Page 127 of 210 FirstFirst ... 2777117125126127128129137177 ... LastLast
Results 1,261 to 1,270 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1261
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நடிப்பு_என்றால்_என்ன?

    ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரிடம் ஒரு நிருபர் ‘நீங்கள் நூறு வயது வரை வாழுங்கள் ஆனால் அதுவரை இப்படித்தான் இளைஞராக நடிப்பீர்களா? உங்கள் வயதுக்கேற்ற கதாபத்திரங்களை ஏற்று நடித்தால் என்ன?’ என்று அவரிடம் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர் ஒரு கடை இலாபமாக நடக்கும்போது யாராவது வியாபாரத்தை நிறுத்துவார்களா என்றார். தன் படம் வசூலை அள்ளிக்கொட்டும்போது தான் ஏன் இளைஞனாக நடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதுதான் அவர் கூற விரும்பிய கருத்து. மேலும் அவர் நடிப்பு என்றால் என்ன? இருபது வயதுக்காரர் 80 வயது முதியவராக நடிப்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லவா? அது சிறப்பான நடிப்பு என்றால் அதைப்போல நான் இருபது வயது இளைஞனை போல நடிப்பதும் சிறப்பான நடிப்பு தானே என்று அவர்களுக்குப் புரியும்படி எடுத்துக்கூறினார்.

    நடிப்பில் வயது வித்தியாசம் இருப்பது குறித்து விளக்க அப்போது மேலும் ஓர் உதாரணத்தையும் எடுத்துரைத்தார். நாடகத் தந்தை எனப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் தன் முதிர்ந்த வயதில் மனோகரா நாடகத்தில் நடிக்கும்போது தர்பாருக்குச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரை இழுத்து வரும் காட்சியில் இந்தப் பதினாறு வயது பாலகனை என்று தன்னைக் குறிப்பிட்டபடி ஒரு நீண்ட வசனம் பேசுவார். அப்போது அந்நாடகத்தைப் பார்த்த அனைவருக்கும் அவர் வயது 60 என்பது தெரியும். இருந்தும் அந்நாடகம் வெற்றி பெற்றது. ஏன் தெரியுமா? பார்ப்போர் நடிப்பைப் பார்த்து ரசிக்கிறார்களே தவிர நடிப்பவரின் வயதைக் கருதுவதில்லை. அதனால்தான் இன்னும் என் படங்கள் நல்ல வசூலைப் பெறுகின்றன என்றார்.

    முதியவர் வேடம் ஏன்?

    எம்.ஜி.ஆர்

    தமிழ் பாரம்பர்யத்தில் வள்ளி திருமணம் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. அதில் முருகனாக நடிப்பவர் வேலன் [இளைஞன்] விருத்தன் [முதியவர்] என்று இரு வேடம் போடுவார். யானையைக் கண்டு அஞ்சி ஓடும் வள்ளியை முதியவர் வேடத்தில் வந்து முருகன் காப்பாற்றி தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி சத்தியம் வாங்குவார். எனவே, மாறு வேடங்களில் முதியவர் வேடம் என்பது தமிழ் ரசிகர்கள் ஏற்கெனவே பார்த்து ரசித்து ஏற்றுக்கொண்ட ஒரு வேடம் ஆகும். முதியவராக வரும்போது ரசிகர்களிடையே ஒரு ‘சிம்பதி’ கிடைக்கும். எனவே எம்.ஜி.ஆர் பாரம்பர்ய வெற்றி ஃபார்முலாவான முதியவர் வேடத்தை தன் பல படங்களில் பயன்படுத்திக் கொண்டார்.

    எம்.ஜி.ஆர் தன் படங்களில் ஆக்க்ஷன் ஹீரோவாகவே நடித்ததால் பிற வேடங்களில் நடிக்க வாய்ப்பில்லை. எனவே அவர் போலீஸாக வரும்போதும் அவர்மீது தவறாகக் குற்றம் சுமத்தப்பட்டு தப்பிக்கும் போதும் கதாநாயகியை வேற்றுருவில் வந்து காதலிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதும் மாறு வேடங்களைத் தெரிவு செய்தார். முதியவர் வேடத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுவும் வெவ்வேறு வகையான முதியவர் வேடங்கள். அவற்றை இப்போது விரிவாகக் காண்போம்.

    வேடப் பொருத்தம்

    முதியவர் வேடத்துக்குரிய நரைத்த தலை, தளர்ந்த உடல், சுருங்கிய கண்கள், ஒளியிழந்த முகம், நடுங்கும் குரல் என மேக்கப், காஸ்டியூம், நடிப்பு என அனைத்திலும் எம்.ஜி.ஆர் கவனம் செலுத்தியிருப்பார். குலேபகாவலி, மலைக்கள்ளன், மகாதேவி, பாக்தாத் திருடன், படகோட்டி, தேடி வந்த மாப்பிள்ளை போன்ற சில படங்களில் முதியவராக மாறு வேடமிட்டு வந்து சில முக்கியக் காட்சிகளில் நடித்திருப்பார்.

    குலேபகாவலியில் முதியவர் வேடத்தில் வந்து லக்பேஷ்வாக நடிக்கும் டி.ஆர் ராஜகுமாரியை பகடையில் ஜெயிக்கும் ரகசியத்தை அறிந்து அவரை வெல்வார். மலைக்கள்ளன் படத்தில் முதியவராக வந்து பி.பானுமதியைக் காப்பாற்றுவார் பின்னர் அவரை ரகசியமாகச் சந்திக்க இரவில் வந்த போது கூட முதியவரைப் போல நடுங்கும் குரலில் பேசி தன்னை வெளிப்படுத்துவார்

    சக்கரவர்த்தி திருமகள் படத்தில் சாக்ரட்டீஸ் போன்ற தோற்றத்தில் ஒரு முதியவர் வேடத்தில் வந்து அவர் பாடிய மனுசன் பொறக்கும்போது பொறந்த புத்தி போகபோக மாறுது என்ற பாடலில் வரும் ‘கணக்குத் தெரியாம சிலது கம்பையும் கொம்பையும் ஆட்டுது. ஆனால் காதோரம் நரைச்ச முடி கதை முடிவைக் காட்டுது’ என்ற வரிகள் எம்.ஜி.ஆருக்குப் பிடித்தவை ஆகும். இந்தப் பாட்டு வரிகள் சிலர் தம் செல்வாக்கு நிரந்தரமானது என நினைத்து ஆடும் ஆட்டங்களின் நிலையாமையை விளக்குவதால் அவருக்கு மிகவும் பிடித்தன. அவர் மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருந்த இடம் தெரியாமல் போனதை நேரில் கண்டவர் என்பதால் நிலையாமை தத்துவத்தை நன்கு புரிந்து வைத்திருந்தார். இந்தப்படம் திமுகவின் முதல் வெற்றி வாய்ப்புக்கு வழிகோலிய படமும் ஆகும்

    எம்.ஜி.ஆர்

    உதய சூரியன் என்ற பெயரில் சக்கரவர்த்தி திருமகள் படத்தில் நடித்த எம்.ஜி.ஆர் திமுகவின் முதல் தேர்தல் பிரவேசத்தை முன்னிட்டு சாக்ரட்டீஸ் முதியவர் வேடத்தில் வந்து பாட்டிலேயே பகுத்தறிவு பிரசாரமும் செய்தார். ‘உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் -- அதை ஒப்புக்கொள்ளும் வீரருக்கு முன்னால -- நாம் கத்தி என்ன கதறி என்ன -- ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா’ என்று பாடுவார்.

    பாக்தாத் திருடனில் வைஜயந்திமாலாவை ஏலத்தில் வாங்கும் அருவருப்பான முதியவராக வருவார். அவருக்குக் கூரிய ஒட்டு மூக்கும் பெரிய தொந்தியும் இருப்பதால ஆள் அடையாளமே தெரியாது. அவரிடமிருந்து தப்பிக்க நினைக்கும் வைஜெயந்திமாலாவின் காலில் சுருக்குப் போட்டு ‘’சூத்திரக் கயிறு என்னிடம் இருக்கு சும்மா எழுந்தே நில்லு – உன் பாச்சா ஒன்னும் பலிக்காது இங்கே செல்லு ‘’ என்று அவரை மீண்டும் குகைக்குள்ளே அனுப்பிவிடுவார். இந்த வேஷத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.

    படகோட்டியில் இரண்டு குப்பத்தையும் ஒற்றுமைப்படுத்த முதியவர் வேஷம் போட்டிருப்பார். சரோஜாதேவியைக் குழந்தே குழந்தே என்று கூப்பிடுவார். அதற்கு அவர் ‘’சதா குழந்தே குழந்தேன்னுட்டு விலைக்கு வாங்குன சனியன் மாதிரி’’ என்று திட்டுவார். ‘’நானொரு குழந்தை நீயொரு குழந்தை – ஒருவர் மடியிலே ஒருவரடி’’ என்ற பாட்டு இந்தத் தாத்தா வேடத்துடன் தொடங்கும் பிறகு அந்த வேடம் கலைந்து மாணிக்கமாக காட்சியளிப்பார்.

    தேடி வந்த மாப்பிள்ளை படத்தில் ஜெயலலிதாவுக்கு இங்கிலீஷ் மியூசிக் கற்றுத்தரும் வாத்தியாராக வருவார். இவரது தோற்றம் தலையில் தொப்பியும் செம்பட்டை தாடியும் வட்டக் கறுப்புக் கண்ணாடியும் பார்க்க சற்று அருவருப்பாக இருக்கும். ஆனால் ஆறுமுகம் இது யாரு முகம் – தாடியை வச்சா வேறு முகம் -- தாடியை எடுத்தா தங்க முகம்’’ என்ற பாட்டு தாத்தா வேடத்துடன் தொடங்கும்.

    எம்.ஜி.ஆர்

    தாய் சொல்லை தட்டாதே படத்தில் சந்தையில் சுற்றித் திரியும் ஒரு நாடோடி முதியவராக மாறு வேடம் போட்டு வழக்கம் போல குற்றவாளிகளைப் பிடிக்க வருவார். அதில் வேடம் போட்டவர் எம்.ஜி.ஆர் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தோற்றம் முற்றிலும் வேறுபட்டிருக்கும். உச்சியில் வழுக்கை நரைத்த முடி மீசை தாடி, கிழிந்து ஒட்டுப் போட்ட பழைய நைந்த கோட், தோளில் ஒரு பச்சைக்கிளி கை மடக்கில் உட்கார்ந்திருக்கும் ஒரு குரங்கு, கக்கத்தில் இடுக்கிய ஒரு குடை, கையில் ஒரு தடியோடு தளர்ந்து தடுமாறும் நடை, சில சமயம் அந்தக் குரங்கு சங்கிலியைப் பிடித்த படியும் நடப்பார், கூடவே அந்தக் குரங்கு ஓடி வரும். சந்தையில் பிக்பாக்கெட் அடித்தல், பெண்களை, ஃபாலோ செய்தல், அவர்களோடு நடந்து வந்தபடி விசிலடித்தல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் வகையில் நாக்கை துருத்தி முறைத்துப் பார்த்து குற்றவாளிகளை அதட்டுவார். கூடவே ‘’போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியைப் படைத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே’’ என்று பாட்டும் பாடுவதாக அக்காட்சி அமைந்திருக்கும். காவல் நிலையத்துக்கு வந்து வேடத்தைக் கலைக்கும்போது எம்.ஜி.ஆர் என்பது தெரிய வரும். முதல் முறை இப்படம் பார்ப்போருக்கு எம்.ஜி.ஆர் என்று தெரியாது.

    ஆசைமுகம் படம் தமிழில் அந்த முதல் ப்லாஸ்டிக் சர்ஜரி பற்றிய படம் ஆகும். எம்.ஜி.ஆர் வஜ்ரவேல் என்ற ராம்தாஸ் தன்னைப் போல முகத்தை ப்லாஸ்டிக் சர்ஜரி செய்து தன் வீட்டில் புகுந்துவிட்டதை அறிந்து தன் அப்பாவின் சித்தப்பாவைப் போல ஒரு கோட் சூட் போட்ட வெளிநாட்டு முதியவர் போல மாறு வேடத்துடன் வந்து தன் வீட்டிலேயே தங்குவார். அப்போது ராம்தாசை கேலி செய்து பாடுவதாக ஒரு பாடலை எம்.ஜி.ஆர் பாடுவார் அதுதான் 'எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு' என்ற பாடல். இப்பாடல் காட்சியில் நாகேஷும் சரோஜாதேவியும் மாறு வேடமிட்ட எம்.ஜி.ஆருடன் சேர்ந்து ஆடுவார்கள் ராம்தாசுக்கு இது கோபத்தை ஏற்படுத்தும். இந்த வேடத்தில் எம்.ஜி.ஆர் ஒரு காலை சாய்த்து சாய்த்து ஒரு கைத்தடியை ஆதரவாகக் கொண்டு நடப்பார். இதில் தலைமுடி கறுப்பும் வெளுப்புமாகக் காணப்படும் தாடி இருக்கும் கண்ணில் கூலிங்க் கிளாஸ் போட்டிருப்பார். ஒரு ஸ்டைலான கோட் சூட் போட்ட தாத்தாவாக வெளிநாட்டிலிருந்து வந்தவராகத் தோன்றுவார். இந்த மேக்கப் காஸ்டியூம் அனைத்தும் நவீன காலத்து தாத்தா போல இருக்கும்.


    எம்.ஜி.ஆர் முதியவர் வேடத்தில் தோற்றம் உடை, குரல் மற்றும் வசனம் நடிப்பு முக பாவனை கை கால் அசைவு என அனைத்திலும் கவனம் செலுத்தியதோடு அந்த வேடத்திலேயே பல படங்களில் சமூக சிந்தனையுள்ள பாட்டும் பாடியிருக்கிறார்....nsm...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1262
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன' என்பது இறைவனுக்கு மட்டுமல்ல #எம்_ஜி_ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. #எம்_ஜி_ஆர் திரையுலகில் இருந்த போதும் முதல்வரான பிறகும் தன்னை வளர்த்துவிட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்குக் கஷ்டம் என்றாலும் நஷ்டம் என்றாலும் அத்தகவல் இவர் கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து மீட்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாகத் தெரிகிறது.

    எம்.ஜி.ஆர்

    எம்.ஜி.ஆரை நம்பினோர் கைவிடப்படார்

    சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக்கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி ‘எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா’ என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கும் இருந்திருக்கிறது.

    நடிகை என்கிற ஒரே காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகையரிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டார் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே, அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.

    உடம்பை பார்த்துக்கொள்

    சாவித்திரி சொந்தப்படம் எடுத்து தன் சொத்தை எல்லாம் இழந்தார். சென்னை ஹபிபுல்லா ரோட்டில் இருந்த பெரிய மாளிகையும் ஏலத்தில் போய்விட்டது. இந்நிலையில் ஒரு நாள் அவர் எம்.ஜி.ஆரின் மாம்பலம் ஆஃபிஸுக்கு வந்து அவரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர் அவரிடம் ஒரு குட்டிச்சாக்கில் ஒரு லட்சம் ரூபாயைப் போட்டுக் கொடுத்தார். அத்துடன் அவர் வசிப்பதற்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்தார். உடம்பை கவனித்துக் கொள்ளம்மா என்று கூறி அனுப்பிவைத்தார். இந்த ஒரு லட்சம் ரூபாயை வைத்து சாவித்திரி முன்னேறிவிடப் போவதில்லை. அவர் எப்படிச் செலவழிப்பார் என்பது எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கும் எனினும் ஒரு மாபெரும் நடிகை உதவி என்று கேட்கும்போது அவருக்கு உதவுவதே மனுஷத்தனம் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கை.

    திருமணம் செய்துகொள்

    ஒரு முறை லட்சுமி வந்து எம்.ஜி.ஆரை பார்த்தார். அவருக்குத் திருமண வாழ்வு தோல்வியில் முடிந்திருந்தது. குழந்தையை அவரது அம்மா வைத்துக்கொண்டார். தனிமையில் இருந்த லட்சுமிக்குத் தொல்லைகள் ஏராளம் சூழ்ந்தன. எம்.ஜி.ஆரிடம் வந்து தன் பிரச்னையைக் கூறினார். எம்.ஜி.ஆர், நீ பொது வாழ்க்கைக்கு வா அல்லது குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள். அதுதான் உனக்குப் பாதுகாப்பு என்று ஆலோசனை தெரிவித்தார். லட்சுமியிடம் அரசியலுக்கு வருகிறாயா என்று கேட்டார். ‘அது தன்னால் முடியாது’ என்றார் லட்சுமி. ‘எந்தச் சாமி எந்தப் பட்டணம் போனாலும் நான் பத்து மணிக்கு தூங்கப் போய்விடுவேன். எனவே பொதுக்கூட்டங்களில் பேசுவது இயலாத காரியம்’ என்றார் லட்சுமி. ‘அப்படியென்றால் திரும்பவும் திருமணம் செய்துகொள். ஒரு பிள்ளையைத் தத்தெடுத்து வளர்த்து வா. உனக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். பாதுகாப்பாகவும் உணர்வாய்’ என்றார் எம்.ஜி.ஆர். அப்படியே செய்தார் லட்சுமி. இன்றைக்குக் கணவர் குழந்தை என லட்சுமி நிம்மதியாக வாழ்கிறார்.

    தெலுங்கு கத்துக்கலாம்

    ‘கொக்கு சைவ கொக்கு’ பாட்டில் ரஜினியுடனும் ‘கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வர்றியா வர்றியா’ என்ற பாட்டில் விக்ரமுடனும் ஆடிய ஜோதிலட்சுமி ஆடல் பாடல் கலைகளில் கை தேர்ந்தவர். தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அவர் பாட்டி தமயந்தியும் அம்மா தனலட்சுமியும் நடிகையராய் இருந்தவர்கள். எம்.ஜி.ஆருக்கு இவர்கள் நல்ல பரிச்சயம் ஆனவர்கள்.

    ஒரு நாள் ஜோதிலட்சுமியின் தாயார் எம்.ஜி.ஆரிடம் பேசும்போது ‘இப்போது தமிழில் ஜோதிக்கு அதிக வாய்ப்பில்லை. தெலுங்கில் அழைப்பு வருகிறது, ஆனால் இவள் நடிக்க மறுக்கிறாள்’ என்று குறைபட்டுக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர் ஜோதிலட்சுமியிடம் ‘ஏன் உனக்குத் தெலுங்கில் நடிச்சா கசக்குதா’ எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோதிலட்சுமி ‘இல்லண்ணே தெலுங்கு பாஷை தெரியாது. என்ன பேசுறாங்கன்னே எனக்குப் புரியாது’ என்றார். ‘அதெல்லாம் புரியும் புரியும். போய் நடி அப்படியே தெலுங்கு கத்துக்கலாம்’ என்று தைரியம் கொடுத்தார். அதன்பிறகு சண்டை காட்சி நிறைந்த படங்களில் ஜோதிலட்சுமி ஒரு ரவுண்ட் வந்தார். ‘நடிகைக்கு ஃபீல்டில் இருந்தால்தான் மதிப்பு. ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டால் யாரும் அவரை தேடப் போவதில்லை’ என்பதால் கிடைக்கும் வாய்ப்பை தவற விடக் கூடாது என்று எம்.ஜி.ஆர் கூறிய அறிவுரையைக் கேட்டதால் அவர் சாகும்வரை நடித்தார். விவேக்குடன் நகைச்சுவை பாத்திரத்திலும் நடித்து பேர் வாங்கினார்.

    நடிகையும் குடும்பப் பெண்தான்

    எம்.ஜி.ஆர்

    எம்.ஜி.ஆர் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது மாதந்தோறும் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். நடிகர் சங்க பொறுப்பாளர்கள் பத்திரிகையாளரின் கேள்விகளுக்குப் பதில் கூறினர். ஒரு நிருபர் எம்.என்.ராஜத்திடம் ஏன் குடும்பப்பெண்கள் நடிக்க வருவதில்லை என்றார். இதற்கு பதிலளிக்க ராஜம் தடுமாறினார். உடனே எம்.ஜி.ஆர் எழுந்து ‘ஏன் வருவதில்லை. இப்போது ராஜம் வந்திருக்கிறாரே. இவரும் குடும்பப் பெண்தானே. இவருக்கும் குடும்பம் இருக்கிறது. கணவர் குழந்தைகள் இருக்கின்றனர்’ என்றார்.

    நடிகை எப்படி இருக்க வேண்டும்?

    நடிப்பு என்பது நடிகையருக்கு வாழ்வாதாரம் தரும் ஒரு தொழில் என்பதை எம்.ஜி.ஆர் அடிக்கடி மற்றவர்களுக்கு நினைவுபடுத்தினார். நாடக நடிகையர் நாடகம் முடிந்ததும் மறுநாள் ஊரைச் சுற்றிப் பார்க்க போகக் கூடாது. ஜவுளி எடுக்க வேண்டும் என்றால். வீட்டுக்கு கொண்டுவரச் சொல்லி சேலை துணிமணிகளை எடுக்க வேண்டும். அனாவசியமாக வெளியே போய் ரசிகர்களின் மத்தியில் தொல்லைக்கு ஆளாகக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்ததை ஜி.சகுந்தலாவின் பேட்டி வாயிலாக அறிகிறோம்.

    வீண் அரட்டை கூடாது

    சினிமாவிலும் தன் செட்டில் இருக்கும் நடிகையரும் பெண்ணின் பெருமை காப்பவராக இருக்கவேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் கவனமாகவும் இருந்தார். பெண்கள் யாரோடும் பேசி சிரித்து அரட்டை அடிப்பது எம்.ஜி.ஆருக்குப் பிடிக்காது. நடிக்க வந்தால், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். நடிகையரிடம் யாரும் கதையளந்தால் அவருக்கு அடி விழும்; நடிகையருக்கும் திட்டு விழும்.

    இருப்பதை கொண்டு சிறப்பாக வாழ்க

    எம்.ஜி.ஆர்

    நடிகையர் ஆண்களை வெட்டி அதிகாரம் செய்வது தகாது என்றும் எம்.ஜி.ஆர் கருதினார். ஒரு முறை சரோஜாதேவி ஷாட் முடிந்ததும் ‘ஏ ஃபேனை போடுப்பா’ என்று ஆயாசமாக வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். உடனே எம்.ஜி.ஆர், ‘உன்னால் செய்யக்கூடிய வேலையை ஏன் அடுத்தவருக்கு ஏவுகிறாய்’ என்று கடிந்து கொண்டார். லட்சுமி ஒரு நாள் மதிய இடைவேளையின் போது உறங்கிக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் என்ன உறக்கம் என்று எழுப்பிக் கேட்டதற்கு, ‘நேற்று வீட்டில் கரன்ட் இல்லை ஃபேன் ஓடவில்லை’ என்றார். ‘அப்படிச் சொல்லாதே வீட்டில் இருக்கும் வசதியைக் கொண்டு இருக்க பழகிகொள்ள வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். ஒருமுறை ஏ.வி.எம் சரவணனிடமும் இது போன்ற ஓர் அறிவுரையைக் கூறினார். ‘வசதியாக வாழலாம் ஆனால் ஆடம்பரம் கூடாது’ என்பார். எனவே நடிகைகள் கண்ணியமாக வாழ வேண்டும். மற்றவர்களும் அவர்களை மதிக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கொள்கையாக இருந்தது.

    குடும்ப உறவை மதித்த எம்.ஜி.ஆர்

    நடிகையும் குடும்பப் பெண்தான் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்ட எம்.ஜி.ஆர் திருமணமான பெண்களுடன் ஜோடி சேர்வதை தவிர்த்தார். ஈ.வி.சரோஜாவின் சொந்தத் தயாரிப்பான கொடுத்து வைத்தவளில் நடித்தபோது காதல் காட்சிகளை மட்டும் ப.நீலகண்டன் இயக்கட்டும். சரோஜாவின் கணவர் இயக்க வேண்டாம். அது சரோஜாவுக்கு அசௌகரியமாக இருக்கும் என்று ராமண்ணாவை தவிர்த்துவிட்டார். அந்தளவுக்கு எம்.ஜி.ஆர் திருமண உறவை மதித்தார்.

    முழங்காலுக்கு மேல் ஏறிய பாவாடை

    சர்வாதிகாரி படப்பிடிப்பில் அஞ்சலிதேவி ஒரு சுற்று சுற்றி கீழே விழும் காட்சியில் நடித்தபோது எம்.ஜி.ஆர் ரீடேக் எடுக்கும்படி கூறினார். இயக்குனரும் அஞ்சலி தேவியும் ஏன் சரியாகத்தானே இருந்தது என்றனர். எம்.ஜி.ஆர் இயக்குனரிடம் அஞ்சலி சுற்றி வந்து கீழே விழுந்தபோது அவர் பாவாடை முட்டிக்கு மேலேறிவிட்டது என்றார். சட்டென்று அதிர்ந்து போனார் அஞ்சலிதேவி. தனது மானத்தை காப்பாற்றிய எம் ஜி ஆருக்கு நன்றி கூறினார்.

    முற்காலத்தில் உயர் குடிப்பெண்கள் மட்டுமே முட்டியை மறைத்து உடை அணியும் அதிகாரம் பெற்றிருந்தனர். சினிமாவில் கதாநாயகிகளும் முழங்காலை மறைத்து தான் உடை அணிவர். எனவே முட்டி தெரிவது ஆபாசம் என்பதால் எம் ஜி ஆரை ஆபத்பாந்தவனாக அஞ்சலி கருதினார். உடனே ரீடேக் எடுக்கப்பட்டது. கதாநாயகியின் நடை உடையில் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும் என்பதை எம் ஜி ஆர் விரும்பினார். நடிகை என்றாலும் அவளும் பெண் தானே? அவருக்கும் மானம் மரியாதை உண்டல்லவா? என்று எம் ஜி ஆர் கருதியதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறார் அஞ்சலிதேவி.

    அவர் குணச்சித்திர நடிகை

    பணம் படைத்தவன் படத்திற்காக ‘’கண் போன போக்கிலே கால் போகலாமா’’ என்ற பாட்டுக்கான படப்பிடிப்பு நடந்த போது அந்தப் பாட்டு ஒரு கிளப் டான்ஸ் என்பதால் சௌகார் ஜானகிக்கு கால்கள் தெரியும்படியான குட்டை பாவாடை தரப்பட்டது. செட்டுக்கு வந்த எம் ஜி ஆர் சௌகார் ஜானகியின் உடையை பார்த்துவிட்டு காஸ்டியூமரை அழைத்தார். ‘’அவர் கவர்ச்சி நடிகை அல்ல. குணச்சித்திர நடிகை. அவருக்கு பெண் குழந்தைகள் உண்டு. இந்த டிரஸ் வேண்டாம் உடம்பை மூடியிருக்கும் உடை கொடுங்கள்’’ என்றார். பின்பு கணுக்கால் வரை தொங்கும் நீண்ட பாவாடையும் மேல் சட்டையும் அணிந்து சௌகார் ஜானகி நடித்தார். பாட்டு இன்றும் எம் ஜி ஆரின் புகழுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    என் மகன் விவரம் தெரிந்தவன்

    திருமணமான நடிகைகளின் திருமண வாழ்க்கை மற்ற பெண்களை போல சிறப்பாக இருக்க வேண்டும் அவர்களுக்கு குடும்பங்களில் கணவர் பிள்ளைகள் போன்றவரால் எந்த நெருக்கடியும் ஏற்பட தான் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் எம் ஜி ஆர் கவனமாக இருந்தார். நாடோடி மன்னன் படத்தில் கத்திகுத்து பட்டு தண்ணீரில் விழுந்துகிடக்கும் பானுமதியை எம் ஜி ஆர் தூக்கிக்கொண்டு வரும் காட்சியில் நடிக்க பானுமதி மறுத்துவிட்டார். என் மகன் பரணி விவரம் தெரிந்தவன் அவன் என்னை ஒரு ஆண் தூக்கிக்கொண்டு போவதை விரும்பமாட்டான் என்று கூறிவிட்டார். ஏற்கெனவே அவர்களுக்குள் சற்று உரசல் இருந்து வந்ததால்ல் எம் ஜி ஆர் முழு பணத்துக்கான காசோலையைக் கொடுத்து இனி தன் படத்தில் நடிக்க வேண்டாம் என்று தகவல் அனுப்பினார். பானுமதியோ ஜானகி எம் ஜி ஆருக்கு ஒரு கடிதம் எழுதி அந்த செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்.

    திருமணமான நடிகைகளுக்கு இருக்கும் நெருக்கடியை புரிந்துகொண்ட எம் ஜி ஆர் அதன்பிறகு திருமணமான நடிகைகளோடு நடிப்பதை பெரிதும் தவிர்த்துவிட்டார். அதே படத்தில் சரோஜாதேவியை அறிமுகப்படுத்தினார். அவர் திருமணம் செய்துகொண்ட பின்பு ஜெயலலிதா அதன் பிறகு லதா என தன் கதாநாயகிகளை அவர் தெரிவு செய்தார்.

    தம்பி மனைவியோடு டூயட்டா?

    அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி என்று சாமான்ய மக்களே சொல்லி வந்த காலத்தில் திரையுலகில் இருந்த எம் ஜி ஆர் தன் தம்பி மனைவியாக கருதிய விஜயகுமாரியுடன் ஜோடி சேர மறுத்தார். திமுகவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ் எஸ் ஆர் எனப்படும் எஸ் எஸ் ராஜேந்திரன் எம் ஜி ஆரை அண்ணன் என்று தான் அழைப்பார். அவருடன் விஜயகுமாரி தாலி கட்டிய மனைவியாக வாழாவிட்டாலும் அக்காலத்தில் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பல படங்களிலும் நாடகங்களிலும் ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருந்தனர். அப்போது ஒரு படத்தில் எம் ஜி ஆருக்கு விஜயகுமாரியை ஜோடியாக போடலாமா என்று கேட்டபோது அவர் தம்பி மனைவியுடன் ஜோடியா? என்று மறுத்துவிட்டார். நிஜ வாழ்விலும் அவர் சகோதரன் மனைவியை தாயாகவே மதித்தார். எனவே விஜயகுமாரி கணவன், காஞ்சித் தலைவன் போன்ற படங்களில் எம் ஜி ஆரின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பை மட்டுமே பெற்றார். [எஸ் எஸ் ஆரோடு ஒரு மோதிரமோ மாலையோ கூட மாற்றிக்கொள்ளாமல் சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த விஜயகுமாரி அவர் தன் சினிமா வாய்ப்புகளை கெடுப்பதைக் கண்டு மனம் வெதும்பி பிரிந்துவிட்டார். பின்பு பராசக்தி படத்தை தயாரித்த பெருமாள் முதலியாரை முறையாகத் திருமணம் செய்துகொண்டார்]

    வெளியூர்களில் நடிகையர்களுக்கு பாதுகாப்பு

    நாடகத்தில் நடிக்க நடிகையரை வெளி ஊர்களுக்கு அழைத்துச் செல்லும்போது எம் ஜி ஆர் மிகவும் கவனமாக இருப்பார். அவர்கள் வெளியில் வரக் கூடாது ரசிகர்களால் தொந்தரவு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக் இருப்பார். எம் ஜி ஆர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் தன் பெயரில் நாடக மன்றம் ஒன்றை தொடங்கினார். அதில் அவருக்கு ஜோடியாக ஜி சகுந்தலா நடிப்பார். அப்போது நடிகையர் கோவிலுக்கு போகவோ ஷாப்பிங் போகவோ எம் ஜி ஆர் அனுமதிக்க மாட்டார்.. அவர்களை காரில் ஏற்றி அனுப்பிய பிறகே எம் ஜி ஆர் தன் காரை எடுக்க சொல்வார்.

    சினிமாவிலும் வெளிப்புற படப்பிடிப்புக்கு போகும் போது யாராவது தன் குழுவில் உள்ள பெண்களை கேலி செய்தால் அடித்து உதைத்து அந்த இட்த்தை விட்டு அவர்களை அப்புறப்படுத்திவிடுவார். நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்பதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

    காஷ்மீரில்

    எம்.ஜி.ஆர் லட்சுமி மஞ்சுளாவுடன் காஷ்மீர் நகர் வீதியில் இதயவீணைக்காகப் படப்பிடிப்பு நடத்தியபோது பொதுமக்கள் படப்பிடிப்புக்குப் பகுதிக்குள் வராமல் இருக்க கயிறு கட்டியிருந்தனர். அதையும் மீறி சில இளைஞர்கள் உள்ளே புகுந்து பெண்களிடம் சில்மிஷம் செய்தனர். எம்.ஜி.ஆர் உடனே நடிகைகளை அருகில் இருந்த கடைக்குள் தள்ளி விட்டு ஷட்டரை இழுத்துவிட்டார். அவர்கள் உள்ளே இருந்த ஒரு கண்ணாடி வழியாக வெளியே பார்த்தனர். அங்கே எம்.ஜி.ஆர் அந்தக் காலிப் பசங்களோடு மூர்க்கமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். ‘எம்.ஜி.ஆர் படத்தில் வருவதைப் போலவே இந்த நிஜ சண்டை இருந்தது’ என்கிறார் லட்சுமி.

    மைசூரில்

    கங்கா கெளரி படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடந்தபோது சிலர் அங்கிருந்த ஜெயலலிதாவிடம் வந்து நீங்கள் கர்நாடகாவில் தானே பிறந்தீர்கள் அதனால் ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக’ என்று சொல்லுங்கள் என்று வற்புறுத்தினர். ஜெயலலிதா தமிழ் ஒழிக என்று சொல்ல மறுத்துவிட்டார். கூட இருந்த படப்பிடிப்புக் குழுவினர் வற்புறுத்தியும் ஜெயலலிதா சொல்லவில்லை. கன்னடர்கள் படப்பிடிப்பு நடத்தவிடமாட்டோம் என்று கலாட்டா செய்தனர். இந்த விஷயம் தெரிந்து அருகில் வேறு ஊரில் ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆர் அங்கு வந்துவிட்டார். இப்போது படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக உணர்ந்தனர். எம்.ஜி.ஆர் இங்குதான் இருக்கிறார் அவர் பார்த்துக்கொள்வார் என்று நம்பினர். ஜெயலலிதாவிடம் பேசி ஆறுதல் கூறினார். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்கினார்.

    எம்.ஜி.ஆர்

    ஒரு சமயம் மைசூரில் எம்.ஜி.ஆரும் லதாவும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டது. எம்.ஜி.ஆர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார். அதை கவனிக்காத சில வாலிபர்கள் லதாவையும் மற்ற நடிகைகளையும் பார்த்து ஆபாசமாக பேசி சிரித்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர் விரைந்து வந்து அவர்களை அடித்து உதைத்தார். அநியாயம் நடக்கும்போது ஸ்டன்ட் நடிகர்களை அழைத்து அடிக்கச் சொல்வோம் என்று எம்.ஜி.ஆர் காத்திருக்க மாட்டார். எதிரிகள்மீது விழும் முதல் அடி அவர் அடியாகத்தான் இருக்கும். அவர்கள் தம் வாழ்நாளில் திரும்பவும் அந்தத் தப்பை செய்ய நினைக்காத அளவுக்குப் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்.

    ஜப்பானில்

    வெளியூர் வெளிமாநிலம் என்றில்லை வெளி நாடாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் நடிகையரிடம் சில்மிஷம் செய்பவர்களை அடித்து உதைக்க தயங்கியதே இல்லை. ஜப்பானில் எஃஸ்போ 70-ல் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு நடந்த போது அங்கு ஒருவர் சந்திரகலாவை கேலி செய்தார். ‘அவரை தன் கறுப்புக் கண்ணாடி வழியாக தூரத்திலிருந்து கவனித்துவந்த எம்.ஜி.ஆர் அருகில் வந்து பட்டென்று அடித்தார். அடி வாங்கியவர் அங்கிருந்து ஓடிப் போய்விட்டார். இது வெளிநாடாயிற்றே, சட்டம் ஒழுங்குப் பிரச்னை வருமோ என்றெல்லாம் யோசித்துப் பார்க்காமல் அநியாயத்தைக் கண்டவுடன் வழக்கம் போல எம்.ஜி.ஆர் பொங்கிவிட்டார். அவர் நல்ல குணத்துக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை மாறாக அடி வாங்கியவர் தன் தவறை உணர்ந்து திரும்பி வந்து மன்னிப்புக் கேட்டார். இதனால்தான் எம்.ஜி.ஆருடன் நடிக்கும்போது நாங்கள் பயமின்றி பாதுகாப்பாக உணர்வோம்’ என்கிறார் ஜி.சகுந்தலா.

    யாராக இருந்தாலும் கண்டித்தார்

    நடிகைகளுக்குத் துன்பம் கொடுப்பவர் யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கண்டிக்க தயங்கியதே இல்லை. ஓர் அமைச்சரால் தனக்குத் தொல்லை என்று முறையிட்ட ஓர் இளம் நடிகைக்கு ஆதரவாக அந்த அமைச்சரை அழைத்துக் கண்டித்தார்.

    நடிகைகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர், நடிகர்கள் பெண்களிடம் தவறு செய்த போது அதைக் கண்டிக்கத் தயங்கவில்லை. ‘கல்லூரிப் பெண்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நடிகர் சுமன்’ மீது உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை கிடைக்கச் செய்தார். சுமனும் நடிகர்தானே என்று எம்.ஜி.ஆர் அவருக்கு இரக்கம் காட்டவில்லை வாழ்க்கை வீணாகப் போன இளம் பெண்களுக்காக எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார்.. நடிகன் என்றால் இளம் பெண்களை மயக்கி அவர்கள் வாழ்வைச் சீரழிக்கலாம் என்பதை எம்.ஜி.ஆர் ஏற்கவில்லை. நடிகருக்குக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

    ஆயிரம் ரூபாய் பந்தயம்

    ஒரு பட தயாரிப்பு நிறுவனம் எம்.ஜி.ஆரை, தன் படத்துக்கு ஒப்பந்தம் செய்தபோது மூத்த தயாரிப்பாளர் முக்தா ஸ்ரீனிவாசன் ஒரு தகவலை தெரிவித்தார். ‘இந்த நிறுவனம் அழகான சாகசமான பெண்களைக் காட்டி கதாநாயக நடிகர்களைக் கவிழ்த்துவிடும். உங்களையும் கவிழ்த்துவிட திட்டமிடுவார்கள்’ என்றார். அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர், ‘என்னை யாரும் அப்படிக் கவிழ்க்க முடியாது. எவ்வளவு பந்தயம்’ என்றார். முக்தாவும் ‘ஆயிரம் ரூபாய்’ என்றார். இது நடந்து பல வருடங்கள் கழித்து ஒரு மேடையில் முக்தா இந்தச் சம்பவத்தைச் சொல்லி, ‘எம்.ஜி.ஆர் மிகுந்த கட்டுப்பாடு உடையவர் அவரை யாரும் கவிழ்க்க முடியாது’ என்றார். எம்.ஜி.ஆர் உடனே அவரை ஆழமாக பார்த்தார். முக்தா, ‘என்னண்ணே’ என்றார். ‘அந்த ஆயிரம் ரூபாய் எங்கே’ என்றார் எம்.ஜி.ஆர். கூட்டம் வெடித்துச் சிரித்தது.

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு

    எம்.ஜி.ஆர் தான் சார்ந்திருந்த திரையுலகில் நடிகையரின் கண்ணியத்தைக் காப்பதை தன் கடமையாகக் கருதினார். அவர்களுக்கு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றை தன்னால் முடிந்தவரை தீர்த்துவைத்தார். இவ்வாறு எம்.ஜி.ஆர் படத்திலும் நிஜ வாழ்விலும் பெண்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டதால் பெண்களை அவர் தாய்க்குலம் என்று அழைத்தபோது மக்கள் அதை நம்பி ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசுப் பணியாளர் முதல் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் வரை பெண்களைத் தாய்க்குலம் என்றே அழைத்தனர், மதித்தனர். காவல் நிலையத்திலும் பெண்கள் அளிக்கும் புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டன. நடிகையருக்கும் சரி சாதாரணப் பெண்களுக்கும் சரி எங்கெங்கு அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கே நான் வந்து இரட்சிப்பேன் என்று கூறிய கண்ண பரமாத்மாவாக எம்.ஜி.ஆரைக் கருதியதில் வியப்பொன்றும் இல்லை..........ns...

  4. #1263
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மக்கள்_திலகத்தின்-ப்ளாக்பஸ்டர்

    "ரிக்க்ஷாக்காரன்"
    #மக்கள்_திலகம்

    மஞ்சுளா, பத்மினி, மேஜர் சுந்தர்ராஜன், அசோகன், தேங்காய் சீனிவாசன், ராம்தாஸ், சோ, ஜி.சகுந்தலா மற்றும் பலர்

    படம் வெளியான ஆண்டு:1971
    இயக்குநர் : எம்.கிருஷ்ணன்
    தயாரிப்பு: இராம.வீரப்பன்
    இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்..

    ஒரு ரிக்க்ஷாகாரரான செல்வம் (மக்கள் திலகம்) பெரிய மனிதர்கள் போலிருந்து பெண் கடத்தல், கொலை ஆகிய கொடுஞ்செயல்களை புரியும் இரு கொடுங்கோலர்களான, தர்மராஜ், கைலாசம் (மேஜர் சுந்தர்ராஜன், அசோகன்) ஆகியோர்களை சமூகத்தில் அம்பலப்படுத்துவது ஒரு பகுதியாகவும்...

    தன் காதலியான உமா (மஞ்சுளா)வின் வாழ்வில் இருக்கும் ரகசியம் என்ன? பார்வதியை (பத்மினி) அவள் குடிசைக்கே சென்று பார்க்கவேண்டிய அவசியம் என்ன? அவளுடைய தகப்பனார் யார்? தர்மராஜ், உமாவின் தகப்பனாரா? .ஏன் பார்வதி மறைந்து ஒரு சேரியில் அனாதை போல் வாழ வேண்டிய அவசியமென்ன? தான் உமாவின் மானத்தையும், கற்பையும் காப்பாற்றும் பொருட்டு, போலீசில் எதிரிகளின் பொய்வழக்கில் சிக்கும்போதெல்லாம், தன்னை காப்பாற்றாமல், நீதிமன்றத்தில் மெளனம் சாதிக்கவேண்டிய அவசியமென்ன? பார்வதி, கார்மேகத்தின் (மனோகர்) விடுதலையை கவலையோடு எதிர் நோக்குகிறாளே? அவன் யார்?போன்ற இந்த புதிர்களுக்கும் விடை தேடுகிறார் மக்கள் திலகம். இந்த கதையில் வழக்கம் போல் இனிமையான பாடல்கள், விறு விறுப்பான ரிக்ஷா ரேஸ், சண்டை, நகைச்சுவை ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு.

    மக்கள் திலகதிற்கு மக்கள் மனதில் சிம்மாசனம் அமைத்து உட்கார வைத்த படங்களில் இது முக்கியமானது முதன்மையானது. இந்த படத்தின் மூலம் தான் அடித்தட்டு மக்களின் வாழ்வில்
    அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியானார்.

    மஞ்சுளாவுடனான காதல் காட்சிகளில், பத்மினியுடனான சென்டிமென்ட் காட்சிகளில், மேஜர் சுந்தர்ராஜனை அவர் வீட்டுக்கே சென்று தவறை உணர வைக்கின்ற காட்சிகளில் மக்கள் திலகம் வேற லெவல். அதிலும் அந்த ரிக் ஷா ரேசில் மக்கள் திலகம் வென்ற உடன் அவரை அனைத்து ரிக் ஷா காரர்களும் தலைக்குமேல் தூக்கி ஆரவாரம் செய்யும் போது அந்த உற்சாகம் பார்ப்பவரையும் தொற்றிக்கொள்கிறது.

    மஞ்சுளா, பத்மினி, மேஜர், அசோகன், மனோகர், சோ ஆகியோர் தங்கள் பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.

    மெல்லிசை மன்னருக்கு மக்கள் திலகத்தின் படங்கள் என்றாலே தனி உற்சாகம் பிறந்துவிடுமே : "கடலோரம் வாங்கிய காற்று...; அழகிய தமிழ்மகள் இவள்..; அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனந்த சிரிப்பு ; பம்பை உடுக்கை கட்டி ; பொன்னழகுப் பெண்மை கொஞ்சும் .." என்று அத்தனை பாடல்களும் இன்றுவரை லைம்லைட்டில் உள்ளது.

    இந்த படத்திற்காக மக்கள் திலகம், 1971ம் ஆண்டுக்கான இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான #பாரத் விருது பெற்றார். இந்த விருதை பெரும் முதல் தென்னிந்திய நடிகர் மக்கள் திலகமே...இது தமிழகமெங்கும் மாநாடு போல் கொண்டாட பட்டது.

    இந்த படம் சென்னை தேவி பாரடைசில் வெள்ளி விழாவும், தமிழகமெங்கும் பனிரெண்டுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையிலும், தனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததற்காகவும் சென்னை முழுவதுமுள்ள 6000 க்கும் மேற்பட்ட ரிக் ஷா தொழிலாளர்களுக்கு ரயின்கோட், ஸ்வெட்டர்கள் வழங்கி சிறப்பித்தார் மக்கள் திலகம்...

    "ரிக்க்ஷாக்காரன்" - மக்கள் திலகத்தின் மைல் கல்.

    Source :https://en.m.wikipedia.org/wiki/Rickshawkaran....... Sridhar Babu...

  5. #1264
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய நாடோடி மன்னன் படத்தில் எல்லாவற்றிற்கு மேலாக தன் தனித்தன்மையை ஒரே வசனத்தின் மூலம் நிலைநிறுத்தி தியேட்டரையே அதிரவைத்தவர் எம்ஜிஆர்..

    ‘’என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர என்னை நம்பிக்கெட்டவர்கள் இன்று வரை இல்லை’’ ,சாகா வரம் பெற்றது அவரின் இந்த வசனம்..


    நடிகர், தயாரிப்பாளர், டைரக்டர் என்ற மூவரையும் தாண்டி, நாடோடி மன்னனில் படு கில்லாடி எம்ஜிஆர் ஒருவர் வெளியே தெரியாமல் இருந்தார். இந்த கில்லாடி எம்ஜிஆர், அரசியல் தலைவர் எம்ஜிஆருக்குள்ளும் விஸ்வரூபம் எடுத்தததால்தான் அவரை அரசியலில் திமுக தலைவர் கலைஞராலேயே கடைசிவரை சமாளிக்க முடியவில்லை..


    எதற்காக இவ்வளவு பேசவேண்டியுள்ளது என்றால், நாடோடி மன்னன் படத்தில்தான் எம்ஜிஆருக்கு எதிர்கால திட்டமிடல் என்கிற யோசனை தோன்றியிருக்கவேண்டும். சினிமாவில் மற்றவர்களின் ஆளுமைகளோடு தன் ஆளுமை சமமாகவோ, கீழாகவோ போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்..


    ராஜகுமாரி, அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, மலைக்கள்ளன் போன்ற படங்கள் கலைஞரின் வசனத்தால் காவியமாகின.. அது மறுக்கமுடியாத உண்மையும்கூட. சிவாஜியின் பராசக்தி, மனோகரா போன்ற படங்களைக்கூட கலைஞர் அவருடைய வசனங்களால், கலைஞரின் பராசக்தி, கலைஞரின் மனோகரா என்றே திரைஉலகில் பேசவைத்தார் இரு பெரும் நடிகர் திலகங்களுக்கு ஆரம்பகாலத்தில் வசனங்களால் வெற்றி சிம்மாசனம் அமைத்து தந்ததில் கலைஞருக்கு பெரும் பங்குண்டு.

    1953லேயே கலைஞரை வைத்து சொந்தப்படம் ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கினார் எம்ஜிஆர், கதை வசனத்திற்கு கலைஞர் தயாராக நின்றார். ஆனால் படத்தயாரிப்பு கைகூட வில்லை. பிறகு மலைக்கள்ளன், மனோகரா போன்ற வற்றின் வெற்றிகளால் கலைஞரின் மார்கெட் தாறுமாறாய் எகிறிப்போனது..

    அதேவேளையில் மலைக்கள்ளன், குலேபகாவலி, தாய்க்குப்பின்தாரம் மதுரைவீரன், அலிபாபாவும் 40 திருடர்க ளும் போன்ற தொடர் வெற்றிகளால் எம்ஜிஆர் வசூல் சக்ரவர்த்தியாக மாறி, திமுகவில் முக்கியஸ்தராகவும் உருவெடுத்துவிட்டார்.


    இங்குதான் நின்று விளையாடுகிறது கில்லாடி எம்ஜிஆரின் சாமர்த்தியம். இரண்டாம் முறையாக சொந்தப்படம் நினைப்புவந்தபோது எம்ஜிஆரின் காய் நகர்த்தல்கள் முற்றிலும் விநோதமாக இருந்தன. வசனகர்த்தா ஜாம்பவான் கலைஞர் நாடோடிமன்னனில் இடம் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் தயாராகும் தனது கனவுப் படத்திற்கு கலைஞரை வசனம் எழுதவிட்டால், அவர் அதை அவரின் டிரேட்மார்க் படமாக கடத்திச் சென்று விடுவார் என்ற எச்சரிக்கை உணர்வு..


    படத்தில் மன்னன்போல ஆட்சிக்கு வந்து ஒரு நாடோடி அறிவிக்கும் புரட்சிகரமான பட்ஜெட் காட்சிகள் முழுக்க முழுக்க தன் சிந்தனைகளாகவே தெரியவேண்டும் என்பதில் எம்ஜிஆர் தீர்மானமாக இருந்தார். அவை கலைஞரின் சிந்தனைகள் என்று பேச்சுவந்துவிடக்கூடாது என்பதே அவரின் மனஓட்டம்..

    கலைஞருக்கு பதில் கண்ணதாசனை வசனம் எழுத அழைத்தார். மிகமிக முக்கியமான பதினைந்து காட்சிகளுக்கு மட்டுமே கண்ணதாசன் எழுதினார். மற்ற வசனங்களை எழுதியவர், எம்ஜிஆர் பிக்சர்சை சேர்ந்த ரவீந்தர்.தமிழ் திரை உலகின் நெம்பர் என் வசனகர்த்தாவான இளங்கோவனிடம் உதவியாளராக இருந்தவர். அதாவது நாடோடி மன்னன் படம் வசனம் என்றால் டைட்டிலில் கண்ணதாசன்- ரவீந்தர் என்றே வரும்.


    இன்னொரு வியப்பான விஷயம். படத்தில் கண்ணதாசன் பாட்டெழுதவில்லை. வேறு எட்டு பேர் எழுதினார்கள். எல்லாம் ஹிட் பாடல்கள். ஆனாலும் ஒற்றை ஆளாய் பாடலாசிரியர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் மட்டுமே பேசப்பட்டார்..

    நாடோடி வீராங்கன், மன்னன் மார்த்தாண்டன், ராஜகுரு தளபதி பிங்களன், அரசியல் ஆலோசகர் கார்மேகம் அமைச்சர்கள், புரட்சிகூட்டத்தினர் என் நிறைய பாத்திரங்கள் உண்டு. ஆனால் இவை எதையும் திராவிட இயக்க நடிகர்களான எஸ்எஸ்ஆர், கேஆர் ராமசாமி எம்ஆர் ராதா, சகஸ்ஹர நமம் போன்றவர்களுக்குக்கூட கொடுக்கவில்லை. ..

    நாடோடிமன்னன் படம் என்றாலே எங்கும் எம்ஜிஆர் எதிலும் எம்ஜிஆர் என்ற பெயர் மட்டுமே பேசும்படி பார்த்துக்கொண்டார்.. அதுதான் வெளியில் தெரியாத கில்லாடி எம்ஜிஆர்.

    திமுகவின் கொள்கைகளை எம்ஜிஆர் தன் படத்தில் தனி ஆளாய் திறம்பட பேசியிருக்கிறார் என்று அறிஞர் அண்ணாவே நினைக்கும் அளவுக்கு கட்டமைத்தார் எம்ஜிஆர்.

    நாடோடி மன்னன் தயாரான போது பல படங்களுக்கு ஒப்பந்தமாகி அவ்வப்போது அவற்றிலும் நடித்துக்கொண்டிருந்தார். படம் வெளியாகி சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்து.

    புரட்சித் தலைவரின் திரை துறை அரசியல் வெற்றிக்கு காரணம் அவரின் தனிப்பட்ட அறிவு திரன் உழைப்பு மட்டுமே இதில் வேறு யாருக்கும் பங்கில்லை.
    புரட்சித் தலைவர் புகழ் ஓங்குக.......sbb...

  6. #1265
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருநாள் இரவு சற்றே பட படப்புடன் தலைவர் தோட்டம் வந்து அன்னை ஜானகி அவர்களை எல்லோரும் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்.

    சத்தம் இன்றி என் பின்னால் வா என்று அழைத்து கையில் பதிவில் படத்தில் இருக்கும் ஒரு டைமேர் வாட்ச் எடுத்து கொண்டு அழைக்க.

    தலைவன் பின்னால் நடக்கிறார் அன்னை ஜானகி அவர்கள்..தன் வீட்டில் இருந்த நீச்சல் குளம் வந்த பின் ஜானு நான் இப்போது உள்ளே இறங்கும் போது எழும் அலைகள் ஓய்ந்த பின் நீ இந்த டைமேரை ஆன் செய்து நான் மேலே வந்த உடன் அதை ஆப் செய்யவேண்டும் என்று சொல்ல.

    அவரும் திகைத்து அவர் சொன்னபடி செய்ய தலைவன் கீழே தண்ணீருக்குள் போய் அலைகள் ஓய்ந்து வினாடிகள் என்ன பட்டு மேலே அவர் வர தாமதம் ஆக ஜானு அம்மா பதற சிரித்து கொண்டே மேலே வந்த தலைவர் எத்தனை வினாடிகள் ஜானு.

    என்று ஆர்வமுடன் கேட்க அலைகள் தவிர்த்து நீங்கள் உள்ளே இருந்தது 18 வினாடிகள் தாண்டி மொத்தம் அதிகம் என்று சொல்ல சரி வா என்று போய் அதற்கு பின் சாப்பிட்டு தூங்கி விட...

    மறுநாள் அதிகாலை விழித்து தன் தொழில் சார்ந்த பட படப்பிடிப்புக்கு செல்ல அங்கே தயாரிப்பாளர் தாமஸ் அவர்கள் அன்று எடுக்க வேண்டிய காட்சிக்கு ஒரு டூப் நடிகர் உடன் தயார் ஆக இருக்க..

    வேண்டாம் இதில் என்ன ரிஸ்க்....அப்போ அவருக்கும் அதே ரிஸ்க் தானே நானே பண்ணுகிறேன் என்று சொல்ல....அந்த நீச்சல் குளத்தில் கண்ணாடி பொறுத்த பட்ட அடி பாகத்தில் இருந்து அந்த காட்சி படம் ஆக்க பட்டது.

    தலைவர் தண்ணீருக்கு அடியில் யோகா நிலையில் தியானம் செய்வது போன்ற ஒரு காட்சி....தலைவன் படத்தில் வருமே அதே காட்சி....நீரலைகள் ஓய்ந்து தலைவர் உள்ளே இறங்கி காட்சி எடுக்க பட்ட பின் பல அடிகள் கீழே இருந்த தலைவர் மேலே வர.

    என்ன எப்படி என்று ஆர்வமுடன் கேட்க சூப்பர் சார் என்னால் நம்ப முடியவில்லை காட்சியில் 35 வினாடிகள் மொத்தம் அதை தாண்டி நீங்கள் அந்த யோகா அமைப்பில் உள்ளே அமர்ந்து இருந்தீர்கள் அற்புதம் என்று பாராட்ட...

    அவர் தான் தலைவன் அன்னை சத்தியாவின் புதல்வர்....

    சித்த வைத்தியத்தின் மகிமை சொல்லும் படம் அது...1999 இல் தாமஸ் அவர்கள் மதுரையில் இந்த நிகழ்வை பற்றி சொல்லி தலைவர் நினைவில் மூழ்குகிறார்.

    1984 இல் தாமஸ் அவர்களை ஒரு நிகழ்ச்சியின் போது சந்தித்த தலைவர் அவரை அழைத்து எனக்கு பல சண்டை முறைகள் உடல் பயிற்சி முறைகள் தெரிந்து இருந்தாலும் யோகா மூச்சு பயிற்சி முறை தலைவன் படம் மூலம் அறிமுகம் ஆக அதை நான் தொடர்ந்து செய்து வந்தேன்.

    மிக்க நன்றி உங்களுக்கு அதுவே அமெரிக்க மருத்துவ மனையில் நான் சிகிச்சை பெற்ற போது மிகவும் உதவியது என்று சொல்லி கண் கலங்குகிறார் நம் இதயதெய்வம் எம்ஜிஆர்....

    என்றும் அவர் புகழ் காப்போம்....நன்றி.

    தலைவனின் ரசிகர்களின் ஒருவன் குரலாக உங்களில் ஒருவன்...

    நன்றி தொடரும்............

  7. #1266
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாதனைகள் படைத்த "உலகம் சுற்றும் வாலிபன்"
    எம்.ஜி .ஆர் . நடித்து 1973 _ ல் வெளிவந்த "உலகம் சுற்றும் வாலிபன்" , பல சாதனைகளைப் படைத்தது . திரை உலகில் எம். ஜி . ஆர். நடித்த படங்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள போதிலும் , சாதனைகளின் சிகரமாகத் திகழ்வது "உலகம் சுற்றும் வாலிபன்" .
    *
    ஜப்பான் நாட்டில், உலகப் பொருட்காட்சி (" எக்ஸ்போ 70 ") நடைபெற்றது. அதைப் பயன்படுத்தி , கண்ணுக்கு இனிய காட்சிகளுடன் உலகம் சுற்றும் வாலிபனை பிரமாண்டமாகத் தயாரிக்க எம். ஜி . ஆர். திட்டமிட்டார். அதற்கேற்றபடி , எம் .ஜி . ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவினர் கதையை உருவாக்கினர் . வசனத்தை சொர்ணம் எழுதினார் .
    *
    பாடல்களை கண்ணதாசன் , வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுத , எம் . எஸ் . விஸ்வநாதன் இசை அமைத்தார் . இதில் எம். ஜி .ஆருக்கு இரட்டை வேடம். அவருடன் மஞ்சுளா, சந்திரகலா , லதா, தாய்லாந்து நடிகை மெட்டா ருங்ரட்டா, எம். என். நம்பியார் , அசோகன், மனோகர் , நாகேஷ் , வி .கோபால கிருஷ்ணன் , ஜஸ்டின் ஆகியோர் நடித்தனர் . லதாவுக்கு இதுதான் முதல் படம் . விஞ்ஞானி முருகனாகவும் , அவன் தம்பி ராஜ× வாகவும் எம்.ஜி .ஆர் . நடித்தார் .
    *
    விஞ்ஞானி முருகன், மின்னலின் சக்தியை மனித குலத்தின் நன்மைக்குப் பயன்படுத்தலாம் என்ற ரகசியத்தை ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடிக்கிறான் . அந்த ரகசியத்தைப் பெற்று வெளிநாட்டுக்கு விற்க , பைரவன் (அசோகன் ) எண்ணுகிறான் .
    *
    இதற்கு முருகன் சம்மதிக்கவில்லை. ரகசியத்தை ஒரே இடத்தில் வைக்காமல் , பல்வேறு நாடுகளில் , பல நபர்களிடம் கொடுத்து வைக்கிறான் . இதனால் முருகனுக்கும், பைரவனுக்கும் மோதல் ஏற்படுகிறது. முருகனை பைரவன் சுடுகிறான் . அதனால் முருகன் நினைவு இழந்து , மயக்க நிலையை அடைகிறான் .
    *
    இந்நிலையில் தன் அண்ணனைக் காப்பாற்ற அவன் தம்பியான புலனாய்வுத்துறை அதிகாரி ராஜ× வருகிறான் . எதிர்பாராத திருப்பங்களுடன் கதை செல்கிறது. கடைசியில் விஞ்ஞானி முருகன் காப்பாற்றப்படுகிறான் . ஜப்பானில் நடந்த உலகப் பொருட்காட்சியில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன .
    அத்துடன், ஜப்பானில் உள்ள நாரா என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான புத்தர் சிலை முன்பாகவும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன . மற்றும் டோக்கியோ டவர் , மாபெரும் கடை வீதியான "கின்சா " , பிïஜி எரிமலை முதலான இடங்களில் படப்பிடிப்பு நடந்தது .
    *
    அத்துடன் மலேசியா, சிங்கப்பூர் , தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது . ஏறத்தாழ படம் முழுவதும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டதால் "நாம் பார்ப்பது தமிழ்ப்படமா, ஹாலிவுட் படமா " என்ற உணர்வை உலகம் சுற்றும் வாலிபன் உண்டாக்கியது. சண்டைக்காட்சிகள் புதுமையாக இருந்தன .
    *
    கண்ணதாசன் எழுதிய " அவள் ஒரு நவரச நாடகம்" , "லில்லி மலருக்குக் கொண்டாட்டம், "உலகம் . .. உலகம் " ஆகிய பாடல்களும் , வாலி எழுதிய "பச்சைக்கிளி முத்துச்சரம்" , "தங்க தோணியிலே தவழும் பெண்ணழகே", "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ ", "பன்சாயி .. ." ஆகிய பாடல்களும் , புலமைப்பித்தன் எழுதிய "சிரித்து வாழவேண்டும் , பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே" பாடலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன . " நமது வெற்றியே நாளைய சரித்திரம்" என்று தொடங்கும் "டைட்டில்" பாடலை , சீர்காழி கோகாவிந்தராஜன் பாடினார் . இதை எழுதியவர் புலவர் வேதா . 11 -05 -1973 _ல் இப்படம் திரையிடப்பட்டது .
    *
    சென்னையில், சினிமா போஸ்டர்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், போஸ்டர்களே ஒட்டப்படவில்லை. 9 -ந்தேதி முன்பதிவு தொடங்கியது. இரண்டே நாட்களில் , ஒரு மாதத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன . சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் தொடர்ந்து 227 காட்சிகள் " ஹவுஸ் புல் " ஆயின .
    *
    இந்த தியேட்டரில், "மெக்கனாஸ் கோல்டு " என்ற ஆங்கிலப் படம் மொத்தம் 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வசூலித்து " இந்தியாவிலேயே ஒரே தியேட்டரில் அதிக வசூல் பெற்ற படம் " என்று சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை , " உலகம் சுற்றும் வாலிபன்" முறியடித்தது . 182 நாட்களில் , ரூ .13 லட்சத்து 63 ஆயிரம் வசூலித்தது.
    *
    சென்னையில் தேவிபாரடைஸ் தியேட்டரில் இப்படம் 182 நாட்களும் , அகஸ்தியாவில் 175 நாட்களும் , உமாவில் 112 நாட்களும் ஓடியது. மதுரை மீனாட்சியில் 217 நாட்கள், திருச்சி பேலசில் 203 நாட்கள் ஓடியது. தமிழ்நாட்டில் 20 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. பெங்களூரில் மூன்று தியேட்டர்கள் 100 _வது நாளைக் கண்டன.
    *
    மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் , 47 நாட்கள் ஓடி சாதனை படைத்தது . அந்தக் காலக்கட்டத்தில் , மலேசியாவில் நீண்ட காலம் ஓடிய இந்தியப்படம் "உலகம் சுற்றும் வாலிபன்" தான்
    ��������������������������
    இந்த படத்தின் முக்கிய அம்சமே ஜப்பானின்
    ஒசாகா நகரில் நடந்த expo 70 தான்.
    படத்திலே கதை என்று எதுவும் கிடையாது,ஆனாலும்
    இதை படமாக்க எம்ஜிஆர் குறைவான பண கையிருப்புடன்
    தான் சென்றாராம். இதயம் பேசுகிறது மணியன் செய்த
    ஏற்பாட்டின்படி எம்ஜிஆர் ஜப்பான் வந்தார். ஜப்பான்
    வரும்போது அவர் கூடசிலரே வந்தார்கள்.
    புறப்படும் முன்னர்
    எம்ஜிஆர் மெட்ராஸில் பட்ட கஸ்டங்கள் அதிகம்.
    கடைசியாக எம்ஜி ஆர் ஜப்பானில் வந்து தங்கிவேலையை தோடங்கினார்.
    அவரது கார் , கார் பார்கிங்கில் தடை செய்யபட்டதும் ஒரு செய்தி.
    தனது தோளிலேயே காமிராவை தூக்கிகொண்டு அந்த expo பூராவும்
    சலிக்காது ஓய்வே இல்லாது நடந்தே அத்தனை இடத்தையும் தானே
    படமாக்கினார் திரு எம்ஜி ஆர். என்ற மாமனிதன் அப்போது அவரது
    வயது 53. தேவையான மற்றும் ரசிக்ககூடிய இடங்களையும் கண்டு
    கொண்டு அடுத்த நாளே உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பாடலை
    படமாக்கினார் எம்ஜி ஆர்.இந்த பாட்டு மட்டும் 200 shot ஆயின.
    அப்படத்தின் எடிட்டர் திகைப்போடுதான்
    இந்த பாடலை எடிட் செய்தார். ஓரு தமிழ் பாட்டுக்கு இந்தனை
    shotவைத்தது இதுதான் முதல்.
    இந்த பாட்டிலேயே முக்கியமான இடங்களை படமாக்கியது ஒரு சாதனையாகும்
    expo 70 யை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்த படமே ஆரம்பிக்கப்பட்டதாம்….
    ஓடிக்கொண்டே இருக்கும் எம் ஜி ஆரோடு ஒடமுடியாத சந்திரகலா……
    எழுபதுகளில் இப்படி ஒரு உலகம் இருந்ததை நம்பத்தானே வேண்டும்.........gdr...

  8. #1267
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களை பார்த்தால் பக்தி தன்னால் ஊற்றெடுக்கும். பய பக்தியுடன் அவரை தரிசித்து விட்டு வந்தால் மனம் நிம்மதியடையும். நம் துன்பத்துக்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கும் என்ற எண்ணம் மேலோங்கி நமக்கு தன்னம்பிக்கை உண்டாகும்.

    அப்பேர்ப்பட்ட சங்கராச்சாரியார் ஆரம்பத்தில் பாதரட்சை எனப்படும் மரக்கட்டையில் செய்த மர காலணியை அணிந்திருந்தார். அதன்பின் காலணி அணிவதை விட்டு விட்டு வெற்று காலாகத்தான் நடப்பார். அத்தகைய மகானை மனதில் வைத்து "திருவருட்செல்வரி"ல் அப்பர் வேடத்தில் தோன்றிய சிவாஜி அவரை இமிடேட் செய்யும் போது அவர் அணிந்திருக்கும் காலணியை பார்த்திருக்க வேண்டாமா?

    அம்பாள், எந்தக்காலத்திலடா பேசினாள்? அறிவுகெட்டவனே!
    என்பது காசுக்காக கணேசன் பேசிய வசனம் "பராசக்தி"யில். அதையே சற்று மாற்றி அப்பர் எந்தக்காலத்தில் பேட்டா செருப்பு மாட்டி நடந்தார் கணேசா? என்று கேட்க வேண்டும் போல இருந்தது. அதுமட்டுமல்லாமல் வெயிலின் தாக்கம் காரணமாக அவர் நிற்கும் இடத்தில் தண்ணீரை ஊற்றி வைத்திருப்பதையும் பார்க்கலாம்.

    இதுதான் நமது கணேசன் அவர்கள் பந்தா இல்லாமல் இயல்பாக நடிக்கும் முறை. அவரது கைபுள்ளைங்க அவரை பற்றி மிகவும் பெருமையாக கப்ஸா விடுவதில் கைதேர்ந்தவர்கள். சிவாஜி நடிக்கும் போது பத்து நாட்களுக்குமேல் அந்த கதாபாத்திரம் போலவே வாழ்ந்து விட்டுதான் நடிப்பார் என்பார்கள்.

    இப்படித்தான் போலியாக 555 சிகரெட்டை புகைத்துக் கொண்டு காலில் செருப்பு மற்றும் இத்யாதிகளுடன் அவர் வாழ்ந்து விட்டுதான் நடிக்கப் போவார் போல.
    ஆனால் புரட்சி நடிகரை பாருங்கள்.
    கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ செய்யும் தொழிலில் மிகவும் கவனமாக இருப்பார். காலில் செருப்பு அணியாமல் முருகன் வேடமேற்று நடிக்கும் போது ஆகா!
    என்ன ஒரு கருணை பார்வை! அருள் வீசும் முகப் பொலிவு. யாருக்கு வரும் இந்த ஆன்மீக தெளிவு.

    இதை உணர்ந்து கொண்ட வாரியார் சுவாமிகள் தலைவருக்கு 'பொன்மனச்செம்மல்' என்ற பட்டத்தை கொடுத்து மனமார வாழ்த்தியதை நினைவு கூறலாம். ஆன்மீகவாதியான கணேசனை தேடிப் போகாத வாரியார் தலைவரை தேடி போக காரணம், முன்னவரிடம் டொனேஷன் என்று போனால் அவர் திடீரென்று நாஸ்திகனாக மாறி வாரியாரை பகைத்து விடுவார் என்ற பயத்தின் காரணமாக இருக்கலாம்.

    "புதிய பறவை"யில் ஒரு கண்ணில் சோகமும் ஒரு கண்ணில் அதிர்ச்சி யும் காட்டி நடித்தாராம் கணேசன் என்று புதிய கப்ஸா ஒன்றை கிளப்பி விட்டார்கள் கைபுள்ளைங்க. அது வரைந்த படம். படத்தின் வலது பக்க ஓரத்தில் வரைந்தவரின் பெயரை குறிப்பிட்டிருப்பதை நாம் பார்க்கலாம். இந்த மோடி மஸ்தான் பில்ட்அப் கொடுப்பதை போல கணேசனை பற்றி அவர்களே பில்ட்அப் கொடுத்து சிலாகித்து பேசுவதில் வல்லவர்கள் இந்த கைபிள்ளைங்க. ஏய்த்து பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப்பாருங்க!

    "பாக்ய சக்கரத்தா"ல் வாழ்விழந்து, பார்வை இழந்து, வறுமையில் வாடி மறைந்த ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் குடும்பத்துக்கு1981 காந்தி ஜெயந்தி அன்று தலைவர் திருச்சி கலையரங்கத்தில் வைத்து தனது மந்திரி சகாக்களுடன் விழா ஏற்பாடு செய்து ரூ 1 லட்சம் நிதி உதவியளித்து அவரின் குடும்பத்தை வறுமையின் கோரப்பிடியில் இருந்த காப்பாற்றியதுடன் அவர் நினைவை போற்றும் வகையில் அந்த அரங்குக்கு 'தியாகராஜ மன்றம்' என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

    'வாழ்ந்தவர் கோடி(கணேசன் உட்பட) மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர், மானம் காப்போர்(எம்ஜிஆர்)
    சரித்திரம் தனிலே நிற்கின்றார்' என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் புரட்சித் தலைவர்.

    நன்றி: திரு சைலேஷ் பாசு..............ksr.........

  9. #1268
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #கனடா நியூ மன்னாரன் கம்பெனி டுபாக்கூர் + தமிழக லொள்ளு சபா மனோகர், போண்டா மணி இணைந்து வழங்கும் இடை விடாத சிரிப்புடன் கூடிய காமெடித் திருவிழா #



    இந்த இரண்டு குரூப்புகளும் சேர்ந்து அவர்களின் பதிவுகளை படிக்கும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்காமல் ஓய மாட்டார்கள் போல் இருக்கிறது ( என்ன செய்ய நாமளும் வாழ்த்து சொல்லித் தொலைப்போம் வேற வழி? )

    2020 மார்ச்சில் ஆரம்பித்த லாக் டவுன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு இப்போது நவம்பர் மாதம்தான் இன்று முதல் 50 சதவிகிதம் ஆட்கள் நிரப்பிக் கொள்ளலாம் என்னும் நிபந்தனையுடன் திரை அரங்குகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது,

    உடனடியாக மடை திறந்த வெள்ளம் போல் தலைவர் படங்களை திரையிட ஆரம்பித்து விட்டார்கள் திரை அரங்க நிர்வாகங்கள்

    தஞ்சை, கரூர், திருவானைக் காவல், சீர்காழி, திருவாரூர் இங்குள்ள அரங்குகளில் தலைவரின் அகிலமே சொல்லும் "ஆயிரத்தில் ஒருவன் " இன்று முதல் திரையிடப் பட்டுள்ளது,


    இது தவிர மதுரை சென்ட்ரல் அரங்கில் தீபாவளித் திருநாள் முதல் தலைவரின் " தர்மம் தலை காக்கும் " திரையிட உள்ளதாக தகவல்,

    மேலும் கோவை ஷண்முகா அரங்கில் நாளை முதல் " தர்மம் தலை காக்கும் " திரைக் காவியமும், தீபாவளித் திருநாள் முதல் தமிழக மக்களின் " காவல் காரனு"ம் திரையிடப் பட உள்ளது

    மற்ற நகரங்களில் தலைவரின் திரை விபரங்கள் அடுத்தடுத்த
    பதிவுகளில் பதிவிடப்படும்

    இதை நான் இங்கே குறிப்பிடக் காரணம்
    இந்த கொரோனா பேரிடர் மட்டும் வராதிருந்தால் இதற்கு முன் மறு வெளியீடு படங்களில் தலைவரின் டிஜிட்டல் செய்து வெளியிடப்பட்ட படங்கள் அனைத்தும் ஒரு மிகப்பெரிய record brake செய்திருக்கும்


    இப்படி தலைவரின் விண்முட்டும் சாதனைகளைப் பார்த்து நாமெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருக்க மேலே நான் குறிப்பிட்ட இரண்டு குரூப்புகளும் பழைய கீறல் விழுந்த ரெகார்டைப் போல திரும்பத் திரும்ப " செத்த மண்" படம் திரையிட்ட அரங்குகளில் எல்லாம் 50 நாளைக் கண்டது என்றும், 9 அரங்கில் 100 நாள் கண்ட மாபெரும் வெற்றிப்படம் என்றும் அம்புலிமாமா கதையில் விக்கிரமாதித்தன் மனம் தளராமல் முருங்கை மரத்திலிருந்து வேதாளத்தை மீண்டும் மீண்டும் வெட்டி தோளில் சுமப்பது மாதிரி பதிவு போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்,

    நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இப்படி பதிவு போட்டு யாருக்கு எதை நிரூபிக்கப் போகிறீர்கள்? நமக்குப் புரியவில்லை

    இதுல ஒரு சிறப்பான சம்பவம் என்னவென்றால் இவர்கள் 50 நாட்கள் ஓடியதாக குறிப்பிடும் சித்ராலயா சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரமே ஒரு பச்சைப் புளுகல் காரணம் அதில் நிறைய அரங்குகள் 3 வாரங்கள் நான்கு வாரங்கள் கழித்து திரையிடப் பட்ட அரங்குகள் ஆனால் 50 நாள் விளம்பரம் வெளியிடப்பட்ட போது நைசாக அதையும் சேர்த்து வெளியிட்டது சித்ராலயா நிறுவனம்

    இந்த மோசடியை அப்போதே தலைவர் ஆதரவுப் பத்திரிக்கைகள் கண்டம் செய்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம் ( ஆனால் போண்டா மணிக்கும், லொள்ளு சபா மனோகருக்கும், டுபாக்கூர் தங்கவேலுவுக்கு மட்டும் நினைவிருக்காது காரணம் ஒரு வேளை ஜெயலலிதா அடிக்கடி குறிப்பிடுவது மாதிரி செலக்டிவ் அம்னீஷியாவாகக் கூட இருக்கலாம், )


    அப்புறம் 9 அரங்கில் 100 நாளாம் சரி இருந்துட்டுப் போகட்டும்

    இந்த அரங்கில் தூத்துக்குடியும் ஒன்று
    அங்கு ஏற்கனவே அந்த படம் எப்படி ஓட்டப்பட்டது என்பதை சங்கர் சார் அக்கு வேறு ஆணி வேறு லெவலில் கிழித்து காயப்போட்டிருந்தார்

    அதாவது 50 நாளில் 91 ஆயிரம் வசூலும் 100 நாளில் 105, 000 வசூலும் வந்திருக்கிறது
    அதாவது 50 நாளைக்குப் பிறகு ஒரு ஷோவுக்கு 100 ரூபாய் கூட வசூல் வரவில்லை (சனி, ஞாயிறு ஷோ கூட உண்டுல்ல )

    இதுதான் 100 நாள் ஓடிய லட்சணம் , இதுவும் சாதனை பட்டியல் அப்படித்தானே?

    அதே தூத்துக்குடி சிவாஜி ரசிகர்கள் அடித்த மலரில் இந்த படத்தை நஷ்டம் என்று ஸ்ரீதர் சொன்னதாக கண்டனமும் தெரிவித்திருக்கிறார்கள், இதிலிருந்து ஸ்ரீதர் நஷ்டம் என்று சொன்னதும் ஊர்ஜிதமாகி விட்டது,

    ஒரு அழகான சூத்திரம் ஒன்று கடைபிடிப்பார்கள்

    அதாவது எங்கேயாவது நாள் கூடினால் அங்கே வசூலை தெரிவிக்க மாட்டார்கள், அதே மாதிரி வசூல் கூடினால் நாளை விட்டு விடுவது

    உதாரணம் சென்னை நகர வசூலை ஒப்பிடுவது

    உதாரணம் உரிமைக்குரல் படத்தை ஒப்பிட்டு உள்ளீர்கள் ரொம்ப சரிதான்

    அன்றைய ஆளும்கட்சியின் மிரட்டல்களின் காரணமாக மிகவும் சிறிய அரங்குகளான ஒடியன், நூர்ஜஹான், உமா முதலான அரங்குகளில் உரிமைக் குரல் திரையிடப் பட்டு இவ்வளவு வசூலை எடுத்தது,


    நான் ரொம்பவும் அன்பாகத்தான் கேட்கிறேன் இப்படி ஏதாவது ஒரு கணேசன் படம் இந்த மாதிரியான அரங்குகளில் அந்த நேரத்தில் திரையிடப் பட்டு இதில் பாதியாவது
    வசூல் செய்யுமா? என்ற
    கேள்வியை போண்டா மணி குழுவினரிடம் முன் வைக்கிறேன் பதில் சொல்லுங்கள் பார்ப்போம்,

    இவர்கள் இப்படி மல்லுக் கட்டுவது எப்படி இருக்கிறது என்றால்
    1968ஆம் ஆண்டு அமெரிக்கா வியட்நாம் மீது நடத்திய "பியன்தியன்பு " குன்றுத் தாக்குதல் மற்றும் உலக சரித்திரத்தில் ரத்தத்தால் எழுதப்பட்ட
    "டெட் தாக்குதல் " பற்றியும் படித்திருப்பீர்கள்

    அந்த தாக்குதலில் 25 லட்சம் அப்பாவி வியட்நாம் அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்
    அதே நேரம் பெரிய ஆயுத பலம் இல்லாத வியட்நாம் ராணுவம் மிகப்பெரிய மாவீரன் ஜெனரல் " வோ குயன் கியாப் தலைமையில் சர்வ வல்லமை படைத்த அமெரிக்க ராணுவத்தை எதிர்த்து "சயான் " நகர அமெரிக்க தூதரகம் உட்பட 57 இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி 58000 அமெரிக்க ஆக்கிரமிப்பு
    ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள்,

    இறுதியில் பட்டது போதும் என்று அமெரிக்கா தன் படைகளை வாபஸ் பெற்று முகம் முழுவதும்
    கரி பூசிக் கொண்டது

    இந்த நிகழ்வு அமெரிக்க வரலாற்றின் மிகப்பெரிய அவமானம்
    என்று உலக சரித்திரம் பறை சாற்றுகிறது,

    ஆனால் இன்று வரை அமெரிக்கா அதை தோல்வி என்று ஒப்புக்கொள்ளவே இல்லை

    அதே குணம்தான் இந்த போண்டா மணி குரூப்புக்கும் இறுதி வரை தோல்வியை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்

    அப்போது ஜெனரல் வோ குயன் கியாப் அவர்கள் சொன்னார்கள்

    " வெற்றியை தீர்மானிப்பது ஆயுதங்கள் அல்ல

    " மக்கள் " அவர்கள் தான் வெற்றியை தீர்மானிக்கிறார்கள் "

    அது போல தலைவரின் வெற்றி மக்களால் அவருக்கு சூட்டப்பட்ட கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட மகுடம்

    அதைப் பார்த்து இப்போதும் இப்படிப்பட்ட
    அரை வேக்காடுகள் வறட்டு இருமலுடன் ஊளையிடுவது என்பது ஏற்கக் கூடிய ஒன்றா?

    வாலை ஒட்ட நறுக்கி விடுவோம் ஜாக்கிரதை

    அடுத்தது " அண்ணன் ஒரு கோயில் " படம் சென்னை நகர வசூல் 19 லட்சத்து 95 ஆயிரமாம்

    ஏண்டா போண்டா சாந்தி தியேட்டர் மற்றும் குத்தகை அரங்கங்களின் DAILY COLLECTION REPORT உங்கள் கையில்

    அப்படியிருக்க இப்படி ஒரு வசூல் கணக்கை வெளியிட உனக்கு வெட்கம் இல்லை?

    உனக்கு துணிவிருந்தால் தமிழகம் முழுக்க வசூலை வெளியிடு பார்ப்போம் ( இப்படி கேட்டால் சங்கர் சார் சொல்லுவது மாதிரி பட்டறை வசூலாவது வெளி வரும் என்று நம்புவோம் )

    கடைசியா ஒன்று
    எங்க அய்யன் எப்புடி நடிச்சிருக்கார் தெரியுமா என்று கதை வசனத்துடன் செத்த மண் பட விமர்சனம் வேற

    இந்த புண்ணாக்கை விட்டால் எழுதுவதற்கு ஒரு மண்ணும் கிடையாது காஞ்சனாவை அப்படி இழுத்தார், இப்படி முத்தம் கொடுத்தார்

    இதெல்லாம் ஒரு ரசிப்பு,
    கணேசன் மூக்கைக் கூட விட்டு வைக்க வில்லை

    போங்கடா நீங்களும் உங்க ரசனையும் !



    தலைவரின் பக்தன் ...


    ஜே.ஜேம்ஸ் வாட்.....(J.JamesWatt)...

  10. #1269
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நவீன விஞ்ஞானம் இன்று உலகில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்திய சித்தர்கள், முனிவர்கள் பல அரிய உண்மைகளை அற்புதங்களை மக்களின் அறிவுக்கு விருந்தாக படைத்துள்ளார்கள். அவற்றில் ஒன்றுதான் ஹிட யோகசித்தி கைவரப்பெற்றவர். நீரிலே நடக்கலாம் , நெருப்பிலே படுக்கலாம் உடலை பஞ்சைப் போல் லேசாக்கி கொண்டு காற்றில் பறக்கலாம் என்ற கண்டுபிடிப்பாகும். பதஞ்சலி முனிவர் அருளிய யோக சித்தாந்தங்கள் என்ற நூலில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன இந்நூலை சுவாமி விவேகானந்தர் மொழிபெயர்த்திருக்கிறார்.

    இவற்றை அடிப்படையாக வைத்து நவீன ஜேம்ஸ்பாண்ட் பாணியில் தயாரான படம் தான் தலைவன். புரட்சித் தலைவராக அரசியலில் அடையாளம் காணப்பட்ட எம்ஜிஆர் அதற்கு முன்னரே திரையுலகில் தலைவன் ஆகிவிட்டார்.அதற்கமைய இப்படத்திற்கு தலைவன் என்று பெயரிடப்பட்டது. சில ஆண்டுகள் தயாரிப்பில் இழுபடட இப்படம் 1970 ஆண்டுதான் திரைக்கு வந்தது.
    ஜமீன்தாரை சுட்டுக் கொன்றுவிடும் சங்கிலி அப்பழியை ஜமீன்தாரிணி மீது போட்டு விடுகிறான். ஜமீன்தாரணியோ தலைமறைவாகிவிட்ட அவளின் குழந்தை சித்த மருத்துவரிடம் வளர்ந்து துப்பறியும் நிபுணராக ஆகிறது. சங்கிலியை கண்டுபிடிப்பதுதான் அவனின் கடமையாகிறது, வழக்கம்போல் ஒரு பெண்ணின் காதலும் குறுக்கிடுகிறது. இப்படி அமைக்கப்பட்ட கதையில் சித்த வைத்தியத்தின் மகிமை அட யோக சித்தியின் மகான்மியம் காட்டு பெண்ணின் களங்கம் இல்லாத காதல், துப்புரவு பணியாளர்களின் பெருமை, என்று பல விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் சமாளிக்கத்தான் தலைவன் எம்ஜிஆர் இருக்கிறாரே.

    எம்ஜிஆருக்கு ஜோடியாக இதில் நடித்தவர் வாணிஸ்ரீ , சங்கிலியாக நம்பியார் நடிக்க, துப்புரவு பணியாளராக நாகேஷ் நடித்தார். அவருக்கு ஜோடி மனோரமா இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த கடைசி படம் இதுவாக இருக்கலாம். இவர்களுடன் அசோகன், ஜோதிலட்சுமி, ஜெயபாரதி, ஓ ஏ கே தேவர் ஆகியோரும் நடித்தனர் படத்தின் கதையை அப்துல் முத்தலிப் எழுத, ஆர் கே சண்முகம் வசனங்களை எழுதியிருந்தார். வாலியின் பாடல்களுக்கு இசையமைத்தவர் எஸ் சுப்பையா நாயுடு, நீராழி மண்டபத்தில் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் சுசிலா உடன் இணைந்து பாடினார் . எம்ஜிஆருக்கு இவர் பாடிய இரண்டாவது பாடல் இது வாகும். அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு, ஓடையிலே ஒரு தாமரை பூ , ஆகிய பாடல்களும் இதமாக இருந்தன.
    ��
    பி தோமஸ் படத்தை தயாரித்து இயக்கி இருந்தார், அவருடன் இணைந்து படத்தை இயக்கியவர் கே சிங்கமுத்து, படத்தின் டைட்டிலில் புதுமையாக மனித எலும்புக் கூடுகளில் இருந்து எழுத்துக்கள் வருவதுபோல அமைக்கப்பட்டிருந்தன.
    கலர் படங்களில் எம் ஜி ஆர் தொடர்ந்து நடிக்க தொடங்கியபின் மீதமிருந்த 3 கருப்பு வெள்ளை படங்களில் ஒன்றான தலைவன் வசூல் ரீதியாக சுமாரான வெற்றியையே பெற்றது. ஆனால் "யானை படுத்தாலும் குதிரை மட்டம்" எனும் சொல் வழக்குபடி மற்ற, மாற்று நடிகர்கள் படங்களின் வசூலை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டது என்பதனையும் கூறவும் வேணுமோ?!...sbb...

  11. #1270
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மனம் எம் ஜி ஆருக்கு பொன்...

    நடிகர் நாகேஷ் சிலகாலம் எம் ஜி ஆர் ரிடம் இருந்து விலகி எதிர் அணிகளிடம் நெருக்கமானவராக வாழ்ந்தார் தன் பணம் முழுவதும் சிலவு செய்து தியேட்டர் நாகேஷ் என்ற அரங்கை கட்டுகிறார் முடிவில் பள்ளியின் அருகில் தியேட்டர் இருப்பதால் திறக்க முடியாமல் தவிக்கிறார் எங்கெல்லாமோ எவரை எல்லாம் சந்தித்தும் ஒன்றும் முடியவில்லை கடைசியில் எல்லாவல்ல எம் ஜி ஆர் ஒருவரால் தான் தன்னை காப்பாற்ற முடியும் என்று எம் ஜி ஆர் தோட்டம் வருகிறார் அங்குள்ள மெய்காவலர்கள் இவரை எம் ஜி ஆர் காண அனுமதிக்காமல் விரட்டுகிறார் பல நாள் வந்தார் ஒருநாள் இந்த செய்தி எம் ஜி ஆரை அடைய எம் ஜிஆர் மெய்காவலர்கள் கண்டித்து எவர் என்றாலும் கஷ்டபடும் போது உதவணும் என்று கூறி இனி வந்தால் என்னிடம் அனுப்புங்கள் என கூற நாகேஷ் அடுத்த நாள் வர எம் ஜி ஆரை கண்டு என்னுடைய அத்தனை பணமும் முடங்கி விட்டது நீங்கள் உதவினால் மட்டுமே நான் வாழமுடியும் என தன் விவரங்களை கூறுகிறார் நாகேஷ்
    எம் ஜி ஆர் அவரிடம் சரி நான் பார்த்து கொள்கிறேன் என கூறி அனுப்பினார் பின் அந்தபள்ளி நிர்வாகத்திடம் அதன் நுழைவாயிலை பின் புறமாக மாற்ற வேண்டுகிறார் எம் ஜி ஆர் நிர்வாகமும் சம்மதித்து மாற்றுகிறது இப்போது சட்ட சிக்கல் மாறி தியேட்டர் திறக்கிறார் நாகேஷ்
    உதவி என்று எவர்வந்தாலும் உதவும் தெய்வ குணம் கோண்டவராக வாழ்ந்தவர் எம் ஜி ஆர்
    நன்றி யுடியூப்...

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்............

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •