Page 110 of 210 FirstFirst ... 1060100108109110111112120160 ... LastLast
Results 1,091 to 1,100 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1091
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இங்கே பாருங்கள். தங்கம் தியேட்டரில் கர்ணன் 108 நாளில் 1 லட்சத்து 98 ஆயிரம் வசூலாம். இதுவும் அவர்களே சொல்வது. அதாவது 98 நாளில் 1 லட்சத்து 86 ஆயிரம் வசூல். 108 நாளில் 1 லட்சத்து 98 ஆயிரம் வசூலாம். அப்படி என்றால் கடைசி 10 நாட்களில் 12 ஆயிரம் ரூபாய் வசூலாம். கலர் கலராய் பொய்கள். 12 வது வாரத்தில் இருந்து 14 வது வாரம் வரை 3 வார வசூலை கூட்டினாலே 12 ஆயிரம் வரவில்லை. ஆனால் கடைசி 10 நாளில் மட்டும் 12 ஆயிரம் வசூல் வந்ததாம். இது எப்படி சாத்தியம். போலிக் கர்ணனை நமது வேட்டைக்காரன் அடித்து துவம்சம் செய்தது போல் நாமும் அவர்களின் பொய்களை துவம்சம் செய்கிறோம். இருந்தாலும் தொடர்ந்து பொய் சொல்கிறார்கள். பொய்யர் கூட்டம்....... Swamy...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1092
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விழியிழந்தோரும் பார்த்த விந்தை மாமனிதர்!

    கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் கண் ஒளி இழந்தோர், காது கேளாதோர் பள்ளி நடத்திய ஒரு விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரும் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சி துவங்கியது. வரவேற்புரை வாழ்த்துரை பாராட்டுரைகள் முடிந்தன!

    சிறப்புரையாற்ற பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். எழுந்தார். வெறும் வார்த்தைகளால் கண்ணொளி இழந்தவர்களுக்கு வழி காட்ட இயலுமா? செவியின் சுவையுணராத செல்வங்களுக்கு விருந்து கிடைக்கச்செய்வது எப்படி? இதயம் கருணைக்கடலாக இருந்தால்தான், வார்த்தைகள் முதுகளாக வடிவம் கொள்ளும்.

    பொன்மனம் கொண்டவர் எம்.ஜி.ஆர். பேசத்துவங்கியவுடனேயே அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார். அப்படித் தான் வழங்குவதற்கான காரணத்தை அவர் தெரிவித்தபோது, விழாவில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் அசையாத பதுமைகளாக மாறினர். அவர்களது இதயம் பாகாய் உருகியது. கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.

    "கால் முறிந்து சிகிச்சை பெற்று, படுக்கையில் நான் கிடந்தபோது இரண்டு பார்வையற்றவர்கள் என்னைச் சந்திக்க வந்தனர். 'எங்கே .... இவ்வளவு தூரம் மிகவும் சிரமப்பட்டு வந்திருக்கிறீர்கள்? ' என்று கேட்டேன் . ' உங்களைப் பார்க்கத்தான் வந்தோம் ' என்று பதில் வந்தது .' என்னைப் பார்க்கவா? 'வியப்போடும், வேதனையோடும் அவர்களை நோக்கினேன். 'ஆமாம், உங்களைப் பார்ப்பதற்குத்தான் வந்தோம் . கண்களில்லாத நாங்கள் உங்களை எப்படிப் பார்க்க முடியும் என்றுதானே ஆச்சரியப்படுகின்றீர்கள்?

    எல்லோரையும் போல் வெளி உலகைப் பார்ப்பதற்கு புறக்கண் இல்லையே தவிர, அகக்கண்ணில் நீங்கள் ஆழமாகப் பதிந்திருக்கின்றீர்கள். உங்களை எங்களுடைய கரங்களால் தொட்டு ஸ்பரிசித்து, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுச் செல்வதற்காகத்தான் வந்தோம்' என்று அவர்கள் தெரிவித்ததும் அன்பைவிட உலகத்தில் உயர்ந்தது எதுவுமே இல்லையென்று எனக்குத் தோன்றியது.

    எம்.ஜி.ஆர். இதுபோல அன்பு செலுத்துவதற்கு லட்சோப லட்சம் மக்கள் இருக்கின்றார்கள் என்கின்ற எண்ணமே எனக்கு அதிக தன்னமிக்கையை தந்தது. கண்களை இழந்து தவிக்கும் அவர்கள், என்மீது காட்டிய வாஞ்சை என்றென்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக மனதில் பதிந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று அந்த நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்கிறேன்.

    எம்.ஜி.ஆர் . பேசி முடித்ததும் எழுந்த கரவொலி , அந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு, கேட்டு நெக்குருகிய இதயங்களின் வாழ்த்தொலியாக பெங்களூரில் பொங்கிப் பெருகியது. எளியோரைக் கண்டு இரக்கம் வருவது இயற்கை! இயன்ற அளவு உதவி புரிந்துவிட்டு, அதனை அத்துடன் மறந்துவிடுவது தான் பெரும்பாலோர் குணம்!

    கண்டும் காணாமல் செல்வோரை, இதயம் உள்ள மனித இனத்திலேயே சேர்க்க நான் விரும்பவில்லை! கோடியில் ஒருவருக்கு மட்டுமே - என்றோ கண்ட காட்சியானாலும், இல்லாமையால் துன்பப்படுவோர் குறையை எப்படி நீக்குவது என்கின்ற சிந்தனை வளர்ந்து கொண்டே இருக்கின்றது. காலம் கனியும்போது தாங்கள் உதவி செய்கின்றனர்.

    அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவர் என்றல்ல , லட்சத்தில் ஒருவர் என்றல்ல, கோடியில் ஒரு குணக்குன்று என்று எம்.ஜி.ஆரை.க் கூறவேண்டும். உள்ளத்தாலும் , உயர்ந்த செயல்களாலும் மக்கள் மனதில் உன்னதமான இடத்திற்கே சென்று விடலாம்; சிகரத்தைத் தொட்டுவிடலாம். ஆனால், எப்போதும் எல்லோராலும் அதே இடத்தில் இருந்து மதிப்பையும் , மரியாதையையும் பெற்றுவிட முடியுமா? 'என்னால் முடியும்' என்று நிரூபித்து , நிலைத்து நிற்க எம்.ஜி.ஆரால் முடிந்தது. அதனால்தான் அவர் மக்கள் திலகமாக மட்டுமின்றி , மக்களின் இதயத் திலகமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

    நன்றி : அண்ணன் "நாகை" தருமன்...sb...

  4. #1093
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஏழைப்பிள்ளைகளுக்குக் கல்வி ...
    ஏங்கிய தாய்க்கு விருந்து!

    தஞ்சை மாவட்டத்தில் கிராமம் ஒன்றிலிருந்து ஏழ்மையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன், எம்.ஜி.ஆருக்குக் கடிதம் எழுதுகிறான். தனது படிக்கும் ஆசையையும், பணவசதியற்ற நிலைமைகளையும் கண்ணீர் வரிகளால் சோக முத்திரையிட்டு, நம்பிக்கையோடு அவன் எழுதியதை எம்.ஜி.ஆர். படிக்கிறார். சில நாட்களில் அவன் படிக்கின்ற பள்ளிக்கு எம்.ஜி.ஆரிடமிருந்து கடிதம் ஒன்று வருகின்றது. அந்த மாணவனைப்பற்றிய முழு விவரமும் கேட்டு ! தலைமை ஆசிரியர் விரிவாகப் பதில் எழுதுகின்றார். அதன் பின்பு மாதம்தோறும் அந்த ஏழை மாணவனின் படிப்பிற்காக பணம் தேடிப் போகின்றது! பள்ளியிறுதி வகுப்பு வரை அவனது கல்விச்செலவை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்கிறார். பொங்கல் நாளில் அவனது குடும்பத்தினர் புத்தாடை அணிந்து பூரிக்கவும் அவர் காரணமாகின்றார் .

    இந்தச் சம்பவம் நடந்து நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. பல ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த மாணவனை இளைஞனாகச் சந்தித்தேன் . நல்ல வேலை ஒன்றில், கை நிறைய நியாயமாகச் சம்பாதிக்கும் அவன் , பூரிப்போடு காட்சியளித்தான். தன் குடும் தலை நிமிர்ந்து வளமோடு இருக்கக் காரணமானவரை நெஞ்சத்தின் வாயிலான வாயால் வாழ்த்தினான்!

    ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பது அன்னசத்திரம், ஆலயம் கட்டு வதைவிடப் புண்ணியம் கோடி என்றானே பாரதி! எம்.ஜி.ஆர். எத்தனை ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு வாரிக் கொடுத்து எழுத்தறிவித்திருப்பார்? எண்ணிக்கொண்டே கொடுத்திருந்தாலல்லவா எண்ணிக்கை தெரியும்? அது கொடுத்தவருக்கும் தெரியாது. அவர் யாருக்குக் கொடுத்தார் என்று அடுத்தவருக்கும் தெரியாதே! புகழே உருவெடுத்து வந்ததுபோல் திகழும் எம்.ஜி.ஆர்., நடுவூரில் இருக்கும் பழமுதிர்ச்சோலை! அந்தச் சோலைக்குக் காவலும் இல்லை: வேலியும் கிடையாது. மற்றவர்கள் பசியைப் போக்குவதுடன், அனைவருக்கும் அரணாக நின்று காவல் காக்கும் அற்புதச் சோலை அவர்.

    "மீனவ நண்பன்" படப்பிடிப்பு மங்களூரில் கடலோரப் பகுதியில் நடைபெற்றது . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ... டைரக்டர் ஸ்ரீதர், எம்.என் . நம்பியார் , லதா மற்றும் பலர் மணிபாலில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். ஒருநாள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

    இடைவேளையின்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., வழக்கம்போல் ஒவ்வொரு வரிடமும் நலம் வினவினார். தங்கியுள்ள இடம், சாப்பாடு வசதி எப்படி இருக்கின்றது என்று விசாரித்தார். ' நன்றாக இருக்கின்றது ' என்று அனைவரும் தெரிவித்தனர்.

    தாயாக நடித்த மரகதம்மாள் என்பவர் எம்.ஜி.ஆர். அருகில் வந்தார் . " தம்பி .... " என்று ஆரம்பித்து , சொல்லத் தயங்கினார் . “ என்னம்மா .... உங்களுக்கு ஏதாவது வசதிக் குறைவா? " என்று எம்.ஜி.ஆர் . பரிவோடு கேட்டார் . " இல்லை .... தம்பி ! ஒரு குறையுமில்லை ..... ! வந்து .... நீங்க தங்கியிருந்த இடத்திலே மீனெல்லாம் சவுகரியமாகக் கிடைக்கிறதா? " என்றார் மரகதம்மாள். "என்னம்மா ... மீன் ... சாப்பிடணும்னு .... ஆசை! இவ்வளவு தானே ! நீங்க தங்கியிருக்கிற ஓட்டலிலே மொத்தம் எத்தனைபேர் " என்று சிரித்தபடி கேட்டார். "நாங்க .. இருபத்தைந்து பேர் இருக்கிறோம். " சரி .... எல்லாரும் எத்தனை மணிக்குச் சாப்பிடுவீர்கள் ?" என்று அவர் மறுபடியும் வினவினார். " இரவு எட்டு மணிக்குச் சாப்பிடுவோம் தம்பி ' என்றார்.

    " சரி ... இன்னைக்குப் பதினைஞ்சு நிமிஷம் தாமதமாக சாப்பிடுங்கள் ..... என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆர் . சென்றுவிட்டார். மரகதம்மாவுக்கும், மற்ற நடிகர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. தான் வேடிக்கையாக ஆசையை வெளியிட்டதை, அவர் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்கின்ற கவலை அந்த ' அம்மாவுக்கு!

    எல்லோரும் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டார்கள். சாப்பாட்டு நேரம் நெருங்கியது . திடீரென்று ஒரு கார் வந்து நின்றது . அந்தக் காரில் வந்தவர்கள் ஒரு அண்டாவைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்து உள்ளே வைத்தனர். " சின்னவர் ( எம்.ஜி.ஆர்.) கொடுக்கச் சொன்னார் " என்று சொல்லிவிட்டுச் சென்றனர் . அண்டாவைத் திறந்தால் மீன் குழம்பு வாசனை ஓட்டலில் உள்ளவர்கள் மூக்கை இழுத்தது ; நாக்கில் நீர்சுரக்க வைத்தது . இன்று பதினைந்து நிமிடம் தாமதமாகச் சாப்பிடுங்கள் ' என்று எம்.ஜி.ஆர். சொன்னதன் பொருள் அப்பொழுதுதான் அவர்களுக்குப் புரிந்தது. ஒருவரைத்தவிர அத்தனை பேருக்கும் அன்று மாபெரும் விருந்து . கடல் மீன்கள் ருசியை அவர்கள் ரசித்து , சுவைத்துச் சாப்பிட்டனர் .

    அந்த ஒருவர் நடிகர் கரிக்கோல் ராஜு . அவர் அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பக்தர் ... சைவம் என்பதால் மீனை மட்டும் அந்த ஒருவர் சாப்பிடவில்லை! மரகதம்மாளின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை ! நான் சாதாரணமாகச் சொன்னதை நினைவில் வைத்திருந்து, கவனமாகச் சரியாகச் சாப்பிடும் நேரத்திற்கு எல்லோருக்கும் மீன் விருந்து தந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்த வார்த்தைகளுக்கு அளவில்லை .

    பெற்றவர் - ஆசைப்பட்டதைச் சொன்னாலும் காதில் விழாததைப் போல் செல்லும் பிள்ளைகள் உள்ள காலத்தில், தாயாக நடிக்க வந்த தனக்கு, ' எம்.ஜி.ஆர். என்ற தங்கமான பிள்ளை கொடுத்த விருந்து ஆயுளில் மறக்க முடியாதது ' என்று கண்கள் பனிக்கக் கூறினார் . ஈரமுள்ள வளமான பூமியில்தான் பயிர்விளையும். ஈகைப்பண்யும் , அன்பும் உள்ள மனிதரிடம்தான் நல்ல உள்ளங்கள் ஒன்றும்! ...sb...

  5. #1094
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எக்காலத்திலும் இவரே என்றும் இளமை அரசர் ...

    வாழ்க அவர் புகழ்.

    நன்றி உங்களில் ஒருவன்...

    அந்த படிகளில் இறங்கி வரும் தோரணை வேறு எவருக்கும் வருவது கடினமே....என்றும்..

    யார் உடன் தலைவர் நடித்தாலும் நம் கண்கள் மட்டும் அவரை சுற்றியே இருக்கும்.

    மீண்டும் கண்ணாடி போல ப்ரின்டில்...

    அந்த நீல விழி பந்தல் நீ இருக்கும் மேடை வரிகள் வரும் போது அந்த ரிதம் அதுக்கு ஏற்ப துள்ளி குதித்து ஆடுவார்...இனி எங்கே தலைவரே...

    ஆண்டுகள் பல கடந்தாலும் அணு அணு வாக உங்களை மட்டுமே ரசிப்போம்...ருசிப்போம்.

    மன்னிக்கவும் headponil கேளுங்க பாட்டு வேறு லெவலில் இருக்கும்......Mn.....

  6. #1095
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*19/10/20 அன்று அளித்த தகவல்கள்*
    ------------------------------------------------------------------------------------------------------------------------------
    மண்ணின் மைந்தனின் , தமிழக வரலாறு என்பது எம்.ஜி.ஆர். என்கிற அந்த மூன்றெழுத்தை கடந்து போக முடியாது .என்ற முக்கியத்துவம் வாய்ந்த அந்த மாமன்னரின் ,நாடோடி மன்னனின் ,மக்களின் மனதில் மன்னாதி மன்னனாக* வீற்றிருக்கின்ற ஒரு மாமனிதரின் வரலாறை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்*அந்த வரலாறு என்பது வாழ்க்கையில் ஒளி வேண்டும் , வெற்றி பெற வேண்டும்*என்று நம்பிக்கையோடு காலடி எடுத்து வைக்கிற ஒவ்வொரு இளைஞனுக்குமான ஒரு வெளிச்ச பார்வை .


    சென்னை கலைவாணர் அரங்கில் பிரபல பின்னணி பாடகர் பாலமுரளி கிருஷ்ணா தியாகராய கீர்த்தனைகளை தெலுங்கில் இருந்ததை தமிழில் மொழி பெயர்த்து சி.டி.ஆக வெளியிடும் திருவிழா நடைபெறுகிறது . முதல்வர் எம்.ஜி.ஆர். விழாவுக்கு தலைமை தாங்குகிறார் .ஆறு பாடல்கள் கொண்ட சி .டி.யை. வெளியிட்டு கொண்டிருக்கும்போது தன்னுடைய உதவியாளரை அழைத்து அவரது காரில் இருக்கும் ரூ.100/- கட்டுக்களை பிரித்து எண்ணுவதற்காக ,அப்போது ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக இருந்த திரு.கற்பூர சுந்தர பாண்டியன் அவர்களை உதவிக்கு அழைத்து செல்கிறார்கள் . இவர்கள் அந்த பணக்கட்டுக்களை எண்ணி ஒரு காக்கி கவரில் போட்டு கொண்டுவந்து எம்.ஜி.ஆரிடம்* ரூ.1,20,000/-*தருகிறார்கள் .அந்த பணத்தை அப்படியே எம்.ஜி.ஆர். அவர்கள் பாலமுரளி கிருஷ்ணாவிற்கு* வாழ்த்தி கொடுத்துவிட்டு* காரிலே போய்விடுகிறார் .மறுநாள் காலையில் ரூ.60,000/- பணத்தை அவருக்கு தவறுதலாக கூடுதலாக கொடுத்துவிட்டோம் என்று எம்.ஜி.ஆரிடம் தயங்கி* தயங்கி சொல்கிறார்கள் .அதாவது நேற்று வெளியிட்ட சி.டி.யில் 6 பாடல்கள் தான் இருந்தது .ஆனால் நாங்கள் 12 பாடல்கள் என்று எண்ணி, ரூ.1,20,000/-* தவறுதலாக கொடுத்துவிட்டோம் என்றார்கள் .இதை கேட்டதும் எம்.ஜி.ஆர். கோபப்பட்டு கண்டிக்க போகிறார் என நினைத்தார்கள் .ஆனால் அந்த வள்ளல் எம்.ஜி.ஆர். சொன்னது என்னவென்றால் பாலமுரளிகிருஷ்ணா மிகவும் அதிர்ஷ்டசாலி. அதனால்தான் அவருக்கு பரிசு இருமடங்காக கிடைத்திருக்கிறது*


    எம்.ஜி.ஆர். அவர்களின் 2 வது* மனைவி சதாநந்தவதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது ,யானை கவுனியில் இருந்து ராயப்பேட்டைக்கு சைக்கிள் ரிக் ஷாவில்* அழைத்து வந்து தினசரி மருத்துவ சிகிச்சை பார்த்து வந்தார் .சதானந்தவதி* *இறந்த தினமான பிப்ரவரி 25ம் தேதி பல வருடங்கள்,தன் இறுதி காலம் வரை எம்.ஜி.ஆர். யாருடனும் பேசாதிருந்து மௌன விரதம் கடைபிடித்தார் .*.


    திரு.லியாகத் அலிகான் பேட்டி :* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களோடு பழகிய கால கட்டங்கள் , பிறகு அவர் மறைந்த நேரத்திலே இருந்த கால கட்டங்கள் மன சோர்வடைந்து எல்லோரும் இருந்த நேரத்திலே ,அவர்களோடு*ஆறுதல் வார்த்தைகளை பேசி ,என்னை கட்சியில் இணைத்து கொண்டதற்கு அடிப்படை காரணம் எடுத்து கொண்டால் ,மதிப்பிற்குரிய திரு.மதுசூதனன் அவர்கள்தான் மதுசூதனனும், ஓ.பி.எஸ்.அவர்களும் அரசியலில் ஒரு உண்ணாவிரதம் எடுத்து நடத்துகிறார்கள் .* நான் அப்போது செயல்படாமல் அமைதியாக இருந்த நேரத்திலே, டில்லி பாஸ்கர் என்கிற என் நண்பர் தினசரி*தொந்தரவு செய்து ,ஏன் நீங்கள் அமைதியாக உள்ளீர்கள். எம்.ஜி.ஆர். குறித்து*ஏதாவது பேசுங்கள் என்றார் . மேடையில் மதுசூதனனும், ஓ.பி.எஸ். அவர்களும் அழைப்பு விடுத்த காரணத்தால் நான் மேடை ஏறும்போது ,ஆரவாரத்துடன் ,நல்ல வரவேற்பு கிடைத்தது .நான் பேசி முடித்ததும்,மதுசூதனன்,பொன்னையன் ,ஜே.சி.ட.பிரபாகரன் போன்றோர் அங்கு இருந்தனர் .* இப்போது மீண்டும் அண்ணா தி.மு.க.வில் லியாகத் அலிகான் இணைகிறார் என்று அறிவித்து எனக்கு மதுசூதனன் அவர்களும், ஓ.பி.எஸ். அவர்களும் சால்வை அணிவித்தனர் .அப்போது அரசியல் சூழல் நிரந்தரமாக இல்லாத நேரம் அல்லவா,நான் நினைத்திருந்தால் நேரடியாக இ .பி.எஸ். அவர்களை சந்தித்து இணைந்திருப்பேன்* ஆனால் அப்படி செய்யவில்லை. காரணம் எடப்பாடி*முதல்வராக இருக்கிற பட்சத்தில் இணைந்துவிட்டார் என்று சொல்வார்கள்*அப்போது தினகரன் பற்றி கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்ட நேரம் .அவர் தனியாக இருந்ததால் ,ஏன் நீங்கள் அண்ணா தி.மு.க.வில் இணைந்து பணியாற்றக்கூடாது*என்று சமாதானத்திற்கான தினகரனிடம் பேச சென்றபோது ,நான் தினகரன் அணியை சார்ந்தவன் என்று அண்ணா தி.மு.க. வில் முத்திரை குத்தி விட்டார்கள் மீடியாவில் இந்தமாதிரி அறிவிப்பு வந்த பிறகு மறக்கமுடியவில்லை ..அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் தரப்படுகிறது .அவரை எதிர்த்து நீங்கள் நிற்க வேண்டாம் என்று நானும், புகழேந்தி அவர்களும் கேட்டுக்கொண்டபோது* தினகரன் நிராகரித்துவிட்டார் .* உடனே நான் இரட்டை இலை சின்னத்திற்கு எதிர்த்து செயல்பட முடியாது .அது தலைவர் உருவாக்கிய சின்னம்*.என்று முடிவு எடுத்தேன் . மாணவர் அணியில் நானும் சபாநாயகர் தனபாலும் ஒன்றாக இருந்தவர்கள் . ஒரு முக்கிய வி.ஐ.பி. மூலம் தனபாலை அணுகி விஷயங்களை விவரித்தேன் .தனபால் அவர்கள் உணவமைச்சராக இருந்தவர் .அவர் மூலமாக எடப்பாடியார் அவர்களை சந்தித்து மீண்டும் அண்ணா தி.மு.க.வில் இணைத்து கொண்டேன் . இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .


    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் எல்லா திரைப்படங்களிலும் அது சண்டை காட்சியாகட்டும்,,நடனக்காட்சியாகட்டும், பாடல்கள் அமைவதாகட்டும்,*எடிட்டிங் செய்வதாகட்டும், எல்லா துறையிலும் அவருடைய தலையீடு இருந்தது என்று சொல்வார்கள் . ஆனால் அவருக்கு எல்லா துறைகளிலும் ஞானம் இருந்தது என்பது பலருக்கு தெரியாத உண்மை .* குறிப்பாக சொன்னால் இதயவீணை படத்தில் பொன்னந்தி மாலை பொழுது என்ற பாடலை கம்போஸ்*செய்திடும் வேலைகள் ஒருநாள் காலையில் தொடங்கி மாலை வரையிலும்*அடுத்த நாள் தொடர்ந்து நடைபெறுகிறது .படத்திற்கு இசை அமைத்தவர் சங்கர் கணேஷ் .தொடர்ந்து 3வது* நாளாக பணிகள் நிறைவடையாமல் இருக்கும்போது*எப்போது முடியுமோ என்று சோர்வடைந்து இருந்த விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த இசை குறிப்புகளை வாங்கி பார்த்து , 16வது ட்யூனை சரணம் ஆகவும் , 40 வது* ட்யூனை பீஜியம் ஆகவும் வைத்து கொள்ளுங்கள் என்றாராம்*மேலும் 60க்கும் மேற்பட்ட* இசை குறிப்புகளை, ட்யூன்களை தன் கை டைரியில் எழுதி வைத்திருந்தாராம் .* அந்த அளவிற்கு இசை ஞானமும், நுட்பமும் தெரிந்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர் .அதனால்தான் அவரது படங்களில் ஒவ்வொரு பாடலும் வெற்றி அடைவதற்கு* இசை எப்படி அமைய வேண்டும் ,இசை அமைப்பாளர் மட்டுமின்றி, பாடல் எப்படி அமைய வேண்டும் என்பது நாடகத்துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தபோது இருந்த ஞானம் தொடர்ந்ததே காரணம் .


    துக்ளக் வாசகர் ஒருவர் கடிதத்தில் போகிற போக்கை பார்த்தால் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆகிவிடுவார் போல கனவு கண்டதாக குறிப்பிட்டு இருந்தார் .அதற்கு பதிலளித்த ஆசிரியர் சோ , நாடு இருக்கும் நிலையில் உங்களுக்கு இப்படி கூடவா பயங்கரமான கனவு வருகிறது என்று கிண்டலும், கேலியும் பேசினார் .ஆனால் எம்.ஜி.ஆர். முதல்வராகி சிறப்பான ஆட்சியை தந்த பிறகு ,அவரே போற்றி புகழ்கின்ற அளவிற்கு பாராட்டியுள்ளார் .ஒருவேளை கலைவாணர் என் .எஸ்.கிருஷ்ணன் அவர்கள் உயிருடன் இருந்து இருந்தால் இன்று அவர்தான் முதல்வராக இருந்து இருப்பார் என்று எம்.ஜி.ஆர். அறிக்கை வெளியிட்டார் .அனைவரும் எம்.ஜி.ஆர். பழையபடி சினிமாவில் நடிக்க போய்விடுவார் .வேறு யாராவது ,நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் முதல்வராக வரக்கூடும் என்று ஆரூடம் சொன்னார்கள் . ஆனால் காலத்தின் கட்டாயம் என்பது போல அவரே முதல்வராக கோட்டையில் அமர்ந்து பத்து* ஆண்டுகள் மேல் ஆட்சி புரிந்தார்மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    --------------------------------------------------------------------------------
    1.ஆதிபகவன் ஒன்றே தான்* - ராஜா தேசிங்கு*

    2.பாலமுரளி கிருஷ்ணாவின் பல மொழி பாடல் - நவரத்தினம்*

    3.அன்பே வா சோகப்பாடல்* - அன்பே வா*

    4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*

    5.பொன்னந்தி மாலை பொழுது - இதய வீணை*

    6.எம்.ஜி.ஆர்.-என்.எஸ்.கிருஷ்ணன் போட்டிப்பாடல் -சக்கரவர்த்தி திருமகள்*

    .

  7. #1096
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1952 முதல் 1959 வரை
    முதல் ரவுண்டில்...
    மதுரைவீரன்
    நாடோடி மன்னனை
    அது வரை வெளியான எந்த படமும் வசூலில் வென்றதாக சரித்திரமில்லை!

    அடுத்து..
    1960 முதல் 1969 வரை..
    எங்க வீட்டுப்பிள்ளை
    அடிமைப்பெண்னை
    திரைப்படங்களின் வசூலை அது வரை வந்த எந்த படமும் வெல்ல முடியவில்லை...

    1970 முதல் 1977 வரை
    உலகம் சுற்றும் வாலிபன்
    உரிமைக்குரல்
    வசூலை அதுவரை வெளியான எந்த படமும் மிஞ்ச முடியவில்லை...

    மூன்றெழுத்து நாயகனின்
    திரையுலக வரலாறு
    சாந்தி
    கிரவுன்
    புவணேஸ்வரி அல்ல...
    அதையெல்லாம் தாண்டி
    100 மடங்கு சாதனையில்...
    நூற்றுக்கணக்கான
    திரையரங்குகளின்
    வெற்றியாகும் ....
    வசூலில் புரட்சியாகும்............ur...

  8. #1097
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சமீபத்தில் ' நாடோடி மன்னன் ' படம் பார்த்து கொண்டிருந்த போது அதில் வசனம் என்று கவிஞர் கண்ணதாசனுடன் ரவீந்தர் என்ற பெயரைப் பார்த்தேன். யார் அந்த ரவீந்தர் என்று ஆச்சரியமாக இருந்தது.
    திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் யார் ரவீந்தர் என்று தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதோடு அவரது வாழ்க்கை வரலாற்றை இந்த வலைப்பதிவில் அறிந்து கொண்ட போது சந்தோஷமாகவும் தற்போதைய அவரது நிலையை அறிந்த போது நெகிழ்வாகவும் இருந்தது.
    நீண்டு மெலிந்த தேகம். சற்றே குழி விழுந்த ஆனால் ஒளியுமிழும் கண்கள். சிவந்த நிறம். பேசத் துடிக்கும் உதடுகள். ஆனால் நினைத்ததைப் பேச முடியாது. தடுக்கும் பக்கவாத வியாதியின் அழுத்தம். உற்சாகமாகக் கதை சொல்லிப் பழக்கப்பட்ட அந்த நாக்கு இப்போது அரைமணி நேரம்கூடத் தெளிவாகப் பேச முடியாத பரிதாபம்.
    வரவேற்பரையின் முகப்பில் இளமைப் பொலிவுடன் அழகு ததும்ப திரைப்பட ஹீரோவைப் போல் காட்சியளிக்கும் இளைஞரின் படம். மலைத்துப் போகிறோம்! இளமை எழுதிய அழகிய ஓவியம், கால வெள்ளத்தால் கரைந்து போனதை நம்ப முடியவில்லை.
    எம்.ஜி.ஆரின் சொந்தப்பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் அவரது மனம் கவர்ந்த கதாசிரியராக இருந்தவர். இப்போது வயது எழுபத்தைந்து. பெயர் ரவீந்தர்.
    ரவீந்தர் என்பது சொந்தப் பெயரல்ல. எம்.ஜி.ஆரால் பிரியத்துடன் சூட்டப்பட்ட பெயர். உண்மைப் பெயர் ஏ.ஆர்.செய்யது காஜா முகையதீன். சொந்த ஊர் நாகூர்.
    காஜா முகைதீனுக்கு வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புகளில் கொள்ளைப் பிரியம். இதை அவரது வாய்வழிக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், அவருக்கு `ரவீந்தர்` எனத் திரையுலக நாமகரணம் சூட்ட அதுவே நிரந்தரப் பெயராய் மாறிப் போனது.
    எம்.ஜி.ஆர் நடித்த `இன்பக் கனவு`, `அட்வகேட் அமரன்` ஆகிய இரண்டு நாடகங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
    திரையுலகில் இவர் முதன் முதலில் கதை-வசனம் எழுதிய படம் `குலேபகாவலி`. அந்தப் படத்திற்கு பிரபல கதை வசனகர்த்தா தஞ்சை ராமைய்யாதாசும் கதை வசனம் எழுதியிருந்த காரணத்தால் புதியவரான இவரது பெயர் டைட்டிலில் இடம் பெறவில்லை.
    1956-ல் வெளிவந்த இப் படத்துக்கு அடுத்தபடி, 1958-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் `நாடோடி மன்னன்`தான் முதன் முதலில் இவரது பெயரை வெள்ளித் திரையில் வெளிச்சப்படுத்தியது.
    இந்தப் படத்திற்கும் இருவர் கதை வசனம் எழுதினர். கவியரசு கண்ணதாசன் பெயரோடு இவர் பெயரும் சேர்ந்து இடம் பெற்றது.
    எம்.ஜி.ஆரின் மற்றொரு வெற்றிச் சித்திரமான `அடிமைப்பெண்` படத்திற்கும் கதை-வசனம் எழுதியவர் ரவீந்தர்தான்.
    32 படங்களுக்கு மேல் ரவீந்தர் கதை வசனம் எழுதியுள்ளார். ஆனால் இவரது பெயர் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டது சில படங்களில் மட்டுமே.
    கலையரசி, சந்திரோதயம், என இவர் கதை வசனம் எழுதிய படங்களின் பட்டியல் நீள்கிறது. ராமண்ணா இயக்கத்தில் ரவிச்சந்திரன் நடித்து வெளிவந்த `பாக்தாத் பேரழகி` படத்துக்கும் கதை வசனம் இவர்தான்.
    1951-ல் நூற்று ஐம்பது ரூபாய் மாதச் சம்பளத்துக்கு எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவில் வேலைக்குச் சேர்ந்த ரவீந்தர் , பின்னர் படிப்படியாக உயர்ந்து ஆயிரத்து ஐநூறு வரை பெற்றதைப் பரவசத்துடன் நினைவு கூர்கிறார்.
    எம்.ஜி,ஆரை எந்த நேரத்திலும் அவரது வீட்டில் சந்திக்கும் உரிமை பெற்றிருந்தவர்களில் ஒருவராய் திகழ்ந்தார் ரவீந்தர்.
    நாடோடி மன்னன் படம் வெளிவந்த சமயம் இவரது குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்.ஜி.ஆர் அடையாறு பகுதியில் இவர் மனைவி பெயரில் ஒரு இடம் வாங்கித் தர முடிவு செய்தார். ஒரு எழுத்தாளனுக்கு உரிய தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் மனைவி பெயரில் இடம் வாங்க மறுப்பு தெரிவிக்க அத்துடன் அம்முயற்சி கிடப்பில் போடப்பட்டது எனச் சொல்லி வருந்துகிறார் ரவீந்தரின் மனைவி.

    ரவீந்தர் தம் திருமணத்துக்கு அழைக்கச் சென்றபோது `என்ன வேண்டும்?` என்று உரிமையோடு எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். தம் திருமணத்திற்கு கரியமணி சங்கிலி செய்யப் பணம் தாருங்கள் என கேட்டுள்ளார் ரவீந்தர்.
    ரவீந்தர் விரும்பிய வண்ணம் தன் அண்ணன் சக்கரபாணி கையால் பணம் வழங்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.
    ரவீந்தருக்கு தயக்கம். `என்ன விஷயம்?` என்றார் எம்.ஜி,ஆர். `உங்க கையால் பணத்தை தரக் கூடாதா?` என்று ரவீந்தர் கேட்டதற்கு `புரியாமல் பேசாதே! மாங்கல்ய நகைக்குரிய பணத்தை புத்திர பாக்கியம் உடையவர் கையால்தான் பெற வேண்டும்` என்று சொன்னதைக் கண் கலங்க நினைவு கூர்கிறார் ரவீந்தர்.
    அரசியலில் திருப்புமுனை ஏற்பட்டு எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகும் அவரைச் சந்திப்பதில் ரவீந்தருக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை.
    அ.தி.மு.க தோன்றுவதற்கு முன்னால் எம்.ஜி.ஆர் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டருந்த `இணைந்த கைகள்` படத்திற்கு கதை வசனம் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருந்தது. கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் கைப்பற்றிய பிறகு படம் பாதியில் முடங்கிப் போனது.
    நாகூர் நேஷனல் பள்ளியில் ஏழாவது வரை படித்த இவர் பிறகு லண்டன் மெட்ரிக் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார்.

    தம்மை உயர வைத்த ஏணியைப் போற்றத் தவறாத எம்.ஜி,ஆர், 1982-ல் ரவீந்தருக்கு சிறந்த வசனகர்த்தாருக்குரிய சிறப்பு விருதும் பொற்பதக்கமும் வழங்கி `கலைமாமணி` பட்டம் வழங்கி கௌரவித்தார்.
    பத்தாண்டுகளுக்கு முன் தன்னைத் தாக்கிய வாதநோய் தரும் துன்பத்தை சிறிதும் பொருட்படுத்தாது எம்.ஜி.ஆர் என்ற வார்த்தையைக் கேட்ட அளவில் கண்களில் ஒளி பொங்க நாக் குழற உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்.
    அவருக்கு உற்ற துணையாகத் திகழும் அவரது மனைவி, அவர் தடுமாறும்போதெல்லாம் தெளிவான விளக்கம் தருகிறார். ரவீந்தர் தம்பதியினருக்கு மூன்று மகன். மூன்று மகள்.
    இப்போது ஸ்டெல்லா மேரி கல்லூரி பின்புறம் உள்ள எல்லையம்மன் காலனியில் ஒரு வாடகை வீட்டில் மெல்ல நகர்கிறது இவரது வாழ்க்கை. கூடவே வறுமையும்!

    - ஹ.மு.நத்தர்சா -தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2002
    நன்றி : ஆபிதீன்பக்கங்கள்....vr...

  9. #1098
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அள்ளிக்கொடுத்து அகிலத்தை தன் பக்கம் அன்புடன் வைத்த...
    திரையுலகின் கலங்கரை விளக்கமே!
    திரையுலகிற்கு வெளிச்சம் தந்த
    ஒளி விளக்கே!
    திரையுலக வெள்ளித்திரையின்
    ஆனந்த ஜோதியே!
    +++++++++++++++++++++++
    கலையுலகில் அடுக்கடுக்கான வெற்றிகளை படைத்த
    மன்னாதி மன்னனே!
    +++++++++++++++++++++++++
    1931 முதல் 1977 வரை தமிழ்பட உலகின்
    வசூல் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருவரே!
    சென்னை பெருநகரில் வசூலின் முதல் வரலாற்றை படைத்துள்ளார்....
    ++++++++++++++++++++++++++++++++++
    மலைக்கள்ளன் - 1954
    +++++++++++++++
    முதன் முதலில் 5 லட்சத்தை ஒடி முடிய பெற்ற காவியமாகும்!

    காஸினே,பிரபாத், சரஸ்வதி

    குலேபகாவலி - 1955
    ++++++++++++++++++
    முதன் முதலில் 6 லட்சத்தை பெற்ற காவியமாகும்!

    கிருஷ்ணா, கெயிட்டி, உமா, ராஜகுமாரி

    மதுரை வீரன் - 1956
    ++++++++++++++++++
    முதன் முதலில் 7 லட்சத்தை பெற்ற காவியமாகும்!

    சித்ரா,பிரபாத்,சரஸ்வதி,காமதேனு

    நாடோடி மன்னன் -.1958
    +++++++++++++++++++++
    முதன் முதலில் 8 லட்சத்தை கட்ந்த சாதனை பெற்ற காவியம்!

    ஸ்ரீ கிருஷ்ணா, பாரகன், உமா

    எங்க வீட்டுப்பிள்ளை - 1965
    +++++++++++++++++++++++++
    முதன் முதலில் .....
    9 லட்சம் ....10 லட்சம்....11 லட்சம்...
    12 லட்சம்......13 லட்சத்தை கடந்த
    காவியமாக. திகழ்ந்தது!

    ரிக்க்ஷாக்காரன் - 1971
    +++++++++++++++++++++
    முதன் முதலில் .....
    14 லட்சம் ....15 லட்சம்.......மற்றும்
    16 லட்சத்தை கடந்து மாபெரும் வசூல் சாதனையாகும் ..,......

    உலகம் சுற்றும் வாலிபன் - 1973
    ++++++++++++++++++++++++++++
    முதன் முதலில் ......
    17 லட்சம்.... 18 லட்சம்...... 19 லட்சம்....
    20 லட்சம்....... 21 லட்சம்..... 22 லட்சம்....
    23 லட்சத்தை கடந்து உண்மையான வசூலை அரசிடம் சமர்பித்து வரி கட்டிய காவியமாகும்....
    ++++++++++++++++++++++++++++++++
    திரையுலகின் முழு முதல் கடவுள் தான் இப்படி யெல்லாம் வசூலை முதன் முதலில் படைப்பார்....
    சிகரமாக உயர்ந்து நிற்பார்.....
    +++++++++++++++++++++++++++++++
    நிகர வசூல்... அரசுக்கு வரி... தியேட்டர் பங்கு.... விநியோகஸ்தர் பங்கு என தெரிவித்த காவியம்
    மக்கள் திலகத்தின் காவியங்களாகும்..
    ++++++++++++++++++++++++++++++++
    பொய்யான வசூலை போட்டு
    எல்லோரையும் ஏமாற்றி....
    அரசுக்கு வரி
    தியேட்டர் பங்கு என
    சொல்லாமலேயே பொய் வசூலுக்கு போர்வை போர்த்திய கூட்டம் தான்
    கணேசனின் பெறாத பிள்ளைகளின்
    வசூல் கணக்கு ஆகும்...
    +++++++++++++++++++++++++++++++
    தகரப்பதக்கம் 17 லட்சம் தான் வசூல்...
    அதற்கு முன் வந்த
    (29.09.1972 ) வெளியாகி
    வறண்ட மாளிகை....
    சாந்தி 175 நாள்
    (23.03.1972 ) வரை ஒடியது...
    கிரவுன் 140 நாள்
    புவணேஸ்வரி 140 நாள்
    மொத்த வசூல் : 15 லட்சம் தான்.
    அதை விட கூடுதலாக
    73 நாள் தான் கணேசனின்
    தகரபதக்கம் மூன்று அரங்கிலும் ஒட்டப்பட்டது...
    ++++++++++++++++++++++++++++++
    14 மாத காலத்தில்.....
    01.06.1974 தகரப்பதக்கம் வெளியீடு
    வசூல் எப்படி 6 லட்சத்து 63 ஆயிரத்தை கடந்திருக்கும்....
    சாந்தி 176, கிரவுன் 176,
    புவனேஸ்வரி 176.....
    +++++++++++++++++++++++++++++(
    மூன்று அரங்கிலும் வசூலில் மகத்தான பிரடு... பொய் வசூல்.... தவறான பதிவு...
    பொதுமக்களை ஏமாற்றலாம்...
    ஆனால் மக்கள் திலகத்தின் பக்தர்களை ஏமாற்றவே முடியாது கனவிலும் கூட...
    ++++++++++++++++++++++++++++++++
    மேலும் அண்ணன் ஒரு கோழை வசூலின் மோசடி அடுத்து....ur...

  10. #1099
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    விழியிழந்தோரும் பார்த்த விந்தை மாமனிதர்!

    கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் கண் ஒளி இழந்தோர், காது கேளாதோர் பள்ளி நடத்திய ஒரு விழாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரும் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சி துவங்கியது. வரவேற்புரை வாழ்த்துரை பாராட்டுரைகள் முடிந்தன!

    சிறப்புரையாற்ற பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். எழுந்தார். வெறும் வார்த்தைகளால் கண்ணொளி இழந்தவர்களுக்கு வழி காட்ட இயலுமா? செவியின் சுவையுணராத செல்வங்களுக்கு விருந்து கிடைக்கச்செய்வது எப்படி? இதயம் கருணைக்கடலாக இருந்தால்தான், வார்த்தைகள் முதுகளாக வடிவம் கொள்ளும்.

    பொன்மனம் கொண்டவர் எம்.ஜி.ஆர். பேசத்துவங்கியவுடனேயே அந்தப் பள்ளியின் வளர்ச்சிக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார். அப்படித் தான் வழங்குவதற்கான காரணத்தை அவர் தெரிவித்தபோது, விழாவில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் அசையாத பதுமைகளாக மாறினர். அவர்களது இதயம் பாகாய் உருகியது. கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.

    "கால் முறிந்து சிகிச்சை பெற்று, படுக்கையில் நான் கிடந்தபோது இரண்டு பார்வையற்றவர்கள் என்னைச் சந்திக்க வந்தனர். 'எங்கே .... இவ்வளவு தூரம் மிகவும் சிரமப்பட்டு வந்திருக்கிறீர்கள்? ' என்று கேட்டேன் . ' உங்களைப் பார்க்கத்தான் வந்தோம் ' என்று பதில் வந்தது .' என்னைப் பார்க்கவா? 'வியப்போடும், வேதனையோடும் அவர்களை நோக்கினேன். 'ஆமாம், உங்களைப் பார்ப்பதற்குத்தான் வந்தோம் . கண்களில்லாத நாங்கள் உங்களை எப்படிப் பார்க்க முடியும் என்றுதானே ஆச்சரியப்படுகின்றீர்கள்?

    எல்லோரையும் போல் வெளி உலகைப் பார்ப்பதற்கு புறக்கண் இல்லையே தவிர, அகக்கண்ணில் நீங்கள் ஆழமாகப் பதிந்திருக்கின்றீர்கள். உங்களை எங்களுடைய கரங்களால் தொட்டு ஸ்பரிசித்து, ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டுச் செல்வதற்காகத்தான் வந்தோம்' என்று அவர்கள் தெரிவித்ததும் அன்பைவிட உலகத்தில் உயர்ந்தது எதுவுமே இல்லையென்று எனக்குத் தோன்றியது.

    எம்.ஜி.ஆர். இதுபோல அன்பு செலுத்துவதற்கு லட்சோப லட்சம் மக்கள் இருக்கின்றார்கள் என்கின்ற எண்ணமே எனக்கு அதிக தன்னமிக்கையை தந்தது. கண்களை இழந்து தவிக்கும் அவர்கள், என்மீது காட்டிய வாஞ்சை என்றென்றும் மறக்க முடியாத நிகழ்ச்சியாக மனதில் பதிந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் என் வாழ்நாளில் ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று அந்த நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்கிறேன்.

    எம்.ஜி.ஆர் . பேசி முடித்ததும் எழுந்த கரவொலி , அந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு, கேட்டு நெக்குருகிய இதயங்களின் வாழ்த்தொலியாக பெங்களூரில் பொங்கிப் பெருகியது. எளியோரைக் கண்டு இரக்கம் வருவது இயற்கை! இயன்ற அளவு உதவி புரிந்துவிட்டு, அதனை அத்துடன் மறந்துவிடுவது தான் பெரும்பாலோர் குணம்!

    கண்டும் காணாமல் செல்வோரை, இதயம் உள்ள மனித இனத்திலேயே சேர்க்க நான் விரும்பவில்லை! கோடியில் ஒருவருக்கு மட்டுமே - என்றோ கண்ட காட்சியானாலும், இல்லாமையால் துன்பப்படுவோர் குறையை எப்படி நீக்குவது என்கின்ற சிந்தனை வளர்ந்து கொண்டே இருக்கின்றது. காலம் கனியும்போது தாங்கள் உதவி செய்கின்றனர்.

    அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவர் என்றல்ல , லட்சத்தில் ஒருவர் என்றல்ல, கோடியில் ஒரு குணக்குன்று என்று எம்.ஜி.ஆரை.க் கூறவேண்டும். உள்ளத்தாலும் , உயர்ந்த செயல்களாலும் மக்கள் மனதில் உன்னதமான இடத்திற்கே சென்று விடலாம்; சிகரத்தைத் தொட்டுவிடலாம். ஆனால், எப்போதும் எல்லோராலும் அதே இடத்தில் இருந்து மதிப்பையும் , மரியாதையையும் பெற்றுவிட முடியுமா? 'என்னால் முடியும்' என்று நிரூபித்து , நிலைத்து நிற்க எம்.ஜி.ஆரால் முடிந்தது. அதனால்தான் அவர் மக்கள் திலகமாக மட்டுமின்றி , மக்களின் இதயத் திலகமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

    நன்றி : அண்ணன் "நாகை" தருமன்...sb...

  11. #1100
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வரலாறு, இலக்கியமாகும் - அண்ணா!
    இலக்கியம், வரலாறாகும் எம்.ஜி.ஆர்.!
    'தோழனே! என் கரத்தால் உன் கரத்தை இறுகப்பற்றிக் கொள்கிறேன் . எல்லா செல்வத்திற்கும் மேலான இதயத்தை, அதில் ஊறும் அன்பை உனக்குக் காணிக்கையாக்குகின்றேன்'. எப்போதோ படித்த வெளிநாட்டுக் கவிஞன் ஒருவனின் கவிதை வரிகள் இவை! கவிஞனின் பெயர் நினைவில் நிற்க வில்லை . அவன் எழுதிய கருத்து நெஞ்சில் தங்கி , நிலைத்து விட்டது.

    அன்பை வாரி கலங்கும் அமுதசுரபியாக விசாலமான இதயத்தைக் கொண்டவராக வாழ்ந்து, ஆதரவுக் கரம் நீட்டி அனைவரையும் அரவணைத்துக் கொண்ட கருணையின் வடிவமங்கத் திகழ்ந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 'அன்பு' என்ற சொல்லை நினைத்தால் அகத்தில், அவர் உருவம் தோன்றுகின்றது! 'கருணை' எனக் காதில் ஒரு சொல் விழுந்தாலே, கடந்த காலம் காட்சிகளாய் கண்களில் தெரிகின்றது.

    அந்த அன்புருவம், கருணையின் வடிவம் வாட்டம் கொள்ளும்படியான வார்த்தைகளை வாரி வழங்குபவர்களும் இருந்தனர் அந்தக் காலத்தில்!
    சென்னை, அடையாறு பகுதியில் உள்ள "ஒளவை இல்லத்திற்கு" மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் . நிதியாக , ஒரு பெரும் தொகையை வழங்கினார். அதனைக் கொண்டு அங்கு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது . அதனைப் பாராட்ட ஒளவை இல்லத்தில் விழா ஒன்றும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். விரும்பவில்லை! அந்த அளவிற்கு, சிலரது அறிவை அடகுவைத்த, அகந்தைச் சொற்கள் அவரை வாட்டமடையச் செய்திருந்தன. அழுக்காறு கொண்டோர் எப்போது- எங்கேதான் இல்லாமல் இருக்கிறார்கள்?

    விழாவில் - பேரறிஞர் அண்ணாவும், அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் கண்ணிபத்தின் உருவம் டாக்டர் யு . கிருஷ் ணாராவ் அவர்களும், அப்போதைய தமிழக நிதியமைச்சர் சி . சுப்ரமணியம் அவர்களும் கலந்து கொண்டார்கள் . மரியாதைக்கும் மதிப்புக்கும் உரிய பெரியவர்கள் கலந்து கொள்கின்றார்கள் என்கின்ற காரணத்தினாலேயே , மக்கள் திலகம் பண்பாடு கருதி விழாவில் பங்கு கொண்டார். எனினும் ஆரவாரம், ஆடம்பரம் ஏதும் இன்றி , நகரில் முக்கியமானவர்கள் மட்டும் கலந்து கொள்ள எளிமையாக அந்த விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எனது சகோதரர் துரைராஜுடன் நானும் சென் றிருந்தேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் முகவாட்டத்தைக் கண்டதும் திடுக்கிட்டார். வழக்கமான கலகலப்பின்றி அவர் இருந்ததைப் பார்த்துவிட்டு, அருகில் அழைத்து அமரவைத்துக் கொண்டு காரணம் கேட்டார். தயங்கித் தயங்கி தனது மனதில் உள்ள வேதனையை, அன்னையின் பரிவோடு கேட்ட அண்ணனிடம் கொட்டிவிட்டார்.

    “அண்ணா ... நான் மக்களுக்கு உதவி செய்வதும் ... இதுபோன்ற அமைப்புகளுக்கு நிதி வழங்குவதும் புகழுக்காகத்தான் என்று கூறுகிறார்கள் . நான் எதையும் எதிர்பார்த்து, எவருக்கும் உதவவில்லை. அப்படி இருக்கும்போது, இப்படிச் சுடுசொல் வீசுவது சரிதானா? என்னால் இப்படிப்பட்ட வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை."

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் . வேதனையோடு வெளியிட்ட வார்த்தைகளைக் கேட்டதும், பேரறிஞர் அண்ணா கலகலவெனச் சிரித்துவிட்டார். மனவருத்தத்தைக் கூறினால், அண்ணா ஆறுதல் சொல்லுவார் என்று எதிர்பார்த்த எம்.ஜி.ஆருக்குப் பெரும் திகைப்பு!

    'மனக்குறையைக் கேட்டுத் தெரிந்து கொண்டபின்பும் அண்ணா .... இப்படி ... குழந்தைபோல் சிரிக்கின்றாரே! நம் வேதனை ... அவருக்கு வேடிக்கையாய்ப் போய்விட்டதோ! ' என்று மக்கள் திலகம் கருதினார்.

    “இதற்காகவா ... கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் . புகழுக்காகத்தான் நிதி உதவி செய்கிறீர்கள் என்று சொன்னால் மகிழ்ச்சியோ ' ஆமாம் ' என்று சொல்ல வேண்டியதுதானே ! இதைப் பெரிதாகக் கருதியா வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? புகழுக்காக உதவி செய்கிறீர்கள் என்று குறை சொல்வதே முதலில் தவறு . அவர்களுக்குப் புகழைப் பற்றியும் தெரியவில்லை. நிதி உதவியைப் பற்றியும் புரியவில்லை என்றுதான் அர்த்தம். உங்களைப் பார்த்து, புகழுக்கு ஆசைப்பட்டு அவர்களும் இதைப்போல் வாரி வழங்கட்டுமே , யார் வேண்டாம் என்று சொன்னார்கள்? அப்படிச் செய்தால் அவர்களுக்கும் நல்லது, இந்த நாட்டுக்கும் நல்லது” அண்ணாவின் சொற்கள் மக்கள் திலகத்தின் மனவே தனையைச் சற்று தணித்தது.

    டாக்டர் யு . கிருஷ்ணாராவ் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார் . ஔவை இல்லத்தில் கட்டிடம் கட்டுவதற்கு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நிதியாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கியதைக் குறிப்பிட்டுப் பலரும் பாராட்டினர். 1958 ஆம் ஆண்டில் முப்பதாயிரம் ரூபாயின் மதிப்பு எவ்வ ளவு இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தால் புரியும். 'இவ்வளவு பெரிய தொகையைத் தானாகவே, வலிய முன்வந்து வழங்கிய வள்ளல் இதுவரை எவருமில்லை' என்று அப்போது ஔவை இல்லத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

    அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்கள் பேசும்போது ஒரு கருத்தை வெளியிட்டார் . “எம்.ஜி.ஆர். பெருந்தொகையை நிதியாக வழங்கியதை உளமாரப் பாராட்டுவோம். அதே சமயத்தில், அவரோடு போட்டி போட்டு வெற்றி பெறும் வகையில், மேலும் அதிகமாக இது போன்ற நல்ல காரியங்களுக்கு, மற்றவர்கள் நிதி வழங்க வேண்டும். அவர்தான் கொடுத்துவிட்டாரே என்று வசதி படைத்தவர்கள் சும்மா இருந்து விடக்கூடாது"

    இதன்பின்பு - உயர்திரு சி. சுப்ரமணியம் அவர்கள் பேச்சைக் குறிப்பிட்டு , பலத்த கையொலிக்கும் மகிழ்ச்சிக்கும் மத்தியில் டாக்டர் யு . கிருஷ்ணாராவ் அழகாக உரையாற்றினார்:

    " நிதியமைச்சர் சி . சுப்ரமணியம் அவர்கள், நிதி அளிப்பதில் எம்.ஜி.ஆரோடு போட்டி போட்டு மற்றவர்கள் வெற்றி பெற வேண்டுமென்று குறிப்பிட்டார்கள். அது முடியுமென்று நான் நினைக்கவில்லை. அவரைவிட அதிகமாக வழங்க வேண்டுமென்று அடுத்தவர்கள் எண்ணுவதற்கு முன்பு, அதைவிட ஒரு பெரிய தொகையை எம்.ஜி.ஆர். வழங்கிவிடுவார். ஆகையால் வெற்றியை அவரிடமிருந்து எவரும் பறித்துவிட முடியாது. இந்த வகையில் அவரை யாரும் மிஞ்ச முடியாது என்று கருதுகிறேன். அதற்காக யாரும் நிதி வழங்கா மல் இருந்துவிட வேண்டாம்."

    அவைத் தலைமைக்கும், அகத்தூய்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவரும், உயர்ந்த பண்பாளருமான டாக்டர் யு . கிருஷ்ணாராவ் வார்த்தைகளைக் கேட்டுப் பூரித்துப் போன முதல் மனிதர் பேரறிஞர் அண்ணாதான். பிள்ளைகளைப் பெரியவர்கள் போற்றக் கண்டால் , அகமகிழ்கின்ற அந்தத் தாயின் வடிவமாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா! அவர் பேசும்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மனப்புண்ணுக்கு மறுபடியும் மருந்து போட்டார் . எதையும் தாங்கும் இதயத்துக்கு உரியவர்; இதயக்கனி என்றவரை, " இதையும் தாங்கிக் கொள் ' என்று கூறினார்.

    “எம்.ஜி.ஆர். இப்படியெல்லாம் நல்ல காரியங்களுக்கு நிதி வழங்குவது புகழுக்காகத்தான் என்று சிலர் கூறலாம் . அவர் இப்படிப்பட்ட புகழுக்கு ஆசைப்படவில்லை. இப்படி நிதி வழங்காமலேயே அவருக்குப் புகழ் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அப்படிப் பேரும் புகழோடு, மக்கள் பேராதரவையும் அன்பையும் பெற்ற ஒருவர், தான் உழைத்து சம்பாதித்த பொருளை இப்படி ஊரில் நிகழும் நல்ல காரியங்களுக்குக் கொடுத்து உதவுகின்றார் என்றால், அதுதான் அவருக் குள்ள தனித்தன்மை . இதனை உணராமல், புகழுக்காக அவர் நிதி வழங்கினார் என்று எவராவது கருதினால், 'ஆமாம்' என்று நான் கூறுகின்றேன். அதிலும் தவறில்லை.

    ' ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது உதியம் இல்லை உயிர்க்கு '

    என்று வள்ளுவர் குறளில் அழகாகச் சொல்லி வைத்துள்ளார் . கொடுப்பதும், புகழோடு வாழ்வதும்தான் சிறப்பு என்று கூறிவிட்ட பிறகு , வேறு விளக்கம் தேவையா? உயிருக்கு ஊதியமே புகழ்தான் என்கின்றார். ஆகையால் உயிர் உள்ளவர்களெல்லாம் புகழ் என்ற ஊதியம் பெற வேண்டும். இல்லையென்றால் ... ”

    அறிஞர் அண்ணா பேச்சை நிறுத்தினார். ஒரு கணம். கூடியிருந்தவர்கள் - ' உயிர் இல்லாவிட்டால் பிணம் ' என்ற பொருள் புரிந்தவர்கள் பலத்த கையொலி எழுப்பி தங்களை வெளிப்படுத் திக் கொண்டனர் .

    "இந்த உலகத்தில் நிலையானது எதுவுமில்லை; புகழைத்தவிர ! புகழாகவே வாழ்கின்றவர் புகழைப் பெற விரும்புகின்றார் என்று சொன்னதுதான் தவறு! புகழைப் பெற நிதி உதவியதாகச் சொன்னால் குறையில்லை! அப்படிச் சொல்பவர்களும் அந்தப் புகழைப் பெற முயற்சிக்கலாம். எம்.ஜி.ஆருக்கும், என எனக்கும் இருக்கின்ற தொடர்பை நான் சொல்லித் தெரிந்து கொள்கின்ற நிலையில் நாடு இல்லை. எம்.ஜி.ஆரைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகக் கருதப்படும். முல்லைக்கு மணம் உண்டு என்பதைக் கூறவா வேண்டும். "

    பேரறிஞர் அண்ணாவின் மந்திரச் சொற்களுக்கு உள்ள மகிமை அதன்பின்புதான் காண முடிந்தது. இதுவரையில் சோர்வாக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முகம் ஆயிரம் நிலவாக ஒளி வீசியது. கவலை மேகங்கள் விரட்டப்பட்டன.

    சங்க காலத்தில் தமிழ் மூதாட்டி ஔவைப்பிராட்டியை பறம்பு மலையை ஆண்ட மன்னன், முல்லைக் கொடிக்குத் தேர்தந்த பாரி வள்ளல் ஆதரித்தான். ஒளவையின் முத்துத் தமிழ்கேட்டு அகமகிழ்ந்தான் என்று இலக்கியத் தடங்கள் அறிவிக்கின்றன.

    இலக்கியம் இங்கு வரலாறாகிறது !

    பாங்கிமலைப்பாரி என்று அழைக்கப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ( அடையாறு ) ஔவை இல்லத்தை ஆதரித்தார். பலவகையிலும் நிதி உதவி செய்தார். வரலாறு தொடர்கிறது - வாழ்கிறது ! மன்னன் பாரி போரில் மாண்டதும் , ஆதரவற்றிருந்த அவனது மகளிர் அங்கவை , சங்கவையை ஒளவைதான் அரவணைத்து அன்புகாட்டி வாழ்வளித்தாள்.

    அடையாறு ஔவை இல்லம், இன்று ஆதரவற்றவர்களுக்கு வாழ்வளிக்கும் அன்புக்கோயிலாக விளங்குகிறது! பாரியும், ஒளவையும் வாழ்வுதரும் ஆலயங்களாக வாழ்ந்து, வாழவைத்துக் கொண்டிருக்கின்றார்கள் .

    இங்கு வரலாறு இலக்கியம் ஆகின்றது.

    கடையெழு வள்ளல்களை ஒவ்வொருவராய்க் கண்முன்னே கண்டது போல் வாழ்ந்தவர் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.தான்!

    நன்றி : அண்ணன் "நாகை" தருமன்...vr...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •