Page 122 of 210 FirstFirst ... 2272112120121122123124132172 ... LastLast
Results 1,211 to 1,220 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1211
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # அகிலத்தை உய்விக்கும் ஆதவனும்
    ஊளையிடும் குள்ள நரிகளும் #


    எங்கு பார்த்தாலும் தலைவர் பெயர் புகழ்க் கொடி வீசி பறப்பதை பார்க்கும் போது தலைவரின் பக்தர்கள் நமக்கெல்லாம் ஆனந்தத்தில் கூத்தாட வேண்டும் போல் இருக்கிறது,

    ஆனால் இங்கே ஒரு சில குள்ள நரிகள் எங்கிருந்து கொண்டோ ஊளையிட்டுக் கொண்டு வயிறு எரிந்து
    வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறதுகள்

    இப்போது கூட ஒரு கட்சியினர் நடத்தப் போகும் யாத்திரை ஒன்றில் தலைவரை மட்டும் உருவகப் படுத்தி
    ஒரு பாடலை வெளியிட்டிருக்கிறார்கள், அதை பார்க்கும் போது என்னே தலைவரின் மகிமை என்று எண்ணத் தோன்றுகிறது,


    நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லுவது இல்லை
    ஆனால் எதையாவது ஒன்றை தினசரி புலம்பிக் கொண்டே இருப்பது,

    நாம் இலங்கையில் சாதனை சரித்திரத்தை ஏற்படுத்திய தலைவரின் " உலகம் சுற்றும் வாலிபன் " பட சரித்திரத்தை கொடுத்த வுடன் உடனே இங்கே ஈயம், பித்தளை ரேஞ்சில் கூட சீந்த ஆளில்லாத " போலட் பெரம்பு நாத் " படம் இலங்கையில் 50 லட்சம்
    வசூல் செய்தது என்று ஒரு பிட்டப் போட்டு நிம்மதி அடைந்திருக்கிறார் நம்ம மன்னாரன் கம்பெனி டுபாக்கூர் தங்கவேல் ( சாமியோவ் போட்டதுதான் போட்டீங்க ஒரு கோடியா போட்டிருக்கக் கூடாதா? )

    இந்த பெரம்பு நாத் படம் ஒரு இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பு,

    இங்கே சட்டி கமந்ததும்
    இலங்கை திரைப்பட கூட்டுத்தாபன நிறுவனமே போட்டு மரண இழு இழுத்ததில்
    படம் ஓடிய தியேட்டர்களே இருந்த ஒன்றிரண்டு பேர்களை தாலாட்டி தூங்க வைத்ததைத் தவிர வேறு ஒன்றையும் சாதிக்கவில்லை,
    ஆனால் இவ்வளவு காலம் கழிந்து நம் டுபாக்கூர் எப்படி அளந்திருக்கிறது பார்த்தீங்களா இதுதான் நம்ம தங்கவேலின் ஸ்பெஷாலிட்டி,

    அடுத்தது தலைவரும் 1980 பாராளுமன்ற தேர்தலில் தோற்றவராம், அதனால் அவரை தோற்கடிக்கவே முடியாது என்பது பொய்யாம், இன்னும் இத்யாதி, இத்யாதி கதைகள்,

    ஆனால் இந்த கதைகளை சொல்லுவது யார் என்றால் கணேசனை ஒரு வார்டு மெம்பர் கூட ஆக்க முடியாத சல்லிப்
    பயலுக சொல்லுவதை பார்க்கும் போதுதான் நமக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது,

    எம்ஜிஆர் எப்படி ஜெயித்தார் என்று ஆராய்ச்சி வேறு,

    ஏண்டா துப்புக் கெட்ட பயலுவளா இதை சொல்லுவதற்குதான் ஒரு அருகதை வேண்டாமா?

    எம்ஜிஆர் ஒரு கல்யாண வரவேற்பில் கலந்து கொண்டு வெளியில் வந்தாராம் அப்போது ஒரு நாலைந்து பெண்கள் ஒரு கடையில் சோடா குடித்துக் கொண்டிருந்தார்களாம்
    உடனே தலைவர் அவர்களைப் பார்த்து இரட்டை விரல்களை காட்டினாராம்,
    ஆனால் அவர்கள் ஐந்து
    விரல்களை விரித்து காட்டியவுடன் தலைவர் வெல வெலத்துப் போய் விட்டாராம்
    இந்த செய்தி அன்றைய ஒரு பத்திரிகையிலும் வெளி வந்ததாம்

    சரி இதை உண்மை என்றே வைத்துக்கொள்வோம்
    இவர்கள் குறிப்பிட்ட அந்த பத்திரிகையின் லட்சணத்தையும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்,

    1980 இல் தலைவர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று வந்த பிறகு இவர்கள் ஒரு புலனாய்வு இதழ் ஒன்றை ஆரம்பித்தார்கள்,

    பொதுவாக புலனாய்வு இதழ்கள் என்றாலே ஒரு
    Anti writing method முறையை வைத்திருப்பார்கள்,


    அதாவது நல்ல செய்திகள் எவ்வளவு போட்டாலும் அதற்கு எதிர்மாறாக அரசை எதிர்த்து ஏதாவது போட்டால் அதைத்தான் அதிகம் பேர் விரும்பி படிப்பார்கள்

    இந்த ஒரு தந்திரத்தைதான் அந்த புலனாய்வு இதழும் கையாண்டது

    தொடர்ந்து மழை இல்லாமல் தமிழ்நாடே தத்தளித்துக் கொண்டிருந்தபோது தலைவர் அரிசி விலையை கட்டுக்குள் வைத்திருந்ததை அவர்கள் எழுதவில்லை, யாரும் சிந்திக்காத தெலுங்கு கங்கை திட்டத்தை கொண்டு வந்ததை அவர்கள் எழுதவில்லை மாறாக
    திண்டுக்கல் பக்கத்தில் ஒரு கிராமம் தண்ணீருக்கு கஷ்டப்படுவதையும் அதற்கான தீர்வை அரசு எடுக்கவில்லை என்றும் குறை சொல்லி எழுதியது,

    இந்த செய்தி வெளிவந்தவுடன் தலைவரின் கவனத்திற்கு சென்றது,
    தலைவர் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் கடுமையாக கண்டித்ததோடு உடனே அந்த கிராமத்தில் தண்ணீர் வசதிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடுக்கி விட்டார்,
    ஆனால் இதை எதையும் அந்த ஏடு எழுத வில்லை
    உடனே கலையுலக பேரறிவாளி பாலச் சந்தரும் அதை " தண்ணீர் தண்ணீர் " என்று அரசை விமர்சித்து படமாக எடுத்தார்,

    தலைவர் அதற்காக கோபப்படவில்லை மாறாக தமிழக அரசின் விருதுக்கு அந்த படத்தை தேர்ந்தெடுத்தார்,

    ஒரு மனிதன் எப்படிப்பட்ட நல்ல மனிதனாக இருந்தாலும் 100 சதம் நல்லாட்சியை கொடுப்பது கடினம்,

    பகவான் ராமச்சந்திர மூர்த்தி கூட என்னை ஏன் பின்னால் இருந்து அம்பு எய்து வீழ்த்தினாய் என்ற வாலியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை

    அது போல் ஒரு அரசாங்கம் என்றால் அதிகாரிகளின் கவனக்குறைவால் சில தவறுகள் நடக்கத்தான் செய்யும்,

    ஆனால் அப்போதெல்லாம் இந்த மாதிரியான புலனாய்வு இதழ்கள் ஒரு பரபரப்பை உண்டு பண்ணுமே தவிர அதற்கு மேல் நடக்கும் ஆக்கப் பணிகளை கண்டு கொள்ளாது

    ஆனால் இதே பத்திரிக்கை அதிபரின் மகன் அப்போது ஓரிரு படங்களில் தலை காட்டிய ஒரு நடிகையுடன் ( தற்போது அந்த நடிகை பிரபலங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ) உள்ள தொடர்புகளைப் பற்றி போட்டிக்கு இருந்த மற்றொரு புலனாய்வு இதழ் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து செய்திகள் வெளியிட்ட போது இந்த புண்ணிய புருஷர்கள் வாலை சுருட்டிக் கொண்டு ஒன்றும் தெரியாதது போல் அமைதி காத்தார் கள்,

    அதாவது தனக்கு வந்தா
    ரத்தம், அதே அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி இதுதான் அந்த இவர்கள் குறிப்பிட்ட பத்திரிகை லட்சணம்,

    சோ ராம சாமி தன் துக்ளக் இதழ் ஒன்றில் ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு எப்படி பதில் அளித்தார் தெரியுமா?

    " இப்போது நடக்கும் ஆட்சி அதிகாரங்களின் அலங்கோலத்தை பார்க்கும் போது எம்ஜிஆரின் ஆட்சி ஒன்றைத்தான் பொற்கால ஆட்சி என்று அடித்துச் சொல்வேன் என்று அறுதியிட்டு, உறுதியிட்டு சொன்னார்

    காலம் கடந்த பிறகு அவருக்கு வந்த ஞானமுதிர்ச்சி அது,

    அதே போல்தான் முன்பு
    நெகமம் கந்தசாமியுடன் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக தலைவரை எதிர்த்த டி. ராஜேந்தர் இன்று எந்த மன்றத்திலும் தலைவர் புகழை ஓங்கி ஒலிக்கச் செய்கிறார்

    ஆனால் இவர்கள் குறிப்பிடும் கணேசன் பெயர் எங்காவது தென்படுகிறதா என்று கேட்டால் " இல்லை " என்ற பதிலைத் தவிர வேறு எதுவும் இல்லை

    அடுத்ததாக தலைவர் கடைசி காலத்தில் வாய் பேச முடியாமல் கஷ்டப்பட்டு இறந்தாராம், ஆனால் கணேசன் கடைசி காலத்தில் சிறு சிறு உபாதைகளுடன் நிம்மதியாக போய் சேர்ந்தாராம்,

    நீங்கள் சொன்னது எல்லாம் சரிதான்

    கணேசனின் பேத்தி சத்தியலட்சுமியை வளர்ப்புமகன் சுதாகரனுக்கு பெண் கேட்டு வந்தபோது கணேசன் அதை எதிர்த்ததாக அப்போது செய்தி வந்தது, அப்போது சாந்தியின் கணவர் நாராயணசாமி
    " எல்லாம் எங்களுக்கும் தெரியும், இதில் யாரும் தலையிட வேண்டாம்" என்று கணேசன் மூஞ்சி யில் அடித்தது மாதிரி பதில் சொன்னதெல்லாம் பத்திரிக்கையில் வந்ததே அதை எல்லாம் எடுத்து போட வேண்டியதுதானே?
    இதனால் கணேசன் மனம் வெதும்பி அந்த கல்யாணத்தில் ஒரு ஓரமாக நின்றதும் நடந்த சம்பவம்தானே,

    " என் ஆசை ராசாவே " படப்பிடிப்பில் உடல் நலம் சரியில்லாத நிலையிலும் கலந்து கொண்ட சிவாஜியிடம் ஒரு நிருபர் கேட்கிறார்

    " சார் இந்த நிலையிலும் கட்டாயம் நடித்துத் தான் ஆக வேண்டுமா?

    அதற்கு சிவாஜி சொல்கிறார் ஒரு வேதனை சிரிப்புடன் வேடிக்கையாக
    " இல்லன்னா தன் மகன் பெயரைச் சொல்லி எனக்கு சோறு போட மாட்டான் "

    இதுவும் பத்திரிக்கையில் வந்த செய்திதான், இந்த சம்பவம் எல்லாம் எந்த மரியாதையின் வெளிப்பாடோ தெரியவில்லை ,

    கணேசன் மருத்துவ மனையில் இருந்த போது உணவுக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது
    அந்த நேரத்தில் ரொம்பவும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒரு வாழைப் பழம் சாப்பிட முயற்சித்த போது ஒரு நர்ஸ் வந்து அதை தடுத்து விட்டார்

    அப்போது சிவாஜி சொன்ன வார்த்தை

    " ஒரு வாழைப்பழம் கூட சாப்பிட முடியாது என்றால் நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கதறி அழுதார்,


    எனவே எல்லா மனிதனும் தன் முதுமைக் காலத்தில் கஷ்டப்பட்டு, வேதனைப் படத்தான் செய்வான், எனவே ஏதோ எம்ஜிஆர் மட்டும் கஷ்டப்பட்டு இறந்த மாதிரி மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதை இந்த
    ஊளைகள் நிறுத்துவார்கள் என்று நம்புவோம்,

    பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் திரு. கன்ஷிராம் அவர்கள் கூட நோய்வாய்ப் பட்டு மருத்துவ மனையில் இருந்த போது அவரின் சொந்த மனைவி பிள்ளைகள் கூட அவரை பார்க்க அனுமதிக்கப் பட வில்லை, அதற்கு ஏதேதோ காரணங்கள்,

    எனவே மனிதனின் கடைசி கால அவஸ்தையைக் கூட
    எழுத்தில் கொண்டு வருகிறீர்கள் என்றால் உங்களின் தரம் நன்றாகவே தெரிகிறது

    ஆனால் ஒன்று இந்த மாதிரி தனிப்பட்ட விவரங்களை எழுதுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்
    இல்லை என்றால் இதற்கு மேற்பட்ட சமாச் சாரங்களும் வெளி வரும் என்பதை எச்சரிக்கை கலந்த அன்போடு கேட்டுக்கொள்கிறேன்


    தலைவரின் பக்தன்


    ஜே.ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1212
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ...ஒரே நாளில் வெளியான சுமதி என் சுந்தரி மற்றும் பிராப்தம் ரெண்டுமே மாபெரும் தோல்வி தான் பிராப்தம் பல தியேட்டர்களில் பத்து நாள்கள் கூட தாண்ட வில்லை......குடந்தை ஜூபிடரில் பிராப்தம் ஒன்பது நாள்களே ஓடினது சு.எ. சுந்தரி இருபது நாள்கள் போல ஓடினது இப்படித்தான் எல்லாம் ஊர்களிலும் நடந்தது ... ஓரே நாளில் வெளியான நவராத்திரி முரடன் முத்து ............ஊட்டி வரை உறவு .....இரு மலர்கள்.........................சொர்க்கம்........எ ங்கிருந்தோ வந்தாள்............டாக்டர் சிவா..........வைர நெஞ்சம் எல்லா படங்களும் இதே கதைதான்... Apn...

  4. #1213
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ulagamsutrumvaliban maruvelittabathu suntheatere7weeks Hf srinivasa kamathenu Pylot eachandevry theatre5weeks6weeksHF inruvarai Ulagam sutrumvaliban padatthai EnthaPadamum muriyadikkavillai allways MGR SupperStar MGREverGreenSupper Star Magatthana MakkalSakthi MakkalThilagam...........

  5. #1214
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1968 இல் தேர்த்திருவிழா படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் நகரை சுற்றி நடந்து கொண்டு இருந்தது.

    டி.எஸ்.ஆர் .என்பவர் வீட்டில் தங்கி இருந்து படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் காட்சிகளை எடுக்க சென்று கொண்டு இருந்தனர்.

    10 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்து வந்தது.... தலைவர் மற்றும் குழுவினர் அந்த வீட்டில் தங்கி இருக்கும் விவரம் தெரிந்து நாளுக்கு நாள் டி.எஸ்.ஆர்..அவர்கள் வீட்டின் முன்னால் வெள்ளம் போல ரசிகர்கள் கூட துவங்கினர்.

    கண்ணாடி ஏற்ற பட்ட காருக்குள் அனைவரும் வெளியே படப்பிடிப்புக்கு செல்ல துவங்க வந்து குவிந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அதிகம் ஆகி கொண்டே போனது.

    அனைத்தும் அறிந்த தலைவர் பணம் போட்டு படம் எடுக்கும் அவருக்கு ஒரு பங்கம் வந்து விட கூடாது என்று தெளிவாக இருந்து...

    படப்பிடிப்பின் இறுதி நாள் அன்று யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு ஏற்பாடு செய்து இருந்தார்...தன்னுடன் இருந்த அனைத்து நடிகர்களையும் அம்மையார் ஜெ. உட்பட

    படப்பிடிப்புக்கு உதவிய ஒரு வேனில் கூரையில் நிற்க வைத்து பகுதி பகுதியாக சுழற்சி முறையில் அனைவரையும் ரசிகர்கள் முன்னால் அணிவகுத்து நிற்க செய்து...

    இறுதியில் தானும் அந்த வேனில் மேல் ஏறி நின்று மொத்த ரசிகர்கள் பொது மக்கள் பார்த்து கை அசைக்க...

    அப்போது எழுந்த கரவொலி... கும்பகோணம் நகரை சுற்றி எதிர் ஒலித்ததை இப்போது நினைத்தாலும் புல்லரிக்கும் சம்பவம் அது...

    மொத்த கூட்டத்தையும் தாண்டி முண்டி அடித்து கொண்டு வந்த ஒரு ரசிகரை தலைவரின் உதவியாளர்கள் தடுக்க தலைவர் அவரை பார்த்து விட்டு விடுங்கள் அவரை என்று அழைக்க.

    சாண்டோ தேவர் அவர்கள் அசால்ட்டாக அந்த ரசிகரை மேலே தூக்கி தலைவர் கிட்டே விட....அவரும் தலைவரை தொட்டு தொட்டு மகிழ.

    அவர் கொடுத்த கடலை பொட்டலத்தை பிரித்து எடுத்து சாப்பிட்டு கொண்டே பொது மக்களுக்கு எந்த சிரமம் கொடுக்காமல் நீங்கள் அனைவரும் கலைந்து செல்வதே நீங்கள் எனக்கு செய்யும் மிக பெரிய உதவி என்று சொல்கிறார் தலைவர்.

    மகுடிக்கு நாகம் கட்டு படுமோ என்னவோ நம் மன்னவன் சொல்லுக்கு கட்டு பட்டு மொத்த கூட்டமும் அமைதியான முறையில் கலைந்து சென்றது இன்னமும் ஒரு வரலாறு.

    வாழ்க தலைவர் புகழ்.

    உங்களில் ஒருவன் ஆக நன்றி...தொடரும்..

    படத்தில் உள்ள இந்த தலைவரின் சிலை போல ஒரு அருமையான கம்பீரம் ஆன சிலையை இது வரை இன்னும் பார்க்க முடியவில்லை...

    இந்த சிலை எங்கள் நெல்லை மாநகரில் முக்கிய சந்திப்பில் அமைந்துள்ளது என்பது எங்களுக்கு பெருமை...நன்றி.

    அடுத்தவர் பாட்டு என்றாலும் இவருக்கு பொருந்தும்...அந்த வானைத்தை போல மனம் படைத்த மன்னவன் இவர் அல்லவா....

    கட்டி தங்கம் வெட்டி எடுத்து பாசம் என்னும் சாறு பிழிந்து தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவம் அடா...அவர் தள தள வென்று மின்னுவதில் பெருமையடா....

    The one and only boss....ever never again in the universe............

  6. #1215
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "கட்டோடு குழல் ஆட" காலத்தை வென்ற அழகான பாடல்..!

    எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை !
    அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள்.

    எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார்.

    'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது.

    இயற்கை எழில் கொஞ்சும் ஆற்றங்கரையில், இரு இளம் பெண்களோடு இணைந்து ஆடிப்பாடி வருகிறார் எம்ஜிஆர்.

    இதுதான் காட்சியமைப்பு.

    கண்ணதாசன் கண்களை மூடியபடி சிந்தித்துக் கொண்டிருந்தார்.

    அவர் கண்களுக்குள்
    தேவாரம், திருவாசகம்,
    சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், திருக்குறள்... அத்தனையும் ஓடி வந்து அழகாக நடனம் ஆடின.

    எதை எடுப்பது, எதை விடுப்பது ? எதுவும் புரியவில்லை கண்ணதாசனுக்கு.

    கண் திறந்து பார்த்தார் கண்ணதாசன். அந்த அறைக்குள் அமர்ந்திருந்து,
    தன்னையே இடைவிடாமல் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் தமிழன்னையின் தரிசனத்தை கண்டு கொண்டார்.

    கண் மூடி, கை கூப்பி வணங்கினார் தமிழன்னையை !
    "தாயே, தமிழே ! நான் படித்த ஆயிரக்கணக்கான இலக்கியங்களில், இந்த இடத்துக்கு பொருத்தமான வரிகள் எவை தாயே ?
    எடுத்துச் சொல் அன்னையே,
    வேண்டிக் கொள்கிறேன் உன்னையே !"

    புன்னகைத்தாள் தமிழன்னை!
    பொருத்தமான வரிகளை பொங்கி வரச் செய்தாள் கண்ணதாசன் உள்ளத்தில் !

    மாணிக்க வாசகர் எழுதிய வரிகள், கண்ணதாசன் மனதுக்குள் வந்து ஆடின.

    மாணிக்கவாசகர் மதுரை வீதியில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார். அங்கங்கே பெண்கள் மர நிழல்களில், முற்றங்களில், ஊஞ்சல்களில், அமர்ந்த வாறும், நின்றவாறும் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

    அங்கே சில மங்கையர் வண்ணக் கோலப் பொடி இடிக்கிறார்கள். அப்படி தாள லயத்தோடு உலக்கையை
    இடிக்கும்போது அவர்கள் பாடும் பாடல் இது :

    "முத்தணி கொங்கைகள் ஆட ஆட
    மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
    சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்
    செங்கயற் கண்பனி ஆட ஆடப்
    பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
    பிறவி பிறரொடும் ஆட ஆட
    அத்தன் கருணை யொ டாட ஆட
    ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

    ஆஹா, ஆஹா !
    தேனினும் இனிய இந்த தித்திக்கும் தமிழை தேடி எடுத்து தனக்குத் தந்த தமிழன்னையை நோக்கி மகிழ்வுடன் புன்னகை செய்தார், கரம் கூப்பி வணங்கினார் கண்ணதாசன்.

    அப்புறம் என்ன ?

    எம்.எஸ்.விஸ்வநாதனை நோக்கி சொன்னார் கண்ணதாசன். "விச்சு, இது சரியா இருக்குமா பாரு."

    "சொல்லுங்க கவிஞரே!"

    "கட்டோடு குழலாட ஆட ஆட
    கண்ணென்ற மீனாட ஆட ஆட
    கொத்தோடு நகையாட ஆட ஆட
    கொண்டாடும் மயிலே நீ ஆடு!"

    "ஆஹா" என்றார் எம்.எஸ்.வி.

    கண்ணதாசன் தொடர்ந்தார் :
    "பாவாடை காற்றோடு ஆட ஆட
    பருவங்கள் பந்தாட ஆட ஆட
    காலோடு கால்பின்னி ஆட ஆட
    கள்ளுண்ட வண்டாக நீ ஆடு!"

    பொங்கி வரும் பூரிப்பில் கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டார் எம்.எஸ்.வி.

    காலத்தை வெல்லப் போகும் ஒரு பாடல் அந்த அறைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்க,
    வந்த தன் வேலை முடிந்ததென எவருக்கும் தெரியாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள் தமிழன்னை.

    அவள் சென்ற திசை நோக்கி கை கூப்பி தொழுதார் கண்ணதாசன் :

    “வட்டிக் கணக்கே
    வாழ்வென் றமைந்திருந்த
    செட்டி மகனுக்கும்
    சீர்கொடுத்த சீமாட்டி!

    தோண்டுகின்ற போதெல்லாம்
    சுரக்கின்ற செந்தமிழே
    வேண்டுகின்ற போதெல்லாம்
    விளைகின்ற நித்திலமே

    உன்னைத் தவிர
    உலகில்எனைக் காக்க
    பொன்னோ பொருளோ
    போற்றிவைக்க வில்லையம்மா!
    என்னைக் கரையேற்று
    ஏழை வணங்குகின்றேன்!”

    நானும் வணங்குகின்றேன்
    கண்ணதாசனை !
    தமிழ்த்தாயின் தனிப் பெரும் தவப் புதல்வனை !
    இணையத்தில் படித்த அருமையான பதிவு!
    "பெரிய இடத்து பெண்" படத்தில் எம். எஸ்.வி. அவர்கள் இசையில், சுசீலா அம்மாவும், ஈஸ்வரி அம்மாவும், டி. எம். எஸ் அவர்களும் மிக இனிமையாக பாடியிருக்கும் இந்த பாடல், பாடலின் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல் இசையுடன் ஆஹா! அருமை!...vr.........

  7. #1216
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று நவ 3ம் தேதி. "படகோட்டி" "நவராத்திரி" "முரடன் முத்து" மூன்றும் ஒரே நாளில் 3.11.1964. தீபாவளி அன்று திரைக்கு வந்த படங்கள். "முரடன் முத்து" ஒன்றிரண்டு திரையரங்கில் கூட 50 நாட்கள் ஓடியதா என்று தெரியவில்லை. இதில் "நவராத்திரி" சிவாஜியின் 100 வது படம் என்பதால்
    முன்னரே 100 நாட்கள் ஓட்டுவதற்கு திட்டமிட்டு வடக்கயிறு தயார் செய்து விட்டார்கள். சென்னையில் 4 தியேட்டரிலும் 100 நாட்கள் ஓட்டினார்கள். இது தவிர மதுரை திருச்சி போன்ற ஊர்களிலும் 100 நாட்கள் ஓட்டி அவர்கள் சாதனை பட்டியலில் சேர்த்துக் கொண்டார்கள்.

    ஆனால் இவ்வளவு நாட்களாக வசூலை வெளியிடவில்லை. சமீபத்தில் நிறைய சிவாஜி படங்களுக்கு அவர்கள் பட்டறையில் வசூல் ரெடி பண்ணி போட்டார்கள்.
    மதுரை ஸ்ரீதேவி யில் 108 நாட்கள் ஓட்டி அவர்கள் காட்டிய பட்டறை வசூல் ரூ 187738.13 . இந்த அளவு வசூல் செய்திருக்க வாய்ப்பில்லை.
    இருந்தாலும் அதை அப்படியே எடுத்துக் கொள்வாம்.

    "படகோட்டி" 100
    நாட்கள் ஓடாமலே நியூசினிமாவில் 93 நாட்களில் பெற்ற வசூல்
    ரூ 195320.85 . படகோட்டியை விட 15 நாட்கள் அதிகம் ஓட்டியும் அவர்கள் காண்பித்த பட்டறை வசூல் "படகோட்டி"யை விட சுமார் ரூ 8000 குறைவுதான். இப்படித்தான் ஒரு ஊரில் கணேசன் படங்கள் 50 நாட்கள் ஆனவுடனே கைபுள்ளைங்க அந்த தியேட்டரில் டேரா போட்டு விடுவார்கள். 100 நாட்கள் ஓட்டி முடியும் வரை தியேட்டர் ஊழியர்களுக்கு நல்ல கவனிப்பு இருக்கும்.

    மேலும் "படகோட்டி" மொத்தம் 44 அரங்குகளில் வெளியாகி 10 ஊர்களில் 12 வாரங்கள் ஓடியது.
    சென்னை பிளாசாவில் 100, புவனேஸ்வரியில் 84, கிரவுனில் 70 நாட்களும் ஓடியது. சீனிவாசாவில் 6 வாரமும் திருச்சி பேலஸ் 93, கோவை 84, இது தவிர மொத்தம் 30 அரங்குகளில் 50 நாட்களும் அதை தாண்டியும் ஓடியது. ஆனால் "நவராத்திரி" மொத்தமே 13 அரங்குகளில்தான் 50 நாட்களை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

    முதல் வெளியீட்டில் படகோட்டி 44 திரையரங்குகளின் ஓட்டத்தை கணக்கிட்டால் 2000 நாட்களை தாண்டும். ஆனால் நவராத்திரி முதல் வெளியீட்டில் சுமார் 35 அரங்குகளில் வெளியாகி 1200 நாட்களுடன் பகல் வந்து விட்டது. மறுவெளியீட்டில் "படகோட்டி" ஓடிய நாட்களை கணக்கில் சேர்த்தால் இந்த பதிவு போதாது. திரையிட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து ஓடியதை கணக்கில் வைக்க நவீன ஆடிட்டர் வந்தாலும் முடியாது. ஆனால் நவராத்திரி முதல் வெளியீட்டிலேயே 9 மிகை நடிப்பை சகிக்க முடியாததால் மறுவெளியீடு
    என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது நகைப்புக்குரியது.

    ஒருவரது மோனோ ஆக்டிங்கை 9 வேடத்தில் பொறுமையுடன் பார்க்க நாடக மேடைதான் சிறந்தது. அதை சினிமாவாக எடுத்து வெற்றியை விலை கொடுத்து வாங்க வேண்டியதாயிற்று. சென்னையில் 4 தியேட்டரில் 100
    நாட்கள் ஓட்டிய பெருமை பேசும் கைபுள்ளைங்க வசூலை வெளியிட வேண்டியதுதானே. "கைகொடுத்ந தெய்வம்" படத்தையும் 4 தியேட்டரில் ஓட்டி வசூலை வெளியிடவில்லை.
    மதுரையில் "நவராத்திரி" படத்துக்கு ரூ50000 வரை பட்டறை
    மூலம் அதிக வசூலை கூட காண்பித்தும் "படகோட்டி"யின் உண்மை வசூலை நெருங்க முடியவில்லை.

    சென்னையில் "காவல்காரன்" 4 திரையரங்குகளில் வெளியாகி அதில் 3 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடினாலும் மொத்தம் 372 நாட்களில் ரூ 9,67,241.98 வசூல் செய்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் கணேசனின் இந்த இரண்டு
    4 தியேட்டர் 100 நாட்கள் படங்களும் சென்னையில் ரூ 6 லட்சத்தை கூட தொட முடியாத அவலத்தை வெளியில் சொல்ல முடியாமல் கைபிள்ளைங்க கலக்கத்தில் உள்ளது வெட்கக்கேடான விஷயம்..........ksr.........

  8. #1217
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தாயாகி #நின்றாய்

    பெரியார் நூற்றாண்டு விழா...
    சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நடைபெற்றது...��

    அந்த விழா ஆரம்பிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னால் ஒரு பெண்மணி தன் குழந்தைக்குப் பெயர் வைக்க எம்ஜிஆர் அருகில் வர அந்த நேரம் பார்த்து தேசியகீதம் ஒலித்தது...குழந்தை 'வீல்' என்று அழ ஆரம்பித்து விட்டது...��

    உடனே எம்ஜிஆர் சமயோசிதமாக அந்தப் பெண்ணிடமிருந்து அவசரமாக குழந்தையை வாங்கி அந்தம்மாவிடமிருந்த பால்புட்டியை குழந்தையின் வாயில் வைத்து தன் கைகளில் ஏந்தியவாறு தேசியகீதம் முடியும் வரை நின்றார்...
    அதுவரை குழந்தையும் அழாமல்
    சமத்தாக இருந்தது...��

    அந்தக் குழந்தையாக நான் இருந்திருக்கக் கூடாதா ...! ��...

  9. #1218
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று எல்லா கட்சிகளுக்கும்
    எல்லா தலைவர்களுக்கும் எம் ஜி ஆர் தேவை
    எம் ஜி ஆரை சுற்றியே தமிழகம் சுழல்கிறது
    ஏன்
    எம் ஜி ஆரை போல் சகலகலாவல்லமை பொருந்திய தலைவரை கண்டதில்லை உலகம் அப்படிபட்ட ஒரு சக்தி கொண்ட எம் ஜி ஆர் தமிழகத்தில் உதித்ததால் தமிழகம் கொணடாடுகிறது

    வறுமையை உணர்ந்தவர் அதனால் வறுமையை ஒழித்தவர் எம் ஜிஆர்

    கருணை மனம் கொண்டவர் அதனால் எல்லோரிடம் கருணை கொண்டார் எம் ஜி ஆர்

    வெற்றி எதிலும் பெற்றதால் அதிகம் பணம் சம்பாதித்தார் அதை மக்களுக்கு கொடுத்தார் எம் ஜி ஆர்

    வீரம் கொண்டவர் அதனால் வன்முறை கொண்டவர்களிடம் இருந்து நல்லவரை காத்தார் எம் ஜி ஆர்

    திறமை மிக்கவர் அதனால் ஒரு பொற்க்கால ஆட்சி தந்தார் எம் ஜி ஆர்

    அன்பானவர் அந்த அன்பால் கிருஷ்ணா நதியை தமிழகத்தில் பாயவைத்தார் எம் ஜி ஆர்

    எம் ஜி ஆர் பெயரை சொன்னாலே உற்சாகம் வீரம் கொடை வெற்றி தன்மை வருவதால் எல்லோருக்கும் எம் ஜி ஆர் வேண்டும்

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்.........

  10. #1219
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*30/10/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    நூற்றாண்டு விழா கண்ட*நாயகர், மன்னாதிமன்னன், நாடோடி மன்னன், நம்ம வீட்டு*பிள்ளை, உங்க*வீட்டு*பிள்ளை, எங்க வீட்டு பிள்ளை என்று இந்த தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிற* அந்த மகோன்னத*தலைவரின்*சகாப்தம்*நிகழ்ச்சி 150 வது* நாளாக வெற்றி நடை போட்டு தொடர்கிறது . மக்கள் தலைவரின்*ஆன்மாவிற்கு நம்முடைய மனம் நிறைந்த*வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு*இப்போது தொடருவோம்*.

    ஆண்டிபட்டி வசந்தா*:* முதலில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆன்மாவிற்கும்,*சகாப்தம் நிகழ்ச்சிக்கும் என் மனம் நிறைந்த வணக்கங்கள் .* இந்த தொடரில், மக்கள் திலகம் எம்.ஜி*ஆர். அவர்களின்*திரையுலக*வாழ்க்கை, மற்றும் மக்கள் தலைவரின் அரசியல் வாழ்க்கை பற்றியும்* மிகவும் சிறப்பாக திரு.துரை பாரதி*தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார் .* எம்.ஜி.ஆர். என்கிற மாமேதை பற்றி விவரங்கள் அறிந்து கொள்ள இந்த* நிகழ்ச்சி நல்ல வாய்ப்பை அளித்துள்ளது .* இந்த நிகழ்ச்சியை*பார்ப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது .* மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த*பின்னாலும்*பேச்சிருக்கும் என்று தொடங்கும்*போது மிகவும் அருமையாக உள்ளது .* எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால் இந்த ஜென்மம் போதாது*.அந்த அளவிற்கு*செய்திகள்* நிறைந்துள்ளன .* *வின்*டிவியில்.இந்த கொரோனா காலத்தில் இந்த நிகழ்ச்சி மக்கள் சிந்திக்கும் வகையிலும்*,மக்களுக்கு*தைரியம் கொடுக்கும் வகையிலும்*நிறைய செய்திகள் வெளியாகி வருகின்றன .* சகாப்தம்*நிகழ்ச்சி தொடர்ந்து பல வாரங்கள், மாதங்கள்*தொடர வேண்டும் என்பது என் அவா .**வாழ்க எம்.ஜி.ஆரின் நாமம் .

    குறிப்பாக பார்த்தால்*எவ்வளவோ பேர்கள்*தொடர்பில்*இருக்கிறார்கள். பெங்களுருவில் இருந்து திரு.ராமச்சந்திரன் தனது*71வது* வயதில்*அவ்வளவு அக்கறை எடுத்து கொண்டு* புரட்சி தலைவர் ஆண்டது*11 ஆண்டுகள்தான் என்கிற*ஒரு திருத்தத்தை*சொல்கிறார் . அதே*போல அந்த காலத்தில் அவரை ராமாவரம் தோட்டத்தில் சந்தித்த*காட்சிகளை விவரித்து நெகிழ்ந்து போகிறார் .* பொழிச்சலூரில் இருந்து மகாலட்சுமி என்பவர் எப்படியோ*தொலைபேசி எண்ணை* கண்டுபிடித்து*இரவு 11 மணிக்கு*எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி அவ்வளவு நெகிழ்வாக*பேசுகிறார்* திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனையில் இருந்து மக்களை சந்திப்பது மட்டுமல்ல, மக்களின் குறைகளை*கேட்டு எப்படி நிறைவேற செய்வாரோ*அப்படி 1984ம் ஆண்டில்*ஒருநாள்*திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனையில் காட்சி*அளிப்பது* போல* *அமர்க்களமாக* ராமாவரம்* வீட்டில்*இருந்து வெளிப்படுகிறார் .* காலை*7 மணிக்கெல்லாம் உதயமாகும் கதிரவன் போல, புதிய சூரியனாக தென்படுகிறார் .* அவரை*பார்க்க, தரிசிக்க*கிட்டத்தட்ட 500 பேர் திரண்டு இருக்கிறார்கள் .* ஒவ்வொருவரையும் அருகில் அழைத்து*நலம் விசாரிக்கிறார் .* அவர் வருகின்ற வழியெல்லாம் ஏழெட்டு*தட்டுகளில் குவியல் குவியலாக பணம் வைக்கப்பட்டிருக்கிறது .**ஒருவர் தான் சம்பாதித்த பணத்தை*அவ்வளவு**மக்கள் பார்க்கின்ற வகையில்*தட்டுகளில் வைக்கின்றார்கள்* என்றால்**அது நேர்மையான வழியில்*ஈட்டிய பணமாகத்தான் இருக்க முடியும் .* ஒவ்வொருவரையும் பார்க்கிறார். கேட்கிறார் .மூன்றாவது வரிசையில்*,ஒரு கைக்குழந்தையுடன் நின்றிருக்கும் ஒரு பெண்ணை அழைத்து*நீங்கள் எந்த ஊர், என்ன விஷயமாக*வந்துள்ளீர்கள் என்று கேட்கிறார் .* அருகில் உள்ள உதவியாளர் உங்கள் பிரச்னை என்ன என்று கேட்கிறார் .* இப்படி அவர் தன்* வாழ்நாள் முழுக்க திரைப்பட துறையில்*கொடிகட்டி*பறந்த*காலத்தில் கூட, நாடோடி மன்னனின் பிரம்மாண்ட*வெற்றிக்கு பிறகும் கூட* மக்களை சந்திப்பதில் மிக பெரிய மகிழ்ச்சியை*அடைந்தார் . மக்களை சந்திப்பது , பேசுவது ,உரையாடுவது , அவர்களுடைய குறைகளை*தீர்ப்பது*என்பதை* உயிர் மூச்சாக*கருதினார் .**


    திரு.புலவர் ராமச்சந்திரன், தாராவி, மும்பை*:* சகாப்தம் நிகழ்ச்சியின் 150 வது*நாள் தொடர் நிகழ்ச்சிக்கு* *என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் .**சென்னை*சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.பெயர் வைத்த மத்திய அரசிற்கும், மாநில*அரசிற்கும், அதை முன்மொழிந்த*திரு.சைதை*துரைசாமி அவர்க ளுக்கும் எனது நெஞ்சார்ந்த* நல்வாழ்த்துக்கள் .* நாம் மும்பையில் வசித்து வந்தாலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழ் பாடி வருகிறேன் .மராட்டிய மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி..ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியாவது குறித்து*நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .*


    1984ம் ஆண்டில் ஒரு சட்டம் வருகிறது .* 400 நாட்களுக்கு மேல்* கட்டாய*பணியாளர்களாக இருந்தவர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டும் . அனைவரையும்*வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு செய்யப்பட்டு , முறையான நேர்முக தேர்வு மூலம்தான்*பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று* சட்டம் கொண்டு வருகிறார்.எம்.ஜி.ஆர்.* .* கட்டாய*பணியாளர்கள் என்று யாரும் தற்காலிக பணிகளில் இருக்க கூடாது . ஒன்று அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்* அல்லது பணிநீக்கம் செய்ய வேண்டும் என்கிறார்* *பொழிச்சலூர் மகாலட்சுமி என்பவர் சொல்கிறார். அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் பிரசித்தி பெற்ற அங்காடியாக வானவில் பட்டு, கைத்தறி*அங்காடி திகழ்ந்தது . அப்போது அமைச்சர்கள்* வருவார்கள் .* அரசு அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் எல்லாம் வருகை*தருவார்கள் .* பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு மாநில ஆளுநர்களின் மனைவிகளுக்கும் இங்கிருந்துதான் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் .எம்.ஜி.ஆர். அவர்கள்தான்*அரசு விழாக்களில், சில முக்கிய விருந்தினர்களுக்கு*காஞ்சிபுரம் பட்டு புடவைகள்,போன்றவற்றை பரிசாக வழங்கிய காலமும் உண்டு என்று மகாலட்சுமி விவரிக்கிறார் .***


    திரு.அப்துல் மஜீத், திருச்சி : சகாப்தம் நிகழ்ச்சி 150 வது* நாளாக தொடர்வது குறித்து உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி புரிந்த காலத்தில் ஏழை எளியோர்க்கெல்லாம் வாரி வழங்கி,*பல நல திட்டங்கள் செயல்படுத்தி நல்லாட்சி புரிந்தார் .* மலைக்கள்ளன் படம் பார்த்துதான் நான் அவரது ரசிகரானேன். அவரால் ஈர்க்கப்பட்டேன் . அந்த படத்தில் என் பெயரை சொல்லி, அரே* மஜீத் தோ* சாய் லாவோ என்பார் .* அவர்மீது, மிகுந்த ஈடுபாடு, மதிப்பு, மரியாதை வைத்துள்ளேன் .* இன்றைக்கும் அவரது தொண்டனாக வாழ்ந்து காலம் கடத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்


    1984ல் எப்படியும்* ஆண்டிற்கு* மூன்று முறையாவது எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்து* இல்லத்திற்கு வானவில் பட்டு, கைத்தறி அங்காடியில் இருந்து* சில பட்டு புடவைகள் அனுப்பி வைக்கப்படும் அந்த புடவைகளுக்கான ரசீது தயாரானவுடன்,அனகாபுத்தூர் ராமலிங்கம் மூலம் பணம் அனுப்பப்படும். அதற்கு முன்பாக ராமலிங்கத்திடம் பணம் வைக்கப்பட்டுள்ள பீரோவின் சாவியை கொடுத்து பட்டு புடவைகளுக்கான போதிய பணத்தை நீங்களே எடுத்து கொள்ளுங்கள் என்று கூறுவாராம். அந்த அளவிற்கு தனது தொண்டர்கள் மீது, நம்பிக்கை, மதிப்பு, மரியாதை,கொடுத்து, சுதந்திரம் அளித்து வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். திருவிதாங்கூர் மகாராஜா விஷூ நாளன்று பணத்தை அள்ளி அள்ளி கொடுப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .* எம்.ஜி.ஆரும் ,அதே விஷூ நாளன்று கட்டு காட்டாக பணத்தை வைத்து கொண்டு மக்களுக்கு வாரி இறைத்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று பொழிச்சலூர் மகாலட்சுமி கூறுகிறார் .* 1984ல் அதே விஷூ நாளில் நான் எம்.ஜி.ஆர். அவர்களை பார்த்து கேட்டேன். எங்களுக்கெல்லாம் வேலை பறிபோய்விட்டது . நீங்கள்தான் உத்தரவு போட்டு பணிநீக்கம் செய்ததாக சொல்கிறார்கள் என்றவுடன், நீங்கள் எவ்வளவு பேர் இருக்கிறீர்கள் என்று கேட்டார் எம்.ஜி.ஆர். நாங்கள் தமிழகம் முழுவதும் 2,000 பேர் இருக்கிறோம் என்று சொன்னதும் அப்படியா ,இந்த விவரங்கள் எனக்கு முன்கூட்டியே தெரியாது .இருப்பினும் நீங்கள் ஒரு மனு கொடுங்கள் என்று கேட்டு வாங்கி கொண்டார் .* 1984ல் ஏப்ரல் 13ந்தேதி மனுக்களை வாங்கினார் .**மே மாதம் 13ன் தேதி எம்.ஜி.ஆரின் உத்தரவால் அந்த 2000 பேருக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தது* இப்படி, கேட்ட வர்க்கெல்லாம், தன்னிடம் வந்தவர்க்கெல்லாம் அது வானவில்லே ஆனாலும் வளைத்து கொடுக்கிற வள்ளல் தன்மை எம்.ஜி.ஆரிடம் இருந்தது .**

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------
    1.காலத்தை வென்றவன் நீ - அடிமைப்பெண்*

    .2.என்றும் பதினாறு, வயதும்* பதினாறு - கன்னித்தாய்*

    3.தட்டுங்கள் திறக்கப்படும்* - எல்லை காவலன் (வெளிவராத படம்)

    4.நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் - நான் ஏன் பிறந்தேன்*




    **

    *

  11. #1220
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இனிய_நினைவுகளில்

    #ஆசைமுகம்
    #மக்கள்_திலகம்...

    இந்தப்படத்தின் விசேட அம்சங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...!!!

    கதை என்னவோ வழக்கமான ஒன்றுதான்...பெரும் செல்வந்தரான சிவசங்கரன் பிள்ளை (சந்தானம்)யின் ஒரே மகன் , மனோகர் ((மக்கள் திலகம்))..அவரது காதலி செல்வி ((சரோஜா தேவி))...சிவசங்கரன் பிள்ளையால் வேலையை விட்டு துரத்தப்பட்ட அவரது முன்னாள் மேனேஜர் வர்தா (எம்.என்.நம்பியார்), சிவசங்கரன் பிள்ளையின் அத்தனை சொத்தையும் கொள்ளையடிக்க நினைக்கிறார்...பின்னர் மக்கள் திலகத்தால் தடுக்கப்பட்டு சிறை செல்கிறார்....

    இந்த வழக்கமான கதையை வித்தியாசப்படுத்துவது நம்பியார் கையாளும் வழிதான் ...தன் நம்பிக்கைக்குறிய அடியாள் வஜ்ரவேலு (எஸ்.வி.ராம்தாஸை) முகத்தை அப்படியே மக்கள் திலகத்தைபோல பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, இவர்தான் உண்மையான மனோகர் என சிவசங்கரன் பிள்ளை வீட்டில் Crop பண்ணுகிறார் வர்தா....மனோகராக நடிக்கும் வஜ்ரவேலுவின் கைக்கு சொத்து வந்ததும், அதை வர்தாவிடம் கொடுத்து, தனக்குறிய பங்கை பெற்றுக்கொள்ள வேணண்டும் இதுவே மாஸ்டர் பிளான்.இதனால், யார் உண்மையான மனோகரன் என்ற குழப்பம், மக்கள் திலகத்தின் தந்தையிலிருந்து, காதலியிலிருந்து அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது...கடைசியில் உண்மை தெரியவருகிறது.

    மக்கள் திலகத்தின் ப்ளாக்பஸ்டர்களில் இதுவும் ஒன்று...பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி அதிகம் கேள்விப்படாத அந்த நாட்களிலேயே இதைப்பற்றி படமெடுத்து வெற்றி பெற செய்ய மிகுந்த துணிச்சல் வேண்டும்...அதை திறம்பட செய்திருககிறார் இயக்குநர் புல்லையா....

    மக்கள் திலகம்....கேட்க வேண்டுமா??? மனோகர்,வஜ்ரவேலு ஆகிய இரு வேடங்களில் அசத்தி இருக்கிறார். அதுவும் யார் மனோகர், யார் வஜ்ரவேலு என்பது படம் பார்ப்பவர்களுக்கு புரியும் படி நடித்திருக்கிறார்...அதோடு இளமை துள்ளும் நடனங்கள், Energetic ஆக ...அதே சமயம் overact செய்யாமல் கலக்கியுள்ளார்...

    சரோஜா தேவி, நம்பியார்,வசந்தா நாகேஷ், ராமதாஸ் அனைவரும் கலக்கியிருக்கிறார்கள்...அதுவும் "எத்தனை பெரிய மனிதருக்கு" பாடலில் நாகேஷ் மக்கள் திலகத்தோடு நடனத்தில் கலக்குகிறார்.

    இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு...பாடல்கள் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிதும் துணை புரிகின்றன..."எத்தனை பெரிய மனதனுக்கு" ..."நீயா இல்லை நானே" இரண்டும் இன்று வரையிலும் விரும்பபடுகின்றன..."என்னை காதலித்தால் மட்டும் போதுமா?".."நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு " ஆகிய பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

    "தனக்கொரு கொள்கை,அதற்கொரு தலைவன்; தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்; உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பீ...உழைத்திட வேண்டும் கைகளை நம்பி" என்ற வரிகளை மக்கள் திலகம் பாடும் போது, எழுந்த கைதட்டலும்- ஆரவாரமும் இன்று வரை மறக்கமுடியாதது.

    ஆசை முகம் ...வெற்றி படம் மட்டுமல்ல...மக்கள் திலகத்தின் மிக வித்தியாசமான படமும் கூட.

    Source :https://en.m.wikipedia.org/wiki/Aasai_Mugam......... Sridhar Babu...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •