Page 144 of 210 FirstFirst ... 4494134142143144145146154194 ... LastLast
Results 1,431 to 1,440 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1431
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஆனந்த விகடன் ஜீலை 10, 1977

    தமிழக முதல்வரின் சிறப்புச் செய்தி ....

    என்னை வாழவைக்கும் தெய்வங்களே !

    அமரர் அண்ணாவின் சீரிய கொள்கைகளான ஊழலற்ற , லஞ்சக் கொடுமைகளற்ற, " எல்லோரும் ஒர் குலம் " , " ஒன்றே குலம் ஒருவனே தேவன் " எல்லோரும் ஒர் நிலை, எல்லோரும் ஓர் விலை " என்ற அறவழியில் நல்லாட்சி அமைய உங்கள் ஆசியுடன் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பினை ஏற்கிறேன்.

    உயர்திரு ஓமந்தூரார், மூதறிஞர் இராஜாஜி, பேரறிஞர் அண்ணா போன்ற மேதைகள் இருந்த ஆட்சி செய்த இடத்தில் உங்களை மட்டும் நம்பியே அமருகிறேன்.

    அமரர் அண்ணாவின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் என்னை இதுவரை ஆதரித்துத் துணை நின்றது போல் இந்த மாபெரும் பொறுப்பினை நிறைவேற்றும் போதும் எனக்குத் துணை நிற்க வேண்டுமாய் தமிழகத்து மக்களாகிய உங்களை உங்களைக் கைகூப்பி வேண்டுகிறேன்.

    அன்பன்,
    எம்.ஜி.ராமச்சந்திரன்
    30.06.1977

    எண்ணற்ற ஏழை எளியோர்களின் நல்வாழ்விற்க்கு உறுதுணையாய் நின்று அணையா தீபவொளி தரும் அருட்ஜோதி புரட்சித்தலைவர்.

    புரட்சித் தலைவரின் நாமம் வாழ்க ..........vrh...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1432
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #ரசிகரின் #வாழ்வை #மீட்ட #சுந்தரபாண்டியன்

    புரட்சித்தலைவர் - கலையரசி எம்ஜிஆர் லதா நடித்த "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" திரைக்காவியம் வெளிவந்த சமயம்...

    மதுரையில் வெளியான அந்தத் திரைப்படத்தைப் பார்க்க வெளியூர் இரசிகர் ஒருவர் வந்திருந்தார். தியேட்டரில் கூட்டம் நிரம்பியிருந்தது. அந்த ரசிகரோ பாவம் ஏழை. சிரமப்பட்டு வேறு வெளியூரிலிருந்து வந்திருந்தார்.

    மனதில் இப்படி நினைத்து வருந்திக்கொண்டிருந்தார்...

    'நான் ரொம்ப கஷ்டப்படறேன்...உன் முகத்தைப் பார்த்தாவது சந்தோஷம் அடையலாம்னா...டிக்கட் கூட கிடைக்கல. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. எனக்கு நீ தான் நல்ல வழி காட்டணும்...எனக் கண்ணீர் விட்டார்.

    பிறகு, ஊருக்கு பஸ் ஏறுமுன் வேண்டாவெறுப்பாக ஒரு கடையில் லாட்டரி சீட்டு வாங்கினார். அந்த லாட்டரிச்சீட்டுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் பரிசு விழுந்திருந்தது...அந்த ஏழை ரசிகரின் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமா ???

    இந்த செய்தி அன்றைய தினசரி நாளிதழ்களில், "#மதுரையை #மீட்ட #சுந்தரபாண்டியன் #பெற்றுத்தந்த #ஒரு #லட்சம்" என்று வந்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

    தன்னை உண்மையாக உருகி வேண்டுபவர்களுக்கு இதயதெய்வம் வாத்தியார் கைவிடுவதேயில்லை............bsm...

  4. #1433
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #இனிய_நினைவுகளில்

    #ராமன்_தேடிய_சீதை



    மக்கள் திலகம், அம்மா ஜெயலலிதா,மனோரமா, நாகேஷ்,வி.கே.ராமசாமி, நம்பியார், அசோகன்,வி.எஸ்.ராகவன், ஓ.ஏ.கே.தேவர், ரமாபிரபா.ஜி.சகுந்தலா..!!!

    இயக்கம்: ப.நீலகண்டன்
    உரையாடல் : சொர்னம்
    இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
    வெளியான ஆண்டு :1972 ((ஏப்ரல் 13)
    _________________________________

    பெரும் செல்வந்தரும் தொழிலதிபருமான ராமன் ((மக்கள் திலகம்)) தன் சிற்றப்பா சிவசங்கரால் (வி.கே.ஆர்) வளர்க்கப்படுபவர். தன் எஸ்டேட்டுக்கு செல்லும் போது ஒரு வயதான , நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிற தம்பதியை கண்டு, நல்ல மனைவிக்கு தகுதியான ஆறு நற்குணங்கள் எவை என தெரிந்து கொண்டு, அதன் படியே தன் வீட்டிற்கு அழகு சாதனங்களை விற்க வந்த சீதாவை (ஜெயலலிதா) தெரிவு செய்கிறார். இதனை தன் சிற்றப்பாவிடம் தெரிவித்து திருமண ஏற்பாடுகளை செய்யும் போது சீதாவும் அவளது தந்தை கார்மேகமும் (வி.எஸ்.ராகவன்) மர்ம நபர்களால் வீட்டோடு எரிக்கப்பட்டு மரணமடைகிறார்கள்.

    மனம் உடைந்து போன ராமு, சீதாவை போலவே தோற்றமுள்ளவரும், பாம்பாட்டியின் மகளான ரம்பாவையும்(ஜெயலலிதா) அதே போன்று எஸ்டேட் உரிமையாளர் மாநாட்டில் காஷ்மீரில் ராணியையும் ((ஜெயலலிதா)) சந்திக்கிறார். சீதா, ரம்பா, ராணி மூன்று பேர்களும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்து தத்துக்கொடுக்கப்பட்ட பெண்கள் என்ற விபரமும் ராமுவுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

    சீதாவுடன் பழகி தன் மனைவியாகவே நினைத்துவிட்ட ராமுவிற்கு சீதாவைப்போலவே தோற்றமுள்ள ரம்பா, ராணியை தன் வாழ்க்கை துணையாக நினைக்கமுடியவில்லை.இவர்களிடம் சீதாவிடமிருந்த சிறந்த மனைவிக்குறிய ஆறு நற்குணங்கள் இல்லை என்ற முடிவுடன் அவர்களை பிரிகிறார்.

    பின்னர், சிம்லாவில் தமிழ்ச்சங்கம் நடத்திய கலைவிழாவில் மீண்டும் சீதாவை சந்திக்கிறார் ராமு. வீடு எரிக்கப்பட்ட போது தன் தந்தை மட்டுமே இறநதுபோய் தான் தப்பித்துவிட்டதாக கூறுகிறார் சீதா. சிம்லாவில் தன்னுடைய அத்தை (ஜி.சகுந்தலா) நடத்திவரும் நடனப்பள்ளியில் ஒரு மனமாறுதலுக்காக இருப்பதாகவும் ராமுவிடம் தெரிவிக்கிறார் சீதா.

    அளவுகடந்த மகிழ்வுடன் சீதாவை திருமணம் செய்து கொள்ளவும், தன் சிற்றப்பாவிடம் சம்மதம் பெறவும் சென்னை வரும் ராமுவிற்கு, தான் எஸ்டேட்டில் சந்தித்த ரம்பா, காஷ்மீரில் சந்தித்த ராணி, சிம்லாவில் சந்தித்த சீதா,இவர்கள் மூவரும் உண்மையான சீதா அல்ல, மாறுவேடமிட்டு எதற்காகவோ தன்னை தொடர அனுப்பப்பட்ட தன் உறவுக்கார பெண் ஆஷா என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார் ராமு.

    ஆஷா என்ன நோக்கத்தோடு மாறுவேடத்தில் அனுப்பப்பட்டார்? இவரை அனுப்பியது யார்? உண்மையான சீதா என்ன ஆனார்..? ராமன் சீதையை தேடி கண்டுபிடித்து மணந்து கொண்டாரா? என்பது படத்தின் விறுவிறுப்பான மீதிப்பகுதி.

    மக்கள் திலகத்தின் படங்களில் இருந்து வேறு பட்டது இந்த படம்..."எம்.ஜி.ஆர் ஃபார்முலா" என்ற எதுவும் இல்லாமல் தன் வாழ்க்கை துணையை தேடுகிற, கதாநாயகிக்கு முக்கியத்துவம் நிறைந்த கதையில் நடித்திருப்பது வித்தியாசமான ஒன்று.

    அதே போல் மக்கள் திலகத்தின் படங்களில் க்ளைமேக்சில் வழக்கமாக இடம் பெறும் போட் சேஸ், ஹெலிகாப்டர் விரட்டு , பயங்கர சண்டை போன்ற எதுவுமே இல்லாமல் வில்லனிடம் உண்மையை வரவழைப்பதும் புதுமையான ஒன்று.சண்டைக்காட்சிகளும் இப்படத்தில் மிகவும் குறைவு.

    மக்கள் திலகம் அசத்தியிருக்கிறார். வயதான தம்பதிகளிடம் ஆரம்பித்து காஷ்மீர், சிம்லா என பயணிக்கும் கதையோடு ஒன்றி நடித்துள்ளார்.

    புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்குதான் மக்கள் திலகத்தைவிட அதிக வாய்ப்பு. அடக்கமான சீதாவாக, தைரியமான பாம்பாட்டிப்பெண் ரம்பாவாக, சற்றே மனநிலை சரியில்லாத ராணியாக, வில்லி ஆஷாவாக வெரைட்டியாக அருமையாக நடித்துள்ளார்.இந்தப்படத்துக்காக 1972ம் ஆண்டு,சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருதை அவர் இப்படதிற்காக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகேஷ், ரமாபிரபா, ஓ.ஏ.கே தேவர் காமெடி ட்ராக் ரசிக்கும்படி இருந்தாலும் படத்தோடு ஒட்டவில்லை. நம்பியார், அசோகன், வி.கே.ஆர். போன்றவர்கள் குறைவான நேரமே வந்தாலும் நிறைவாக செய்துள்ளார்கள்.

    மெல்லிசை மன்னர் படத்தின் இன்னொரு நாயகன் என்றே சொல்லலாம். "நல்லது கண்ணே"; "என் உள்ளம் உந்தன் ஆராதனை"; "திருவளர் செல்வியோ"; "மாமாவா மச்சானா" ஆகிய பாடல்கள் இன்னமும் இசை ரசிகர்களால் ஆராதிக்கப்படுகின்றன.

    இந்தப்படம் 1972ம் ஆண்டின் வெற்றிப்படமாகியது.

    தகவல்:https://en.m.wikipedia.org/wiki/Rama..._film)...Sr.bu...

  5. #1434
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆருக்கு #விஷமா!!!

    1962-ம் வருடம் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பிற்காக பெங்களூர் அருகில் காரில் தன் உதவியாளர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்தார்.ஒரு கிராமப்பகுதியில் ஒரு ரயில்வே கேட்டில் வண்டி நின்றது.ரெயில்வே கேட் திறக்கப்படும்வரை எம்.ஜி.ஆர் காரில் காத்துக் கொண்டிருந்த நிலையில் எம்.ஜி.ஆரை கிராம மக்கள் பார்த்து விட்டனர்.

    சாலை ஓரத்திலிருந்த ஒரு குடிசையிலிருந்த மூதாட்டி காருக்கு அருகில் வந்து எம்.ஜி.ஆரை தன் குடிசைக்கு வரவேண்டும் என அழைத்தார். மூதாட்டியின் அன்பு வேண்டுகோளை ஏற்று எம்.ஜி.ஆர். காரிலிருந்து இறங்கி மூதாட்டியின் குடிசைக்கு சென்றார்.கூடவே உதவியாளர்களும் தொடர்ந்தனர்.

    'அய்யா, நீங்க எங்க குடிசைக்கு வருவதற்கு நாங்கள் என்ன புண்ணியம் செய்தோமோ?? சூடா பசும்பால் இருக்கு, கொஞ்சம் சாப்பிடுங்க அய்யா' என்ற வேண்டுகோளுடன் பசும்பாலை எடுக்க ஓடினாள்.

    பசும்பாலை ஆற்றி எம்.ஜி.ஆரிடம் கொடுக்கும்போது அவர் உதவியாளர் ஒருவர் அதை வாங்கி குடித்துபார்த்து, பிறகுதான் எம்.ஜி.ஆரிடம் குடிக்க கொடுத்தார்கள். பிறகு ரெயில்வேகேட் திறந்ததும் வண்டி புறப்பட்டது.

    காரில் அமர்ந்ததும், உதவியாளரிடம் ' தம்பி, உனக்கு ரொம்ப பசியா? பசும்பாலை பிடுங்கி முதலில் குடித்தாயே' என்று எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே கேட்டார்.

    அதற்கு அந்த உதவியாளர் "அண்ணே, நீங்க யார் எதை கொடுத்தாலும் குடித்து விடுகிறீர்கள். அவங்க ஏதாவது கலந்து கொடுத்திருந்தால் என்ன ஆவது? அதனால்தான் நாங்கள் குடித்து பார்த்தோம், மன்னிச்சிடுங்க அண்ணே" என்றார்.

    இதைக்கேட்டதும் கோபமடைந்த எம்.ஜி.ஆர்., "மூதாட்டி எனக்கு ஏன் விஷம் கொடுக்க வேண்டும்? ஒரு நல்ல தலைவனுக்கு அஸ்திவாரம் என்ன தெரியுமா? மக்கள் நம் பேரில் வைத்திருக்கின்ற மதிப்பும், நாம் அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கையும் தான் " என்றார்.

    #அந்த #உணர்வுதான் #தலைவர் #மறைந்து 33#வருடங்கள் #கழித்தும் #அத்தகைய #மாபெரும் #தலைவரை #நாம் #அனைவரும் #மறவாமல் #நூற்றாண்டு #விழா #கொணடாடிக்கொண்டிருக்கிறோம்.இத்தகவல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பேசியது.............vrh...

  6. #1435
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மீண்டும் சாகர் கைஸுக்கு(கைபிள்ளை) ஒரு சந்தேகம்.
    -----------------------------------------------------------
    எங்களது சந்தேகம் என்பது,

    "கர்ணன்" 40 லடசம் செலவு என்றால் "அடிமைப்பெண்" செலவு எவ்வளவு?
    1964 ல் "கர்ணன்" 40 லடசம் என்றால்
    1969 ல் "அடிமைப்பெண்" 70 லடசம் ஆகியிருக்குமே,( உங்க வாத்தி சம்பளம் மட்டுமே பல மடங்கு அதிகமாச்சே?)

    அப்படி பார்த்தால் லாபம் பெற "அடிமைப்பெண்" குறைந்த படசம் 1.4 கோடி ரூபாய் வசூலித்து இருக்க வேண்டுமே?
    ஆனால் வசூலித்தது 55 லடசம் தானே?

    இந்த கணக்கெல்லாம் போட தெரியாதா?

    ஆனால் "சிவந்த மண்", "கர்ணன்" இந்த இரண்டு படங்களை பற்றிய கணக்கு மட்டுமே உங்க வாத்தி சொல்லி கொடுத்தாரா?

    Thanks Sekar .P

    "சிவந்தமண்" சந்தேகம் கைபிள்ளைகளுக்கு இன்னும் தீர்ந்த பாடில்லை. மீண்டும் மீண்டும் கேள்வியை எழுப்புகிறார்கள். இப்போதாவது "கர்ணன்" செலவு 40 லட்சம் என்று ஒத்துக் கொண்டார்கள்.
    இல்லையில்லை, ஆதாரத்துடன் கைபிள்ளைகளை ஒத்துக்கொள்ள வைத்திருக்கிறோம்.

    அவர்கள் சந்தேகம் இப்போது "அடிமைப்பெண்" செலவு எவ்வளவு என்பதுதான்.
    அது எம்ஜிஆருக்கே தெரியாது என்று சொன்னாலும் கைபிள்ளைகள் விட முடியாது என்கிறார்கள். ஜெய்ப்பூர் அரசுக்கு ரூ50000 நிதியாக அளித்தவுடன் அரண்மனையில் "ஷீட்" செய்ய அனுமதி கிடைத்து, தரையில் சன்மைகா பொருத்தும் செலவுகள் உட்பட ஒரு சில செலவை தானே ஏற்றுக் கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடித்தார். ஒட்டகங்களுக்கு சம்பளம் என்று பார்த்தால் ரூ 20000 வரை செலவாகியிருக்கலாம்.

    மேற்கொண்டு ஒரு சில செட்டிங் செலவு பாலைவனக்சாட்சிகள் செலவு என்று அதிகமில்லை. சுமார் 40 லட்சம் வரை செலவு ஆகியிருக்கலாம். சிங்கமும் சொந்த சிங்கம்தான். அதற்கு மட்டன் செலவு தலைவரே சொந்தக்கணக்கில் பார்த்துக் கொள்வார். ஆனால் "சிவந்தமண்ணு"க்கு ஆன பல முட்டாள்தனமான செலவுகள் வியப்பளிக்கின்றன. அதில் நடித்த ஹெலிகாப்டர் வாடகை மணிக்கு ரூ3000. மொத்த வாடகையாக ரூ 60000 வரை செலவானதாம். மொத்தம் 20 மணி நேர வாடகை. லட்சக்கணக்கில் செலவு செய்த பலூன் சண்டை காமெடி காட்சிகள் அநாவசியம்.

    ஆனால் அய்யனின் சம்பளம் ரூ100000 தான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
    வெளிநாட்டு ஷூட்டிங்கே 25 நாட்கள் ஆனதாம். அப்போ குறைந்த பட்சம் 50 கால்ஷீட் ஆகியிருக்கும். மற்ற கால்ஷீட்டையும் சேர்த்தால் குறைந்த பட்சம் 100 கால்ஷீட்டையும் தாண்டி போயிருக்கலாம். 100 கால்ஷீட்டுக்கு 800 மணி நேரம் என்று கணக்கு வைத்து கொண்டால் கூட 1மணி நேரத்துக்கு வி.சி.அய்யனின் வாடகை இல்லையில்லை சம்பளம் ரூ125 தான். ஆகா? எவ்வளவு அடிமாட்டு சம்பளம்.

    அதுமட்டுமா? செயற்கை ஆறு என்று ஒரு பெரிய பாத்டப்பை உருவாக்க ரூ 4 லட்சம் செலவானதாம். அய்யனை விட செலவு அதிகம் பிடித்த கதாநாயகன் படத்தில் நிறைய இருக்கும் போது அய்யனை ஏனப்பா முன்னிலை படுத்துகிறீர்கள். ஹெலிகாப்டர் பெரிய பாத்டப் நடிக்கும் "சிவந்தமண்" என்றுதான் நியாயமாக விளம்பரம் செய்ய வேண்டும். அய்யன் நான்காம் நிலை நடிகராகத்தான் இருந்தார்.
    ஆனால் புரட்சி நடிகரின் சம்பளமே அவரின் படங்களில் பிரதானமாக இருக்கும். கைபிள்ளைகளே வாத்தியாரின் சம்பளம் பல மடங்கு இருக்குமென ஏற்றுக் கொள்கிறார்கள்.

    மேலும் அவர்கள் போடும் தப்புக்கணக்கு அய்யன் படங்கள் முதல் சுற்றிலேயே முடங்கி போய் விடும். அதன்பின் படப்பெட்டி வருவோர் போவோரை வரவேற்கும் ஸ்டூலாகத்தான் பயன்படும். "அடிமைப்பெண்" முதல் சுற்றில் சுமார் 55 லட்சம்தான் வசூல் என்று குறிப்பிட்டது உங்களுக்கே விந்தையாக இல்லை. அய்யனின் படங்களைப் போல் முதல் சுற்றிலே முடங்கிப் போய் விடும் என்று நினைத்தீர்களா?
    இனிமேல்தான் புரட்சியின் ஆட்டமே ஆரம்பம் ஆகும். இப்போது தமிழ் நாட்டில் சுமார் 1500 திரையரங்குகள் தான் உயிரோடு இருக்கின்றன.

    ஆனால் 1970 களில் கிட்டத்தட்ட சுமார் 3000 திரையரங்குகள் இருந்தன. இவைகளில் பிரைமரி தியேட்டர் என்று 500 தியேட்டரை கழித்தாலும் மிச்சம் வருபவை சுமார் 2500 திரையரங்குகள் உண்டு. முதல் 5 ஆண்டுகளில் இந்த 2500 அரங்குகளில் பலமுறை தலைவர் படங்கள் சுழற்சியில் சுற்றி வரும்.
    இவற்றில் ஒருமுறை வெளியாகி 1 வாரம் ஓடினாலே, வார சராசரி வசூல்
    ரூ10000 என்று எடுத்துக்கொண்டால் கூட சுமார் 2.5 கோடி வசூலாக
    கொட்டும். இது குறைந்த பட்ச
    வசூல் அடிப்படை கணக்கு.

    அப்படியானால் முதல் 5 வருடங்களுக்கு புரட்சி நடிகரின் படங்கள் சுமார் 3 கோடியை எளிதில் பெற்று விடும்.அதன் அடிப்படையில் பார்த்தால் குறைந்த பட்சம் ரூ 2 கோடி லாபம் கிடைக்கும். ஆனால் அய்யனின் 98 சதவிகித படங்கள் கிடப்பிலே கிடப்பதால் தான் அய்யனின் சம்பளத்தை விட எம்ஜிஆரின் சம்பளம் 10 மடங்குக்கு மேல் அதிகம் தரப்படுகிறது என்ற உண்மை புரிந்து விட்டதா கைபிள்ளைகளுக்கு. ஆனாலும் அடுத்த பதிவிலும் புரியாத மாதிரி முதல் வெளியீட்டை கம்பேர் செய்வதிலேயே குறியாக இருப்பார்கள். அதுவும் சாந்தி வசூலையும் மதுரை வசூலையும் தாண்டி பேச மாட்டார்கள்.

    அதற்காகத்தான் அவரை இந்தியாவில் "வசூல் சக்கரவர்த்தி" என்றும் இலங்கையில் "நிர்த்திய சக்கரவர்த்தி" என்றும் விநியோகஸ்தர்கள் செல்லாக அழைத்தார்கள். தகதகக்கும் வைரத்தை கூழாங்கற்களோடு இணைத்து பேச வேண்டாம். அய்யனோட அறுவை படங்களின் மிகை நடிப்பை 10 பக்கம் நீ புகழ்ந்தாலும் அதை படிக்கக் கூடிய பொறுமை எங்களுக்கு இல்லை. நாங்கள் படிக்கவும் மாட்டோம். ஏனென்றால் படத்தையே யாரும் பார்க்க முடியாது. இதில் நேரடி ஒளிபரப்பு விமர்சனம் வேறு. நீங்கள் எல்லாம் எப்படி உயிர் வாழ்கிறீர்கள் என்று நான் சந்தேகப்பட்டதுண்டு.
    சரி சாகர் விரசு, இத்தோட நிறுத்திக்கொள். மீண்டும் மீண்டும் வாத்தியாரை வம்புக்கு இழுக்காதே..........KSR.........

  7. #1436
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்*ஒளிபரப்பான*பட்டியல் ( 04/12/20 முதல் 09/12/20* *வரை )
    ----------------------------------------------------------------------------------------------------------------------------
    04/12/20 - மெகா டிவி - அதிகாலை 1 மணி -* சந்திரோதயம்*

    * * * * * * * * சன் லைஃப் - காலை 11 மணி - நீதிக்கு தலை வணங்கு*

    * * * * * * * * வசந்த் டிவி - இரவு 7.30 மணி - நீதிக்கு தலை வணங்கு*

    * * * * * * * * ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - பணம் படைத்தவன்*

    05/12/20 -ஜெயா மூவிஸ் - காலை 10 மணி - ஒரு தாய் மக்கள்*

    * * * * * * * *சன் லைஃப் - காலை 11 மணி - உரிமைக்குரல்*

    * * * * * * * *முரசு -மதியம் 2 மணி /இரவு 7 மணி - தொழிலாளி*

    * * * * * * * *ஜெயா டிவி =பிற்பகல் 1.30 மணி - ஆயிரத்தில் ஒருவன்*

    * * * * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - முகராசி*

    * * * * * * * *புது யுகம் - இரவு 7 மணி - ராமன் தேடிய சீதை*

    * * * * * * * ஜெயா மூவிஸ் -இரவு 7 மணி - பட்டிக்காட்டு பொன்னையா*

    * * * * * * *ஜெயா டிவி* - இரவு 9 மணி - குமரிக்கோட்டம்*

    * * * * * * *ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி - தலைவன்*

    06/12/20- சன் லைஃப் - காலை 11 மணி - நான் ஆணையிட்டால்*

    * * * * * * * *மெகா டிவி -மதியம் 12 மணி - குடியிருந்த கோயில்*

    * * * * * * * வசந்த் - பிற்பகல் 1.30 மணி - நீதிக்கு பின் பாசம்*

    * * * * * * *புதுயுகம் - இரவு* 10 மணி - நவரத்தினம்*

    07/12/20-சன் லைஃப் - காலை 11 மணி - இதயக்கனி*

    * * * * * * * * *மூன் டிவி - இரவு 8 மணி - நல்ல நேரம்*

    08/12/20 -சன்* லைஃப் - மாலை 4 மணி - நவரத்தினம்*

    * * * * * * * *மெகா டிவி - இரவு 8 மணி - நல்ல நேரம்*

    * * * * * * * வேந்தர் டிவி - இரவு 10.30 மணி -தொழிலாளி*

    * * * * * * * பாலிமர் டிவி - இரவு 11 மணி - அரச கட்டளை*

    09/12/20- சன்* லைஃப் -காலை 11 மணி - நல்ல நேரம்*

    * * * * * * * *வேந்தர் டிவி - இரவு 10.30 மணி - கன்னித்தாய்** * * * * * * * **

  8. #1437
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    கடந்த*வெள்ளி முதல் (04/12/20) திருவண்ணாமலை ,அண்ணாமலை அரங்கில்*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தென்னக*ஜேம்ஸபாண்டாக நடித்த*"ரகசிய*போலீஸ் 115"தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .

    தகவல் உதவி :திரு.கலீல்*பாட்சா, திருவண்ணாமலை நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் .

    வரும் வெள்ளி முதல் (11/12/20)* மணலி*மீனாட்சியில்*புரட்சி நடிகர்*/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் புரட்சி செய்த*டிஜிட்டல் எங்க வீட்டு பிள்ளை தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .

    தகவல் உதவி : திரு.சேர்மக்கனி ,விநியோகஸ்தர், சென்னை.*

    வரும் வெள்ளி முதல் (11/12/20) மதுரை*பழங்காநத்தம் ஜெயம் அரங்கில்* நடிக*மன்னன் /நடிக*பேரரசர்*எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய*டிஜிட்டல்* எங்க*வீட்டு பிள்ளை தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
    தகவல் உதவி : திரு.எஸ். குமார், மதுரை .*

  9. Likes orodizli liked this post
  10. #1438
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உண்மையான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ரசிகர்கள் / தொண்டர்கள் அன்றும் இன்றும் என்றென்றும் ஆட்சியில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் தங்களுடைய அடையாளத்தை மாற்றவே மாட்டார்கள் .கனவிலும் துரோகம் செய்ய நினைக்க மாட்டார்கள் .பதவி , பணம் இரண்டிற்காக ஒரு நாளும் விலை போகமாட்டார்கள் . அதே நேரத்தில் மற்றவர்களுடன் எம்ஜிஆரை ஒப்பீடு செய்ய மாட்டார்கள் .

    புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்ட சில தலைவர்கள் தங்களுடைய சுயநலத்திற்க்காக எதிர்முகாமிற்கும் ,ஆன்மீக கூடத்திற்கும் செல்ல முடிவு செய்து விட்டால் தாரளமாக போகட்டும் அவர்கள் .கடந்த காலத்தில் எம்ஜிஆர் புகழ் பாடிய இனிய நினைவுகளை நாம் நன்றியுடன் நினைவு கூர்வோம் .ஆனால் நன்றியினை மறந்த அவர்களுக்கு எம்ஜிஆர் பாடிய பாடலை பரிசாக தருகிறோம்

    கண்ணை நம்பாதே
    உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
    நீ காணும் தோற்றம்
    உண்மை இல்லாதது
    அறிவை நீ நம்பு
    உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
    பொய்யே சொல்லானது.

    நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
    நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
    ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
    உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

    அழகைக் காட்டும் கண்ணாடி
    மனதைக் காட்டக் கூடாதோ
    பழகும்போதே நன்மை தீமை
    பார்த்துச் சொல்லக் கூடாதோ
    வாழ்த்தும் கையில் வாளுண்டு
    போற்றும் மொழியில் விஷமுண்டு
    வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
    மனிதர் இங்கே எவருண்டு ஆ,,,,,,ஆ,,,,,,,,,,, (பாவம் என்ற கல்லறைக்கு பலவழி
    என்றும் தர்மதேவன் கோவிலுக்கு ஒரு வழி
    இந்த வழி ஒன்று தான் எங்கள் வழியென்று நாம்
    நேர்மை ஒருநாளும் தவறாமல் நடை போடுவோம்

    இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்
    அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்
    அந்த ஒளி காணலாம் சொன்ன வழிபோகலாம்
    நாளை வரலாறு நமக்காக உருவாக லாம்...............vs............

  11. #1439
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #யார் #கடவுள்

    அதெல்லாம் சரி...
    உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருக்க, ஏன் எம்ஜிஆரை மட்டும் கடவுளாக கும்பிடணும்...?

    ஏன் மற்ற தலைவர்கள் கூட தான் எவ்வளவோ நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்காங்க...ஏன் அவர்களை கடவுளாக நினைக்கக்கூடாதா ??
    (சரியான கேள்வி...)

    யார் கூறிய நற்கருத்துக்கள் படித்ததோடு நில்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் மனதாரத்திருந்த வழிவகுக்கிறதோ...!!!

    பூத உடலை நீத்த போதும்,
    இன்னமும் எங்கள் தலைவன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...
    இன்னமும் தன் மக்கள் நன்றாக இருக்கிறார்களா!!! என்று நொடிப்பொழுதும் எண்ணி எண்ணி
    கவலைப்படுகிறான் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் எவரொருவர் ஆழமாக விதைக்கிறாரோ !!!

    எவரொருவர், மக்கள் தன்னை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சடைத்துக் கண்ணீர் வரச்செய்கிறாரோ...!

    அவர் தான் மக்களின் மனதில் இறைவனாக நிலைக்கமுடியும்...

    இந்த வீடியோவைப் பாருங்க...

    இவர்களெல்லாம் யார்? பதவியில் இருப்பவர்களா? பணக்காரர்களா? இல்லை, தங்களின் உன்னத்தலைவனை, கடவுளை Atleast நேரிலாவது பார்த்திருப்பவர்களா!!!

    இதுபோன்ற பக்தர்களுக்கெல்லாம், ஏன் நமக்கும் கூட ஒரே ஒரு விருப்பம்...நாம் கேட்கும் ஒரே வரம்...

    #வாத்தியாரே #நீ #மறுபடி #பிறக்கணும்...........BSM...

  12. #1440
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரை வைத்து வெற்றி படங்களை தயாரித்த தேவர் அவர்கள் வடநாட்டில் தன் பட தயாரிப்பு வேலைகளை விரிவு படுத்த...

    அப்போது பெரும் பிரபலம் ஆக இருந்த ஹிந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்களை கதாநாயகன் ஆக கொண்டு ஹாத்தி மேரே சாத்தி என்ற படத்தை எடுக்க மும்பை சென்றார்.

    பட பூஜை அன்று வழக்கம் போல சட்டை அணியாமல் அவர் காட்சி அளிக்க அன்று மும்பையில் இருந்து வந்த மிட் டே என்ற பத்திரிகை தென் நாட்டில் இருந்து ஒரு சாமியார் படம் எடுக்க இங்கே வந்து இருக்கிறார் என்று கேலி சித்திரம் போட்டு அவரை விமர்சித்து மகிழ்ந்தது...

    ஆனால் அந்த படம் ஹாத்தி மெரா சாத்தி வெளிவந்து ஹிந்தி பட உலகை திருப்பி போட்டது....ராஜேஷ் கண்ணா அவர்கள் அதுவரை நடித்து வெளிவந்த வசூல் சாதனையை அந்த படம் முறியடித்து வென்றது.

    பட வெற்றி விழாவில் அதே சட்டை போடாத நிலையில் அந்த காலத்தில் 60 பவுன் தங்க சங்கிலியை தேவர் அவருக்கு போட்டு மகிழ்ச்சி அடைய...

    அதே மும்பை மிட் டே பத்திரிகை முதல் பக்கத்தில் அந்த படத்தை போட்டு கொண்டாடியது..

    அந்த படத்தின் வசூலை பின் பாபி பின் வந்த ஷோலே போன்ற படங்கள் முறியடிக்க முடிந்தது..

    அதே படம் நம் பொன் மனம் தலைவர் நடிக்க நல்லநேரம் ஆக வந்து இங்கும் வெற்றிவாகை சூடியது...

    இனிதான் பதிவின் நோக்கம் வருகிறது...

    தேவர் அவர்கள் மறைவுக்கு பின் தண்டாயுத பாணி பிலிம்ஸ் என்ற பெயரில் அவர் குடும்பத்தார் எடுத்த சில படங்கள் ஓட சில படங்கள் தடுமாற அவர்கள் பெரும் சரிவை சந்தித்த நேரம்.

    தலைவர் முதல்வர் ஆக மாறிவிட்ட நேரம் அப்போது.... நிலை அறிந்து தாய் வீடு என்ற படத்தை ரஜினி அவர்கள் நடிப்பில் தயாரிக்க சொல்லி அந்த படத்தின் தயாரிப்பு நிலைக்கு பெரும் பின் பலமாக நின்று பொருளாதார உதவிகள் செய்தார்.

    தேவர் அவர்கள் குடும்பத்துக்கு முடிந்த உதவிகளை தகுந்த நேரங்களில் செய்து உதவினார்...

    படங்கள் வெற்றி பெறும் போது அதை எடுத்தவர்களை கொண்டாடுவது...ஒரு காலத்தில் அதே அவர்கள் நிலை தடுமாறி நிற்கும் போது டீயை குடித்து கொண்டே நாளிதழ்களில் அதை ஒரு செய்தியாக பார்க்கும் இன்றைய நடிகர்கள் மத்தியில்.

    பழைய நினைவுகளை மறக்காமல் பலருக்கு பல உதவிகளை செய்த ஒரே மாமனிதர் இந்த உலக திரை உலக வரலாற்றில் நம் இதயதெய்வம் தலைவர் மட்டுமே.

    அதனால் தான் என்னை எளியவர்கள் போன்றவர்கள் பலர் தலைவர் நினைவுகளை சொல்ல.

    எழுத அதை படிக்கும் உணரும் தலைவர் நெஞ்சங்கள் மிக்க உணர்வு பூர்வமாக அதை வரவேற்க...

    என்றும் நம் எம்ஜிஆர் நிறைந்து வாழ்வார் நம் இதயங்களில்..

    60 பவுன் போயே போச்சு...It's gone. போயிந்தி. மர்க்கையா. இதை போல இன்னும் உண்மை சம்பவங்கள் என்றும் தொடரும்.

    வாழ்க தலைவர் புகழ்.

    உங்களின் எண்ணம் ஆக உங்களில் ஒருவன் நெல்லை மணி.

    நன்றி...தொடரும்............

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •