Page 172 of 210 FirstFirst ... 72122162170171172173174182 ... LastLast
Results 1,711 to 1,720 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1711
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1967-ம் ஆண்டுக்கு முன் வந்த படங் களில் எம்.ஜி.ஆரின் குரல் கணீ ரென வெண்கல மணி போல ஒலிக் கும். துப்பாக்கிச் சூடு சம்பவத் துக்கு பின் தொண்டையில் குண்டு பாய்ந்ததால் அவரது குரல்வளம் பாதிக்கப்பட்டது. படங்களில் வேறு யாரையா வது ‘டப்பிங்’ கொடுக்கச் செய்யலாம் என்ற யோசனை களை எம்.ஜி.ஆர். நிராகரித்து விட்டார். சொந்தக் குரலில் பேசி நடிக்கவே அவர் விரும்பினார். அவர் குரல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர்.

    ‘காவல்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் இரண்டு, மூன்று முறை ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஒரு காட்சி முடிந்ததும் அதற்கான வசனங் களை எம்.ஜி.ஆர். மீண்டும் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களை எடிட்டிங்கின்போது காட்சிகளோடு ஒருங்கிணைப்பது மிகவும் கடினம். எம்.ஜி.ஆர். தனக்கே உரிய தொழில் நுட்ப சாதுர்யத்தோடு பலமுறை பதிவு செய்யப்பட்ட வசனங்களில் எந் தெந்த வார்த்தைகள் சரியாக ஒலிக் கிறதோ அவற்றை அங்கிருந்து ஒரு வார்த்தை, இங்கிருந்து ஒரு வார்த்தை என்று எடுத்து ஒன்று சேர்த்து காட்சிகளோடு ஒருங் கிணைத்து தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமாக எடிட் செய்தார்.

    பாதிக்கப்பட்ட பேச்சு திறனை மீண்டும் பெற எம்.ஜி.ஆர். விடாமுயற்சியுடன் செயல்பட்டார். ‘ஸ்பீச் தெரபிஸ்ட்’ எனப்படும் பேச்சு பயிற்சி அளிக்கும் நிபுணர்களை வரவழைத்து பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோரின் ஆலோசனையின்படி, நள் ளிரவில் உதவியாளர்களுடன் கடற்கரை சென்று தண்ணீர் படும்படி அமர்ந்து உரக்கப் பேசி பயிற்சி மேற்கொண்டார்.

    ‘‘நானும் சாமி என்பவரும் எம்.ஜி.ஆரு டன் நள்ளிரவில் கடற்கரைக்குச் செல் வோம். அலை வந்து மோதும் இடத்தில் அவர் அமர்ந்துகொள்ள நாங்கள் அவரை பிடித்துக் கொள்வோம். அவர் உரக்க பேசி பயிற்சி மேற்கொள்வார்’’ என்று நெகிழ்கிறார் எம்.ஜி.ஆரின் மெய்க்காவலர் கே.பி.ராமகிருஷ்ணன். மாதக்கணக்கில் எடுத்துக் கொண்ட பயிற்சி களால் பெரும் அளவில் பேச்சுத் திறனை எம்.ஜி.ஆர். மீண்டும் பெற்றார். தொண்டையில் குண்டு பாய்ந்ததால் பழைய குரலில் பேச முடியாமல் கட்டைத் தொண்டையில் ஒலித்த எம்.ஜி.ஆரின் குரலும் கம்பீரமாகவே இருந்தது.

    #அண்ணாவின் இதயக்கனிக்கு
    பிறந்தநாள் ஜனவரி 17 . .........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1712
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திமுகவில் இருந்த போது தெரிவித்த பொங்கல் வாழ்த்து.
    __________________

    14-1-62
    செழுமை மிகு நாட்டினில் செந்நெல் குவித்து, எழுந்து வரும் உதய சூரியனை இன்முகத்தோடு வரவேற்று,
    இல்லந்தோறும் இன்ப கீதம் எழுப்பிடும் இன்னாளில்,
    இன்பத் திருவிடத்து அன்பர் அனைவருக்கும் என் உளம் நிறைந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும் உரித்தாகுக.

    உலகுக்கே உணவளிக்கும் உழவர் தம் திருநாளில்,
    உழைப்பும் உண்மையும் ஒரு சேர வெற்றி முரசு கொட்டிடும் நன்னாளில்,
    இன்பம் தழைத்திட,
    இனம் செழித்திட,
    நீதி நிலைத்திட
    இன்னாள் இன்பத் திராவிடத்திற்கோர் நல்ல சகாப்தத்தின் முன்னோடியாயத் திகழட்டுமென விழைகிறேன்.

    வாழ்க திராவிடம்!
    வெல்க உதய சூரியன்!

    அன்பன்
    எம்.ஜி.ராமச்சந்திரன்..........vrh...

  4. #1713
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "தனிப்பிறவி" தங்கத் தலைவர் தேவருடன் இணைந்த 11 வது திரைப்படம்.1966 செப் 18 ல் வெளியாகி குறுகிய காலத்தில் மிகப்பெரிய வசூலை குவித்த படம். பாடல்கள் அத்தனையும் நவீன இசையமைப்பில் கவர்ச்சியான மெட்டுக்களில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த படம். தேவரின் குறுகிய கால தயாரிப்பில் வெளியான படம்.

    தலைவரின் மறுபிறவிக்கு முன் வெளியான வெற்றிப்படம்தான் தனிப்பிறவி. அடுத்தடுத்து வெளியான தலைவரின் வெற்றிப்படங்களான "பறக்கும் பாவை" "பெற்றால் தான் பிள்ளையா" இரண்டு வெற்றிப் படங்களையும் தாண்டி முக்கிய நகரங்களில் 75 நாட்கள் வரை ஓடி வெற்றிக்கொடியை பறக்க விட்ட படம். உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த தலைவர் ரசிகர்கள் விரும்பி பார்த்த படம்.

    பாமர மக்களிடையே 'கன்னத்தில் என்னடி காயம்?' பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. "தனிப்பிறவி" படத்தின் பெயரில் விற்ற புடவை, வளையல் அந்தக்காலத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றது. சென்னையில் "பறக்கும் பாவை" வெளியாகும் வரை (அதாவது தீபாவளி வரை) 54 நாட்கள் ஓடியது. திருநெல்வேலி பார்வதியில் வெளியாகி 50 நாட்களை தாண்டி மாட்னி காட்சியுடன் ஓடி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

    மாற்று நடிகரின் வெற்றிப்படம் என்று சொல்லும் "கலாட்டா கல்யாணம்" இங்கு ஓடியது வெறும் 13 நாட்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அது தெரிந்தால்தான் "தனிப்பிறவி"யின் வெற்றி தன்னிகரற்றது என்பது புரியும். நெல்லையில் அய்யனின் அநேக படங்கள் 4 வாரத்தை தாண்டியதில்லை. "தனிப்பிறவி" 50 நாட்கள் தாண்டியதை முன்னிட்டு ரசிகர்கள் நோட்டீஸ் அடித்து மகிழ்ந்தார்கள்.

    தீபாவளி குறுக்கீட்டால் படம் 54 நாட்களில் எடுக்கப்பட்டது. தூத்துக்குடியில் செப் 18 ல் வெளியாகவில்லை. அக் 9 ல் வெளியாகி 33 நாட்கள் தீபாவளி வரை ஓடி தொடர்ந்து "பறக்கும்பாவை" வெளியாகி 28 நாட்கள் நடைபெற்றது. அதை தொடர்ந்து "பெற்றால் தான் பிள்ளையா" வெளியாகி 36 நாட்கள் பொங்கல் வரை தொடர்ந்தது. 1966 ல் தூத்துக்குடி பாலகிருஷ்ணாவில் தலைவர் படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு மகசூலை பெருக்கினார்கள் என்றே சொல்ல வேண்டும்..........ksr...

  5. #1714
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1964 ம் வருசம் பொங்கலுக்கு வெளியாகி பிரம்மாண்ட வண்ணப் படங்களை வசூல் வேட்டை ஆடினவர். மெட்ராஸ் மாநகராட்சி தேர்தலில் அண்ணா, கருணாநிதி பிரச்சாரத்தை பத்திகூட காமராஜ் சொல்லவில்லை. சினிமா பாக்காத காமராஜையே வேட்டக்காரன் வருவார்.. ஏமாறாதீங்க என்று பேச வெச்ச மக்களின் மனங்களை வேட்டையாடின வேட்டைக்காரனுக்கு வருசம் கணக்குப்படி பாத்தால் 56 வயது. ஆனால் என்னிக்குமே அவருக்கு வயசு 16தான். திரை உலக வசூல் வேட்டைக்காரன் ஓட்டு வேட்டைக்காரருக்கு வாழ்த்துக்கள்........rrn...

  6. #1715
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் நடித்து பொங்கலுக்கு வெளியான படங்கள். 1.அரிச்சந்திரா 14,1,44, 2,அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 14,1,56, 3, சக்ரவர்த்தி திருமகள் 18,1,57, 4 ராணி சம்யுக்தா 14,1,62, 5, பணத்தோட்டம் 11,1,63, 6,வேட்டைக்காரன் 14,1,64, 7 ,எங்க வீட்டுப் பிள்ளை 14,1,65, 8 ,அன்பே வா 14,1,66, 9,தாய்க்கு தலைமகன் 13,1,67, 10,ரகசிய போலிஸ்115 11,1,68, 11,மாட்டுக்கார வேலன் 14,1,70 12,மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 14-01-1978,...

  7. #1716
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்துடன் நடிகர் அசோகன் தொடர்ந்து நடித்த 19 படங்கள் .

    நடிகர் அசோகனுக்கு மட்டும் கிடைத்த பெருமை

    1968-1972. கால கட்டத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .]

    கண்ணன் என காதலன் - புதிய பூமி - கணவன் - ஒளிவிளக்கு - காதல் வாகனம் - அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்காரவேலன் - என் அண்ணன் - தலைவன் - தேடிவந்த மாப்பிள்ளை - எங்கள் தங்கம் - குமரிகோட்டம் -ரிக்ஷாக்காரன் - நீரும் நெருப்பும் - ஒரு தாய் மக்கள் - சங்கே முழங்கு - நல்ல நேரம் - ராமன் தேடிய சீதை - மொத்தம் 19 படங்களில்
    நடித்திருந்தார் . வில்லனாகவும் , குணசித்திர வேடத்திலும் சிறப்பாக நடித்திருந்தார் . நன்றி முகநூலில் vsm...

  8. #1717
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எம்.ஜி.ஆர் ஒரு அஷ்டாவதானி!"
    - ஜானகி எம்.ஜி.ஆர்



    1984-ம் ஆண்டு எனது அன்பு நாயகர் உடல்நலங்குன்றி மருத்துவம் பார்ப்பதற்கு முன்பு நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழாவுக்குப் போனார்.

    விழா, இலக்கிய நயம் வாய்ந்த விழா. பெரும்புலவர் ‘அதன்கோட்டு ஆசான்’ அவர்களுக்கு நினைவுச் சின்னமும், நமது காலத்தில் வாழ்ந்திட்ட சதாவதானி செய்குதம்பி பாவலர் அவர்களுக்கு நினைவகமும், பொதுவுடைமை மாமேதை ஜீவா அவர்களுக்கு சிலை திறப்பும் ஆகும்.

    கற்றறிந்த மேதையர்கள் மேடையிலும் கீழுமாக குழுமியிருந்தார்கள். தொல்காப்பிய அறிவை பெரும்புலவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

    நமது இதய தெய்வம் இறுதியாகப் பேச எழுந்தார். லட்சக்கணக்கான மக்களின் ஆர்வ அலை மோதிக் கொண்டிருந்தது. ஆனால் பெரும் புலவர்களிடையே இருந்த எண்ணமோ வேறுபட்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ‘இவர் என்ன அப்படிப் பேசிவிடப் போகிறார்’ என்கிற மாதிரிதான் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்.

    இவர் பேச ஆரம்பித்தார். “நான் நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவன். நாடகத்தில் ‘நவரச நடிப்பு’ என்பார்கள் ரவுத்திரம், ஹாஸ்யம், சோகம், காமம், மோகனம் என்று வரிசைப்படுத்திவிட்டு தமிழில் இதனை ‘ஒன்பான் சுவை’ என்பார்கள்.

    ஆனால் தமிழர்களின் மூல இலக்கண, இலக்கிய நூலாகிய தொல்காப்பியத்தில் ஒன்பது சுவைகள் கூறப்படவில்லை என்று நிறுத்தினார்.

    பெரும் புலவர்கள் அத்தனை பேரும் ஆய்வு செய்யாத ஒரு விஷயத்தை அன்று சொன்னார். அறிஞர்கள் அத்தனை பேரும் நாற்காலியின் விளிம்பிற்கே வந்து விட்டார்கள்.

    இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து பேசினார். “தொல்காப்பியத்தில் சினம், சிரிப்பு, வெகுளி, துன்பம் முதலான எட்டு சுவைகள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. ஒன்பதாவது சுவையான ‘மோனம்’ அதாவது ‘தவம்’ அதில் இல்லை. காரணம் ‘தவம்’ தமிழர்கள் நெறியல்ல. அது மாற்றார் நெறி!”

    இப்படி தொடர்ந்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஒரு தொல்காப்பிய விரிவுரையே நிகழ்த்தினார்.

    அவர் ஒரு நடிகர். அரசியலில் முதல்வர். இப்படி ஏதோ ஒன்றில்தான் சம்பந்தப்பட்டு இருப்பார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். தான் கற்றதை மட்டுமே துணையாகக் கொண்டு, அறிஞர்கள் அவையிலும் அவர்களை நிறைவு செய்ய முடியும் என்பதற்கு என் நெஞ்சில் நிற்கிற நிஜமான சான்று இவர்.

    இளம் வயதில் தன் கையெழுத்திலும் தமிழின் உணர்வு தலை தூக்குவதற்கு ஒருவர் காரணமாக இருந்தார் என்று அவரே சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    அநேகருக்குத் தெரியாத அந்த உண்மையை நான் இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

    நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி அவர்களும் எனது அன்பு நாயகரும் சிறுவயதில் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் ஒன்றாக நடித்து வந்தவர்கள்.

    அந்தக் காலத்தில் இவர், தன் பெயரை ‘எம்.ஜி.ராமச்சந்தர்’ என்று தான் எழுதி வருவாராம். இதைக்கண்ட நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ஆர் அவர்கள் “வடநாட்டுக்காரர்களைப் போல பெயர் எழுதுவது நன்றாக இல்லை அழகான தமிழில் எழுதலாமே” என்றார்.

    அதன்படியே பிறகு கடைசிவரை கையெழுத்திட்டு வந்தார். இதை தோட்டத்துத் தூயவரே சொல்ல கேட்டு இருக்கிறேன்

    28.08.1988......... Srinivasan...

  9. #1718
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [அாிசி சோறை
    அறிமுகப்படுத்திய
    தலைவா்

    சென்னை இராஜாஜி மண்டபம் .
    முற்பகல் நேரம் பத்து மணி ...

    கோட் , சூட் சகிதமாய் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் , மாவட்ட ஆட்சியாளர்கள் மண்டபத்திற்குள் வந்து குழுமியிருக்கிறார்கள் .

    அதிகாரிகள் இருக்கையில் அமர்ந்த பத்தாவது நிமிடம் , வரலாற்றுப் புகழ்மிக்க 4777 எண் உள்ள பச்சை நிற அம்பாசடர் கார் சர்ரென்று இராஜாஜி மண்டப வாசலில் வந்து நிற்கிறது .

    காலத்தை வென்றக் காவிய நாயகன் முதலமைச்சராக முதன் முறையாக இராஜாஜி மண்டப படிக்கட்டில் பாதம் பதிக்கிறாா் .

    செக்யூரிட்டிகள் பின் தொடர மண்டபப் படிக்கட்டுகளில் இராஜ நடை போட்டு அந்த ஆலோசனை கூட்டத்திற்குச் செல்கிறார் .

    ஆலோசனைக் கூட்டத்தில் புரட்சித்தலைவா் எம்.ஜி.ஆர் அவர்கள் ,

    "ஆட்சியை மக்கள் என்னிடம் நம்பி ஒப்படைத்து இருக்கிறார்கள் .
    உடனடியாக அவர்களுக்குச் செய்ய
    வேண்டிய நல்ல திட்டங்களைச்
    சொல்லுங்கள் , ஆக வேண்டியதை
    நான் பார்த்துக் கொள்கிறேன் "

    என்று மாவட்ட கலெக்டர்களிடமும் ,
    உயர் அதிகாரிகளிடமும் , ஆலோசனை கேட்கிறார் .

    அப்பொழுது அந்த நேரத்தில் ,
    அந்த மண்டபத்தில் பெயின்டிங் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர் , எவரையும் அனுமதிக்காத அந்த கூட்ட வளாகத்துக்குள் தடையை மீறி நுழைந்து விடுகிறார் .

    காவலர்களின் கட்டுப்பாட்டை மீறினாலும் அந்த மக்கள் தலைவர் ,
    அந்த குடிமகனைக் கூப்பிட்டு மன்னித்து , வந்த நோக்கத்தைச் சொல் என்கிறார் .

    "எனக்கென்று எதுவும் கேட்க வரவில்லை தலைவா ! கிராமங்களில் இன்னமும் பாமர மக்கள் மக்கிப் போன சோளக் கூழைத்தான் சாப்பிட்டு வருகிறார்கள்.

    நெல்லுச் சோறு என்பது மாசத்துல ஒருநாள் அல்லது வாரத்துல ஒருநாள் , இல்லாட்டி நல்ல நாள் பெரிய நாளைக்குத்தான் நெல்லுச் சோற்றைப் பார்க்க முடியுது , இது நமக்கு ஆண்டவன் விதித்த விதி என்றே மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் .

    அந்த அளவுக்கு வறுமையை பழகிக் கொண்டு , சகித்து வாழ முன்பிருந்த ஆட்சியாளர்களால் பழக்கப்படுத்த விடப்பட்டிருக்கிறார்கள் .
    அதை மட்டும் போக்கிக் காட்டுங்கள் , உங்கள் ஆட்சியை வரலாறு , பொற்கால ஆட்சி என்று போற்றும் ."

    என்கிற கோரிக்கையை முன் வைக்கிறார் அந்த குடிமகன் .

    கூறியவன் ஒரு சாதாரணக் குடிமகன் தானே என்று சாதாரணமாக நினைக்காமல் , அந்த குடிமகனின் கோரிக்கையைக் குறித்து கொள்ளுங்கள் என்று கலெக்டர்களிடம் ஆணையிடுகிறார் , மக்கள்திலகம் .

    "கொடுமையிலும் கொடுமையான பசியைப் போக்க வேண்டும் . உங்களுக்கு தெரியுமோ , தெரியாதோ .... ஆனால் , எனக்கு தெரியும் , பசியின் கொடுமை.

    என் ஆட்சியில் பாலாறு தேனாறு ஓடும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் . ஆனால் மக்கள் பசிக் கொடுமையை அனுபவிக்க ஒருக்காலும் விட மாட்டேன் .

    என் மக்கள்,தினமும் அரிசிச் சோறு சாப்பிடுவதற்கான திட்டத்தைச் சொல்லுங்கள் . அதற்கு ஆகும் செலவைச் சொல்லுங்கள் , நிதி ஒதுக்கித் தருகிறேன் .

    என் மக்கள் பசி போக்க , அரிசி எங்கிருந்து கிடைத்தாலும் ,எப்பாடு பட்டாவது , வாங்கி வருகிறேன் . உங்களுக்கு அரை மணி நேரம் அவகாசம் தருகிறேன் . திட்டமிட்டு சொல்லுங்கள் "

    என்று கூறி விட்டு மேஜையில் கிடந்த பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்
    புரட்சித்தலைவர் .

    அரைமணி நேரத்திற்குப் பிறகு , ஆகும் பட்ஜெட் செலவு என்று , ஒரு தொகையை சொல்கிறார்கள் அதிகாரிகள் .

    உடனே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதை இரண்டு மடங்காக்கித் தருகிறேன் என்று அந்த இடத்திலேயே உத்தரவிடுகிறார் .

    ஒரு சாதாரண குடிமகன் வழிமொழிந்த கோரிக்கையை வேதமாக எடுத்து செயல்பட்டிருக்கிறார் மக்கள் திலகம்! புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ..........vrh...

  10. #1719
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தாயின் பெருமைகளை தன் காவியங்களின் மூலம் தலைநிமிரச் செய்த புரட்சித்தலைவரின் சொற்களில் சில ...

    தாய் தந்தையரே என் இஷ்ட தெய்வம் அவர்களை வணங்குகிறேன். #மதுரைவீரன்

    தாயை தெய்வமாக மதித்து சேவை செய்தால் இந்த பதவி என்ன எவ்வளவு பெரிய பதவியானாலும் பெறலாம். #தெய்வத்தாய்

    உன்கிட்ட பணம் இல்லை என்றாலும் தங்கமான குணம் உள்ளதே - அம்மா அது கூட உங்க கிட்ட இருந்துதானம்மா வந்தது ( மகன் ) #நல்லவன்வாழ்வான்.

    தாயை மதிக்காதவன் சத்தியமா உருபட்டதே கிடையாது. #தாய்க்குத்தலைமகன்

    பெற்ற மனம் கண்ணீர் விட்டால் பிள்ளை மனம் தாங்காது. #அன்னமிட்டகை

    தாயிற்கு இணையாக வேறொரு தெய்வத்தை நான் பார்த்ததில்லை. #தாயின்மடியில்

    கடைசி வரைக்கும் என் தாய் குலத்தில் தான் நான் இருப்பேன். #அடிமைப்பெண்

    தாய் அன்பிற்கு ஏது ஜாதி மதம் எதுவுமே கிடையாது.
    #நீதிக்குதலைவணங்கு.

    தாயை பட்டினி போடுவதற்கு மனம் இல்லை. அதனால்தான் இந்தத் தொழிலை செய்கிறேன். #திருடாதே

    தாயின் துன்பத்தை போகாத மகன் நானிலத்தில் இருந்தென்ன பயன். #குலேபகாவலி.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....vrh...

  11. #1720
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என்றும் வெற்றித் தலைவர் புரட்சித்தலைவர் கலையுலகில் காலத்தால் அழியாத அற்புத காவியங்களை கொடுத்தவர் நம் புரட்சித்தலைவர். மக்களின் மனங்கவர்ந்த நாயகன் என்றும் புரட்சித்தலைவரே !

    புரட்சித்தலைவரின் காலத்திற்குப் பிறகு இன்று வரை எத்தனையோ நடிகர்கள் வந்துவிட்டார்கள் ஆனால் எவரின் படங்களும் சொல்லிக் கொள்வது போல் இருப்பதில்லை ... 10 திரைப்படங்கள் வெளிவந்தால் அதில் ஒன்று இரண்டுதான் பார்ப்பது போல் இருக்கும். ஆனால் புரட்சித்தலைவரின் திரைப்படங்கள் அப்படி இருக்காது.

    புரட்சித்தலைவரின் அனைத்து திரைப்படங்களுக்கு இன்று வரையில் நல்ல வரவேற்பு இருக்கின்றன. இன்றைய இளைய தலைமுறை புரட்சித்தலைவரின் ரசிகர்களாக இருக்கும் நாங்கள் விவரம் தெரிந்த நாள் முதல் இன்று வரையில் புரட்சித்தலைவரின் திரைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் போல சரித்திரம் போற்றும் நாயகனாக எவராலும் வரமுடியாது. அதேபோல் புரட்சித்தலைவரைப் போல அற்புதமான, அருமையான, அதிரடியான திரைப்படங்களுக்கு ஈடு இணை எந்த திரைப்படங்களும் கிடையாது.என்றும் என்றென்றும் அனைவராலும் போற்றப்படும் மாபெரும் சரித்திரநாயகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •