Page 124 of 210 FirstFirst ... 2474114122123124125126134174 ... LastLast
Results 1,231 to 1,240 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1231
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'இது ராஜபாட்டை அல்ல' சிவகுமார் எழுதிய சுய சரிதை அன்றைய வாரப்பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. அதில் சிவகுமார் தன்னுடைய சினிமா அனுபவங்களை மட்டுமல்லாமல் தன்னை பாதித்த சம்பவங்கள் பலரின் நற்குணங்களையும் தீய செயல்களையும் தனது மனதில் பட்டதை அப்படியே எழுதினார். அந்த காலங்களில் அதை அநேகம் பேர் படித்தது மட்டுமல்லாமல் அதைப்பற்றி சிலாகித்து பேசியதும் உண்டு.

    சிவகுமார் ராஜபாட்டையில்
    "திருவருட்செல்வரி"ல் அப்பராக நடித்த நடிகர் காஞ்சி பெரியவரை இமிடேட் பண்ணி நடித்தார். இமிடேஷன் பண்ணுவது அவருக்கு ஓசி அல்வா சாப்பிடுகிற மாதிரி. அப்படியே காஞ்சி பெரியவர் மாதிரி தோற்றமளிக்க அந்த செட்டுக்கு வந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் அந்தக் காட்சியை பார்த்து மெய்மறந்து கையெடுத்து கும்பிட
    நினைத்த அவர் சற்று நேரத்திலேயே அந்த நடிகர் செய்த காரியத்தை பார்த்து திடுக்கிட்டு போனார்.

    கீழே அமர்ந்த அந்த நடிகர் திடீரென்று பாக்கெட்டிலிருந்து 555 சிகரெட்டை எடுத்து பத்த வைத்ததை பார்த்தவுடன் அவர் அதிர்ந்து போய் செட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.
    அந்த காலகட்டங்களில் காஸ்ட்லி சிகரெட்டான 555 புகைப்பதில் ஒரு பெருமை. அந்த தற்பெருமையை
    பலர் முன்னாடி செய்து காட்டுவதில் கர்வம் கொள்ளுபவர் கணேசன். செட்டில் என்ன அன்னை இல்லம்
    வீட்டிலேயே தாயின் முன் கையில் சிகரெட்டுடன் கொடுக்கும் போஸை பார்த்து அவரின் மரியாதையை தெரிந்து கொள்ளுங்கள்.

    ஆனால் சிவகுமார் அந்த மாதிரி பக்தி படங்களில் நடிக்கும் போது உண்மையான கடவுள் பக்தியுடன் நடந்து கொள்வார். நடிகை k r விஜயா கூட பக்தி படங்களில் நடிப்பதற்கு பலநாள் விரதமிருந்து நடிப்பேன் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். ஆனால் கணேசனுக்கு அதெல்லாம் கிடையாது காசு கொடுத்தால் போதும் குடியுடன் சிகரெட்டையும் சேர்த்து நமக்கு நடித்து கொடுத்து விடுவார்.

    அப்படி பக்தியில்லாமல் நடித்த அந்த "திருவருட்செல்வர்" படம் படுதோல்வி அடைந்நதுடன் a p நாகராஜனை கடன் என்னும் துன்பச் சேற்றுக்குள்
    அமிழ்த்தி ஆறா துயரத்தை உண்டு பண்ணி விட்டது. யாருக்காகவும் தன் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார்.
    ஆனால் ஒரே ஒருவருக்காக மட்டும் லாகிரி வஸ்துக்களை பயன்படுத்தாமல் நடித்திருக்கிறார்.
    அவர் யார் என்று தெரிகிறதா?
    அவர் வேறு யாருமல்ல அஷ்டாவதனி நடிகை பானுமதிதான்.

    பானுமதிக்கு தண்ணி, பீடி, புகையிலை போன்ற கெட்ட வாடை பிடிக்காது. ஒருமுறை
    p u சின்னப்பாவுடன் நடிக்கும் போது அவருடைய கெட்ட லாகிரி வஸ்துக்களின் வாடை பிடிக்காமல் படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.
    அதனால் அவருடன் நடிக்க வரும் நடிகர்கள் பயந்து போய் ஒழுக்கத்துடன் நடிப்பார்கள். சிவாஜியும் "அம்பிகாபதி"யில் நடிக்கும் போது பயபக்தியுடன் நடித்ததாக சொல்வார்கள். மேலும் சிவாஜியை விட வயதில் மூத்தவர் பானுமதி.

    ஆனால் எந்தவித பக்தி படத்திலும் நடிக்காத ஒருவர் எந்த தீயபழக்கங்களும் இல்லாமல் போதை இல்லாமலே இயல்பாக
    தெளிவாக நடித்துக் கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல நம் புரட்சி நடிகர்தான்.
    செய்யும் தொழிலே தெய்வமாக நினைத்தவர். ஏழை எளியவர்க்கு உதவி செய்யவே நடித்துக் கொண்டிருந்தவர்.

    அவர் நல்ல பழக்க வழக்கங்களிலும் சிறந்து விளங்கினார். ஒருமுறை k r விஜயாவின் பெட்காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்தச் சொன்ள எம்ஜிஆர் அவருக்கு பல் துலக்கி விட்டு காபி குடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சொன்னார். "விவசாயி" படத்தில் நடிக்கும்போது இந்த சம்பவம் குறித்து விஜயா சொன்னதாக ஒரு செய்தி வந்தது நினைவிருக்கலாம். வாயை சுத்தம் செய்யாமல் குடித்தால் பருகும் காபியும் விஷமாகி விடும் என்று சொன்னவுடன் விஜயாவும் அதன்பிறகு எம்ஜிஆர் சொன்னபடி நல்ல வழக்கத்தை கைகொள்ள ஆரம்பித்தார்.

    இப்படி தன்னைப் போல் மற்றவர்களும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்த எம்ஜிஆர் எங்கே? லாகிரி வஸ்துக்களை பயன்படுத்தி தன்னையும் தன்னை நம்பியவர்களையும் தீய வழிக்கு அழைத்து செல்லும் சிவாஜி எங்கே?
    இதே ராஜபாட்டையில் எம்ஜிஆர் தாயின் மீது கொண்ட அன்பையும் மரியாதையையும் விளக்கி சொல்லியிருக்கிறார் சிவகுமார்.

    தகவல் உதவி: திரு சைலேஷ் பாசு.........ksr...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1232
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*02/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    சகாப்தம் சாமான்யர்களின் தெய்வம் என்று அழைக்கப்படுகிற எம்.ஜி.ஆர்.அவர்களின் வரலாறு என்பது நமக்கெல்லாம் ஒரு பாடம், படிப்பினை,*ஒரு புதிய பாதை .அரசியல் காரணங்களுக்காக அவரது தாய்மொழியோடு சம்பந்தப்பட்டு பேசப்பட்டதெல்லாம் உண்டு . அதனால் அந்த மொழியை சார்ந்தவர்கள் டீக்கடை கூட நடத்த முடியாமல் பாதிக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு ஆனால் எம்.ஜி.ஆர். ஒருபோதும் தன்னை அப்படி கருதியதே இல்லை .


    அண்ணா தி.மு.க. ஆரம்பித்த புதிதில் புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த மாஹி*என்ற தொகுதிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு எம்.ஜி.ஆர். செல்கிறார் .* அந்த தொகுதியில் பெரும்பாலானவர்கள் மலையாளிகள் என்பதால், உங்களுக்குத்தான் மலையாள மொழி தெரியுமே. மலையாளத்தில் பேசலாமே என்றனர் .* இரவு 11 மணி ஆகிவிட்டது . கட்சி நிர்வாகிகள் நீங்கள் மலையாளத்தில் பேசுங்கள் பரவாயில்லை என்கிறார்கள் .* ஆனால் எம்.ஜி.ஆர். நான் ஒருபோதும் மலையாளத்தில் பேசமாட்டேன் .* ஏனென்றால் நான் தமிழ் நாட்டில் வளர்ந்து, தமிழ் மொழி பேசி, தமிழ் மண்ணில், தமிழர்கள்* அளித்த வருமானத்தில் என் வாழ்க்கையை அமைத்து , சாப்பிட்டு வளர்ந்த நான், தமிழில்தான் பேசுவேன் .தமிழில் நான் பேசுவதை விரும்பாதவர்கள் இங்கிருந்து கலைந்து* செல்லலாம் . என்றவர் தமிழில் 15 நிமிடங்கள் உரையாற்றி வாக்குகள் சேகரித்தார் .என்பது வரலாறு .

    .**.*திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி : கோவையில் உள்ள கட்சி தலைவர்கள், கோவைத்தம்பி, திருப்பூர் மணிமாறன், அரங்கநாயகம், குழந்தைவேலு, என்னை போன்றவர்கள் எல்லாம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.* அவர்களை கோவை மாவட்டத்தில் கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சி பணியாற்ற வாருங்கள் என்று வேண்டுகோள் வைத்தபோது, அதை பரிசீலித்து ,தலைவர் கோவை புறப்பட்டு வருகிறார் .* வங்கியில் இருப்பு வைத்திருந்த ரூ.30,000/-த்தில்* ரூ.2,000/- போக* மீதி ரூ.28,000/- எடுத்துக்கொன்று கோவைக்கு வந்த தலைவர் ,விமான செலவு போக, மினிமேக்ஸ் என்கிற ஓட்டலில் சில நாட்கள் தங்குகிறார் .**அந்த பணம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், அவரது உதவியாளர்களுக்கும் சேர்த்து*3 நாட்களுக்குத்தான் போதுமானதாக இருந்தது .* 4ம் நாள் ஓட்டல் உரிமையாளர்*எம்.ஜி.ஆர். அவர்களிடம் மேற்கொண்டு பணம் அட்வான்ஸ் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டபோது ,தலைவரிடம் பணமில்லை. திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர், ஒரு மாநிலத்தின் முதல்வராக வர இருப்பவர் கைகளில் பணம் இருப்பு இல்லை என்று சொன்னால் இன்றைக்கு யாராவது நம்புவார்களா என்றால் இல்லை. ஆனால் அதுதான் உண்மை .* அப்போது வந்த*கோவைத்தம்பியிடம் பணம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, என்னிடம் ரூ.90,000/- இருக்கிறது என்றதும்.நீ சென்று உடனே கொண்டுவா என்றார் .பணம் கொண்டுவரும்போது வழியில் அரங்கநாயகத்தை சந்தித்த போது ,அவர் என்னிடம் ரூ.1,10,000/-* உள்ளது என்றதும், அதையும் சேர்த்து ரூ.2 லட்சம்*கொடுக்கிறபோதுதான், அரங்கநாயகம் குறிப்பிடுகிறார்* ,தலைவர் ஏதோ பண சிக்கலில் இருக்கிறார் போலும் .* இது போதாது .என்று கருதி, பி.எஸ்.ஜி.கல்லூரி*உரிமையாளரிடம் சென்று ரூ.1 லட்சம் வாங்கி ரூ.3 லட்சமாக கொடுக்க தீர்மானிக்கிறார் .* அவர் பணம் நான் தருகிறேன் .ஆனால் ஒரு நிபந்தனை, எம்.ஜி.ஆர். அவர்கள்* நாளை காலை சிற்றுண்டி எங்கள் இல்லத்தில் வந்து அருந்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் .* அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது .தலைவர் எங்கள் இல்லத்திற்கு வருகை தரும்போது அவரிடமே பணத்தை தருகிறேன் என்றார்.கல்லூரி உரிமையாளர் .நாங்கள் தலைவரிடம் நீங்கள் நாளை விமானத்தில் சென்னைக்கு புறப்படுவதற்கு முன்பாக பி.எஸ்.ஜி.கல்லூரி உரிமையாளர் இல்லத்தில் நாம் காலை சிற்றுண்டி அருந்த உள்ளோம் அதற்கு உங்கள் அனுமதி தேவை என்று கேட்டு பெற்று* அதன்படி*திரு.வரதராஜ் என்பவர் இல்லத்திற்கு சென்றோம் . பொதுவாக பணத்திற்காக தலைவர் யார் வீட்டிலும் சென்று உணவருந்த மாட்டார் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் .* அப்படி சிற்றுண்டி அருந்திவிட்டு புறப்பட தயாரானபோது*கோவைத்தம்பியும், அரங்கநாயகமும், வரதராஜ் அவர்களிடம் பணம் சீக்கிரம் கொடுங்கள் என்று கேட்டபோது அப்போது 500 ரூபாய் நோட்டுகள் இல்லை.,அவர்* 100 ரூபாய் நோட்டுகளாக* ஒரு பெரிய சூட்கேஸில் ரூ.9 லட்சத்தை கொண்டுவந்து தலைவரிடம் அளிக்கிறார் .இதை எதிர்பாராத தலைவர் எம்.ஜி.ஆர். வரதராஜிடம் என்ன இது, எதற்கு இவ்வளவு பெரிய சூட்கேஸ் நிறைய பணம் என்று கேட்டதற்கு, இதை நீங்கள் தேர்தல் நிதியாக வைத்து கொள்ளுங்கள் என்று சொன்னார் .* *சரி, இதற்கான ரசீதை நான் சென்னை சென்றடைந்ததும்**அனுப்புகிறேன் என்று புதிய புத்துணர்ச்சியோடு*சொல்லி,தன் மனதிற்குள் இனி எதிரிகளை தேர்தல் களத்தில் சந்திக்க இந்த நிதி இப்போதைக்கு போதுமானதாக இருக்கும் என்று எண்ணி எங்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் .**


    சென்னை சென்றதும், தேர்தல் முகாமிட்டு எதிரிகளை தேர்தல் களத்தில் சந்தித்து, வெற்றிவாகை சூடி, 136 எம்.எல்.ஏக்களுடன்* சென்னை பிரெசிடென்சி ஓட்டலில் கூட்டம் நடைபெற்ற போது வெற்றிவீரராக வந்த கோவைத்தம்பியை அழைத்து, கோவையில் நமக்கு நிதி உதவி செய்த திரு.வரதராஜ்* அவர்களுக்கு இந்த ரசீதை கொடுத்துவிடுங்கள் என்று சொல்லி,இந்த நபர் கட்சியில் இருக்கிறாரா என்று கேட்டபோது, இல்லை அவர் நமது கட்சியின் அபிமானி என்றதும் .உடனடியாக கட்சியில் சேர்த்துவிட்டு ,தகவல் சொல்லுங்கள் என்றார் .அவர் அ.தி.மு.க.வின் உறுப்பினராகி விட்டார் என்பதை கோவைத்தம்பி மூலம் உறுதி செய்துகொண்டு அந்த கூட்டத்திலேயே சொல்கிறார் .,நமது கட்சிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டபோது தக்க சமயத்தில் நிதி* உதவி செய்த இந்த வரதராஜ் அவர்களை எதிர்காலத்தில் மாநிலங்கள் அவை உறுப்பினராக நியமனம் செய்கிறேன்* என்று உறுதி அளித்து** அதன்படிசெய்த உதவிக்கு நன்றி பாராட்டி* நியமனம்* செய்தவர்தான் நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .*தலைவர் அவர்கள் தான் வாங்கிய பணத்திற்கு ரசீது கொடுத்துவிட்டு, நிதி உதவி*செய்தவருக்கு எம்.எல் ஏக்கள் கூட்டத்தில் உரிய பதவியும் அளிப்பதாக உறுதியும் கொடுத்தார் . மேலும் அவரை நான் எதிர்காலத்தில்* எம்..பி.யாக* தேர்வு* செய்வதற்கு கூட* ஆவன* செய்வேன் என்றும் குறிப்பிட்டார் .நன்றி என்ற வார்த்தைக்கு மறு* உதாரணம் சொல்லவேண்டும் என்றால் எனக்கு தெரிந்து தலைவர் எம்.ஜி.ஆரை தவிர, நான் பழகிய தலைவர்களில், உடனுக்கு உடன் நன்றியை காணிக்கை ஆக்க கூடிய தலைவர்* வேறு எவரையும் குறிப்பிட முடியாது* திருவள்ளுவரின் குறளான நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்ல*அன்றே மறப்பது நன்றி, எந்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் . உய்வில்லை.செய்நன்றி கொண்ட மகர்க்கு** *என்கிற வரிகளின்படி, நாம் நமது தலைவரின் செய்கைகளை தெரிந்துகொள்ள வேண்டும் .* தனக்கு உதவி செய்தவர்களை உயிருள்ள வரை நினைத்து பார்த்த ஒப்பற்ற தலைவரின் வழியில் நாமெல்லாம் பின்பற்றவேண்டிய நடைமுறை என்னவென்றால், ஒரு சின்ன உதவியை ஒருவர் செய்திருந்தாலும் கூட , அதற்கு பிரதி உபகாரம் செய்துவிடுங்கள் அல்லது அதற்கு நன்றியாவது சொல்லிக்கொண்டு இருங்கள் என்பது நபிகள் எம்பெருமானார் நாயகம் அவர்களின் வாசகம் ஆகும் .* அப்படி செய்தால்தான் உனக்கு நன்மை பயக்கும். நன்றியை செய்தவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று சொன்னத்திற்கேற்ப, வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய தலைவனாக புரட்சி தலைவரையும்,அவருடைய நன்றி பாராட்டும் செய்கைகளையும் எண்ணி பார்த்து மகிழ்கின்றோம் .**


    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனக்காக உழைத்தவர்களை, உதவி செய்தவர்களை எண்ணி, நன்றி பாராட்டாமல் இருந்ததில்லை . பல்வேறு நூல்கள் மூலமாக ,அவருடைய வாழ்க்கையில் பின்னி பிணைந்தவர்கள் மூலமாக நாங்கள் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம் .* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து பேசியவர்களுக்கு அவர் பதவிகள் கொடுத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ முடியாது .* தான் பதவியில், பலத்தோடு இருந்தாலும், நம்மை எதிர்ப்பவன் மீது தாக்குதல் தொடுக்க வேண்டுமென்றோ ,அவனுக்கு இடையூறு செய்யவேண்டுமென்ற எண்ணமோ , கொஞ்சமும் இல்லாத ஒரு மாபெரும் ,மகத்தான சிந்தனை உடைய தலைவன் இருந்தார் என்றால் அது புரட்சி தலைவர் ஒருவராகத்தான் இருக்க முடியும் .பேரறிஞர் அண்ணாவிற்கு பின்னால், புரட்சி தலைவர் தனக்கே விரோதமாக போனவர்களை பற்றி தவறுதலாக எண்ணாமல், நாம் ஒருவேளை அவர்களுக்கு தவறுகள் ஏதாவது இழைத்துவிட்டோமோ என்று சிந்திக்கிற, அந்த சிந்தனையின் வெளிப்பாடு சரியாக இருக்குமேயானால் அவர்களுக்கு உரிய இடத்தை தருவதில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எப்போதும், யாருக்கும் சளைத்தவர் அல்ல .* அந்த வகையில் அண்ணாவிடத்தில் இருந்து விலகி சென்ற ஒருவர் ஒரு கால கட்டத்தில் மேடைகளில் பேசும்போது* அண்ணாவிற்கு என்ன தெரியும் , அண்ணாவின் தலையில் வெறும் மண் தான் இருக்கிறது அவருடைய தலையில் களிமண் தான் உள்ளது என்று பேசிய தலைவர்களும் உண்டு . அவர்களுடைய பெயரை சொல்ல நான் விரும்பவில்லை. அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் மேடையில் பேசுகின்றபோது*அவருடைய பெயரை குறிப்பிட்டு அண்ணா சொன்னார். ஆமாம் தம்பி, என் தலையில் வெறும் மண் தான் இருக்கிறது . அந்த மண்ணை தோண்டி பார்த்தாயேயானால் அங்கே நிலக்கரி கிடைக்கும் .அதே மண்ணை கொஞ்சம் ஆழமாக தோண்டி பார்த்தால் அங்கே தங்கம் கிடைக்கும் . இன்னும் கொஞ்சம் ஆழமாக தோண்டி பார்த்தால் அங்கே வைரங்கள் கூட கிடைக்கலாம் .* இந்த மண்ணை நீ பயன்படுத்தாமல் விட்டுவிட்டாயே* என்று நான் வேதனை படுகிறேன் என் அருமை தம்பியே என்று அண்ணா அவர்கள் சொன்னதை*போல* தன்* மனதிலே இருத்தி கொண்டு தனது பகைவர்களாக இருந்து யாராவது பேசினால், அவர்களை துன்புறுத்தாமல், தண்டிக்காமல் இருந்தவர்தான் நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள்*

    எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்த நேரத்தில் அவரை எதிர்த்து, அன்றைக்கு கவியரசு என்று அழைக்கப்பட்ட கவிஞர்* முத்துராமலிங்கம் அவர்கள் தலைவர் எம்.ஜி.ஆர். மீது ஏதோ ஒரு கோபம் கொண்டு*அண்ணா*தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு அமர்ந்து கொண்டு ,ஒலிபெருக்கி மூலம் தனக்கு பக்கபலமாக ஆளே இல்லாமல் காலை*9 மணியில் இருந்து இல்லாததை, பொல்லாததை எம்.ஜி.ஆர். அவர்கள் பற்றி பேசுகிறார் .*அவருக்கு மனதில் பட்ட கருத்துக்களை*தலைவருக்கு*எதிராக*பேசுகிறார் .* அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் அவரை*அடிக்க முற்படும் செய்தியறிந்து காவல்துறையை தொடர்பு கொண்டு, அந்த கவிஞருக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுங்கள் ,அவரை தொடர்ந்து பேச அனுமதியுங்கள்* என்று சொல்லிவிட்டு ,அவருடன் பக்கபலமாக*வந்த ஒரு* சிலர்*தலைவரை விமர்சித்த நேரத்தில் ,எதை பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் பேசுவதை*ஒலிபெருக்கி மூலம் கேட்டறிந்து எல்லாவற்றையும் அனுமதித்தார் என்று சொன்னால் , அத்தகைய*ஜனநாயக*பண்புமிக்க ஒரு தலைவரை*நீங்கள் உலகத்தில் இன்றைக்கு* எந்த பகுதியில் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள் பதவியில் இருக்கும்போது, தன்னுடைய கட்சி அலுவலகத்திற்கு முன்பு ஒருவர் அமர்ந்து*வசைபாடுகிறார் என்று சொன்னால்*அவரை தண்டிக்காமல், துன்புறுத்தாமல் ,போதிய பாதுகாப்பு கொடுத்த*தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை தவிர வேறு யார் இருக்க முடியும் .* பேரறிஞர் அண்ணாவின் தம்பியாக இந்த சம்பவத்தை வைத்து புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை*கருதலாம்**அறிஞர் அண்ணாவை பற்றி ஒரு காலத்தில் காங்கிரஸ்காரர்கள் மிக கேவலமாக சித்தரித்து ஒரு சுவரொட்டியை ஒட்டி வைத்திருந்த நேரத்தில், ஒரு தி.மு.க. தொண்டர் மேடையிலே பேசுகிறார் .* அதாவது அண்ணா அவர்களே, உங்களை பற்றி மிக கேவலமாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னபோது , அண்ணா அவர்கள் அந்த சுவரொட்டிகள் இருட்டான இடத்திலே இருப்பதாக கேள்விப்பட்டேன் .நீங்கள் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கை*எரிய வைத்து அனைவரும் அதை எளிதாக*படிக்கும்படி செய்யுங்கள் ,பார்ப்பவர்கள் எல்லாம் படித்துவிட்டு போகட்டும். நியாயத்தை புரிந்து கொள்வார்கள் என்று சொன்னது போல அண்ணாவின் தம்பியாக வாழ்ந்து மறைந்த*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், அவரை பற்றி, அவருடைய கட்சி அலுவலகத்திற்கு அருகில் அமர்ந்து*ஒரு கட்சி தொண்டர் எதிர்த்து பேசியதையெல்லாம் சகித்துக் கொண்டு*வாக்கி டாக்கி மூலம் அவற்றை*கேட்டு* சிரித்து கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல்*அவரை அழைத்து, என்மீது*உனக்கு என்ன இவ்வளவு கோபம் என்று கேள்வி கேட்டு உப்பு வாரியத்தின் தலைவராக*அவரை நியமித்தவர்தான் நமது தானை தலைவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*. இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்*/காட்சிகள் விவரம்*
    ----------------------------------------------------------------------------------
    1.மஞ்சள் முகமே வருக* - வேட்டைக்காரன்*

    2..எம்.ஜி.ஆர். - தங்கவேலு உரையாடல் - உழைக்கும் கரங்கள்*

    3.சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம்*

    4. திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி****

  4. #1233
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "இன்று போல் என்றும் வாழ்க" என்ற படத்தில் நான் ஒரு பாடலை எழுதினேன். "இது - நாட்டைக் காக்கும் கை உன் - வீட்டைக் காக்கும் கை இந்தக் கை நாட்டின் நம்பிக்கை இது - எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை" இதுதான் அந்தப் பாடல். இது - எதிர்காலப் பாரதத்தின் வாழ்க்கை என்றுதான் எழுதினேன். பாரதத்தின் என்ற வார்த்தையை நீக்கிவிட்டுத் தாயகத்தின் என்று மாற்றியவர் எம்.ஜி.ஆர்.தான்.

    "அன்புக்கை இது ஆக்கும் கை - இது அழிக்கும் கையல்ல சின்னக்கை ஏர் தூக்கும்கை - இது திருடும் கையல்ல நேர்மை காக்கும்கை - நல்ல நெஞ்சை வாழ்த்தும்கை - இது ஊழல் நீக்கித் தாழ்வைப் போக்கிப் பேரெடுக்கும்கை" இப்படி எல்லா சரணங்களிலும் 'கை' 'கை' என்றுதான் வரும். நான் எம்.ஜி.ஆர் கையைப் பற்றித்தான் எழுதினேன். ஆனால் இன்று வேறொரு கைக்குப் (காங்கிரஸ்) பிரச்சாரப் பாட்டாக ஆகிவிட்டது. என்றாலும், அன்புக்கு நானடிமை, இது நாட்டைக் காக்கும் கை என்ற இரண்டு பாடலையும்தான் எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.

    கல்கத்தாவுக்கு அனுப்பி ஒரே வாரத்தில் இசைத்தட்டாக வெளிவரச் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார். அப்போது அமெரிக்காவிலிருந்து வெளிவந்த 'வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை நான் எழுதிய இந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு என் பெயரையும் குறிப்பிட்டு இதைப் போன்ற கவிஞர்கள் எழுதிய கருத்துள்ள பாடல்களைப் பாடி மக்களைக் கவர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார் என்று எழுதியிருந்தது. டைரக்டர் சங்கர்தான் அந்தப் பத்திரிகையை என்னிடம் காட்டினார். படிப்பதற்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அவர் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு அவர் செய்த நன்மைகள், ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள், மக்களிடம் அவருக்கிருந்த அணுகுமுறை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை இதெல்லாம் சேர்ந்துதான் அவரை ஆட்சிக்குக் கொண்டுவந்ததே தவிர இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அல்ல.

    ஏன்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களில் இதைப்போல் நல்ல பாடல்கள் இல்லையா? எத்தனையோ கவிஞர்கள் இதைவிடச் சிறந்த கருத்துள்ள பாடல்களை சிவாஜி படங்களில் எழுதியிருக்கிறார்களே. நான் கூட சிவாஜி படங்களுக்கு எழுதியிருக்கிறேனே. சிவாஜி ஒரு கட்சி கூட ஆரம்பித்தாரே. ஒரு தொகுதியில் கூட அவராலே ஜெயிக்க முடியவில்லையே. அதற்கு என்ன காரணம்? சினிமா பிரபலம் என்பது வேறு. அரசியலில் வெற்றி பெறுவது என்பது வேறு. எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. கதர்ச்சட்டை அணிந்தவர்கள் எல்லாம் காமராஜர் ஆகிவிட முடியுமா?

    சினிமா என்பது பிரபலத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுமே தவிர அதை வைத்து எல்லாரும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து அவை நூறு நாட்கள் ஓடிவிட்டால் எல்லா நடிகர்களும் முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்தக் கனவு மாயக் கனவு என்பதை நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்ற தேர்தல் பல நடிகர்களுக்கு உணர்த்திவிட்டது. வானத்தில் ஒரு நிலவுதான் இருக்கமுடியும். இன்னொரு நிலவு இருக்காது. அதுபோல் எம்.ஜி.ஆர் ஒருவர்தான் இருக்க முடியும். இன்னொரு எம்.ஜி.ஆர் இருக்க முடியாது.

    ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார். அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும் பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர். எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!.........da.........

  5. #1234
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரீல் வாழ்க்கையையும் ரியல் வாழ்க்கையையும் ஒன்றாக பாவித்த ஒரே நடிகர் எம்ஜிஆர் அவர்கள்..தான் திரைத்துறையில் சம்பாதித்த பணம் முழுவதையும் தமிழக மக்களுக்காகவும் கலைஞர்களுக்காகவும் செலவிட்டவர்..அவரால் பயன் பெற்றவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கை இதுவரை கிடைக்கவில்லை..அவரை எதிர்த்தவர்களுக்கு கூட அவர் உதவி செய்தது ஏராளம்..அதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன்..இந்த உதாரணம் பண உதவி பெற்றவர் நடிகர் திரு. மயில்சாமி எம்ஜிஆர் திரைப்பட துறையில் இருக்கும்போது சக நடிகர் ஒருவரிடம் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குமேல் உதவியாளராய் இருந்தவர். திருமண உதவிக்காக அவருடைய முதலாளியிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்த முதலாளியும் அவருடைய மனைவியை அழைத்து ஒரு 2000 ருபாய் கொடு என்று சொல்லியிருக்கிறார்..அவர் மகிழ்ச்சியுடன் பத்திரிகையை கொடுத்துவிட்டு வந்தார்..அப்போது அந்த உதவியாளருடன் கூட வந்தவர் ஏன் நீங்கள் எம்ஜிஆரை பார்க்க கூடாது என்றார்..அதற்கு அந்த உதவியாளர் எம்ஜிஆர் அந்த முகாமில் உள்ளார்..மேலும் அவரை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என்றார்..ஆனால் கூட வந்தவர் அவரை விடவில்லை..வலுக்கட்டாயமாக அழைத்து சென்றார்..வந்தவர்களை வழக்கம்போல சாப்பாடு போட்டு உபசரித்த எம்ஜிஆர்..வந்த உதவியாளரின் பெயரை சொல்லி எப்படி இருக்கிறீர்கள்..நன்றாக இருக்கிறேன் என்று கூறி திருமண பத்திரிகையை அளித்திருக்கிறார்..அவர் கேட்ட முதல் கேள்வி..கல்யாணத்திற்கு எவ்வளவு செலவு? இதை ஏன் இவர் கேட்கிறார் என வியந்து..அப்போதைய செலவு ஒரு 50,000 என்று சொல்லியிருக்கிறார்.செலவுக்கு என்ன செய்ய போறீங்க என்று கேட்கிறார் நம் தலைவர்..அதற்கு உதவியாளர் கல்யாணத்திற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது பார்த்துக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்..சரி நாங்கள் கிளம்பறோம் என்று சொன்னவர்களை..கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு தனது உதவியாளரை அழைத்து அவரிடம் 50,000 கொடுங்கள் என்று சொல்லி..கல்யாணத்தை நல்லபடியாக நடத்துங்கள்..நான் கண்டிப்பாக வருவேன் என்றார்.வந்தவருக்கு பேச வார்த்தை வராமல் கண்ணீருடன் நின்றிருக்கிறார்.காலம் முழுவதும் யாருக்காக உழைக்கிறோமோ அவர் கொடுத்தது 2000 ஆனால் யாரை நாம் எதிரி என்று நினைத்திருந்தோமோ அவர் கல்யாண செலவு முழுமையும் கொடுத்துவிட்டார்..அதனால்தான் இவரை வள்ளல் என்கின்றனரா என்று வியந்தார்..வந்தவர் யார் என்று நினைக்கவில்லை நம் வள்ளல்..அவரது தேவைதான் அவருக்கு தெரிந்தது..அதனால்தான் அவர் எட்டாவது வள்ளலாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்...இது போன்ற தெரிந்த உதாரணங்கள் கோடி உண்டு..தெரியாதவை கோடான கோடி...ஏன் என்றால் வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியகூடாது என்று நினைப்பவர் நம் தெய்வம்...இப்படிப்பட்ட மனித நேய புனிதரின் பக்தரை நாம் இருப்பதில் பெருமை கொள்வோமாக..
    உள்ளத்தால் வள்ளல் தான்!
    ஏழைகளின தலைவன்.........sbb...

  6. #1235
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*03/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ----------------------------------------------------------------------------------------------------------
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் .* விமான நிலையத்தில் சந்தித்த உன்னால் முடியும் தம்பி கதை எழுதிய திரு.எம்.எஸ்.உதயமூர்த்தியிடம் பேசியபின் விடை பெறுகிறார் .* அப்போது ஒரு அமெரிக்க பெண்மணி கண்ணீரும் கம்பலையுமாக நிற்கிறார். எம்.ஜி.ஆர். தன்*உதவியாளர் மூலம் என்னவென்று விசாரிக்க சொல்கிறார் .* அவருடைய கைப்பை ,அதிலுள்ள பணம்,சில பொருட்கள் எல்லாம் காணாமல் போய்விட்டது என்று அழுகிறார் .* நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். எனக்கு வேண்டியவர்களுக்கு தகவல் சொல்லி தேவையான ஏற்பாடுகள் செய்கிறேன்.* நீங்கள் தைரியமாக வீடுபோய்* பாதுகாப்பாக**சேருங்கள் உங்களுடைய கைப்பை, பணம், பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் என்று நம்பிக்கை வார்த்தைகள்தனக்கு சம்பந்தமில்லாத இடத்தில* அங்கேயே சொல்லி,அந்த பெண்மணியின் கண்ணீரை துடைத்தது* மட்டுமல்லாமல், அங்கிருந்த தன்னுடன் வந்திருந்த முக்கிய நபரிடம், இந்த பெண்மணியின் உடைமைகள் மீட்டு கொடுக்க வேண்டிய ஏற்பாடுகளை நீங்கள் செய்துதர வேண்டும் என்று ஆணையிட்டு அதை கிடைக்க செய்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .**

    மும்பை தாராவியில் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர் புலவர் ராமச்சந்திரன் என்பவர் எம்.ஜி.ஆர். மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர் .* சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் புரட்சி தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று சமீபத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை அனைவரும் அறிந்ததே . ஆனால் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்படும் ரயில்கள் பற்றி அறிவிப்பு வெளியிடும்போது எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று குறிப்பிடுகிறார்கள் .* அப்படி சொல்ல கூடாது புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி..ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் என்று அறிவிக்க வேண்டும் என்று ஒரு மனுவை மும்பையில் உள்ள ரயில் நிலைய அதிகாரிக்கு*அளித்துள்ளார் .* அந்த மனுவை மும்பை அதிகாரிகள் பரிசீலித்து,அதன்படி சில நாட்களுக்கு முன்பில் இருந்து முறையாக, அவரது வேண்டுகோளின்படி அறிவிப்பு வெளியிடப்படுவதை உறுதி செய்து கொண்டு நமக்கு தகவல் அளித்துள்ளார் .* இன்றைக்கும் அந்த மகானுடைய பெயரை உச்சரிப்பது ,பலரை உச்சரிக்க செய்வது எம்.ஜி.ஆர். என்கிற மகோன்னதமான மாமனிதரின் பெயரை புகழ்ந்து ,தங்களுடைய நெஞ்சிலே போற்றி புகழ்கின்ற எத்தனையோ பேர்கள் அந்த மும்பை தாராவி ராமச்சந்திரன் போன்றவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல அண்டை மாநிலங்களிலும் இருக்கிறார்கள் என்பது இந்த தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் .*


    ஒரு மனிதன் அவர் வாழும் காலத்தில் புகழ்வார்கள். அவரால் பலனடைவார்கள் அவர் மறைந்த பிறகு, இன்றைக்கும், தமிழகம்* மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழர்களின் இதயங்களில் அவர் வாழ்கின்றார் என்றால் , அவரது ஆன்மா எந்த அளவிற்கு மேன்மை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் .இந்த சகாப்தம் நிகழ்ச்சி மூலம் எம்.ஜி.ஆர். என்கிற ஒரு மாமனிதரின் தொடர் லட்சக்கணக்கான இதயங்களை ஈர்த்திருக்கிறதை அறிந்து*நாம் பெருமைப்படுகிறோம் .* இந்த சகாப்தம் இன்னும் பல அரிய தகவல்கள், செய்திகளுடன் தொடரும் .


    திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி ;: மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்* முதல்வரானபின் பேசிய கூட்டத்தில் ,பேசிய இடத்தில ஒருவர் கேட்கிறார் ,நீங்கள் முதல்வராவதற்கு முக்கிய காரணம் என்ன என்று கேட்டபோது* நான் அமர்ந்துள்ள நாற்காலியின் நான்கு கால்களில் ஒரு கால் பிரபல கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகள், பாடல்களால் உருவானது .**என் சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்தில் இருந்து பல படங்களில் பாடல்கள்* எழுதிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவியரசு கண்ணதாசன் போன்றவர்கள் தான் என்னுடைய வாழ்வின் முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணம் என்று சொன்ன எம்.ஜி.ஆர். அவர்கள் ,ப.கோ.கல்யாணசுந்தரம் அவர்கள் மிக இளம் வயதிலேயே நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்ற காரணத்தால் அவரை அந்த காலத்தில் கவனிக்க முடியாமல் போய்விட்டது .* ஆனால் கவியரசு கண்ணதாசன் அவர்களை எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருக்கும்போது அழைக்கிறார் .* அந்த கால கட்டத்தில் தலைவரை ,கண்ணதாசன் வசைபாடி கொண்டிருந்தார் .* எம்.ஜி.ஆர். அவர்களை கிண்டல் ,கேலி செய்தும், துன்புறுத்தும் வார்த்தைகள் மூலம் எழுதிக்கொண்டுதான் இருந்தார் .* ஆனால் இவற்றை பற்றி எதுவும் கவலைப்படாமல் எம்.ஜி.ஆர். அவர்கள் கண்ணதாசனை அழைத்து ,நான் உங்களை அரசவை கவிஞர் ஆக்குவதாக முடிவு செய்துள்ளேன். சம்மதம் என்கிற வார்தையைத்தவிர வேறு எதுவும் நான் எதிர்ப்பார்க்கவில்லை என்றார் .அப்போது கண்ணதாசன் நாணி, குறுகி, வெட்கத்தால் பதில் பேச முடியாமல் தவித்துள்ளார் .* நான் எவ்வளவு முறை, தூரம் பரிகாசம், கிண்டல், கேலி, துன்புறுத்துதல்,விமர்சனங்கள்* இவையெல்லாம் செய்தும் , அதையும் மீறி,எதை பற்றியும் கவலைப்படாமல் ,அதை ஒரு பொருட்டாக கொள்ளாமல்* என்னை அழைத்து மதிப்பளித்து, மரியாதை செய்ய முடிவு செய்து, அரசவை கவிஞர்*ஆக்குவதாக அறிவிப்பு செய்கிறாரே, என வியந்து கவிதை* மழையால் எம்.ஜி.ஆர். அவர்களை புகழ்ந்து பாராட்டினாராம் . எனக்கு இனி எந்த கவலையில்லை . என்னுடைய சேவையை கருதி, நான் இறந்தால், எனக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் , என் உடலமீது தேசியக்கொடி போர்த்தப்பட்டு ,உடல் அடக்கம் செய்யப்படும். அந்த வகையில் வேண்டிய ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். அவர்கள் செய்வார் என்ற நம்பிக்கையுடன் நான் உயிர் துறப்பேன். அதுவே என் வாழ்வின் பாக்கியம். என்று கண்ணதாசன் அறிக்கை வெளியிட்டார் .கண்ணதாசன் அவர்கள் மறைந்த பிறகு* அமெரிக்காவில் இருந்து அவரது பூத உடலை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவர செய்து ,இறுதி ஊர்வலம் புறப்படும் நாளன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது .அப்போது வந்த எம்.ஜி.ஆர். அவர்கள்.வாகனத்தின் மீது தானே ஏறி, அவரது முகம் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் தனது உதவியாளரை* வைத்து சரிசெய்ய வைத்தார் .* இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செய்தார் எம்.ஜி.ஆர். அவர்கள் .* யாரையும் பழிவாங்கும் சிந்தனை துளியும் இல்லாதவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .**


    முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா அவர்கள் குறிப்பிட்ட சொன்ன விஷயம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது .* அவர் சொன்னபடி பெயரை குறிப்பிட்ட விரும்பவில்லை. ஒருதலைவர்* எம்.ஜி.ஆர். அவர்களின் அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்தவர் .* அவர் 1980 சட்டமன்ற* பொது தேர்தலில் போட்டியிடும் போது* எம்.ஜி.ஆர். அவர்கள் , நீங்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதியில் உங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்று கேள்விப்பட்டதால் ,வேறு தொகுதியில் போட்டியிடுங்கள் என்றார் .* அண்ணே எனக்கு பழைய தொகுதியை கொடுங்கள். கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன் என்கிறார் . பதிலுக்கு தலைவர் நான் விசாரித்ததில் உங்களுக்கு வெற்றி கிடைப்பது சந்தேகம் என்று சொன்னபோது* ,அவர் மறுத்து, இல்லை.நான் கண்டிப்பாக ஜெயித்து காட்டுகிறேன் .எனக்கு பழைய தொகுதியையே கொடுங்கள் என்று பிடிவாதம் காட்டுகிறார் .* எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சி ஆரம்பித்த நேரத்தில் கட்சியில் சேர்ந்தவர்,பக்கபலமாக இருந்தவர்* என்பதால் தலைவருக்கு அவர்மீது மதிப்பும், மரியாதையும் உண்டு .,அதனால், எம்.ஜி.ஆர். அவர்கள் ,அவர் பேச்சுக்கு மதிப்பளித்து,,அதே சமயம் ஒன்றை குறிப்பிட்டு சொல்கிறார் . நீ பழைய தொகுதியில் வெற்றி பெற்றால்* உனக்கு மந்திரி பதவி கிடைக்கும்.* ஒரு வேளை*தோல்வியுற்றால் உனக்கு எந்த பதவியும் தர முடியாது ,சம்மதமா என்று கேட்டார் .* ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் அவர் ஒத்து கொள்கிறார். தலைவர் அவர்கள் மீண்டும் தான் சொன்னதை நினைவுபடுத்தி அனுப்புகிறார் . தேர்தலுக்காக அவர் முனைப்பாக பிரச்சாரம் செய்து உழைக்கிறார் . எம்.ஜி.ஆர். அவர்களும் பிரச்சாரத்தில் கலந்துகொள்கிறார் .* ஆனால் தேர்தல் முடிவு அவருக்கு சாதகமாக அமையவில்லை. தலைவர் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டது போல அவர் தோல்வியுற்று,மிகவும் வேதனை அடைகிறார். வீட்டில் முடங்கி கிடக்கிறார் .* 15 நாட்கள் கழித்து, எம்.ஜி.ஆர். அவர்கள் மந்திரிசபை அமைத்த பிறகு ,பார்க்க வந்தபோது ,தலைவர் அவரை கண்டு கொள்ளாமல் உள்ளே சென்று விடுகிறார் .* 4 நாட்கள் கழித்து மீண்டும் அவர் வந்து தலைவரை சந்திக்கிறார் .தலைவர் அவரிடம், நான்தான் முன்பே சொன்னேனே,என் பேச்சை கேட்காமல், தோல்வியுற்று, எல்லாம் முடிந்தபின் நான் என்ன செய்ய முடியும் ,இப்போதைக்கு உனக்கு எந்த பதவியும் இல்லை. நீ போகலாம் என்று கோபத்துடன் சொல்லிவிட்டார். இதை அவர் தன் மனைவியிடம் சொல்லியுள்ளார் .சில நாட்கள் கழித்து, அவரது மனைவி எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்க ராமாவரம் தோட்டம் வருகிறார் . இப்போதெல்லாம் முதல்வர், அமைச்சர்களை சந்திப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. காரணம் பாதுகாப்பு* மற்றும் பல்வேறு பிரச்னைகள் . அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சி காலத்தில் முதல்வரை அவரது இல்லத்தில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். எப்படியும் தினசரி குறைந்தது 300 பேர் அவரை சந்திக்க வருவார்கள் அத்தனை பேரையும் சந்தித்து, அவர்களின் குறைகளை தீர்த்துவிட்டு தான் தினசரி எம்.ஜி.ஆர். அவர்கள் கோட்டைக்கு புறப்படுவார் என்பது யாவரும் அறியாத அதிசயம். அது மட்டுமல்ல. வந்திருந்த அனைவருக்கும் காலை சிற்றுண்டி, காபியுடன்* இலவசமாக வழங்கப்படும் .என்பது என்னை போன்ற அறிந்தவர்களுக்கு தெரியும். அந்த வி.ஐ.பி.யின் மனைவி எம்.ஜி.ஆர் அவர்களை சந்திக்கிறார். முதல்வர் அவர்கள், அவரிடம்,நான் முன்பே,உங்கள் கணவரிடம் உறுதிமொழி வாங்கியபின்தான் தொகுதியை ஒதுக்கினேன். என் பேச்சை கேட்கவில்லை, மதிக்கவுமில்லை தொகுதியில் தோற்றும் விட்டார் ..மீண்டும் என்னை அவர் சந்திக்க வந்தபோது இப்போதைக்கு எந்த பதவியும் நான் அறிவித்தபடி தரமுடியாது என்று சொன்னேன் என்று பேசியபின் ,நண்பர்களை சந்தித்துவிட்டு, அன்னை சத்யபாமா சமாதிக்கு முன்பு சில நிமிடங்கள் மௌன வணக்கம் செலுத்திவிட்டு, பிரார்த்திவிட்டு எம்.ஜி.ஆர். அவர்கள் காரில் புறப்படுவது வழக்கம் . எம்.ஜி.ஆர். காரில் அமர்ந்து புறப்படும் சமயம்,அந்த வி.ஐ.பி.யின் மனைவி, காரின் முன்பு வந்து கீழே உள்ள மண்ணை எடுத்துதூற்றி* ,எம்.ஜி.ஆர். அவர்களை பற்றி கேவலமாக சில வார்த்தைகளை உரக்கமாக* பேசி புலம்புகிறார் .* உடனே அருகில் உள்ள காவலர்கள், பாதுகாவலர்கள் அவரை அடிக்க முனைகிறார்கள், எம்.ஜி.ஆர். அவர்கள் கார் கண்ணாடியை கீழே இறக்கி, யாரும் அந்த அம்மையாரை எதுவும் செய்ய கூடாது. அவரது கணவர் நமக்கு வேண்டப்பட்டவர். ஏதோ கோபத்தில், உணர்ச்சிவசப்பட்டு இப்படி நடந்து கொள்கிறார்கள். அவரை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று சொல்லிவிட்டு புறப்படுகிறார் .*


    முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் கோட்டைக்கு செல்லும் வழியில் , காரில் பயணித்தபடியே ,அதிகாரிகளுக்கு ,தோல்வியுற்ற அந்த வி.ஐ.பி.யின் பெயரை சொல்லி,என்ன செய்வீர்களோ* தெரியாது, இன்னும் ஒரு மணி நேரத்தில்* அவருக்கு மந்திரி பதவியின் தகுதியோடு, ஏதாவது ஒரு வாரியத்தின் தலைவராக இன்றே உத்தரவு கண்டிப்பாக பிறப்பிக்க வேண்டும் என்கிறார் .**அப்போதெல்லாம் செல் போன் கிடையாது . காவல்துறையின் வாக்கி டாக்கி மூலம்தான் தகவல் பரிமாற்றம் .* எம்.ஜி.ஆர். அவர்கள் கோட்டைக்கு சென்றடைவதற்குள் அவருக்கு உரிய பதவி தயார் செய்யப்படுகிறது . எம்.ஜி.ஆர்*அவர்கள் கோட்டையில் இருந்து வி.ஐ.பி.யின் இல்லத்திற்கு தொலைபேசியில்*அவருக்கு அளிக்கப்பட்ட வாரியத்தின் தலைவர் பதவி குறித்து* தகவல் தெரிவிக்கிறார் .* எம்.ஜி.ஆர்.அவர்கள் பேசும்போது, போனை எடுத்த வி.ஐ.பியின் மனைவி வணக்கம் சொல்லிவிட்டு*, பதறியடித்து பேசுகிறார். அம்மா வருத்தப்படாதீர்கள் .* நீங்கள் ஏதோ கோபத்தில், உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டீர்கள். எனக்கு எவ்வளவு பிரச்னைகள்,சிக்கல்கள் என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .* நான் உண்மையில் உங்கள் கணவரை மந்திரியாக்கத்தான் முற்பட்டேன். ஆனால் என் பேச்சை அவர் கேட்கவில்லை. அதனால்தான் தண்டனை அளிக்க வேண்டியதாயிற்று . அதனால்தான் நீங்கள் என் இல்லத்தில் அனைவரின் முன்பாக மண்ணை வாரி தூற்றினீர்கள். அனால்*அதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை .* வருந்தாதீர்கள் என்று சொன்னதும் போனிலேயே அந்த அம்மையார் கத்தி கதறுகிறார்கள். ஐயா மன்னித்துவிடுங்கள், நான் இப்படி செய்திருக்க கூடாது* என்கிறார் .ஏதோ நடக்க கூடாதது நடந்துவிட்டது என்று ஆறுதல் கூறுகிறார் .* அவரது கணவருக்கு வாரிய தலைவர் பதவி அளித்ததோடு, பதவியில் இல்லாத 10 முக்கியஸ்தர்களை அதில் உறுப்பினர்கள் பதவி அளித்து ,அனைவரையும் திருப்தி அடைய செய்தார் . நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்,வேறு யாராவது தலைவர் இடத்தில இருந்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.* இப்படிப்பட்ட ஒரு செய்கையை செய்ததை , கண்டாலே தாங்க முடியாததை* உடனடியாக அதை பொறுத்துக் கொண்டு அதற்குரிய பரிகாரத்தை செய்யக்கூடிய தலைவராகதான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் இருந்தார் .* அதனால்தான் அவர் மறைந்து 33 ஆண்டுகள் ஆனபின்பும் கூட ஒவ்வொருவர் இல்லத்திலேயும் புகைப்படமாக, ஒவ்வொருவர் உள்ளத்திலேயும், தம்பியாக, அண்ணனாக, சகோதரனாக, தோழனாக, தனயனாக, பிள்ளையாக, இப்படி பல்வேறு உருவங்களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து இருக்கக்கூடிய குடும்பங்கள் தமிழகம் மட்டுமல்ல*உலகெங்கிலும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் தமிழர்கள் இதயங்களில் எல்லாம் குடியிருக்க கூடிய நமது தங்க தலைவர் ,வாரி கொடுத்த வள்ளல், வற்றாத ஜீவநதி , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை பற்றி வாழ்நாளெல்லாம் பேசி கொண்டே இருக்கலாம் .* இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .******

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் :
    ---------------------------------------------------------------------------------
    1.. பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த* - நினைத்ததை முடிப்பவன்*

    2. அன்பே வா படத்தில் எம்.ஜி.ஆர்.*

    3. நீயா இல்லை நானா* - ஆசைமுகம்*

    4. திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*



    *

  7. #1236
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கோவை சண்முகாவில் 10/11/20 முதல் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் தாய்க்கு*தலை மகன் தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

    தீபாவளி* விருந்தாக*ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க*14/11/20 முதல்*மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின்*காவல்காரன் தினசரி 4 காட்சிகள் வெள்ளித்திரைக்கு வருகிறது*.

    தகவல் உதவி : திரு.வி.ராஜா, நெல்லை .*

  8. #1237
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மதுரை*சென்ட்ரல் சினிமாவில் 10/11/20 முதல் தீபாவளி விருந்தாக*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் தர்மம் தலை காக்கும்*தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது .

    தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை .

  9. #1238
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் தலைவர் நெஞ்சங்களுக்கு இன்னும் ஒரு மகிழ்ச்சி செய்தி...

    பச்சைகிளி ரூங்கிதா தாய்லாந்தின் புகழ் பெற்ற நடிகை அவர்கள் தன் ட்விட்டர் வலைதள பக்கத்தில் கடந்த சில நாட்கள் முன்பு தனக்கு மிகவும் பிடித்த படம் இது என்று இந்த படத்தை பதிவு செய்து உள்ளார்.

    அந்த நாட்டில் பல நெஞ்சங்கள் இன்று யார் இவர் என்று மீண்டும் நம் தலைவரை தேட துவங்கி உள்ளனர்.

    எங்கேயும் எப்போதும் நம்ம தலைவரே ட்ரெண்டில் உள்ளார்.

    நன்றி தாய் நாட்டின் தவ புதல்வரின் உடன் நடித்து கொஞ்சு தமிழ் பேசி கூட வந்த பச்சைக்கிளியே என்றும் மறவா எம் தலைவர்.

    எம்ஜிஆர் நெஞ்சங்கள் சார்பாக..ஆயிரம் கோடி நன்றிகள் உங்களுக்கு. . உங்களில் ஒருவன்...நன்றி.

    யாருக்கு வயது கம்மி.
    யாருக்கு அதிகம்.
    ஒரே குழப்பம்..
    இருக்காதா பின்னே. நாகேஷ் சொன்னது போல...என்ன..........

  10. #1239
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "உலகம் சுற்றும் வாலிபன்" காவியம் ஏற்படுத்திய இணையில்லா பிரம்மாண்டமான சரித்திரம், சகாப்தம், உச்ச சாதனை சிகரத்தை வென்ற விபரங்களின் அணிவகுப்பு.........தமிழகம் 20 திரையரங்கு 100 நாள்...
    பெங்களுர் 3 திரையரங்கு 100 நாள்...
    இலங்கை 3 ஏரியாவில் 100 நாள்...
    30 அரங்கில் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து சாதனை.

    6 மாதத்தில் 2 கோடி வசூல் பெற்ற தென்னிந்தியாவின் முதல் காவியம்...

    முதல் வண்ணக்காவியம்
    25 அரங்கில் 100 நாள்..ஒடீ சாதனை.

    இன்று வரை தமிழகத்தில் அதிக குளிர்சாதன அரங்கில் திரையிட்ட ஒரே காவியம்.

    சென்னை
    தேவிபாரடைஸ் 182 நாள்
    அகஸ்தியா 176 நாள்
    மதுரை 217 நாள்
    திருச்சி 203 நாள்
    இலங்கை 203 நாள்
    கோவை 166 நாள்...

    இப்படி பல்வேறு பற்பல சாதனைகள்..............ukr...

  11. #1240
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காலத்தை வென்ற எம்ஜிஆர்

    ஆளும் அதிகார வார்க்கத்தின்
    வக்கிர புத்தி படைத்த கருணாவின் கைத்தடிகள்
    அன்று எம்ஜிஆருக்கு எதிராக கொலை வெறியுடன் செயல்பட்டார்கள்

    பொரும் பொருட் செலவில் உருவான உலகம் சுற்றும் வாலிபன் திரைப் படத்தை வெளியிட முடியாமல் பல்வேறு தடைகள் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொலை மிரட்டல் என பல்வேறு அச்சுருத்தல்கள்.

    இதையல்லாம் தாண்டி
    ஒருவர் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியானால் சேலை கட்டி கொள்வதாக அறிவித்தார்.

    நாம் யாரால் இந்த நிலையை அடைந்தோம் என்பதை
    பதவி வெறியில் பதவி மோகத்தால் தன்னை மறந்து
    நடந்து கொண்டார்
    கருணாநிதி.

    எம்ஜிஆரை பற்றி கீழ் தரமான வார்த்தைகளால் வசைமாறிப் பொழிந்து தன்னைத்தானே இழிவு படுத்தி கொண்டார்.

    எதைக் கண்டும் அச்சப் படாத
    எம்ஜிஆர் கருணாநிதியின் கபட நாடகத்தை உடைத்தெறிந்தார்
    அண்ணாவின் பெயரில் எம்ஜிஆர் கண்ட கழகம் நாளுக்கு நாள் அசூர வேகத்தோடு வளர்ந்து கொண்டு இருந்தது
    கண்டு பதற்றம் அடைந்தார் கருணாநிதி

    பல லட்சம் தொண்டர்கள்
    புரட்சித் தலைவருக்காக
    உயிரையும் கொடுக்கத் துனிந்தார்கள்.
    எம்ஜிஆரின் உழைப்பால் வளர்ந்த திமுக
    எம்ஜிஆரின் உழைப்பால் எம்ஜிஆர் தயவால் வளர்ந்த கருணாநிதி

    எம்ஜிஆரை திமுகாவில் இருந்து தூக்கி எரிந்தது கண்டு எத்தனை தொண்டர்கள் இரத்தம் சிந்தினார்கள்
    எத்தனை தொண்டர்கள் உயிர் தியாகம் செய்தார்கள்.

    எம்ஜிஆருக்காக தன் உயிரைக் கொடுத்த முதல் தியாகத் தொண்டன் உடுமலை இஸ்மாயில் என்கிற இஸ்லாமிய சகோதரன்.
    எம்ஜிஆர் தொண்டர்கள் சாதி
    மதங்களுக்கு அப்பார் பட்டவர்கள்.
    எம்ஜிஆரை மலையாளி என்றும்
    தமிழன் அல்ல என்றும்
    நடிகனுக்கு நாடாள தெரியுமா?
    என்று எல்லாம் பேசி பிரிவினையை உருவாக்க நினைத்த
    கருணாநிதிக்கு
    பல அதிர்ச்சிகளை பரிசாக தந்தார்
    மக்கள் திலகம் பொன்மனச் செம்மல்

    எங்கள் சாதியும் mgr
    மதமும் mgr
    எங்கள் வாழ்வே mgr...

    அதிர்ச்சிகள் வரும்
    நாளை1972- நவம்பர் 5 நடந்தது என்ன?
    *எம்ஜிஆர்நேசன்*............

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •