Page 130 of 210 FirstFirst ... 3080120128129130131132140180 ... LastLast
Results 1,291 to 1,300 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1291
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகமெங்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டும், தமிழக அரசின்*உத்தரவின் பேரில் திரை அரங்குகள் திறக்க அனுமதி கிடைத்ததும், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறுவெளியீட்டில் புதிய சாதனை . வேறு எந்த நடிகரின்*பழைய படங்களும் இந்த அளவில் வெளியாகவில்லை*என்பது குறிப்பிடத்தக்கது .
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    கோவை மாநகரம்*
    -----------------------------
    11/11/20 முதல்* சண்முகா* - தர்மம் தலை காக்கும் -தினசரி 3 காட்சிகள்*

    14/11/20* முதல்* -சண்முகா - காவல்காரன் - தினசரி 3 காட்சிகள்*

    14/11/20* முதல்* டிலைட்* - தேடி வந்த மாப்பிள்ளை - தினசரி 2 காட்சிகள்*


    மதுரை மாநகரம்*
    ------------------------------
    14/11/20* முதல் சென்ட்ரல் சினிமா -தர்மம் தலை காக்கும்-தினசரி 3 காட்சிகள்*

    14/11/20 - ஷா அரங்கு* -* எங்க வீட்டு பிள்ளை* - தினசரி 3 காட்சிகள்*

    11/11/20 -வண்டியூர் -கல்லானை-நினைத்ததை முடிப்பவன்*தினசரி 3 காட்சிகள் - 3 நாட்கள் மட்டும் .


    திருச்சி மாநகரம்*
    ----------------------------
    10/11/20* முதல் பேலஸ்* -உரிமைக்குரல் - தினசரி 3 காட்சிகள்*

    10/11/20* *முதல் திருவானைக்காவல் - வெங்கடேஸ்வரா ,** தஞ்சை - ஜி.வி., கரூர்- அமுதா,* சீர்காழி - ஓ.எஸ்.எம்.
    * * * * * * * * *திருவாரூர் -தைலம்மை* அரங்குகளில்*
    * * * * * * * * *ஆயிரத்தில் ஒருவன் - தினசரி 3 காட்சிகள்*

    14/11/20-* முருகன்* - ரகசிய போலீஸ் 115- தினசரி 3 காட்சிகள்*

    14/11/20* - ஸ்ரீரங்கம் ரங்கராஜா* - நம் நாடு - தினசரி* 3 காட்சிகள்*


    சேலம் மாநகரம்*
    ------------------------------
    11/11/20* -சேலம் புறநகர் - ஜெயராம் (கொண்டலாம்பட்டி _*
    * * * * * * * * *தர்மம் தலை காக்கும் -தினசரி 3 காட்சிகள் - 3 நாட்கள் மட்டும்*

    14/11/20* -அலங்கார - நம் நாடு - தினசரி 3 காட்சிகள்*

    10/11/20 முதல் ஓமலூர் -தங்கம் (சேலம் மாவட்டம் ) -ரகசிய போலீஸ் 115
    * * * * * * * * * * * * * * தினசரி 3 காட்சிகள்*

    சென்னை பெருநகரம்*
    ------------------------------------
    13/11/20 முதல் சரவணா - தேடி வந்த மாப்பிள்ளை -தினசரி 3 காட்சிகள்*

    திருப்பூர் நகரம்*
    ------------------------
    10/11/20,11/11/20,12/11/20 - அனுப்பர்பாளையம் -கணேஷ்*
    நீதிக்கு தலை வணங்கு - தினசரி இரவு 8 மணி காட்சி மட்டும்*


    தூத்துக்குடி மாநகரம்*
    ---------------------------------
    13/11/20* முதல் சத்யா - சிரித்து வாழ வேண்டும் - தினசரி 3 காட்சிகள்*
    * * * * * * * * *கண்டிப்பாக 3 நாட்கள் மட்டும்*
    ----------------------------------------------------------------------------------------------------------------
    கரிக்கலாம்பாளையம் - திவ்யா -12/11/20 முதல் தினசரி 3 காட்சிகள்*
    நினைத்ததை முடிப்பவன் -


    குறிப்பு : விவரங்கள் கிடைத்த வகையில் பதிவு செய்துள்ளேன்.* நமக்கு தெரியாமல் எத்தனையோ படங்கள் , விவரங்கள் கிடைக்காமல் தமிழகம் முழுவதும்* வெளியாகி உள்ளன என்று தெரிய வருகிறது . யாருக்காவது*நண்பர்கள் மூலம் தெரிந்தால் பகிரவும் .**
    Last edited by puratchi nadigar mgr; 14th November 2020 at 03:22 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1292
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது மாரப்பாடி திருவரம்பு தொகுதியில் ஒரு பாலம் கட்ட அரசிடம் முறையாக அனுமதி பெறப்பட்டிருந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து "இந்த இடத்தில் #ஐந்தடியில் #பாலம் கட்டினால் போதுமானது என்று கூற...
    அந்த ஊர் மக்கள் கொதித்துப் போயினர்...

    அப்போது எம்எல்ஏ வாக இருந்த நான்
    (திருவட்டாறு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், கடந்த 24 வருடங்களில் நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடது சாரி சி.பி.எம் கட்சிக்காரருமான ஹேமச்சந்திரன்)

    இந்தப் பிரச்சனையை உடனே முதல்வர் எம்ஜிஆரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதைப் பொறுமையாகக் கேட்ட முதல்வர், '#நானே #நேர்ல #வந்து #பாக்கறேன்' என்று சொல்லிவிட்டு அடுத்த நாளை அந்த ஊருக்குச் சென்று பாலம் கட்டப்போகும் இடத்தை சில நிமிடங்கள் பார்த்தார்...

    "மழைக்காலத்துல ஜனங்க போய்வருவதற்கும், வாகனப் போக்குவரத்துக்கும் பெரிய பாலம் கட்டினால் தான் சரியா இருக்கும். ஐந்தடியில் கட்டினால் மாட்டுவண்டி கூடப் போகமுடியாதே ? அவங்க என்னத்த ஆய்வு செஞ்சாங்க..." அப்படின்னு சொல்லிட்டு அதே இடத்தில் #இருபத்தியோரு #அடி #பாலம் #கட்ட #உத்தரவிட்டு உடனே கட்டவும் ஏற்பாடு செய்தார்.

    ஆளைப் பார்த்து, தொகுதியைப் பார்த்து நலத்திட்டங்கள் புரிந்தவரவல்ல...
    மக்களின் தேவையை மட்டுமே மனதிற்கொண்டு நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் பொன்மனச்செம்மல்............cks...

  4. #1293
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எப்பொழுதும் போல் கொரான காலத்திலும் திரையரங்குகளை வாழ வைக்கும் திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் காவியங்களே சாட்சியாக நின்று நிலைத்திருக்கிறது என்பது நாமெல்லோருக்கும் பெருமையும், பெருமிதமும் அளிக்கின்ற நல்ல விடயமாகும்... தொடர்ந்து பல்வேறு இடங்களில் தலைவர் காவியங்கள் திரையிட பேச்சு வார்த்தைகள் நடைபெறும் தகவல்கள் மகிழ்ச்சியடைய செய்கிறது.........

  5. #1294
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இனிய_தீபாவளி_வாழ்த்துக்கள்..!!!

    #இனிய_நினைவுகளில்

    #சக்ரவர்த்தித்_திருமகள்

    மக்கள் திலகம், அஞ்சலிதேவி,S.வரலட்சுமி, பி.எஸ்.வீரப்பா, என்.எஸ்.கிருஷ்ணன்,மதுரம், தங்கவேலு, முத்துலட்சுமி

    இயக்கம்: ப.நீலகண்டன்
    எழுதியவர்: இளங்கோவன்
    இசை: ஜி.ராமநாதன்
    வெளியான ஆண்டு: 1957 ((ஜனவரி 18))
    ________________________________

    இளவரசி கலாமாலினி ((அஞ்சலி தேவி)) யை மணக்கவேண்டும் என்றால்,இளவரசர்கள் கடுமையான போட்டிகளான பாட்டுப் போட்டி, நடனப் போட்டி, தளபதி பைரவனோடு (வீரப்பா)வாட்போர் ஆகிய அனைத்திலும் வெற்றி காணவேண்டும். இல்லையேல் சிறையிலடைக்கப்படுவர்.

    அத்தகைய போட்டியில் கலந்து கொள்ள வருகிறார் இளவரசர் உதயசூரியன் (மக்கள் திலகம்), இளவரசி கலாமாலினியை போட்டிக்கு முன்பே ஆபத்துகளிலிருந்து காப்பாற்றி அவள் அன்புக்கு பாத்திரமாகிறார் உதயசூரியன்..அத்தனை போட்டிகளிலும் வெல்கிறார். முன்பே தனக்கு ஆண் வேடத்திலும், பின் இளவரசியின் தோழி என்றும் அறிமுகமான பெண்தான் இளவரசி கலாமாலினி என்று தெரியவர , இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்து இளவரசியை ஏற்றுக்கொள்ள தாயாராகிறார் உதயசூரியன்.

    ஆனால், நாட்டின் தளபதியானா பைரவன் இளவரசி கலாமாலினி தனக்குத்தான் எனற கனவு உதயசூரியனால் கலைகிறது; ,இளாவரசி கலாமாலினியின் அந்தரங்க தோழியான துர்கா (எஸ்.வரலட்சுமி)வும் இளவரசன் உதயசூரியனை ஒரு தலையாய் விரும்புகிறாள். இதுவும் நடக்காத ஒன்றாகிவிடவே உதயசூரியன் இருவருக்கும் பொது எதிரியாகிவிடுகிறான். துர்காவின் திட்டப்படி இளவரசி காலிமாலினி,பைரவனால் கடத்தப்பட்டு சிறைவைக்கப்படுகிறாள். துர்கா இளவரசியின் இடத்தில் தன்னை மணந்துகொள்ள உதயசூரியனை கட்டாயப்படுத்துகிறாள். இந்த சூழ்ச்சியை உடைத்து இளவரசன் உதயசூரியன்,சக்கரவர்த்தி திருமகள் கலாமாலினியை மீட்டாரா? என்பது படத்தின் மீதிக்கதை..!!!

    இளவரசன் உதயசூரியனாக, அசத்தியிருக்கிறார் மக்கள் திலகம். ஆரம்ப காலங்களில் வெறும் "வந்து-போன" திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவருக்கு ஐம்பதுகளில் திருப்புமுனை தந்து அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய படங்களில் இத்திரைப்படம் முக்கியமானது.

    இப்படத்தில், இளவரசியை மணக்க வைக்கப்படும் போட்டிகளெல்லாம் மக்கள் திலகத்தின் திறமைகளை வெளிப்படுத்துவதாகவே ஆமைந்திருக்கின்றன. என்.எஸ்.கே யுடன் ஆட்டகாசமான பாட்டு; ஈ.வி.சரோஜா-சகுந்தலாவோடு அசத்தலான நடனம்; வீரப்பாவோடு மட்டுமல்ல, இப்படத்தின் பல இடங்களில் நடக்கும் வாட்போர் ஆகிய அனைத்திலுமே தூள் கிளப்பியுள்ளார் மக்கள் திலகம்.

    குறும்பு+குழந்தைதனத்துடன் அஞ்சலி தேவி; நயவஞ்சகத்தோடு வரலட்சுமி; நகைச்சுவை வீரத்தோடு மதுரம், முத்துலட்சுமி; என படத்தின் பெண் கதாபாத்திரங்கள் படத்தின் கதையோட்டத்தோடு பொருந்துகின்றன.

    அதே போன்று வீரம் கம்பீரத்துடன் மக்கள் திலகம்; கொடூர வில்லனாக வீரப்பா; நகைச்சுவைக்கு என்.எஸ்.கே.-தங்கவேலு என்று அனைத்து பாத்திரங்களும் சிறப்பாக படைக்கப்பட்டுள்ளன.

    இயக்குநர் ப.நீலகண்டன். 1957 ல் வந்த படம் இப்போதும் விறுவிறுப்பாக இருக்கிறது. பின் நாளில் மக்கள் திலகத்தோடு இணைந்து பல வெற்றிப்படங்களை ப.நீலகண்டன் கொடுத்ததற்கு இந்த படத்தின் மாபெரும் வெற்றியும் காரணம்.

    இசை ஜி.ராமநாதன். "சீர்மேவும் குருபாதம்" மக்கள் திலகம்-என்.எஸ்.கே போட்டிப்பாடல்; "வாங்க வாங்க அண்ணாத்தே"; "அத்தானும் நாந்தானே சட்ட பொத்தானும் நாந்தானே..;" "பொறக்கும் போது பொறந்த குணம்"; காதலென்னும் சோலையிலே ராதே ராதே"; ஆகிய பாடல்களில் அசத்தியிருக்கிறார்.

    இப்படம் மக்கள் திலகத்தின் திரையுலக வாழ்வில் ஒரு மைல்கல். ப்ளாக்பஸ்டர்ஹிட்டாக தமிழகமெங்கும் எட்டு இடங்களில் நூறு நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது

    Source :
    https://en.m.wikipedia.org/wiki/Chak...hirumagal...NS...

  6. #1295
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சங்கம் வளர்த்த மதுரை புரட்சி நடிகரின் கோட்டை என்பது தமிழறிந்த நல்லுலகம் புரிந்து கொண்டிருந்தாலும் ஒரு சில புல்லுருவிகள் அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் புலம்பித் திரிவதை நாம் காணலாம். மதுரையில் முதன்முறையாக வெள்ளி விழா கொண்டாடிய படம் திரையுலகின் தலைமகனின்
    'மதுரை வீரன்' என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். (வசூல் 180 நாட்களில் ரூ 367000)

    அதனை முறியடிக்க "கட்ட பொம்மனை" மல்லுக்கட்டி இழுத்து வெள்ளி விழா ஓட்டினாலும் வசூலில் பல்லிளித்து விட்டதை நாம் அறியாவிட்டாலும் கணேசனின் கைபிள்ளைகள் நன்கு அறிவார்கள்.வீ.பா.க.பொம்மன் 181 நாட்களின் பட்டறை வசூல் வெறும் ரூ 287000. தான். அதற்கு அடுத்தாற்போல்
    வெளிவந்த "பாகப்பிரிவினை"
    ஓரளவு சுமாராக போனதால் படத்தை ஜவ்வு மிட்டாய் ரேஞ்சுக்கு இழுத்து 216 நாட்கள் ஓட்டி புளகாங்கிதமடைந்தனர் கைபுள்ளைங்க. பட்டறை வசூல் ரூ 336000.

    அதன்பிறகு வந்த
    "எங்க வீட்டு பிள்ளை" மதுரை சென்ட்ரலில் 176 நாட்கள் ஓடி சாதனை வசூலை பெற்றது.(385000) அதுவரை வெளியான அனைத்து படங்களையும் துவம்சம் செய்தாலும் 176 நாட்களில் தூக்கப்பட்டது. "மதுரைவீரனு"ம் சென்ட்ரலில் வெளியாகி "பாகப்பிரிவினை"யை காட்டிலும் அதிக வசூலை பெற்றாலும் 181 நாட்களில் தூக்கப்பட்டது. (வசூல் 357000)இரண்டுமே சிவாஜி படங்கள் ஓட்டக்கூடிய தியேட்டர்.

    "நாடோடி மன்னன்" மிகக் குறுகிய காலத்தில் 133.நாட்களில் அதிக வசூல் பெற்ற படம்.(ரூ322000) இந்த மூன்று படங்களை காட்டிலும் மிகக் குறைந்த வசூலை பெற்ற "பாகப்பிரிவினை"யை மட்டும் எப்படி 216 நாட்கள் ஓட்டினார்கள் என்றால் அதுதான் கைபுள்ளைங்களின் சாமர்த்தியம்.அதன்பிறகு வெளிவந்த "அடிமைப்பெண்" "மாட்டுக்கார வேலன்" இரண்டுமே 4 லட்சத்தை தாண்டி வசூல் பெற்று வெள்ளி விழா கொண்டாடியது. ஆனாலும் 200 நாட்கள் கூட ஒட்டப்படவில்லை.

    அதன்பின் வெளிவந்த "உலகம் சுற்றும் வாலிபன்" 217 நாட்கள் ஓடி ஒரு புது சாதனையை உருவாக்கியது. சரியாக 31 வாரங்களில் எடுக்கப்பட்டது. ஓட்ட வேண்டும் என்றால் வார நாட்களில் ஏதாவது ஒரு நாளில் ஓட்டி எடுக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. மேலும் படத்தின் கடைசி நாட்கள் வரை ஒரு நாள் வசூல் 500 க்கும் குறையவில்லை.
    படம் மேலும் சில வாரங்கள் ஓடக்கூடிய தகுதிபெற்றும் படத்தை ஓட்டாமல் தூக்கி விட்டார்கள்.

    படத்தை பார்த்த பார்வையாளர்கள் அடிப்படையில் பார்த்தால் "உலகம் சுற்றும் வாலிபனை" சுமார் 7.25 லட்சத்துக்கும் அதிகமான பேர் கண்டுகளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் "பாகப்பிரிவினை"யின் மொத்த பார்வையாளர்கள் 5.5 லட்சத்தை தாண்டவில்லை என்பதை கைபிள்ளைகள் உணர வேண்டும். இதன்பிறகு வந்த "உரிமைக்குரல்" 200 நாட்கள் ஓடி வசூல் ரூ 7 லட்சத்தையும் தாண்டி சாதனை படைத்தது.

    இப்படி ஒரு படம் மட்டும் அவர்களுக்கு கிடைத்திருந்தால் 1 வருடம் ஓட்டி மகிழ்ந்திருப்பார்கள். என்ன செய்வது கைபிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே! கிடைக்க!வில்லையே! என்ன பார்க்கிறாய்! அந்த இழுவை மன்னன் யாரென்றா? அதோ அந்த கண்ணாடியை என் முகத்துக்கு நேரா திருப்பு. சாட்சாத் அந்த இழுவை மன்னன் நானேதான் என்கிறாரா கைபிள்ளை நாயகன்.........ksr.........

  7. #1296
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*11/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    ஒரு வீட்டில் எம்.ஜி.ஆர். பக்தரின் குடும்பத்தில் பல பட்டதாரிகள் உருவாகியுள்ளனர் என்பதற்கு உதாரணமாக கள்ளக்குறிச்சியில் உள்ள ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு.சங்கரன் ,பி.எஸ்.சி.,எம்.ஏ.எம்..எட் .என்பவரை சொல்லலாம் .* அந்த குடும்பத்தின் சார்பில் சகாப்தம் நிகழ்ச்சியை பற்றி பாராட்டி, ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்று வந்துள்ளது .அதில் இந்த நிகழ்ச்சியின் தொடர்*தற்போது 150 நாளை கடந்து வெற்றிநடை போடுகிறது அதற்கு எங்களது நல்வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சி மேலும் 500, 1000 என்று தொடரவேண்டும் என்பது எங்கள் விருப்பம் .* என்று எழுதி இருக்கிறார்கள் . மற்ற பட்டதாரிகள் பற்றி நான் குறிப்பிட்டே ஆகவேண்டும் .* திரு.சங்கர் அவர்களின் மனைவி திருமதி சுமதி சங்கர் .மகள் எஸ்.ப்ரியா* பி.எஸ்.சி.,எம்.ஏ., பி.எட். , மருமகன் திரு.சந்திரமோகன் பி.எஸ்.சி., எம்.ஏ..பி.எட்.* அறிவியல் ஆசிரியர்**,பேத்தி டாக்டர்* மோனிகா, எம்..பி.பி.எஸ்.,* இளைய பேத்தி* ப்ரீத்திகா* எம்.பி.பி.எஸ்., இரண்டாம் வருடம் .கள்ளக்குறிச்சி உலகப்ப செட்டி தெருவில் வசிக்கும் இந்த குடும்பத்தினர் சகாப்தம் நிகழ்ச்சியின் 150 வது* தொடரை பார்த்து மகிழ்ந்ததாகவும், தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்து வருவதாகவும்* நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்கள் இப்படி குடும்பம் குடும்பமாக சகாப்தம் நிகழ்ச்சியை பார்த்து தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருப்பதே அந்த மகோன்னதமான மாமனிதரின் புகழ் மேலும் மெருகேறி வருகிறது என்பதற்கு சாட்சியாக உள்ளது .**

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் சிறு* *வேடங்கள்**, துணை வேடங்களில் நடித்து வந்தாலும், கதாநாயகன் ஆன பிறகு, பன்முக தன்மை வாய்ந்த கலைஞராக+உருவானார் .**அதாவது திரைக்கதை , வசனங்கள், பாடல்கள், இசை அமைப்பு, ஒளிப்பதிவு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு , சண்டை*காட்சிகள்* என்று திரையுலகில் அனைத்து விஷயங்களையும் கற்றறிந்தவர் .* 1958ல் நாடோடி மன்னன் படத்தை*தயாரித்தபோது ,அந்த படத்தில்*உலக மக்களுக்கு*ஜனநாயகத்தை போதிப்பது,* மன்னராட்சிக்கு**எதிரான* தத்துவத்தை*எடுத்துரைப்பது , மக்களாட்சி மூலம்* என்னென்ன நல திட்டங்கள்*செய்ய முடியும்*என்று கதையமைப்பில் புதுமையை*புகுத்தி , அந்த காலத்தில் யாரும்*பேசாத, சொல்லாத கருத்துக்களை*மக்களுக்கு*அறிமுகம் செய்தார் .**இரட்டை வேடத்தில்*நடித்த* எம்.ஜி.ஆர். இரட்டையர்களை ஒன்றிணைக்கும் காட்சி*பற்றி முடிவெடுக்க*ஒரு நிபுணரை கலந்து ஆலோசித்தார் . காமிரா கோணங்கள், சண்டை காட்சிகள் எல்லாம் பிரம்மாண்டமாக*அமைய*வேண்டி*பலவிதமான*அரங்கங்களை * அமைத்து*,இப்படி ஒவ்வொரு துறையிலும்*தன்*கனவுகளை விதைத்தார் .* அந்த கனவுகளை நனவாக்க, வேண்டிய பணம் திரட்டி*முதலீடு செய்தார் .* இந்த படம் வெளியானபோது, திரையுலகில் இருந்த*அத்தனை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இவரை*பார்த்து வணக்கம் சொல்லும்படி தகுதிகளை*வளர்த்து* கொண்ட*சிறந்த*இயக்குனர், தயாரிப்பாளர்*என்று பெயரெடுத்தவர் .* இந்த வெற்றிகளுக்கு காரணம்*அவருக்கு*24 மணி நேரமும் இருந்த*தொழிற்*சிந்தனையே .**


    அடிமைப்பெண் படத்தை தயாரிக்கும்போது பல்வேறு, புதுவிதமான*உடை அமைப்புகளில் கவனம் செலுத்தினார். அதற்காக*பல ஆங்கில*படங்களான,பென்* ஹர்*, போன்ற, சாதனை*படைத்த**படங்களை*பார்த்தார் . தன்னுடைய உதவியாளர்களுடன் படங்களை*பார்த்து ஆலோசனை கேட்டு, காட்சிகளை அமைப்பது பற்றி முடிவெடுப்பார் .* இந்தி நடிகர்*ராஜ்கபூர்*தந்தை பிருத்விராஜ்கபூர் நடித்த*படத்தை*பார்த்துள்ளார். சில*படங்களில் உள்ள முக்கிய*காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள்* ஆகியவற்றை பார்த்து* அதன்படி சில*மாற்றங்கள் செய்து காட்சிகளை அமைக்க* உதவியாளர், இயக்குனருடன் ஆலோசிப்பார் .* அடிமை பெண் படத்தில்*பல காட்சிகளில் கழுத்தில்*காலர்*போல* *பல வண்ணங்களில் செய்த*ஒரு பிளாஸ்டிக் பட்டையை*அணிந்து நடித்தார். இதற்கு*யோசனை,**தூண்டுகோலாக இருந்தது என்னவென்றால் ,குண்டடிபட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது சில*மாதங்கள்*கழுத்தில்*மாவுக்கட்டுடன் இருந்தார். 1967 பொது தேர்தலில் கூட* இந்த மாவுக்கட்டுடன் காட்சி அளித்த*புகைப்படம்தான்*தமிழகம் எங்கும் சுவரொட்டியாக ஒட்டப்பட்டு* அன்றைய தி.மு.க. அமோக வெற்றி பெற்று ,பேரறிஞர் அண்ணா முதல்வராகுவதற்கு* பெரிதும் துணை புரிந்தது .* அடிமைப்பெண்ணில் எம்.ஜி.ஆர். அணிந்திருந்த உடைகள், அன்றைய கால கட்டத்தில், தமிழ் திரையுலகிற்கு புதுமையாக இருந்தது . அது மட்டுமல்ல*அந்த உடைகள் வேறு எந்த நடிகருக்காவது பொருந்துமா என்பது சந்தேகம். ஏனென்றால் எம்.ஜி.ஆர். அவர்கள்* தீவிர*உடற்பயிற்சி மூலம் தன் உடலை*கட்டுக்கோப்பாக வைத்திருந்ததுடன், எந்த உடை அணிந்தாலும், அது அவருக்கு*பொருத்தமாகவும், எடுப்பாகவும் இருந்தது என்பதே . இப்படி ஒவ்வொரு படத்திலும், புதுமையை புகுத்துவது, தன் திறமைகளை வளர்த்து* கொள்வது,* அதிகரித்து கொள்வது, மற்ற நடிகர்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்தி கொள்வது, வித்தியாசமாக காட்டி கொள்வது , மக்களின் ரசனை அறிந்து*,அவர்கள் ரசிக்கும்படி ,காட்சிகள், பாடல்கள், திரைக்கதை அமைத்து வெற்றி படங்களாக*அளித்ததால்தான்* இன்றும்*மக்கள் திலகமாக*புகழப்படுகிறார் .**


    திரு.கா*. லியாகத் அலிகான் பேட்டி* :* ஒருமுறை அமைச்சர் காளிமுத்து என் கையை*பிடித்து நன்றாக குலுக்கிவிட்டு மிகவும் நன்றி லியாகத்*என்று பாராட்டினார் .நான் அவரிடம்*சொன்னேன். இதில்*செய்வதற்கு ஒன்றுமில்லை*தலைவர் எம்.ஜி.ஆர். மந்திரிசபையில் அமைச்சராக உள்ள திரு.காளிமுத்து*அவர்கள் எனக்கு*நன்றி சொல்ல வேண்டியது இல்லை ..இருப்பினும் அவர் நன்றியை குறிப்பிட்டு பேசிய பிறகு, இன்னும் 3 நாட்களில்*பட்ஜெட்*தொடர் ஆரம்பமாக*உள்ளது .* அதற்குள்* சமூக*ஆய்வு நடத்தி 300 சனோலா எண்ணெய் பாட்டில்கள் கொடுத்துவிடும்படி சொன்னார்.*. அதன்படி* 234 எம்.எல்.ஏக்கள், சில*அதிகாரிகள்* என்று**கணக்கிட்டு 300 சனோலா*எண்ணெய் பாட்டில்களை கொண்டு*வந்து வைத்துவிட்டோம் .அதை முறைப்படி வேளாண்துறை அமைச்சர் காளிமுத்துவிடம் தெரிவித்துவிட்டேன்.* அவரும் பட்ஜெட்*தொடரின்போது* அனைவருக்கும் அக்ரோ*வாரியத்தின் மூலம்* சனோலா*எண்ணெய் பாட்டில் வழங்கப்படும் என்று அறிவித்தார் .அடுத்த 1 மணி நேரத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும்* சனோலா*எண்ணெய் பாட்டில் கொடுக்கப்பட்டது .* அப்போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவையில் இல்லை. மேலே தன்னுடைய அலுவலத்தில் இருந்துள்ளார் .* இந்த விஷயம் முதலில் அவருக்கு தெரியப்படுத்தவில்லை*. பின்பு தலைவர் அவர்கள் மாலையில்*காரில்*புறப்படும்போது நானும்*அண்ணன்* காளிமுத்துவும் இணைந்து*அனைவருக்கும் சனோலா*எண்ணெய் பாட்டில்கள் கொடுத்தோம்.*உங்களுக்கான சனோலா* 5 லிட்டர் எண்ணெய் பாட்டிலை வாங்கி கொள்ளுங்கள் என்றேன் . என்ன இது. இந்த வழக்கம் புதிதாக உள்ளது என்றார். அண்ணே, இது வழக்கமாக*கொடுப்பதுதான் என்றதற்கு,* கொடுப்பதற்கு முன்பு என்னிடம் அனுமதி வாங்கினீர்களா , யாரிடம்*அனுமதி பெற்றீர்கள்..இதற்கு எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா*. உடனே கொடுப்பதை நிறுத்து என்றார் . நான் உடனே பதறிவிட்டேன். இருந்தாலும் தைரியத்தை*வரவழைத்து கொண்டு*,அண்ணே* உங்களுக்கு தெரியாமலே*எல்லோருக்கும் கொடுப்பதாக அறிவித்துவிட்டு ,கொடுத்துவிட்டோம். மன்னித்துவிடுங்கள் என்றேன் .***ஒரு நிமிடம் யோசித்தபடி என்னை முறைக்கிறார் . அவர் முறைக்கிறாரா அல்லது எச்சரிக்கை விடுக்கிறாரா என்று ஒரு கனம்*தெரியவில்லை .*நான் 5 லிட்டர்*சனோலா எண்ணெய் பாட்டிலை*நீட்டியபடி நின்று இருந்தேன். பிறகு இது என்ன, யாருக்கு*என்றார்.*அண்ணே ,இது உங்களுக்காகத்தான் என்றேன் . எனக்கெல்லாம் வேண்டாம் .நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்றார். இல்லை அண்ணே* ,நீங்கள் வாங்கினால்தான் நன்றாக இருக்கும் என்றேன் . வாங்காமல் இருந்தால் என் மனம் சங்கபடப்படும் என்று நினைத்து , தன்* உதவியாளரிடம் கொடுக்க*சொல்லி, வண்டியின்*பின்புறம் வைக்க சொன்னார் .* ஆனால் பணம் கொடுக்காமல் நான் வாங்க மாட்டேன்**இதன் விலை என்ன என்று கேட்டார். அண்ணே* இதன் விலை ரூ.90/-தான் என்றேன் .அந்த காலத்தில் சனோலா 5 லி.பாட்டில் விலை அவ்வளவுதான் .* உடனே பாக்கெட்டில் இருந்து ரூ.100/- எடுத்து கொடுத்து , மீதி 10 ரூபாயை*நீயே வைத்து கொள். இதற்கான பில்லை*கட்டிவிட்டு*தகவல் கொடு என்றார் . அரசு பணத்தை கூட*தவறாக உபயோகப்படுத்த கூடாது* என்று சொல்லிஇலவசமாக பெற்று கொள்ள மறுத்து*, தன் சொந்த பணத்தை*கொடுத்து, மீதி பணத்தை என்னையே வைத்து கொள்ள*வைத்து ,அதற்குரிய பில்லை*முறையாக கட்டிவிடு* என்று சொன்ன*முதல்வர் எம்.ஜி.ஆரின்*செயல்பாட்டை நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். ஒரு முதல்வராக எப்படி நடந்து கொள்ளவேண்டும், என்பதற்கு*முன்னோடியாக, மற்றவர்களுக்கு படிப்பினையாக*, மறந்தும் தவறு செய்யாதவராக வாழ்ந்து காட்டினார் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .


    புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிறுசேமிப்பு துறையின்*துணை தலைவராக இருந்தபோது பேரறிஞர் அண்ணா*முதல்வராக இருந்து அவருக்கு*தனியாக*ஒரு* தொலைபேசி எண்* கொடுத்திருந்தார் . அரசு,மற்றும் அலுவலக வேலை குறித்து பேசும்போது*தான் அந்த தொலைபேசியில் பேசுவார்*. தன் சொந்த*வேலைக்கு, விஷயத்திற்கு பேசுவதாக இருந்தால், அலுவலகத்தில் ஒரு பெட்டி இருக்கும். அதில் அன்றைக்கான கட்டணம்*25 பைசாவை*அந்த பெட்டியில் போட்டுவிட்டுத்தான் பேசுவது வழக்கம்.* இப்படி தலைவர் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை முறையை*நெறியோடு* நடத்தி, வாழ பழகிய*அந்த தலைவரிடத்தில்வாழ பழகிய*என்னை போன்ற தொண்டர்கள், தலைவர்கள் எல்லாம்**அதுபோன்ற அவருடைய சிந்தனைகளில்* வளர்ந்த*,வாழ்ந்த,காரணத்தினால்தான் அவருடைய நல்ல பழக்க வழக்கங்கள்,*உடற்பயிற்சி செய்து உடலை*கட்டு கோப்போடு வைத்து கொள்ளுதல்,தோற்ற பொலிவை* பேணி காப்பது*போன்ற விஷயங்களில் என்னை போன்றவர்க;ள்*முழு கவனம் செலுத்தி வந்தோம் . இஸ்லாமியர்கள் சொல்வார்கள், அதாவது*ஒருவன்* *வீட்டில்* உணவருந்துவதாக இருந்தால்***அது பிரியாணியா*அல்லது பழைய சோறா என்பது எவருக்கும் தெரியாது.* ஆனால் உன் முக பொலிவு தோற்ற பொலிவுடன் இருந்தால்*மட்டுமே உன்னை மதிப்பார்கள், அவர்களும் அதை* போல இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள் என்று நபிகள் நாயகம் குறிப்பிட்டுள்ளதாக சொல்வார்கள். அது போலத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்* அந்த கருத்தை*தன்னுடைய வாழ்க்கையில்* கடைபிடித்தார் .* நபிகள் நாயகம் ஏதாவது வாசனை திரவியங்கள் கிடைத்தால் பூசி கொள்வதில் அக்கறை காட்டுவார் . தன் சகாக்கள் எப்போதும் தோற்ற பொலிவுடன் இருக்கவேண்டும் என்பதில்*கவனம் செலுத்தி* வலியுறுத்தி பேசுவார். அதுபோல*தானும் இருக்க வேண்டும் என்று விரும்புவார் . அதுபோல*தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் லுங்கி* கட்டாத முஸ்லிமாக, சிலுவை அணியாத கிறிஸ்துவாக, நெற்றியில் பட்டை போடாத*இந்துவாக , மொட்டை போடாத**புத்தனாக*பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டது போல தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எம்மதமும் சம்மதம் ,என்று சொல்லி எல்லா மதங்களிலும் உள்ள நல்ல பல கருத்துக்களை எல்லாம் உள்வாங்கி கொண்டு*, அதன்படி, தன்னை வழிநடத்தி, நாட்டில் மத கலவரங்கள், ஜாதி கலவரங்கள் என்கிற சண்டைகளே இல்லாத அளவில் ஆட்சி புரிந்த,அற்புத**முதல்வர்தான் நம் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்த வகையில்*. அண்ணாவின் வழியில்**பின்பற்றிய தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் யாருக்கும்*சளைத்தவர் அல்ல ..**


    எதிர்க்கட்சி தலைவராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், மாநகராட்சி தேர்தலில் தி.மு.க.வெற்றி பெற்றதும்*,, பெருந்தலைவர் காமராஜுக்கு காஸ்மோபாலிடன் கிளப்பில்*சிலை*அமைத்து பெருமை சேர்த்தார்*என்பது வரலாறு . அரசியலில் பேரறிஞர் அண்ணாவும், காமராஜரும் எதிரெதிர் துருவங்களாக* இருந்தாலும் , ஒரு தமிழனாக இருந்து ,தமிழகத்திற்கு* நீங்கள் செய்த சேவைக்கு,பாராட்டி* உங்களுக்கு சிலை*வைக்கிறோம்*என்று அவர் சம்மதத்தை* கேட்டதோடு, அந்த சிலையை* முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவை*கொண்டு* திறந்து*வைக்க* ஏற்பாடு செய்யும் அரிய வாய்ப்பை*உருவாக்கி காட்டிய* பேரறிஞர் அண்ணா வழியில்**இரண்டாவது உலக தமிழ் மாநாடு நடைபெறும் நேரத்தில் பேரறிஞர் அண்ணாவின் சிலையைதனது சொந்த செலவில்**திறந்து வைத்தவர்தான் நம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆளும்*கட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் எப்போதும்*,என்றைக்கும் ஒரே நிலையோடு, சமமான எண்ணத்தோடு ,அனைவரையும் சமநிலையில் நடத்தி அனைத்து தலைவர்களுக்கும் ஒரு பாடமாக, படிப்பினையாக வாழ்ந்து காட்டிய தலைவர்தான்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.* இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேசினார் .

    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
    ---------------------------------------------------------------------------------
    1.உறவு சொல்ல ஒருவரின்று வாழ்பவன் - பாசம்*

    2.அச்சம் என்பது மடமையடா*- மன்னாதி மன்னன்*

    3.சின்னவளை , முகம் சிவந்தவளை - புதிய பூமி*

    4.தாயில்லாமல் நானில்லை*- அடிமைப்பெண்*

    5.திரு. கா.லியாகத் அலிகான் பேட்டி*

  8. #1297
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் இதயதெய்வத்தின் சென்டிமென்ட் 2020 இலும் தொடரும் அதிசயம்..

    ஒரு காலத்தில் தமிழகத்தின் எந்த ஊரிலும் ஒரு திரையரங்கம் புதிதாக கட்டப்பட்டால் அங்கு திரை இட படும் முதல் படம் நம்ம வாத்தியார் படங்களே..

    தீபாவளி வந்தால் போதும் தலைவர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.

    1945இல்.....மீரா

    1948 இல்...மோகினி

    1960 இல் ....மன்னாதி மன்னன்

    1961 இல்....தாய் சொல்லை தட்டாதே..

    1962 இல் விக்கிரமாதித்தன்...

    1963 இல்.....பரிசு..

    1964 இல் படகோட்டி

    1965 இல் ....தாழம்பூ

    1966 இல்.....பறக்கும் பாவை.

    1967 இல் ....விவசாயி

    1968 இல் காதல் வாகனம்...

    1969 இல்....நம்நாடு

    1971 இல்....நீரும் நெருப்பும்..

    1975 இல்....பல்லாண்டு வாழ்க.

    இந்த படமே தலைவர் இருக்கும் போது தீபாவளி அன்று கடைசி படம்...

    1990 இல்....அண்ணா நீ என் தெய்வம்....அவரச போலீஸ் ஆகி தலைவர் .........போது வந்த தீபாவளி படம்.

    பல தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் துவங்க பட்ட போதும் அவற்றில் வந்த முதல் படம் தலைவர் படங்களே.

    பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட முதல் படம் தலைவரின் ஆயிரத்தில் ஒருவன்.

    இன்றும் கூட கொரோனோ தடை முடிந்து தமிழகம் எங்கும் இந்த தீபாவளிக்கு திரை இட பட்ட அரங்குகளில் 90 சதவிகிதம் தலைவர் படங்களே....

    வரலாறு தலைமுறைகள் தாண்டி தலைவருக்கு தலைவருடன் மட்டுமே என்றும் தொடரும்.

    நன்றி...வாழ்க தலைவர் புகழ்...

    உங்களில் ஒருவன்...

    இவை இப்படி நடக்க காரணம் ஏன் என்றால் உண்மையில் .....

    அவர் ஒரு சரித்திரம்..........சகாப்தம்... அபூர்வ தோன்றல்...

  9. #1298
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    # இருட்டிலிருந்து அலறும் ஆந்தைகளும், கோட்டான்களும் #



    நேற்று தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்த நம் சொந்தங்களே மீண்டும் ஒரு முறை இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    Corona virus dicease,

    World Health Organization 2019 இல் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய வைரஸ் ஒன்றுக்கு covid 19 என்று பெயர் சூட்டினார்கள்,

    இந்த வைரஸ் தாக்கம் நம் இந்தியாவை மட்டுமல்ல அனைத்து உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் பதம் பார்த்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை உண்ண வழியின்றி பெரும் துயரத்தில் தள்ளி விட்டது,
    குறிப்பாக தினசரி கூலி வாங்கி பிழைத்த ஏழை மக்களை மட்டுமல்ல பெரிய உத்தியோகங்களில் இருந்தவர்களைக் கூட பஞ்சப் பராரிகளாக்கி விட்டது,
    அந்த வகையில் இந்த வருட தீபாவளி மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் அமையவில்லை,

    நம் இந்தியாவில் மட்டும் பத்து கோடி பேர் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்,

    லாக் டவுன் காலத்தில் மட்டும் இந்தியா முழுக்க சுமார் 14.5 டன் பழைய தங்கம் பொது மக்களால் வறுமையின் சுமையால் விற்கப்பட்டிருக்கிறது

    இந்தியாவில் Economical Recession என்னும் பொருளாதார மந்த நிலை வந்து விட்டதாக உலக வங்கி சுட்டிக் காட்டியுள்ளது,

    நான் இதையெல்லாம் சுட்டிக் காட்டுவதற்குக் காரணம் அடுத்து வரப்போகும் 2021 ஆம் ஆண்டாவது அனைத்து மக்களுக்கும் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரக்கூடிய ஆண்டாக அமைய வேண்டும்,

    நம் தமிழகத்தை எடுத்துக் கொண்டோமானால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வறுமை காரணமாக சிவகாசியில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இன்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு " குட்டி ஜப்பான் " என்று சொல்லக்கூடிய அளவுக்கு லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதோடு பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணக்கூடிய அளவுக்கு உயர்ந்து நின்றது,

    ஆனால் சமீப காலமாக சுற்றுப்புற சூழலை காரணம் காட்டி நிறைய மாநிலங்களில் பட்டாசை தடை செய்து விட்டார்கள்,

    வருடம் முழுக்க எந்த கட்டுப்பாடும் இன்றி வாகனங்கள் அள்ளி உமிழும் கரும் புகையைப்பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை மாறாக எத்தனையோ பேரின் வாழ்வாதாரமாக விளங்கும் வருடத்தில் நான்கைந்து நாள்களே வெடிக்கப்படும் இந்த பட்டாசுகளால் சுற்றுச் சூழல் கெடுவதாக சொல்கிறார்கள்,

    லாக் டவுன் காலத்தில் வாகனங்கள் ஓட தடை செய்யப் பட்ட போது ஆக்ராவின் தாஜ்மஹாலை தூரத்தில் இருந்து கூட தெளிவாக பார்க்க முடிந்தது,
    ஆனால் பட்டாசை மட்டும் தடை செய்து இன்று சிவகாசி நகரமே இருளில் மூழ்கி விட்டது,

    அடுத்த வருடமாவது இந்த துயரங்கள் அனைத்தும் நீங்கட்டும்,

    அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் அணுகுண்டு வீசி
    ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் சின்னாபின்னமாக்கப்பட்ட போதும் ஜப்பான் மீண்டும் கடும் உழைப்பின் மூலம் உலக அரங்கில் விஸ்வரூபம் எடுத்தது
    அதுபோல் இந்த கொரோனா உலகத்தையே முடக்கிப் போட்டாலும்
    அடுத்த வருடத்துக்குள் பீ னிக்ஸ் பறவை போலநாம் அனைவரும் கடின உழைப்பின் மூலம் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்க வேண்டும், ...


    சரி இனி விஷயத்துக்கு வருவோம்...

    இந்த பேரிடர் காலத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைத்த உடன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பெரிய நகரங்களிலும் விநியோகஸ்தர்கள் முண்டியடித்துக் கொண்டு தலைவர் படங்களை திரையிடத் தொடங்கி விட்டார்கள்,

    எனக்குத் தெரிந்து மகா நகரங்களில் "தர்மம் தலை காக்கும், ரகசியப்போலீஸ் 115, நம்நாடு, தேடி வந்த மாப்பிள்ளை, எங்க வீட்டுப் பிள்ளை, சிரித்து வாழ வேண்டும், காவல் காரன், ஆயிரத்தில் ஒருவன், நினைத்ததை முடிப்பவன், உரிமைக்குரல், நீதிக்குத் தலை வணங்கு முதலான படங்கள் வெற்றி முரசு கொட்டி பவனி வருகிறது ( கிடைத்த தகவல் படி, இன்னும் பல படங்கள் திரையிட்டிருக்கப்பட்டிருக்கலாம் ) இப்படி நம் தலைவரின் மறு வெளியீட்டு சாதனைகள் மறுபடியும் தொடர்கிறது,

    திரவுபதியின் மானம் காக்க ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா எப்படி துகில் தந்து காத்தாரோ அதே போல விநியோகஸ்தர்களின் மானம் காத்த கிருஷ்ண பகவான் நம் தலைவர் என்று சொன்னால் அது மிகையாகாது,

    இதே போல் கணேசனுக்கு படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தது என்றால் இதற்கு முன் வலை தளங்கள் அனைத்தும் திணறி இருக்கும்,

    பாருங்கையா பாருங்க எங்க அய்யனோட புகழ்
    எப்பூடி என்று வானத்துக்கும் பூமிக்கும் கணேச குஞ்சுகள் குதித்திருக்கும்

    ஆனால் நாம் நிறைகுடம் தளும்பாததைப்போல அமைதியுடன் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்

    ஆனால் இந்த கனடா மன்னாரன் கம்பெனி தங்க வேலு, போண்டா மணி க்ரூப்புகள் கொசுத் தொல்லை தாங்க முடியல ...

    1964 இல் வெளியாகி முதல் முறையோடு மண்ணோடு மண்ணாய்ப் போன " "கொசு ராத்திரி, தேவிகா கட்டளை, கை கொடுக்காத தெய்வம், சிவப்பு விளக்கு, குறட்டை முத்து இன்னும் என்னவோ ஒண்ணு இந்த படங்களுக்கெல்லாம் நினைவு அஞ்சலி செலுத்தி பதிவு வேற போட்டிருக்கிறார்கள்,

    தொடருங்கப்பா உங்க நினைவேந்தல் நிகழ்ச்சிய, காரணம் வெளியிட்ட கையோட அனைத்து தரப்புக்கும் பெரிய போர்வைய முக்காடா கொடுத்த படங்கள் அல்லவா,
    அதனால் மறக்காம ஒவ்வொரு வருடமும் தொடருங்கள்,

    அப்புறம் நூறு நாட்கள் ஓடியும் தயாரிப்பாளர்களின் தலையில் பெரிய குற்றாலம் துண்டு போட்ட படங்களைப் பற்றி பார்ப்போமா?

    பழைய குப்பைகளை விட்டு விடுவோம்
    கொஞ்சம் 1967 லிருந்து பாப்போம்

    " ஊட்டி வரை உறவு "

    அய்யோ பாவம் கோவை செழியன் அந்த படத்தை 100 நாள் ஓட்ட தான் பட்ட கஷ்டத்தை, படத்தினால் அடைந்த நஷ்டத்தை பின்னாளில் மூக்கை சீந்திக் கொண்டே பிலிமாலயா இதழில் பேட்டி கொடுத்ததை கணேசன் குஞ்சுகள் அறிவார்கள் ( கணேசனும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தார் )

    ஒரே ஒரு அரங்கில் ஓட்டப்பட்ட 100 நாள் படம்" ஞான ஒளி " அந்த படத்தை ஜேயார் மூவீஸ்
    தென்காசி சங்கரன் ஆறுமுகம் சகோதரர்களிடம் பேசும் பட வாசகர்கள் வெற்றிப்படமா? என்று கேட்டபோது அதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம் என்று பதில் அளித்தார்கள்,

    "தவப் புதல்வன் " படம் பற்றி திரு. முக்தா சீனிவாசன் அவர்கள் சொன்னது " படத்தில் மாலைக் கண் நோய் பாதித்தது சிவாஜிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சேர்த்துதான் ( 100 நாள் சாதனை பைலட் அரங்கம் என்று நினைக்கிறேன் )

    " 1975 இல் வெளியான
    " அவன்தான் மனிதனைப் பற்றி தினத்தந்தி காலச் சுவடுகள் பகுதியில் திரு. பஞ்சு அருணாச்சலம் அவர்கள் கவலையோடு குறிப்பிட்டது " அந்தப் படம் 100 நாட்கள் ஓடினாலும் எங்களுக்கு நஷ்டத்தையே கொடுத்தது,

    அதே ஆண்டில் வெளி வந்த " மன்னவன் வந்தானடி " திரைப்படம் பற்றி சமீபத்தில் மறைந்த சிவாஜி ரசிகன் என்று பறை சாற்றிக் கொண்ட எழுத்தாளர் சுதாங்கன் அவர்கள் " தின மலர் " பல்சுவை மலரில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதிய " செலூலாயிட்சோழன் " தொடரில் மிகப்பெரிய தோல்விப்படம் என்று சொன்னாரோ இல்லையோ மய்யம் இணைய தளத்தில் கணேசன் குஞ்சுகள் துள்ளிக் குதித்தார்கள்
    கூடவே அர்ச்சனையும் சேர்த்து திட்டித் தீர்த்தார் கள் " இவன் யாருடைய கையாளோ" என்று,

    அதே தொடரில் சுதாங்கன் குறிப்பிட்ட இன்னொரு விஷயம்
    " சில சிவாஜி ரசிகர்கள் என்னிடம் கேட்டார்கள்
    எம்ஜிஆர் வருடத்துக்கு இரண்டோ, அல்லது மூன்று படம்தான் நடிக்கிறார், ஆனால் சிவாஜி வருடத்தில் நிறைய படங்கள் நடிக்கிறார் எனவே சிவாஜி படங்கள்தான் அதிக வசூல் வரவேண்டும் அப்படியானால் சிவாஜியும் வசூல் மன்னனாக ஏன் நாங்கள் நினைக்கக் கூடாது?

    அதற்கு சுதாங்கன் குறிப்பிட்ட பதில் " அவர்களின் வாதம் அவர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் உண்மை நிலவரம் வேறு,
    இந்த விஷயத்தில் எம்ஜிஆர் படங்களை ஒப்பிட முடியாது காரணம் அந்த படங்களின் வியாபாரமும், வசூலும் வேறு லெவல், பக்கத்தில் நெருங்கக் கூட வாய்ப்பில்லை,
    இதையும் ஒரு சிவாஜி ரசிகனாக நான் சொல்லவில்லை, விநியோக வட்டாரங்கள்
    சொல்வது " என்று குறிப்பிட்டிருந்தார்

    இப்போது போண்டா மணி, "தில்லானா மோகனாம்பாள்" வைத்தி கோஷ்டிகள் புதிதாக ஒரு ட்ரெண்டை கடை பிடிக்கிறார்கள்

    வேலை மெனக்கிட்டு "யூ ட்யூப் " பில் உட்கார்ந்து கொண்டு "சித்ராலயா " கோபு சொன்னார் என்று கதை சொல்லுவது,

    படம் எடுத்த ஸ்ரீதருக்கு அல்லவா அதன் வலி தெரியும், சும்மா கூட உட்கார்ந்திருந்த அல்லக்கைகள் பேசினால் அது சபையில் எடுபடுமா வைத்தி? ( எலுமிச்சம் பழமும் வச்சிருந்தா நல்லா தலைக்கு தேச்சு குளி)

    அடுத்ததா இவர்களின் சென்னை நகர வசூல் மொள்ளமாரித்தனம் பற்றி சங்கர் சார் ஏற்கனவே கிழித்து தொங்க விட்டு விட்டார்,
    நாமும் நம் பங்குக்கு கொஞ்சம் தண்ணி தெளிச்சு வைப்போம் சரியா?

    இவர்கள் அடிக்கடி சிலாகிப்பது 1972 படங்களைப் பற்றி,
    ஆனால் பொத்தாம் பொதுவாக அளந்து விட்டு அமைதியாகி விடுவது,

    சரி அதைப் பற்றி பார்ப்போம்

    தர்மம் எங்கே? - சட்டியே உடைஞ்சி போச்சு,

    தவப் புதல்வன் - பைலட்டில் மட்டும் முக்தாவினால் பாக்கெட்டை தடவித் தடவி ஓட்டிய ஓட்டைப்புதல்வன்,

    ஞான ஒளி - சாரதாகிட்ட நெஞ்சில அடிச்சு காட்னதுதான் மிச்சம்,
    சங்கரன் ஆறுமுகம் சகோதரர்கள் நெஞ்சுல அடிச்சு அழுததுதான் கடைசி க்ளைமாக்ஸ்

    ராசா - சென்னையில் மட்டும் தேவி பாரடைஸ் அரங்கில் ஒரு ஐம்பது நாளைக்கு தில்லுமுல்லு பண்ணி ரிக் ஷாக்காரனை விட கூட வசூல் வந்ததா டமாரம் அடிச்சுட்டு அப்புறம் ராசா கூசா ஆயிட்டார் B &C சென்டர் களில் ராசா 4 வாரம் கூட நடக்க முடியாமல் கோமாவில் படுத்துட்டார்,

    பட்டிக் காடா பட்டணமா - மதுரையிலும், சேலம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் 3 வாரத்தில் மூக்கையன் மூக்கு அறுபட்டதுதான் மிச்சம்,

    வசந்த மாளிகை - எல்லா இடங்களிலும் ரிக் ஷாக்காரனை முந்த முடியாமல் வாணிஸ்ரீ சீலை புழியிறத பார்த்ததுதான் மிச்சம்

    இப்படி ஆறு படத்துல இடிந்த மாளிகையும், பட்டணமும், ராசாவும் சேர்ந்து மூன்றும் ஓடி முடிய ரிக் ஷாக்காரன் காலடியில் மிதி பட்டு சேறாகிப் போன கதையை தலைவரின் ரசிகர்கள் சாந்தி தியேட்டர் வளாகத்தின் உள்ளேயே வந்து போஸ்டர் அடித்து ஒட்டிய
    வரலாறு இந்த போண்டா மணிக்கு மறந்திருக்காது என்று நம்புவோம்,

    அது எப்படிப்பா சென்னையில் மட்டும் தலைவர் படம் வசூல் செய்து முடித்தபிறகு ஏதாவது ஒரு படத்தை சாந்தி மற்றும் கிரவுன், புவனேஸ் வரியில் போட்டு தலைவர் வசூலை விட கூட காண்பிப்பது

    உதாரணம் தலைவர் படம் 13 லட்சம் வசூல் செய்த பிறகு கணேசன் படத்தை அதே 13 லட்சத்தை விட கொஞ்சம் கூட காண்பித்து தம்பட்டம் அடிப்பது,
    சரி போடுறத ஒரு 15 லட்சமா கணக்கு காட்ட வேண்டியதுதானே?

    அதே மாதிரி தலைவர் படம் 23 லட்சம் வசூலா?
    நைசா அதை விட 500 ரூபாய் கூட காட்டுவது
    சரி ஒரு 30 லட்சமா காட்ட வேண்டியது தானே?

    ஒரு இரண்டு நாளைக்கு முன்பு சங்கர் சார் காறித் துப்பாத குறையா எல்லா ஆதாரங்களையும் காட்டி தோலை உரித்திருந்தார்.

    தலைவர் படம் வசூல் சாதனை செய்வதற்குப் பிறகு தான் கணக்கு வரும்,
    அதையே தலைவர் படத்துக்கு முன்பு சாதனை செய்யத் தெரியாது,

    த்தூ இதெல்லாம் ஒரு பொழப்பு?

    அப்புறம் A சென்டர் ஒரு சில இடங்களில் சுமாரா ஓடிய" அண்ணன் ஒரு கோயில் வெற்றிப்படமா?

    சென்னை வாந்தி பூந்தி வசூலை மட்டும் எடுத்துப் போட்டு விட்டு மற்ற இடங்களில் வசூலை பார்த்தால் காறி துப்பத் தோன்றும்

    அதையே இன்னொரு அல்லக்கை கடலூரில் 40 நாள் ஓடினால் சென்னையில் 100 நாள் ஓடுவதற்கு சமம் என்று கதை வசனத்துடன் வாந்தி எடுத்துள்ளது

    சரிதான் எத்தனையோ தலைவர் படங்கள் கடலூர் நகரில் 100, 75, 50 என்று ஓடியிருக்கிறது அப்போ அதெல்லாம் சென்னையில் 500 நாள், 1000 நாள் ஓடுவதற்கு சமமா என்ன?

    " தங்கச் சுரங்கம் " படம் தற்போது கிடைத்த தகவல் படி 25 நாளில் 23 லட்சம் வசூலாம்?

    அடப்பாவிங்களா இப்படி பச்சையாய் புளுகுகிறீர்களே கொஞ்சம் கூட உறுத்தவே இல்லையா?

    ராமண்னா தன் மைத்துனர் ராஜன் பேனரில் இயக்கி படம் படு தோல்வி அடைந்தவுடன் அடுத்து விநாயகா பிக்சர்ஸ் பெயரில் சொர்க்கம் படத்தை எடுத்தார்

    ஆனால் விநியோகஸ்தர்கள் ராமண்னாவை தொடர்ந்து தொந்தரவு செய்ததால் " என்னைப் போல் ஒருவன் " படம் முதலில் சென்னையில் வெளியிட முடியாமல் மற்ற மாவட்டங்களில் வெளியிட்ட வரலாற்றை
    கொஞ்சம் போண்டா மணி புரட்டிப் பார்க்கட்டும்

    அந்த படத்தைப்பற்றி சிவாஜியே " என்னைப் பிடித்து கிணற்றில் தள்ளி விட்டார்கள் " என்று பரிதாபமாக புலம்பிய செத்த கழுதை 23 லட்சம் வசூல் பண்ணுச்சாம்,

    கடைசியா ஒரு தும்பா ஒரு அரசியல் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்

    எல்லோரும் சொல்வதுதானே

    "ஆமை புகுந்த வீடும்
    சிவாஜி புகுந்த கட்சியும் உருப்படாது என்று,

    அதை நிரூபிப்பது போலவே முன்பு காங்கிரஸ் பிறகு ஜானகி அம்மையார்
    இவருடன் சேராமல் ஜானகி அம்மையார் தனித்து நின்றிருந்தால்
    நிச்சயம் வெற்றி அடைந்திருப்பார்,
    அவரது போறாத காலம்
    இந்த அதிர்ஷ்டக் கட்டையுடன் சேர்ந்து அவரும் காணாமல் போனார்,

    அடுத்து காமராஜருக்கு துரோகம் செய்யவே இல்லையாம் கணேசன்,
    சரிங்க ஆபீசர் இந்திரா அம்மையார் அவசர நிலை கொண்டு வந்த போது காமராஜரை சிறையில் அடைக்கத் துடித்தார் என்பது வரலாறு,

    அந்த நிகழ்வுகளினால் தான் காமராசர் மனம் உடைந்து மறைந்தார்,
    அப்படி அவர் மறைந்தது ம் கணேசன் ஏன் இந்திரா அம்மையார் காலில் போய் விழுந்தார் என்று விளக்க முடியுமா ஆபீசர்? ( ஒரு ராஜ்ய சபா எம். பி பதவியும், சொத்து பத்துக்கெல்லாம் நல்லா பாதுகாப்பும் கிடைச்சுது சரிதானே ஆபீசர்? )

    1953 இல் திருவாரூர் தி. மு. க கூட்டத்தில் அண்ணா, தலைவர், கருணாநிதி எல்லாம் இருந்த போதும் தி. மு க வினர் சிவாஜியை பேச ச் சொல்லி கூச்சல் போட்டார்களாம், இவர் பேசியவுடன் கூட்டம் கலைந்து விட்டதாம் ( தும்பா உனக்கு நல்லா காமெடி வருதடே பரவாயில்ல அப்படியே maintain பண்ணுங்கப்பு )

    இந்த நாஞ்சில் தும்பு தான் தமிழக அரசியல் பத்திரிகையில் மனோகரா படம் ஒரே வாரத்தில் 84 லட்சம் வசூல் செய்தது என்று சொன்ன பராக்கிரம பூபதி ( என்னே காலக் கொடுமை? )

    அடுத்து குமுதம் பத்திரிக்கை 1983 இல் ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டதாம் அதில் தலைவர் கணேசனை காட்டிலும் பின் தங்கி தான் இருந்தாராம்,

    சரிங்கப்பு அதே குமுதம்
    1980 இல் வெளியிட்ட கருத்து கணிப்பில் இனி எக்காலத்திலும் எம்ஜிஆர் ஆட்சிக்கே வர முடியாது என்று கணிப்பு சொன்னது ஆனால் என்ன நடந்தது?

    கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் ஒரு 2000 பேரிடம் கருத்து கேட்டால் அதுதான் சரி அப்படித்தானே?

    இப்போது சமீபத்தில் பீகார் மாநிலத்தில் தேர்தல் கருத்து கணிப்பு நடந்தது

    அவர்கள் சொன்னது என்ன? நடந்தது என்ன ஆபீசர்?
    அமெரிக்கா வில் டிரம்ப் ஜெயிப்பார் என்று நம் நாட்டு எண் கணித நிபுணர்கள் முதல் அமெரிக்க ஊடகங்கள் வரை அறுதியிட்டு உறுதியிட்டு கூறினர்

    முடிவு ஜோ பிடன் பதவி ஏற்கப் போகிறார்
    அதனால தும்பு இந்த மாதிரி பாப்பா கதையை வெளில சொல்லாதே மூஞ்சி யில் புளுக் என்று யாரும் துப்பிறாம! இன்னொரு மில்லியன் டாலர் கேள்வி???!!! இவ்வளவு தப்பாக முட்டு கொடுத்து, சப்பை கட்டு கட்டி, என்னத்த சாதிக்க போரானுங்க?!



    தலைவரின் பக்தன்


    ஜே.ஜேம்ஸ் வாட்!.........(J.JamesWatt)...

  10. #1299
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1968 லயே மக்கள் திலகம் "வசூல் சக்ரவர்த்தி" என்று விளம்பரம் செய்யப்பட்டு வந்த "ரகசிய போலீஸ் 115" விளம்பரம். அதை நிரூபிக்கிறா மாதிரி 10 நாளில் சென்னயில மட்டும் 2 லட்சத்து 37 ஆயிர ம் வசூல். வெறும் 10 நாளில். 1969 ல் வெளியான மாற்று முகாம் படம் ஒன்று விளம்பரம் பாத்தேன்.சென்னையில் 4 வாரம் (28 நாள் )ஓடியே 3 லட்ச்த்து 65 ஆயரம்தான் வசூல். ரகசிய போலீஸ் 4 வாரத்தில சென்னையில்் 4 லச்சத்தை தாண்டிவிட்டார். தமிழ்நாடு பூராம் 4 வாரத்தில் கணக்கு போட்டு பாருங்கள். விளம்பரத்தில் உள்ளபடி மக்கள் திலகம் வசூல் சக்கரவர்த்தி என்று புரியாதவங்களுக்கும் புரியும்..........rr...

  11. #1300
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    செல்வராஜ் பெர்னாண்டஸ் என்று ஒருத்தர். அவர் எம்ஜிஆர மரியாதயாகத்தான் எழுதியிருக்கார். அதனால் நாம்பளும் அவரை அவர்,,, இவர் என்று மரியாதயா அழைப்போம். கணேசன்தான் வசூல் சக்கரவர்த்தியாம். செல்வராஜ் பெர்ணான்டாச் சொல்றாரு. எம்ஜிஆரை தேடி தயாரிப்பாளர்கள் போகாதது ஏன்? குறைச்சலான படங்களில் நடிச்சது ஏன்? என்று கேட்கின்றார்.

    எம்ஜிஆரை நோக்கி தயாரிப்பாளர்கள் வரவில்லை என்று யார் சொன்னது? முதல்வராகும்போது பல படங்கள் அப்படியே நின்றது. அதில் அண்ணா என் தெய்வம் (2 பாட்டு மொத்தம் 15 நிமிடம்தான் வருவார்) அவசர போலீஸாவும், நல்லதை நாடு கேட்கும் (பாட்டு கிடயாது. மொத்தம் 5 நிமிடம் மட்டும் மக்கள் திலகம் வருவார்) இந்த 2 படமும் அவர் மறைஞ்ச பிறகு வந்தது. இன்னொன்று கணேசன் மாதிரி பணத்துக்காக கண்ட படங்களில் எல்லாம் எம்ஜிஆர் நடிக்க மாட்டார் . பெண்களை விபச்சாரிங்க சொல்ற மாதிரி இருக்குன்னு ராணி லலிதாங்கி கதையை மாத்தச் சொன்னார். முடியாதுன்னாங்க. படத்திலேருந்து விலகிவிட்டார். அதில் அப்புறம் கணேசன் நடிச்சார். காத்தவராயன் அப்படித்தான் கணேசன் நடிச்சார்.

    ஜெமினிகணேசன், ஜெய்சங்கர் கூட 300 படம் நடிச்சாங்க. அதனால் அவங்க வசூல் சக்கரவர்த்தியா? தென்னக வசூல் சக்கரவர்த்தி யாரு? என்ற கேள்விக்கு பேசும்படம் 1971ல் எம்ஜிஆர் என்று பதில் சொன்னார்கள். (பேசும் படம், கலை, பொம்மை, பிலிமாலயா உட்பட எந்த பத்திரிகைகளும் எம்.ஜி.ஆர்., அவர்களை பாராட்டி போட்டாலும், இல்லை எதிர்த்து கருத்து இட்டாலும்
    அவரை எதுவும் கட்டு படுத்தாது என்பது வேறு விடயம்) இது திமுகவினர் சொன்னதா? மார்க்கெட், வசூலுக்கு தகுந்தா மாதரிதான் சம்பளம் தருவாங்க. எம்ஜிஆர விட கணேசன் கம்மியாத்தான் சம்பளம் வாங்கினார். வசூல் சக்ரவர்த்தின்னா ஏன் எம்ஜிஆர விட கம்மியா கணேசனுக்கு சம்பளம் குடுத்தார்கள்? அன்பேவா படத்துக்கு 3 லட்சம் 25 ஆயிரம் எம்ஜிஆருக்கு சம்பளம் குடுத்த ஏவிஎம் உயர்ந்த மனிதனுக்கு கணேசனுக்கு ஒண்ணறை லட்சம் மேல சம்பளம் கிடயாது சொன்னது ஏன்? உங்கள் மார்க்கெட் அவ்வளவுதான் ராஜா. புரிஞ்சுக்கங்க. எம்ஜிஆர் வசூல் சக்கரவர்த்தி என்ற 100% உண்மை மாறவே மாறாது..........rrn...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •