Page 154 of 210 FirstFirst ... 54104144152153154155156164204 ... LastLast
Results 1,531 to 1,540 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1531
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 33 வது நினைவு தினத்தை முன்னிட்டு* திரைக்காவியங்கள் மறுவெளியீடு*தொடர்ச்சி .....
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    ஞாயிறு (20/12/20)* முதல் திருச்செங்கோடு ஜோதியில் -எங்க வீட்டு பிள்ளை*தினசரி* 3 காட்சிகள் நடைபெறுகிறது .

    தகவல் உதவி* : திரு.ராமு,,மின்ட் , சென்னை.

    நாளை (23/12/20) முதல் திருப்பரங்குன்றம் லட்சுமியில்* குடியிருந்த கோயில்*தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது* .

    வெள்ளி முதல் (25/12/20)* மதுரை சென்ட்ரல் சினிமாவில் நினைத்ததை முடிப்பவன் தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .

    தகவல் உதவி ; திரு.எஸ். குமார், மதுரை .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1532
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #காதலிலும் #கண்ணியம்...

    #எம்ஜிஆர் அவர்கள் படத்தில் காதல் காட்சிகள் ‘ஸ்வீட்டாக’ இருக்கும்...
    நடிகை ஸ்ரீதேவியிடம் எடுத்த பேட்டி ஒன்றில் எம்.ஜி.ஆர் பற்றிக் கேட்டபோது இப்படிக் குறிப்பிட்டார். இதற்கு மேல் துல்லியமாக எம்ஜிஆர் படக் காதல்காட்சிகளை வருணிக்க இயலாது...

    அவர் ஒரு நடிகை என்பதாலும் சிவாஜி, என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் போன்ற மூத்த நடிகர்களோடு காதல் காட்சிகளில் நடித்தவர் என்பதாலும் எம்.ஜி.ஆர் படக் காதல்காட்சிகளை ‘ஸ்வீட்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

    இன்றைய படங்களில் வரும் காதல் காட்சிகளைக் குடும்பத்தோடு பார்க்கவே முடியாது. காதலை விட விரசம் தான் அதிகமாக இருக்கும்...காதல் என்னும் போர்வையில் "காதலைக் கேவலமாக்கி" வைத்திருப்பர்...

    ஆனால் புரட்சித்தலைவர் படங்களில் காதல் பாடல்களில் முத்தக்காட்சிகள் இலைமறைக் காயாக, பூடகமாக இடம் பெற்றன. அவற்றில் ஒரே ஒரு திரைக்காவியத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.

    பணக்காரக் குடும்பம்' படத்தில் ஒரு பாடல் முத்தத்தில் தொடங்கி அதன் உணர்வுகளை விளக்குவதாகத் தொடரும். ஆனால், முத்தமிடும் காட்சிப் பூடகமாகக் கூடக் காட்டப்பட்டிருக்காது...

    வெளியே ஒரே மழை. ஒரு மாட்டுவண்டியின் அடியே எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் மழைக்கு ஒதுங்கி உட்கார்ந்திருப்பார்கள். எம்ஜிஆர் சரோஜாதேவியை முத்தமிட நெருங்கி வருவார். அடுத்த காட்சியில் சரோஜாதேவி பாடத்தொடங்குவார்.

    “இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா? இப்படியென்று தெரிந்திருந்தால் தனியே வருவேனா? என்று கேட்கும்போது ‘இதற்காக’ என்பது ‘முத்தத்திற்காக’ என்பது பார்வையாளருக்குத் தெரிந்துவிடும்.

    “அதுவரை வந்தால் போதும் போதும்
    அடுத்தது என்னம்மா?

    ஆரத்தி மேளம் மணவறை கோலம்
    வருமா சொல்லம்மா?

    என்று கேள்வியாகவே பதில் அளிப்பார் ‘அதுவரை’ என்று குறிப்பிட்டது ‘முத்தம் மட்டும்’ பெற்றால் போதும் என்று சொல்வதாகப் பார்வையாளர் உணர்ந்துகொள்ளலாம்.

    சரோஜாதேவி இந்தப் பாட்டில் தான் பெற்ற முத்தத்தின் மகிழ்ச்சியை

    “அம்மம்மா இது புதுமை – நான்
    அறியாதிருந்த …… (சிரிப்பார்)
    பேச முடியாத பெருமை – இந்த
    இனிமை இனிமை இனிமை

    என்று இனிமையான முத்தத்தை ரசித்துப் பாடியிருப்பார்.

    இந்தப்பாட்டில் முத்தம் இடம் பெற்றதைத் சரோஜாதேவியின் முகபாவத்திலும் மகிழ்ச்சியிலும் ஊகித்து அறியலாம்.

    சண்டைக்காட்சியிலும் மனிதாபிமானம், காதலிலும் கண்ணியம்
    #அதான் #வாத்தியார்...bsm...

  4. #1533
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை
    சான்றோன் எனக் கேட்ட தாய் "


    இது தெய்வப் புலவர்
    திருவள்ளுவரின் திரு வாக்குகளில் ஒன்று ( திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் கூட பொய்யாமொழிப் புலவரை அய்யன் என்று அழைத்தது கிடையாது, ஆனால் இப்போது சில தறுதலைகள் போயும்போயும் கணேசனைப் போய் "அய்யன் " என்று அழைத்து திருவள்ளுவருக்கே தீராத களங்கத்தை உண்டு பண்ணி விட்டார்கள் )

    மேலே கண்ட குறள் வேறு யாருக்கும் பொருந்துகிறதோ இல்லையோ நம் தலைவருக்கு சிறப்பாகப் பொருந்தும்,

    இன்றைக்கு உலகெங்கும் உள்ள தமிழ்ப் பெருங்குடி மக்கள் பார்க்கும் படியாக தலைவரின் புகழ் பட்டொளி வீசிப் பறக்கிறது,

    தலைவரின் நாமத்தை உச்சரிக்காமல் தமிழ் நாட்டு அரசியலும் சரி, சினிமாவும் சரி ஒரு அடி கூட நகர முடியாது என்பதை ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்ச்சிகளின் மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

    சொர்க்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் "தெய்வத் தாய் " சத்யா அம்மையார் இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை பெற்றதற்காக தினம் தினம் பெருமையிலும், சந்தோஷத்திலும் திளைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பார்கள் என்பது உறுதி,


    இது ஒரு புறம் இருக்க தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி என்ற பெயரில் அசிங்கத்தையும், ஆபாசத்தையும் புகுத்தி தமிழ் நாட்டின் பாரம்பரிய பெருமைகளுக்கே உலை வைக்கும் ஆபாச குப்பைகள் தொலைக்காட்சிகளில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது,

    ஒரே அறையில் இளம் பெண்களையும், இளைஞர்களையும் சேர்த்து அடைத்து வைத்துக் கொண்டு அவர்கள் அடிக்கும் ஆபாச கூத்துகளை " பிக் பாஸ் " என்ற பெயரில் களியாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்,

    இந்த மாதிரி நிகழ்ச்சி களின் விளைவுதான் பாசத்துக்கும், பண்புக்கும் பெயர் போன நம் தமிழ் மண்ணில் எதுவுமே தவறில்லை என்னும் ரீதியில் முறை தவறிய உறவுகளும்,
    "பிறன் மனை கவரல்" போன்றவைகளும் சர்வ சாதாரணமாக நடந்தேறுவதை ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களின் மூலம் அறியும் போது
    என் இனிய தமிழ் மண்ணே நீ எங்கே சென்று கொண்டிருக்கிறாய் என்று கதறத் தோன்றுகிறது ( இந்த மாதிரி அசிங்கங்களை பார்க்கவா முண்டாசுக் கவிஞன்
    பாரதியும், தந்தை பெரியாரும், முத்துலட்சுமியும் அரும்பாடு பட்டு பெண் விடுதலையை பெற்றுத் தந்தார்கள் என்பதை நினைக்கும் போது ஒரு மானமிகு தமிழனாக வெட்கித் தலை குனிகிறேன் )

    இந்த " பிக் பாஸ் " நிகழ்ச்சியில் காமெடி என்ற பெயரில் தலைவரை குண்டடி பட்டதற்குப் பிறகு உள்ள குரலில் பேசி அசிங்கப்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்

    மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் கொஞ்ச நாளைக்கு முன் இதே தொலைக்காட்சியில் நடிகர் கணேசனை இப்படி கிண்டல் செய்ததும் வரிந்து கட்டிக் கொண்டு " சிவாஜி சமூக நலப் பேரவை " என்னும் ஒரு அல்லக்கை அமைப்பும், நடிகர் பிரபுவும் கண்டனம் தெரிவிக்கவும் உடனே தொலைக்காட்சி நிர்வாகம் இனி இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடக்காது என்று உறுதி கூறி வருத்தமும் தெரிவித்தார்கள்,

    ஆனால் நம் உயிருக்கும் மேலான தலைவனை இப்படி கேலி செய்வதை அதிகார வர்க்கம் உட்பட அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது மனசெல்லாம் கன்றிப் போய் விடுகிறது,

    ஒரே ஒரு ஆறுதலாக " அனைத்துலக எம்ஜிஆர் பொதுநல சங்கத்தின் " பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் இந்த பிரச்சினையை தனி ஒரு மனிதனாக கையில் எடுத்து விஜய் டிவி க்கு இனிமேலும் இது தொடரக்கூடாது என்னும் வேண்டுகோளையும் வைத்து விட்டு மீறினால் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்,

    அவருக்கு என் மனமார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்,


    என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் தலைவர் குண்டடி படுவதற்கு முன்பாக கோயிலின் வெண்கல மணி போல முழங்கும் "நாடோடி மன்னன்,
    மதுரை வீரன், மன்னாதி மன்னன் " போன்ற படங்களில் பேசும் வசனங்களைப் போல இவர்களால் மிமிக்ரி செய்ய முடியுமா?
    அல்லது " விக்கிர மாதித்தன் " படத்தில் சித்தன் வேடத்தில் வந்து மன்னராக இருக்கும் திருப்பதி சாமி அவர்களிடம் வட நாட்டுப் பெருமைகள் முதல் தென்னாட்டு பெருமைகள் வரை பேசி இறுதியில் நம் தமிழ் நாட்டுப் பெருமையையும் ஒரே மூச்சில் பேசி அசத்துவாரே அதே போல் பேச முடியுமா?

    குண்டடி பட்ட குரலை கேலி செய்யும் முறை கெட்ட நாய்களா ஒன்றே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்,

    இதே மாதிரி ஒரு நிலைமை சிவாஜிக்கு
    ஏற்பட்டிருந்தால் என்ன கதி ஏற்பட்டிருக்கும் என்பதை கற்பனையில் கூட உங்களால் எண்ணிப் பார்க்க முடிகிறதா?

    கணேசனின் திரையுலக வாழ்வே அஸ்தமனம் ஆகியிருக்கும்,

    ஆனால் என் தலைவன் அப்படி எதையும் நினைக்காமல் தன்னையும், தமிழ் நாட்டு மக்களையும் மட்டும் நம்பி, அழுது புலம்பாமல் என்ன சொன்னார் தெரியுமா?

    "இந்த சிதைந்து போன என் குரலுடனே மக்களை சந்திக்கிறேன், அவர்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன், இல்லையென்றால் இந்த சினிமா உலகத்துக்கே முழுக்கு போட்டு விடுகிறேன் "

    ஆனால் நடந்தது என்ன?

    தமிழ் நாட்டு ஒட்டு மொத்த தாய்க்குலமும், பொது மக்களும் சொன்ன ஒரே வார்த்தை இதுதான்

    " எங்கள் செல்வமே நீ பேசாவிட்டாலும் பரவாயில்லை, உன் தங்க முக தரிசனம் ஒன்றே எங்களுக்கு போதும் என்று சொல்லாமல் சொல்லி " அரச கட்டளை " க்கு முதல் வெளியீட்டில் மிதமான வெற்றியைக் கொடுத்து விட்டு அடுத்து வந்த " காவல் காரன் " படத்துக்கு அது வரை தமிழ் திரையுலக வரலாறு காணாத வசூலையும், திக்கு முக்காடிப் போகும் வரவேற்பையும் கொடுத்ததைப் பார்த்து நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு காத்திருந்த நாய்கள் எல்லாம் பழையபடி குப்பை பொறுக்க வேண்டியதானது,

    முதன் முதலில் பெண்களுக்கு என்று தனிக் காட்சி போடப்பட்ட பெருமையையும் பெற்றார் தமிழர்களின் "காவல் காரன் "

    அந்த சமயத்தில் நடந்த ஒரு திரையுலக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரு. மெய்யப்ப செட்டியார் அவர்களிடம் திரு. ஆர். எம். வீரப்பன் அவர்கள் மிகவும் பணிவுடன் நான் ஒரு சிறிய தயாரிப்பாளர் என்ற போது செட்டியார் அவர்கள் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?

    நீங்களா சிறிய தயாரிப்பாளர்?
    இன்றைக்கு எங்கு பார்த்தாலும் " காவல் காரன் " ஓடும் ஓட்டத்தைப் பார்த்தால் எங்களை எல்லாம் விட நீங்களல்லவா பெரிய தயாரிப்பாளர் "

    இதே மாதிரிதான் 1959 இல் "இன்பக் கனவு " நாடகத்தில் நடித்த போது ஏற்பட்ட கால் முறிவின் போதும் இத்தோடு இவன் திரையுலக வாழ்க்கை முடிந்தது என்று மனப்பால் குடித்த நாதாரி கழுதைகள் எல்லாம் கரியை வாரி முகத்தில் பூசிக் கொண்டது, ( கண்ணதாசன் கூட ரொம்ப இழிவாகவெல்லாம் பேசினார், கடைசியில் தலைவர் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல இடி முழக்கமென வந்ததும் அனைவரும் சரணாகதி ஆன கதை அனைவரும் அறிந்ததே,

    பிரான்ஸ் நாட்டில் பிறந்த லூயிஸ் பிரெய்லி என்னும் சிறுவன் தன் மூன்றாவது வயதில் ஒரு ஊசியை வைத்து விளையாடிய போது எதிர்பாராத விதமாக ஒரு கண்ணில் ஊசி குத்தியதால் ஒரு கண்ணின் பார்வை பறி போனது, சரியான மருத்துவம் செய்யாததால் தொற்று ஏற்பட்டு அடுத்த கண்ணும் பறி போனது,

    தன் இரண்டு கண்களை பறிகொடுத்த நிலையிலும் வளர வளர அந்த குழந்தை சும்மா இருக்கவில்லை மாறாக " ROYAL INSTITUTE OF BLIND YOUTH " என்னும் பார்வையற்ற குழந்தைகள் பள்ளியில் தன் பத்தாவது வயதில் சேர்க்கப்பட்ட போது அந்த பள்ளியின் நிறுவனர் VALANTINE HAUY என்பவர் புத்தகங்களை மேடாக்கி பார்வையற்ற மாணவர்கள் தொட்டு படிக்கும் படியாக புத்தகங்களை உருவாக்கினார்,

    ஆனால் அது மிகவும் கடினமாக இருந்ததால் அந்த நேரத்தில் ராணுவத்தினர் ரகசிய தகவல்களை இருட்டில் பரிமாற வசதியாக சார்லஸ் பார்பியர் என்னும் ராணுவ தளபதி night writing என்னும் முறையை தயாரித்து அறிமுகப் படுத்தியிரு ந்தார்,

    அதை விளக்குவதற்காக பார்வையற்ற மாணவர்கள் பள்ளிக்கு வந்து அந்த முறையை அறிமுகப்படுத்தி விட்டுப் போனார்,

    ஆனால் 12 செவ்வக புள்ளிகள் கொண்ட அந்த முறையும் அவ்வளவு சுலபமாக இல்லை,

    ஆனால் நம் பிரெய்லி சும்மா இருந்து விட வில்லை, மாறாக இதை விட சுலபமாக புத்தகங்கள் உருவாக்க முடியுமா என்று யோசித்து தன் பதினைந்தாவது வயதில் இப்போது உலகெங்கிலும் பார்வையற்ற மாணவர்கள் படிக்கும்
    6 செவ்வக புள்ளிகள் கொண்ட " பிரெய்லி "
    முறையை உருவாக்கி னார் ( இதில் ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த method அவர் உயிரோடு இருந்த வரை அங்கீகரிக்கப் பட வில்லை, அவர் இறந்த இரண்டு வருடங்கள் கழித்துதான் ஏற்றுக்கொள்ளப்பட்டது )

    எந்த சோதனை வந்தாலும் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுவதை விட அதை எதிர்த்துப் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை சிறுவன் லூயிஸ் பிரெய்லியும் நிரூபித்துக் காட்டினான்,


    அதே போல் நம் தலைவரும் எந்த சோதனை வந்த போதும் துவண்டு போனவர் அல்ல, மாறாக எல்லாவற்றையும் எதிர்த்துப் போராடி நமக்கெல்லாம் தன்னம்பிக்கை, தைரியம் இவைகளை ஊட்டிய ஒப்பற்ற மாபெரும் தலைவன்,

    இப்படிப்பட்ட ஒரு தலைவனுக்கு ஒரு பக்தனாய் இருப்பதில் பெருமிதம் அடையும்


    தலைவரின் பக்தன்,


    ஜே.ஜேம்ஸ் வாட்....(J.JamesWatt)


    தலைவரின் நினைவு நாள் வருவதால் திரை சம்பந்தமான பதிவை தவிர்த்திருக்கிறேன் !

  5. #1534
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் பொன்மனம் தனி இயக்கம் கண்ட நேரம் 1972...இல்...

    தலைவர் நடிப்பில் நடிகர் அசோகன் அவர்கள் தயாரிப்பில் நேற்று இன்று நாளை தயார் ஆகி கொண்டு இருந்த நேரம்.

    அரசியல் பரபரப்புக்கு இடையே பெங்களூர் அருகில் ஒரு மலை பகுதியில் படத்தின் பாடும் போது நான் தென்றல் காற்று பாட்டின் ஒரு பகுதி எடுத்து முடிந்து மறுநாள் பாடலின் தொடர்ச்சி எடுத்து முடிக்கப்பட வேண்டிய கட்டாயம்...

    காலை 11 மணிக்கு மேலே இயக்குனர் நீலகண்டன் தயார் ஆகி தலைவர் வந்து பாட்டில் உடன் நடிக்க வேண்டிய ராஜஸ்ரீ யும் தயார்.

    வெயில் கொளுத்த ஆரம்பிக்க பாறைகள் நடுவே பட குழு காத்திருக்க நம் மன்னவர் எதுவும் சொல்லாமல் ஒரு இடத்தில் அமர்ந்து இருக்க என்ன ஷாட்க்கு போலாமா என்று இயக்குனர் கேட்க.

    ஒன்றரை மணி நேரம் ஆகிவிட்டது....அனைவரும் வெயில் தாங்காமல் தவிக்க படத்தை பற்றிய வதந்திகள் வர துவங்கி இருந்த நேரம்...

    தலைவர் வந்த உடன் சூடாக ஆரம்பிக்கும் படப்பிடிப்பு இவ்வளவு தாமதம் என்றால் இனிமேல் இன்று காட்சிகள் எடுக்க அவருக்கு மனம் இல்லை போல என்று சிலர் எண்ண..

    திடீர் என்று வாங்க வாங்க காட்சி எடுக்க போலாம் என்று தலைவர் துள்ளி கிளம்ப ராஜஸ்ரீ இயக்குனர் தயாரிப்பாளர் அசோகன் வியக்க.

    தலைவர் நீலகண்டன் அவர்கள் இடம் நேற்று இந்த இடத்தில் தானே விட்டோம்...இப்போ இங்கே ஆரம்பிப்போம் நேற்று காட்சி எடுத்து முடிக்கும் போது சூரியன் அங்கே உச்சயில் இருந்தது.

    என் நிழல் காலுக்கு கீழே பட்டது...இன்று சூரியனின் நிழல் என் காலுக்கு கீழே இருந்து தொடர்ந்து காட்சியை தொடரவே காத்து இருந்தேன்...இதை நீங்கள் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

    அதுவரை காத்து இருந்தேன்....தொடர்ந்து பாடல் காட்சிகள் அருமையாய் எடுத்து முடிக்க பட உடன் நடித்த ராஜஸ்ரீ என்ன சார் நிழலில் கூடவா தொடர்காட்சி அமைப்பு வேண்டும் என்று கேட்க.

    அப்படியில்லை....எனது ரசிகர்கள் என் நிழலை கூட பின் பற்றி வருவார்கள்...காட்சி தொடர்பு அறுந்து விட்டால் என்ன இப்படி பண்ணி விட்டார் என்று சொல்லி விட கூடாது அவர்கள்...

    அவர்கள் கொடுக்கும் படம் பார்க்கும் பணத்தை வைத்து தான் நாம் இன்று இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறோம்..

    அவர்களை ஒரு போதும் ஏமாற்ற விரும்ப மாட்டேன் என்கிறார் தலைவர்.

    என்ன ஒரு அர்ப்பணிப்பு துறை சார்ந்த தொழில் நுட்பத்தில்..

    அதனால் தான் நாம் அவரை தலை ஆக இன்று இந்த வினாடி வரை கருதி கொண்டு இருக்க... அவர் நம்மை உடலாக உயிர் ஆக கருதி விண்ணில் இருந்து நம்மை பார்த்து கொண்டு இருக்கிறார்.

    என்று நம்பும் உங்களின் ஒருவன் ஆக உங்களில் உணர்வாக....தொடரும்..
    வாழ்க தலைவர் புகழ்.
    நன்றி.நன்றி நன்றி...

    தன்னை சுட்டு எரித்த சூரியனை தொடர்ந்து அஸ்தமனம் ஆக்கிய வள்ளல் புகழ் காப்போம்.....

  6. #1535
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் தனக்களிக்கப்பட்ட சிசிக்சைக்கான செலவினை தனது இயக்கம், கட்சிக்காரர்கள் மற்றும் அன்புள்ளம் கொண்ட பொதுமக்களிடம் இருந்து பெற்று தமிழக அரசிடம், அரசு செலவு செய்த தொகையான ரூ.96 இலட்சத்து 90 ஆயிரத்து 376ஐ 30-06-1985 ஆம் தேதியன்று அரசுக்கு திருப்பிச் செலுத்தினார்.
    _____________________________

    #13.03.1985ஆம் தேதி எம்ஜிஆர் கீழ்கண்டவாறு அறிவிப்பினைச் செய்து தன்னுடைய சிசிக்சைக்கான தொகையை திரட்டினார்.

    #எனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவை ஒட்டி சென்னையிலும், அமெரிக்காவிலும் செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கும், மருத்துவர்கள், உதவியாளர்கள் ஆகியோரின் பயணங்களுக்கும், பிற வகைகளுக்கும் ஆன செலவுகளை அரசே ஏற்று செய்துள்ளது.

    #முதலமைச்சருக்குரிய செலவுகளை அரசே ஏற்பது முறையானதுதான் என்றாலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது தமக்களிக்கப்பட்ட சிசிக்சைக்கான செலவுகளை, மக்களிடம் இருந்து பெற்று, கழகத்தின் வாயிலாக அரசுக்குச் செலுத்துமாறு ஏற்பாடு செய்தார்கள்.

    #பேரறிஞர் அண்ணா அவர்களின் அந்த சீரிய முன்னுதாரணத்தைப் பின்பற்றும் வகையிலும், எனக்கு மருத்துவ சிசிக்சை மற்றும் அதன் தொடர்பாக ஏற்பட்ட செலவுகளை அரசின் மீது சுமத்த நான் விரும்பாத காரணத்தாலும், இவ்வகையில் ஏற்பட்ட செலவுகளைக் கணக்கிட்டு அத்தொகையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செலுத்திவிட வேண்டும் என நான் முடிவு செய்துள்ளேன்.

    #மக்கள் என் மீது கொண்டுள்ள அன்பு, செயல் வடிவத்தில் நிரூபிக்கப்படவும் இது ஒரு வாய்ப்பு என்கிற வகையில், எனக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவை ஈடுகட்ட மக்களை அணுகுவது என்கிற தலைமைக் கழகத்தின் முயற்சிகளுக்கு அனைத்து ஒத்துழைப்பும் தருமாறு தமிழக மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    அன்பன்.
    எம்.ஜி.ஆர்,
    சென்னை,
    நாள்: 13.03.1985.......rjr...

  7. #1536
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் " திரையுலக சாதனைகள் " புரட்சித்தலைவரின் அரசியல் பிரவேசத்தால் நடிக்க முடியாமல் நின்று போன பல படங்களின் பெயர்கள் மட்டும்.

    60 வயதில் ஒரு நடிகர் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த படங்களின் எண்ணிக்கை 25ஐ தாண்டுகிறது என்றால், இதுவும் ஒரு புரட்சி ! ஒரு உலக, கின்னஸ் சாதனையே !*

    இந்த படங்கள் அனைத்தும் புரட்சித்தலைவரின், 1972க்கு பிறகு தீவிர அரசியல் பிரவேசத்தால், கைவிடப்பட்ட படங்கள் என்பதை திர்யின் பார்வையாளர்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன் !*

    துரதிருஷ்டம் செய்த நம் கண்கள், திரையில் காண முடியாத, சாதனைகளின் சிகரம் பொன்மனசெம்மலின் பொற்காவியங்கள் :

    1. நம்மை பிரிக்க முடியாது :

    நாஞ்சில் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படவிருந்த படம். ஒரு சர்க்கஸ் காரியின் சாகஸமிக்க வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு அமைந்த இந்த படத்தில் தலைவருக்கு ஜோடியாக ஜெயலலிதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. உரையாடல் சொர்ணம் எழுத இயக்க்விருந்தது ப. நீலகண்டன்.*

    2. மரகத சிலை :

    ஆடலழகி ஒருத்தியின் வாழ்க்கையை மையமாக கொண்டு, குமரி பிலிம்ஸ் தயாரிப்பில், மக்கள் திலகத்துடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள் மஞ்சுளா மற்றும் லதா. வெளி நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற திட்டமிட்டிருந்தனர்.

    3. வாழு வாழ விடு :

    எம். ஜி. ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த இப்படத்திலும் லதா மற்றும் மஞ்சுளா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். விளம்பரத்துடன் .நின்று போன படம்.

    4. ஆண்டவன் கட்டிய ஆலயம்*

    எம். ஜி. ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த மற்றொரு படம் இது. தத்துவக் கருத்துக்களை உள்ளடக்கிய இப்படத்தில் நாயகியர் முடிவாகாத நிலையில், படம் தயாரிப்பது கைவிடப்பட்டது.

    5. “ கொடை வள்ளல்"*

    திருமகள் என்ற படத்தை தயாரித்தளித்த கோவை கோவிந்தராஜன், தனது நந்தகுமார் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்படவிருந்த அடுத்த படம் : “ கொடை வள்ளல்" இப்படத்தில் ஒன்பது மாறுபட்ட கதா பாத்திரங்களில் பொன்மனச்செம்மல் நடிப்பதாக இருந்தது. புரட்சித் தலைவருடன், லதா, மஞ்சுளா உட்பட 9 நாயகியர் நடிக்கவிருந்தனர். உரையாடல் ஏ.கே. வில்வம் எழுத ப நீலகண்டன் இயக்க விருந்தார்.

    6. தந்தையும் மகனும்

    தேவர் பிலிம்ஸ் சார்பில், எம். ஏ. திருமுகம் இயக்கத்தில், எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பத்மினியும், கே. ஆர். விஜயாவும் நடிக்க விருந்தனர். " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது

    7. மக்கள் என் பக்கம் :

    தயாரிப்பாளர் - இயக்குனர் என். எஸ். மணியம் மற்றும் முசிறிப்புத்தன் இனைந்து எம். எம். மூவிஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த இப்படத்தில் ஜோடியாக நடிக்க நடிகைகள் முடிவாக இருந்த நிலையில் புரட்சித் தலைவரின் அரசியல் பிரவேசத்தால் கைவிடப்பட்டது. இயக்கம் என். எஸ். மணியம்.

    8. நானும் ஒரு தொழிலாளி :*

    சித்ரயுகா கண்ணையன் தயாரிப்பில், புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில், மக்கள் திலகமும், நடிகை லதாவும் நடித்த ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டது. .

    9. சமூகமே நான் உனக்கே சொந்தம் :

    லட்சுமி பிலிம்ஸ் சார்பில், இயக்குனர் கே. ராகவன் இயக்கத்தில், லதா ஜோடியாக மக்கள் திலகம் சில காட்சிகளில் நடித்தார். வழக்கம் போல் இந்த படமும் புரட்சித் தலைவரின் அரசியல் பிரவேசத்தால் கைவிடப்பட்டது.

    10. தங்கத்திலே வைரம் :*

    இயக்குனர் கே. எஸ். ஜி. என்றழைக்கப்படும் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், சித்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட விருந்த திரைப்படம். மக்கள் திலகத்துடன் முதன் முறையாக கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இணைந்து தரவிருந்த படம் இது. திரு. கே. எஸ். கோபாலகிருஷ்ணன், நடிகர் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து "குலமா குணமா", நடிகர் ஜெமினி கணேசனை வைத்து "பணமா பாசமா", நடிகர் ஜெய்ஷங்கரை வைத்து "உயிரா மானமா" போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது.*

    11. புரட்சிப்பித்தன் :

    ரங்கநாயகி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் டி. ஆர். ராமண்ணா அவர்கள் தயாரிக்க விருந்த இப்படத்தில் பொன்மனச்செம்மல் புதுமையான கதா பாத்திரத்தில் தோன்றும் காட்சி சில படம் பிடிக்கப்பட்டது. ஜோடியாக நடிகை லதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். " தினத்தந்தி " நாளிதழில் முழு பக்க விளம்பரத்துடன் வெளிவந்தது.*

    12. மண்ணில் தெரியுது வானம் :

    உதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இதயம் பேசுகிறது மணியனும், வித்வான் வே. லட்சுமணனும் இணைந்து தயாரிக்க விருந்த இப்படத்தில் நடிகை லதா அல்லது புதுமுக நடிகை ஜோடியாக நடிக்கலாம் என்று பேசப்பட்டது.

    13. தியாகத்தின் வெற்றி (முன்னர் வைக்கப்படிருந்த பெயர் " அமைதி ")*

    மக்கள் திலகம் பங்கு பெறும் சில காட்சிகள், ஜோடியாக நடிக்கும் லதாவுடன் சேர்ந்து எடுக்கப்பட்டன. கே. சங்கர் இப்படத்தினை இயக்குவதாக இருந்தது.*

    14, உங்களுக்காக நான் :*

    செந்தில் மூவிஸ் சார்பில் ஜெமினி கணேசன் - பத்மினி நடித்த "தேரோட்டம்" படத்தினை தயாரித்த வி. டி. அரசு தனது அடுத்த தயாரிப்பாக புரட்சித் தலைவர் ராணுவ கேப்டனாக நடிக்கும் "உங்களுக்காக நான்" படத்தை தயாரிக்க விருந்தார்.*

    15. எல்லைக்காவலன் :*

    விளம்பர அறிவிப்புடன் நின்று போன மற்றொரு படம் இது. இந்த படத்தினையும் எம். ஜி. ஆர். பிச்சர்ஸ் சார்பில் தயாரிக்க திட்டமிருந்தனர்.*

    16. கேப்டன் ராஜு :

    " இன்று போல் என்றும் வாழ்க " காவியத்தை தயாரித்த சுப்பு புரொடக்ஷன்ஸ் தங்களது அடுத்த தயாரிப்பாக " கேப்டன் ராஜு" படத்தை தயாரிக்கவிருந்தனர். இதற்கான ஆதாரபூர்வமான அறிவிப்பும் வெளியாயிற்று. தியேட்டர் பாட்டு புத்தகத்தின் பின் அட்டையில், விளம்பரமும் செய்திருந்தனர் சுப்பு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர்கள் திரு. கருப்பையா மற்றும் வி. டி எஸ். லஷ்மண் ஆகியோர்.*

    17. எங்கள் வாத்தியார் :*

    " என் அண்ணன் " வெற்றிக்காவியத்தை தொடர்ந்து வீனஸ் பிச்சர்ஸ் சார்பில் திரு. கோவிந்தராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி தயாரிக்கவிருந்த அடுத்த படம் " எங்கள் வாத்தியார் ". இதில், மக்கள் திலகத்துடன் நடிகை ஜெயலலிதா தோன்றும் சில வெளிப்புறப்படப்பிடிப்பு காட்சிகள் (வைகை அணை என்று கருதுகிறேன்) படமாக்கப்பட்டன.*

    18. கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு :*

    " உலகம் சுற்றும் வாலிபன் " வெற்றிக் காவியத்தை தொடர்ந்து, எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் சார்பில் அடுத்த தயாரிப்பாக " கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு" என்ற படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டது. இந்த படத்தில், முதன் முறையாக, மக்கள் திலகத்துடன் நடிக்க நடிகை ஜெயசுதா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் என்பது பலரும் அறியாத செய்தி.*

    19. கங்கை முதல் கிரெம்ளின் வரை :

    இந்திய - ஆஸ்திரேலிய கூட்டு தயாரிப்பில் உருவாக விருந்த படம் இது. இது குறித்து மேற்கொண்டு ஏற்பாடுகளை செய்ய ஆஸ்திரேலிய பிரபல இயக்குனர் ஜான் மெக்காலம் சென்னை வந்து நம் ஒப்பற்ற இதய தெய்வம் புரட்சித்தலைவரையும் சந்தித்து பேசினார். செய்தித்தாள்களில் இது பற்றிய செய்தி பிரசுரமானதில் இருந்து தமிழ் திரை உலகினர் மத்தியில் ஒரு புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.*

    20. நினைத்ததை முடிப்பவன் காவியத்தை தொடர்ந்து, ஓரியண்டல் பிக்சர்ஸ் நிறுவனத்தாரின் அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நம் மக்கள் திலகமே ! விளம்பர அறிவிப்புக்களுடன் நின்று போன படங்களில் இதுவும் ஒன்று.*

    21. அண்ணா பிறந்த நாடு :*

    ஜெயப்பிரதா கம்பைன்ஸ் சார்பில், ஒப்பனையாளர் பீதாம்பரம் (இயக்குனர் பி. வாசு அவர்களின் தந்தை) தயாரிப்பில் உருவாகவிருந்த இப்படத்தின் விளம்பரத்துக்காக புரட்சித் தலைவர் அவர்கள், வழக்கறிஞர் வேடத்தில் அருமையான ஸ்டைலான போஸ் அளித்து அசத்தியிருநத்தார். அப்போதைய நாளிதழ்களில் இந்த புகைப்படம் வெளிவந்து, பரபரப்பை ஏற்படுத்தியது.*

    22. நல்லதை நாடு கேட்கும் :*

    பிரபல மேக்கப்-மேன் நாராயணசாமி அவர்கள் தயாரிப்பில், இயக்குனர் கர்ணன் இயக்கத்தில், நடிகை பத்மபிரியா ஜோடியாக நடிக்க சில காட்சிகள் டமாக்கப்பட்டன. பின்னர், இந்த படம் திரு. ஜேப்பியார் அவர்களால் தொடரப்பட்டு, வெள்ளித்திரைக்கு வந்தது.*

    23. ஆளப் பிறந்தவன் :

    விளம்பரத்துடன் கை விடப்பட்டது. எம். ஜி. சக்கரபாணி அவர்களுடன் வேறு ஒரு நிறுவனம் இணைந்து தயாரிப்பதாக விருந்தது. மக்கள் தலைவரின் அரசியல் பிரவேசத்தால், இந்த படமும் தயாரிப்பிலிருந்து கைவிடப்பட்டது.*

    24. இதுதான் பதில் :

    எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய இரண்டு பாடல்களுடன் பதிவு செய்யப்பட்ட இப்படம், புரட்சித் தலைவரின் அரசியல் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி, அன்றைய ஆளுங்கட்சினருக்கு பதிலடியாக, சவாலாக திகழவிருந்தது. பொன்மனசெம்மலின் தீவிர அரசியல் ஈடுபாடு காரணமாக தயாரிப்பு பின்னர் கைவிடப்பட்டது.*

    25. உன்னை விட மாட்டேன் :

    சிவாஜி கணேசன் நடித்த இளைய தலைமுறை படத்தை தயாரித்த ஜி. கே. தர்மராஜன் தனது அடுத்த படத்தை ஜி. கே. பிலிம்ஸ் சார்பில் புரட்சி தலைவரை வைத்து தயாரிக்க திட்டமிருந்தார். இப்படத்துக்காக, இசை ஞானி இளைய ராஜா இசையமைப்பில் ஒரு பாடல் பதிவானது. இதில் மக்கள் திலகத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை சத்யகலா.

    26. வேலுத்தேவன் :*

    மோகன் புரொடக்ஷன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் மோகன் ராம் அவர்கள் தயாரிப்பதாக இருந்த படம் "வேலுத்தேவன்". இப்படத்துக்காக, " தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் " என்று மக்கள் திலகம் பாடும் பாடல் காட்சியும் எடுக்கப்பட்டது. இந்த காட்சி, பின்னர், தனது தயாரிப்பில் உருவான " காலத்தை வென்றவன் " காவியத்தில் இடம் பெறச் செய்தார்.*

    27. இமயத்தின் உச்சியிலே :

    விளம்பர அறிவிப்புடன் நின்று போன படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.*

    28. " பைலட் ராஜா "*

    தயாரிப்பாளர் - இயக்குனர் ஏ. பி. நாகராஜன் அவர்களின் சி. என். வி. மூவிஸ் சார்பில் " நவரத்தினம் " காவியத்தை தொடர்ந்து, " பைலட் ராஜா " என்ற பெயரில் மக்கள் திலகத்தை வைத்து தயாரிக்கவிருந்தார். விளம்பர அறிவிப்புடன் நின்று போனது.

    29. அண்ணா நீ என் தெய்வம் : நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த "எங்கா மாமா" படத்தினை அடுத்து, ஜே. ஆர். மூவிஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அண்ணா நீ என் தெய்வம், மக்கள் திலகத்தின் நடிப்பில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர், நடிகர் திரு.பாக்கியராஜ் அவர்கள் தொடர்ந்து "அவசர போலிஸ் 100" என்ற புதிய தலைப்பிட்டு நடித்து வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தார்.*

    குறிப்பு : மேற்கண்ட படங்களை தவிர,*

    1. அப்போதைய பிரபல விநியோகஸ்தர் சுந்தர்லால் நஹாதா அவர்கள் தனது நஹாதா புரொடக்ஷன்ஸ் சார்பில் மக்கள் திலகத்தை வைத்து படம் ஒன்றை தயாரிக்க அவரை அணுகி, ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், அன்றைய ஆட்சியாளர் கலைஞர் திரு. கருணாநிதி அவர்களின் மிரட்டலால் (நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ என்பது தெரியவில்லை) இத்திட்டம் கைவிடப்பட்டது.*

    2. அதே போன்று, இந்தி மொழியில் வெற்றி பெற்ற, நடிகர் ராஜேஷ் கன்னா நடிப்பில் உருவான "பேவார்ச்சி" என்ற திரைப்படத்தினை தழுவி தமிழில் மக்கள் திலகத்தை வைத்து "சமையல் காரன்" என்ற தலைப்பில், ஏ. ஏல். சீனிவாசன் அவர்கள் படம் தயாரிக்கவிருந்தார். ஆட்சியாளரின் மிரட்டலால் கைவிடப்பட்ட படங்களில் இதுவும் அடக்கம்.*

    3, நம் இதய தெய்வம் 1972ல் தனிக்கட்சி தொடங்கும் முன்பு, ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ. வி. எம். மெய்யப்ப செட்டியார் அவர்கள், அன்பே வா வெற்றிக்காவியத்தை தொடர்ந்து, மக்கள் திலகத்தை கதாநாயகனாக கொண்டு புதிய படம் ஒன்றை தயாரிக்க முற்பட்டார். இப்படத்தில் அவருக்கு இணையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகை ஜெயலலிதா. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களுடன் கொண்ட நல்லுறவு காரணமாகவும், தொடர்ந்து தயாரிப்பில் ஈடு பட்டால் ஒரு வேளை கலைஞர் கருணாநிதி அவர்களின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாகவும், செட்டியார் அவர்கள் இந்த பட திட்டத்தை கை விட்டார்.*

    4. மேற்கூறிய படங்களில் சில பாடல் காட்சிகளுடனும், சில நடிப்புக் காட்சிகளுடனும், சில விளம்பர அறிவிப்புக்களுடனும், தொடர முடியாமல், நின்று போயின.*.........gdr...

  8. #1537
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #dedicated #to #my #beloved #god...

    இறப்பு என்பது சாதாரண மனிதர்களுக்குத்தான்...
    மகான்களுக்கு அல்ல...

    புத்தர், ஏசு, நபிகள் நாயகம், ஷீரடி பாபா, ஸ்ரீ ராகவேந்திரர் இவர்களெல்லாம் மரணத்தை வென்ற மகான்கள்...
    இவர்களின் வரிசையில் நம் இதயதெய்வம் பொன்மனச்செம்மலுமுண்டு...

    பொன்மனச்செம்மலின் ஆன்மாவானது, அவரது பூத உடலைத் துறந்ததுமே ஸ்தூல வடிவில், தம்மை பக்தியோடு நினைப்பவர்களை இன்றளவில் அருளிக் கொண்டு தான் இருக்கிறது...

    அத்தகு புண்ணியநாளில் அன்னாரின் பெருமைகளைப் போற்றுவோம்...
    --------------------------------------------------------------------
    பழனி ஜி.பெரியசாமி எழுதிய,
    இதய ஒலி - என் வாழ்க்கை அனுபவங்கள், என்ற நுாலிலிருந்து: எம்ஜிஆரின் கண்ணியத்துக்கு ஓர் உதாரணம்:

    நான், அப்போது அமெரிக்காவில் வசித்து வந்தாலும், தமிழ் மீது கொண்ட காதலால், 'வாழும் தமிழ் உலகம்' எனும் பத்திரிகையை நடத்தி வந்தேன்.
    வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களிடையே பிரபலமாகி இருந்தது, அப்பத்திரிகை. ஆனால், நான் நடத்தி வந்த பத்திரிகையில், எம்.ஜி.ஆர்., மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோரின் வெற்றி செய்தியை வெளியிட வேண்டும் என நினைத்து, அதற்காக, ஒரு அட்டை படத்தை தயாரித்தேன்.

    அதில், பரந்த இந்திய வரைப்படத்தில், எங்கும் மக்கள் இருப்பதை போன்று வரைந்து, அதன் மையப் பகுதியில், எம்.ஜி.ஆரின் படத்தை பெரிதாகவும், ராஜிவ் படத்தை, சிறியதாகவும் சித்தரித்திருந்தேன்.

    அட்டை படத்துடன் தயாரித்திருந்த சிறப்பிதழை, அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, எம்ஜிஆரிடம் காட்டினேன். பார்த்ததும், சந்தோஷப்படுவார் என்ற நினைப்போடு அவர் அருகில் நின்றேன்.
    அட்டை படத்தை பார்த்த, எம்ஜிஆரின் முகம், உடனே சுருங்கியது. அருகில் நின்றிருந்த என்னை, ஏற இறங்க பார்த்தார். பின், புத்தகத்தை என்னிடம் கொடுத்து, அமைதியானார்.

    புத்தகத்தை பார்த்து மகிழ்ச்சியடைவார் என்று எதிர்பார்த்த எனக்கு, எம்ஜிஆரின் இந்த செயல், புரியாத புதிராக இருந்தது.
    எம்ஜிஆரை மிக அழகாக சித்தரித்து, அட்டை படம் போட்டுள்ளோம். ஆனால், அவரோ, அதை பார்த்து ஒன்றும் கூறவில்லையே என்று நினைத்து, 'ஐயா... அட்டை படம் எப்படி இருக்கிறது...' என்று, கேட்டேன்.
    சிறிது நேரம் பேசாமல் இருந்த, எம்.ஜி.ஆர்., பின், என்னை பார்த்து, 'டாக்டர்... இந்த அட்டை படத்தில், எனக்கு கொஞ்சம் கூட ஒப்புதல் இல்லை. நான், ஒரு மாநிலத்தின் முதல்வர்... ராஜிவ்வோ, ஒட்டுமொத்த இந்திய நாட்டின் பிரதமராக உள்ளார்.

    இந்நிலையில், #ராஜிவ்வின் #படத்தை #பெரிதாகவும், முதல்வரான #என் #படத்தை #சிறியதாகவும் #அமைத்திருக்கவேண்டும். ஆனால், நீங்கள் அப்படி செய்யவில்லை. என் படத்தை பெரிதாக சித்தரித்துள்ளீர்.
    இது தவறல்லவா...' என, மென்மையாக கேட்டார், என்னிடம்.
    அப்போது தான், என் தவறை உணர்ந்தேன்.

    அப்படிப்பட்ட #ஒரு #மாமனிதர் சிறிதும் கர்வம் இன்றி, தான் என்ற பெருமை கொள்ளாமல், ராஜிவ்வின் படத்தை தான் பெரிதாக போட வேண்டும் என கூறுகிறாரே... எவ்வளவு பெரிய மனதிருந்தால், அவர் இவ்வாறு கூறியிருப்பார் என்று நினைத்து, வியந்தேன்.

    இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த, எம்ஜிஆர்., அவராக எதையும் செய்வதில்லை என்றும், புரியாமல், அடுத்தவர் சொல்வதை கேட்டு அவர் செயல்படுகிறார் என்றும் ஒரு வதந்தி, அப்போது நிலவி வந்தது. ஆனால், நான் காட்டிய அட்டை படத்தை பார்த்து, அதிலிருந்த குறையை அவர் சுட்டிக் காட்டிய விதம், என்னை வியக்க வைத்தது.

    உடல் நலமின்றி இருந்த நிலையிலும், அவர் மனநிலை, சிந்தனை ஆகியவை சிறப்பாக இருந்தன என்பதற்கு, இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம்...

    #இறப்பில்லா #இதயதெய்வம் பொன்மனச்செம்மலின் புகழ் நிலைத்தோங்குக...bsm...

  9. #1538
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர் பதிவு. உ...த்தமன். 5
    ----------------------------------------------
    1964 பொங்கலுக்கு வெளியான கர்ணன் 2 திரையரங்குகளில் (ஜோஸப் காரனேஷன்) வெளிவந்தது.
    இரண்டுக்குமே ஒரே பிரிண்ட்தான்.
    ஜோஸப்பில் திரையிட்டு 1/2 மணி நேரம் கழித்துதான் காரனேஷனில்
    திரையிடுவார்கள். அதாவது 3 ரீல் ஓடி முடித்தவுடன்(ஒரு ரீல் சராசரி நேரம் 10 நிமிடம்) படத்தின் ரீலை தூக்கிக் கொண்டு முதலாளியின் காரில் காரனேஷனுக்கு ஓடுவார்கள்.

    இரண்டு திரையரங்குகளுக்கும் இடையே ரயில்வே கேட் இரண்டு உள்ளது. 1ம் கேட் மற்றும் 2ம் கேட் என்றழைப்பார்கள். அந்தக் காலத்தில் பாஸஞ்சர் டிரையின் குறித்த நேரத்தில் வராது. மேலும் சரக்கு ரயிலும் நினைத்த நேரத்தில் கிளம்புவதால் அநேக நேரங்களில் இரண்டு கேட்டும் அடைத்தே காணப்படும். காரனேஷனில் படத்தை போட்டு விட்டு தொடர் ரீல்கள் வராமல் டூரிங் சினிமா மாதிரி லைட் போட்டு நிறுத்தி வைத்திருப்பார்கள்.

    பார்க்க பரிதாபமாக இருக்கும். பணம் கட்டி ஒரு எக்ஸ்டிரா பிரிண்ட் போட்டிருந்தால் இந்த பிரச்னை இருந்திருக்காது. கஞ்சத்தனத்தில் "மாந்தோப்பு கிளியே" சுருளியை மிஞ்சினார்கள் என்றே சொல்ல வேண்டும். "கர்ணனை" வதைத்தது யார் என்ற குழப்பம் நீடித்ததை விட இரண்டு கேட்டுக்கு இடையே கர்ணன் வதை பட்டதை எண்ணி தூத்துக்குடி மக்கள் இன்றும் சிரித்து மகிழ்கிறார்கள்.

    அடுத்த வதை அதனோடு வெளியான "வேட்டைக்காரன்" என்றே சொல்ல வேண்டும். தென்னகத்தின் தாஜ்மகால் என்று அழைக்கப்பட்ட
    சார்லஸ் திரையரங்கத்தில் வெளியாகி புழுதியை கிளப்பி கர்ணனின் கணைகளை கண்ணுக்கு தெரியாமல் மறைய வைத்தது மற்றுமொரு அதிசயம். ஜோஸப், காரனேஷன் இரண்டையும் சார்லஸுக்குள் அடக்கினாலும் அதனினும் பெரியது சார்லஸ்.

    சுமார் 1ஏக்கர் 30 சென்ட் ஏரியா கொண்டது சார்லஸ். காரனேஷன் சுமார் 35 சென்ட்டும் ஜோஸப் சுமார் 50 சென்ட்டும் கொண்டது. இரண்டையும் விட பெரியது சார்லஸ் திரையரங்கம்.1964 பொங்கலன்று "வேட்டைக்காரன்" வெளியாகி வந்த அனைத்து ரசிக பெரு மக்களையும் வென்று ரிட்டர்ன் டிக்கெட்டே இல்லாத வகையில் ஒரு காட்சிக்கு சுமார் 4000 லிருந்து 5000 பேர்கள் வரை டிக்கெட் கொடுத்து பார்க்க வைத்ததால் பாவம் "கர்ணனின்" சொல் வித்தை அஸ்திரம் எடுபடாமல் படம் படுத்து விட்டது..

    நாங்கள் குடும்பத்தோடு கரிநாளன்று (பொங்கல் மறுநாள்)
    சார்லஸில் படம் பார்க்க சென்றிருந்தோம்.
    உள்ளே சென்று பார்த்தால் ஒரு பெரிய மகாநாடு நடப்பதை போன்ற கூட்டம். மற்றவர்கள் உள்ளே நுழைய முடியாமல் நின்றிருக்க நான் உள்ளே நுழைந்து வெள்ளித்திரை மேடையில் ஏறி நின்று கொண்டே பார்த்தேன். எம்ஜிஆரின் முகமெல்லாம் நீளவாக்கில் தெரிந்தது. படம் பார்த்த திருப்தியே வரவில்லை. என் குடும்பத்தார் படம் பார்க்காமலே திரும்பி சென்று விட்டார்கள்.

    எம்ஜிஆர் படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் வேறு படங்களுக்கு செல்வோரையும் தடுத்து நிறுத்தி தன்னகத்தே சார்லஸ் திரையரங்கம் வைத்துக் கொண்டதால் மற்ற திரையரங்கங்கள் எல்லாம் வெறிச்சோடியது. ஒரே வாரத்தில் இரண்டு தியேட்டர்களிலும் மிகுந்த காற்று வாங்கிய "கர்ணனை" காரனேஷனில் திரையரங்கத்தில் இருந்து தூக்கி ஜோஸப்பில் மட்டும் திரையிட்டார்கள். மூன்று வாரத்துக்கு அப்புறம் மினிமம் கலெக்ஷன் இல்லாமல் போராட கைஸ்கள் ஒன்று கூடி 50 நாட்கள் ஐலேசா போட்டு "கர்ணனை" கரையேற்றினார்கள். 50 நாட்கள் மொத்த வசூல் ரூ25000 தொட்டிருக்குமா? என்பது கேள்விக்குறியே. நெல்லை சென்ட்ரலில் "வேட்டைக்காரனி"ன் முதல் வார வசூலை "தில்லானா போட்டாலும் முறியடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

    ஆனானப்பட்ட, 40 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட "கர்ணனை"யே 15 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட "வேட்டைக்காரன்" வதம் செய்தார். அவரது சகோதரர் "வேலன்" "உங்க மாமாவை"யா விட்டு வைப்பார். இதில் ஒரு சில முட்டாள் கைஸ்கள் கை ரிக்ஷா "பாபு" "நீரும் நெருப்பை" முந்தி விட்டதாம். கைஸ்களின் காமெடிக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

    வசூல் சக்கரவர்த்தி முன்னால் வறுமை "பாபு"வால் என்ன செய்ய முடியும். "காதல் வாகனம்" வசூலைக்கூட அய்யனின் படங்கள் நெருங்க முடியாத போது "நீரும் நெருப்பி"லே கை வைத்தால் சுட்டு விடும். கைஸ்களே, அரை வேக்காட்டு பருப்புகளே, ஜாக்கிரதை. இப்படி நடைபெற்ற ஒவ்வொரு போரிலும் புறமுதுகு காட்டி ஓடியவர்கள், இன்னும் திருந்தாமல், தாங்கள் புறமுதுகு காட்டி ஓடிய கதையை திரித்து மறுத்து புலம்புவதை பார்த்தால் காயம் சற்று ஆழமாகத்தான் இருக்கும் போல தெரிகிறது..........ksr.........

  10. #1539
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மனிதருள் இறைவன் 33வது நினைவு நாள் ... .
    அவர் மறையவில்லை.அவர் நம்மோடு வாழ்கிறார் !
    செத்தும் கொடுத்தார் சீதக்காதி வள்ளல் என்பார்கள் ;ஆம் நமது வாழும் வள்ளல் நம்மவர் எதிர் அணியில் இருந்தாலும் அவர்களுக்கு வாரிக்கோடுத்தார்.
    கதையை கேளுங்கள்.நான் சொல்வது வரலாற்று உண்மை.இதுவரை தெரியாத செய்தி.நான் வெளியிடுவது இதுதான் முதல்முறை.!!!
    நமது தலைவர் முதன்முதலில் திண்டுக்கல் இடைத்தேர்தலை 1973ல் சந்தித்தார்.18.10.72ல் கழகம் ஆரம்பித்து முதல் வருடம்.இரட்டை இலை சின்னம் முதன்முதலாக பெற்றார்.20.5.73ல் திண்டுக்கல் தேர்தலில் மாயத்தேவர் இரட்டை இலையில் வெற்றி பெற்று நாயகனானார்.இந்த மாயத்தேவர் பின்னாளில் தி.மு.கவிற்கு சென்றுவிட்டார்.தலைவர் வருந்தி அவரை தாய் கழகத்துக்கு அழைத்தார்.ஆனால் அவர் வரவில்லை.அந்நாள் அவர் பொருளாதார த்தில் மிகவும் நலிவுற்றுருந்தார்.அவர் மாற்று அணியில் இருந்தாலும் நலிவுற்ற அவர் குடும்பத்துக்கு மாயத்தேவர் கேட்காமலே நிறைய பொருள் தந்து அவர் நிலையை செம்மையுறச்செய்தார். இன்று மாயத்தேவர் 82 வயதை தாண்டி உடல் நலிவுற்று இருக்கிறார்.அவர் குடும்பம் சொல்கிறது .எம்.ஜி.ஆர் கொடுத்த உதவியினால் மட்டும் ஒரு புது வீடு கட்டி அதில் தற்பொழுது வாழ்ந்து வருவதாக பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.மாற்று அணியில் இருந்தாலும் அவர் வாழ்விற்கு உறு துணை செய்து வாழும் வள்ளலாக நமது இறைவன் திகழுகிறார் .இந்த நினைவு நாளில் தலைவன் மாட்சிமையை நினைத்து புகழுரை செய்வோம்.
    நெல்லை எஸ்.எஸ்.மணி.........

  11. #1540
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #என்றென்றும் #பொன்மனச்செம்மல் #நினைவுகளுடன்

    கருவறை முதல்...

    எம்ஜிஆர் பக்தர்கள் உருவாக்கப்படுவதில்லை... பிறக்கும்போதே எம்ஜிஆர் பக்தர்களாத் தான் பிறக்கிறார்கள்...என்பது தான் உண்மை...

    தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தைக்குக் கூட ஒருவர் மீது பக்தி வருமென்றால் அது எம்ஜிஆரைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும் ???

    பிறக்கும் போதே எம்ஜிஆர் பக்தர்கள் என்ற புண்ணியத்தை எங்களுக்கு ஈந்த வள்ளல்...

    ��������������������.........bsm...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •