்தை பெரியார் 20.01.1935 அன்று, 'தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி தலையங்கம் எழுதினார். அதன் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அதாவது 19.10.1978 அன்று, பெரியார் நூற்றாண்டில் அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்துக்கான அரசாணையை வெளியிட்டு, நடைமுறைப்படுத்தினார். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தமானது 15 எழுத்துகளை உள்ளடக்கி இருந்தது. இத்தகைய எழுத்துச் சீர்திருத்தங்களை (அவ், அய், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ) திராவிட இயக்கம் சார்ந்த பத்திரிகைகள் 1935-லிருந்தே நடைமுறைப்படுத்தின.

    1977-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 'எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவோம்' என்று அறிவித்திருந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்பு இரண்டு (அய், அவ்) எழுத்துகளைத் தவிர்த்து மற்ற 13 எழுத்துகளின் சீர்திருத்தங்களையும் அங்கீகரித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். தமிழ் மொழியில் பெரியார் அறிமுகம் செய்து, எம்.ஜி.ஆரால் நடைமுறைப்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தம், 42 ஆண்டுகளை நிறைவு செய்து 43 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.......

  4. #1773
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாதனை!
    சரித்திரம்!!
    சகாப்தம்!!!
    என்பது இதுதானோ?
    மறைந்தும் சரித்திரம் படைக்கிறாரே
    உலக தமிழர்களின் உண்மை தலைவன்..
    இந்தியாவில் முதல் முறையாக வரும் நூறு ரூபாய் நாணயத்தில்
    மக்கள் திலகம் எம். ஜி. ஆர் சிரிக்கும் முகம்...
    தொடரட்டும் உங்களின் சாதனைகள் தலைவா........

  5. #1774
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மாலை மலர்....
    சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார். எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத்தேர்தலில், நடன நிகழ்ச்சி மூலம் கட்சிக்கு நிதி திரட்டிக் கொடுத்தார் லதா. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசின் அழைப்பின் பேரில், அப்போது அவர் தொடங்கிய "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க''வில் இணைந்தார். எம்.ஜி.ஆருடனான அரசியல் அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-
    "எம்.ஜி.ஆர். படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் அவர் என்னிடம், "லதா! உனக்கு அரசியலில் ஆர்வம் உண்டா?'' என்று கேட்டார். "ஆர்வம் இல்லை. அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்றேன். ''அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதானே தேர்தலின்போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்'' என்றார். ஆனால் காலச்சூழலில் அவரே அ.தி.மு.க.வை தொடங்க வேண்டியதாயிற்று. கட்சியில் நானும் சேர்ந்தேன். கட்சியில் சேரும்படி என்னை அவர் கேட்கவில்லை. என்றாலும், சினிமாவில் என்னை இந்த அளவுக்கு உருவாக்கியவருக்கு காட்டும் நன்றிக்கடனாக, அவர் கேட்காமலே கட்சியில் சேர்ந்து விட்டேன். எம்.ஜி.ஆர். கட்சி, முதல் பொதுத்தேர்தலை சந்தித்த நேரத்தில், "தேர்தலுக்கு நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்? என்று கேட்டேன். "உனக்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்தால்தான் சிறப்பாக வரும்'' என்றார், எம்.ஜி.ஆர். பிறகு அவரே "லதா! நீ முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள். கட்சிக்கு நிதி திரட்டிய மாதிரியும் இருக்கும்'' என்றார். உடனே தாமதமின்றி நான் உருவாக்கிய நாட்டிய நாடகம்தான் "சாகுந்தலம்.'' முப்பதுக்கும் மேற்பட்ட நடனக்குழுவினருடன் நான் கட்சிக்கூட்டம் நடக்கும் இடங்களில் இந்த நாட்டிய நாடகத்தை நடத்துவேன். மக்கள் திரண்டு வந்து, இந்த நிகழ்ச்சியை ரசித்தார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அதுவரை நடன நிகழ்ச்சிக்கு வசூலான தொகையை எம்.ஜி.ஆரிடம் அளித்தேன். இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். தேர்தலில் நேரம் காலம் பார்க்காமல் விடிய விடிய நாட்டிய நாடகம் நடத்தியதை அவர் மறக்காமல் மனதில் வைத்திருந்தார். ஒருநாள் என்னை அழைத்துப் பேசியவர், "லதா! மக்களின் அன்பு எத்தகையது என்பதை நேரில் காண, இந்த தேர்தல் உனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீ முழுநேர அரசியலுக்கு வரலாம் என்று எண்ணுகிறேன். உன் விருப்பம் என்ன?'' என்று கேட்டார். நான் அவரிடம், "அரசியலிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகவே நடன நிகழ்ச்சியையும் உற்சாகமாக செய்தேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் அளவுக்கு இன்னமும் எனக்கு பக்குவம் இல்லை'' என்று கூறினேன். எம்.ஜி.ஆர். என்னைப் புரிந்து கொண்டார். அதன்பிறகு என்னை அரசியலுக்கு அழைக்கவில்லை.'' இவ்வாறு லதா கூறினார்....... Palaniappan Subbu

  6. #1775
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் பிறந்த நாள் பதிவு

    #எம்_ஜி_ஆர்_படங்கள்!

    #கண்ணதாசன்_பாடல்கள்!

    எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.

    இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!

    எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.

    115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!

    வினாக்களுக்கான விடைகள்!

    கண்டறியப்பட வேண்டும்!

    எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?

    இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?

    கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?

    இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.

    இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.

    எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.

    இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.

    எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.

    1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?

    பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர். பந்துலு தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கும்; ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர். ராமண்ணா தயாரித்த எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கும் கண்ணதாசனே பெரும்பாலும் பாடல்களை எழுதினார்.

    இதற்கெல்லாம் காரணம், எம்.ஜி.ஆர் என்ற கலைஞானி, கண்ணதாசன் என்ற கவிஞரிடம் இருந்த கவித்துவத்தின் மீது செலுத்திய கவிப்பற்றும், கலைப்பற்றுமே எனலாம்.

    திராவிட இயக்கத்தில் இருந்தபோது கண்ணதாசன் எழுதிய

    ‘அச்சம் என்பது மடமையடா!

    அஞ்சாமை திராவிடர் உடமையடா!’

    என்ற பாடலை, தான் பயணம் செய்யும் வண்டியிலேயே எப்பொழுதும் கேட்கும் வண்ணம், கைவசம் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார் என்பதனை, அவரே சொல்லக் கேட்டிருக்கின்றோம்.

    இந்த அளவிற்குக் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மீது, தனது எண்ண அலைகளின் தாகத்தைத் தக்கவைத்துக் கொண்டவரே எம்.ஜி.ஆர். என்பதனை நாடு நன்கறியும்!

    எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக் கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரது படங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திட அனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின் மூல இரகசியமாகும்.

    நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய, செய்யவேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களையுமே தனது படங்களின் பாடல்கள், வசனங்களில் எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்தார். அவ்வாறு செய்த காரணத்தால்தான், எம்.ஜி.ஆர். என்ற மந்திர சக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.

    இனி, எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசனின் கவித்துவம் வாக்குப் பலிதமாய் வாகை சூடிய விதங்களை விபரமாய்க் காண்போம்.

    ஆரம்பகாலப் பாடல்கள்…. சில!

    ‘மர்மயோகி’ படம் வெளியான ஆண்டு 1951.

    “அழகான பெண்மானைப் பார்!

    அலைபாயும் கண்வீச்சைப் பார்!”

    என்று தொடங்கும் இப்படப் பாடலில்,

    வாடாத ரோஜா – உன்

    மடிமீதில் ராஜா!

    மனமே தடை ஏனையா! – நிதம்

    பொன்னாகும் காலம்

    வீணாக லாமோ!

    துணையோடு உலகாளவா!

    என்ற அருமைமிகு கவித்துவமே துள்ளித் ததும்புகின்றன.

    ‘உலகாளவா!’ என்ற அழைப்பு கவியரசரின் பாடலில், எம்.ஜி.ஆருக்கு எழுதும் முதல் படப்பாடலிலேயே எழுப்பும் விதம் விந்தையல்லவா!

    “கண்ணின் கருமணியே கலாவதி – இசைசேர்

    காவியம் நீயே!

    கவிஞனும் நானே!”

    என்று ஆரம்பம் ஆகும் பாடலில், அடுத்து,

    “எண்ணம் நிறை வதனா – எழில்சேர்

    ஓவியம் நீர் மதனா!”

    “அன்பு மிகுந்திடும் பேரரசே!

    ஆசை அமுதே என் மதனா!”

    என வரும் தொடர்கள் எம்.ஜி.ஆரின் எழிலார்ந்த வனப்பையும், அன்புள்ளத்தையும், பேரரசாளும் பெருமையினையும் எடுத்துரைக்கும்.

    1956 – ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற ‘மதுரைவீரன்’ படத்தில் இடம்பெற்ற,

    ‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன்

    ஆடும் விழியிலே

    ஆடும் விழியிலே! – கீதம்

    பாடும் மொழியிலே!…”

    இவ்வாறு தொடங்கும், இப்பாடலை இன்றைய இளைஞர்களும் மெய்மறந்து இன்றும் இரச்த்துக் கேட்கக் காண்கிறோம்.

    இப்பாடலில்,.

    “தேடிய இன்பம் கண்டேன்! இன்று

    கண்ணா வாழ்விலே – உங்கள்

    அன்பால் நேரிலே!…”

    “ஸ்வாமி!

    உன் அழகைப் பார்த்திருக்கும்

    எந்நாளும் திருநாளே!

    அலைபாயும் தென்றலாலே

    சிலை மேனி கொஞ்சுதே!”

    என்று, காதல் வயப்பட்டு படத்தில் பத்மினியின் எழிலார்ந்த நடிப்பிற்கு ஏற்ப ‘ஜிக்கி’ பாடும் போதும்; அதற்கேற்ப அன்றைய பேரழகுத் தோற்றத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க, அவருக்கு ஏற்பக் குரல் எடுத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடும் பாடல் காட்சியை யார்தான் இன்றும் இரசிக்காமல் இருக்க முடியும்?

    எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள்தானே!

    1957 – ஆம் ஆண்டில், கவியரசரின் கருத்தாழமிக்க திரைக்கதை வசனத்தோடு வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்திலும், கவிஞரின் பொன்னான பாடல்கள் முத்திரை பதிக்கத் தவறவில்லை.

    “கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே!

    கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!”

    “சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே

    சங்கீத வீணையும் எதுக்கம்மா!”

    இந்த இளமை, இனிமை ததும்பும் இவ்விரு பாடல்களோடு,

    மகாபாரதப் போரில் அபிமன்யூ மாள, மகன பிரிவால் தாய் சுபத்திரை துடிதுடிப்பதைப் படம்பிடித்துக் காட்டும்,

    “மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு

    வாழ்வது நமது சமுதாயம்!

    மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்

    மாறிவிடாது ஒரு நாளும்!”

    என்ற பல்லவியுடன், படத்திற்கே முத்தாய்ப்பாய் அமைந்த பாடலும்;

    “காமுகர் நெஞ்சில் நீதியில்லை – அவர்க்குத்

    தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை!”

    என்ற தத்துவ சமூகநீதிப் பாடலும்; எம்.ஜி.ஆர் படத்திற்குப் புகழ் சேர்ந்த பாடல்களே!

    இவற்றுள்,

    ‘மானம் ஒன்றே!’ என்று தொடங்கும் பாடலின் முழு விளக்கத்தையும் ‘கண்ணதாசன் கவிதைகளில் கடவுள் நெறி’ என்ற எனது முந்தைய நூலில் எழுதியுள்ளேன்.

    காலத்தை வென்ற பாடல்கள்!

    ‘அச்சம் என்பது மடமையடா!’

    1960 – ஆம் ஆண்டு கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களோடு வெளிவந்து, உன்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படமாய்த் திகழ்வதே நடேஷ் ஆர்ட் பிக்சர்சாரின் ‘மன்னாதி மன்னன்!’

    இப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞரின் அனைத்துப் பாடல்களும் கருத்துச்சுவை நிரம்பிய பாடல்களே. இருப்பினும் தமிழக வரலாற்றிலேயே, எத்தனையோ சோடனைகளுக்கு நடுவிலும், தொடர்ந்து மூன்றுமுறை வீரத்திற்கும், புகழுக்கும் கட்டியங்கூறும் பாடலாக அமைந்த,

    “அச்சம் என்பது மடமையடா!

    அஞ்சாமை திராவிடர் உடமையடா!

    ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!

    தாயகம் காப்பது கடமையடா!”

    என்று ஆரம்பமாகி, அனைவரது நாடி நரம்புகளிலும் வீரத்தையும், நெஞ்சங்களில் விவேகத்தையும் உண்டாக்கும் பாடலே உயர்ந்த இடத்தைப் பற்றிக் கொள்ளும் பாடலாகும்!

    உண்மைதானே!

    அச்சம் என்பது மூடர்களின் மூலதனமல்லவா! ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களே ஒன்றுகூடி 1972 – ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றியபோது, தனது இரசிகப் பெரும் பட்டாளத்தோடும், தாய்க்குலத்தின் தனிப்பெரும் ஆதரவோடும், துணிவையே துணையாகக் கொண்டு, தன்னைக் கட்சியில் இருந்து வெளியெற்றியவர்களையே ஆட்சியில் இருந்து அகற்றிய அஞ்சாத, அச்சமில்லாத சிங்கமல்லவா எம்.ஜி.ஆர்.

    அவர்தானே,

    ‘அஞ்சாமை திராவிடர் உடமையடா!’ என்று கூறத்தகுந்தவர்.

    நோயைக் கண்டு எம்.ஜி.ஆர். என்றேனும் அஞ்சினாரா? 1959 – ஆம் ஆண்டு சீர்காழியில் நடைபெற்ற நாடகத்தின்போது கால் எலும்பு முறிந்து! இனி அவ்வளவுதான்! எம்.ஜி.ஆரால் நடக்க முடியாது! நடிக்க முடியாது என்றார்கள். தனது மன உறுதியால், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, ‘திருடாதே’ திரைப்படத்தில் நடித்துப் படவுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

    (திருடாதே’ எம்.ஜி.ஆர். சரோஜாதேவியோடு இணைந்து நடித்த சமூகப்படம். ஏ.எல். சீனிவாசன் தயாரித்த இப்படத்தின் வசனத்தை கண்ணதாசன் எழுத, ப. நீலகண்டன் இயக்கினார். ராஜாராணி கதைகளிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு இப்படத்தின் வெற்றி பெரும் திருப்புமுனையாகவே அமைந்தது எனலாம்)

    1967 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் அவர் இருந்தபோதும், உறுதிகொண்ட உள்ளத்துணிவோடு போராடி மறுபிறவி பெற்றார்.

    (அவரது மருத்துவமனை நாடிக்கட்டு புகைப்படந்தான் தமிழ்நாடெங்கிலும் காங்கிரசு பேரியக்கத்தை, சரிவுக்குத் தள்ளி, தி.மு.கழகத்தை அதிசயமாய் விரைவில் ஆட்சிபீடத்தில் ஏற்றிவைத்தது எனில் மிகையாகா).

    மறுபிறவி பெற்ற எம்.ஜி.ஆரால், இனி பேச முடியாது. திரைப்பட வசனங்களைப் பேசமுடியாது என்று, எதிர்முகாமினர் எக்காளமிட்டனர். இவற்றையெல்லாம் மீறி, நோயில் இருந்து மீண்டு, மக்கள் மகிளும் வண்ணம் வெற்றிப்படங்களைத் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்; சாவில் இருந்து மீண்டு, தனது தளராத பயிற்சியால் பேசத்தொடங்கி, ‘காவல்காரன்’, ‘ரகசிய போலீஸ் 115′, குடியிருந்த கோயில்’, ‘ஒளிவிளக்கு’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்து எதிரிகளின் வாய்ச் சவடால் வாயிலை அடைத்தார்.

    1983 – ஆம் ஆண்டு இறுதியில், சாதாரண நோய்க்காக சென்னை அப்போலோ மருந்துவமனைக்குச் சென்ற புரட்சித் தலைவர், கடுமையான நோய்க்கு உள்ளாகி, அமெரிக்காவில் உள்ள புருக்ளீன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

    எம்.ஜி.ஆர். உடல்நிலை பற்றிக் கொடூரமான வதந்திகள் பரப்பப்பட்டன. ‘அவர் திரும்பி வந்தால் அவரிடமே ஆட்சியை ஒப்படைக்கிறோம்! எனவே எங்களுக்கு வாங்களியுங்கள்!’ என்று எதிர்முகாமினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். மக்களின் ஏகோபித்த வழிபாடுகளால் அமெரிக்காவில் இருந்து, எம்.ஜி.ஆர். திரும்பி வருவதற்கு முன்பே 1984 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அவரது இயக்கம் 136 இடங்களைப் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியது. எம்.ஜி.ஆரும் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தவாறே ஆண்டிப்பட்டித் தொகுதியில் முப்பத்திரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.

    “ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!

    தாயகம் காப்பது கடமையடா!”

    என்று கூறத்தகுந்த காலனை வென்ற, காலத்தை வென்று நிற்கும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். தானே!

    தொடரும் பாடலில், வளரும் செய்திகளைப் பார்ப்போமா?

    “கனக விஜயரின் முடித்தலை நெறித்து

    கல்லனை வைத்தான் சேரமகன்!

    இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி,

    இசைபட வாழ்ந்தான் பாண்டியனே!”

    தொடர்ந்த இப்பாடல் வரிகளில், தமிழ்ப்புவியை ஆண்ட பண்டைய மன்னர்களின் வீரம் பறைசாற்றப்பட்டது.

    அடுத்து……!

    “கருவினில் வளரும் மழலையின் உடலில்

    தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை!

    களங்கம் பிறந்தால் பெற்றவள மானம்

    காத்திட எழுவான் அவள் பிள்ளை!

    வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி!

    மக்களின் மனதில் நிற்பவர் யார்?

    மாபெரும் வீரர், மானம் காப்போர்,

    சரித்திரம் தனிலே நிற்கின்றார்!”

    கவியரசர் தீட்டிய இந்த வைர வரிகள், புவியரசர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில், வரலாறாய் நடந்து வந்த வரிகள் அல்லவா?

    சத்தியா எனும் தாய், கருவினிலே வளர்ந்தபோதே தனது அன்பு மழலையாம், எம்.ஜி.ஆர். என்ற மகனுக்குத் தைரியத்தை ஊட்டி வளர்த்த தாயல்லவா!

    பெற்ற தாயின்மீது பெறுதற்கரிய பாசத்தைச் செலுத்தியதோடு, நாட்டிலுள்ள தாய்மார்களின் மீதெல்லாம் அளவிடற்கரிய பாசத்தைச் செலுத்தி, அவர்களது மானம் காக்க, களங்கத்தைப் போக்கக் காலமெல்லாம் துணையாய் நின்ற காவல் தெய்வமல்லவா எம்.ஜி.ஆர்! அதனாலன்றோ இன்றும் தாய்க்குலத்தின் தணியாத செல்வாக்கோடு, மறைந்தும் இம்மண்ணில் மங்காத புகழோடு எம்.ஜி.ஆர் வாழ்கின்றார்.

    கோடி மக்கள் இம்மண்ணில் வாழ்ந்ததுண்டு. வாழ்ந்த சுவடுகள் தெரியாமல் மறைந்ததும் உண்டு. ஆனால் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்பவர் யாவர்?

    மாபெரும் வீரர்! மானத்தைக் காப்போர்!

    இவர்கள் மக்கள் மனங்களில் மட்டும் அல்ல…. வருங்காலச் சரித்திரத்திலும் சாய்ந்துவிடாது நிலைத்து நிற்பர்.

    உண்மைதானா? உண்மையே! உதாரணம்…. எம்.ஜி.ஆரே!..........nsm...

  7. #1776
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்களின் #மனக்கண்ணாடி

    பலர் என்னை ‘புக்’ செய்து பல படங்களுக்கு எழுதவைத்தார்கள்.
    அதிலிருந்து தொடர்ச்சியாக எனக்கு அவரோடுநெருங்கிப் பழக நிறைய வாய்ப்புக் கிடைத்தது.

    அவரிடம் உள்ள ஒரு விசேஷம் என்னவென்றால்,கதையம்சம் என்பது மற்ற நடிகர்களுக்குதெரியாதஅளவிற்கு அதிகமாக அவருக்குத்தெரியும்.
    டைரக்ஷனில் அவரைவிட நல்ல ஒரு டெக்னீஷியனே கிடையாது.

    வசனத்தைப் படித்துப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு,எந்த சீன் தாங்கும் என்று அவர் அழகாகப் புரிந்துகொள்ளுவார்.

    மக்கள் எப்படி இருக்கிறார்கள்; அவர்கள் மனோபாவம் என்ன என்பதை நன்றாக, தெளிவாகத் தெரிந்துவைத்திருப்பார்.

    இந்த மாதிரியன நேரத்தில் இந்த மாதிரி் கதை தான் எடுபடும் என்பது அவருக்குத் தெரியும்.

    இந்த மாதிரிப் பாத்திரங்களைஏற்றுக் கொண்டால்தான், மக்களிடையே மரியாதைஇருக்கும் என்பதையும் அவர் அறிவார்.

    கதையிலே வருகின்ற சினிமா பாத்திரத்திற்கும்,சாதாரண வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய ஒரே நடிகர் அவராவார்!

    அதனாலேயே சினிமாவில் நடிப்பதும், வாழ்க்கையில் வாழ்வதும் ஒரே மாதிரி அமைந்தால் ஜனங்களிடையே மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நம்பினார்.

    இந்த நம்பிக்கைக்கு ஏற்பதான் காட்சிகளையும் அவரஅமைப்பார்; அமைக்கும்படி என்னிடமும் சொல்லுவார்.

    இவைகளெல்லாம் என் மனதில் பசுமையாகப்பதிந்திருந்த காரணத்தால், பின்னாலே நானும் நிறைய எழுத முடிந்தது.

    அவருடைய சந்திப்பும், அவரோடு எனக்கு ஏற்பட்டபழக்கமும், நாங்கள் இருவரும் சேர்ந்துஒரு படத்தை எடுக்கும் நிலைக்கு உருவாக்கின.

    நாங்கள் இருவரும் ஒரு படத்தை எடுக்கவும்ஆரம்பித்தோம்.

    ‘பவானி’ என்ற படம், பாதியிலே நின்று போனாலும்,எனக்கு அவர் நல்ல உதவிகள் செய்தார். அதிலேஅவருக்குத்தான் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டது.ஆனாலும்கூட தொடர்ந்து எங்களுடைய உறவு நீடித்தது.

    அவருடைய உயர்ந்த குணங்களையும், பெருந்தன்மையையும், பல நேரங்களிலே கண்டு நான் மெய்சிலிர்ந்திருக்கிறேன்.

    என் வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நேரத்தில், அவர்கை கொடுத்ததை என்னுடைய வரலாற்றில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

    மற்றவர்கள் செய்யாத, செய்யமுடியாத உதவிகளையெல்லாம் அவர் செய்துள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு என்றும் நீடித்துநிலைத்து நிற்கவேண்டு மென்று நான் விரும்புகிறேன்.”

    மக்கள் மனங்களைத் துல்லியமாக எடைபோடும்ஆற்றல் பெற்ற காரணத்தால்தான், மக்கள் திலகம்,தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, 1958 –ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘நாடோடு மன்னன்’ 1969 –ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘அடிமைப்பெண்’ 1973 – ஆம்ஆண்டில் வெளியிட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகியமூன்று படங்களும், தமிழ்த்திரையுலக வரலாற்றில்சரித்திர சாதனைகள் படைக்க முடிந்தன.

    காலமாற்றம், அரசியல் மாற்றம், அறிவியல் மாற்றம் ஆகிய அனைத்து மாற்றங்களுக்கு இடையிலும்மக்களின் மனமாற்றங்களை அறிந்து #வெள்ளித்திரையில் #வெற்றியை #எப்போதும் #காணமுடிந்த #நம்பிக்கை #நட்சத்திரமாய்த் #திகழ்ந்தவர்

    #மக்கள்திலகம்
    #ஒருவரே

    #மக்கள்திலகம் பற்றி #கண்ணதாசன்..........bsm.........

  8. #1777
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கோப்புகளை கிடப்பில் போடாத எம்.ஜி.ஆர்., ஆட்சி
    பதிவு செய்த நாள்: ஜன 16,2021 05:40

    ''சினிமாவில் மட்டுமின்றி, பொதுவாழ்விலும், மக்களுக்காகவே வாழ்ந்து காட்டியவர், 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர்.,'' எனக் கூறி, தன் பழைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார், 'குழந்தை இலக்கிய செல்வர்' பி.வெங்கட்ராமன்.

    வெங்கட்ராமன் மேலும் கூறியதாவது:இதழியல், இலக்கியம், மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில், 70 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன்.தற்போது, எனக்கு வயது, 86. என் அனுபவத்தில், சினிமா மற்றும் பொதுவாழ்வு ஆகிய இரண்டிலும், மக்களின் அபிமானத்தை பெற்ற தன்னிகரற்ற தலைவர் எம்.ஜி.ஆர்., தான்.

    அவர் சினிமாக்களில், மக்கள் துயர் துடைக்கும் நாயகனாக நடித்தார். தன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தாற் போல், பொதுவாழ்வில் அதே போன்ற நற்காரியங்களை செய்து காட்டினார்.அவரது ஆட்சியில் 'கோப்புகள் தேக்கம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது' என, அப்போது அரசுப் பணியில் இருந்து என் நண்பர்கள் பலரும் சொல்வர். அவர்களின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை, நானே நேரில் கண்டபோது, எனக்கு வார்த்தை வரவில்லை.

    தமிழக முதல்வராக, எம்.ஜி.ஆர்., சுற்றிச் சுழன்று பணியாற்றிய காலம் அது.நான், டி.வி.எஸ்., நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பணியாற்றி வந்தேன். அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, எர்ணாகுளம் வந்த, எம்.ஜி.ஆரை, எர்ணாகுளம் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போதைய அரசு செயலர் பரமசிவம், வலம்புரி ஜான் உள்ளிட்டோர் என் உடன் இருந்தனர்.

    நிகழ்ச்சியின் முடிவில், 'கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில், ஏராளமான தமிழர்கள் பணியாற்றுகின்றனர். சென்னையிலிருந்து இங்குள்ள முக்கிய நகரங்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லாதது மிகவும் சிரமமாக உள்ளது' என, எம்.ஜி.ஆரிடம் முறையிட்டேன்.'ஆகட்டும் பார்க்கலாம்' என புன்முறுவல் பூத்து எங்களிடம் இருந்து விடைபெற்றார். அடுத்த ஒரே வாரத்தில், எர்ணாகுளம் உட்பட, கேரளாவின் முக்கிய பல நகரங்களுக்கு, சென்னையிலிருந்து நேரடி விரைவுப் பேருந்துகளை, எம்.ஜி.ஆர்., தலைமையிலான அரசு அறிவித்தது.

    தமிழர்களுக்கு ஓர் பிரச்னை என்றால், சற்றும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுப்பவர், எம்.ஜி.ஆர்., என்பதற்கு இந்த சம்பவம் ஓர் சான்று. மவுனப்பட காலம் தொட்டே, சினிமா துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட, புதுக்கோட்டையை சேர்ந்த, ராஜா சாண்டோ பெயரில் திரைத்துறையினருக்கு விருதுகளை வழங்கினார். கத்திச் சண்டை, மல்யுத்தம் போன்ற கலைகளில் எம்.ஜி.ஆருக்கு ஆர்வம் ஏற்பட முன்னோடியாக திகழ்ந்தவர், பி.யு.சின்னப்பா.

    சின்னப்பா, இறந்தபோது, அவரின் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு நேரில் சென்று, சின்னப்பாவின் குடும்பத்தாரிடம், எம்.ஜி.ஆர்., துக்கம் விசாரித்தார். மொத்தத்தில், கலைஞர்களை மதிப்பதிலும், மக்கள் குறை தீர்ப்பதிலும், எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்., மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக அரசுக்கு கோரிக்கை

    தமிழக அரசுக்கு பி.வெங்கட்ராமன் விடுக்கும் கோரிக்கைகள்:குழந்தை இலக்கியத்தில் பலருக்கும் முன்னோடியான, அழ.வள்ளியப்பாவை கவுரவிக்கும் வகையில், சென்னையில் அவர் வாழ்ந்த தெருவுக்கு, வள்ளியப்பா தெரு என பெயர் சூட்ட வேண்டும். அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், குழந்தைகள் பிரிவிற்கு, வள்ளியப்பா பெயர் சூட்ட வேண்டும். குழந்தை இலக்கிய படைப்பாளிகளுக்கு, வள்ளியப்பா பெயரில் விருது வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பன்முகத்தன்மை!

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பி.வெங்கட்ராமன், 15வது வயதில் இருந்தே சிறார் இலக்கியம் குறித்து எழுத ஆரம்பித்தார். 'டிங் டாங்' என்ற பெயரில், குழந்தை இலக்கிய இதழ் ஆரம்பித்து, அதன் ஆசிரியராகவும் விளங்கினார். சாலை விழிப்புணர்வு குறித்து, இவர் எழுதிய குழந்தைப் பாடல் மிகப் பிரபலம். ஆல் இந்தியா ரேடியோவில், மாவட்ட நிருபர், முத்தமிழ் மலர் ஆசிரியர், குழந்தை கவிஞர் பேரவை தலைவர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். 2018ம் ஆண்டு, பாரதி நெல்லையப்பர் மன்றத்தின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜனிடம் இருந்து, விருது பெற்றவர்........Venky

  9. #1778
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர் பதிவு உ....த்தமன் 14
    ----------------------------------------------
    "உ....த்தமனு"க்கு தொடர் HF போட வேண்டும் என்ற எண்ணம் அய்யனின் கைஸ்களுக்கு வர முன்னோடியாக இருந்த படம் ஜோஸப்பில் 1970 பொங்கலுக்கு வெளியான "மாட்டுக்கார வேலனே".
    1970 ஜன 14 புதன்கிழமை வெளியான "மாட்டுக்கார வேலன்" புதன் வியாழன் 5 காட்சிகளும் வெள்ளி சனி ஞாயிறு 4 காட்சிகளும் தினசரி 3 சனிஞாயிறு 4 காட்சிகள் எனவும் தெளிவாக பல வண்ணங்களில் போஸ்டருக்கு மேலே ஸ்லிப்பை ஒட்டியிருந்தார்கள்.

    ஏதோ காட்சி நேரத்தை பார்த்து ரசிகர்கள் வருவார்கள் என்று நினைத்து ஒட்டினார்களோ என்னவோ?. ரசிகர்கள் வீட்டுக்கு சென்றால்தானே திரும்பிவர!. இரவுக்காட்சி டிக்கெட் விற்பனை முடியும்வரை தியேட்டரே பழியாக கிடந்தனர். திங்கள் வரை நடந்த அத்தனை காட்சிகளும் HF.
    ஒவ்வொரு காட்சி முடிந்ததும் தட்டி போர்டை கழற்றி HF எண்ணிக்கையை ஒட்டி திரும்ப மாட்டுவார்கள். நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மு.பாலகிருஷ்ணனும் அடிக்கடி வந்து ரசிகர்களுக்கு உற்சாகமூட்டி விட்டு செல்வார்.

    இதற்கப்புறம் வந்த படங்களுக்கு தொடர் HF ஒட்டுவதில்லை.அந்தந்த காட்சிகள் HF ஆனால் போர்டு வைப்பார்கள், அவ்வளவுதான். "மாட்டுக்கார வேலன்" தொடர்ந்து 25 காட்சிகள் வரை HF
    ஆகி தூத்துக்குடியில் ஒரு புதிய சாதனையை உருவாக்கியது. 26 வது காட்சியாக செவ்வாய் கிழமை மாட்னி ஷோ வாக இருந்ததால் பொங்கல் லீவு முடிந்து அனைவரும் வேலைக்கு சென்றபடியால் மாட்னி ஷோவுக்கான ஷோபா டிக்கெட்களில் ஒரு 6 டிக்கெட்கள் மாட்டிக்கொண்டன.

    அந்த டிக்கெட்டை கூட கிழிக்க முடியாமல் எம்ஜிஆர் ரசிகர்கள் பரிதாபத்திற்குரியவர்களாக இருந்தார்கள். அய்யன் படமாக இருந்திருந்தால் தொடர்ந்து100 HF. ஆக்கி ரிகார்டு கிரியேட் பண்ணியிருப்பார்கள். ஆனால் ஏழை எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அந்த எண்ணமும் கையில் காசும் கிடையாது. இதையெல்லாம் கண்ட அய்யன் ரசிகர்களின் தீராத வேட்கைக்கு தீனியாக கிடைத்த "உ...த்தமனை" விடுவார்களா?

    அய்யனின் கைத்தடிகள். "உ..த்தமனு"க்கும் அதுபோல் தொடர்ந்து HF போட்டார்கள். 25 காட்சிகளை தாண்டி HF தொடர்ந்தது.
    எத்தனை காட்சிகள் அரங்கை நிறைத்தார்களோ என் ஞாபகத்தில் இல்லை. அந்த சமயம் நான் மேற் படிப்புக்காக பாளையங்கோட்டை St. சேவியர் ஹாஸ்டலில் தங்கி படித்ததால் எனக்கு நடந்ததை நேரடியாக பார்க்க முடியவில்லை. சனி,ஞாயிறு நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதோடு சரி.

    ஆனால் அதன்பிறகு ஸ்டெச்சர் பயன்படுத்தியும் பிணத்தின் வெயிட் தாங்காமல் கைபிள்ளைகள் திணற ஆரம்பித்தனர். கடப்புரத்தை ஒட்டிய பகுதியில் திரையரங்கம் அமைந்திருந்ததால் வடக்கயிறையும் பயன்படுத்தி இழுக்க முயற்சி செய்தனர். பெரிய பெரிய பணக்கார கைஸ்கள் முயற்சி செய்தும் நினைத்ததை முடிக்க முடிந்ததா?

    அடுத்த பதிவில் நிறைவு பெறும்......KSR...

  10. #1779
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இன்றைய #தேவை

    எம்ஜிஆர் போன்ற மனித நேயமிக்க தலைவர்களே! நாட்டிற்கு இப்போதைய தேவை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனது ‘டுவிட்டர்’ பகுதியில் வெளியிட்ட கருத்து வருமாறு:-

    எம்.ஜி.ஆர். மிகப் பெரிய தலைவர் மட்டுமல்ல, மனிதநேயத்திலும் மிகச் சிறந்தவர். 1980-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது நான் மத்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக (பொறுப்பு) இருந்தேன். தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவர் திட்டம் வைத்திருந்தார்.

    இந்தத் திட்டத்தின் நிதி தொடர்பாக திட்டக் குழு கூட்டம் நடப்பதற்கு முன்பு என்னை எம்.ஜி.ஆர். சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தனது பின்னணி பற்றி விவரித்தார். சிறு வயதில் குடும்பம் வறுமையால் வாடியதாகவும், பள்ளிக்குச் செல்லும்போது வயிறு நிறைய உண்ணாமல், அரைகுறை உணவுடன் சென்றதாகவும் கூறினார்.

    மேலும், கடுமையான பசியுடன் இருப்பதால் வகுப்பில் ஆசிரியர் கற்றுத் தருவதை கூர்ந்து கவனிக்க முடியாது என்று வேதனையுடன் எம்.ஜி.ஆர். கூறினார். எனவே தனது தலைமையில் நடக்கும் ஆட்சியில் எந்த மாணவ, மாணவியும் பசியுடன் வகுப்பில் உட்கார்ந்திருக்கக் கூடாது என்பதற்காக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.

    #ஏழைகளைப்பற்றிய #அவரது #இந்த #கரிசனம் #என்னை #வெகுவாய் #அசைத்தது. கல்வி கற்கும் தளத்தில் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப அவர் எடுத்த முயற்சி இது.

    அப்படியொரு மரபை நமக்கு கற்றுக்கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். சென்றிருக்கிறார். அவரைப் போன்ற தலைவர்களே தற்போதைய நமது தேவையாக உள்ளது...!.........bsm...

  11. #1780
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சோவியத் ரஷ்யா கண்கொத்தி பாம்பாக உலகையே உற்று நோக்கி கொண்டிருந்த காலம் அது.

    1977-ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்றார்.

    உடனடியாக ரஷ்யா எம்.ஜி.ஆரை பற்றிய தகவல்களை திரட்டியது.

    சினனஞ்சிறு வயதில் தந்தையை இழந்து வறுமையான சூழ்நிலையில் தாயால் வளர்க்கப் பட்ட ஒரு மனிதன் உன்னத கலைஞானகவும் ஒப்பற்ற மக்கள் தலைவனாகவும் உருப்பெற்றதை பார்த்து வியப்படைந்தது சோவியத் ரஷ்யா.

    உடனடியாக தனது இந்திய தூதரகம் மூலம் தங்களது நாட்டிற்க்கு சிறப்பு விருந்தினராக வருமாறு எம்.ஜி.ஆரை அழைத்தது.

    எம்.ஜி.ஆரும் அழைப்பினை ஏற்று ரஷ்யா சென்றிருந்தார்.

    சுற்றுப் பயண முடிவில் ரஷ்ய அதிபர் எம்.ஜி.ஆரிடம் " உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறோம் " என்றார்.

    " எனக்கு எதுவும் வேண்டாம்., தமிழ்நாட்டில் நிறைய குடிசை வீடுகள் கூரைகளாக உள்ளதால் தீப்பிடித்து எரிந்து விடுகிறது .ஓரளவுக்கு மேல் அரசாங்கத்தால் உதவி செய்ய முடியவில்லை.
    முடிந்தால் அந்த கூரை வீடுகளை ஓட்டு வீடாக மாற்ற உதவி செய்யுங்கள்"...என்றார் எம்.ஜி.ஆர்.

    ரஷ்ய அரசு உடனடியாக இந்திய அரசின் ஒப்புதலை பெற்று தமிழகத்திற்க்கு நிதி வழங்கியது.

    சுவர்கள் உள்ள கூரை வீடுகளுக்கு ஓடுகள் மாட்ட மூவாயிரம் ஒதுக்கப்பட்டு கூரை வீடுகள் ஓட்டு வீடுகளாக மாறின.

    பிற்பாடு கருணாநிதி ..இந்திரா..ராஜீவ் பெயரிலும் இப்போது உள்ள பசுமை வீடடுகள் திட்டத்திற்க்கெல்லாம் முன்னோடியாக இருந்ததவர் எம்.ஜி.ஆர்.......mj

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •