Page 143 of 210 FirstFirst ... 4393133141142143144145153193 ... LastLast
Results 1,421 to 1,430 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1421
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அனைத்து தலைவர் நெஞ்சங்களுக்கும் தலை தாழ்ந்த வணக்கங்கள்...

    அமரர் அண்ணா அவர்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பின் 1968 இல் சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்த நேரத்தில்..

    காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்த நாயகி அவர்கள் கேள்வி நேரத்தில் அண்ணா அவர்களை நோக்கி முதல்வர் அவர்களே நீங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியதில் எவ்வளவு பணம் செலவு ஆனது அது உங்கள் சொந்த பணமா அல்லது அரசு பணமா அல்லது உங்கள் கட்சி செலவா என்று கேட்க.

    அண்ணா அவர்கள் சபையை சுற்றி பார்த்து உங்கள் இந்த கேள்விக்கு நாளைக்கு நான் பதில் சொல்கிறேன் என்ற உடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஒரு மாதிரியாக சிரித்தனர்.

    மறுநாள் சட்டப்பேரவை கூடியதும் அதே கேள்வி நேரத்தில் நேற்று எனது கேள்விக்கு என்ன பதில் என்று அவர் மீண்டும் கேட்க.

    அமரர் அண்ணா அவர்கள் எனது சிகிச்சை முழு செலவையும் நானும் கொடுக்கவில்லை.
    தமிழக அரசும் கொடுக்கவில்லை.
    எங்கள் கட்சியும் அந்த செலவை ஏற்கவில்லை.

    செலவான தொகை ரூபாய் ஒரு லட்சத்து இருப்பது ஐயாயிரம் ரூபாய் மொத்தமும் இங்கே இதோ சட்டமன்ற உறுப்பினர் ஆக அமர்ந்து இருக்கிற என் அன்பு தம்பி எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் அவரின் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை எனக்காக என் சிகிச்சைக்காக செலவை அவரே ஏற்று கொண்டு பணம் செலுத்திய ஆதாரம் இதோ....

    நேற்று அவர் அவைக்கு வரவில்லை அவர் முன்னால் இந்த விளக்கத்தை சொல்ல வேண்டும் என்று எண்ணியே நேற்று நான் பதில் சொல்லவில்லை என்ற உடன் சட்டமன்ற அவையில் எழுந்த கரவொலி கட்டிடம் தாண்டி கேட்டது.

    காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் முகத்தில் சோகம் சூழ்ந்தது...எங்கும் வந்து நிற்கும் எம்ஜிஆர் ஒருவரே என்பது அவர்களுக்கு அன்று புரிந்த காலம் அது.

    வாழ்க்கையின் அனைத்து விநாடிகளையும் செதுக்கி செதுக்கி தன்னை பக்குவ படுத்தி கொண்டவர் நம் இதயதெய்வம் எம்ஜிஆர் அவர்கள்.

    பட்டினியில் கிடந்த போதும் சரி பணம் மழை போல அவர் வாழ்வில் கொட்டிய போதும் தன்னிலை தவறாத ஒரே தலைவன்

    அவர் புகழ் என்றும் காப்போம்....
    உங்களின் எண்ணம் கருத்து ஆக உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி.

    வாழ்க தலைவர் புகழ்.
    எண்ணமும் ஆக்கமும் ஊக்கமும் அன்பு தலைவர் நெஞ்சம் எம்ஜிஆர் நேசன்..நன்றி.

    தொடருவோம் என்றும்...........

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1422
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஸ்ரீ எம்ஜிஆர் வாழ்க

    ஊழல் செய்யாத உத்தமரே வாழ்க

    லஞ்சம் வாங்கி சிறைச்சாலைக்கு செல்லாதவரே வாழ்க

    லஞ்சம் வாங்கி விசாரணை கமிஷனில் மாட்டாதவரே. வாழ்க

    உங்களுடைய அன்பிற்கு ஈடு உண்டோ
    உன்னுடைய அழகுக்கு ஈடு உண்டோ
    உன்னுடைய ஆட்டத்திற்கு ஈடு உண்டோ

    உன்னுடைய ஆட்சிக்கு ஈடு உண்டோ

    உன்னுடைய பாட்டிற்கு ஈடு உண்டோ

    உன்னுடைய பண்புக்கு ஈடு உண்டா

    உன்னுடைய ரசிகர் படைக்கு ஈடு உண்டோ

    நீ ஏழை மக்களுக்கு பணங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தாயேஉனக்குயாராவது ஈடு உண்டோ..........am.........

  4. #1423
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ��சரித்திரநாயகன்��

    எல்லோருக்கும் இவரைப்போல் ஆகவேண்டும் என்று ஆசைதான் என்ன செய்வது...
    ஆரம்பகாலவாழ்கையில்
    இவர் பட்ட கஷ்டங்களை
    பட யாரும்ஆசைபடுவதில்லை.. ..

    உயிரை பணயம்வைத்து திரைப்படங்களில் நடித்தாரே அதற்க்கு ஆசைபடுவதில்லை...

    மக்கள் முதல் தொண்டர்கள்வரை
    அவர்களின் தேவையரிந்து கேட்பதற்க்கு முன்னால் கொடுக்கும் .
    வள்ளாக வாழ ஆசைபடுவதில்லை...

    காலம் பலரின் ஞாபகங்களை
    மறக்கவைத்துக்கொண்டுதான்
    இருக்கிறது...
    இன்று வரை எத்தனை நடிகர்கள்... தலைவர்களை எத்தனை பேர் இன்னும் மக்கள்மனதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்...

    இன்றும் பலர் புரட்சித்தலைவர் .. வாழ்ந்துகொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டு தான்
    இருக்கிறார்கள்...

    என்று அவர் ரசிகர்கள்
    தொண்டர்கள்
    மனதில்(அமரராக)

    ������..........vr, am...

  5. #1424
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிப்பவன் எல்லாம் எம் ஜி ஆரா

    நடிப்பது என் தொழில்
    கொடுப்பது என் குணம்
    எம் ஜி ஆர்

    நடிப்பில் கொள்கை
    நடப்பில் லட்சியம் அது
    எம் ஜி ஆர்

    மக்கள் துயர் கண்ட போது
    எல்லாம் முதலில் வந்தது எம் ஜி ஆர் உதவி அது எம் ஜி ஆர்

    போர் வந்த போதும்
    தனஸ்கோடி புயல் வந்த போதும்
    இலங்கை புயல் வந்த போதும்
    அதிக பணம் கொடுத்த தனி மனிதன் எம் ஜி ஆர் அது எம் ஜி ஆர்

    குண்டு பட்டபோதும் உடல் தளர்ந்தபோதும் மாறாத மக்கள் சேவை அது எம் ஜி ஆர்

    எந்த பயம் இல்லாமல் இலங்கை போரின் போது தமிழரை காக்க உதவிய எம் ஜி ஆர் அது எம் ஜி ஆர்

    தன் உடமை எல்லாம் தமிழ் மக்களுக்கு என தந்த பொன்மனம் கொண்ட எம் ஜி ஆர் அது எம் ஜி ஆர்

    இதில் ஒரு தகுயியும் இன்றி நடிகன் என்று நாடாள நினைக்கும் நடிகர்களை மக்கள் ஏற்க்க மாட்டார்கள்

    தன் வெற்றி தோல்வியை மக்கள் வெற்றி தோல்வி என மக்களை ஏமாற்றும் வித்தை

    தமிழ் மக்களை சினிமா பைத்தியம் என ஏமாற்ற நினைக்கும் நடிகர்கள் ஏமாறபோவது உறுதி
    தமிழனுக்கு உண்மை ஏது போலி ஏது என உணரும் சக்தி கொண்டவன்

    வாழ்க எம் ஜி ஆர் புகழ்...am...

  6. #1425
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய* வண*க்க*ம் ந*ண்ப*ர்க*ளே!...

    புர*ட்சித்த*லைவ*ர் ஒன்றும் நேற்று பெய்த* ம*ழையில் இன்று முளைத்த* காளான் போல் அர*சிய*லுக்கு வ*ந்த* 4 மாத*த்திலேயே முத*ல்வ*ராக* வேண்டும் என்று சொல்லிவிட்டு வ*ர*வில்லை..அவ*ர*து அர*சிய*ல் பொதுவாழ்வு திரையுல*க* வாழ்வை விட* நீள*மான*து..1930 முத*ல் 1950வ*ரை காங்கிர*ஸ் க*ட்சி உறுப்பின*ராக* இருந்தார்..க*த*ர் ஆடையே உடுத்தி வ*ந்தார். பின்ன*ர் காங்கிர*ஸில் உள்ள ஏற்ற* தாழ்வுக*ள், ஜாதி பாகுபாடுக*ள் ஆகிய*வ*ற்றால் வெறுத்து விலகி எந்த* அர*சிய*லிலும் இல்லாம*ல் சில கால*ம் இருந்தார்..பின் அண்ணாவின் உரைக*ளாலும், சிந்த*னைக*ளாலும் க*வ*ர*ப்ப*ட்டு திமுக*வில் தானாக*வே இணைந்தார். திமுக* த*மிழ*க*த்தின் சின்ன*மான உத*ய*சூரிய*னையும், அறிஞ*ர் அண்ணாவின் கொள்கைக*ளையும் ப*ட்டி தொட்டியெங்கும் பிர*ப*ல*ப்ப*டுத்தினார். 1967ல் திமுக*வை ஆட்சிக்க*ட்டிலில் அம*ர்த்த* முழுமுத*ற்கார*ண*மே எம்.ஜி.ஆர்தான். அதை அண்ணாவே சொல்லியுமிருக்கிறார்.

    பின்ன*ர் 1969ல் அண்ணாவின் திடீர் ம*றைவிற்குப்பின் நிலைகுலைந்து போயிருந்த* திமுக*வை தூக்கி நிறுத்தி த*மிழ*க* முத*ல்வ*ராக* க*ருணாநிதியை நிய*மிக்க* ஆத*ர*வு அளித்து அக்க*ருத்தை பிற* ச*ட்ட*ம*ன்ற* உறுப்பின*ர்க*ளுக்கும் எடுத்துச்சொல்லி நிறைவேற்றினார்.

    1971ல் ச*ட்ட* ம*ன்ற* தேர்த*ல் ந*டைபெறும்போது காமராஜ*ர்தான் வெல்வார் என்று ப*த்திரிக்கைக*ள் ப*ல*வும் எழுதின*. திமுக*வின் மீதும் சில அதிருப்திக*ள் மக்களிட*ம் இருந்த*து..அப்போது எம்.ஜி.ஆர் த*மிழ*க*மெங்கும் சூராவ*ளி சுற்றுப்ப*ய*ண*ம் செய்து 180 தொகுதிக*ளில் பிர*ம்மாண்ட* வெற்றியை பெற*வைத்தார். 1967ல் ப*ர*ங்கிம*லையில் நின்ற*போதும் துப்பாக்கி சூட்டினால் ஆஸ்ப*த்திரியில் ப*டுத்துக்கொண்டே ஜெயித்தார். ஆனால், 1971ல் மீண்டும் ப*ர*ங்கிம*லையில் நின்ற*போதும் த*ன*து தொகுதி பிர*ச்சார*த்திற்காக* க*டைசி நாளில் சில ம*ணி நேர*ம் ம*ட்டும் ஒதுக்கி பிற*நாட்க*ள் முழுதும் ம*ற்ற* வேட்பாள*ர்க*ளுக்காக பிர*ச்சார*ம் செய்த*வ*ர் எம்.ஜி.ஆர்..

    அதும*ட்டும*ல்ல, பெரும்புய*ல், வெள்ள*ம், தீவிப*த்து போன்ற* பேரிட*ர் கால*ங்க*ளில் பொருளுத*வி செய்வ*து ம*ட்டுமின்றி க*ள*த்திலே இற*ங்கி துணைநின்ற*வ*ர்..அதே போல் இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான் ஆகிய* அண்டைநாடுக*ளுட*ன் போர் ஏற்ப*ட்ட* போதெல்லாம் யுத்த* நிதி வ*ழ*ங்கிய*வ*ர்.

    த*ன்னை 1971ல் மீண்டும் முத*ல்வ*ராக்கிய* எம்ஜிஆரையே ஆடாத* ஆட்ட*மெல்லாம் ஆடி 1972 அக்டோப*ரில் க*ட்சியை விட்டு நீக்கினார் க*ருணாநிதி. அத*ற்கு மிக* முக்கிய* கார*ண*ம் எம்ஜிஆருக்கு ம*க்க*ளிட*ம் ஏற்ப*ட்டுவ*ரும் அப*ரித* செல்வாக்கு, 1976 மே வ*ரை த*ன்னை அசைக்க* முடியாது என்ற* த*ப்புக்க*ண*க்கு, குடும்ப* அர*சிய*லுக்கு தொந்த*ர*வு வ*ர*க்கூடாது, எம்ஜிஆரின் வ*ய*து அப்போது 55 (1972ல்) 1976 தேர்த*லின்போது 60 வ*ய*து ஆகிவிடும்..திரையுல*கிலிருந்தும் வில*கிவிடுவார்..த*ன்னை அடுத்த* தேர்த*லிலும் அசைக்க* முடியாது என்ற* த*வ*றான* எண்ண*மே ஆகும்.

    தான் சார்ந்திருந்த* க*ட்சிக்கே ஓடிஓடி உழைத்த* எம்.ஜி.ஆர் தான் 1972 அக்டோப*ரில் துவ*க்கிய* அண்ணா திமுக*விற்காக* போராடாம*ல் இருப்பாரா? உண்மையிலேயே அவ*ர் உயிருக்கு ஆப*த்து ஏற்ப*டுத்தும் சூழ்நிலைக*ள் இருந்த*போதும் த*ன் வீட்டில் முட*ங்கிக் கொள்ளவில்லை. ம*க்க*ள் வெள்ள*த்தில் மித*ந்து பிர*ச்சார*ம் செய்து த*ன*து புதிய* க*ட்சியையும், இர*ட்டை இலை சின்ன*த்தையும் பிர*ப*ல*ப்ப*டுத்தினார்.

    1972ல் க*ட்சி ஆர*ம்பித்த*போதும் 1977 மே மாத*ம்தான் ஆட்சியை பிடித்தார்..ஏனெனில் அப்போது தான் பொதுத்தேர்த*ல் வ*ந்த*து. அதேநேர*ம் 1973ல் ந*ட*ந்த* திண்டுக்க*ல் பாராளும*ன்ற* தேர்த*ல், பின்ன*ர் ந*டைபெற்ற* கோவை பாராளுமன்ற* தொகுதி தேர்த*ல், கோவை மேற்கு ச*ட்ட*ம*ன்ற* இடைத்தேர்த*ல், புதுச்சேரியில் ச*ட்ட*ம*ன்ற* பொதுத்தேர்த*லில் முத*ன்முத*லில் ஆட்சியை பிடித்த*து, செய்யாறு இடைத்தேர்த*ல் என* அனைத்திலும் வெற்றி..அப்போது க*ருணாநிதி த*விர* காமராஜ*ர், இந்திராகாந்தி என்ற* பெரும்த*லைவ*ர்க*ளின் க*ட்சிக*ளையும் 2வ*து, 3வ*து இட*ங்க*ளுக்கு த*ள்ளினார்.

    பின்ன*ர் 1977 தேர்த*லில் ஒரே நேர*த்தில் த*மிழ*க* ச*ட்ட*ம*ன்ற*த்தையும், புதுச்சேரியில் 2வ*து முறையாக*வும் ஆட்சியை பிடித்தார்.

    அவ*ர*து ம*க்க*ள் ந*லத்திட்ட*ங்க*ள், மனித*நேய*ம், க*ருணையுள்ள*ம் கார*ண*மாக* தொட*ர்ந்து 1980, 1984 ச*ட்ட*ம*ன்ற* தேர்த*ல்க*ளிலும் பெருவெற்றி பெற்றார்..1984ல் உட*ல்ந*லம் பாதித்து சில மாத*ம் ம*ட்டும் மக்களிட*மிருந்து வில*கியிருந்தாலும் 1985 பிப்ர*வ*ரி முத*ல் தான் ம*றைந்த* 1987 டிச*.24வ*ரை மக்களை ச*ந்திப்ப*திலும், பொது நிக*ழ்ச்சிக*ளிலும் த*ன் உட*ல்நிலை, நோய்த்தொற்று போன்ற* நொண்டிச்சாக்குக*ளை கூறிக்கொண்டு முட*ங்கியிருக்காம*ல் பொதுவாழ்வில் த*ன்னை ஈடுப*டுத்திக் கொண்டார்..அவ*ர் ம*ட்டும் த*ன் உட*ல்ந*ல பாதிப்பிற்குப்பின் பொதுவெளிக்கு வ*ராம*லும், உட*ல் ந*ல*த்தில் ம*ட்டும் க*வ*ன*ம் செலுத்தியிருந்தால் மேலும் 15 ஆண்டுக*ள் வ*ரை வாழ்ந்திருப்பார்..

    ம*க்க*ள் ந*ல*ம்..ம*க்க*ள் ந*ல*ம் என்று சொல்ப*வ*ர்க*ள் த*ம் ந*லத்தையும், த*ம் ம*க்க*ள் ந*லத்தை ம*ட்டும் பாராம*ல் வெற்று அர*சிய*ல் அறிக்கை, பேட்டிக*ள் விடாம*ல் இற*ங்கி க*ளப்ப*ணி ஆற்ற* வேண்டும்..ப*த*வி கிடைத்தால்தான் அர*சிய*ல் ப*ணி இல்லையேல் த*ன் ப*ணி (சினிமா, வீடு, சொத்து) என்று இருப்ப*வ*ரெல்லாம் த*லைவ*ன*ல்ல..இதை த*மிழ*க* ம*க்க*ள் வெகு சீக்கிர*மே உண*ர*வைப்பார்க*ள்..

    கூரைக*ளெல்லாம் கூடி வ*ள*ர்ந்தால் கோபுர*ம் ஆவ*தில்லை.
    குருவிக*ளெல்லாம் உய*ர*ப் ப*ற*ந்தால் ப*ருந்துக*ள் ஆவ*தில்லை...........vr...

  7. #1426
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நான்நாகேஷ்

    ��என்ற புத்தகத்தில் எம்ஜிஆர் பற்றிய சுவராஸ்மான தகவல்

    ��மக்கள் திலகம் பட்டம் அவரை தவீர வேறு யாருக்கும் பொருந்தாது அவர் என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் அவருடன் நடிக்கும் படங்களில் கால தாமதமாக நான் சென்றது உண்டு எனது இக்கட்டமான நிலையை புரிந்து கொண்டு அவர் வரும் வரை வேறு காட்சிகளை எடுங்கள் அவர் வந்ததும் மீதி எடுத்து முடிக்கலாம் என்று எல்லோரையும் அரவனைத்து செல்லும் தாயுள்ளம் கொண்டவர்

    ��உண்மையிலே அவரை வெறுப்பவரும் ஒரு விசயத்தில் ஏற்று கொள்வார் அது அவரின் ஈகை குணம் யாராலும் மறுக்க முடியாத குணம் நானே பல முறை அவர் உதவியால் வாழ்ந்தவன்

    ��ஒரு முறை சேலத்தில் நாடகம் ஒன்றில் நடிக்க என்னை நடிகர் பாலாஜி காரில் அழைத்து சென்றார். நல்ல வெயில் காலம் உளுந்தூர் பேட்டையை அடுத்து ஒரு சிறு கிராமம் வழியாக செல்லும் போது நல்ல தண்ணி தாகம் எடுத்தது உடனே ஒரு குடிசை முன் காரை நிறுத்தினார்கள் கார் நின்றதை அறிந்த ஒரு வயதான பாட்டி என்னப்பா ஆச்சு என்றதும் குடிக்க தண்ணீ வேணும் என்றோம் அது தான் கிராமம் உடனே பெரிய சொம்பு நிறைய தண்ணீர் வந்தது தாகம் அடங்கியது ஜில்லுனு மண்பானை தண்ணீர் சொர்க்கமாக இருந்தது கண் மங்கள் என நினைக்கிறேன் பாட்டிக்கு நீங்க எல்லாம் யாருப்பா என்றதும் நாங்க சினிமாங்காரவுங்க என்றோம் புறப்படும் முன் பாலாஜி தன் பர்ஸ்சில் இருந்து 100 ரூபாய் எடுத்து கொடுத்தார் உடனே அந்த பாட்டி ஏப்பா நான் தான் எம்ஜிஆர் னூ சொல்லக்கூடாதா? வாயா...ராசா.. நல்லா இருக்குய்யா ஒரு வா.. வந்து சாப்பிட்டு போ.. என்றதும் எல்லோரும் திகைத்து மெளனம் ஆனோம் என் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இருந்தோம் சரிங்க.. பாட்டி.. நாங்க வர்றோம் என்று எல்லோரும் கை எடுத்து கும்பிட்டே விடை பெற்றோம் அந்த நிகழ்வு வாழ்க்கையில் யாரும் மறக்க முடியாது

    ��அந்த மூதாட்டியை பொருத்த வரை முன் பின் தெரியாதவர்களுக்கு ஓடோடி சென்று உதவி செய்வது பொன்மனசெம்மலை தவீர வேறு யாரும் இல்லை என்பது தான் உண்மை

    ��இந்த நிகழ்வை நான் எம்ஜிஆரிடம் கூறிய போது அவர் உடனே பாலாஜியை வரவழைத்து 100 ரூபாயை கொடுத்தார் அதை அவர் வாங்க மறுத்தார். அதற்கு அவர் சொன்ன வார்த்தை நீங்கள் பணம் கொடுத்தாலும் அது என் பணம் எனது தர்ம கணக்கில் சேர்ந்து விட்டது அதனால் இதை நீங்க வாங்கியே ஆகனும் என்று வம்பாக பணத்தை திணித்தார்
    நான் ஒன்றும் சொல்லாமல் அவர் முகத்தையே பார்த்து கொண்டே இருந்தேன் சினிமாக்காரர்கள் கொடுக்கும் ஒவ்வொரு தர்மமும் எம்ஜிஆர் அவர்களையே சாரும்...

    ��மீண்டும் இணைவோம்��

    #வாழ்கவள்ளல்.........vr...

  8. #1427
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் பார்த்து பார்த்து செதுக்கிய படம்தான் "நீரும் நெருப்பும்".
    ஒவ்வொரு காட்சியும் அருமையாக இருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற ஜெமினியின் "அபூர்வ சகோதரர்கள்" படத்தின் மறுபதிப்பு தான் "நீரும் நெருப்பும்" என்ற பெயரில் உருவானது. இரட்டை வேடங்களில் தலைவர் பிரமாதமாக நடித்திருப்பார். ஆனாலும் ஜனரஞ்சகமான படத்தில் ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் அதிகமான உணர்ச்சியின் வெளிப்பாடு சிறுவர்கள் கேட்கும் சந்தேகத்தை விளக்க முடியாமல் பெரியவர்கள் சிறுவர்களுடன் படம் பார்ப்பதை தவிர்த்தனர். அதனால் மாபெரும் வெற்றியை இழக்க நேரிட்டது நமக்கு பெரிய வருத்தம்தான்.

    படம் வரும் போது "ரிக்ஷாக்காரனை" காட்டிலும்அதிக வரவேற்பு இருந்தது. படம் பார்த்த சிறுவர்களுக்கு கரிகாலனைத்தான் அனைவருக்கும் பிடித்தது. அந்த கரிகாலன் இறந்ததும் படம் வேண்டாம் வீட்டுக்கு போவோம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். அவர் ஏன் செத்தாரு என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. குழந்தைகளால் அதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. படத்தின் பெரிய வெற்றியை அது பாதித்தது என்றே சொல்ல வேண்டும். கதையை எப்படி மாற்றினாலும் எம்ஜிஆர் சாகாமல் இருந்தால் படத்தின் வெற்றி உறுதியாகி விடும்.

    "நீரும் நெருப்பும்" பெயரைக் கேட்டவுடனே கைபுள்ளைங்க கலக்கம் அடைந்தார்கள். ஏற்கனவே "ரிக்ஷாக்காரனின்" வெற்றியில் நொந்து நூலாகிக் கொண்டிருந்தவர்கள் மேலும் "நீரும் நெருப்பும்" வந்து என்ன செய்யப் போகுதோ என்ற கலக்கம். ரிசர்வேசனுக்கு குதிரை போலீஸ் வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தியதை கண்டு மனம் வெதும்பி பிதற்றலானார்கள். அந்த பதட்டத்தில்தான் "நீரும் நெருப்பும்" மீது சொல்ல முடியாத கோபம்.

    அந்தப் படத்தின் பெயரை கேட்டாலே காய்வார்கள். அதனால் அப்போதே அதனோடு வந்த
    "பாபு" வில்"ரிக்ஷாக்காரனை" பிச்சைக்காரன் போல இழிவாக காட்டியிருப்பார்கள். ஏதோ ஒரு "ரிக்ஷாக்காரனை" பார்த்து காப்பியடித்து மிகையாக நடித்து நம்மை பெருத்த இம்சைக்கு உள்ளாக்கிவிடுவார். ஏதோ சிவகுமார் வந்ததால் படம் பெருந்தோல்வியில் இருந்து பிழைத்தது. படத்தை 100 நாட்கள் ஓட்ட முடிவு செய்து சாந்தி கிரவுன் புவனேஸ்வரி யில் திரையிட்டு 100 நாட்கள் வடக்கயிறு உதவியுடன் ஓட்டினார்கள். வழக்கம் போல் அந்த மூன்று திரையரங்கில் ஓட்டி விட்டு "பாபு" வெற்றி என்று குதிக்க ஆரம்பித்து விட்டனர்.

    பரீட்சைக்கு ஒருவன் 3 மணி நேரம் எடுத்துக் கொண்டு தடவி தடவி எழுதி விட்டு நான் பாஸ் என்பதை போல இருக்கிறது. குறுகிய காலத்தில் "நீரும் நெருப்பும்" அதிக வசூலை பெற்றதை போற்றாமல் குடும்ப தியேட்டரில் திரையிட்டு மனம் குதூகலிப்பதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறதய்யா!. சென்னையில் தேவிபாரடைஸில்
    நாட்கள் 67 416715.90
    கிருஷ்ணா. " 67. 265278.45
    மேகலா. " 53. 187112.65
    ---------------------------
    மொத்தம் 187. 869107.00

    ஆனால் "பாபு" 300 நாட்கள் கஷ்டப்பட்டு ஓட்டி இழுவை வசூல் 10 லட்சத்தை தொட்டதாக சொல்லுகிறார்கள். மேலும் மதுரையில் "நீரும் நெருப்பும்" சென்ட்ரலில் 84 நாட்களில் ரூ. 239171.39 .
    வசூலாக பெற்றது. ஆனால் "பாபு", அவர்கள் பட்டறை வசூல்படி 89 நாட்களில் ஸ்ரீதேவியில் ரூ. 189491.55 வசூலாக பெற்று தோற்று தெற்கு சீமையிலே தலைவர் புகழை நிலை நாட்டியது. "பாபு" படத்தின் முழு வசூலை வெளியிட்டால் "நீரும் நெருப்பும்" "பாபு" வின் உண்மையான வெற்றி தெரிந்து விடும் என்பதால் வசூலை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள்.

    "எங்கிருந்தோ வந்தாள்" 100 நாட்களில் பெற்ற வசூல் ரூ 1021000 தான். அதனால் "பாபு" நிச்சயம் 10 லட்சம் வந்திருக்காது.
    சாந்தி 100 நாட்கள் வசூல் "நீரும் நெருப்பும்" 67 நாட்கள் வசூலை முறியடித்திருக்க வாய்ப்பே இல்லை. மொத்தத்தில் 8 லட்சத்தை தொட்டால் அதுவே மிகப் பெரும் ஆச்சர்யமே. முதல் நாள் தீபாவளி அன்றே தூத்துக்குடியில் அனாதை போல் கிடந்த "பாபு" அன்று 6 மணி காட்சி கூட நிதானமாகத்தான் நிறைந்தது. அதனால் பாபுவும் ஒரு. 100 நாள் இழுவை படம்தான் என்பது உறுதியாகிறது.

    "பாபு"வுக்கு வசூல் பட்டறையில் இன்னமும் பட்டி டிங்கரிங் முடியாமல் வசூல் தயாராகவில்லை போலும். "நீரும் நெருப்பும்" 44 அரங்கில் திரையிட்டு 22 தியேட்டரில்
    50 நாட்கள் ஓடியது. ஓடி முடிய கிட்டத்தட்ட 50 லட்சத்தை வசூலாக பெற்று சாதனை படைத்தது. ஆனால் கணேசனின் "பாபு" மொத்தம் வெளியானதே 28
    அரங்கில்தான் அதில் 50 நாட்கள் 8 திரையரங்கில் ஓடி மொத்த வசூலாக 22 லட்சத்தை கூட பெற முடியாத பரிதாப "பாபு" எங்கேயப்பா "நீரும் நெருப்பை" வென்றது.

    50 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட "தர்மம் எங்கே"?
    படத்தின் வசூல் தெரியுமா? மொத்தம் 4 தியேட்டர்களில் வெளியாகி (ஓடியன் மகாராணி மேகலா ராம்) 50
    நாட்கள் கூட ஓட முடியாமல் மொத்தம் ரூ 378112 வசூலாக பெற்று சினிமா உலகத்துக்கே அவமானமாகி கேவலமாக தோற்றது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

    "நீரும் நெருப்பும்" தேவி பாரடைஸில் பெற்ற வசூலை கூட மொத்த வசூலாக பெறமுடியாத படத்தின் கதாநாயகனுக்கு ஸ்டார் வேல்யூவே கிடையாதா? நீங்கெல்லாம் எங்களை கைநீட்டி குற்றம் சொல்லலாமா? அதற்கான அருகதை இருக்கிறதா? உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப்பார்த்துக் சொல்லுங்கள்......ksr...

  9. #1428
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சாகர் விரசராமனுக்கு ஒரு சந்தேகம்.
    ------------------------------------------------------------
    எங்களது சந்தேகம் என்பது
    1956 ல் வெளியான மதுரை வீரன் மதுரையில் 180 நாளில் ரூபாய் 3, 67, 000/- வசூலித்தது என்றால்
    அதே மதுரையில் சென்ட்ரல் திரையரங்கில் 1965 ல் 9ஆண்டுகள் கழித்து வெளியான எங்க வீட்டு பிள்ளை 175 நாளில் ஏன் ரூபாய் 3, 85, 000 மட்டுமே வசூலித்தது,
    9 வருஷமா டிக்கெட் விலை உயராமல் இருந்ததா என்ன?
    "எங்க வீட்டு பிள்ளை" குறைந்த படசம் 5 லடசம் வசூலித்து இருக்க வேண்டுமே?

    அல்லது

    "மதுரை வீரன்" வசூல் என்பது உண்மையா?
    "எங்க விட்டு பிள்ளை" வசூல் என்பது உண்மையா?

    அதுக்கு விளக்கம் கண்டு புடி,

    Thanks Sekar .P

    நம்ம ஊர் தலைமை கைபிள்ளை சாகர் விரசராமனுக்கு ஒரு சந்தேகம்.
    "மதுரை வீரன்" வசூல் "எங்க வீட்டு பிள்ளை"யை நெருங்கி வந்திருக்கிறதே அதெப்படி? என்பதுதான். இந்த சந்தேகத்தை தீர்த்து வைப்பவருக்கு கைபிள்ளைகள் சார்பில் வாத்தியார் பட்டம் வழங்கப்படுமாம்..

    அறிவிப்பை பார்த்தவுடன் வழக்கம் போல் டொங்கர் சாரி சங்கர் கிளம்பி விட்டார். பரமார்த்த குரு சீடர்களுக்கு புரிய வைக்க மிகவும் கடினம் என்பதால் அவர்கள் பட பட்டறை வசூலையே எடுத்துக் கொண்டால் எளிதில் புரியும் என்பதற்காக பட்டறை வசூலையும் எடுத்துக் கொண்டு இங்கே விளக்கம் அளிக்கிறார்.

    கைபிள்ளைகளே, 1959 ல் வெளியான "பாகப்பிரிவினை"யின் மதுரை வசூல் ரூ 336000 என்று குறிப்பிட்டீர்கள். "திருவிளையாடல்" படத்தின் மதுரை வசூலும் சுமார் 354000 என்று குறிப்பிட்டீர்கள். இப்போது அதே கேள்வியை நானும் கேட்கிறேன்.
    1959 ல் வெளியான "பாகப்பிரிவினை" 3லட்சத்து சொச்சம் என்கிற போது
    "திருவிளையாடலு"ம் 3லட்சத்து சொச்சம்தானா? ஏன் 5 லட்சத்தை தாண்டியிருக்க வேண்டுமே? ஏன் தாண்டவில்லை சாகர் விரசு.

    அதெப்படி? 1959 முதல் 6ஆண்டுகளாக தியேட்டர் கட்டணம் உயரவே இல்லையா? அதெப்படி? அதுவும் உங்கள் கூற்றுப்படி தினசரி 2 காட்சிகள் ஓடிய "பாகப்பிரிவினை" ரூ 336000 தினசரி 3 சனிஞாயிறு 4 ஓடிய "திருவிளையாடல்" ரூ 3,54,000 அதெப்படி? எது உண்மையான வசூல்? "பாகப்பிரிவினையா"? அல்லது "திருவிளையாடலா"? தமிழ்நாட்டில் மதுரையை தவிர வேறு எங்கும் ஓடாத "பாகப்பிரிவினை" மதுரையில் மட்டும் 200 நாட்களை தாண்டியது. அதெப்படி? அப்படியானால் எது உண்மையான வசூல்? சொல்லுங்க சாகர் விரசு?

    உனக்கு வந்தா இரத்தம்? மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நம்ம வடிவேல் ரேஞ்சுக்கு இறங்கி கைபிள்ளைங்க காமெடியில் கலக்குறாப்பல. இந்த வசனத்தை பார்த்தா "பட்டிக்காடா பட்டணமா" படத்தின் மாடர்ன் மூக்கையா ஞாபகம் வருதா? ஜாதி பெயரை குறிப்பிடக்கூடாது அல்லவா? அதுதான் சேர்வையை விட்டு விட்டேன் சாகர் விரசு.

    அதேபோல் மதுரையில் 3 லட்சத்தை தொடவே தகிடுதத்தம் போடும் வி.சி அய்யனின் படங்களில் "பட்டிக்காடா பட்டணமா" படம் மட்டும் 5,61000 வசூலாக பெற்றது எப்படி?. யோசியுங்கள். பரமார்த்த குருவின் சீடர்களுக்கு ஏதாவது புரிந்ததா?
    புரியவில்லை?. 'தேரோடும் எங்கள் சீரான மதுரையின்' நேட்டிவிட்டியுடன் வந்த படங்களில் மக்கள் விரும்பிய படங்கள் மற்ற ஊர்களை காட்டிலும் அபரிமிதமான வசூலை பெற்றிருக்கிறது என்ற தெளிவு கிடைத்ததா? இல்லையா?

    அதைப்போல தான் "மதுரை வீரன்" வசூலும். தமிழகத்தில் 33 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடுகிறதென்றால் மதுரையில் அதன் வசூல் என்னவாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள் கைபிள்ளைகளே. அந்த பரிசை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நீங்களே அரைகுறை. உங்கள் கையால் விருது வாங்கினால் பார்ப்பவர்கள் என்னையும் உங்களோடு சேர்த்து விடுவார்கள். நன்றி கைபிள்ளைகளே.

    மீண்டும் உங்கள் அடுத்ததொரு முட்டாள் பதிவில் சந்திப்போம். அதுவரை வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் டொங்கர் இல்லையில்லை K.சங்கர்..........

  10. #1429
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர். நடித்த 'திருடாதே' படம் பிக்பாக்கெட் அடிக்கும் திருடன் ஒருவனைப் பற்றிய கதை. படத்துக்கு பெயர் சூட்டுவதற்கு முன்பாக, படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று படக்குழுவினர் ஆலோசித்தனர்.

    அப்போது, எம்.ஜி.ஆர்., ''லட்சக் கணக்கில் செலவு செய்து படம் எடுக்கிறோம். போஸ்டர் ஒட்டுகிறோம். பத் திரிகையில் விளம்பரம் கொடுக்கிறோம். அதன் மூலம் மக்களுக்கு நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். நல்ல கருத்துக்களை சொல்லும் பெயராக இருந்தால், நாம் செலவு செய்ததற்கு பலன் உண்டு. அப்படிப்பட்ட பெயரை படத்துக்கு வைக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

    படக் குழுவினர் பல பெயர்களை எழுதி வந்தனர். படத்துக்கு கவியரசு கண்ணதாசனோடு சேர்ந்து வசனம் எழுதியவர் மா.லட்சுமணன். அவர் இரண்டு பெயர்களை எழுதினார். அவற்றில் 'திருடாதே' என்ற பெயரை எம்.ஜி.ஆர். தேர்வு செய்தார். மற்றொரு பெயர் 'நல்லதுக்கு காலமில்லை'. எம்.ஜி.ஆரிடம் மா.லட்சு மணன், ''படத்தின் கதைப் படி பார்த்தால் 'திரு டாதே'யை விட, 'நல்ல துக்கு காலமில்லை'தான் பொருத்தமான பெயர்'' என்றார்.

    லட்சுமணனைப் பார்த்து எம்.ஜி.ஆர். சிரித்தபடி, ''உண்மைதான்'' என்று கூறி சற்று இடைவெளிவிட்டார். 'பிறகு ஏன் 'திருடாதே' பெயரை தேர்ந்தெடுத்தார்? ' என்று எல்லோரின் மனங்களிலும் கேள்வி ஓடிக் கொண்டிருக்கும்போதே அதற்கு விளக்கம் அளித்தார்.

    ''படங்களுக்கு தலைப்பு வைக்கும் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். 'நல்லதுக்கு காலமில்லை' என்று தலைப்பு வைத்தால், எம்.ஜி.ஆரே 'நல்லதுக்கு காலமில்லை' என்று சொல்லி விட்டார், அப்புறம் நாம் எதுக்கு நல்லது செய்ய வேண்டும்? என மக்கள் நினைத்து விடுவார்கள். 'திருடாதே' என்பது அப்படி இல்லை. தப்பு பண்ணாதே என்று சொல் வதுபோல் இருக்கிறது. அதில் நல்ல 'மெசேஜ்' இருக்கிறது. எப்போதுமே மக் களிடம் நல்ல 'மெசேஜ்' சேர வேண் டும்'' என்றார். எம்.ஜி.ஆரின் ஆழ மான, தீர்க்கமான சிந்தனையைக் கண்டு படக் குழுவினர் வியந்தனர்.

    - தி இந்து.........

  11. #1430
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர் (7)

    எம்.ஜி.ஆர். செய்த சாதனைகள் எல்லாம் தெரியுமா?

    அரசியல்

    எம்.ஜி.ஆர். என்றால் திரைப்பட நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல நிர்வாகியும்கூட. அவர் காலத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள ஆசையா..?

    1972– ம் ஆண்டு அக்டோபர் 8 – ம் தேதியன்று. பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;

    ”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றி கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. லஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.

    கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது சொத்துக்கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்பபணியாய் இருக்கும்.

    இதையும் படிங்க

    அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!” என்றுஎம்.ஜி.ஆர். முழக்கமிட்டார். லஞ்ச, ஊழல் இல்லாத ஆட்சி அமையவேண்டும் என்றஎம்.ஜி.ஆரின் எண்ணம்தான் அதிமுகவாக உருவெடுத்தது.

    அண்ணாசாலையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில்மக்களுக்கு முன் பதவியேற்பு வைபவத்தை நிகழ்த்திபுதுமை செய்தார்.தன் ஆட்சி லஞ்ச லாவண்மயற்ற ஊழலற்ற ஆட்சியாக மக்களாட்சி புரியும் என மக்களுக்கு உறுதியளித்தார். அதனைகடைசிவரை காப்பாற்றவும் செய்தார்.

    1977 முதல் 1987 வரைஎம்.ஜி.ஆர். ஆட்சி – மூன்று முறை வெற்றி. அறம் சார்ந்த அரசியல்அரங்கேறியது. குடும்ப அரசியல்கிடையாது.
    கட்சிக்காரர்கள்,நிர்வாகிகள், அமைச்சர்கள் கண்காணிக்கப்பட்டதால் அச்சத்துடன் இருந்தனர். பதவிபறிக்கப்படலாம்,என்பதால் தவறு செய்யப் பயந்தனர்.
    அதிகாரிகளுக்கு முழுஅதிகாரம் இருந்தது. எவரேனும் ஆளுமை செலுத்த முயன்றால் – கார்டனுக்கு சொல்லிவிடுவோம்– என்றார்கள்.
    ஒரு தவறு செய்தால் அதைதெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்று சொல்லியதைப் போலவே தவறுசெய்தவர்களை தண்டித்தார்., பதவிகளில் இருந்து தூக்கினார்.
    எம்.ஜி.ஆர்.ஆட்சிக்குப் பிறகு லஞ்சத்தில் பேரம் பேசுவது, பங்கு போடுவது, எல்லை பிரிப்பதுபோன்ற முறைகேடுகள் நிகழ்ந்தது கண்கூடு.
    மக்கள் நலன்:
    நாடோடி மன்னன்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய மக்களாட்சியை, தனது ஆட்சியில்கொடுத்தார். தேச நலனைவிட மக்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.‘நானே போடப்போறேன் சட்டம், நன்மை பயக்கும் திட்டம்’ என்று சொன்னதைப் போலவே,ஒவ்வொரு திட்டத்திலும் மக்கள் நலன் முன்னிறுத்தப்பட்டது. பசிப்பிணியைஉணர்ந்தவர் எம்.ஜி.ஆர். அதனால் குழந்தைகள் யாரும் பசியால் வாடக்கூடாது என்றுசத்துணவுத் திட்டம் கொண்டுவந்தார். இந்த திட்டம்தான் தமிழகத்தின் கல்வித்தகுதியைவானளவுக்கு உயர்த்தியுள்ளது.
    குறிப்பு:ஆனால்! மனித நேயம் கொண்ட தமிழகமக்கள் தலைவர்எம் ஜி ஆர் போல் பிறகுயாருமே இன்றுவரை தமிழக மக்களுக்கு அமையவில்லை என்பதுதான் நிஜமான உண்மை-தொடரும்..........vr...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •