Page 153 of 210 FirstFirst ... 53103143151152153154155163203 ... LastLast
Results 1,521 to 1,530 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1521
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நித்தம் வணங்கும் புரட்சி தலைவரின் மாறுபட்ட கதையும் தலைவரின் அழகை மேலும் மேலும் ரசிக்க வைக்கும் அமைப்பு கொண்ட வெற்றி திரைப்படம் அன்பேவா தமிழகமெங்கும் தரமற்ற டிஜிட்டலில் வெளியிட்டு தலைவரின் திரைபுகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இருந்தது.இதை கண்டித்து நேற்று 20.12.2020 ஆல்பர்ட் தியேட்டர் ஞாயிறு மாலை காட்சியில் கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக கண்டண முழக்க தர்னா போராட்டமும் தமிழகமெங்கும் உள்ள பக்தர்கள் கண்டனகுரல் எழுப்பிய பலனாக அன்பே வா திரைப்பட தமிழக வினியோகஸ்தர் திரு.முருகன் அவர்கள் டிஜிட்டல் தொழில் புரிந்த திரு.மகேந்திரன் என்பவரிடம் படத்தை மறுபடியும் நல்ல தரத்தில் செய்து தரும்படி கூறியிருக்கும் அதேவேளையில் வட ஆற்காடு முழுவதும் வெளியிட்ட தியேட்டரில் இருந்து எடுக்க சொல்லிவிட்டு மற்ற மாவட்டங்களில் 3 காட்சிகளை ஒரு காட்சியாகவும் அதுவும் சிறிய தியேட்டரில் மாற்றும் படி கூறி தலைவரின் புகழுக்கு மாற்று ரசிகர்களின் களங்கம் ஏற்படாவண்ணம் தமிழகமெங்கும் உள்ள பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிபளித்தமைக்கு அன்பே வா உரிமையாளர் திரு.முருகன் அவர்களுக்கு கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..........vss...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1522
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர் பதிவு உ....த்தமன். 4
    ----------------------------------------------
    ஜோஸப் தியேட்டரை பற்றி தெளிவாக பார்த்து விட்டோம். இனி மீண்டும் காரனேஷன் தியேட்டருக்கு வருவோம். ஒரு காலத்தில் சிறப்பாக ஓடிய தியேட்டர் அந்திமக் காலத்தில் 2 வாரம் 3 வார திரைப்படங்களை திரையிடுவதிலே ஆர்வம் காட்டினார்கள். சில சமயங்களில் அவர்களையும் அறியாமல் ஒரு சில படங்கள் ஹிட் அடித்து 50 நாட்கள் ஓடியதுமுண்டு.

    அப்படி ஓடிய படம்தான் "நான்". 1967 தீபாவளிக்கு வெளியான படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுதான். 53 நாட்கள் ஓடியது. அடுத்து "ஊட்டி வரை உறவு" 52 நாட்கள் பாலகிருஷ்ணாவிலும், "விவசாயி" சார்லஸில் 30 நாட்களும் "இரு மலர்கள்" ஜோஸப்பில் 21 நாட்களும் ஓடியது. வசூலை பொறுத்தவரை விவசாயி முதன்மையாக விளங்கியது.

    காரனேஷன் தியேட்டரிலேயே அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் எதுவென்றால் ஜெமினியின் "வாழ்க்கைப் படகு"தான். 63 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. காட்சி துவங்கும் நேரத்தில் ராட்சத பலூனை பறக்க விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்."காதலிக்க நேரமில்லை" முதல் வெளியீட்டில் 28 நாட்கள்தான் ஓடியது. மூன்று மாத இடைவெளியில் வெளியாகி இரண்டாவது வெளியீட்டில் சுமார் 35 நாட்கள் ஓடியது.
    மற்றபடி அந்த தியேட்டரில் பொதுவாக ஜெய்சங்கர்,
    ரவிச்சந்திரன் படங்கள் தான் அதிகம் திரையிடுவார்கள்.13 நாட்கள்
    இல்லையென்றால் 17 நாட்கள் தான் அதிக பட்சமாக ஓடும்.

    அநேக அய்யனின் படங்களும் அங்கேதான் திரைக்கு வந்தன. தலைவருக்கு 1968 ல் வெளியான 8 படங்களில் 2 படங்கள் காரனேஷனில்தான் வெளிவந்தது.
    "புதியபூமி" 1968 ஜீன் 27 லும் "கணவன்" ஆக 15 லும் வெளியாகி வசூலில் அய்யனின் 50 நாட்கள் ஓட்டிய படங்களை காட்டிலும் அதிகம் வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டு படங்களுமே ரூ30000 வசூலை எளிதில் கடந்தது.

    இந்த மூவரின் படங்களோடு மக்கள் திலகத்தின் பழைய படங்களும் மாறி மாறி வருவது வழக்கம். உதாரணமாக சொல்லப்போனால் "பணக்கார பிள்ளை" "மாடிவீட்டு மாப்பிள்ளை" "அன்று கண்ட முகம்" "அவசர கல்யாணம்" "மனிதனும் தெய்வமாகலாம்" "குரு தட்சணை" இது போன்ற படங்கள்தான் திரையிடப்படும். அவர்களுக்குள்ளே போட்டி அருமையாக இருக்கும்.

    சில சமயங்களில் ரவியும் ஜெய்யும் அய்யனை தண்ணி காட்டுவதை ரசிக்கலாம். திடீரென்று தலைவரின் பழைய படமான "அலிபாபா" போன்ற படங்கள் திரையிட்டதும் தியேட்டர் திருவிழா கோலம்தான். எந்த புது படத்தையும் தலைவரின் பழைய படத்தின் முதல் மூன்று நாள் வசூல் தூக்கி வீசி விடும். டிக்கெட் எடுக்க பிரத்யேக பயிற்சி எடுத்தவர்களால்தான் முடியும். அந்த கூட்டத்தை வேடிக்கை பார்க்க திரளான பேர்கள் கூடுவார்கள்.

    அந்த திரையரங்கில் கடைசியாக 50 நாட்கள் ஓடியது "நினைத்ததை முடிப்பவன்" தான். ஆனால் கடைசியாக 50 நாட்கள் ஓட்டப்பட்ட படம்தான் அய்யனின் "உ...த்தமன்". படத்தின் பெயர்தான் "உ...த்தமன்". ஆனால் ஒரிஜினல் அயோக்கியன். அனைத்து அயோக்கியத்தனம் செய்துதான் படத்தை 50 நாட்கள் ஓட்டினார்கள். தலைவரின் கடைசி படமான "மதுரயை மீட்ட சுந்தர பாண்டியன்" வெளியானதும் இதே காரனேஷனில்தான். விசிஅய்யனின் இழுவை படத்தை தலைவர் படங்களுடன் ஒப்பிடும் கைஸ்களுக்கு ஒரு விண்ணப்பம். ஒரு நல்ல குடும்ப பெண்ணுடன் ஒரு பரத்தையை ஒப்பிடுவது போல அருவருப்பாக இருக்கிறது.

    தயவுசெய்து ஒப்பிடுவதை கைவிட்டு விடுங்கள். "உ..த்தமன்" படத்தில் அய்யனின் ஸ்கேட்டிங் நடனம்தான்
    ஹை லைட். ஒரிஜினல் ஸ்கேட்டிங் ஆடுபவர்களெல்லாம் அய்யனின் படகு ஆட்டத்துக்கு முன்னால் என்ன ஆவார்களோ தெரியவில்லை.
    அருமையான இந்திப்படத்தை தனது மிகை நடிப்பின் மூலம் அய்யன் அலங்கோலமாக்கி சின்னா பின்னமாக்கி விட்டார்..

    மீண்டும் அடுத்த பதிவில்............ksr.........

  4. #1523
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் கலை வேந்தன்*எம்.ஜி.ஆர் திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான*விவரம் (10/12/20 முதல் 20/12/20* வரை )
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    10/12/20 -முரசு -மதியம் 12 மணி /இரவு 7மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * * * புது யுகம் -- இரவு 7 மணி - காதல் வாகனம்*

    * * * * * * * * * பாலிமர் டிவி- இரவு 11 மணி - புதிய பூமி*

    11/12/20 -சன் லைஃப் - மாலை 4 மணி - புதிய பூமி*

    12/12/20-சன்* லைஃப் - மாலை 4 மணி - மன்னாதி மன்னன்*

    * * * * * * * புதுயுகம் டிவி- இரவு 7 மணி - முகராசி*

    13/12/20 -தமிழ் மீடியா - காலை 10 மணி - மகாதேவி*

    14/12/20-மெகா டிவி -அதிகாலை 1 மணி - குடியிருந்த கோயில்*

    * * * * * * * சன் லைஃப்- காலை 11 மணி - எங்க வீட்டு பிள்ளை*

    * * * * * * * முரசு* - மதியம் 12 மணி /இரவு 7 மணி --நீதிக்கு பின் பாசம்*

    15/12/20-சன் லைஃப் - மாலை 4 மணி - கண்ணன் என் காதலன்*

    16/12/20- சன் லைஃப் - காலை 11 மணி - எங்கள் தங்கம்*

    * * * * * * * *வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி - நல்ல நேரம்*

    * * * * * * * * புது யுகம் டிவி - இரவு 7 மணி - குடும்ப தலைவன்*

    * * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி- நீதிக்கு பின் பாசம்*

    17/12/20- சன் லைஃப் - காலை 11 மணி - நினைத்ததை முடிப்பவன்*

    * * * * * * * சன் லைஃப் -மாலை 4 மணி - நீரும் நெருப்பும்*

    * * * * * * *புதுயுகம்* - இரவு 7 மணி - சங்கே முழங்கு*

    18/12/20-சன் லைஃப் - காலை 11 மணி - நாளை நமதே*

    * * * * * * * * *வேந்தர் டிவி -பிற்பகல் .30 மணி - அவசர போலீஸ் 100

    * * * * * * *பாலிமர் டிவி- இரவு 11 மணி* ராமன் தேடிய சீதை*

    19/12/20- சன் லைஃப்- காலை 11 மணி - தெய்வத்தாய்*

    * * * * * * * * *விஷ்ணு டிவி -மதியம் 12 மணி - மாட்டுக்கார வேலன்*

    * * * * * * * *தமிழ் மீடியா* - பிற்பகல் 1 மணி - எங்க வீட்டு பிள்ளை*

    20/12/20-சன் லைஃப் - காலை* 11 மணி - விவசாயி*

    * * * * * * * *மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - நல்ல நேரம்*

    * * * * * * * *முரசு - மதியம் 12 மணி /இரவு 7மணி -நீதிக்கு தலை வணங்கு*

    * * * * * * * * * * * * * * **

  5. Thanks orodizli thanked for this post
  6. #1524
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நேற்று 20.12.2020 அன்று மாலை காட்சியில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் புரட்சித்தலைவர் நடித்த அன்பே வா திரைப்படத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தோம்.

    புரட்சித் தலைவரின் அனைத்து படங்களுமே எத்தனை முறை பார்த்தாலும் ஆசை அடங்காமல் பார்க்க தூண்டிக்கொண்டே இருக்கும்.

    புரட்சித் தலைவரை நேசிக்கின்ற மிகத்தீவிரமான நமக்கு நம் வாழ்விலே எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்தாலும் புரட்சித்தலைவரின் திரைப்படத்தை கண்டு ரசிக்கின்ற மகிழ்ச்சிக்கு இவ்வுலகில் ஈடு இணை எதுவுமே இல்லை.

    புரட்சித்தலைவரின் திரைப்படங்கள் வெறும் சினிமா படங்கள் அல்ல பாடங்கள் என்று எங்கள் பெற்றோர்களும் புரட்சித் தலைவரின் மூத்த பக்தர்களும் எங்களைப் போன்ற இளம் புரட்சித்தலைவரின் ரசிகர்களுக்கு சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் சொன்னது ஆயிரம் மடங்கு உண்மை ... திரையில் மட்டும் கதாநாயகனாக இருந்துவிடவில்லை நம் புரட்சித்தலைவர். நிஜ வாழ்விலும் சரித்திரம் போற்றுகின்ற கதாநாயகர் ... அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் புரட்சித்தலைவரின் புகழ் உச்சியை எவராலும் நெருங்க கூட முடியாது ..

    கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க. Ssn...

  7. #1525
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் 360 #டிகிரி

    மக்கள்திலகம் எம்ஜிஆரை விட , காதல்மன்னன் ஜெமினி, சிவாஜி ஆகியோர் காதல் காட்சிகளில் நடித்து பெரியளவில் ரசிகர்களையும், பெண்ரசிகைகளையும் பெற்றிருந்தனர்...

    ஆனால்,

    எம்ஜிஆரை பெண்கள் ரசித்தத்தற்கும் மதித்ததற்கும் #அடிப்படை #காரணம் அவர் ஒரு சிறந்த மனிதனுக்கு உரிய அனைத்து பண்புகளையும் பெற்றிருந்தார் என்பதை தீர்மானமாக நம்பியிருந்தது தான்...

    ஒரு சிறு உதாரணத்திற்கு...

    நடிகை பத்மினியுடன் எம்ஜிஆர், #ராணி #சம்யுக்தாவில் நடித்தபோது பத்மினியை குதிரையில் வைத்து கடத்திச் செல்லவேண்டும். அப்போது பத்மினி நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தார். அவரை முதலில் குதிரையில் அமர்த்தினார்கள். அப்போது எம்ஜிஆர் பார்த்துப்பா பத்திரமாக செய்யுங்க என்று கூடவேயிருந்து எச்சரித்துக்கொண்டேயிருந்தார். இதை ஒரு பேட்டியில் பத்மனி அவர்களே... "#எம்ஜிஆர் #மிகச்சிறந்த #மனிதர்" என்று கூறியிருக்கிறார்.

    மற்ற நடிகர்களுக்கு தாங்கள் நடிக்கும் காட்சி சிறப்பாக அமையவேண்டும் என்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கும்...அதை 90 டிகிரி என வைத்துக்கொள்ளலாம். அதாவது லகான் போட்ட குதிரை போல ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே. அந்த சுயநலத்தில் தவறில்லை.

    ஏனெனில்... "நடிப்பு அவர்களுக்கு ஒரு தொழில்" அவ்வளவே...

    ஆனால் #வாத்தியார் 360 #டிகிரி...
    அவரின் கவனமும் அக்கறையும் படப்பிடிப்பிலுள்ள அடிமட்டத்தொழிலாளலரிடமிருந்து அனைவரிடமும் இருக்கும்...

    வாத்தியாரைப் பொறுத்தவரையில் சினிமாத் துறையை வெறும் தொழிலாக மட்டும் நினைக்கவில்லை. அப்படி ஒரு காலத்தில் தொழிலாக இருந்த சினிமாத் துறையை அன்பு, பண்பு, கலாச்சாரம், நற்பண்புகள், சகோதரத்துவம், விதைக்கும் இடமாக மாற்றிய பெருமை வாத்தியாரை மட்டுமே சேரும்.

    தன் அன்பாலும் கருணையாலும் எம்ஜிஆர் பெண்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்ததால் அவரைத் தம் மகனாகப் பலரும் கருதினர்.

    எனவேதான், இதயதெய்வம் விண்ணுலகை அடைந்த நேரத்தில் "நீயும் மொட்டை அடிச்சுடுப்பா" என்று தன் மகனிடம் கூறியபோது அந்த மகன்கள் தாயின் சொல்லை தட்டாமல் எம்ஜிஆருக்காக மொட்டையடித்து திதி செய்தனர்.

    ஆனால், எம்ஜிஆரின் தாயன்புக்கும், எம்ஜிஆரின் மீதான தாய்க்குலத்தின் ஒட்டுமொத்தமான பேரன்பிற்கும் இதைவிட ஒரு சான்று என்னவாக இருக்கமுடியும்...???.........bsm.........

  8. #1526
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Breaking News
    Tamil News online
    Home / tami nadu / அன்று என்னதான் செய்தார் எம்.ஜி.ஆர்..? – இன்று கட்சிகள் 'பங்கு' போட துடிப்பதன் பின்புலம்!


    அன்று என்னதான் செய்தார் எம்.ஜி.ஆர்..? – இன்று கட்சிகள் 'பங்கு' போட துடிப்பதன் பின்புலம்!
    TAMI NADU December 16, 2020, 88


    ‘மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியை கொண்டு வருவோம்’ – தமிழகத்தில் யார் புதிதாக அரசியலுக்கு வந்தாலும் முதலில் அவர்கள் எடுக்கும் தாரக மந்திரம் இதுவாகவே சமீப காலமாக இருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல் தற்போது கட்சி ஆரம்பிக்க உள்ள ரஜினிகாந்த் வரையில் எம்.ஜி.ஆரை மையப்படுத்தியே அரசியலை நகர்த்துகின்றனர். இதில், அதிகம் மைய்யப்படுத்துவது கமல்.

    எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம், ஆண்டுகள் கடந்தாலும் அரசியலில் அனைவரையும் பேச வைத்துள்ளது. சின்னம் என்றால் இரட்டை இலை; தலைவன் என்றால் எம்ஜிஆர் என கடைகோடி கிராமத்து மக்களையும் தனது செயல்பாட்டால் ஈர்த்தவர்தான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1977 – 1987 வரை தமிழகத்தை தன்னுள் வைத்து ஆட்டிபடைத்த அந்த மூன்று எழுத்துதான் ‘எம்.ஜி.ஆர்’.

    image

    இவர்தான் எம்.ஜி.ஆர்:

    தன்னுடைய உதவும் குணத்தாலும் நலத்திட்ட உதவிகளாலும் மக்களை திணற வைத்த எம்.ஜி.ஆர், ‘புரட்சித்தலைவர்’, ‘மக்கள் திலகம்’, ‘பொன்மனச் செம்மல்’ என மக்கள் கொடுத்த பல்வேறு பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆவார். சினிமாவில் தொடங்கி அரசியல் வரை அனைத்து காலகட்டங்களும் மக்களுக்கு நல்லதை சொல்வதும் செய்வதுமாகவே திகழ்ந்து வந்தார் என்றால் அது மிகையல்ல. ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து கோலோச்ச முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் எம்ஜிஆர். திரைப்படங்கள் மூலம் பெரியார் அண்ணாவின் சமூக கருத்துகளை மக்களிடம் விதைத்து, அதை கடைசி வரை கடைப்பிடித்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் எம்ஜிஆர்.

    image

    விதவை, ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, தாலிக்கு தங்கம் வழங்குதல், மகளிருக்கு சேவை நிலையங்கள், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள், தாய் சேய் நல இல்லங்கள், குழந்தைகளுக்கு இலவச சீருடை, இலவச காலணி, இலவச பாடநூல் வழங்குதல், ஊனமுற்றோர்களுக்கு உதவி, முதியவர்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை, மதிய சத்துணவு, ஆண்டுக்கு இருமுறை சீருடை வழங்குதல், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தனது ஆட்சியில் நிகழ்த்தி காட்டினார் எம்.ஜி.ஆர்.

    image

    ஆரம்ப காலகட்டத்தில் காங்கிரஸ் கொள்கையால் அரசியலில் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர் பிற்காலத்தில் அண்ணாவை தலைராகவும் காமராஜரை வழிகாட்டியாகவும் ஏற்றார். இதை திமுகவில் இருந்துகொண்டே எம்.ஜி.ஆர் வெளிப்படையாக கூறியுள்ளார். அத்தோடு தான் ஆட்சியில் இருந்தபோது காமராசரின் மதிய உணவு திட்டத்தினை திறம்பட சத்துணவு திட்டமாக செயல்படுத்தினார்.

    image

    தி.மு.க.வின் தலைவரான அண்ணா, எம்.ஜி.ஆரை மிகவும் நேசித்தார். தேர்தல் பிரசாரத்தில் அதிக பங்கு வகித்தமையால் அண்ணா எம்.ஜி.ஆருக்கு இதயக்கனி எனும் பட்டம் கொடுத்தார்.

    திமுகவில் என்னதான் பிரச்னை… அதிமுக உதயமானது எப்படி?

    அண்ணா மறைவையடுத்து தன்னை முதல்வர் அரியணையில் அமர வைக்க பாடுபட்ட எம்.ஜி.ஆரையே ‘அண்ணா கொடுத்துவிட்டு சென்ற கனியில் வண்டு துளைத்துவிட்டது. கனியை தூக்கி எறிய வெண்டியதாயிற்று’ ஓரங்கட்டினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்கு காரணம் திமுகவிலேயே பொருளாளராக இருந்துகொண்டு “அந்த கட்சியினர் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும். தங்கள் கை சுத்தமானது என்பதை நிரூபிக்க வேண்டும்” என்று பொதுக்கூட்டங்களில் பேசினார் எம்.ஜி.ஆர்.

    image

    திமுகவில் இருந்து தூக்கியெறியப்பட்ட எம்.ஜி.ஆர் 1972-ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார். அந்தப் பெயரே அண்ணாவை எத்தனை தூரம் எம்.ஜி.ஆர் நேசித்தார் என்று காட்டியது. 1977, 1980, 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று தமிழக முதல் அமைச்சர் பதவியில் இருந்தார்.

    image

    ஏழைப் பங்காளன் எம்.ஜி.ஆர்:

    எம்.ஜி.ஆர் உயிரிழந்துவிட்டார் என்று சொன்னால் கூட அதை நம்பாத வெறித்தனமான பக்தர்கள் அவருக்கு இருந்தனர். அதற்கு காரணம் முதல்வராக இருந்துகொண்டு ஒரு சாமானியனின் தோல்மீது கைப்போட்டு பேசுவார் எம்.ஜி.ஆர். காரில் செல்லும்போது விவசாயிகளை கண்டால் கீழே இறங்கி பணத்தை கொடுத்துவிட்டு நலம் விசாரித்துவிட்டு செல்வார். ஏழைகளோடு தரையில் அமர்ந்து உணவு சாப்பிடுவார். வயதானவரகளை கட்டியணைத்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வார்.

    image

    இவையனைத்தும் எம்.ஜி.ஆரின் முகங்களே. இதனால்தான் தமிழக அரசியலில் இருந்து எம்.ஜி.ஆரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் புறந்தள்ளிவிட முடியவில்லை என்று நினைவுகூரும் மூத்த அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள், ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து ஆட்சியமைத்து கோலோச்ச முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அழுத்தமாகக் கூறுவர்.

    image

    தன்னுடைய ஆட்சி காலத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசி காலகட்டம் வரை எம்.ஜி.ஆரை முன்வைத்தே தனது அரசியலை நகர்த்தி சென்றார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் உதிர்த்த அதிகபட்சமான வார்த்தை ‘எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க’ என்பதாகவே இருந்தது. இது ஒருபுறமிருக்க தமிழக அரசியல் மேடைகளில் அதிமுக அல்லாத கட்சிகளும் எம்ஜிஆரை முன்வைத்தும், அவரது ஆட்சியையும் பாராட்டியும் பேசி வருகின்றன.

    image

    தமிழக அரசியலில் புதிதாக கால் ஊன்றும் எந்த கட்சி மற்றும் தலைவராக இருந்தாலும், எம்ஜிஆரை தவிர்த்து, அரசியல் இல்லை என்பதை தான் சமீபத்திய பல கட்சிகளின் தலைவர்களது கருத்துகள் நமக்கு உணர்த்தியுள்ளது.

    ‘கருப்பு எம்.ஜி.ஆர்’ – விஜயகாந்த்

    தமிழகத்தின் இரண்டு ஆளுமைகளாக இருந்த மறைந்த கருணாநிதி, ஜெயலலிதா இருவரையும் எதிர்த்து அரசியலில் களம் கண்ட விஜயகாந்த், ‘மக்கள் இன்னொரு எம்.ஜி.ஆரை எதிர்பார்க்கிறார்கள். எனவேதான் என்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்கிறார்கள்’ என கர்ஜித்தார். மேலும், அவரைப்போல நம்பகமான தலைவனாக வருவேன் எனவும் தெரிவித்தார்.

    image

    ‘எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவேன்’ – ரஜினி

    இதையடுத்து பல யோசனைகளுக்கு பிறகு இறுதியாக கடந்த 2018 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி என சூளுரைத்த ரஜினிகாந்தும் எம்.ஜி.ஆர் என்ற மந்திரத்தையே பயன்படுத்தினார். “அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்.ஜி.ஆராக முடியாது. அவர் ஒரு தெய்வ பிறவி. அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை தன்னால் கொடுக்க முடியும்” என்றார்.

    image

    ‘எம்.ஜி.ஆர் போல் மோடி – பாஜக’

    இதுபோதாது என்று எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்து மந்திரம் பாஜகவையும் விட்டுவைக்கவில்லை. கடந்த மாதம் பாஜக நடத்திய வேல்யாத்திரையின் போது வெளியிட்ட வீடியோவில், எம்ஜிஆர் ஆட்சியை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும் என பிரசாரம் செய்தது. மேலும், தமிழகத்தில் முதல்வராக எம்ஜிஆர் இருந்த போது நலத்திட்டங்களை செயல்படுத்தியது போல பிரதமர் மோடியும் செயல்படுகிறார் என பாஜகவினர் பெருமிதம் பேசி வருகின்றனர்.

    ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ – கமல்

    அந்த வழியில் தற்போது மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசனும் இணைந்துள்ளார். ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ என தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார் கமல். பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசன், எம்.ஜி.ஆர் எங்கள் சொத்து என குறிப்பிட்டார். அதிமுக இன்றும் ஆட்சியில் உள்ள நிலையில், அதிமுக நிறுவனர் எம்ஜிஆரை, ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாஜகவினர் சொந்தம் கொண்டாடுவதற்கு அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    image

    இதற்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன் “அதிமுகவுக்கு நீட்சி என்று நான் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு நீட்சி என்றுதான் கூறினேன். எம்.ஜி.ஆருக்கு நீட்சியாக எந்த நடிகரும் இருக்கலாம். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்தபோது அவரை திமுகவின் திலகம் என்று கூறவில்லை. அதிமுகவை தொடங்கிய போதும் அவரை அதிமுகவின் திலகம் என்று கூறவில்லை. அவர் எப்போது மக்கள் திலகமாகவே இருந்தார். அதன்படி நான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இன்று இருக்கும் அமைச்சர்கள் எம்.ஜி.ஆரின் மதிமுகத்தைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நான் அவர் மடியில் அமர்ந்திருக்கிறேன். நான் சின்ன வெற்றி பெற்றால் கூட என் நெற்றிப்பொட்டில் முத்தமிட்டு பாராட்டுவார் எம்.ஜி.ஆர்.” என்றார்.

    image

    இந்நிலையில், மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சி தமிழகத்தில் வருமா? அல்லது எம்.ஜி.ஆரின் வாக்குகளை சேகரிப்பதற்கான திட்டமா? அடுத்தடுத்து எம்.ஜி.ஆரை முன்னிறுத்தி எடுக்கும் அரசியல் நிலைப்பாடு தமிழகத்தில் எடுபடுமா என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

    திமுக எதிர்ப்பே எம்.ஜி.ஆர் அரசியல்:

    இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர்கள் மாலன் கூறுகையில், “எம்.ஜி.ஆரை இரண்டாக பிரித்து பார்க்க வேண்டும். ஒன்று அவரது கட்சி. மற்றொன்று அவரது ஆட்சி. அடித்தளமக்கள் பயன்படக்கூடியதாக அவருடைய ஆட்சி இருந்தது. எம்.ஜி.ஆர் இடத்தை யாரும் பிடிக்க முடியாது. கட்சியை பொருத்தவரை திமுகதான் எதிரி என தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால் தற்போது வருபவர்கள் கருத்தியல் ரீதியாக முன்வைத்து பேசுகிறார்கள். நேர்மை, ஊழல் என்று பேசுகிறார்கள். அது மக்களுக்கு புரியாது. அதை உருவகப்படுத்த வேண்டும். இல்லையென்றால் யாரும் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துவது வீண்.” என்றார்.

    image

    எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்துவதில் தவறில்லை:

    இதுகுறித்து பத்திரிகையாளர் கணபதி கூறுகையில் “எம்.ஜி.ஆர் மிகப்பெரிய தலைவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த பெயரை உபயோகப்படுத்துவது தவறு இல்லை. ஆனால் எந்த இடத்தில் உபயோகப்படுத்தக்கூடாது என்பதில் தான் பிரச்னை. ஜெயலலிதா இருந்தபோது கூட எம்.ஜி.ஆர் பெயரில் மற்றவர்கள் கட்சி ஆரம்பிப்பதாலேயோ, பெயரை உபயோகப்படுத்துவதனாலேயோ கோபப்படவில்லை. ஆனால் எம்.ஜி.ஆரை பற்றி தவறாக சித்தரிக்கும்போது ஜெயலலிதா கோபப்பட்டார்.

    image

    இப்போது ஏன் எம்.ஜி.ஆர் பெயரை உபயோகப்படுத்துகிறார்கள் என்றால், எம்.ஜிஆரின் விசுவாசிகள் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது. திமுகவுக்கு பலம் உள்ளது. ஆனால் அதிமுகவில் பலம் குன்றியுள்ளது. அந்த வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என முனைப்பு காட்டுகின்றனர். அதிமுகவில் இருப்பவர்கள் வெளியே வருவார்கள் என்ற நம்பிக்கை புதிதாக வருபவர்களுக்கு உண்டு. அதனால்தான் அமைச்சர்கள் பயப்படுகிறார்கள்” என்றார்.

    Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM...

  9. #1527
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவிற் கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று கட்சி தொண்டர்கள் நன்கொடை வசூல் செய்ய வேண்டும் என்றார் கள். தா. பாண்டியன் தலைமையில் நன்கொடை வசூல் செய்ய கிளம்பினார்கள்.
    முதலில் எம் ஜி ஆரை பார்க்கலாம் என்று எம் ஜி ஆரை பார்த்தார்கள்.
    எம் ஜி ஆர். ஜீவா மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தார். தா. பாண்டியன் இப்போது தான் எம் ஜி ஆரை நேரில் பார்க்கிறார். எம். ஜி ஆர் சிலை வைக்க நான் முழு பணத்தையும் கொடுக்கிறேன் என்று சொல்லிரூபாய். 50000.ஐ உடனே கொடுத்தார்.. அவர் நடிக்கும் பாத்திரத்தின் பெயரையும் ஜீவா என்று பறக்கும் பாவை.
    அடிமை பெண்ணில் ஜெயலலிதா வின் பெயரும் ஜீவா தான்... Chellam ithu.........

  10. #1528
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தனக்குத்தானே பாதுகாப்பு கொடுக்க தெரிந்த தலைவர் !

    22.10.1979 இல் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடிகர் குண்டு கருப்பையாவின் மகள் ஜெயபாரதி - சோலைமணி திருமணம் நடைபெற்றது.

    முதல்வர் எம்ஜிஆர் தலைமை தாங்கி நடத்தி வைத்த இந்த நிகழ்வுக்கு ஒரு போலீஸ் கூட பாதுகாப்பு இல்லை. எம்ஜிஆருடன் எப்போதும் துணைக்கு வரும் ஸ்டண்ட் திரைப்பட குழுவினர்தான் அப்போது பாதுகாப்பிற்கு இருந்தனர். என்ன காரணம்?

    அப்போது எம்ஜிஆர் ஆட்சிக்கு எதிராக பல போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்த கருணாநிதி, என்.ஜி.ஓ. சங்கத் தலைவர்
    சிவ. இளங்கோ மூலம், காவல்துறையினரை தூண்டிவிட்டு போலீஸ் சங்கம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் எங்கும் போலீசார் வேலை நிறுத்தம் செய்தனர்.

    தமிழக வரலாற்றில் அதற்கு முன்னும் பின்னும் இல்லாத, நடந்திராத விஷயம் அது. கருணாநிதியின் எத்தனையோ அட்டூழியங்களில் இதுவும் ஒன்று.

    மதுரையில் திருமணத்தை நடத்தி முடித்து விட்டு சென்னை திரும்பிய முதல்வர் எம்ஜிஆர், காவல்துறையினரின் கோரிக்கைகள் நியாயமானதை ஏற்றுக் கொண்டு ‘போலீஸ் சங்கம்’ அமைப்பதை நிராகரித்தார்.

    பின்னர் சிவ. இளங்கோவை நேரில் வரவழைத்து அவர் மீதான புகார் பட்டியல் ஒன்றை எம்ஜிஆர் ஒவ்வொன்றாக வாசிக்க தொடங்கினார். எம்ஜிஆர் முழுவதும் படித்து முடிக்கக் கூட இல்லை. நடுநடுங்கி போன இளங்கோ "வேண்டாம் நிறுத்தி விடுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன்" என்றார்.

    "கேட்டுத்தான் ஆக வேண்டும். நீங்கள் எந்தெந்த விஷயங்களில் எல்லாம் முறைகேடாக நடந்து கொண்டீர்கள். யாரிடம் எல்லாம் பணம் வாங்கினீர்கள் என்பதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது. அதனால் இனியாவது ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்"" என்று எச்சரித்து அனுப்பினார்.

    கருணாநிதி செய்த இன்னும் ஒரு நம்பிக்கை துரோகம் இருக்கிறது. சிறுசேமிப்பு துணைத் தலைவராக இருந்த எம்ஜிஆருக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டு இருந்தது.
    அந்த போலீசார் எம்.ஜி.ஆரின் நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதிக்கு உளவு சொல்லும் வேலை செய்து கொண்டிருந்தனர். அதை அறிந்ததும் எம்ஜிஆர் அந்தப் பாதுகாப்பை வேண்டாம் என்று விலக்கிக் கொண்டார்.

    அதிமுக தொடங்கிய பின்பு எம்ஜிஆருக்கு, அவர் கூட்டங்களில், ஊர்வலங்களில் பங்கேற்கும் போது சரியான போலீஸ் பாதுகாப்பு தரப்படவில்லை. கட்சித் தொண்டர்களை கொண்டே எல்லாவற்றையும் சமாளித்தார். அவர் தனக்குத்தானே பாதுகாப்பு கொடுத்துக் கொண்ட தலைவர்.

    ('இதயக்கனி' டிசம்பர் 2020 இதழில்
    நான் எழுதி இடம்பெற்றது).

    இதில் எதுவும் திருத்தம் செய்யாமல்
    பகிரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இதயக்கனி எஸ். விஜயன்.........

  11. #1529
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் இதயதெய்வம் அவர்களின் நெருங்கி வரும் அந்த கருப்பு நாள் நினைவு பதிவின் தொடர்ச்சி....

    அமரர் அண்ணா அவர்களை தலைவர் நேசித்த விதம் இந்த உலகம் அறியும்.

    இந்த உலகத்திலே தான் நேசித்த ஒரு தலைவர் பெயரில் அவர் உருவம் பதித்து மரியாதை செய்து அந்த இயக்கத்தை வெற்றி நடை போட செய்த உண்மை உலகநாயகன் நம் தலைவர் மட்டுமே.

    அமரர் அண்ணா அவர்கள் மறைவுக்கு பிறகும் அவர் குடும்பம் வறுமையில் வாடியது.
    அண்ணா அவர்களின் துணைவியார் ராணி அம்மா அவர்களுடன் அடிக்கடி பேசி நேரில் சென்று நலம் விசாரித்து அவர்கள் தேவையை நிறைவு செய்தவர் நம் தலைவர்.

    அண்ணா அவர்களின் வளர்ப்பு மகன்கள் கௌதமன் பரிமளம் ஆகியோர் தலைவரை மட்டுமே வந்து அடிக்கடி சந்திப்பார்கள்.

    தலைவர் முதல்வர் ஆனவுடன் தன்னால் அமரர் அண்ணா அவர்களின் குடும்பத்தை சரிவர பராமரிக்க முடியாமல் போய் விடுமோ என்ற கவலையில் அதிக பணிச்சுமை காரணம் ஆக இருந்து விட கூடாது என்று..

    சத்தியா ஸ்டுடியோ அரங்கில் வேலை பார்த்து கொண்டு இருந்த மறைந்த செந்தமிழ் சேகர் என்பவரை அண்ணா அவர்களின் வீட்டிலே தங்க வைத்து அவர்களுக்கு என்ன தேவை என்பதை தனக்கு தெரிவிக்க அப்படி ஒரு ஏற்பாடு செய்தார்.

    அண்ணா திமுக என்ற இயக்கத்தை ஆரம்பித்த உடன் அமரர் அண்ணா அவர்களின் துணைவியார் அவர்களை தனது இல்லத்துக்கு வரவழைத்து கொடி கட்சி பெயர் காட்டி அவர்களிடம் ஆசி பெற்றார்....

    தன்னிலை மறந்து தங்களை ஆளாக்கி அழகு பார்க்க காரணம் ஆன தலைவரை மறந்து போன தலைவர்கள் மத்தியில் எந்நிலை வந்தாலும் மாறாத குணம் கொண்ட பொன்மன செம்மல் புகழ் காப்போம்...

    உங்களில் ஒருவன் ஆக
    நன்றி...தொடரும்..

    பதிவில் படத்தில் செய்தி 2..

    இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு நடிகரை மையம் ஆக கொண்டு குழந்தைகள் அன்று விரும்பி படிக்கும் முத்து காமிக்ஸ்...

    எந்திரகை மாயாவி. போன்று வந்த புத்தகங்களில் காமிக்ஸ் வடிவில் வந்த தலைவரின் புகழைஅறிய அரிய படங்கள் உங்கள் பார்வைக்கு..

    வாழ்க தலைவர் புகழ் நன்றி....நன்றி...

  12. #1530
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் தனக்களிக்கப்பட்ட சிசிக்சைக்கான செலவினை தனது இயக்கம், கட்சிக்காரர்கள் மற்றும் அன்புள்ளம் கொண்ட பொதுமக்களிடம் இருந்து பெற்று தமிழக அரசிடம், அரசு செலவு செய்த தொகையான ரூ.96 இலட்சத்து 90 ஆயிரத்து 376ஐ 30-06-1985 ஆம் தேதியன்று அரசுக்கு திருப்பிச் செலுத்தினார்.
    _____________________________

    #13.03.1985ஆம் தேதி எம்ஜிஆர் கீழ்கண்டவாறு அறிவிப்பினைச் செய்து தன்னுடைய சிசிக்சைக்கான தொகையை திரட்டினார்.

    #எனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை ஒட்டி சென்னையிலும், அமெரிக்காவிலும் செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கும், மருத்துவர்கள், உதவியாளர்கள் ஆகியோரின் பயணங்களுக்கும், பிற வகைகளுக்கும் ஆன செலவுகளை அரசே ஏற்று செய்துள்ளது.

    #முதலமைச்சருக்குரிய செலவுகளை அரசே ஏற்பது முறையானதுதான் என்றாலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தமக்களிக்கப்பட்ட சிசிக்சைக்கான செலவுகளை, மக்களிடம் இருந்து பெற்று, கழகத்தின் வாயிலாக அரசுக்குச் செலுத்துமாறு ஏற்பாடு செய்தார்கள்.

    #பேரறிஞர் அண்ணா அவர்களின் அந்த சீரிய முன்னுதாரணத்தைப் பின்பற்றும் வகையிலும், எனக்கு மருத்துவ சிசிக்சை மற்றும் அதன் தொடர்பாக ஏற்பட்ட செலவுகளை அரசின் மீது சுமத்த நான் விரும்பாத காரணத்தாலும், இவ்வகையில் ஏற்பட்ட செலவுகளைக் கணக்கிட்டு அத்தொகையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செலுத்திவிட வேண்டும் என நான் முடிவு செய்துள்ளேன்.

    #மக்கள் என் மீது கொண்டுள்ள அன்பு, செயல் வடிவத்தில் நிரூபிக்கப்படவும் இது ஒரு வாய்ப்பு என்கிற வகையில், எனக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவை ஈடுகட்ட மக்களை அணுகுவது என்கிற தலைமைக் கழகத்தின் முயற்சிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பும் தருமாறு தமிழக மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அன்பன்.
    எம்.ஜி.ஆர்,
    சென்னை,
    நாள்: 13.03.1985.......rjr...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •