Page 11 of 210 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #101
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வாத்தியார் தன் தாயிடம் பேசும்பொழுது நான் பார்க்கிறது நம் வாத்தியார்தான் ஏனென்றால் தாய் பாசத்தை கண்டேன் அந்தத் தாய் உள்ளத்தை அவர் மூலம் தெரியும் பொழுது அதை பார்த்தவுடன் கண்ணீர்தான் பெருக்கெடுக்கிறது 💪💪💪💪👌👌👌👌 அந்தத் தாய் பாசம் ஒரு துடிப்போடு பிள்ளைகளை கே உரித்தானது அதை தலைவர் அந்த இடத்தில் உண்மையாகவே வாழ்ந்து காட்டினார் அருமை அருமை மிக மிக அருமை மே தினத்தில் இப்படி ஒரு பதிவு போட்ட உங்களுக்கு மனதார வாழ்த்துக்கள்...... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #102
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொழிலாளர் தினத்தன்று மிக சரியான காட்சிகளை பதிவிட்டு இருக்கிறீர்கள். அருமை!
    இந்த மாதிரி இன்று சொல்ல கூடியவர்கள் யாருமில்லை என்பதை உணரும்போது தலைவரின் அருமை மேலும் மேலும் தெரிகிறது.......... Thanks...

  4. #103
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மே மாதம் 1ம் தேதி ..1996 அன்று நம் நிரந்தர தலைவர். புரட்சித் தலைவரின் மனைவி..
    முன்னாள் முதலமைச்சர்.திருமதி*.வி.என்.ஜானகி அம்மையார் அவர்கள்..ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆஞ்ஜியோ பிளாஸ்டி .. Angioplasty..கிளிப் பரிசோதனைக்கு காத்..லேப் புக்கு வந்தபோது... அங்கு A6 ஆபரேஷன் தியேட்டர் செவிலியர்கள் தலைமை பொறுப்பில் ( Nursing Manager & Lecturer for operating theatre technology ..phycisian assistance group..of Deemed University Sri.Ramachandra Medical College and hospital.. இருந்தேன்.. .. காத் லேபில் cath lab இருந்து என் தோழி காயத்ரி..in charge..cath lab.. என்னை அழைத்ததன் பேரில் திருமதி.ஜானகி அம்மா அவர்களுக்கு அருகில் இருந்து அவர்களுடன் பேசவும் உறுதுணையாக இருந்து நர்சிங் சேவை செய்யும் பாக்கியமும் பெற்றேன்.. நம் புரட்சித் தலைவருக்கும் என் 23 வயதில் ..அப்பல்லோ மருத்துவமனையில் சேவை செய்த நினைவுகளையும் ஜானகி அம்மாவுடன் பகிர்ந்துக் கொண்டேன்.. தலைவருக்கும்..அவரது இல்லத்தரசிக்கும்.. சேவை செய்யும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும்..!!!
    இறைவனுக்கு நன்றி..
    மே 1 என்றுமே எனக்கு ஜானகி அம்மாவை என் நினைவுக்கு கொண்டு வரும்..
    வணக்கம் அன்புள்ளங்களே....... Thanks...

  5. #104
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #யாருக்கு கிடைக்கும் இந்த #அதிர்ஷ்டம் ..!!

    1) #தமிழகத்தில் தேர்தல் மூலம் வெற்றி பெற்று #பெண் முதலமைச்சரை கொண்ட கட்சி #அஇஅதிமுகழகம்...

    2) #தமிழகத்தில் மிக இளம் வயது முதல்வரை பெற்ற கட்சி #அஇஅதிமுகழகம்...

    3) #தமிழகத்தில் முதலாவது பெரிய கட்சியும் #இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி #அஇஅதிமுகழகம்...

    4) #மொத்தமுள்ள 10 மாநகராட்சிகளில் 10ம் வெற்றி பெற்ற ஒரே கட்சி #அஇஅதிமுகழகம்...

    5) #தமிழ்நாட்டில்
    சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலின் போது #தனித்து போட்டியிட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்ற ஒரே கட்சி #அஇஅதிமுகழகம்...

    6) #இந்திய வரலாற்றில் ஒரு #இடைத்தேர்தலில் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்த கட்சி #அஇஅதிமுகழகம்...

    7) #இந்தியாவிலேயே தலைமைக்கு கட்டுப்படுவது மட்டுமின்றி, மிகுந்த #விசுவாசம் நிறைந்த #தொண்டர்களை,
    #தொழிலாளர்களையும் கொண்ட கட்சி #அஇஅதிமுகழகமே...

    #அனைத்து_இந்திய_அண்ணா_திராவிட_முன்னேற்றக்_கழகம ் சார்பில் கழக நண்பர்கள் அனைவருக்கும் #மே 01 #தொழிலாளர் தின நல் #வாழ்த்துக்கள்...

    இவன்...
    #சேலம்_மாநகர்_மாவட்டம்.

    அன்புடன்
    மு #மன்சூர்யாசின்
    சேலம் மாநகர் மாவட்ட துணை #செயலாளர் #சிறுபான்மையினர் நலப்பிரிவு......... Thanks...

  6. #105
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றுரைத்த மகாகவி எப்போது வெற்றி பெறுகிறான்?,,வாடிய,வயிரை கண்டபோதெல்லாம் ஓடிசென்று காத்த வள்ளல் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனபின்புதான்...... Thanks...

  7. #106
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    😍🌹உழைக்கும் வர்க்கமே - நம்
    வாழ்வின் சொர்க்கம்..
    😍🌹உழைப்பவர்களுக்காக பிறர்
    உழைப்பில் வாழ்பவர்கள் கொண்டாடுகிறார்கள்.,
    உழைப்பாளர் தினத்தை..!!
    உழைப்பவர்கள் நாம் தானே
    உலா வருவோம் ,
    உள்ளத்தால் மகிழ்ந்து - வாருங்கள்...!!
    😍🌹உழைக்க தெரிந்தவன் மனித சாதி..
    😍🌹உழைக்க தெரியாதவன் இனத்தின் ஏமாளி..
    😍🌹உழைப்பாளர்கள் உயரவும்..
    😍🌹களிப்போடும் வாழவும்..
    😍🌹வியர்வை சிந்தினால் ,
    😍🌹வாழ்வு வைரமாய் மின்னிடும்...!!
    😍🌹உடல் எடை குறைக்க நடக்கும்
    கூட்டம் இருக்கையில்..
    ஒருவேளை உணவிற்கு ஓடி உழைக்கும்
    கூட்டமும் இருக்க தான் செய்கிறார்கள்..!!🌹😍
    😍🌹தனக்கான ஆடையை உடுத்தி கொள்ள ,
    அடுத்தவர் உதவி நாடுவோர் கூட்டம் பலர்..!!
    தாம் ஆடையை தானே நெய்து உடுத்தும் ,
    எம் நெசவாளர் கூட்டமும் சிலர்..!!🌹😍
    😍🌹விண்ணின் கூரை பிளந்து..
    😍🌹எதிர்வரும் தடையை மாய்த்து..
    😍🌹சொல்லும் செயலும் ஒன்றினைந்து..
    😍🌹உழைப்புடன் உறுதியும் சுமந்து..
    😍🌹💪வரும் காலங்களில் - நம்
    வாழ்வு செம்மையாய்
    ஓங்கிட செய்வோம்..!!!💪🌹😍

    😍🌹தர்மத்தை காக்கவே
    தரணியில் மலர்ந்த - எங்கள்
    தர்ம தேவன்..
    😍🌹எம் இதயம் வணங்கும் ,
    எங்கள் மன்னாதி மன்னன் துணை இருக்க
    உள்ளத்தில் உறுதிக்கு ஓர் பஞ்சமா..!! ?
    😍🌹நினைத்ததை முடிப்பவரை
    நினைவில் பூஜித்தாலே - நாம்
    நினைப்பது எல்லாம் வெற்றி தான்...!!!🌹😍
    😍🌹என் அன்பு நெஞ்சங்களுக்கு எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள்..🌹😍

    😍🌹வாழ்வோம் மனம் மகிழ்ந்து..🌹😍

    😍🌹🙏என்றும் நம் #புரட்சித்தலைவர் புகழ் ஓங்கி ஒலிக்கும்..!!🌹🙏😍

    அன்பன்.,........
    #தஞ்சை_சுபாஷ். 😍💪......... Thanks...

  8. #107
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பத்திரிகையில் சேர்ந்தேன். தி.மு.கவிலிருந்து 1972இல் எம்.ஜி.ஆர் விலகினார். எம்.ஜி.ஆர் ரசிகனா யிருந்த நான், முரசொலியிலிருந்து விலகி அலை யோசையில் சேர்ந்தேன். அது, எம்.ஜி.ஆர் ஆதரவு இதழாக இருந்தது. அங்கிருந்தபோது பாலமுருகன் என்ற கதாசிரியரை பாடல் எழுத வாய்ப்பு கேட்டுச் சந்தித்தேன். அவர், டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்தினார். மாதவன் தயாரித்த ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ படத்தில் “தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா’’ என்ற பாட்டை எழுதினேன்.
    அதன்பிறகு எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அலையோசையி லிருந்து விலகினேன். அதுதெரிந்து, எம்.ஜி.ஆர் கூப்பிட்டார். “விஷயம் கேள்விப்பட்டேன். பணம் கொடுக்கிறேன். வாங்கிக்கங்க’’ என்றார். “பணம்வேண்டாம். வேலை கொடுங்க’’ என்றேன். வற்புறுத்தினார். “உங்க அன்பு போதும்’’ என்று மறுத்துவிட்டேன். அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.
    ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் “கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில்’’ என்ற பாட்டில் தொடங்கினேன். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினேன்.
    “இது நாட்டைக் காக்கும் கை – உன்
    வீட்டைக் காக்கும் கை’’ என்ற பாடலை எம்.ஜி.ஆரே தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதும் அமெரிக்கா நாட்டில் வெளிவரும் “வாஷிங்டன் போஸ்ட்’’ பத்திரிகை என்னையும் அந்தப் பாடலையும் குறிப்பிட்டு இத்தகைய பாடல்களைப் பாடி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் என எழுதியது. அவர் தம் சொந்தத் திறமையாலேயே ஆட்சிக்கு வந்தார். ராமருக்கு அணில்போல வேண்டுமானால் என் பங்கு இருக்கலாம்......முத்துலிங்கம்...... Thanks...

  9. #108
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தான் ஆட்சி பீடத்தில் அமர்ந்த பின் ஏழைகளின் சிம்ம சொப்பனமான மிதிவண்டியில் இரண்டு பேர் செல்ல தடையை தகர்த்து எறிந்தார்
    #புரட்சிதலைவர்
    வகுப்பு வாரியமாக வேலை வாய்ப்பு வழங்குவதை அனைத்து பிரிவுகளிலும் ஏழை பணக்காரன் இருக்கிறான் ஆகையால் வேலைவாய்ப்பை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவருக்கு முன்னுரிமை என்ற சட்ட மசோதாவை நிறை வேற்ற வந்தார் தலைவர் அப்போது எதிர்கட்சியான கருணாநிதி முழுக்க தடுத்து கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஜாதி கலவரத்தை தூண்டிய தால் அது நிறைவேறாமல் போனதை நினைத்து இரத்த கண்ணீர் வடித்தார் #மக்கள்திலகம்
    ஏழைகளை பற்றியே சிந்தித்து ஆட்சி புரிந்த ஒரே தலைவர்
    #எம்ஜிஆர்........ Thanks...

  10. #109
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உழைப்பவன் வியர்வை காய்யும் முன் உழைப்பின் ஊதியத்தை கொடு
    தன்னோடு பங்கேற்றவர் அனைவரின் ஊதியம் வழங்க பட்டதா என அறிந்த பின் தான் தன் ஊதியத்தை பெறுவார் படத்தை முடிப்பார் எம்ஜிஆர்
    தொழிலாளிக்கே தன் ஸ்டுடியோ நடத்த கொடுத்தவர் எம்ஜிஆர்

    தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்...... Thanks...

  11. #110
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்

    உழைப்பாளர் தினம் என்றால் மக்கள் திலகம் நினைவு இல்லாமலா?

    தன் படங்கள் அனைத்திலும் உழைப்பவர் வாழ்வு மலரவும் உயரவும் வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்தவர் அதற்காகவே வாழ்ந்தவர்.

    அவர் படங்களிலிருந்து சில வரிகள்.

    1) தானே தயாரித்து இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்தில்

    உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா
    உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா

    2) அடுத்து அதே படத்தில்
    காடு வேளஞ்சசென்ன மச்சான் பாடலில்
    "மாட உழைச்சவன் வாழ்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான் அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே சேர்வதனால் வரும் தொல்லையடி"

    3) அதே படத்தில் சிரிப்பு நடிகர்களுக்கான பாடல்
    பாடு பட்டா தன்னாலே பலன் இருக்குது தன்னாலே

    4) அடுத்து அவர் தயாரித்து இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில்
    சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

    5) அடுத்து அவர் இயக்கி நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில்
    தாயகத்தின் சுந்தந்திரமே எங்கள் கொள்கை பாடலில்
    ஒற்றுமையால் பகைவர்களை ஓட வைப்போம் உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

    6) அன்று வந்த மகாதேவி படத்தில் தாயத்து தாயத்து பாடலில்
    உடம்ப வளைச்சி நல்லா உழைச்சு பாரப்பா உனக்கும் உலகத்துக்கும் நன்மை இருக்கு

    7) அரசிளங்குமரி படத்தில் ஏற்றமுன்னா ஏற்றம் அதில் இருக்குது முன்னேற்றம் எல்லோரும் பாடு பட்டா இன்பம் விளையும் தோட்டம்..........
    விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறனும் வேலை செய்ஞ்சா உயர்வோம் என்ற விபரம் மண்டையில் ஏறணும்

    8) கன்னித்தாய் படத்தில் கேளம்மா சின்னப்பொண்ணு கேளு பாடலில்
    ஏழை படும் பாடு அதில் எழுந்து நிக்குது வீடு அவன் இருப்பதுவும் படுப்பதுவும் குருவி வாழும் கூடு

    9) படகோட்டி படத்தில்
    உலகத்தின் தூக்கம் கலையாதோ உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
    உழைப்பவர் வாழ்கை உயராதோ

    10) தொழிலாளி படத்தில்
    ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி

    11) நீரும் நெருப்பும் படத்தில் வரும் கடவுள் வாழ்த்துப் பாடும் பாடலில் ஊருக்காக உழைக்கும் கைகள் உயர்ந்திட வேண்டாமோ

    இன்னும் சில பாடல்கள்

    12) நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற பாடலில்
    உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
    13) உழைக்கும் கைகளே உருவாக்க்கும் கைகளே
    14) கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி
    15) ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
    16) நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
    17) ஒன்றே சொல்வான் ஒன்றே செய்வான் பாடலில்
    18) ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள் ஆனாலும் உழைத்தே வாழுங்கள்
    19) சித்திரச் சோலைகளே

    இன்னும் நிறைய உள்ளது.

    மக்கள் திலகம் பொன்மன செம்மல் இல்லாமல் மே தினம் எனும் உழைப்பாளர் தினத்தை நினைக்க முடியுமா?

    நண்பர்களே விட்டுப் போனதைப் பதிவிடுங்கள்......... Thanks...

Page 11 of 210 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •