Page 161 of 210 FirstFirst ... 61111151159160161162163171 ... LastLast
Results 1,601 to 1,610 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1601
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #காதலில் #இலக்கணவரைமுறை...



    எம்.ஜி.ஆர்., படங்கள் காலம் கடந்தும் நிற்பதற்கு முக்கியக் காரணம் அவற்றின் கருப்பொருள் உலகளாவியதாக இருப்பதேயாகும். அமெரிக்க மாணவர்கள் எம்.ஜி.ஆர் படங்களை ஞாயிறுதோறும் திரையரங்குக்குப் போய் பார்த்து ரசிப்பர். கதை எளிமையானதாகவும் கருப்பொருள் அனைத்துலக மனிதனுக்கும் ஏற்றதாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதனால் தங்களால் இயல்பாக ரசிக்க முடிகிறது என்றனர். இந்தியத் தன்மையும் தமிழ் இயல்பும் பாதுகாக்கப்படுவதாலும் இந்தப் படங்களை அனைவரும் ரசிக்கின்றனர்.

    இதற்குச் சில இலக்கண வரைமுறைகள் உண்டு. காதல் தோன்றும் விதம் அல்லது சூழ்நிலைகள் குறித்து தொல்காப்பியர் சில வகைப்பாடுகளைத் தருகிறார். அவை, பூத் தரு புணர்ச்சி, புனல் தரு புணர்ச்சி, களிறு தரு புணர்ச்சி என்பவையாகும். புணர்ச்சி என்றால் இருவரது மனமும் ஒன்றின்பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைதல் ஆகும். இதைத்தான் தமிழ்ச்சமூகம் காதல் என்கிறது.

    #பூத்தரு #புணர்ச்சி

    அந்தக் காலத்தில் ஒரு பெண் ஒரு பூவைக்கண்டு ஆசைப்பட்டு அதைப் பறிக்க முயன்று கிடைக்காமல் தவிக்கும்போது அவ்வழியே வந்த ஓர் இளைஞன் அவளுக்கு உதவினால் அவள் மனம் அவனிடம் காதல் கொள்ளும் என்று ஒரு சூழ்நிலையை வரையறுத்தனர்.

    எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’ படத்தில் பூத்தரு புணர்ச்சி காட்சி அழகாகச் சித்திரிக்கப்பட்டு நகைச்சுவையோடு எடுத்துச் செல்லப்படும். சரோஜாதேவி நயமாகப் பேசி எம்.ஜி.ஆரை ஐஸ் தண்ணீரில் தள்ளிவிட்டு விடுவார் அவரும் இருமி, தும்மி, “டபுள் நிமோனியா” வந்ததாக நடித்து சரோஜாதேவியைக் காதல் கனவில் மூழ்கடித்துவிடுவார். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாட்டு இப்படத்தின் கனவுப்பாட்டு ஆகும்.

    #புனல்தரு #புணர்ச்சி

    சங்க இலக்கியத்தில் மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலப்பகுதியே காதல் எனப்படும் கூடலுக்குரியதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இன்று வரை பலரும் தேனிலவுக்கு ஊட்டி, கொடைக்கானல், சிம்லா, காஷ்மீர், சுவிட்சர்லாந்து போன்ற மலைப்பகுதிகளை நாடுவது அதன் சூழல் காதலுணர்வு பெருக வழி செய்வதுதான்.

    மலையருவி, காட்டாறு போன்றவற்றில் குளித்து விளையாடும் பெண் திடீரென ஆபத்தில் சிக்கிக்கொண்டால் அப்போது அவளைக் காப்பாற்றும் இளைஞரின் மீது அவளுக்குக் காதல் தோன்றுகிறது. தமிழ்ப்பட வரலாற்றில் முதன் முதலில் அதிக பிரின்ட்டுகள் போட்ட வெற்றிப்படமான ‘மதுரை வீரன்’ படத்தில் இளவரசி பானுமதி ஆற்று வெள்ளத்தில் சிக்கியபோது காவலரான எம்.ஜி.ஆர் அவரைக் காப்பாற்றி கரை சேர்ப்பார்.

    இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததால் பின்பு இளவரசியை கடத்திச் சென்று திருமணம் முடிப்பார். இது புனல்தரு புணர்ச்சிக்குச் சரியான எடுத்துக்காட்டு.

    "மதுரை வீரன்"8 கதை நாட்டுப்புறப்பாடலாகப் பாடப்பட்டு வந்து பின்பு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பு எம்.ஜி.ஆரின் அலிபாவும் 40 திருடர்களும் மற்றும் குலேபகாவலியும் இவற்றை அடுத்து தாய்க்குப் பின் தாரமும் வெளிவந்தன. அனைத்துமே எம்.ஜி.ஆருக்கு வெள்ளிவிழா படங்களாக அமைந்தன. இதைத்தொடர்ந்து அவருக்கு நாடோடி மன்னன் மாபெரும் வெற்றியை அளித்தது.

    #களிறுதரு #புணர்ச்சி

    களிறு என்றால் யானை ஓர் இளம் பெண்ணுக்கு மலையிலோ, காட்டிலோ கொடிய விலங்குகளால் ஆபத்து நேரும்போது அவளைக் காப்பாற்றுகிற இளைஞன்மீது அவளுக்குக் காதல் உண்டாக வாய்ப்புண்டு. இதை களிறு என்று மட்டும் கொள்ளாமல் தற்காலத்திற்கேற்றவாறு ரவுடிகளால் தொல்லை ஏற்படும்போது காப்பாற்றுகின்றவன் என்று பொருள் கொண்டு பல படங்களில் எம்.ஜி.ஆர் கதாநாயகியை ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார். காதல் மலர்ந்திருக்கிறது.

    ‘நல்ல நேரம்’ படத்தில் யானையைக் கண்டு மிரண்டு ஓடிவரும் கே.ஆர் விஜயாவை எம்.ஜி.ஆர் காப்பாற்றுவார். அவர் கார் நின்று போனதும் யானைகளைக் கொண்டு காரைக்கட்டி இழுத்துச் சென்று பெட்ரோல் பங்க்’ வரை கொண்டு விடுவார். இப்படம் ஹாத்தி மேரே சாத்தி படத்தின் தமிழாக்கம் ஆகும்.

    ‘வள்ளி திருமணம்’ என்ற கதைப்பாடல் தமிழகம் முழுவதும் மேடை நாடகமாகப் பிரபலம் அடைந்தது. இதில் முருகன் வள்ளியை மணக்க தன் அண்ணன் கணேசனை யானையாகச் சென்று பயமுறுத்தச் சொல்வார். யானையைக் கண்டு மிரண்டு வள்ளி அங்கிருந்த முருகனிடம் உதவியை நாடுவார். பின்பு அவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணமும் நடைபெறும். இந்தக் கதையும் களிறு தரு புணர்ச்சிக்கு இங்கு காலங்காலமாக இருந்துவரும் எடுத்துக்காட்டாகும்.

    தமிழ்த்திரைப்படத்தில் ஆரம்பத்தில் கதாநாயகிக்கு ஒரு ஆபத்து என்றால் எம்.ஜி.ஆர் உடனே அங்கு பிரத்யட்சனமாகி அவரைக் காப்பாற்றுவது களிறு தரு புணர்ச்சி ‘கான்செப்ட்டின்’ மிச்ச சொச்சமே ஆகும்............bsm...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1602
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Cag கொம்பு வைத்த அமைப்பு அல்ல !
    அது அளித்த அறிக்கைக்கு பின் இருமுறை மக்கள் புரட்சித் தலைவரை அரியணை ஏற்றினர் என்றால் வெட்கித் தலைகுனிய வேண்டியது அன்றைய cag யின் வெள்ளையும் சொள்ளையும் குழுவும் காந்த ராஜூம் தான் !

    அன்றைய ஐஏஎஸ் ஐபிஎஸ் களுக்குக் கூலி கொடுத்து தகவல் பெற்ற
    ஈனச்செயலின் உரிமையாளர் கருணாநிதி !

    அடுத்து , சீமான் !
    அரசியலின் சாபக்கேடு இவன் !
    மூடத்தனத்தின் முதலீடு ஆக இருப்பவன் ! அதற்கும் ஒரு கூட்டம்.
    இவனை எல்லாம் இவ்வளவு பேச விட்டு வைப்பது ஒரு வகையில் அரசின் இயலாமையே !
    ஏன் அவனை யாரும் பதிலடி தந்து விளாசுவதில்லை என எனக்குப் புரியவில்லை !
    நம்மைப் போல் சிலர் மட்டும் வலைதளங்களில் பேசி வருகிறோம் !
    ஆனால் இன்னுமொரு ஐந்து வருடத்தில் அவனே அட்ரஸ் இல்லாமல் போய் விடுவான் என்பது மட்டும் திண்ணம் !
    ஏனெனில் எம்ஜியாரைத் தொட்டவன் துலங்கியதில்லை !
    இது நிதர்சன நிகழ்வு !
    இது வரலாறு !..........gktn...

  4. #1603
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள்திலகத்தின்_ஆரம்பகாலங்கள்

    #என்_தங்கை...
    வருடம் 1952

    மின்னல் தாக்கியதால் கண்ணை இழந்த தங்கை மீனா (ஈ.வி.சரோஜா), வயதான உடல் நலமில்லாத தாயார் குணவதி; சுயநலம் மிக்க குடும்பத்தில் சிறிதும் அக்கரை இல்லாத தம்பி செல்வம் (சந்தான பாரதி) ; தன் தந்தையின் சொத்துக்களை அபகரித்து தன் தேவைக்கு பணத்தை கடனாக கூட கொடுக்காத மாமன் கருணாகர பிள்ளை (சக்ரபாணி)

    கண் தெரியாத மீனாவை சதா கரித்துக்கொட்டும் பணக்கார இடத்துப்பெண்ணும்-செல்வத்தின் மனைவியுமான ராஜம் ((மாதுரி தேவி)) - இவ்வளவு சூழ்நிலைகளுக்கிடையில் தன் தங்கையின் மீது உயிரையே வைத்திருப்பவரும்- குடும்பத்தை தன் வருமானத்தை கொண்டு வழிநடத்தும் மூத்த மகன் ராஜேந்திரன் ((மக்கள் திலகம்)).
    இறுதியில் கண் தெரியாத தன் தங்கை விபத்தில் உயிரிழக்க-தன் தங்கை மீனாவின் உடலோடு கடலுக்குள் சங்கமித்து உயிரை விடுகிறார் ராஜேந்திரன்.

    மக்கள் திலகம் ஒரு பாசம் மிக்க அண்ணனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். மாமனிடம் கடன் கேட்டு அவமானப்படும்போதும்- மீனா தன் அண்ணி ராஜத்தால் கொடுமைபடுத்தப்படுவதை அறியும் போதும்-தன் தாயார் இறக்கும் போதும்- இறுதியில் தன் தங்கை மீனாவின் உயிரற்ற உடலை தூக்கிக்கொண்டு, கதறிக்கொண்டே கடலை நோக்கி ஓடும்போதும் - தன் நடிப்பால் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறார்.

    மக்கள் திலகத்தை ஒரு சிறந்த நடிகராக நிலைநிறுத்திய "அன்பே வா", "பாசம்", "பெற்றால்தான் பிள்ளையா", "பணம் படைத்தவன்" ஆகிய படங்களுக்கு முன்னோடி இந்தப்படம்.மக்கள் திலகத்துக்கு அடுத்தபடியாக கொடுமைக்கார மாமன் கருணாகரானாக சக்கரபாணியும், மாதுரி தேவியும் நம்மை வியக்க வைக்கிறார்கள்.

    இந்த படத்தில் கூடுதலான ஒரு விடயம் மக்கள் திலகத்துக்கு இணையே இல்லாமல் நடித்துள்ளார்.மக்கள் திலகத்தின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் இப்படம் வணிகரீதியாக வெற்றியடைய, நடிகர் பெயர் சொல்லும் படமாக இருக்கிறது...

    தகவல் :https://en.m.wikipedia.org/wiki/En_Thangai_(1952_film)

  5. #1604
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆரின் திருவிளையாடல்!
    -------------------------------------------
    எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு இந்தப் பதிவு சர்க்கரைப் பொங்கல் என இனிக்கும்!
    ஒரு கட்சி என்னும் வீட்டின் உத்திரங்களை--
    தொண்டன் என்னும் உதிரங்களை--எம்.ஜி.ஆர் எப்படிக் கையாண்டார் என்பதே இன்றையப் பதிவின் சாரம்!
    அது அருப்புக் கோட்டைக்கும் திரு நெல்வேலிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம்!
    அருப்புக் கோட்டை அ.தி.மு.கவின் வெற்றியின்
    இருப்புக் கோட்டை!
    நெல்லை தான் கொஞ்சம் தொல்லை!
    திரு நெல்வேலியில் போட்டியிடுகிறார் ஆர்.எம்.வீ!
    திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஏற்றத்துக்கு துணை நின்ற ஆர்.எம்.வீயை நாம் பாராட்டும் அதே நேரம்--
    அ.தி.மு.கவின் ஆர்.எம்.வீயை ஆதரிக்க இயலாது!
    ஆர்.எம்.வீ என்றில்லை ,,வேறு எவராயிருந்திருந்தாலும் ஜெ வைப் போல் கடைசிவரைக் கட்சியைக் காப்பாற்றியிருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்!
    நெல்லையில்,,தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 90க்கும் மேலானவர்களைக் களத்தில் இறக்கும் ஆ.எம்.வீ--
    திரு நெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர் கருப்பசாமி பாண்டியனை ஓரமாக ஒதுக்கி விடுகிறார்?
    காரணம்??
    கருப்பசாமி பாண்டியன் அப்போது ஜெ அணியில் இருந்ததே!
    வருத்தமுற்ற மனதுடன் களத்தில் இருந்தே மாயமாய் போய்விடுகிறார் கருப்பசாமி பாண்டியன்!
    அத்தனை எம்.எல்.ஏக்களைத் தேர்தல் பணியில் இறக்கியும்,,கிட்டத்தட்ட கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தும் வெற்றி வாய்ப்புக் குறைகிறது ஆர்.எம்.வீக்கு?
    எம்.ஜி.ஆர் களத்துக்கு வந்து முகம் காட்டினால் தான் தாம் தப்பிக்க முடியும் என்றப் பரிதாப நிலையில் ஆர்.எம்.வீ??
    மாவட்டச் செயலாளருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து உரிய முறையில் அவரை வைத்து ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்றுக் கண்டிப்புடன் கூறி விடுகிறார் எம்.ஜி.ஆர்!
    மாயமாய் ஒதுங்கியிருந்த கருப்பசாமி பாண்டியன் தோட்டத்துக்குச் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து விபரங்கள் கூறியதின் விளைவே இது!
    ஒரே ஒரு கூட்டத்தில் மட்டும் வந்து தன் முகத்தைக் காட்டுகிறார் மூலவர்!
    தேர்தலில் ஆர்.எம்.வீ வெல்கிறார்!!
    ஆர்.எம்.வீ,,தன் ஆதரவாளர்களிடம் இப்படிப் புலம்புகிறார்--
    முதலிலேயே,,தலைவர் இங்கே வருகிறேன் என்று சொல்லியிருந்தால் எனக்குக் கோடிக்கணக்கில் பணச் செலவும் ஏற்பட்டிருக்காது! இவ்வளவு டென்ஷனும் இருந்திருக்காது??
    அங்கே எம்.ஜி.ஆரோ--தன் நெருங்கியவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது---
    மாவட்டச் செயலாளரை மட்டம் தட்டிய ஆர்.எம்.வீக்குப் பாடம் புகட்டவும்--
    அவர் கைப் பணம் கொஞ்சமாவது தொண்டர்களுக்குக் கிடைத்திடவும் தான் நான் கடைசி நேரத்தில் அங்கே வருவதற்கு ஒப்புக் கொண்டேன்??
    பக்தனுக்கு உதவவும்,,,அவனுக்கு உரிய அங்கீகாரத்தை தந்திடவும்--
    புராணங்களில் இறைவன் செய்தவை விளையாட்டு என்றால்---
    இங்கே--பறங்கிமலையான் செய்ததும் அது தானே???!!!...vtr

  6. #1605
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்து தலைவர் நெஞ்சங்களுக்கும் வணக்கம்.

    தலைவர் நடத்தி கொண்டு இருந்த நாடக குழுவில் இருந்து அன்பர் எம் கே. முஸ்தபா விலகி சென்று விட அந்த இடத்தில் சரியான ஒரு நபரை நிரப்ப ஒருவரை தேட....

    வள்ளலின் தந்தை வேடங்களில் அப்போது நடித்து கொண்டு இருந்த என்.எஸ். நாராயணன் அவர்கள் மூலம் நாகர்கோவிலை சேர்ந்த பசுபதி என்பவரை அவரின் மூலம் அறிமுகம் ஆகி அவரை தனது குழுவில் சேர்த்து கொள்கிறார்.

    பசுபதி அழகிய தோற்றம் உடல்வாகு கொண்டவர்.. .இன்பக்கனவு.....அட்வகேட் அமரன்....பகைவனின் காதலி போன்ற நாடகங்களில் தலைவர் உடன் பசுபதி அவர்கள் தொடர்ந்து பல ஊர்களில் நடித்து பணமும் புகழும் அடைகிறார்...

    அழகு கொண்ட பசுபதி புகழ் பொருள் வந்தவுடன் தன்னை மறந்து தலைவருடன் கருத்து வேறுபாடு கண்டு பிரிந்து சென்று விடுகிறார்...

    வாய்ப்புக்கள் இழந்து திரௌபதி நாடக குழுவில் பின் இணைத்து நடித்து வர அவருக்கு திருமணம் நிச்சியம் ஆக பலத்த சந்தேகத்துடன் தலைவருக்கு திருமண அழைப்பிதழ் ஒரு தட்டில் பழங்கள் கொண்டு அதில் பத்திரிகை வைத்து அழைக்க வருகிறார்.

    தலைவர் முகாமில் அனைவரும் அவரை பார்த்து முகம் சுழிக்க தலைவர் எதுவும் நடக்காதது போல விஷயம் கேட்டு பத்திரிகையை எடுத்து கொண்டு பழங்களை நீங்களே எடுத்து செல்லுங்கள் என்று பசுபதியிடம் சொல்ல...

    பசுபதி தன்னை சென்னையில் அறிமுகம் செய்த அந்த நல்ல மனிதரை விட்டு பிரிந்து சென்ற தவறை உணர்ந்து வாடிய முகத்துடன் வெளியே நடக்கிறார்...

    திருமண நாள் நெருங்கி கொண்டு இருக்க பணம் இல்லாமல் பசுபதி தவிப்பதை தலைவரிடம் ஒருவர் மகிழ்ச்சியுடன் சொல்ல தலைவர் பதில் ஏதும் சொல்லவில்லை....

    திருமணம் நடக்கும் மண்டபம் நோக்கி தளர்ந்த மனத்துடன் பசுபதி நடந்து ஏற்பாடுகள் செய்ய போக அங்கே திருமண மண்டப மேலாளர் சிரித்த முகத்துடன் வாங்க புது மாப்பிள்ளை என்று சிரித்து கொண்டே வரவேற்க..

    பசுபதி திகைக்க மண்டபம்...வாழை தோரண அலங்காரங்கள்....ஒலிபெருக்கி....பந்தல்..
    மேளம்...சாப்பாடு அடங்கிய மொத்த பணம் கட்ட பட்ட ரசீதை பசுபதியிடம் காட்டி.

    எம்ஜிஆர் அவர்களின் மேனேஜர் பத்மநாபன் அவர்கள் முன்தினம் வந்து உங்கள் பெயரில் பணம் கட்டி விட்டு சென்றார்...நீங்கள் வந்தால் இதை உங்களிடம் கொடுக்க சொன்னார் என்று ரசீதை நீட்ட.

    வெட்கத்தில் பசுபதியின் முகம் வாடி போகிறது.... தலைவரின் ஆட்கள் நடராஜன்...கிருஷ்ணமூர்த்தி.... சீதாராமன் ஆகியோர் ஆளுக்கு ஒரு வேலைக்கு பொறுப்புகள் ஏற்று கொண்டு இருக்கும் தகவலையும் சொல்கிறார் மண்டப மேலாளர்...

    திருமண நாள் அன்று முகூர்த்தம் வரும் அரை மணி நேரம் முன்பே வள்ளல் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி...சகஸ்ரநாமம்... ஆகியோருடன் தானும் விண்ணில் இருந்து வந்து இறங்கிய தேவதூதர் போல வந்து திருமண மண்டபத்தில் நம் தலைவரும் வந்து நின்றார்.

    பத்திரிகை கொடுக்கும் போது முகத்தில் எந்த reaction...காட்டாமல் தனது திருமணத்துக்கு வருவாரா வர மாட்டாரா என்று தவித்து கொண்டு இருந்த பசுபதி திருமணம் முடிந்த பிறகு..

    குலுங்கி குலுங்கி தனி அறையில் அழுது தீர்க்கிறார் நம் பொன் மன செம்மலின் உயர்ந்த உள்ளம் கண்டு கொண்டு.....

    அவர்தான் நம் தங்க தலைவர்....அவர் மூச்சு காத்து பட்டு சோத்து பஞ்சம் தீர்ந்தவர்கள் பட்டியல் தொடரும்.

    உங்களில் ஒருவன் நெல்லை மணி...

    வாழ்க தலைவர் புகழ்.
    நன்றி...நன்றி...

    எவர் வாழ்விலும் விளக்கேற்றி வைத்தே வழக்கம் பழக்கம் நம் மன்னவனருக்கு......NM

  7. #1606
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சி_தலைவர்_பொன்மனச்செம்மல்
    #எம்ஜிஆர்_அவர்களின்_ஆசியோடு நண்பர் படப்பை ஆர்.டி.பாபுவுடன் இணைந்து:

    திடீர் எம்ஜிஆர் அபிமானிகளாகிய ரஜினி, பிஜேபி முருகன், கமல் என புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை சொந்தம் கொண்டாடிய போது, எம்ஜிஆர் எங்களுக்கு தான் சொந்தம் என்று அஇஅதிமுகவின் தலைமை முதல் மந்திரிகள் வரை அப்படியே பொங்கி எழுந்து பேட்டி கொடுத்தனர்!

    அஇஅதிமுக இன்றும் அவரை முன்னிலைப் படுத்தவே இல்லை;
    பெயருக்கு மட்டும் தான் எம்ஜிஆர் பெயரை உச்சரிப்பு செய்கின்றனர் என்பதற்கு சாட்சியே, திங்கட் கிழமை செய்தித்தாள்களில் வெளியான இந்த விளம்பரம்...! மருந்திற்கு கூட எம்ஜியார் பெயரோபுகைப்படமோ, இல்லையே?

    அதே நேரத்தில் எம்ஜிஆரை எல்லோரும் சொந்தம் கொண்டாடிய போது அரசியல் செய்ய காரணம் தேவைபட்டு, எம்ஜிஆருக்கு எதிராக பேசினால்? நாம் பெரிய அளவில் பேசப் படுவோம் என்ற கேவலமான அரசியலை முன்னெடுத்து
    எம்ஜிஆர் ஆட்சியில் என்ன செய்தார்? என்று கேட்கும் சைமன் என்கின்ற சீமானுக்கும்...

    எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தின் மகத்துவம் பற்றி அஇஅதிமுக தலைமை அறிந்து கொள்ளவும், அம்மா புராணம் மட்டும் பாடும் புலவர்களுக்குமான எனது பதில்!

    எம்ஜிஆர் மறைந்து 33 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரைச் சொந்தம் கொண்டாடும் அரசியல் உத்தியை அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கும் சூழல், 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் உருவாகி உள்ளதை தேர்தல் களம் உணர்த்தி வருகிறது!

    புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் நெருக்கமான நட்புடன் இருந்தவர்! திமுகவின் வாக்கு வங்கியை உயர்த்தும் முக்கிய சக்தியாகவும் இருந்தார்!

    1957-இல் திமுக பெற்ற 15% வாக்கு வங்கியில் எம்.ஜி.ஆரின் பங்கும் இருந்தது!

    1964-இல் திமுகவினால் கிடைத்த எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்து, "காமராஜர் என் தலைவர், அண்ணா எனது வழிகாட்டி' என திமுகவில் இருந்து கொண்டே அதிகார அரசியல் செய்யுமளவுக்கு மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்!

    1967-இல் கொள்கை முரண்களுடன் கூடிய திமுக கூட்டணியின் வாக்கு வங்கி 40% ஆக உயர்ந்ததற்கும், வெற்றிக்கும் எம்ஜிஆர் குண்டடி பட்ட போஸ்டரே காரணம்!

    1969-இல் அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதிமுதல்வராவதற்கு பக்கபலமாக இருந்தவரே எம்ஜிஆர் தான்! திமுகவின் பொருளாளராகப் பொறுப்பேற்று, திமுகவின் 2-வது பெரிய சக்தியானார் எம்ஜிஆர்!

    1972-இல் திமுகவில் இருந்து நீக்கப் பட்ட பிறகு அதிமுகவை உருவாக்கி, புதுவையில் 1974 யில் ஆட்சியைப் பிடித்தார்!
    எம்ஜிஆரின் ஈர்ப்பு சக்தி அப்படி!

    1977 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டியில் 30.3% வாக்குகளைப் பெற்று தமிழத்தின் முதன்மையான அரசியல் சக்தியாக உருவெடுத்தார்!

    1979-இல் பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில், திமுகவின் தலித் முகமாக இருந்து முரண்பட்டு வெளியேறிய சத்தியவாணிமுத்து- வுக்கு பதவியை கொடுத்து, 1980- மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இந்திய தலித்துகள் முகமான பாபு ஜெகஜீவன்ராமை முன்னிலைப் படுத்திய எம்ஜிஆரின் ராஜதந்திர நடவடிக்கைகள் தமிழகத்தில் கிட்டதட்ட 23%-க்கு மேற்பட்ட தலித் வாக்குகள் அதிமுக வசமே தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள உதவியது!

    1985-திருச்செந்தூர் தொகுதி இடை தேர்தலுக்கு முன்பாக பொதுப் பிரிவிலிருந்த கிறிஸ்தவ நாடார் களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு மாற்றிய மற்றொரு ராஜதந்திர நடவடிக்கையினால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எம்ஜிஆரின் வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தியது!

    1980- மக்களவை தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதால், எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டு, மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது!

    காங்கிரஸ்-திமுக கூட்டணியை எதிர்த்து 38.8% வாக்குகள் பெற்று மீண்டும் ஆட்சியமைத்தார் எம்ஜிஆர்!

    இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும், சமூக நீதி கொள்கையில் உறுதியான கொள்கையுடன் இருப்பவர் எம்ஜிஆர் என்ற நம்பிக்கையைத் தக்கவைக்க, இட ஒதுக்கீடு தொடர்பாக அவர் எடுத்த நடவடிக்கைகளே சாட்சியாக இருந்தன!

    பொருளாதார அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முழங்கிய எம்ஜிஆர்.தான், 31% சதவீதமாக இருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தி, தமிழகத்தின் சமூகநீதி கொள்கை யின் பாதுகாவலராகத் திகழ்ந்தார்!

    கட்சியின் மூத்த தலைவர்எஸ்டிஎஸ்- சின் ஆலோசனைப்படி, பரம்பரை கிராம நிர்வாக அலுவலர்கள் முறை யை (கிராம முன்சீப்) ஒழித்து, பல ஆயிரம் படித்த இளைஞர்கள்(vao) அதிலும் குறிப்பாக, 2 ஆயிரம் தலித் இளைஞர்களை கிராம நிர்வாக அலுவலர்களாக உருவாக்கியது எம்ஜிஆரின் சமூக நீதிப்பார்வைக்கு மிகச் சிறந்த உதாரணம்.!

    இலவச மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தி யது,

    பள்ளி மாணவர்களுக்கு இலவச பல்பொடி, செருப்பு வழங்கியது,

    மிதிவண்டிகளில் இருவர் பயணம் செய்ய அனுமதியளித்தது...

    ஆகியவை, ஏழைகளுக்காகவே எம்.ஜி.ஆர்., தன் ஆட்சியைநடத்தினார் என்பதை பறைசாற்றும் ஆவணங்க ளாக இன்றும் காட்சியளிக்கின்றன!

    முதல்முறையாக...
    #அதிமுக_அல்லாத_வேறொரு_கட்சித்_தலைவர்_எம்ஜிஆர்_பெயர ை_தேர்தல்_களத்தில்_பயன்படுத்தியது_கருணாநிதிதா ன்!

    1984 தேர்தல் பிரசாரத்தின் போது, "எனது 40 ஆண்டுகால நண்பர் எம்ஜிஆர் குணமடைந்து வந்ததும் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன்; எனவே, எனக்கு வாக்களியுங்கள்,"' என கலைஞர் கருணாநிதி கெஞ்சியபோதும், எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கியை அசைக்கக்கூட அவரால் முடியவில்லை!

    அப்போது, அமெரிக்காவில் இருந்த படியே, நேரடி பிரசாரம் செய்யாமல் முதல்வராகி சாதனை படைத்தார்!

    இருந்தாலும், எம்ஜிஆர் எனது நண்பர் என்ற உணர்வுபூர்வமான தனது முழக்கத்தை உச்சரிப்பதை தனது இறுதி காலம்வரை கலைஞர் கருணாநிதி நிறுத்தியதில்லை!

    தொடர்ந்து, மூன்றுமுறை முதல்வர் பதவி வகித்த எம்ஜிஆர் 24.12.1987 -ல் மறைந்த பிறகு, அவரதுஅரசியல் வாரிசு யார் என்ற போட்டியினால், தமிழக சட்டசபை கலைக்கப் பட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டது!

    1989 தேர்தலில் தாங்கள்தான் எம்ஜிஆரின் அரசியல் வாரிசு என களம் கண்ட ஜெயலலிதா சேவல் சின்னத்தில் 22.3% வாக்குகளை யும், எம்.ஜி.ஆரின் மனைவி திருமதி வி.என்.ஜானகி 9.1% வாக்குகளை யும் பெற்றனர்!

    இதையடுத்து, அரசியல் களத்தில் ஜெயலலிதாவுக்கு தன் ஆதரவை தெரிவித்துவிட்டு, அரசியலிலிருந்து வி.என்.ஜானகி ஓய்வு பெற்றதால், 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் இரட்டை இலை
    சின்னத் தை ஜெயலலிதா பெற்று, எம்ஜிஆரின் ஒரே அரசியல் வாரிசாக உருவெடுத்தார்!

    இருப்பினும், 1991 தேர்தலில் சுயேச்சைகளாக களம் இறங்கி எம்ஜிஆர் பெயரைப் பயன்படுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தாமரைக்கனி, சாத்தூரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அறந்தாங்கியில் திருநாவுக்கரசர் ஆகியோர் வெற்றி பெற்றாலும், எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்!

    தொடர்ந்து, சசிகலா கும்பலால் ஜெ.அம்மாவுடன் முரண்பட்ட மூத்த தலைவர்கள் ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டியார், திருநாவுக்கரசர், சு.முத்துசாமி உள்ளிட்ட சிலர், எம்ஜிஆர் பெயரைப் பயன்படுத்தி, மாற்று அரசியல் இயக்கங்களைக் கண்ட போதும், அதிமுகவுக்கு எதிரான அரசியல் எடுபடவில்லை!

    ஆனால், எம்ஜிஆர் போலவே மிகவும் துணிச்சலான முடிவு, ஈகை குணம் கொண்ட விஜயகாந்த், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் "கருப்பு எம்.ஜி.ஆர்.' எனக்கூறி, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்!

    அஇஅதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்திலும், மதுரையை சுற்றியுள்ள பகுதிகள், வட தமிழகத்திலும் அதிமுக, பாமக கட்சிகள் பின்னடைவை சந்திக்க விஜயகாந்தின் கருப்பு எம்ஜிஆர் முழக்கம் முக்கியப் பங்கு வகித்தது!

    2006 முதல் 2011 வரை நடைபெற்ற இடை தேர்தல்களிலும் விஜயகாந்த் தின் கருப்பு எம்ஜிஆர் முழக்கம் அதிமுகவுக்கு பெரும் சவாலாகவே இருந்தது!

    விஜயகாந்தின் கருப்பு எம்ஜிஆர் முழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒரே எம்ஜிஆர் தான், கருப்பு எம்ஜிஆர் என்பதெல்லாம் கிடையாது என ஜெயலலிதா எதிர்வினையாற்றினார்!

    ஆனாலும், எம்ஜிஆர் சக்திகள் இணைகிறோம் எனக் கூறி, கடந்த 2011-இல் அதிமுக-தேமுதிக கூட்டணி ஏற்பட்ட பிறகுதான் கருப்பு எம்ஜிஆர் முழக்கத்துக்கான வீரியம் குறைந்தது!

    மீண்டும் எம்ஜிஆர் பெயரை மையப் படுத்தி, சொந்தம் கொண்டாடும் அரசியல் தலைதூக்கியுள்ளது!

    2018 -இல் கல்லூரி விழா ஒன்றில் அரசியலுக்கு வருவேன் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், "எம்ஜிஆர் ஓர் அவதார புருஷர்; அவரைப் போல ஆக முடியாது!

    ஆனால், அவரின் ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்' என்று கூறி, அரசியல் பிரவேச அறிவிப்பை உறுதிப்படுத்தினார்!

    தற்போது தேர்தல் களத்தில் பிரசாரம் செய்து வரும் நடிகர் கமல்ஹாசன், நானும் எம்.ஜி.ஆரின் நீட்சிதான் எனக் கூறியிருப்பது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது!

    வேல் யாத்திரை நடத்திய பாஜக கூட பிரசார வேனில் எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்தியது!

    மேலும், யாத்திரை முடிவில் பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹான், "பாஜகவால் தான் எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டு வர முடியும்' என்றார்!

    இவற்றையெல்லாம் பார்த்தால், வரவுள்ள 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசார உத்திகளில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் பெயர் நிச்சயம் இடம் பெறும் என்பது தெளிவாகிறது!

    எம்ஜிஆர் மறைந்து 33 ஆண்டுகள் ஆன பிறகும், தேர்தல் களத்தில் அவரது பெயரைப் பயன்படுத்த பகீரத முயற்சி தொடர்கிறது!

    எம்.ஜி.ஆர். பெயரைச் சொன்னால் வாக்குகள் விழும் என்ற எண்ணம், அவர் பெயரைப் பயன்படுத்த முயற்சிப்பவர்களுக்கு உள்ளது!

    'கால வெள்ளத்தால் தமிழக தேர்தல் களத்தில் அழிக்க முடியாத சக்தி யாக எப்போதும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருக்கிறார்,' என்பதைத் தான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன!

    ஆனால், அது ஏனோ அஇஅதிமுக வின் இன்றைய தலைமைக்குத் தெரியவில்லை, புரியவில்லை!?

    நன்றி:
    அன்புடன், படப்பை ஆர்.டி.பாபு
    (சிறு திருத்தங்கள் அதிர்வுடன்... Kmy.

  8. #1607
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நான்தான் ஹீரோ;** எம்.ஜி.ஆர்.*************************************** *************************************** ‘ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர். சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். ‘நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க’ என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.
    என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். ரசிகர்கள். தொண்டர்கள். எத்தனை எத்தனை நெருக்கடிகள். எத்தனை எத்தனை பிரச்னைகள். எப்போது சறுக்குவார் என்று காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டும். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. இருந்தும் நடிக்கிறேன் என்கிறாரே? என்ன மனிதர் இவர்? பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் (1978) அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்துவிட்டதா? சொடக்கு போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தை தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இது சாத்தியமா?
    சாத்தியம்தான் என்று புன்னகை செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் புன்னகையில் தெறித்து விழுந்த பொறி மற்றவர்களை ஆக்கிரமித்தது. கதை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பத்து நாள்கள். கதை தயார் என்ற விவரத்தைத் தொலைபேசியில் சொன்னார் வாலி. நல்லது. அன்று இரவே வாலி வீட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என். குஞ்சப்பன்.
    ‘நாளைக் காலை ஆறு மணிக்கு முதலமைச்சருடன் நீங்கள் மதுரை செல்கிறீர்கள். விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகும் வழியில் முதலமைச்சரிடம் கதையைச் சொல்லிவிடுங்கள். காரியம் முடிந்ததும் நீங்கள் விமானத்திலேயே சென்னை திரும்பிவிடலாம்.’
    ஆகாயத்தில் பறந்தபடியே வாலி சொன்ன கதையை எம்.ஜி.ஆர் கவனம் கலையாமல் கேட்டார். பிறகு சில திருத்தங்களைச் சொன்னார். படத்துக்கான தலைப்பை வாலியே சொன்னார்: ‘உன்னை விடமாட்டேன்!’
    விடமாட்டார்கள் என்றார் மோகன்தாஸ். எதையும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடக்கூடியவர் அவர். எம்.ஜி.ஆருக்கு எதிரே அப்படிப் பேச அனுமதிக்கப்பட்ட ஒரே நபரும் அவர்தான். அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த சமயம் அது. வெற்றிக்குக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.
    வெற்றிச் செய்தி வந்தபோது எம்.ஜி.ஆர் காஷ்மீரில் ‘இதயவீணை’ வாசித்துக் கொண்டிருந்தார். தொலைபேசி மூலம் தன் விருப்பத்தை கருணாநிதியிடம் நாசூக்காகச் சொல்லிவிட்டு, தனிவிமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், ‘திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது. அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது’ என்று காரணம் சொல்லப்பட்டு அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
    அமைச்சர் பதவிக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் முதலமைச்சர் பதவி எத்தனை முக்கியமானது. மத்திய அரசு இதை சகித்துக் கொள்ளுமா? அதிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொஞ்சம் கெடுபிடியான மனிதர். சினிமா சங்கதிகளை எல்லாம் அவர் அனுமதிக்கவே மாட்டார். தவிரவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்குச் சவால் விடக்கூடிய காரியம் இது. ஆகவே வேண்டாம்.
    எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எல்லோருமே கிட்டத்தட்ட இதே ரீதியில்தான் ஆலோசனை சொன்னார்கள். எல்லோருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் எம்.ஜி.ஆர்.
    காலை எழுந்ததும் தொலைபேசியை எடுத்து சில எண்களை சுழற்றினார் எம்.ஜி.ஆர்.
    ‘பேப்பர் பார்த்தீர்களா? இண்டியன் எக்ஸ்பிரஸ்?’
    எதிர்முனையில் இருந்தவர் தட்டுத்தடுமாறி பேப்பரை எடுத்துப் பார்த்தார். அவர், முதல்நாள் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னவர்களுள் ஒருவர். செய்தித்தாளின்மீது வேகவேகமாகக் கண்களை அலைபாயவிட்டார். தட்டுப்பட்டது அந்தச் செய்தி.
    ‘மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தன்னுடைய கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய்.
    செய்தியைப் படித்த அத்தனை பேருமே அசந்துபோனார்கள். எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரைக்கும் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்த விஷயத்தைப் பற்றி எழுதி விஷயத்துக்கு தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தனர். பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தபோதும் இது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் அளித்த பதில்தான் மேலே இருப்பது.
    எப்படி நடந்தது இந்த அதிசயம்? யாருக்கும் தெரியவில்லை. படம் தொடர்பாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கின. அப்போது புகழ்பெறத் தொடங்கியிருந்த இளையராஜா, இசையமைக்கப் பணிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் படத்தின் தொடக்கவிழா ஜெகஜோதியாக நடந்தது. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் இளையராஜா.
    தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலுமே, எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் நடிப்பதுதான் முக்கியச் செய்தி. எம்.ஜி.ஆரின் தைரியத்தைப் பத்திரிகைகள் அனைத்தும் மாய்ந்து மாய்ந்து சிலாகித்துக்கொண்டிருந்தன. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு கலக்கு கலக்கியது எம்.ஜி.ஆரின் அறிவிப்பு.
    கருணாநிதி கொடுக்க விரும்பாத சுகாதாரத்துறையைத் தான் முதல்வரானதும் தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முதல் காயை வெட்டினார். தற்போது முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிப்பது வெட்டாட்டம்.
    திடீரென எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது.
    ‘படம் நிறுத்தப்படுகிறது.’
    வட்டமடித்துக் கொண்டிருந்த அத்தனை சர்ச்சைகளும் ஒரே நொடியில் அடங்கி ஒடுங்கிவிட்டன. ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என்று எவருமே கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே ராஜா. நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாது. குனிந்து குமுறவும் முடியாது.
    முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத நபர் அவர். மற்றவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத காரியங்களை அநாயாசமாகச் செய்து முடிக்கக்கூடியவர் அவர். ஆனாலும் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு முடிவை பகிரங்கமாக எடுப்பார். பத்தே நிமிடங்களில் அதைத் தலைகீழாக மாற்றுவார். ஆனால் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள்.
    எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்...(எம்ஜிஆரின் அரசியல் வாழ்வைப் பதிவு செய்யும் ‘வாத்யார்’ புத்தகத்தின் ஆசிரியர்.........

  9. #1608
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான*விவரம் ( 21/12/20 முதல்* 31/12/20 வரை )
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    21/12/20-சன் லைஃப்* -காலை 11 மணி -என் அண்ணன்*

    * * * * * * * *மீனாட்சி டிவி - இரவு 9 மணி - வேட்டைக்காரன்*

    * * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி -கன்னித்தாய்*

    22/12/20-சன் லைஃப் - மாலை 4 மணி - உழைக்கும் கரங்கள்**

    * * * * * * * *புது யுகம் - இரவு 7 மணி* - தாய்க்கு தலை மகன்*

    23/12/20-சன்* லைஃப் -காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*

    * * * * * * * பாலிமர் டிவி - இரவு* 11 மணி - தனிப்பிறவி*

    24/12/20-மெகா டிவி - காலை 9 மணி - படகோட்டி*

    * * * * * * * ஜெயா டிவி -காலை 10 மணி - இதய வீணை*

    * * * * * * முரசு -மதியம் 12 மணி /இரவு 7 மணி - நான் ஏன் பிறந்தேன்*

    * * * * * *மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - நல்ல நேரம்*

    * * * * * *ஜெயா டிவி -பிற்பகல் 1.30 மணி -குமரிக்கோட்டம்*

    * * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - நல்ல நேரம்*

    * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - தாயின்* மடியில்*

    * * * * * *சன் லைஃப் -மாலை 4மணி - தேடி வந்த மாப்பிள்ளை*

    * * * * * *ஜெயா மூவிஸ் -இரவு 7 மணி- ஆயிரத்தில் ஒருவன்*

    * * * * * புது யுகம் - இரவு 7 மணி - நீரும் நெருப்பும்*

    * * * * * *,மெகா 24- இரவு 9 மணி - நல்ல நேரம்*

    * * * * * மீனாட்சி டிவி - இரவு 9 மணி - விவசாயி*

    25/12/20-சன் லைஃப் - காலை 11 மணி - நம் நாடு*

    * * * * * * * பாலிமர் - இரவு 11 மணி - தொழிலாளி*

    26/12/20-சன்* லைஃப்- காலை 11 மணி - ஆசைமுகம்*

    * * * * * * * முரசு -மதியம் 12 மணி/இரவு 7 மணி - விவசாயி*

    27/12/20-மெகா 24- பிற்பகல் 2.30 மணி- தாய்க்கு தலை மகன்*

    28/12/20-சன் லைஃப் --காலை 11 மணி -* ராமன் தேடிய சீதை*

    * * * * * * *கே டிவி - பிற்பகல் 1 மணி - அவசர போலீஸ் 100

    * * * * * * பாலிமர் - பிற்பகல் 2 மணி - இன்று போல் என்றும் வாழ்க*

    29/12/20-முரசு -மதியம் 12 மணி /இரவு* 7 மணி - தாயை காத்த தனயன்*

    * * * * * * * பாலிமர் டிவி* - இரவு 11 மணி - நவரத்தினம்*

    *30/12/20-சன் லைஃப் -காலை 11 மணி -காவல்காரன்*

    * * * * * * * புது யுகம்* - இரவு 7 மணி -வேட்டைக்காரன்*

    31/12/20- வேந்தர் டிவி- காலை 10.30 மணி - குடும்ப தலைவன்*

    * * * * * * * சன் லைஃப் - காலை 11 மணி - ஆனந்த ஜோதி*

    * * * * * * * முரசு -மதியம் 12மணி/இரவு 7 மணி -அலிபாபாவும் 40திருடர்களும்** * * * * * * * * * *

    * * * * * * * *

  10. Likes orodizli liked this post
  11. #1609
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம் ஜி ஆர் திரை காவியங்கள்
    மறு வெளியீடு தொடர்ச்சி.............
    _________
    28/12/20 முதல் ஏரல்( நெல்லை மாவட்டம்) சந்திராவில் தர்மம் தலை காக்கும் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது

    தகவல் உதவி திரு ராஜா, நெல்லை.

    01/01/2021 முதல்
    _______
    கரூர் லட்சுமி ராம் அரங்கில் எங்க வீட்டு பிள்ளை தினசரி 3 காட்சிகள்

    தகவல் உதவி திரு.எஸ். குமார், மதுரை

    சென்னை எம்.எம். தியேட்டர் (தண்டையா ர் பேட்டை) எங்க வீட்டு பிள்ளை தினசரி 2 காட்சிகள்( மேட்னி/ மாலை)

    தகவல் உதவி திரு. ராமு, மின்ட்

    ஆலங்குடி (தஞ்சை மாவட்டம்) வி. சி. சினிமாஸ்- ஆயிரத்தில் ஒருவன்

    தகவல் உதவி திரு.சொக்கலிங்கம். திவ்யா பிலிம்ஸ்

  12. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  13. #1610
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி .................
    ---------------------------------------------------------------------------------------------------------------------
    ஆங்கில புத்தாண்டு தினத்தில் மேலும்* வெளியாகும் படங்கள் விவரம் (01/01/21)
    -------------------------------------------------------------------------------------------------------------------------

    -திருப்பூர் மணீஸ் அரங்கில் - அன்பே வா - வெற்றிகரமான 3 வது வாரம்*

    தகவல் : உதவி :திரு.மனோகரன், திருப்பூர் .

    மதுரை -பழனி ஆறுமுகா - நாடோடி மன்னன் - தினசரி 4 காட்சிகள்*

    தகவல் உதவி : திரு.எஸ்.குமார், மதுரை .

    காரைக்குடி -சிவம் - நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள்*

    தகவல் உதவி திரு.வி.ராஜா, நெல்லை .

  14. Thanks orodizli thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •