Page 125 of 210 FirstFirst ... 2575115123124125126127135175 ... LastLast
Results 1,241 to 1,250 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1241
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே*புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். - வின்*டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*04/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
    -----------------------------------------------------------------------------------------------------------------
    திரைப்பட உலகில் ஒவ்வொரு நிமிடத்தையும் காசு வீணாக்கக்கூடாது என்பது கட்டாயமான ,சொல்லப்படாத, எழுதப்படாத விதி.* இப்படி இருக்கும்போது*வேட்டைக்காரன் படப்பிடிப்பில் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்து ,எம்.ஜி.ஆர். அவர்களிடம்*சொல்கிறார்* . நாம் தினமும் படப்பிடிப்புக்கு வரும்போது நல்லமேடு என்ற பகுதியில் வரும்போது தமிழகத்தை சார்ந்தவர்கள் அணைக்கட்டு பகுதிக்கு வேலைக்கு வந்திருக்கிறார்கள் .* வேலை முடிந்து செல்லும்போது கூலி வாங்கிய கையோடு தங்களை பார்த்துவிட்டு செல்ல அவர்கள் விருப்பப்படுகிறார்கள்.அவர்கள் சுமார் 300 பேர். பலமுறை என்னிடம் வேண்டுகோள் வைத்தார்கள் எப்படியாவது ஒரு முறையாவது தங்களை பார்த்துவிட வேண்டும் என்று .* ஒருவேளை இன்று* முடியாவிட்டால் நாளையாவது கூலி வாங்கியபின் தங்களை பார்க்க முடிவு செய்துள்ளார்கள் என்றேன் ..* சரி, பரவாயில்லை சற்று அமைதியாக இருங்கள் என்று கூறி ,படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ,தேவரின் பிளைமவுத் காரில் ,மாரிமுத்து மற்றும் தன்* உதவியாளரை அழைத்து கொண்டு நேராக அணைக்கட்டுபகுதியில் வேலை செய்யும் தொழைலாளர்களை சந்திக்க செல்கிறார் . அவர்கள் வேலையை முடித்துவிட்டு தங்கள் ஊருக்கு மூட்டை முடிச்சுகளுடன் புறப்படும் நேரம் .* எம்.ஜி.ஆர்.அவர்களை கண்டதும் அவர்கள்* வியந்து புல்லரித்து போகிறார்கள் .* தங்கள் கையில் உள்ள பலாப்பழம், வாழைப்பழம்,* கொய்யாப்பழம் போன்றவற்றை கொடுத்து எம்.ஜி.ஆர். அவர்களை சாப்பிட சொல்லி மகிழ்ச்சி அடைகிறார்கள் நீங்கள் மட்டும் இன்று வராமல் போயிருந்தால் நாங்கள் நாளைக்கு காத்திருந்துதான் உங்களை பார்க்கவேண்டி இருந்திருக்கும் .* அவர்கள் தினக்கூலியாக ரூ.5/- ரூ.10/-* என்று வாங்கிக்கொண்டு இருந்தார்கள். அந்த தினக்கூலியை கூட தியாகம் செய்துவிட்டு எம்.ஜி.ஆரை பார்க்க அவர்கள் சித்தமாக இருந்தார்கள் என்பதுதான் வேடிக்கை .* தொழிலாளர்களை அப்படி காக்க வைப்பது தவறு என்று கருதியது மட்டுமல்லாமல் நேரில் சென்று சந்தித்தது மட்டுமின்றி அவர்களை சந்தோஷப்படுத்துவதற்காக ,காரில் உள்ள பணப்பெட்டியை கொண்டுவர சொல்லி, அனைவருக்கும் பணக்கட்டுகளை பிரித்து ,ரூ.5/-, ரூ.10/- நோட்டுகளை கட்டுக்கட்டாக பிரித்து அந்த 300 பேருக்கும்*கொடுத்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் .* பின்னர் அனைவரையும் ஊருக்கு அனுப்பிவைத்த பின்னர் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டாராம் .*படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர்., மாரிமுத்து, உள்பட சிலர் பங்கேற்கவில்லை என்று தெரிந்து தேவர் அனைவர்மீதும் கோபம் கொண்டு கடிந்து கொண்டாராம் .*


    மறுநாள் காலையில் காபி அருந்த எழுந்த பட தயாரிப்பாளர் தேவர் ,படப்பிடிப்பில் அனைவரும் அதிகாலையிலேயே ஆஜரான விஷயம்* அறிந்து அதிர்ந்து போனாராம். எல்லாம் எம்.ஜி.ஆரின் ஏற்பாடு .* முதல் நாள் மாலையில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சொல்லி கொள்ளாமலேயே தேவரின் காரை எடுத்து கொண்டு, உதவி இயக்குனர் மாரிமுத்து, தன்* உதவியாளருடன்*ரசிகர்களை, தொழிலாளர்களை சந்தித்து அவர்களை மகிழ்விக்கும்பொருட்டு*சென்றதை அறிந்த தேவர் ,அனைவரையும் கடிந்து கொண்டதை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ,தேவரை திருப்திப்படுத்த இந்த யுக்தியை பயன்படுத்தினார்*மறுநாள் காலை 5.30 மணிக்கெல்லாம் தன் யூனிட் ஆட்களை திரட்டி கொண்டு படப்பிடிப்பிற்கு எம்.ஜி.ஆர். வருகை தந்ததை பார்த்த தேவர் உண்மையில் திகைத்து போனார் .* விஷயம் அறிந்து பதறி போன தேவர், என்ன முருகா ,இப்படி அதிகாலையில் கடுங்குளிரில் வந்துவிட்டீர்களே என்று அதிர்ந்துவிட்டாராம் .**கொஞ்சம் தாமதமாக வந்திருக்கலாமே என்றதற்கு, இல்லை,முதலாளி, நேற்று உங்களிடம் சொல்லி கொள்ளாமலேயே, படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தொழிலாளர்களை சந்திக்க சென்றுவிட்டேன்.* அந்த நேரத்தை சரிசெய்து , படப்பிடிப்பை முடித்து கொடுத்து ,கோபம் கொண்ட உங்களையும் சாந்திபடுத்துவதற்காக*.எடுத்த முயற்சி இது என்று* அவரை திருப்திபடுத்தினாராம் .* அப்படி உழைப்பை கூட தயங்காமல், மற்றவர்கள் மனம் நோகாமல் நேரத்தோடு சரிசெய்து தந்து அவர்களை திருப்தி அடைய செய்வதில்*எம்.ஜி.ஆர். வல்லவராக இருந்தார் .**


    ஒருவர் ஆட்சியில், அதிகாரத்தில், பதவியில் இருக்கும்போது அவரது பெயர்*எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.* ஆனால் ஆட்சி, அதிகாரம், பதவி எல்லாம் போனபிறகு அவரை யாருக்கும் தெரியாமல் போகும் வாய்ப்பு ஏற்படும் அப்போது அவரை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்பார்கள் .எம்.ஜி.ஆர். அவர்கள்* இன்றைக்கு ஆட்சியில் , அதிகாரத்தில், பதவியில் இல்லை. அவரே* மறைந்து போனாலும், அவரது பெயர் நிலைத்து நிற்கிறது* என்று சொன்னால் அவர் மழைக்கான காளான் அல்ல ஒரு ஆலமரம் போன்றவர் .*


    திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி :* *புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்*தன்னுடைய எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் , தனக்கு நேர்ந்த, தனக்கு ஏற்பட்ட எண்ணத்தின் விளைவாக, ஒரு மிருகபலத்தோடு இருந்த ஒரு மாபெரும் அரசாங்கத்தின் ஆட்சியை எதிர்த்து, கூக்குரல் இட்டு, அதை வெற்றிகரமாக ஆக்கி காட்டிய அந்த தலைவருக்கு பின்னால் எத்தனையோ உப தலைவர்கள் இருந்தார்கள் . அந்த தலைவர்களின் வரிசையில் காளிமுத்து போன்ற மிகுந்த பேச்சாற்றல் மிக்கவர்கள், வலம்புரி ஜான் போன்றவர்கள் , கவியரசு முத்துராமலிங்கம், நா.காமராசன் , முத்துலிங்கம், என்னை போன்றவர்கள் ,கோவைத்தம்பி, திருப்பூர் மணிமாறன் ,பொள்ளாச்சி ஜெயராமன்*போன்றவர்கள்இப்படி எண்ணற்ற தோழர்களெல்லாம் அன்றைக்கு படைக்களங்களாக ,போர்க்குரல் கொடுத்து , ஒவ்வொரு ஊரிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தி, கொள்கை விளக்கங்கள் அளித்து , அ.தி.மு.க.வை மீட்டெடுக்க எத்தனையோ தலைவர்கள் உருவானார்கள் .* மாணவரணி தலைவராக இருந்த வெள்ளைச்சாமி, சட்ட கல்லூரி**மாணவர்களை வெளியே அழைத்து வந்து, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களை நீக்கிய நேரத்தில் மாபெரும் ஊர்வலம் நடத்தி, மறியல் போராட்டம் செய்ததால்* அவர் போட்டியிட* கேட்ட தொகுதி ஒன்று. ஆனால் தலைவர் அவருக்கு ஒதுக்கிய தொகுதி ஆத்தூர்..* ஆத்தூரில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகிறார். ஆனால் முதல் கட்ட அறிவிப்பில் அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. 2ம் கட்ட அமைச்சரவை பட்டியலை எம்.ஜி.ஆர். அவர்கள் உருவாக்குகிறார் .* சட்டமன்றத்தில் வெள்ளைச்சாமி பங்கேற்கிறார். அப்போதெல்லாம் தொலைபேசியில் தலைவரிடம், அதிகம் பேசும் வாய்ப்பு பெற்றவர் .* அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் நான் உடுமலையில் இருந்தேன். வெள்ளைச்சாமி அவர்கள் மடத்துபுரத்தில்* இருந்து நான்கு நாட்களுக்கு ஒருமுறை தலைவரிடம் பேசுவார் .* அதாவது இந்த ஊரில் இந்த நிகழ்ச்சி, அந்த ஊரில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்று குறிப்பிட்டு பேசுவார் .* என்னென்ன முக்கிய செய்திகள் தலைவருக்கு அனுப்ப வேண்டுமோ அதை செய்வதில் கெட்டிக்காரர், தலைவருடன் நெருக்கமாக பேச கூடியவர் . நான் வெள்ளைச்சாமி பேசுகிறேன் என்று சொன்னாலே போதும், உடனடியாக* தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவார் . நானும் என் பங்கிற்கு சில நிகழ்வுகளை எல்லாம் குறிப்பிட்டு தலைவரிடம் சொன்னேன்.***


    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் 2வது* கட்ட அமைச்சரவை பட்டியலில் , கட்சியில் புதிதாக சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் என்பவருக்கு மந்திரி பதவி அளிக்கிறார் . முதல் சுற்றில் பி.டி.சரஸ்வதி என்பவர் அமைச்சர் ஆக்கப்பட்டார் .சுப்புலட்சுமி ஜெகதீசனை அமைச்சராக்கியது வெள்ளைச்சாமிக்கு பிடிக்காததால்*தலைவரை தி.நகர் அலுவலகத்தில் தொடர்பு கொள்கிறார் . அப்போது* அந்த அலுவலகத்தில் உதவியாளர் முத்து , ஆடை அலங்கார நிபுணர் முத்து*,உதவியாளர் மகாலிங்கம் போன்றவர்கள் அங்கு இருப்பார்கள் .* வெள்ளைச்சாமி போனில் உதவியாளர் முத்துவிடம் , நான் தலைவரிடம் பேச வேண்டும் என்கிறார் .* தலைவரிடம் பேசும்போது, நீங்கள் புதியதாக ஒருவரை கட்சியில் சேர்ந்தவருக்கு மந்திரி பதவி அளித்துள்ளீர்கள் .என்று கடும் கோபமாக பேசுகிறார். எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை . எங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார் .* உணவு ஜீரணம் ஆகவில்லை என்றால் நான் ஒரு மருந்தை சொல்கிறேன். மருந்தகத்தில்* சென்று கேட்டு வாங்கி பயன்படுத்து .எல்லாம் சரியாகி விடும் என்று கிண்டல் அடிக்கிறார் தலைவர் ..* ஏனென்றால் வெள்ளைச்சாமியிடம்* தலைவர் மிகவும் நெருங்கி பழகுபவர், நேசித்தவர் .அதனால் கோபப்படவில்லை . சில நாட்கள் கழித்து வெள்ளைச்சாமியை, கல்வித்துறையின் துணை அமைச்சராக நியமிக்கிறார் .* 2 வது* சுற்றில் சிலருக்கு மந்திரி பதவி அளித்த பிறகு, 3 வது* சுற்றில் சிலருக்கு பதவிகள் அளிக்க நான் தவறிவிட்டேன் போலிருக்கிறது என்று சொல்லி* வெள்ளைச்சாமி, ஐசரிவேலன்*(இவர் தி.மு.க. கோட்டையாய் இருந்த சென்னையில்* ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளராக திகழ்ந்ததால் ) எஸ்.எம்.துரைராஜ் ( முதல்வருக்கே பாராளுமன்ற செயலாளராக இருந்தவர் )கோவையை சார்ந்த கிட்டு என்பவர் (போக்குவரத்து துறையின் துணை அமைச்சர்) காட்பாடியை சார்ந்த ஒருவரை சட்டத்துறை துணை அமைச்சராக நியமிக்கிறார் . ஐசரிவேலனை அறநிலைய துறை, துணை அமைச்சராகவும், நியமித்தார் .* வெள்ளைச்சாமியின் கோபம் நியாயமானதே என்று சொல்லி அதை தணிப்பதற்கு சிலருக்கு பதவிகள் அளித்தார். மகளிர் அணியில் சிலருக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்கிற எண்ணத்தில் புதியவர்கள் சிலருக்கு பதவிகள் தரப்பட்டது .ஆனால் பழைய தியாகிகளை அது பாதிப்பதாக இருந்தால் அப்படியே விடக்கூடாது,என்று வெள்ளைச்சாமிக்கு பதவி கொடுத்தார். ஆனால் அழகு திருநாவுக்கரசு, தஞ்சை சாமிநாதன் போன்றவர்களுக்கு அவர்கள் தேர்தலில் தோல்வியுற்றதால் பதவி அளிக்கவில்லை .* எனக்கு கம்பம் தொகுதியில் போட்டியிட எம்.ஜி.ஆர். அவர்கள் வாய்ப்பு அளித்தார். அதற்கு சிலர் உள்ளூரில் எதிர்ப்பு தெரிவித்ததால் வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டாம் என்று கூறினார் .மாநிலம் முழுவதும் மாணவர்களை உருவாக்கி, தயார் செய்து தேர்தலில் போட்டியிட* அனுமதித்தார் .*


    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் , தொண்டர்கள், உப தலைவர்கள் யார் எந்த கருத்தை சொன்னாலும்,கடுமையாக விமர்சித்தாலும்* பொறுமையாக கேட்டு ,கோபப்படாமல் நடவடிக்கை எடுத்து வந்தார் . அவர்கள் சொன்னது நியாயம்தான் .நான்தான் ஏதோ தவறு செய்துவிட்டேன் போலுள்ளது என்பார் .* வீட்டு வசதி வாரிய துறை அமைச்சராகவும், பின்னர் பொதுப்பணி துறை அமைச்சராகவும் திரு.எஸ்.ஆர்.ராதா இருந்தார் .* அவர் சொல்வதை கேட்டால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள் .* எனக்கு தெரிந்து மிகவும் சிக்கனத்தை கடைபிடித்த அமைச்சர் எஸ்.ஆர்.ராதாதான் .* இவரும் , கலைமணி என்கிற அமைச்சரும் பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருந்தார்கள் .* இரண்டு அமைச்சர்களும் ஒரே காரில் பயணித்து,கோட்டைக்கு சென்று பணியாற்றிவிட்டு, இருவரும் ஒன்றாக ஒரே காரில் வீட்டுக்கு திரும்பும் வழக்கம் உடையவர்கள் .* காரணம் பணத்தை வீணாக்க கூடாது என்பதில் இருவரும் ஒருமித்த கருத்து உடையவர்கள் .*அரசு பணத்தை வீணாக செலவு செய்ய விரும்ப மாட்டார் எஸ்.ஆர்.ராதா. அப்படிப்பட்டவர் மீது யாரோ சிலர் புகார் சொல்லியோ, ஏதோ ஒரு காரணத்தால்*பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் .* அன்று மாலையே ஒரு ஸ்கூட்டரில் அவர் வெளியே கிளம்பிவிட்டார் . அவரிடம் அமைச்சராக இருந்தாலும்* கார் கிடையாது .மயிலையில் ஒரு மருந்தகம் அருகில் நண்பர்களுடன் அளவளாவி கொண்டிருப்பார் .* மூன்று மாதம் கழித்து தலைவர் என்னிடம் எஸ்.ஆர்.ராதா அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்டபோது , அவர்* ஸ்கூட்டரை எடுத்து கொண்டு வெளியே சென்று நண்பர்களுடன் பேசி கொண்டிருப்பார் என்று சொன்னேன் .* உடனே ஒன்றும் சொல்லாமல் டிக் எனும் நிறுவனமாகிய தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வாரிய தலைவராக தலைவர் அவரை நியமித்தார்* *இவ்வாறு திரு. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .***
    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ----------------------------------------------------------------------------------
    1.எம்.ஜி.ஆர்.- நடிகர் பீலிசிவம் உரையாடல்* - உழைக்கும் கரங்கள்*

    2.திருமணமாம், திருமணமாம் - குடும்ப தலைவன்*

    3.உழைக்கும் கைகளே ,உருவாக்கும் கைகளே - தனிப்பிறவி*

    4.மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்* - தெய்வத்தாய்*

    5.திரு. கா. லியாகத் அலிகான் பேட்டி*






    *.**

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1242
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமாதுறையில் நெடுங்காலமாக
    முடிசூடா மன்னனாக இருந்த புரட்சி நடிகர் காலத்தில் அவருக்கு அடுத்த ஸ்தானம் அதாவது 2வது 3வது இடத்தில் யாரும் இல்லாமல் காலியாகவே இருந்தது. 4வது இடத்துக்குதான் பலத்த போட்டி.
    காட்டு யானை கோபமாக வரும் போது மற்ற மிருகங்கள் எதுவும் அருகில் வராமல் ஒதுங்கிக் கொள்ளும். யானை சாப்பிடும்போது
    சிந்துகின்ற உணவு லட்சக்கணக்கான உயிரினங்களுக்கு உணவாக அமைவது போல எம்ஜிஆர் நடிக்க முடியாத படங்கள்தான் மற்றவர்களுக்கு கிடைத்தது என்று கூட சொல்லலாம்.

    எம்ஜிஆர் மட்டும் அதிக படங்களில் நடித்திருந்தால் மற்ற நடிகர்களுக்கு இத்தனை படங்கள் கிடைத்திருக்காது. ஆனாலும் இந்த கைபுள்ளைங்க சாதாரண தகரத்தை வைத்து கொண்டு இதுதான் தங்கம் என்று சாதிப்பதில் வல்லவர்கள்.
    தலைவர் கைபுள்ளைங்களின் செயல்களை வைத்து
    'பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவரெல்லாம் போனாங்க' என்று பாடினாலும் இன்று வரை கைபிள்ளைகளின் பிராடுத்தனம் குறைந்தபாடில்லை. பொய் சொல்லி பித்தலாட்டம் செய்துதான் படத்தை ஓட்டுகிறார்கள்.

    எம்ஜிஆரோ எட்டாத தூரத்தில் இருக்கும் போது யாருக்காக படத்தை ஐயனின் கைபுள்ளைங்க ஓட்டுறாங்கன்னு தெரியலை. குற்றம் செய்பவன் அடுத்தவருக்கு தெரியக்கூடாது என்று நினைத்துதான் செய்வான்.
    ஆனா நம்ம கைபிள்ளைங்க ஊரறிய உலகமறிய எந்தவித வெட்கமும் இல்லாமல் படத்தை ஓட்டுவார்கள்.
    உதாரணத்திற்கு தூத்துக்குடியில் எப்படி 100 நாட்கள் ஓட்டினார்கள் என்பதை பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன்.

    இப்போது வசூல் விபரங்கள் கொடுத்திருக்கிறார்கள் அதை பாருங்கள் உண்மை தெரியும்.
    தூத்துக்குடியில் "சிவந்தமண்" 50 நாட்கள் வசூல் 91808.53 என்று கொடுத்திருக்கிறார்கள். 101 நாட்கள் வசூல் ரூ 107531.91 அப்படியானால் மீதி 51 நாட்கள் வசூல் ரூ 15723.38
    இது என்ன கொடுமை கைபிள்ளைகளே. ஒரு நாளைக்கு 300ரூக்கு ஓட்டுவதாயிருந்தால் எம்ஜிஆர் படம் எல்லாமே தூத்துக்குடியில் வெள்ளிவிழாதான்.மேலும் முதல் வார வசூல் ரூ 18000 என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ஹவுஸ்புல் காட்சி ஒன்றிற்கு சுமார் ரூ 800 தாண்டி வரும். முதல் வாரத்தில் சுமார் 24 காட்சிகளுக்கு(ஞாயிறு 5 காட்சிகள்) ரூ 20000 க்கு மேல் வசூலாக வேண்டும். ஆனால் வந்ததோ ரூ 18000 .

    முதல் வாரத்திலே வாயைப்பிளந்த ஒரு படத்தை எப்படியப்பா 101 நாட்கள் ஓட்டினீர்கள். இப்படி செத்த பிணங்களை ஸ்டெச்சரில் வைத்துக்
    கொண்டு 100 நாட்கள் சுமப்பதால் கைபிள்ளைகளை "பிணம்தூக்கி"
    என்ற புது பெயரில் அழைக்கலாம்.
    ஒவ்வொரு பிணத்தையும் 100 நாட்கள் 175 நாட்கள் என்று தூக்கி திரியும் கைபுள்ளைங்க நிச்சயம் ஐயனுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

    வாரத்துக்கு மினிமம் வசூல் "சிவந்த மண்" காலகட்டத்தில் ரூ 2900. அந்த மினிமம் வசூல் கூட வராமல் வெளிநாட்டில் எடுத்த படத்தை எப்படி ஓட்டினீர்கள் என்று சற்று விளக்கமுடியுமா?
    பிறகு ஏன் ஸ்ரீதர் கடனில் மூழ்க மாட்டார். அதாவது இரண்டாவது பகுதி 51 நாட்கள் ஓட்டுவதற்கு சுமார் 6000 ரூ எக்ஸ்டிரா செலுத்தி ஓட்டினீர்களா? இது ஒரு பொழப்பா? இவர் ஒரு நடிகன்?அதற்கு கைபுள்ளைங்க ரசிகனுங்க. வெட்கமாயில்லை.

    இவ்வளவு கேவலமாக 101 நாட்கள் ஓட்டி விட்டு "உரிமைக்குரல்" வெறும் 68 நாட்கள்தான் ஓடியதாம். அந்த 68 நாட்கள் வசூல் தெரியுமா? உங்களுக்கு கைபிள்ளைகளே. "உரிமைக்குரல்" 68 நாட்கள் வசூல் ரூ 168092.90. "உரிமைக்குரல்" 68 நாட்களில் பெற்ற வசூலை 101 நாட்கள் ஓட்டியும் அதில் 65 சதமானம் கூட பெறமுடியவில்லை.
    "உரிமைக்குரல்" 100 நாட்கள் ஓடியிருந்தால் நிச்சயம் 2 லட்சத்தை தாண்டியிருக்கும். அது மட்டுமா? "தங்கப்பதக்கத்தை" 50 நாட்கள் கூட ஓட்ட முடியாத நீங்கள் "சிவந்த மண்ணை" 4 வாரத்தில் பிணமான படத்தை 101 நாட்கள் தூக்கி சுமந்தது சாதாரண காரியமல்ல.

    தூத்துக்குடியில் 6 வாரத்தில் ரூ60000 வசூல் செய்த "பட்டிக்காடா பட்டணமா" 50 நாளில்
    எடுக்கப்பட்டு விட்டது. அப்படியானால் "சிவந்த மண்" மொத்த வசூல் ரூ 45000 தான் வந்திருக்க வேண்டும். 100 நாட்கள் பிணம் சுமந்த கூலி சேர்த்தாலும் 65000 க்கு மேல் வர வாய்ப்பே இல்லை. மதுரையில் மட்டும் "ப.பட்டணமா"(561000) "சிவந்தமண்ணை" (337000)விட கூடுதல் எப்படி பெற்றிருக்க முடியும். மதுரையில் "ப.பட்டணமா" ரூ 300000 க்குள் வசூல் வந்திருந்தால் சிவந்தமண் 101 நாட்கள் வசூலை நாம் ஏற்றுக் கொள்ளலாம். தூத்துக்குடியில் பிணம் சற்று கனமாக இருந்ததால் கூலி அதிகம் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    ஆமா, தலைவர் கூடவே அதிகமாக போட்டி போடுகிறீர்களே? அவருடைய வருமானமும் உங்க ஐயனின் வருமானமும் என்ன அருகிலா இருக்கிறது. உங்க ஐயன் வருடத்துக்கு 8 படங்கள் நடிக்கின்ற வருமானத்தை விட தலைவர் ஒரு படத்துக்கு அதிகம் வாங்குவது தெரியுமா? தெரியாதா? இதோ தலைவரின் வருமானவரி காலத்தில் செலுத்தியது போக வரிபாக்கியை செலுத்திய விபரங்கள் தருகிறோம். உங்க ஐயனின் வருமானவரி செலுத்திய விபரங்களை தரமுடியுமானால் தெரிந்து கொள்ளலாம் ஐயனின் வருமானத்தை.

    ஒரு நாலாந்தர நடிகனின் வருமானத்தை வைத்துக் கொண்டு முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதை போல புலம்புகினற உங்களை பார்த்து அழுவதா? சிரிப்பதா? ஒண்ணும் புரியவில்லை.
    தியேட்டரை இடித்த இடிபாட்டுக்குள் வசூலை தேடி போட தெரிகிறது. ஐயனின் வருமானவரி கிடைக்காமலா போய் விடும்..போய் தேடுங்கள் இல்லை அதற்கும் பட்டறை வரியை ரெடி பண்ணி தாருங்கள் பார்ப்போம். அதுவரை கப்ஸா விடுவதை நிறுத்தி கொள்ளுங்கள்..........ksr...

  4. #1243
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் பொன்மன செம்மல்*எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் ஒளிபரப்பான*பட்டியல் (01/11/20 முதல் 06/11/20 வரை)
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    01/11/20 -வசந்த் டிவி - காலை 9.30* மணி - நீரும் நெருப்பும்*

    * * * * * * * *முரசு டிவி _மதியம் 12மணி /இரவு 7மணி -அலிபாபாவும் 40 திருடர்களும்*

    * * * * * * * *ஜெயா டிவி* - பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

    * * * * * * * மீனாட்சி டிவி - இரவு 8.30 மணி - விவசாயி*

    02/11/20- சன் லைப் - காலை 11 மணி - நம் நாடு*

    * * * * * * * *பாலிமர் டிவி -இரவு 11 மணி - கன்னித்தாய்*

    03/11/20 -மெகா டிவி-அதிகாலை 1 மணி - சக்கரவர்த்தி திருமகள்*

    * * * * * * * *சன் லைப்* - காலை 11 மணி -* காவல்காரன்*

    * * * * * * * *புதுயுகம் டிவி - இரவு 7 மணி - தர்மம் தலை காக்கும்*

    04/11/20* -சன் லைப் - காலை 11 மணி - நல்ல நேரம்*

    * * * * * * * * *முரசு டிவி - மதியம் 12 மண/-இரவு 7மணி -தாயின் மடியில்*

    * * * * * * * * மூன் டிவி - பிற்பகல் 12.30 மணி - நீதிக்கு பின் பாசம்*

    * * * * * * * * மெகா 24 -பிற்பகல் 2.30மணி* - தாய்க்கு பின் தாரம்*

    * * * * * * * *பாலிமர் டிவி - இரவு 11 மணி - நீரும் நெருப்பும்*

    05/11/20 - வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - தொழிலாளி*

    * * * * * * * *வெளிச்சம் டிவி -பிற்பகல் 2 மணி - தனிப்பிறவி*

    * * * * * * * *முரசு டிவி - பிற்பகல் 3.30 மணி - கொடுத்து வைத்தவள்*

    * * * * * * * *சன் லைப் - மாலை 4 மணி - நீரும் நெருப்பும்*

    06/11/20 -மெகா டிவி -அதிகாலை 1 மணி - தொழிலாளி*

    * * * * * * * * சன் லைப் -காலை 11 மணி - நவரத்தினம்*

    * * * * * * * *மெகா டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*

    * * * * * * * *சன் லைப் -மாலை 4 மணி-நீதிக்கு பின் பாசம்*

    * * * * * * * புதுயுகம் டிவி -இரவு 7 மணி - சங்கே முழங்கு*

    * * * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி -சிரித்து வாழ வேண்டும்*

    * * * * * * * *

  5. #1244
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1961 ல் கடல் கடந்த இலங்கை நாட்டில்...
    மாபெரும் வெற்றி முழகத்தை நிலை நாட்டிய காவியங்கள் இரண்டு மட்டுமே!
    இரண்டும் 100 நாட்களை
    கடந்து சாதனைகள் .....
    +++++++++++++++++++++++++++
    நடிகப்பேரரசு...
    வசூல் பேரரசு...
    புரட்சிப்பேரரசு...
    மக்கள் திலகத்தின்
    திருடாதே
    திரைக்காவியம்
    தாய் சொல்லைத்தட்டாதே திரைக்காவியம்.
    +++++++++++++++++++++++++++++
    மக்கள் திலகத்தின்
    திருடாதே
    கொழும்பு...யாழ்நகர்
    100 நாட்களும்...
    புரட்சி நடிகரின்
    தாய் சொல்லைத்தட்டாதே
    கொழும்பு
    கிங்ஸ்லி 126 நாட்களும்...
    வெள்ளவத்தை
    பிளாசா 53 நாட்களும்
    ஒடி முதல் சென்டரில்
    179 நாட்கள் ஒடி சாதனை....
    அடுத்து...
    யாழ்நகர்
    வெலிங்டன் 105 நாட்களும்...
    மனோகரா 47 நாட்களும்...
    மட்டகளப்பு விஜயா 38 நாட்களும்..
    மொத்தம் 190 நாட்களும் ஒடி சாதனை.
    +++++++++++++++++++++++++++++++
    1961 ல் இரண்டு காவியங்கள் போல் எந்த படமும் இந்த அளவுக்கு ஒடியதில்லை.............bsr...

  6. #1245
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நவம்பர் 7 ம்தேதி...
    தீபாவளி திருநாளில் ...
    வெளியாகி மாபெரும்
    வெற்றிகளை குவித்த
    நடிகப்பேரரசின்
    மூன்று வரலாற்றுக் காவியங்களின் சாதனைகள்...
    ++++++++++++++++++++++++++++++++
    ........07.11.1961 - 07.11.2020.....
    60 வது ஆண்டு பவளவிழாவை
    சந்திக்கும்..........
    மக்கள் திலகத்தின்
    " தாய் சொல்லைத் தட்டாதே"
    ++++++++++++++++++++++++++++
    1961 ம் ஆண்டு தீபஒளி நாளில் வெளியாகி புதிய சாதனையை ஏற்படுத்திய முதல் துப்பறியும் காவியம்.
    ++++++++++++++++++++++++++++++
    சென்னை
    பிளாசா...பாரத்...மகாலட்சுமி
    மதுரை....திருச்சி...சேலம்....
    கோவை....
    இலங்கை
    கொழும்பு....யாழ்நகர்...
    என 9 திரையில் 100 நாளை கடந்து
    வெற்றி முழக்கம்....
    ++++++++++++++++++++++++++++
    38 திரையில் 50 நாட்கள் கடந்து வெற்றி.
    ++++++++++++++++++++++++++++++++++

    அடுத்து....
    .......07.11.1969 - 07.11.2020.....
    பொன்மனச்செம்மலின்
    "நம் நாடு" காவியம்
    தீபாவளி பரிசாக மகிழ்ச்சி
    பொங்க வெளிவந்தது....
    52 ம் ஆண்டின் தொடக்கவிழா...
    ++++++++++++++++++++++++++++++
    சென்னை
    சித்ரா...கிருஷ்ணா...சரவணா...105 நாள்
    சீனிவாசா 77 நாள்.
    மதுரை 133 நாள்
    திருச்சி 119 நாள்
    சேலம் 109 நாள்
    கோவை 105 நாள்
    குடந்தை 100 நாள்
    இலங்கை கொழும்பு 160 நாள்
    கெப்பிட்டல் - பிளாசா
    இலங்கை யாழ்நகர் 105 நாள்..
    வெலிங்டன்
    +++++++++++++++++++++++++
    52 அரங்கில் 50 நாளை கடந்து சாதனை.
    ++++++++++++++++++++++++++++++++++

    அடுத்து....
    .......07.11.1974 - 07.11.2020......
    47 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
    மகத்தான மகுடம் பதித்த காவியம்...
    புரட்சித்தலைவரின்
    " உரிமைக்குரல்"
    ++++++++++++++++++++++++++++++++
    12 திரையில் 100 நாட்கள்...
    சென்னை
    ஒடியன்..மகாராணி...உமா
    திருச்சி...சேலம்..தஞ்சை..
    குடந்தை...பட்டுக்கோட்டை...
    மதுரை 200 நாள்... நெல்லை 180 நாள்.
    ஈரோடு 155 நாள்....கோவை 150 நாள்..
    +++++++++++++++++++++++++++++++++
    72 ஊர்களில் 50 நாளை கடந்து சாதனை.
    ++++++++++++++++++++++++++++++++++
    07.11.2020 ம் தேதி அன்று.....
    நடிகப்பேரரசின்
    3 காவியங்கள்
    வெளியான
    வெற்றி தினம் ஆகும்...........ukr...

  7. #1246
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் எம்ஜிஆர் , . திரையுலகில் நடிகர்கள், நடிகைகள், கவிஞர்கள் பலரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். தனது படங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்குவார். அவரது படங்கள் மூலம் அறிமுகமான எல்லோருமே திறமை மிக்கவர்களாக விளங்கினர். அப்படி அறிமுகமான கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர், முறையாகத் தமிழ் கற்று, பல சிறந்த பாடல்களை எழுதியுள்ள புலவர் புலமைப்பித்தன்!

    படிக்கும் காலத்திலிருந்தே திராவிட இயக்கத்தின் தொண்டராக வாழ்க் கையைத் தொடங்கியவர் புலமைப் பித்தன். கோவையில் அரசியல் விரோ தத்தால் கொல்லப்பட்ட திமுக தொண்டர் ஒருவரின் குடும்பத்துக்கு நிதி வழங்க எம்.ஜி.ஆர். வந்தபோதுதான் புலமைப் பித்தன் அவரிடம் முதன்முதலில் பேசி னார். வசூலான தொகை போதாது என்று கருதிய எம்.ஜி.ஆர்., தனது சொந்தப் பணத்தில் இருந்து கணிசமான தொகையை இறந்தவரின் குடும்பத்துக்கு வழங் கியது புலமைப் பித்தனின் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது.

    எம்.ஜி.ஆர். நடித்த ‘குடியிருந்த கோயில்’ படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ‘நான் யார், நான் யார், நீ யார்?... ’ என்ற கருத் தாழம் மிக்க அவரது முதல் பாடலே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. ‘அடிமைப் பெண்’ படத்தில் ‘ஆயிரம் நிலவே வா...’, ‘இதயக்கனி’ படத்தில், ‘நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற...’, ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில், ‘நாளை உலகை ஆளவேண்டும்...’ உட்பட பல பாடல்களை புலமைப்பித்தன் எழுதி இருக் கிறார்.

    ‘‘திரைத்துறையிலும் அரசியல் துறை யிலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அள வுக்கு இமயமாய் எம்.ஜி.ஆர். உயர்ந்தது பொய்க் காலில் வந்த உயரமல்ல; புகழ்க் காலில் நிற்கும் உயரம். எவ்வளவோ பேருக்கு அவர் உதவிகள் செய்திருக்கிறார். அதை எல்லாம் பட்டியல் போடுவது முடியாத காரியம்’’ என்று கூறும் புலமைப்பித்தனுக்கு சொந்த அனுபவமே உண்டு.

    கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையம் கிராமத்தில் புலமைப் பித்தனின் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டை அவரது தந்தையும் அண்ணன் கள் இருவரும் சேர்ந்து 1967-ம் ஆண்டு அடமானம் வைத்து பணம் வாங்கினர். அடுத்த ஆண்டே அவரது தந்தை இறந்து போனார். 1971-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதிக்குள் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கத் தவறினால், கடன் கொடுத்தவருக்கே வீடு சொந்தமாகிவிடும்.

    அப்போது, படங்களில் புலமைப் பித்தன் ஒருசில பாடல்கள் எழுதிக் கொண் டிருந்த காலம். பேர் இருந்த அளவுக்கு பணம் இல்லை. பல நாட்கள் தயக்கத் துக்குப் பின் ஒருநாள், வாஹினி ஸ்டுடி யோவில் படப்பிடிப்பு முடிந்து ஒப்பனை அறைக்குச் சென்ற எம்.ஜி.ஆருடன் கூடவே புலமைப்பித்தனும் சென்றார். அவர் ஏதோ சொல்ல நினைப்பதை குறிப்பால் உணர்ந்தார் எம்.ஜி.ஆர்.!

    யாரையும், எதையும் உடனடியாக புரிந்து கொள்ளும் திறனும், கூர்ந்த கவ னிப்பும் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த வரம். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட அவரது கூர்மைத் திறன் குறைய வில்லை. தனக்கு சிகிச்சை அளித்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டாக்டர் கானு என்பவருக்கு தங்கத்தில் சிறிய யானை சிலையை பரிசளிக்க எம்.ஜி.ஆர். முடிவு செய்தார்.

    அதற்காக, சென்னையில் உள்ள நகைக் கடை ஒன்றில் தங்கத்தில் சிறிய யானை சிலை செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பார்வைக்கு அனுப்பப்பட் டது. அதை கவனித்துவிட்டு யானையின் தும்பிக்கையும் வாலும் ஏறக்குறைய ஒரே அளவில் இருப்பதாகவும் வாலை இன்னும் சற்று சன்னமாக மாற்றும் படியும் எம்.ஜி.ஆர். கூறினார். நகைக் கடையினர் ஆச்சரியத்தில் மூழ்கினர்! அந்த அளவுக்கு எதையும் கூர்மையாக, உடனே கிரகித்துவிடுவார்.

    தன்னுடன் உள்ளே வந்த புலமைப் பித்தனைப் பார்த்து சிரித்தபடியே, ‘‘என்ன?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். தனது வீடு அடமானத்தில் இருப்பதை யும் குறிப்பிட்ட தேதிக்குள் பணம் கொடுக் கத் தவறினால் பூர்விக வீடு கையை விட்டுப் போய்விடும் என்பதையும் ஒருவழியாக திக்கித் திணறிக் கூறினார் புலமைப்பித்தன்!

    ‘‘நான் பணம் தருகிறேன்’’ அடுத்த விநாடி பதில் வந்தது எம்.ஜி.ஆரிடம் இருந்து! ‘‘இல்லண்ணே, நீங்க எனக்கு பாட்டு மட்டும் கூடுதலாக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார் புலமைப் பித்தன். ‘‘பாட்டும் தரேன், பணமும் தரேன். ஏன் நான் பணம் தரக்கூடாதா? உங்கள் கடமையில் எனக்குப் பங்கில்லையா? என்னை ஏன் நீங்க வேறாக நினைக் கணும்?’’ என்று அன்புடன் கடிந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.!

    பின்னர், அவர் கொடுத்த பணத்தில் வீட்டை மீட்டு, அதற்கான பத்திரத்துடன் சென்னை திரும்பி படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரை புலமைப்பித்தன் சந் தித்தார். பத்திரத்தை அவர் காலடியில் வைத்து வணங்கக் குனிந்த புலமைப்பித்த னின் தோள்களை ஆதர வாகப் பற்றி எம்.ஜி.ஆர். அணைத்துக் கொண் டார். தன் பெற்றோர் வாழ்ந்த நினைவுச் சின் னத்தையும், இழக்க இருந்த கவுரவத்தையும் மீட்ட நிம்மதியில் புலமைப்பித்தன் கண்கலங்க நின்றார்!

    அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது, ஆரம்ப காலத்தில் இருந்தே உடன் இருந்தவர்களில் புலமைப்பித்தனும் ஒருவர். எம்.ஜி.ஆர். முதல்வரான பின்னர், 1977-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சட்டமேலவை உறுப்பினராக புலமைப்பித்தனை நியமித்தார். பின்னர், சட்டமேலவை துணைத் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

    ‘‘தன்னைப் போற்றியவருக்கு மட்டு மல்ல; தூற்றுவோருக்கும் தயங்காமல் உதவி செய்யும் பொன்மனம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே சொந்தமானது’’ என்று நன்றியோடு நினைவுகூரும் புலமைப்பித்தனை, 1984-ம் ஆண்டு தமிழக அரசின் அரசவைக் கவிஞராக முதல்வர் எம்.ஜி.ஆர். நியமித்தார். பதவி யேற்பு நிகழ்ச்சியின்போது, புலமைப் பித்தன் பாடிய கவிதையில் எம்.ஜி.ஆரை வாழ்த்தி வரும் வரிகள் இவை...

    ‘‘குழந்தையின் பல் பட்ட இடத்தில்

    பால் மட்டும் சுரக்கும்

    அன்னை இதயம் அவனது இதயம்!’’

    - தி இந்து.........

  8. #1247
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*05/11/20 அன்று அளித்த தகவல்கள்*
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    சகாப்தம் நிகழ்ச்சி இன்றைக்கு 150 வது* நாளை கடந்து தொடராக வெற்றிநடை போட்டு வருகிறது. தொடர்ந்து பேராதரவு அளித்து வரும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்கள்,ரசிகர்கள்,அபிமானிகள், விசுவாசிகள்*, அ.தி.மு.க.தொண்டர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை காணிக்கை ஆக்குகின்றோம்*

    தேனியில் இருந்து பிரேமலதா, அவரது தாயார், அவரது மகன் என்று மூன்று தலைமுறை சார்ந்தவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களை இன்றைக்கும் வியந்து பேசி கொண்டு இருக்கிறார்கள் .* அப்படி வியந்து போவதற்கு பல்வேறு அபூர்வ சக்திகள் நிறைந்த மாமனிதராக எம்.ஜி.ஆர். விளங்கினார் என்பதுதான் வரலாறு*.*

    குறிப்பாக* ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு நிர்வாகி*திரு.லோகநாதன் ,சென்னையை சார்ந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளத்தில் பல்வேறு செய்திகள்,தகவல்கள்* ,புகைப்படங்களுடன், 27,400 பதிவுகள் பதிவிட்டதாகவும் ,இன்றைக்கும் தொடர்ந்து பதிவுகளை மேற்கொண்டு வருவதாகவும், மற்ற எம்.ஜி.ஆர். பக்தர்களும் அவருடன் இணைந்து 1,00,000 பதிவுகள் என்கிற சாதனை சிகரத்தை சமீபத்தில் அடைந்துள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன .* திரு.லோகநாதன் இன்றைக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணையதளத்தில் மட்டுமின்றி, வாட்ஸ் அப்பிலும்சுமார் 30 க்கு மேற்பட்ட எம்.ஜி.ஆர்.பெயர் கொண்ட அமைப்புகளுக்கும்* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகள், புகைப்படங்கள், அன்றாடம் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியாகும் படங்கள் பற்றிய விவரங்கள், தமிழகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாக உள்ள எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் விவரம், பத்திரிகை செய்திகள், மற்றும் வின் டிவியில் சகாப்தம் நிகழ்ச்சி தொடரில் வெளிவரும் செய்திகள், பாடல்கள் விவரம், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை ,கொஞ்சம் கூட அர்த்தம் பிரண்டு விடாமல், அடி பிறழாமல் , அவ்வளவு நுட்பமாக எம்.ஜி.ஆர்.பக்தர்கள், ரசிகர்கள், அபிமானிகள், விசுவாசிகள், பொதுமக்களுக்கு எம்.ஜி.ஆர். இணையதளம், மற்றும் வாட்ஸ் அப் மூலம்*எடுத்து செல்வதற்கு அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பக்தர்கள் கூட்டம் என்பது எவ்வளவு பெரிய ஒரு லட்சிய கூட்டம் ,அவர் புகழ்ப்பாடும் கூட்டம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் .


    மோசஸ் என்பவர் நேரடியாக கடவுளிடம் பேசும்* சக்தியை பெற்றவர் .* அவர்* இறைவனிடம்அனுமதி* கேட்டார் உங்களோடு** ஒருநாள் இருக்கவேண்டும் என்று .பதிலுக்கு இறைவன் இந்த பூமியில் நான் பல நல்லவர்களை படைத்து இருக்கிறேன். அவர்களோடு இருந்தாலே, என்னோடு இருப்பதற்கு சமமாகும் என்றார் . நல்லவர்களை நான் எப்படி அடையாளம்* கண்டு கொள்வது என்று மோசஸ் கேட்கிறார் .* தான் சம்பாதித்ததை, தனக்கென்று உள்ளதை தனக்கே சொந்தம் கொண்டாடாமல் எப்போதும் பிறருக்காக விட்டு கொடுப்பவரே நல்லவர் என்கிறார் இறைவன் .* அப்படி ஒரு நல்லவரை எம்.ஜி.ஆர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டதால்தான் இன்றைக்கும் தங்களின் நெஞ்சங்களில் வைத்து பூஜிக்கிறார்கள் .**

    திரு. கா. லியாகத் அலிகான் பேட்டி :* *தேனீ தொகுதியில் இடம் ஒதுக்கி, உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் எனக்கு சீட் மறுத்த பின்பு எனக்கு அளித்த* முதல்**பதவியாக* பால்வள ஒன்றியத்தின் உறுப்பினர்* ஆக்கினார் .**கோவை மருதாசலத்தை தலைவராகவும், சின்னராஜு, மேட்டுப்பாளையம் பழனிசாமி, பேரூர் சண்முகசுந்தரம் கோவை, அண்ணாநம்பி,போன்றவர்களையும், என்னையும் உறுப்பினராக நியமித்தார் . தலைவர் 1977 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும் இந்த பதவிகளை எங்களுக்கு அளித்தார் .* இந்த வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கோவை மருதாச்சலம் எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக இருந்தவர் .* எம்.ஜி.ஆர். அவர்களுக்காக எதையும் தியாகம் செய்பவர் என்பதற்கு மாற்று கருத்து இல்லாதவர் . ஒருமுறை நாஞ்சில் மனோகரன் , கோவை மாவட்டத்திற்கு கண்டிப்பாக மாற்றம் தேவை என்று குறிப்பிட்டபோது, மிகுந்த கனத்த இதயத்தோடு எம்.ஜி.ஆர். அவர்கள் அவரை பதவியில் இருந்து* மாற்றிவிடுகிறார் .விவரம் அறிந்து மருதாச்சலம் எம்.ஜி.ஆர். அவர்களை சந்தித்து புலம்புகிறார் .அண்ணே , நான் தவறு செய்யாத பட்சத்தில் என்னை தண்டித்து விட்டீர்களே*என்றபோது, சில நிர்பந்தம் காரணமாக செய்ய வேண்டியதாயிற்று. கவலைப்படாதே. நீ என்றும் என் இதயத்தில் இருக்கின்றாய். உன்னை கைவிட மாட்டேன் என்று சொல்லிய 10 நாட்களுக்கு பிறகு தலைவர் ரஷ்யாவிற்கு புறப்பட்டார் .* 1974-75 கால கட்டத்தில் தலைவர்* ரஷ்யாவில் இருந்து முக்கிய நபர்களுக்கு, மருதாச்சலம் உட்பட தனித்தனி கடிதம் எழுதுகிறார் .* கடிதம் கண்ட**மருதாச்சலம் மிகுந்த ஆறுதல் அடைந்தார் .* அழகு திருநாவுக்கரசு, எஸ்.டி.எஸ்., கே.ஏ.கே., அரங்கநாயகம் இப்படி பல்வேறு உப தலைவர்ளுக்கு கடிதம் எழுதி, நலம் விசாரித்து, நான் ரஷ்யாவில் இருந்து**தொடர்பு கொள்கிறேன் என்கிறார். தனக்காக உழைத்தவர்கள்,கட்சிக்காக பாடுபட்டவர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருக்கு வெளிநாடு சென்றும் நினைத்து பார்த்து, நன்றியை மறவாத*ஒரு மாபெரும் தலைவராக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திகழ்ந்தார் . ரஷ்யாவிற்கு சென்றும்,தான் ஒரு சிறிய தவறு செய்து, கோவை மருதாசலத்தை*தண்டித்துவிட்டோம் என்று அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் கடிதம் எழுதுகிறார் .* 20 நாட்கள் கழித்து தலைவர் சென்னை திரும்புகிறார் . சென்னை விமான நிலையத்தில் இப்போது உள்ளதுபோல் பாதுகாப்பு சோதனைகள், கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லாத நேரம் .* விமான நிலைய நுழைவு கட்டணமும் மிக குறைவு. விமான நிலையத்தில் சுமார் 10,000பேர் இருப்பார்கள் .* கோவை மருதாச்சலம் அந்த கூட்டத்தில்மாலையுடன் நின்று* இருக்கிறார். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறுகிறது .* எம்.ஜி.ஆர். அவர்கள் விமானத்தை விட்டு வெளியே வந்து வேனில் நின்றபடி மக்களை,*முக்கியஸ்தர்களை பார்க்கிறார். பலர் அவர் மீது மாலைகள் வீசுகிறார்கள். அதில் ஒரு மாலையை அப்படியே சுழற்றி வீசுகிறார் . அது மிக சரியாக கோவை மருதாச்சலம் கழுத்தில் மாலையாக விழுகிறது .* தன் கையில் உள்ள மாலையை விட்டுவிட்டு ,கழுத்தில் விழுந்த மாலையை கைகளில் பிடித்தபடி,*மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார் .*


    சென்னை வந்தடைந்ததும், முதல் வேலையாக , கோவை மருதாசலத்தை ,சமுதாய பிரிவின் செயலாளராக புரட்சி தலைவர் நியமனம் செய்தார் .* இப்படித்தான் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு,சென்னைக்கு* வரும்போது ,பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மிக பிரம்மாண்ட வரவேற்பு அளித்த* நேரத்தில் மாணவ மாணவியர் மீது நேரு மிகவும் அன்பு கொண்டவர் .* வரவேற்பின்போது மாணவ,மாணவியர் களின் பரேடு , நடனம் ,போட்டிகள் ஆகியவற்றை யார் மிக சரியாக செய்து அவரது கவனத்தை* கவருகிறார்களோ*அவர்கள் மீது தனக்கு அணிவித்த மாலைகளை வீசும்போது மிக சரியாக அந்த*மாணவ மாணவியர் மீது விழும் என்று அந்த காலத்தில் சொல்வார்களாம் .* அந்த வகையில்தான் ஒருவருக்கு நாம் தவறு இழைத்துவிட்டோம் அதற்கு பரிகாரமாக அவரை மகிழ்ச்சியுற செய்யும் வகையில் கோவை மருதாச்சலம் கழுத்தில் விழும்படி, மாலையை வீசி,பின்னர் அடுத்த நாளே, சமுதாய பிரிவின் செயலாளராக நியமனம் செய்து, நாஞ்சில் மனோகரனிடம் நெடுநாள் ஒரு தொண்டரை தண்டித்து வைத்திருக்க* முடியாது என்று சொல்லி அவரையும் சமாதானப்படுத்திய* பக்குவமிக்க, லட்சியமிக்க மிக உறுதியான ஒப்பற்ற எண்ணங்களிலே தன்னை உண்டாக்கி கொண்ட தலைவர்தான் புரட்சி தலைவர்*பேரறிஞர்* அண்ணா விற்கு* பிறகு,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். போல* தொண்டர்களை நேசிக்க கூடிய* ஒரு அற்புதமான தலைவரை, வாக்கு வங்கி கொண்டவரை நான் இன்றுவரை கண்டதில்லை . அந்த அளவிற்கு பேரறிஞர் அண்ணாவிடம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பற்றி* தவறாக ,அண்ணா பார்த்தீர்களா, பெருந்தலைவர் காமராஜர் என் தலைவர், பேரறிஞர் அண்ணா என்* வழிகாட்டி என்று எம்.ஜி.ஆர். சொல்கிறார் .*என்றபோது, பதிலுக்கு அண்ணா அவர்கள், என் தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள் இதயத்தில் இருந்து வெளியான வார்த்தைகள் அவை. அவர் உண்மையைத்தான் பேசியுள்ளார் .* எந்த விளைவுகள் பற்றியும் கவலைப்படாமல் தம்பி பேசியுள்ளார் .* அதற்காக அவரை தண்டிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அது முடியாத காரியம் .* தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள் இந்த இயக்கத்திற்கும், எனக்கும் முக்கியமானவர். தேவையானவர் .* அவரை இந்த இயக்கமோ, நானோ இழப்பது என்பது இயலாத காரியம் .என்று கூறி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மீது அன்பு காட்டிய பேரறிஞர் அண்ணா போல ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். யாரையாவது தெரிந்தோ, தெரியாமலோ தண்டித்துவிட்டால் அதை நெடுநாள் நீடித்து வைத்திருக்க அவரால் முடியாது .



    அவரது கார் ஓட்டுநர் தவறு செய்துவிட்டால், கோபத்தில் வீட்டுக்கு செல் என்று அனுப்பிவிடுவார் . அவருடைய குடும்பம் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கருதி,* மாதாமாதம் அவருக்கு சம்பள தொகையை தவறாமல் வீட்டுக்கு அனுப்பி விட கூடிய ஒரு மனிதாபிமானமிக்க தலைவர் என்னுடைய இதயத்தில், தமிழகம், இந்தியா, உலகம் என்று எடுத்து கொண்டால் மனிதாபிமானம் அதிகம் கொண்ட தலைவர்களில் முதன்மையானவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .தனக்காக உழைக்கிறவன் பசியோடு இருக்க கூடாது .அவன் மட்டுமல்ல யாருமே பசியோடு இருக்க கூடாது என்று வடலூர் வள்ளலார் போல தனது வாழ்விலே , இல்லத்திலே ,*.எந்த நேரத்திலும் அரிசி பொங்கி கொண்டிருக்க கூடிய அற்புதமான ஒரு அன்னதான பிரபுவாகத்தான் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் இருந்தார்கள்.* அதை தான் நடிகரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான சோ குறிப்பிட்டு சொல்லும்போது, ஒருவர் வீட்டிலே உலையை வைத்துவிட்டு அரிசிக்காக செல்வதாக இருந்தால் அது எம்.ஜி.ஆர் அவர்களின் வீடாகத்தான் இருக்கும் . என்று தலைவரை கடுமையாக விமர்சித்து வந்த நடிகர் சோ* அவர்களே சொல்ல கூடிய அளவிற்கு, தன் வாழ்நாளிலே, தர்மகர்தாவாக*தர்ம சிந்தனை உடையவராக வாழ்ந்தவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*


    ஒரு விஷயத்தில் இரண்டு பேர்களை ஒற்றுமைப்படுத்தி சொல்ல முடியாதுஒருவர் மகாத்மா காந்தியடிகள் . இன்னொருவர் மா சே துங் அவர்கள் .* மா சே துங் கம்யூனிச சித்தாந்தத்தில் ஊறி திளைத்தவர் .* மகாத்மா காந்தி அகிம்சையை கடைபிடித்தவர். ஜனநாயக பற்று மிக்கவர்* இருவருக்கும் ஒருமித்த கருத்து ஒன்றிலே ஏற்படுகிறது என்றால் அது சேமிப்பில்தான்* அதைத்தான் மகாத்மா காந்தி* தன வாழ்க்கை வரலாறில்*குறிப்பிடுகிறார் . ஒவ்வொருவரும் வாழ்வில் தர்மகர்தாவாக இருந்து* பழக*வேண்டும் .தான் பயன்படுத்துகிற**அளவில்* தான் உபயோகப்படுத்துகிற எந்த பொருளையும் வீணாக்க கூடாது . ஆடம்பரமாக வாழக்கூடாது . பொதுவாக இருக்க கூடிய ஒரு பொருளை நீங்கள் ஒவ்வொரு சல்லி காசுக்கும் நீங்கள் கணக்கு காட்ட வேண்டும் . மாறுபட்ட கருத்து உடைய மா சே துங் ஒவ்வொரு செப்பு காசுக்கும் நீ கணக்கு வைத்திருக்க வேண்டும் என்கிறார் .* மாறுபட்ட சிந்தனை, கருத்துக்கள் உடையவர்கள் ஒன்றிலே, அதுவும் சேமிப்பில் ஒன்றுபடுகிறார்கள் .* நீங்கள் தர்மகர்தாவாகவும், கணக்கு* காட்டுபவராகவும் இருக்க வேண்டும் என்று இருவரும் சொன்னதை வைத்துதான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கணக்கு விஷயத்தில் கராறாகவும், கேள்வி கேட்பவராகவும் இருந்தார் .* அவர் அண்ணா ஆட்சி காலத்தில் சிறுசேமிப்பு துறையில் துணை தலைவராக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே .அரசு பணியாளர்கள், அரசு பணி குறித்து தவிர, தன் சொந்த உபயோகத்திற்கு தொலைபேசியை பயன்படுத்தினால்**அது தவறு என்று சொன்னவர் தலைவர் எம்.ஜி.ஆர். அவரே யாருக்காவது போனில்* தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டால் காசு போட்டுத்தான் பேசுவார் என்கிற ஒரு உயரிய பண்பை, சேமிப்பு குணத்தை கொண்டவர்தான் தலைவர் அவர்கள் .* தலைவர் அவர்கள் வாழ்ந்த காலத்தில்*., 35 ஆண்டுகளுக்கு முன்பு** ,ஒரு பெரிய சினிமா நடிகர், ஒரு முதல்வர் என்ற வகையில் ஆடம்பரம் ,இல்லாமல்,மிக எளிய முறையில் தன்*வீட்டை பராமரித்து வந்துள்ளார் .* முதல்வராக பத்தாண்டுகள் இருந்தபோது அவர் நினைத்திருந்தால் மாட மாளிகைகள் போல தன்* இல்லத்தை உருவாக்கி இருக்க முடியும் .ஆனால் அப்படி செய்ய அவர் மனம் இடமளிக்கவில்லை .மாறாக ,மிக எளிய முறையில் அழகுபடுத்தியதோடு, ஒரு தர்மகர்தாவாக, அன்னதான பிரபுவாக இருந்ததால்தான், இன்றைக்கும் அவர் மக்களால் போற்றப்படுகிறார். மக்களின் இதயங்களில் வாழ்கின்றார் .* அவருடைய சிந்தனை வழியில் நாம் செயல்பட்டோமேயானால் .இன்றைய கால கட்டத்தில் நிலைமைகள் வேறு விதமாக மாறியிருக்கும் .* இவ்வாறு திரு. லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .***


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    -----------------------------------------------------------------------------------
    1.என்னை பாட வைத்தவன் ஒருவன் - அரச கட்டளை*

    2.நினைத்தேன் வந்தாய் 100 வயது -* காவல்காரன்*

    3.கடவுள் இருக்கின்றார் - ஆனந்த ஜோதி*

    4.திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி*

  9. #1248
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சிப்பேரரசின் மகத்தான வெற்றிக்காவியம்...
    " குலேபகாவலி "
    +++++++++++++++++++++++++++++
    1955 ல் வெளியாகி தனி சாம்ராஜ்யம் படைத்த மாபெரும் காவியம்...
    அரபு நாட்டுகதையில் நடிக்கமாட்டேன் என்று சொன்னவர்கள் மத்தியில்
    புதுமையான கதையில் புரட்சிநடிகர்
    பல்வேறு வேடங்களில் அசத்திய காவியம்...
    அதற்கு முன் எவரும் போட்டிகளை துணைகொண்டு நடித்தவர்கள் கிடையாது....
    ஆனால் கலைப்பேரரசு குலேபகாவலீ திரைப்படம் மூலம் பவனி வந்து
    போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றிக்கொடியை பறக்கவிட்டார்...

    66 ஆண்டுகாலம் ஒரு திரைக்காவியம் தொடர்ச்சீயாக திரையில் வந்து இன்று வரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்றால் அது புரட்சித்தலைவர் திரைப்படங்கள் மட்டும் தான்....
    1955 ல் வெளியான எவர் படமும் நமக்கு
    ஞாபகம் வருவதில்லை...
    குலேபகாவலி திரைப்படம் மட்டுமே
    மனதில் நிற்கிறது....
    பல வெளியீடுகளை சந்தித்து...
    பல வசூலை படைத்துள்ளது.......இனியும் படைக்கும்...��

  10. #1249
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "உரிமைக்குரல் " காவியம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
    ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் , லதா,
    வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
    உரிமைக்குரல் (திரைப்படம்)
    இயக்கம் ஸ்ரீதர்
    தயாரிப்பு கண்ணைய்யா
    சித்ரயுகா
    இசை எம். எஸ். விஸ்வநாதன்
    நடிப்பு எம். ஜி. ஆர்
    லதா
    வெளியீடு நவம்பர் 7 , 1974
    ������������������������
    இன்றுடன் ( 07 . 11 . 2020 ) மக்கள் திலகம் நடித்த " உரிமைக்குரல்" காவியம் , திரைப்படம் வெளிவந்து 46 வருடங்கள் ஆகிவிட்டது. 7 .11 .1974 ல் தீபாவளி வெளியீடாக வந்த வெற்றி காவியம் உரிமைக்குரல். இயக்குநர் ஸ்ரீதருக்கு புதுவாழ்வு மக்கள் திலகத்தால் கிடைத்தது. மெல்லிசை மன்னரின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட படம் இது . 57 வயதில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு பாடல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் நம்மை பிரம்மிக்க வைக்கும் . வெள்ளி விழா திரைப்படமான இது சின்ன சின்ன ஊர்களிலும் 50 நாட்களை கடந்தது சிறப்பு செய்தி நேத்து பூத்தாளே பாடலில் தியேட்டரில் ஆண்களின் ஆட்டம் ஒவ்வொரு காட்சியிலும் களை கட்டியதால் சில் ஊர்களில் பெண்களுக்கென்று தனியாக காட்சிகள் திரையிட்டது கூடுதல் சிறப்பு. என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க ஆனால் இந்த நிலத்தாய் எனக்கு சோறு ஊட்டி வளர்த்தாங்க என்று மக்கள் திலகம் பேசும் க்ளைமேக்ஸ் வசனத்தின் போது இன்றும் தியேட்டரில் விசில் தூள் பறக்கும். .. ... .. Thanks .........

  11. #1250
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் வரலாற்று படம் "அடிமைப்பெண் " பற்றி இன்னும் சொல்லி எழுதி முடியாது....

    ராஜஸ்தான் மாநிலத்தில் படப்பிடிப்பு என்று முடிவாகி அனைவரும் அங்கே சென்று இருந்த நேரத்தில் கடும் வறட்சி அங்கே....தண்ணீர் தட்டுப்பாடு...பட குழுவினருக்கு கோக் வண்டி வரவழைத்து தாகம் தீர்த்தார் தலைவர்....இது தெரிந்த செய்தி.

    ஆனால் அப்போது அங்கே முதல்வர் மோகன்லால் சுகாதியா என்பவர்...வறட்சி தெரிந்து திடீர் என்று ஒருநாள் 50000 ரூபாய் பணத்துடன் அவரை சந்திக்க புறப்பட்டு வறட்சி நிவாரணம் கொடுக்கிறார் தலைவர்.

    முதல்வர் சுகாதியா வியந்து போகிறார்.வந்தோமா படம் எடுத்தோமா என்று இல்லாமல் அப்போது மிக பெரிய தொகை இது....இதை தேடி கொண்டு நம்மிடம் தருகிறார் என்று உச்சி மகிழ்கிறார் அவர்.

    தலைவர் படத்துக்கு வழி காட்டும் குழு ஒன்று இந்த பாலைவனத்தில் கடும் வெப்பம் வறட்சி போது மண்ணுக்கு கீழே இருக்கும் கொடிய சிறிய விஷ நாகங்கள் வெளிப்பட்டு மேல வந்து கடித்து விடும்.

    அடுத்த சில நொடிகளில் மரணம் நிச்சியம் என்று சொல்ல உடனே காலணி வல்லுநர்களை வரவழைத்து படத்தில் நடித்த அவ்வளவு ஊழியர்களுக்கும் சிறப்பு கால் ஷூக்களை தயார் செய்து அதை அனைவரும் அணிந்து கொண்ட பின்பே படப்பிடிப்பை தொடர்கிறார் தலைவர்.

    பெரிய பெரிய போர்வைகள் மீது நின்று கொண்டே காட்சிகள் படம் ஆக்க படுகின்றன...என்ன ஒரு கரிசனம் சக ஊழியர்கள் மீது அது தான் அவரின் பொன்மனம்.

    படம் வரலாற்று வெற்றியை பெற தமிழகமெங்கும் 100 நாட்கள் தாண்டி படம் ஓடி சரித்திர சாதனை புரிய ஒரு அதிசய நிகழ்வு.

    மதுரை தலைவர் ரசிகர்கள் எப்போதும் இப்போதும் வேறு வகை....அங்கு சிந்தாமணி திரை அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் படத்தின் வெற்றி விழா நடைபெற மதுரை நகரம் மீண்டும் அன்று விழாக்கோலம் கண்டது.

    அப்போதைய அந்த விழாவின் அபூர்வ படங்கள் முதன் முதல் ஆக நம் குழுவினரின் பார்வைக்கு சமர்ப்பணம்...

    படங்களில் யார் யார் என்பதை பார்த்து கொள்ளவும் நன்றி.

    வாழ்க தலைவர் புகழ்
    நன்றி...தொடரும்
    உங்களின் குரலாக உங்களில் ஒருவன் நெல்லை மணி....

    சரித்திரங்கள் தொடரும்
    தலைவரின் சாதனைகள் இடை விடாமல் மலரும். நன்றி.......nm...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •